Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 20 January 2017

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான மேலாண்மை திறன் வளர்த்தல் பயிற்றுனர் கையேடு

முதலமைச்சர் பேட்டி !!

*ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசே அவசர சட்டத்தை இயற்ற  முடிவு - பன்னீர்செல்வம் பேட்டி*

*குடியரசு தலைவர், ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்*

*ஒரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு*

*தமிழகத்தில் ஒரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்ம் என முதலமைச்சர் பன்னீர் செல்வம் பேட்டி*

*சட்டவரைவு உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்ட்டுள்ளது : பன்னீர்செல்வம்*

*பொதுமக்கள், மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் பன்னீர்செல்வம் பேட்டி.

ஜல்லிக்கட்டு குறித்து ஒரு வாரத்துக்கு தீர்ப்பளிக்கக் கூடாது: மத்திய அரசின் மனு ஏற்பு.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், ஒரு வாரத்துக்கு தீர்ப்பளிக்கக் கூடாது என்று கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

 தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு குறுக்கீடு ஏற்படக் கூடாது என்பதால் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரத்தோகி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

         அந்த மனுவில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதால், அடுத்த ஒரு வார காலத்துக்கு ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பளிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஒரு வார காலத்துக்கு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

அடுத்த கல்வியாண்டில் வருகிறது மாணவர்கள் 'கற்றல் திறன் மதிப்பீடல் முறை" -பிரகாஷ் ஜவடேகர்

*வகுப்பு வாரியாக பள்ளி மாணவர் கற்றல் திறன் மற்றும் வளர்ச்சியை அளவிட உதவும்

*1முதல் 8வரை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு கருத்துரு ஆசிரியர்,பெற்றோர்,மக்களிடம் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளது

*மார்ச் மாதம் இறுதி செய்யப்பட்டு அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும்

*தொகுக்கப்பட்ட கற்றல் திறன் மதிப்பிடல் முறையை கல்வி திட்டத்தில் இணைக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும்

*இந்த வரைவு அறிக்கை தொடக்க நிலை வரையில் மொழிப்பாடங்கள்,கணிதம்,சுற்றுசூழல் கல்வி,அறிவியல்,சமூகவியல் பாடங்களாக தொகுக்கப்பட்டுள்ளது.

*பல்வேறு படிநிலைகளில் மாணவர் நிலையை தனிப்பட்ட முறையிலும்,ஒட்டுமொத்த அளவிலும் ஆசிரியர்கள் மதிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்

NMMS தேர்வுக்கான நுழைவுச் சீட்டை 23.01.2017 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CRC கூட்டம்-இரத்து செய்ய -தமிழக ஆசிரியர் மன்றம் கோரிக்கை.

நாளை(21-01-2017) நடை பெற இருக்கும் உயர் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான Upper primary-CRC கூட்டம்-இரத்து செய்ய -தமிழக ஆசிரியர் மன்றம் கோரிக்கை.          தமிழகத்தின் பாரம்பரியத்திற்கும், தமிழனின் வீரத்திற்கும்விடப்பட்டிருக்கும் சவாலை, தவிடு பொடியாக்கி சாதனையாக மாற்ற, தற்போது தமிழகம் எங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும், இளைஞர்களின் எழுச்சி போராட்டத்திற்கு வாழ்த்து கூறும் வகையிலும், தமிழனின் வீர வரலாற்றில் தடம்பதித்து , அறவழியில் தனதுபங்களிப்பை தந்து, ஆசிரியன் என்பதற்கு மேலாக,ஒரு  தன்மானம் மிக்க தமிழனாய், ஜல்லிக்கட்டு போராட்டத்தில்  இளைஞர்களின் எழுச்சிக்கு ஆதரவுதெரிவிக்க வாய்ப்பாக ,நாளை(21-01-2017) நடை பெற இருக்கும் .உயர் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான  கருத்தாய்வு வளமைய கூட்டத்தினை(CRC-Upper primary) இரத்து செய்ய வேண்டும்  என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.  

ஜல்லிக்கட்டை நானே துவக்கி வைப்பேன் : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.

ஜல்லிக்கட்டு நடத்தவதற்கான அனைத்து சட்ட ரீதியான முயற்சிகளும் நடைபெறுவதாகவும், தமிழகத்தில் விரைவில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது ஜல்லிக்கட்டை நானே துவக்கி வைப்பேன் என்றார்..

பள்ளிகள் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம்

தனியார் பள்ளி சங்கத்தினர் விடுமுறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விட மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசுத் துறை வட்டாரங்கள் கூறியது: தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் இயற்கைச் சீற்றமோ அல்லது அசாதாரண சூழ்நிலையோ ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டால் அங்கு விடுமுறை விடுவதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பள்ளி கல்வி இயக்ககத்தின் அனுமதியோ, தமிழக அரசின் ஆலோசனையோ கேட்க வேண்டியதில்லை. மாவட்ட நிலைமையை ஆராய்ந்து ஆட்சித் தலைவரே முடிவெடுத்து அறிவிக்கலாம் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜல்லிக்கட்டு - ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - திருவாரூர்

ஜல்லிக்கட்டு - ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ஜல்லிக்கட்டு - ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - புதுக்கோட்டை

புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (20.01.2017) விடுமுறை அறிவிப்பு.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் முழுவதும் விடுமுறை அறிவித்த நிலையில் சில மாவட்டங்களில் மாணவர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகமே அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்:

ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை

விருதுநகர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு  விடுமுறை

மதுரை மாவட்ட  பள்ளி,  கல்லூரிகளுக்கு  விடுமுறை.

திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை

திருப்பூர்  மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை

6 முதல் 12 வரை EMIS புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

Data entry for Classes 6th to 12th has been enabled

All Schools are opened for student profile update and transfer/admit

Click Here

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!