Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 2 January 2017

அ.தே.இ - மேல்நிலை / எஸ்.எஸ்.எல்.சி., துணைத் தேர்வுகள் செப் / அக் 2016 - அகல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சான்றிதழ்கள் 04.01.2017 முதல் தேர்வெழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

DGE - HSC / SSLC SUPPLEMENTARY EXAM SEP / OCT 2016 - ORIGINAL MARK SHEET DISTRIBUTION FROM CONCERN EXAM CENTRES FROM 04.01.2017 ONWARDS CLICK HERE...

10ம் வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கு ஒரு தாள் தேர்வு முறை!

பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்திற்கு ஒருதாள் தேர்வுமுறையை செயல்படுத்த வேண்டும்,’ என

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது. அக்கழக மாவட்டச் செயலாளர் இளங்கோ கூறியதாவது: பத்தாம் வகுப்பு அரசு தேர்தவில் சமீப காலமாக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.

இது தமிழுக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதையே காட்டுகிறது. ஆங்கில பாடத்தில் கூட தேர்ச்சியாகும் மாணவர்கள் தாய்மொழியில் தோல்வி அடைவது பெற்றோரை அதிர்ச்சி அடைய வைக்கிறது. தமிழில் தோல்வி அடைந்தோர் மீண்டும் தேர்வு எழுத முன்வருவதில்லை.

அவர்கள் படிப்பை விட்டு கூலி வேலைகளுக்கு சென்றுவிடுகின்றனர். இதற்கான காரணங்களை கல்வித்துறை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் பாடங்களை போன்று தமிழுக்கும் ஒரு தாள் தேர்வு முறையை செயல்படுத்த வேண்டும்.

மேலும் தற்போது உள்ள தமிழ் பாட திட்டவரைவு மாணவர்களுக்கு ஏற்றதாக இல்லை. இதனை மாற்றியமைக்க வேண்டும். பிளஸ் 2 வில் மொழி பாடங்களுக்கு 20 மதிப்பெண்களுக்கு அகமதிப்பீடு தேர்வு இருப்பதை போன்று 10ம் வகுப்பிற்கும் செயல்படுத்த வேண்டும்.

இந்த ஆண்டு 10 ம் வகுப்பு அரசு தேர்வில் தமிழ் 2 ம் தாள் பாடத்தை படிப்பதற்கு விடுமுறை இல்லை. அவற்றை மாற்றியமைக்க வேண்டும், என்றார்.

ஐ.நா.,வின் புதிய பொதுச்செயலராக கட்டரெஸ் பொறுப்பேற்பு; விடைபெற்றார் பான் கீ மூன்!!!

ஐ.நா.,வின் புதிய பொதுச் செயலராக போர்ச்சுகல் நாட்டின் மாஜி பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பொறுப்பேற்றார்.

பொறுப்பேற்பு:

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக இருந்த பான்-கி-மூனின் பதவிக் காலம் டிசம்பர் 31ம் தேதியுடன்(31-12-16) முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலராக போர்ச்சுகலின் மாஜி பிரதமரும் ஐ.நா.,வின் அகதிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான ஆன்டோனியோ கட்டரஸ் முறைப்படி நேற்று(ஜன.,1) பொறுப்பேற்றார். 2021 டிசம்பர் 31ம் தேதி வரை அப்பதவில் கட்டரஸ் தொடருவார்.

உலக அமைதி:

இதனைத் தொடர்ந்து கட்டரஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது: உலக மக்கள் அனைவரும் முதலில் அமைதியை நிலை நாட்டுவதையே புத்தாண்டு உறுதி மொழியாக ஏற்க வேண்டும். உலக அமைதிக்கே முக்கியத்துவம் அளிப்பேன். நாடுகளுக்கு இடையே பிரச்னைகளை தீர்க்கும் நோக்கத்தில் எனது பணியை தொடருவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பூமி சுழற்சி வேகத்தை ஈடுகட்ட இந்திய நேரத்தில் கூடுதலாக ஒரு வினாடி சேர்ப்பு!!!

பூமியின் சுழற்சி வேகம் குறைகிறபோது அதை ஈடுகட்டுவதற்கு கடிகாரத்தில் ஒரு வினாடி கூட்டுவது இயல்பான ஒன்று.

அந்த வகையில், இப்போது பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள அணு கடிகாரத்தில், நேற்று முன்தினம் இரவு 11 மணி 59 நிமிடம் 59 வினாடிகள்
ஆனபோது, ஒரு வினாடி கூடுதலாக சேர்க்கப்பட்டு புதிய ஆண்டு பிறந்தது.இது தினசரி வாழ்க்கையில் மெல்லிய தாக்கத்தை உண்டுபண்ணினாலும், செயற்கைக்கோள் ஊடுருவல், வானியல் மற்றும் தொலை தொடர்பியல் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.அணு கடிகாரத்தில் ஒரு வினாடியை அதிகரித்து, மாற்றம் செய்ததை இந்திய நேரத்தில் பிரதிபலிக்கிற வகையில், காலை 5 மணி 29 நிமிடம் 59 வினாடியின்போது கூடுதலாக ஒரு வினாடி சேர்க்கப்பட்டது.இதுபற்றி தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் இயக்குனர் டி.கே. அஸ்வால் கூறும்போது, ‘‘பூமி அதன் சொந்த அச்சில் சுழல்வது ஒழுங்கான ஒன்றல்ல. சில நேரங்களில் அது வேகமாகவும், சில நேரங்களில் மெதுவாகவும் இருக்கும். இதற்கு நில நடுக்கம், நிலவின் ஈர்ப்பு சக்திகளால் அடிக்கடி ஏற்படும் கடல் அலைகள் என பல காரணங்களை சொல்லலாம்’’ என்றார்.‘‘முடிவில் யு.டி.ஐ. என்னும் வானியல் நேரம் படிப்படியாக குறையும். அது யு.டி.சி. என்னும் அணு நேரத்துடன் ஒத்துப்போகாது. வானியல் நேரமும், அணு நேரமும் மாறுபடுகிறபோது, அது 0.9 வினாடியாக இருக்கிறபோது, உலகளவில் அணு கடிகாரங்கள் மூலம் கூடுதலாக ஒரு வினாடி வானியல் நேரத்தில் சேர்க்கப்படும்’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்திய கடிகாரத்தில் ஒரு வினாடி கூடுதலாக சேர்ப்பதை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படுகிற தேசிய இயற்பியல் ஆய்வகம் செய்யும்.இந்த ஆய்வுக்கூடம்தான் நேற்று இந்திய நேரம் காலை 5 மணி 29 நிமிடம் 59 வினாடி ஆனபோது ஒரு வினாடி கூடுதலாக சேர்த்தது. இந்த ஒரு வினாடி லீப் வினாடி என்று அழைக்கப்படுகிறது.1972–ம் ஆண்டில் இருந்து இதுவரை 6 மாதம் முதல் 7 வருடங்கள் வரையிலான இடைவெளியில் 36 லீப் வினாடிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

முதுகலைப்படிப்பில் கிராமப்புற டாக்டர்களுக்கு 50% ஒதுக்கீடு

கிராமப்புறங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு,

அரசு கல்லூரிகளில் முதுகலை மருத்துவப்படிப்பில் 50% இடங்கள் ஒதுக்கீடு வழங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு, டாக்டர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் கிராமப்புற, அரசு சுகாதார மையங்களில் பணியாற்றி இருக்க வேண்டும்.

கிராமங்களில் டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வு முடிவில் 25,300 சுகாதார மையங்களில் 8 சதவீத மையங்களில் டாக்டர்கள் இல்லை என்று கூறப்பட்டது. 

மேலும், அந்த சுகாதார மையங்களில் 50 சதவீதம் பெண்களுக்கான பணியிடங்களும், 61 சதவீதம் ஆண்களுக்கான பணியிடங்களும் காலியாக இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விதிகளுக்கு புறம்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வழக்கு: கால்நடை ஆய்வாளர் பணி நியமனங்கள் ஐகோர்ட்டின் இறுதி தீர்ப்பை பொறுத்து இருக்கும் நீதிபதி உத்தரவு.

கால்நடை ஆய்வாளர்கள் விதிகளுக்கு புறம்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தொடர்ந்த வழக்கில்

290 கால்நடை ஆய்வாளர் பணி நியமனம் ஐகோர்ட்டின் இறுதி தீர்ப்பை பொறுத்து இருக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஐகோர்ட்டில் மனு நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் பழனிதங்கம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் பிளஸ்-2 முடித்துள்ளேன். நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2008-ம் ஆண்டு பதிவு செய்துள்ளேன். கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 290 கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அந்த துறையின் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டார். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இதன்படி நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெயர் பட்டியல் அனுப்பப்பட்டது. இதில் 19 பேர் தேர்வு செய்யப்பட்டு 30.9.2013 அன்று அவர்களுக்கு கால்நடைத்துறை இயக்குனரால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் பதிவு மூப்பு பட்டியல் எப்படி தயாரிப்பது என்பது குறித்து வேலைவாய்ப்பு அலுவலக இயக்குனர் விதிமுறைகளை உருவாக்கி இருந்தார். இந்த விதிமுறைகளுக்கு புறம்பாக நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதிவு மூப்பு பட்டியலை தயாரித்து அனுப்பி உள்ளார். அதாவது நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி அனுப்பிய பட்டியல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 5 பேர் அதிகபட்ச வயதை தாண்டியவர்கள் ஆவர். நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பரிந்துரைத்த பட்டியலில் தகுதி இல்லாதவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததால் அனைத்து தகுதியும் உடைய என்னைப்போன்ற பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்து செய்ய வேண்டும் இதேபோன்று மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட பதிவு மூப்பு பட்டியலிலும் முறைகேடு நடந்திருப்பது தெரிய வருகிறது.

அரசியல் செல்வாக்கு காரணமாக தகுதியில்லாதவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கால்நடைத்துறை ஆய்வாளர் பணி நியமனம் அனைத்தும் சட்டவிரோதமானதாகும். எனவே, 290 பேருக்கு கால்நடை ஆய்வாளர் பணி வழங்கிய கால்நடைத்துறை இயக்குனரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றி புதிதாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பட்டியல் தயாரித்து அதன் அடிப்படையில் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களில் ஆட்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 30.9.2013 அன்று கால்நடைத்துறை இயக்குனரால் மேற்கொள்ளப்பட்ட 290 கால்நடை ஆய்வாளர் பணி நியமனங்கள் அனைத்தும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்று உத்தரவிட்டார்.

SBI கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது!

நாட்டிலேயே மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கடனுக்கான ஆண்டு வட்டி வகிதத்தை குறைத்துள்ளது.
ஏழைகள்,

நடுத்தர வர்க்கத்தினருக்கு கடன் அளிப்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை அந்த வங்கி மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக எஸ்பிஐ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கடன் தொகைக்கு எம்சிஎல்ஆர் அடிப்படையில் வசூலிக்கப்பட்டுவந்த வட்டி வகிதத்திலிருந்து 0.9 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடனுக்கான
வட்டி விகிதம் இனி ஓராண்டுக்கு 8 சதவீதமாக இருக்கும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியைத் தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் எம்சிஎல்ஆர் விகிதம் 0.7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வங்கியில் பெறப்படும் கடனுக்கு ஆண்டு வட்டியாக 8.45 சதவீதம் வசூலிக்கப்படும். முன்பு, அந்த வங்கியில் கடனுக்கான ஆண்டு வட்டி விகிதம் 9.15 சதவீதமாக இருந்தது.
இதேபோல், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவும் எம்சிஎல்ஆர் விகிதத்தை 0.65 சதவீதத்திலிருந்து 0.9 சதவீதம் வரை குறைத்துள்ளது.
வங்கிகளின் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை வரவேற்பதாக பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
முன்னதாக, புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை நிகழ்த்தியபோது ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன விவகாரம்: தமிழக அரசு மேல்முறையீடு !!

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் செல்லாது என்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற

தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம்!

சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட விஷயத்தில்,

மதில்மேல் பூனையாக இருக்கும் தனியார் பள்ளிகளை இனம் கண்டு பள்ளிகல்வித் துறை கடிவாளமிட வேண்டும். அகில இந்திய அளவிலான போட்டி தேர்வுகளில், புதுச்சேரி மாணவ, மாணவியர் பின்தங்கியுள்ளனர். எப்போதாவது சிவில் சர்வீஸ் தேர்வில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

எனவே, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டதை புகுந்த புதுச்சேரி அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக, அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஒவ்வொரு வகுப்பாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2021- -22ம் கல்வி ஆண்டில், புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் 2 வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்பது, அரசின் இலக்கு.

தனியார் பள்ளிகள்

அரசு பள்ளிகள் நுாறு சதவீத சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்க, தனியார் பள்ளிகளின் நிலையோ மதில்மேல் பூனையாக உள்ளது. சமச்சீர் பாடத்திட்டமா அல்லது சி.பி.எஸ்.இ., பாடத்திட்டமா என முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகின்றன.

விதிமுறை மீறல்

புதுச்சேரி மாநிலத்தில் 303 சுயநிதி தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் 26 தனியார் பள்ளிகள் மட்டுமே சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்ற பள்ளி கல்வித் துறையிடம் என்.ஓ.சி., வாங்கியுள்ளன. 

மீதமுள்ள 227 தனியார் பள்ளிகள் தமிழ்நாடு அரசின் சமச்சீர் பாட புத்தகத்தை பின்பற்றி பாடம் கற்பிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தையே நடத்தி வருகின்றன.

சமச்சீர் பாடத்தை நடத்த வேண்டிய தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடம் நடத்தி, அதன் மூலம், பெற்றோர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலித்து வருகிறது.

டிமிக்கி

தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டுமெனில், முதற்கட்டமாக அந்த மாநில கல்வித் துறையிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும். பின், ஒரு ஆண்டிற்குள் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியத்தை அணுகி இணைப்பு எண் பெற வேண்டும்.

இந்த இணைப்பு எண் எளிதில் கிடைப்பதில்லை. இடைநிலை கல்வி வாரியத்தின் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே இணைப்பு எண் கிடைக்கும்.

ஒரு ஏக்கர் நிலப்பரப்பு, விசாலமான விளையாட்டு மைதானம், காற்றோட்டமிக்க கட்டட வசதி, ஆய்வகம், நுாலகம் என, அனைத்தும் இருந்தால் மட்டுமே தனியார் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட உரிமம் வழங்கப்படுகிறது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமான அளவு இடவசதி இல்லாததால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் புதுச்சேரி கல்வித் துறைக்கு டிமிக்கி கொடுத்து வருகின்றன. 

கல்வித் துறையின் என்.ஓ.சி., பெறாமல், சட்ட விதிகளுக்கு மாறாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடங்களை, பல்வேறு தனியார் பள்ளிகள் நடத்தி வருகின்றன.

கடிவாளம்

எனவே, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டன் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகள், சமச்சீர் பாடத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகளின் பட்டியலை, இணையதளத்தில் பள்ளி கல்வித் துறை வெளியிட வேண்டும். மேலும், இது தொடர்பாக ஆய்வு நடத்தி, விதிமீறி செயல்படும் பள்ளிகளை இனம் கண்டு, கடிவாளமிட வேண்டும்.

ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் காலிப்பணியிடம்; ஆசிரியருக்கு வழங்க தீர்மானம்!

’தமிழகத்தில் காலியாக உள்ள உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்துக்கு,

அத்துறையில் பணியாற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியருக்கு, போட்டித்தேர்வு நடத்தி, பதவி உயர்வு வழங்க வேண்டும்’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்டத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.

ஆறாவது ஊதியக் குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான ஊதிய பாதிப்புகளை களைந்து, தர ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். 

புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2016ல், மாணவர் மற்றும் ஆசிரியர் நலன்களுக்கு எதிராக காணப்படும் சரத்துக்களை நீக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சிகளுக்கு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை கருத்தாளர்களாக நியமிக்க வேண்டும். 

தமிழகத்தில் காலியாக உள்ள உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு, தற்போது அத்துறையில் பணியாற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியருக்கு, போட்டித்தேர்வு நடத்தி, பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பள்ளி அமைச்சு பணியாளர் பணியிடம் பகிர்ந்தளிக்கப்படுமா?

கோவையில், 1,800க்கும் மேற்பட்ட, அரசுப் பள்ளிகள் உள்ளன.

இங்கு, அலுவலக கோப்புகள் கையாள, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அமைச்சு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, பல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிவை எட்டியுள்ளது. இதனால், பணி நிரவல் கலந்தாய்வு மூலம், ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

ஆனால், பள்ளிகளில் உள்ள, அமைச்சு பணியாளர்கள் மட்டும், ஒரே பள்ளியிலே பணிப்புரிகின்றனர். சுண்டப்பாளையம், தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு பள்ளிகளில், ஐந்துக்கும் மேற்பட்ட, அமைச்சு பணியாளர்கள் பணிப்புரிகின்றனர். 

இவர்களை, உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில், காலியாக உள்ள அமைச்சுப் பணியாளர் இடங்களுக்கு, பணி நிரவல் செய்தால், பணிப்பளுவை சமாளிக்க உதவியாக இருக்கும் என, அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க உறுப்பினர்கள் கூறுகையில், ’கிணத்துக்கடவு, மதுக்கரை மற்றும் நகர உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகங்களில், பத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள், மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இதனால், நலத்திட்ட பொருட்கள் வினியோகித்தல், தேர்வு சமயங்களில், அதிக பணிச்சுமை ஏற்படுகிறது.

எனவே, பள்ளிகளில் கூடுலதாக உள்ள அமைச்சு பணியாளர்களை, உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு பணிநிரவல் செய்ய வேண்டும். இதை, வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள, அலுவலர்களுக்கான கலந்தாய்வில் நடைமுறைப்படுத்தினால், பணிகள் விரைந்து முடிக்க, உதவியாக இருக்கும்,’என்றனர்

JAN-2017 CRC TITLE !!


*_Jan 2017_*

*_Primary CRC 21-01-2017_*

*_Primary title: புரிதலை மேம்படுத்தும் புத்தாக்க பயிற்சி(vp)_

_Upper primary CRC 28-01-2107_*

*_Upper primary title:போட்டித்தேர்வுக்கான தயாரிப்பு_

"அச்சமின்றி” திரைப்படம் சமுத்திரகனியின் *சாட்டை, அப்பா* படவரிசையில் மூன்றாவதாக சமூக அக்கறையுள்ள படம் !!

கல்வித்துறையில் நடைபெறும் ஊழல்களை வெளிக்கொணரும் விதமாக வெளிவந்துள்ளது.. 10-ம் வகுப்பில் அரசுப்பள்ளிகளில் முதலாவதாக வரும் மாணவர்களை வளைத்துப்பிடித்து தங்களது பள்ளியில் 11-ம் வகுப்பில் இலவசமாக சேர்த்து..12-ம் வகுப்பில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து தங்களது பள்ளியின்

கட்டணத்தை உயர்த்தும் தனியார் பள்ளிகள் பற்றியும், அரசுப்பள்ளிகளின் நிலைமை பற்றியும் கூறும் படம்.கல்வித்துறையில் நடைபெறும் விதி மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் கலெக்டர் கொல்லப்படுகிறார்..பல கொலைகள் நடக்கிறது.. இதற்குப்பின்னால் தனியார்பள்ளியின் தாளாளரான சரன்யா இருக்கிறார். இதுவரை பாசக்கார மனைவி, அம்மாவாக பார்த்த சரன்யா இதில் வில்லியாக வந்து மிரட்டுகிறார்.. ஜனரஞ்சமாக  ஆடல், பாடல், சண்டை , வசனம், கல்வித்துறையில் நடைபெறும் ஊழல்களை அம்பலப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனை  பெற்றோர்கள், மாணவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இருக்கிறது..

2017 குழந்தைகள் நேயமுள்ள ஆண்டாக அமையட்டும். புதிய கல்விச் சிந்தனைகள் வளரட்டும்.

மத்திய அரசின் ‘குரூப்-பி’ பணிகளுக்கான வயது வரம்பு 27-லிருந்து 30 ஆக அதிகரிப்பு: ஓபிசி பிரிவினரின் வயது வரம்பு 33 ஆக இருக்கும்

மத்திய அரசின் ‘குரூப்-பி’ பணிக ளுக்கான வயது வரம்பு 27-லிருந்து 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் உதவியாளர், வருமான வரி ஆய்வாளர், உதவி அமலாக்க அதிகாரி, அஞ்சலக ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்த வயது வரம்பு உயர்வு உத்தரவு பொருந்தும்.

மத்திய அரசின் ‘குரூப்-ஏ’ அதிகாரிகள் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அதேபோல், மத்திய அரசின் சார்நிலைப்பணி அதிகாரிகள் அதாவது குருப்-பி அதிகாரிகள் பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். அடிப்படை சம்பளம் ரூ.9,300 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 முதல் ரூ.4,600 வரையிலான பதவிகள் இந்த பிரிவின் கீழ் வருகின்றன.

தற்போது இந்த ‘குரூப்-பி’ பணிகளுக்கான வயது வரம்பு 27 ஆக இருந்து வருகிறது. 27 என்பது பொதுப் பிரிவினருக்கான (ஓசி) வயது வரம்பு ஆகும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்த்தப்படுகிறது.

இந்த நிலையில், பணியாளர் தேர்வாணையத்தால் ரூ.4200, ரூ.4600, ரூ.4,800 தர ஊதியத்துடன் கூடிய பணிகளுக்கான வயது வரம்பை 27-லிருந்து 30 ஆக உயர்த்தி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஓர் உத்தர

வைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி பின்வரும் பணிகளுக்கான வயது வரம்பு 30 ஆக உயர்த்தப்படுகிறது.

1. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய உதவியாளர்

2. உள்துறை அமைச்சக உதவியாளர்

3. ரயில்வே அமைச்சக உதவியாளர்

4. வெளியுறவு அமைச்சக உதவியாளர்

5. பாதுகாப்பு அமைச்சக உதவியாளர்

(மேற்கண்ட பதவிகள் அனைத் துக்கும் தர ஊதியம் ரூ.4,600)

6. இதர அமைச்சகங்களில் உதவியாளர் (தர ஊதியம் ரூ.4,200, ரூ.4,600)

7. வருமான வரி ஆய்வாளர்

8. மத்திய கலால் ஆய்வாளர்

9. கடத்தல் தடுப்பு ஆய்வாளர்

10. ஆய்வாளர்

11. உதவி அமலாக்க அதிகாரி

(மேற்கண்ட பதவிகள் அனைத் துக்கும் தர ஊதியம் ரூ.4,600)

12. அஞ்சலக ஆய்வாளர்

13. கோட்ட கணக்காளர்

14. போதைப் பொருள் தடுப்பு ஆய்வாளர்

(மேற்கண்ட பதவிகள் அனைத்துக்கும்

தர ஊதியம் ரூ.4,200)

‘குரூப்-பி’ பணிகளுக்கான வயது வரம்பு 30 ஆக உயர்த்தப்படுவதால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வயது வரம்பும் அதிகரிக்கப்படும்.

அதன்படி, எஸ்சி, எஸ்டி வகுப்பி னரின் வயது வரம்பு 35 ஆகவும், ஓபிசி பிரிவினரின் வயது வரம்பு 33 ஆகவும், மாற்றுத்திறனாளிகளின் வயது வரம்பு 40 ஆகவும் உயர்த்தப்படும்.

எஸ்எஸ்சி ‘குரூப்-பி’ பணிகளுக் கான வயது வரம்பு 27-லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி ‘குரூப்-1’ தேர்வுக்கான வயது வரம்பும் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குப் படித்தும்வரும் தேர்வர்களிடம் கேட்டபோது, “மத்திய அரசைப் பின்பற்றி தமிழக அரசும் ‘குரூப்-1’ தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த முன்வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர். துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் ‘குரூப்-1’ தேர்வுக்கான வயது வரம்பு தற்போது பொதுப் பிரிவினருக்கு 30 ஆகவும், மற்ற அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) 35 ஆகவும் உள்ளது. பிஎல் பட்டம் பெற்றிருந்தால் அனைத்து தரப்பினருக்கும் கூடுதலாக ஓராண்டு வயது வரம்பு தளர்த்தப்படுகிறது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!