Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 4 January 2017

எது உண்மை? | Episode-6 | கால் அட்டென்ட் பண்ணா மொபைல் வெடிக்குமா? | Mobil...

4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்க அரசு உத்தரவு !!

புயல், ஜெ.மறைவு ஆகியவற்றால் விடப்பட்ட தொடர் விடுமுறை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்காலில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

நடா புயலின் காரணமாக கடந்த டிசம்பர் 1, 2 தேதிகளிலும், முதல்வர் ஜெயலலிதா மறைவால் 6-ம் தேதியும், வர்தா புயலால் 12-ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

தற்போது அந்நாள்களை ஈடு செய்யும் வகையில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அவ்விடுமுறைகளுக்கு பதிலாக ஜனவரி 21,28, பிப் 4,11 ஆகிய சனிக்கிழமைகளில் அரசு பள்ளிகள் இயங்கும் என இணை இயக்குநர் ஜே.கிருஷ்ணராஜூ அறிவித்துள்ளார்

ஒரு வருடத்திற்கு இலவச 4G டேட்டா: ஏர்டெல் புதிய சலுகை அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கயாளர்களை தக்கவைக்க இலவச டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது.

வாய்ஸ் கால், டேட்டா, மெசேஜ் என அனைத்தையும் இலவசமாக அளித்து அனைத்து தொலைத்தொடர்பு  நிறுவனங்களையும் ஆட்டம் காண வைத்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ. அதன் இலவச சேவை வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளது.


இதன் காரணமாக அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை மெல்ல இழந்து வருவதாக தெரிகிறது. அதனை ஈடுகட்ட பல்வேறு நிறுவனங்களும் இலவச சேவை திட்டங்களை அறிவித்து வருகின்றன.

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது. அதன் படி ஏர்டெல் 4G சேவைகளுக்கு மாறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூ.9,000 மதிப்புள்ள சேவைகள் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது, ஏர்டெல்லும் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதன்படி, ஒரு மாதத்திற்கு 3 GB அளவிலான 4G டேட்டாவை இந்த ஆண்டின் இறுதி வரை அளிக்கிறது ஏர்டெல் நிறுவனம். இது மற்ற நெட்வொர்க்குகளிலிருந்து ஏர்டெலுக்கு மாறுவோருக்கும், பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் 4Gக்கு அப்கிரேடு ஆகும் ஏர்டெல்லின் தற்போதைய வாடிக்கையாளர்களும் இந்த சேவையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இச்சேவை 4G மொபைல்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ரூ. 345க்கு எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் கால்கள், 1 GB 4G டேட்டா என்ற திட்டத்தினை ஏர்டெல் அறிவித்திருந்தது, தற்போது புதிய 4G ஹேண்ட்செட்களில் ஏர்டெல் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, 345 பிளானில் 4 GB டேட்டா கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஏர்டெல் நிறுவனம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தாக்கம் இதர அனைத்து நெட்வொர்க்குகளும் சலுகை திட்டங்களை அறிவிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

DEO EXAM RESULTS PUBLISHED மாவட்டக் கல்வி அலுவலர் 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு


CLICK HERE- TO VIEW SELECTED LIST

மாவட்டக் கல்வி அலுவலர் 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு | தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் அடங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான 11 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 06.08.2015 மு.ப, 07.08.2015 மு.ப. மற்றும் 08.08.2015 மு.ப ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது. அதில் 2432 தேர்வர்கள் பங்கேற்றனர்.

 

இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணலுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் 19.01.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

வெ. ஷோபனா, இ.ஆ.ப., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE 

The Main Written Examination for the 11 vacancies relating to the post of District Educational Officer in Tamil Nadu School Educational Service was held on 06.08.2015 FN, 07.08.2015 FN & 08.08.2015 FN. 2432 candidates had appeared for the Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification for the said Recruitment, a list of register numbers of 30 candidates those who have been provisionally admitted to Oral Test to the said post is available at the Commission’s Website www.tnpsc.gov.in . The Oral Test will be held on 19.01.2017 at the Commission’s office.

V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS

நெட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்துக்கு

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்காக ஆண்டுக்கு இரண்டு முறை நெட் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, இந்தாண்டுக்கான நெட் தேர்வு வருகின்ற ஜனவரி 22-ம் தேதி நடக்கிறது. 

நாடு முழுவதும் 90 நகரங்களில் இத்தேர்வு நடக்கிறது. 

குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் இந்த தேர்வு நடக்க உள்ளது. 

இதற்காக விண்ணப்பித்தவர்கள், ஹால் டிக்கெட்டை http://cbsenet.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தலையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முயற்சியால் உருவாக்கப்பட்ட 2017 ஆண்டுக்கான காலண்டர்

DEE - அனைத்து AEEO அலுவலகத்திற்கும் புதிய கணினி - இயக்குனர் செயல்முறைகள்

5 மாநில தேர்தல் தேதி: அறிவித்தது தேர்தல் ஆணையம்!!!

உ.பி.,யில் 7 கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டமாகவும், கோவா, பஞ்சாப், உத்தர்கண்டில் ஒரே கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஓட்டுக்கள் மார்ச் 11ம் தேதி எண்ணப்படுகின்றன.

690 தொகுதிகளில்...:

டில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியதாவது: 5 மாநிலங்களில் 690 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 16 கோடி பேர், வாக்களிக்க உள்ளனர். 1.85 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் போட்டோவுடன் கூடிய வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான பெண் அலுவலர்கள் கொண்ட பிரத்யேக வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். ரகசியம் காக்க வாக்கு எந்திர மேஜையின் உயரம் உயர்த்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. ராணுவத்தினர் இணைய வழியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடக்க துணை ராணுவப்படையினரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய வசதி செயயப்பட்டுள்ளது என்றார்

தேர்தல் தேதி:

* கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப். 4ம் தேதி தேர்தல் நடைபெறும்
* உத்தர்காண்ட் மாநிலத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 15ம் தேதி தேர்தல் நடைபெறும்.
* மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக மார்ச் 4 மற்றும் மார்ச் 8 ம் தேதிகளில் தேர்தல் நடக்கும்
* உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
முதல் கட்டமாக 73 தொகுதிகளில் பிப் 11ம் தேதி தேர்தல்
இரண்டாம் கட்டமாக 67 தொகுதிகளில் பிப்ரவரி 15ல் தேர்தல்
மூன்றாம் கட்டமாக 69 தொகுதிகளில் பிப்., 19ல் தேர்தல்
நான்காம் கட்டமாக 53 தொகுதிகளில் பிப்23ல் தேர்தல்
ஐந்தாம் கட்டமாக 52 தொகுதிகளில் பிப்ரவரி 27ல் தேர்தல்
ஆறாம் கட்டமாக 49 தொகுதிகளில் மார்ச் 4ல் தேர்தல்
ஏழாவது கட்டமாக 40 தொகுதிகளில் மார்ச் 8 ல் தேர்தல் நடக்கும்

அதாவது பிப்.4ம் தேதி துவங்கி மார்ச் 8 ம் தேதி ஓட்டுப்பதிவு முடிகிறது.

5 மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் வரும் மார்ச் 11ம் தேதி எண்ணப்படுகின்றன

உ.பி.,யில் 403 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும், உத்தர்கண்டில் 71 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

ரூ.244 கோடி செலவில் 6 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்!!

தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12--ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் 
அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002ஆம் கல்வி ஆண்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங் கப்பட்டது.

பின்பு, 2005-2006ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11--ம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெரு மளவில் பயனடைந்து வரு கின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா வின் வழிகாட்டுதலின் படி,  2016- 2017ஆம் கல்வி யாண்டில், 243 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் 11-ஆம் வகுப்பு பயிலும் 2,70,417 மாணவர் மற்றும் 3,48,865 மாணவியர் என மொத்தம் 6,19,282 மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங் கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் 7 மாணாக்கர் களுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வி.எம்.ராஜலட்சுமி, எஸ்.வளர்மதி மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்திய நாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கார்த்திக், சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆணையர்  சந்திரசேகரன்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்காக வருகிறது சிறப்பு ரெயில் பெட்டிகள்..!!!

நாடுமுழுவதும் மாற்றுத்திறனாளிகள் ரெயில் பெட்டிகளில் எளிதாக ஏறவும், இறங்கவும், சுகமாக பயணம் செய்யவும் அவர்களுக்கு ஏற்றார்போல் இருக்கும் ரெயில் பெட்டிகளை ரெயில்வை துறை தயார் செய்து வருகிறது.
இது குறித்து மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் 
மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் கமலேஷ் பாண்டேநாக்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
மாற்றுத்திறனாளிகள் ரெயில்களில் எளிதாகவும் பயணம் செய்ய அவர்களுக்கு ஏற்றார் போல் பிரத்யேக ரெயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறவும் இறங்கவும் முடியும். கழிப்பறைகள், இருக்கைகள், படுக்கைகள் என அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
2018ம் ஆண்டுக்குள் 3 ஆயிரம் பெட்டிகள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இந்த பெட்டிகளில் மாற்றுத் திறனாளிகள் சென்று வர அதிகமான இடவசதியும், விரிவான இருக்கை, இடவசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ம.பி.யில் ஆசிரியர்களின் சீருடையாகிறது ‘நேரு ஜாக்கெட்

மத்தியப் பிரதேசத்தில் வரும் கல்வியாண்டில் பள்ளி ஆசிரியர் கள் சீருடையாக

'நேரு ஜாக்கெட்' அணிய சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இது பிரதமர் மோடியை பிரபலப்படுத்தும் முயற்சி என சர்ச்சை எழுந்துள்ளது.
வட இந்திய அரசியல்வாதி களின் உடைகளில் 'நேரு ஜாக் கெட்' முக்கியப் பங்கு வகிக்கிறது. வெண்ணிற குர்தா, பைஜாமாவின் மேலங்கியாக இந்த ஜாக்கெட் அணியப்படுகிறது. வெண்ணிற ஆடை மீது கறுப்பு நிறத்தில் இந்த ஜாக்கெட் தரும் மிடுக்கை அரசியல்வாதிகள் அதிகம் விரும்பு கின்றனர். இந்த ஆடையை நம் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர் லால் நேரு அதிகம் விரும்பி அணிந்தார். இதனால் அது அவரது பெயரிலேயே 'நேரு ஜாக்கெட்' என இது உலகம் முழுவதும் பிரபலமானது. ம.பி.யில் இந்த ஜாக்கெட்டை பள்ளி ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டு முதல் அணிய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ் வொரு ஆசிரியருக்கும் அரசே தனது செலவில் 2 ஜாக்கெட்கள் வழங்க உள்ளது. பெண் ஆசிரி யர்களும் இந்த ஜாக்கெட்டை தங்கள் சேலை அல்லது சுடிதார் மீது அணிய வேண்டும்.

இதற்கு உதாரணமாக, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அணி வதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அதேசமயம் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டது முதல் பல்வேறு நிறங்களில் இந்த ஜாக்கெட்டை அணியத் தொடங்கினார். குறிப்பாக ரோஸ், சிவப்பு, பச்சை போன்ற நிறங் களில் மோடி அணிந்தது பார்ப்பவர் கண்களை கவர்ந்தது. பாஜகவினர் மட்டுமின்றி பிற கட்சியினரும் இதை அணியத் தொடங்கினர். தற்போது அதன் பெயர் 'மோடி ஜாக்கெட்' என மெல்ல மாறி வரு கிறது. இந்த நிலையில் பாஜக ஆளும் ம.பி.யில் ஆசிரியர்கள் ஜாக்கெட் அணிய உத்தரவிட்டி ருப்பது, பிரதமர் மோடியை பிரபலப்படுத்தும் முயற்சி என சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து ம.பி. கல்வியாளர் ஜமீருத்தின் அகமது, 'தி இந்து' விடம் கூறும்போது, "ஆங்கிலத்தில் 'வேஸ் கோட்' எனப்படும் ஜாக்கெட் இந்தியாவில் 'நேரு ஜாக்கெட்' என்ற பெயரில்தான் பிரபலம் ஆனது. இதிலும் மோடி யின் பெயரை நுழைத்து அரசியல் லாபம் பெற அரசு முயற்சிக்கிறது. இந்த சீருடைக்கு ஆகும் செலவில், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள சுமார் 42,000 ஆசிரியர் பணி யிடங்களை நிரப்பலாம்" என்றார். கடந்த 2012-ல் வெளிநாட்டு பத்திரிகை ஒன்று சர்வதேச அளவில் அரசியல்வாதிகளின் 10 சிறந்த உடைகளை வரிசைப்படுத்தியது. இதில் 'நேரு ஜாக்கெட்' ஏழாவது இடம் வகித்தது. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராகப் பதவி வகிக்கும் கிரண்பேடியும் 'நேரு ஜாக்கெட்' அணியும் வழக்கம் கொண்டவர். இதை ம.பி.யின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் அர்ச்சனா சித்னிஸும் அணிந்து வருகிறார். ஆனால் அர்ச்சனா தான் அணிவது நேரு ஜாக்கெட் அல்ல, மோடி ஜாக்கெட் என்று பல இடங்களில் பேசி வருவ தாகக் கூறப்படுகிறது. எனவே, மோடியை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் சீருடையாக இந்த ஜாக்கெட் அறிவிக்கப்பட்டிருப்ப தாக புகார் எழுந்துள்ளது.

இதை மறுக்கும் வகையில் ம.பி. கல்வி அமைச்சர் குன்வர் விஜய் ஷா கூறும்போது, "ஆசிரியர்கள் தாங்கள் ஒரு முக்கியப் பணி யாற்றுவதாக உணரச் செய்வதே இதன் நோக்கம். இதன்மூலம் ஆசிரியர் பணிக்கு அரசு அதிகம் மதிப்பளிக்கிறது என்பதையும் உணர்த்துகிறோம். ஆனால் இதில் தலைவர்களின் பெயரைச் சேர்த்து சர்ச்சையை கிளப்ப நாங்கள் விரும்பவில்லை. மாறாக பள்ளி களில் முற்றிலும் கல்விக்கான சூழலை ஏற்படுத்தவே விரும்பு கிறோம்" என்றார். இந்த மேலாடை மீது இந்தியில் 'ராஷ்ட்ரிய நிர்மதா (தேசம் உரு வாக்குபவர்)' என்ற வாசகத்துடன் பேட்ச்சும் குத்தப்பட்டிருக்கும். இந்த சீருடையை சிறப்பாக வடிவமைக்கும் பணியில் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

SSC Exam 2017 Hall Tickets Now Published

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பணியாளர் தேர்வாணையத்தின் (எஸ்எஸ்சி) ஒருங்கிணைந்த மேல் நிலை கல்வித்தகுதி நிலையிலான தேர்வின் முதல்கட்ட தேர்வு ஜனவரி 7-ம் தேதி முதல் பிப்ரவரி 8-ம் தேதி வரை ஆன்லைன் வழியில் நடத்தப்பட இருக்கிறது.
தமிழகத் தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உட்பட தென்பிராந்தியத்தில் 46 மையங் களில் தினமும் இரண்டு பிரிவுகளாக தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (ஹால் டிக்கெட்) தேர்வாணை யத்தின் இணையதளத்தில் (www.sscsr.gov.in) ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டிருக் கிறது.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை ஆன்லைனில் பதி விறக்கம் செய்து கொள்ள லாம். இதுகுறித்து விண்ணப்பதாரர் களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலமாக தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி தேர்விலும் கலந்துகொள்ளலாம். தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-28251139 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94451-95946 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

வீட்டில் கழிப்பிறை இல்லை ஆசிரியர் சஸ்பெண்ட்

CPS ரத்து, PAY COMMISSION அமல்படுத்த கோரி ஜாக்டோ - ஜியோ புதிய போராட்டம் அறிவிப்பு

தஞ்சாவூர் - ஐனவரி 17 உள்ளூர் விடுமுறை

தியாகராஜரின் 170-வது ஆராதனை விழா திருவையாறில்  ஜனவரி 17 அன்று கொண்டாடப்படுவதால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு  ஐனவரி 17 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Nokia New Smartphone Features And Expectations | மீண்டும் வரும் நோக்கியா...

SLAS தேர்வு முடிவின்படி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.

மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பை, 'ஸ்லாஸ்' தேர்வு முடிவின் படி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, தமிழகபள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களின் கீழ், மத்திய அரசு, மாணவர்களுக்காக, பல கோடி ரூபாய் நிதி உதவி செய்கிறது. 
பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆய்வகம், நுாலகம், மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி ஆகியவற்றுக்கு, இந்நிதி பயன்படுத்தப்படுகிறது. அதற்கேற்ப, மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை, 'ஸ்லாஸ்' தேர்வின் மூலம், பள்ளி கல்வித்துறை முடிவு செய்கிறது.ஒன்பது மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, இந்த ஆண்டுக்கான, 'ஸ்லாஸ்' தேர்வு, டிசம்பரில் முடிந்து விட்டது. தமிழகம் முழுவதும், 6,200 பள்ளிகளில், தலா, 30 மாணவர்கள் என, 3.72 லட்சம் பேரிடம் இத்தேர்வு நடத்தப்பட்டது. இன்னும் இரு வாரங்களில், இதன் முடிவுகள் வெளியாகின்றன.

இது குறித்து, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் அறிவொளி கூறியதாவது: சாதனை கணக்கெடுப்பான, 'ஸ்லாஸ்' தேர்வு முடிவுகளின்படி, திறன் படைத்த மாணவர்கள் எந்த பள்ளியில் உள்ளனர்; அவர்களுக்கு, பிரச்னையாக உள்ள பாடப்பகுதி எது என்பதை, அறிய முடியும்.அதற்கேற்ப, குறிப்பிட்ட மாணவர்களுக்கு, கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கு வசதியாக, சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களுக்கும், சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஊழியர்கள் /ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் குறித்து - தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 4.1.2016 அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு?

பொங்கல் பண்டிகை, 2017 - அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் /ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் குறித்து தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 
4.1.2016 அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் தேர்வு எழுதியோருக்கு இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ்.

கடந்த அக்டோபரில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு, இன்று, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அக்டோபரில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியோர், நவ., 3 முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, அவர்களே, ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. மார்ச் மற்றும் ஜூனில் நடந்த தேர்வுகளில், தேர்ச்சி பெறாதோர், அக்டோபர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பர். அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழும், மற்றவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படும். சான்றிதழை, இன்று முதல் தேர்வு மையத்தில் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு இ - சேவை மையங்களில் ஏப்ரல் முதல் ரொக்கம் ஏற்கப்படாது.

ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள, அரசு, 'இ - சேவை' மையங்களில், ஏப்ரல், 1ம் தேதி முதல், 'கிரெடிட், டெபிட் கார்டுகள்' மூலம் மட்டுமே, கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், மின் ஆளுமை திட்டத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில், இ - சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. சாதாரண மக்களுக்கு, குறைந்த செலவில் அரசின் சேவைகள் கிடைப்பதற்காக, நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும், இம்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இம்மையங்களில், இணையதளம் வழியாக வருவாய், மாநகராட்சி,மின் துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட சேவைகள், எளிதில் கிடைக்கின்றன. பொதுமக்கள் அதிகளவில் வரத் துவங்கியதை தொடர்ந்து, ரொக்கமில்லா பரிவர்த்தனையை, ஏப்ரல் முதல் அங்கும் கட்டாயமாக்க, அரசு திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து, இ - சேவை மையங்களை நடத்தி வரும் துறைகளுக்கு, கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கிக் கணக்கு உள்ளவர்கள், மொபைல் போன் வாயிலாக, பணம் செலுத்தும், 'இ - வாலட்' திட்டம், இ - சேவை மையங்களில், 2016 டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 'ஆதார்' கார்டுதாரர்களுக்கு பயன்படும் வகையில், கைரேகை பதிவு செய்யும், 'பயோமெட்ரிக்' முறையைஅறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்கான கருவிகளை, சம்பந்தப்பட்ட துறைகள் வாங்க வேண்டும்.

மேலும், பிப்ரவரி முதல், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாகவும், ரொக்கமாகவும், இ - சேவை மையங்களில் கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஏப்ரல் 1ம் தேதி முதல், ரொக்கப்பணம் ஏற்கப்படாது. டெபிட், கிரெடிட் மற்றும் இ - வாலட் மூலமாக மட்டுமே கட்டணம் பெறப்படும். இதற்காக, பி.ஓ.எஸ்., எனப்படும், 'ஸ்வைப் மிஷின்'களை, வங்கிகளுடன் கலந்தாலோசித்த பின், வாங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

B.Ed Advertisement 2017-18 B.Ed (Distance Mode) Application & Prospectus for the year 2017 - 2018 Sastra University

B.Ed Advertisement 2017-18

B.Ed (Distance Mode) Application & Prospectus for the year 2017 - 2018

Download in
www.sastra.edu

முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது, ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் 3.1.2017

ஆன்-லைன் மூலம் கேஸ் பதிவு செய்தால் 5 ரூபாய் சலுகை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 
ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் பணமில்லா பரிவர்த்தனை பொருளாதாரமும் ஒன்று என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆன்-லைன் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து பணம் செலுத்தினால் 5 ரூபாய் சலுகை வழங்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

நெட் பேங்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தலாம்.

டிஜிட்டல் பணவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு மானியத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு குடும்பத்திற்கு 12 எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதற்குமேல் தேவைப்படுபவர்கள் மானியம் இல்லாமல் வெளிச் சந்தை விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!