Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 8 January 2017

NOKIA 6 Android Phone Launched In China FIRST LOOK | வெளியானது நோக்கியா-...

ஆண்ட்ராய்ட் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கிறது நோக்கியா. இந்நிலையில் நோக்கியா-6 என்ற ஆண்ட்ராய்ட் ஃபோனை, சைலென்ட்டாக சீனாவில் லான்ச் செய்திருக்கிறார்கள். ஆண்ட்ராய்ட் 7.0, 4GB RAM, 64GB, 5.5  HD திரை, அதற்குமேல் 2.5D கொரிலா கிளாஸ்,  இன்டெர்னல் மெமரி, 16 MP ரியர் கேமரா, 8 MP முன் கேமரா, 3,000mAh இன்பில்ட் பேட்டரி உள்ளிட்ட ஆப்சன்களுடன் நோக்கியா-6 வருகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.16,750. மேலும், இதன் டீசரையும் அதிகராப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் அடுத்த மாதத்தில் ரிலீஸ் என்கிறார்கள்.

CPS ரத்து : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் (TNGEA) காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

1. CPS ரத்து வேண்டும்

2. 8 வது ஊதியக்குழு அமைக்க வேண்டும்

3. இடைக்கால நிவாரணமாக 20% வழங்க வேண்டும்

4. சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

5. Outsourcing,  daily wages முறை ஒழித்து காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும்

6. சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்திற்கு ஊதியம் வழங்க

தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்க்கண்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

02.02.2017 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம்

05.03.2017 மாவட்ட தலைநகரங்களில் பேரணி

18.03.2017 /25.03.2017 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

25.04.2017 காலவரையற்ற வேலை நிறுத்தம்

பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1990க்கு பின்பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் தற்போது பிறப்பு சான்றிதழ் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று, இறந்தவரிடம் இருந்து சொத்துக்களை மாற்றி கொள்வதற்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பொதுவாக, பிறந்தோ அல்லது இறந்தோ 1 வருடத்திற்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் பிறப்பு அல்லது இறப்பை பதிவு செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடி அதற்கான ஆணை பெற்ற பிறகுதான் வருவாய் கோட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள்பிறப்பு சான்றிதழ் பதிவு செய்கின்றனர்.

இதனால், பொதுமக்கள் நீதிமன்றத்திற்கு நடையாய் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும், கால விரயமும் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு ஏராளமான புகார்கள் சென்றது. இதை தொடர்ந்து பொது சுகாதாரத்துறை தலைமை பதிவாளர் அனைத்து நகராட்சி நிர்வாக ஆணையர், டவுன் பஞ்சாயத்து இயக்குனர், கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றைஅனுப்பியுள்ளார். அதில், சட்ட விதி 3ன் கீழ் பிறப்பு, இறப்பு 1 ஆண்டுக்குள் பதிவு செய்யாமல் விடப்பட்டாலும், வருவாய் கோட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள் பதிவு செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, இனி வருங்காலங்களில் 1 ஆண்டிற்கு பிறகு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற பொதுமக்கள் அலைய வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ஒரு வருடத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டு, அந்த ஆவணங்கள் பதிவுத்துறைக்கு அனுப்ப வேண்டும். எங்களால் இந்த ஆவணங்களை பாதுகாக்க முடியுமே தவிர திருத்தம் மேற்கொள்ள கூடாது. ஒரு வருடத்தில் பதியாதவர்கள் நீதிமன்றத்தை அணுகி அதன்பிறகுவட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். பொதுமக்கள் 3 மாதங்கள் வரை நடையாய், நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது சட்ட திருத்தத்தில் கொண்டு வந்ததன் மூலம் பொதுமக்கள் அலைய வேண்டிய தேவையில்லை. வட்டாட்சியர் அலுவலகத்திலேயே இனி பதிவு செய்யமுடியும். இதற்கான ஆவணங்களை அவர்கள் வட்டாட்சியர் முன்பு சமர்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை வட்டாட்சியர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்’ என்றார்

கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி.

தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் வித்தியாசமான கண்ணோட்டத்தை செயல்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 
இதன் ஒருபகுதியாக அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலம் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.இதில் ஒவ்வொரு அரசு பள்ளியில் இருந்தும் 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். எளிய பொருட்களை வைத்து அறிவியல் உருவாக்கங்களை செய்து காண்பிக்க வேண்டும். முதல் 3 இடங்களை பெறும் அணிக்கு தலா 1,500, 1,000, 500 பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.

வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

கருப்பு பணத்தை தடுக்கும் விதமாக, செல்லாத ரூபாய் நோட்டு  அறிவிப்பு வெளியான கடந்த ஆண்டு நவம்பர் 8ந் தேதிக்கு முந்தைய வங்கி , தபால் நிலையடெபாசிட்களையும் ஆய்வு செய்ய வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

அதாவது 2016ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து நவம்பர் 8-ந்தேதிக்கு முன்பு வரை வங்கிகள், தபால் நிலையங்களில் செய்யப்பட்ட டெபாசிட்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

நாட்டில் கருப்பு பணத்தையும், கள்ளநோட்டுகளையும் ஒழிக்க பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து கருப்புபணத்தை பிடிக்கும் நடவடிக்கைகளை வருமான வரித்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதில் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு காலத்தில் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் லட்சக்கணக்கில் திடீரென செய்யப்பட்ட டெபாசிட்கள், சேமிப்பு கணக்குகளில் நவம்பர் 9-ந்தேதிக்கு பின் டிசம்பர் 30ந்தேதி வரை ரூ.2.5 லட்சம் வரை செய்யப்பட்டடெபாசிட்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கருப்புபணம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி, விரைவுப்படுத்தும் விதமாக  வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் கணக்கில் நவம்பர் 9-ந்தேதிக்கு பின் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால் அவர்களின் கணக்கில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நவம்பர் 9 ந்தேதி வரை செய்யப்பட்ட டெபாசிட்குறித்தும் ஆய்வு செய்ய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக வங்கிகள், தபால்நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களின் பான்கார்டு எண், படிவம் 60 ஆகியவற்றை கேட்டு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவரும் வரும் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் தங்களின் பான்கார்டு எண்ணை அளிக்கவும் வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின் ஒருவர் கணக்கில் செய்யப்பட்ட டெபாசிட் குறித்தும், செல்லாத ரூபாய் அறிவிப்புக்கு முன் அவர்கள் கணக்கில் இருப்பில் இருந்த பணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து வங்கிகள் , தபால்நிலையங்களுக்கும் கடந்த 6-ந்தேதி நிதி அமைச்சகத்தின் ேநரடி வரிகள் வாரியம் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, வங்கி, தபால்நிலையங்களில் பான்கார்டு எண் கொடுக்காதவர்கள் தங்கள் பான்கார்டு எண்களை உடனடியாக கொடுக்க வேண்டும். சில வங்கியில் கணக்குதொடங்கும்போது, பான்கார்டு முறை அறிமுகம் இல்லாத நிலையில் இருந்தாலும், அவர்களும் இப்போது தங்களின்  பான்கார்டு எண்களை உடனடியாக வங்கியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ரூபாய் நாணயம் செல்லும்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்!!!

பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என, வரும் தகவல்கள் தவறானவை; மக்கள் அச்சமடைய வேண்டாம்; அது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை' என, ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி உள்ளது.

தவறான தகவல்:

செல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பு வெளியானது முதல், ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவி 
வருகிறது. செல்லாத நோட்டுகளை மாற்ற வாய்ப்பு தரப்பட்ட போது, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி, நாணயங்களையும் மக்கள் வாங்கி சென்றனர். இவ்வாறு, 10 ரூபாய் நாணயங்கள் பெற்றவர்களும், ஏற்கனவே அவற்றை சேர்த்து வைத்திருந்தோரும், தற்போது, செலவு செய்ய முடியாமல் போய் விடுமோ என, அச்சமடைந்து உள்ளனர்.

'10 ரூபாய் நாணயங்கள் செல்லாது' என, தவறான தகவல்கள் பரவி வருவதே இதற்குக் காரணம். இதை உண்மை என நம்பி, வியாபாரிகளும் வாங்க மறுப்பதால், பொதுமக்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

செல்லும்:

இது குறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது: பத்து ரூபாய் நாணயங்கள், 2009ல் அறிமுகம் ஆனது. அவ்வப்போது, சில மாற்றங்களுடன், அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிறது. நாணயங்களில் உள்ள மாற்றங்களை வைத்து, செல்லாது என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதுவரை, போலி நாணயங்கள் எதையும் கண்டறியவில்லை.

இந்த நாணயங்கள், இரு உலோகத்தால், வட்ட வடிவில் உருவாக்கப்பட்டவை; 27 மி.மீ., விட்டம், 7.71 கிராம் எடை உடையவை. 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று, ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. அவை அனைத்தும் செல்லும்; பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நமக்குத் தேவை புள்ளிவிவரம் மட்டுமே,வகுப்பறை அல்ல!

''நமது வகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவர வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம் எவ்வளவு, எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, ஸ்டேட் ரேங்க் எத்தனை பேர், கடந்த வருடத்தைவிட எத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி... என எண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.

இந்தப் புள்ளிவிவரப் பட்டியலில் முந்திச் செல்லும் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் ஓடுகின்றனர். ஒரு வகுப்பறை என்பது, புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல; அது ஒரு தலைமுறை தன் சிந்தனையை உருவாக்கிக்கொள்ளும் உயரிய இடம்.

அதற்கு மனிதம் சார்ந்த வகுப்பறைகளே தேவை. அப்படி ஒரு வகுப்பறை இருந்தால் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும்போது இத்தனை வெற்றுக்கூச்சல்கள் கேட்காது.

உலகின் எந்த நாட்டிலும் பள்ளித் தேர்வு முடிவுகளின்போது இத்தனை ஆரவாரக் கூச்சல்கள் ஒலிக்காது.

 மாணவர்கள், இந்தப் புள்ளிவிவர வகுப்பறையை அடியோடு வெறுக்கின்றனர். அதனால்தான் ஆண்டு இறுதித் தேர்வு முடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து வீசுகிறார்கள்.

அந்த மனப்பான்மையே, அதன் பிறகு அவர்களிடம் புத்தக வாசிப்புப் பழக்கத்தையே அடியோடு ஒழிக்கிறது. ஆண்டு முழுவதும் தன் மகிழ்ச்சியை, சுதந்திரத்தை, குழந்தைத்தன்மையைக் காவு வாங்கிய புத்தகத்தை அவமதிக்கும் அந்தக் கணம், அவன் பழிவாங்கியவனைப்போல் உணர்கிறான்.

 இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு நமது பாடத்திட்டத்தை, வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்க வேண்டும். இல்லையெனில், யாரோ 10 மாணவர்கள் ரேங்க் வாங்கியது கொண்டாடப்படும் சத்தத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் மன அழுத்தம் கண்டுகொள்ளாமல் விடப்படும்!''

பாடநூல் கழக தலைவராக பா.வளர்மதி நியமனம்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.

 இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெள்ளிக்கிழமை பிறப்பித்தார். பா.வளர்மதி கடந்த 2011-16 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் சமூக நலன்-சத்துணவு திட்டத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு

தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகள் உள்ளன. 

 இவற்றில், தங்கி படிக்கும், மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 100 மதிப்பெண்கள் எடுத்தால், அவர்களுக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார்.

 

              அதன்படி, ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ, மாணவியருக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பை மாணவ, மாணவியர், பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Again new update available for WhatsApp!


கொஞ்ச நாட்களுக்கு முன் தான் புதிய வாட்ஸ்ஆப் அப்டேட் வழங்கப்பட்டது அதற்குள் இன்னொன்றா இதில் என்ன அம்சம் வழங்கியுள்ளார்கள், பார்ப்போமா.?

புதிய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பு (v2.16.367) மூலம் உங்களுக்கு வரும் வீடியோக்கள் டவுன்லோடு ஆகும் போதே அவற்றை ஸ்ட்ரீம் செய்து பார்க்க முடியும். இதனால் இந்த வீடியோ வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய முடியும். இதனால் வீடியோ டவுன்லோடு ஆகும் போதே அவற்றை நிறுத்த முடியும். இவ்வாறு செய்யும் போது பிடிக்காத வீடியோக்கள் டவுன்லோடு ஆகும் டேட்டாவை மிச்சம் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CPS : மீண்டும் போராட்ட களத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் !!

தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காகவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு இந்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் வரை திருவண்ணாமலையில் நடக்கிறது.

மாநாட்டுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். மாநாட்டை முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் வாழ்த்துரை வழங்கினார்.

மாநாட்டில் இதுவரை 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வரும் 8-ம் தேதி ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது.

 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் மோசஸ்,

 வணிகவரித்துறை சங்கத்தின் தலைவர் ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாடு குறித்து தமிழ்செல்வி கூறுகையில், "அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்ப்பதில்லை. புதிய பென்சன் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

 இதற்கிடையில் சட்டசபையில் 110 விதிகளின் கீழ் தொகுதிப்பூதியம், மதிப்பூதியம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். பென்சன் திட்டத்துக்கு வல்லுநர்குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அதில் 8 அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்குகாரணமாக சில அரசாணைகள் நிறைவேற்றப்படவில்லை.

தற்போது சங்கத்தின் 12-வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதிய ஊதியக்குழுவை அமைக்க வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (JACTO-GEO) என்ற அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அரசு ஊழியர்கள் வட்டாரங்கள் கூறுகையில், "ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து அ.தி.மு.க அரசு இருந்து வருகிறது. அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்படும், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் ஏற்படும் போது தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதிய மாற்றம் ஏற்படுத்தப்படும். சத்துணவு, அங்கன்வாடியில் கடந்த 25 ஆண்டுகளாக தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். கருணை அடிப்படையில் பணியில் சேருபவர்களுக்காக விதிகள் தளர்த்தப்படும். அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம் அவ்வப்போது கலந்து ஆலோசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால்தான் கடந்த பிப்ரவரியில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தோம். அப்போது நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சங்க நிர்வாகிகளிடம் 9.2.2016ல் 2 மணி நேரம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஜெயலலிதாவிடம் சொல்லி அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. தற்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கிறார். இப்போது அவர் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை. புதிய பென்சன் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு சங்க நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்தப் பிறகும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. முதல்வரையும், அமைச்சர்களையும் குறைச் சொல்வதைவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர். குறிப்பாக நிதித்துறை, நிர்வாகம், பணியாளர் சீர்திருத்தத்துறையில் உள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால் அறிவிக்கப்பட்ட அரசாணைகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. குறிப்பாக நிதித்துறையை சநிதித்துறையை சாராத பதவி உயர்வு, சீனியாரிட்டி, பணிவரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு போராட்ட காலங்களில் ஏற்படுத்தப்படும். அந்த அமைப்பு இப்போதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

மதிப்பெண் சான்றிதழில் ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!

‘பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர் மதிப்பெண் சான்றிதழ்களில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,‘ என தேர்வுத் துறை துணை இணை இயக்குனர் அமுதவல்லி எச்சரித்தார்.

மாவட்டத்தில் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பொதுத் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார்.

இதில் அமுதவல்லி பேசியதாவது:

பொதுத் தேர்வில் மாணவர் பட்டியல் (நாமினல் ரோல்) தயாரித்து தேர்வுக்கு முன் அடித்தல், திருத்தல், சேர்த்தல் பணி நடக்கும். இந்தாண்டு முதல் மாணவர் பெயர்களை தலைமையாசிரியர் தன்னிச்சையாக நீக்க முடியாது. அதற்கான ’ஆப்சன்’ ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கடைசி வாய்ப்பிற்கு பின் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய முடியாது. எனவே பெயர், பிறந்த தேதி உட்பட அனைத்து விவரங்களையும் கவனமாக பதிவு செய்ய வேண்டும். அதற்கு பின்னரும் தவறு ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் லோகநாதன், ரேணுகா, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் அனந்தராமன், அதிராமசுப்பு மற்றும் 196 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு தீவிரம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வி ஆண்டில் காலியாக உள்ளன. இவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கு, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, நேரடி நியமனத்தில் வந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் என, இரண்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, விதிகளின்படி பணிமூப்பு விபரங்களை, வரும், 30க்குள், பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பட்டியல் தயாரிப்பு பணியில் விதிமீறல்கள், பிழைகள் ஏற்படக் கூடாது எனவும், சி.இ.ஓ.,க்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டங்களில் இருந்து வரும் பெயர் விபரங்களை, தலைமை அலுவலக ஆவணங்களுடன் ஒப்பிட்டு, பதவி உயர்வுக்கான தோராய பட்டியல், மூன்று மாதங்களில் இறுதி செய்யப்படும். மார்ச் இறுதியில், இறுதி பட்டியல் தயாராகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.