Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 26 January 2017

அனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம்! மத்திய அரசு !!

நாட்டிலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகத்தை திறப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் நான்கு வகையான பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. அவை ஆர்டினரி, அஃபிசியல், டிப்ளோமேட்டிக் மற்றும் ஜம்போ. ஆர்டினரி பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், அஃபிசியல் பாஸ்போர்ட் அரசாங்க 
ஊழியர்களுக்கும், டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், ஜம்போ பாஸ்போர்ட் வணிகம் சம்பந்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு, பாஸ்போர்ட் இன்றியமையாத ஒரு விஷயமாக உள்ளது.

குஜராத்தின் தாகோட் நகரிலுள்ள தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தை நேற்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் திறந்துவைத்தார். இதுகுறித்து அவர், ‘ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் வெளியுறவுத்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் அனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

கல்லுாரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்கனவே பாஸ்போர்ட் வழங்க 'ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஸ்டூடண்ட் கனெக்ட் சேவை மூலம் நாட்டில் 37 பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு உட்பட்ட கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில்தான் தரமான கல்வி : கவர்னர் வித்யாசாகர் ராவ் !!

நமது முன்னோர்கள் கனவுப்படி, நாட்டை வளமாக்க இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும் என தமிழக கவர்னர் பொறுப்புவகிக்கும் வித்யாசாகர் ராவ் குடியரசு தினத்தையொட்டி ரேடியோ, தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

அவர் தனது உரையில் கூறியதாவது: 68வது குடியரசு தினம் கொண்டாடும் இந்த நேரத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மும்பையில் இதேநாளில் நான் கொடியேற்ற வேண்டியிருந்ததால் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விழாவில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த நாட்டில் பிறந்ததற்காக ஒவ்வொரு குடிமகனும் பெருமை அடைகிறோம். அத்துடன் நாட்டின் முன்னேற்றத்தையும் நினைத்துப் பார்க்கிறோம். நமது அரசியலமைப்பு சட்டம் உலகின் மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தமிழக அரசை தலைசிறந்த சுதந்திர போராட்டத் தியாகிகளும், தமிழ் அறிஞர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கினார்கள். அவர்களின் தியாகம் இளைஞர்களுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் தரமான கல்வி அளிக்கப்படுகிறது. 2015-16ஆம் ஆண்டில் இங்கு ஆரம்பக் கல்வியின் வளர்ச்சி விகிதம் 99.85 சதவீதமாக அதிகரித்து இருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இதேபோல், உயர் கல்வியில் நாட்டின் சராசரி வளர்ச்சி 23.6 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தின் வளர்ச்சி 44.8 சதவீதமாக அதிகரித்து இருப்பதை குறிப்பிட விரும்புகிறேன். மேலும் தமிழகத்தின் வளர்ச்சி கண்டு மிகவும் பெருமிதம் கொள்கிறேன். தமிழகம் முதல்தர மாநிலமாகத் திகழ்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தாயுள்ளத்துடன் ஏழைகள் மற்றும் பொது மக்கள் நலனுக்காக பல சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தினார்.

அம்மா உணவகங்கள், பசுமை பண்ணை அங்காடிகள், குடிநீர், சிமெண்ட், மருந்தகங்கள் போன்ற அம்மா திட்டங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் விலைவாசி உயர்வு சுமையை குறைத்தது. அம்மா உணவகங்களின் வெற்றியைத் தொடர்ந்து பல மாநிலங்கள் மட்டுமல்லாது சில உலக நாடுகளும் இங்கு வந்து பார்வையிட்டு திட்டத்தை செயல்படுத்தும் முறையை அறிந்து தங்கள் மாநிலங்களிலும் அமல்படுத்தி வருகின்றன.

தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் செயல்படும் இ-சேவை மையங்கள் பொதுமக்களின் வீடு தேடிச்சென்று சேவைகளை வழங்கி வருவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.’ இவ்வாறு கவர்னர் தனது உரையில் குறிப்பிட்டார்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

அனைவராலும் என்எல்சி என அழைக்கப்படும் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள
100 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: என்ஜினியர் - (மெக்கானிக்கல், இஇஇ, இசிஇ, சிவில், மைனிங், கன்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன்)

காலியிடங்கள்: 100

கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300-ஐ பாரத ஸ்டேட் வங்கியின் நெட் பேங்கிங் மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: https://www.nlcindia.com/new_website/careers/CAREER.htm

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.01.2017

வங்கக் கடலில் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வுகள்

வங்கக் கடலில் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வுகள்        தென்மேற்கு வங்கக் கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்தத்

தாழ்வு நிலைகள் உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
          சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் மாலத்தீவு அருகே மற்றும் ஒரு குறைந்த காற்றழுத்தத்  தாழ்வு நிலையும் உருவாகியுள்ளது.

இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதிகளில் அனேக இடங்களிலும், மற்ற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

5-வது படித்தவரின் ஆண்டு சம்பளம் ரூ. 21 கோடி

கல்விக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் எப்போதுமே தொடர்பு இருந்தது கிடையாது. இந்தியாவிலேயே 94 வயதிலும் ஆண்டுக்கு ரூ.21 கோடி சம்பளம் பெறும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் எம்டிஹெச் நிறுவனத்தின் நிறுவனர் தரம்பால் குலாட்டி. இவர் படித்ததோ 5-ம் வகுப்பு வரைதான்.

எம்டிஹெச் மசாலா பொடி தயா ரிப்புகளின் அட்டைப் படத்தில் டர்பன் அணிந்தபடி காட்சிதரும் 94 வயது தாத்தாதான் தரம்பால் குலாட்டி.

கோத்ரெஜ் நிறுவனத்தின் ஆதி கோத்ரெஜ், ஹிந்துஸ்தான் யுனி லீவரின் சஞ்ஜீவ் மேத்தா, ஐடிசி நிறு வனத்தின் தேவேஷ்வர் ஆகியோரைக் காட்டிலும் அதிக சம்பளம் பெறு பவரும் இவரே.

`தாதாஜி’ என்றும் `மஹாஷாயாஜி’ என்றும் அன்புடன் அழைக்கப்படு கிறார். மஹாஷியான் டி ஹட்டி என் பதன் சுருக்கமே எம்டிஹெச் ஆகும். 2015-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 15% அதிகரித்து ரூ.924 கோடியை எட்டியுள்ளது. லாபம் 24% அதிகரித்து ரூ. 213 கோடியாக இருந்தது. இந்நிறுவனத்தின் 80% பங்குகள் இவர் வசமே உள்ளன.

94 வயதிலும் தினசரி அலுவலகம் சென்று அன்றாட பணிகளைப் பார்ப் பது, சந்தைப் பிரதிநிதிகள் மற்றும் விநியோகஸ்தர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமையிலும் ஓய்வின்றி பணிகளை தொடர்கிறார்.

தரமான பொருள்களை கட்டுப் படியாகும் விலையில் இந்திய நுகர்வோருக்கு அளிக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என்று கூறுகிறார் இந்த முதிய இளைஞர்.

பாகிஸ்தானின் சாயல் கோட் பகுதி யில் இவரது தந்தை மிகச் சிறிய பெட்டிக் கடையை நடத்தி வந்தார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னரே இந்திய பகுதிக்கு குடி பெயர்ந்து, டெல்லியில் கரோல் பாக் பகுதியில் முதலாவது கடையைத் திறந்தார். அன்று அவர் தொடங்கிய தொழில் இன்று ரூ.1,500 கோடி மதிப்பிலான மசாலா சாம்ராஜியமாக உருவாகி உள்ளது. 15 ஆலைகள் 1,000 விநியோகஸ்தர்கள் மூலம் எம்டிஹெச் தயாரிப்புகள் நாடு முழுவதும் விற்பனையாகின்றன.

வெறுமனே மசாலா ஆலை மட்டுமின்றி 20 பள்ளிகள் மற்றும் ஒரு மருத்துவமனையையும் இவர் நடத்தி வருகிறார்.

எம்டிஹெச் நிறுவனத்துக்கு துபாய், லண்டனில் அலுவலகங்கள் உள்ளன. 100 நாடுகளுக்கு தயாரிப்புகள் ஏற்றுமதியாகின்றன. நிறுவனத்தின் நிர்வாகத்தை இவரது மகன் கவனித்துக் கொள்கிறார். இவரது 6 மகள்களும் விநியோகப் பிரிவை கவனிக்கின்றனர்.

மசாலா பொடிகள் தயாரிப்புக்கு தேவையான மூலப் பொருள்கள் தரமாகக் கிடைக்க வேண்டும் என்பதால் ஒப்பந்த அடிப்படையில் பொருள்களை சாகுபடி செய்து பயன்படுத்துகின்றனர். கர்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களில் இந்நிறு வனத்துக்குத் தேவையான பொருள் களை சாகுபடி செய்து தரும் விவ சாயிகள் உள்ளனர். ஆப்கானிஸ் தான், ஈரானிலிருந்தும் வாசனை திரவியப் பொருள்களை இந்நிறு வனம் கொள்முதல் செய்கிறது.

மசாலா பொடிகள் பிரிவில் எவரெஸ்ட் நிறுவனத் தயாரிப்புகள் 13% சந்தையைப் பிடித்துள்ளன. எம்டிஹெச் வசம் 12% சந்தை உள்ளது. டெகி மிர்ச், சாட் மசாலா, சன்னா மசாலா என 60 வகையான மசாலா பொடிகளை இந்நிறுவனம் தயாரிக் கிறது. இவை ஒவ்வொன்றும் மாதத் துக்கு ஒரு கோடி பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன.

சமையலறை அரசன் என்ற வாசகத்துடன் இந்திய சமையலறை கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கோலோச்சும் எம்டிஹெச் நிறுவனர் தாதாஜி சுவையின் அரசர் என்பதில் சந்தேகமில்லை.

TNPSC:கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு.

கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குரூப்-3 தேர்வில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில் 24 காலிப் பணியிடங்களை நிர்ப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் 46 ஆயிரத்து 797 பேர் கலந்துகொண்டனர். தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 30 பேர் தற்காலிகமாகத் தேர்வுசெய்யப் பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண் கள் கொண்ட பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சிறந்த ஆசிரியர் விருது

NEET Exam 3 முறை மட்டுமே எழுதலாம்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை 3 முறை வரை எழுதலாம் என யூஜிசி தெரிவித்துள்ளது.

டில்லியில் நேற்று நடந்த யூஜிசி ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும். பொது பிரிவு மாணவர்கள் 25 வயது வரையிலும், இடஒதுக்கீடு மாணவர்கள் 30 வயது வரையிலும் நீட் தேர்வை எழுதலாம். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் 3 முறை நீட் தேர்வு எழுதலாம். யூஜிசி.,யின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மருத்துவ கல்வி மற்றுமண் ஆராய்ச்சி இயக்குனரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

TNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவிப்பு.

ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு

பள்ளி கல்வித்துறையின் அரசு தேர்வுத்துறையால் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 
ஜல்லிக்கட்டு விளையாட்டுதொடர்பாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு நடைபெறுவது தள்ளிப்போகாது. ஏற்கனவே அறிவித்த அட்டவணைப்படி திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்.ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாதம் இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு நடக்கும் தேதி அறிவிக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் விரிவான அறிவிப்பு விரைவில் வர உள்ளது.

புது ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது.

தமிழக அரசு பணியில் 200௩ம் ஆண்டு-க்கு பின்சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டது. ஊழியர் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம், அரசின் பங்களிப்பாக 10 சதவீதம் சேர்த்து அத்தொகை முழுவதும் தனி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
சில துறைகளில் மட்டும் பிடித்தம் செய்த தொகை 8 சதவீத வட்டியுடன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.

இதுகுறித்து காரைக்குடியை சேர்ந்த செல்வம் என்பவர், தகவல் அறியும்உரிமைசட்டத்தில் விபரம் கேட்டிருந்தார்.

இதற்கு நிதித்துறை பொது தகவல் தொகுப்பு மையம் அளித்துள்ள பதில் விபரம்:

இத்திட்டத்தின் கீழ் பணியாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசு பங்குத்தொகை சேர்த்து அரசு நிர்ணயிக்கும் வட்டியுடன்திரும்ப வழங்கப்படும். இத்திட்ட நிதி, நிரந்தர அரசு கணக்கில் வரவு வைக்கப்படவில்லை; தற்காலிக கணக்கில் தான் வரவு வைக்கப்பட்டு உள்ளது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 2015--16 வரை பணியமர்த்தப்பட்டவர்கள், 4 லட்சத்து 54 ஆயிரத்து 999 பேர்.

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் 2003 ஏப்.,1 முதல் தற்போது வரை (2015--16) பணியாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ஐந்தாயிரத்து 114 கோடி 42 லட்சத்து 98 ஆயிரத்து 616 ரூபாய். அரசு பங்கு தொகையாக, அதே அளவு தொகை வரவு வைக்கப் பட்டுள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 222 கோடி 85 லட்சத்து 97 ஆயிரத்து 232.இதுவரை பணி ஓய்வு, இறப்பு போன்றவற்றால் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்கள் 1873 பேர்; இவர்களுக்கு தொடர் ஓய்வூதியம் கிடையாது.10 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு, இருப்பு தொகையில் கடன் வழங்க இயலாது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து செல்வம் கூறியதாவது:பத்து ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு, பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் 25 சதவீதம் கடன் வழங்க, ஏற்கனவே சுற்றறிக்கைவெளியிடப்பட்டது. ஆனால், தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டன் வழங்க இயலாது என்றும், எவ்வித அரசாணையும் வெளியிடவில்லை எனவும் மறுக்கப்பட்டுள்ளது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கைக்காக குழு அமைக்கப்பட்டு, அரசு அதை கிடப்பில் போட்டுள்ளது. ஓய்வு பெறும் ஊழியருக்கு, பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்ப பெறும் வழிமுறைகளை அரசு செய்யவில்லை. இதனால் ஓய்வு பெற்றவர்கள், இறந்தவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.இவ்வாறு கூறினார்.

மார்ச் 25ல் 'ஸ்டிரைக்' : அரசு ஊழியர்கள் அறிவிப்பு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள்நான்கு கட்ட போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர், செல்வம் கூறியதாவது: 
கடந்த பிப்ரவரியில் புதிய ஓய்வூதியம் திட்டம் ரத்து, சம்பளக்குழு அமைப்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் போராடினர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சட்டசபை விதி, 110ன் கீழ், புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து நிபுணர் குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், 'புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும்' என அறிவிக்கப்பட்டது; இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

நான்கு லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. எட்டாவது சம்பள குழு அமைக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, 20 சதவீதம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து, பிப்., 2ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம், மார்ச் 15ல், மாவட்ட தலைநகரங்களில் பேரணி, 18 முதல் 25 வரை, வேலை நிறுத்த ஆயத்த மாநாடுகள், 25 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு கூறினார்.

பிளஸ் 2 செய்முறை தேர்வில் முறைகேடுக்கு இடம் கூடாது

'பிளஸ் 2 செய்முறை தேர்வில், முறைகேடுக்கு இடமின்றி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத் துறை இயக்குனர், எச்சரிக்கை விடுத்துள்ளார்.பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 2ல் துவங்கி, 31ல் முடிகிறது. 
தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதில், 'தியரி' என்ற கருத்தியல் தேர்வுடன், அறிவியல் சார்ந்த செய்முறை தேர்வும் நடத்தப்படும்.இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண் உயிரியல், நுண் வேதியியல், நர்சிங், ஊட்டச்சத்து மற்றும் உணவு பதப்படுத்துதல், இல்ல அறிவியல், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் உள்ளிட்ட பாடங்களுக்கு, செய்முறை தேர்வு நடத்தப்படும். இத்தேர்வு, பிப்., 2 முதல், அந்தந்த பள்ளி ஆய்வகங்களில் துவங்குகிறது.

இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி பிறப்பித்த உத்தரவு: தேர்வின்போது, வேறு பள்ளி கண்காணிப்பாளர்களைபணியில் அமர்த்த வேண்டும். செய்முறை உபகரணங்களை, மாணவர்களுக்கு முறையாக வழங்க வேண்டும். செய்முறை தேர்வுக்கான, 'ரெக்கார்ட்' புத்தகங்களை மாணவர்களிடம் பெற்று, மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்வில் எந்த மாணவருக்கும், முறைகேடாக கூடுதலாகவோ, குறைத்தோ மதிப்பெண் வழங்கக் கூடாது.

இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.

G.O(Ms) No.10 datd: 11.01.2017 - School Education Department - Definition of out of school/Drop out -order issud by the government...DSE - ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான செயல்முறைகள்


1ம் வகுப்பு முதல் கணினி சொல்லிக்கொடுங்க.. அரசு பள்ளி மாணவர்களும் திறன் பெறட்டும்

அரசு பள்ளி மாணவர்களுக்கும் கணினி கல்வி வேண்டும் என்று தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வெ. குமரேசன் கோரியுள்ளார்.

        சென்னை: அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பும் முதல் 12ம் வகுப்பு வரை கணினிப் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்று கணினி ஆசிரியர்கள் கோரியுள்ளனர். மேலும், அச்சடிக்கப்பட்டு குடோனில் கிடக்கும் 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள கணினி பாடப் புத்தகத்தை மாணவர்களிடம் வழங்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.

         தமிழ்நாட்டில் 1992 ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கணினி பட்டப்படிப்பை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் கணினி ஆசிரியர்கள் மட்டும் 40 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 11 ஆயிரம் பேரும், பெண்கள் 29 ஆயிரம் பேரும் இருக்கிறார்கள். இவர்களது ஒரே கோரிக்கை தனியார் பள்ளிகளில் இருப்பது போன்று அரசு பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வித் திட்டத்தில் கணினியையும் சேர்க்க வேண்டும் என்பதுதான்.

ஏற்கனவே, சமச்சீர் கல்வித் திட்டத்தில் 6 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை கணினியை ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் அதற்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதனை மாணவர்களுக்கு வழங்காமல் அந்தப் பாடத்தை நடத்தாமல் உள்ளது தமிழக அரசு. இதுகுறித்து மேலும் பல தகவல்களை ஒன் இந்தியாவிடம் பகிர்ந்து கொள்கிறார் வெ.குமரேசன்.

குடோனில் கணினிப் புத்தகம்

சமச்சீர் கல்வியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்திற்கான திட்டம் வகுக்கப்பட்டு பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. என்றாலும் அவற்றை மாணவர்களுக்கு இதுவரை வழங்காமல் குடோனிலேயே குப்பை போல கிடக்கிறது. இதற்கு காரணம் அவற்றை சொல்லித் தர அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லை.

900 கோடி எங்கே?

கணினி பாடத்திற்காக மத்திய அரசு தமிழக அரசுக்கு 900 கோடி ரூபாய் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலமாக ஒதுக்கியுள்ளது. ஆனால் அந்த பணத்தை செலவு செய்யக் கூட தமிழக கல்வித் துறைக்கு தெரியவில்லை. அது அப்படியே மத்திய அரசிற்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு சென்று சேர வேண்டிய தரமான கணினிக் கல்வி மறுக்கப்படுகிறது.

கணினி ஆய்வகங்கள்

தமிழகத்தில் 21 லட்சம் மாணவர்களுக்கு தமிழக அரசு மடிக்கணினியை வழங்கியுள்ளது. என்றாலும் பள்ளிக் கூடங்களில் கணினிப்பொறி ஆய்வகங்கள் முறையாக இல்லை. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் அமைத்துக் கொடுத்தால்தான் மாணவர்கள் திறம்பட கற்க முடியும். வெறும் மடிக்கணினியை கொடுத்து என்ன பயன்?

கணினி ஆசிரியர்கள்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் இருக்கிறது. என்றாலும், அந்தப் பாடங்களை நடத்துவதற்கு முறைப்படி கணினி பிரிவில் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கிறது. அதே போன்று கடந்த பத்து வருடங்களாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடப்பிரிவு சுத்தமாக இல்லை. அங்கேயும் கணினி அறிவியல் பாடப்பிரிவு கொண்டுவர வேண்டும். ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

இணையாக வளர..

தமிழக அரசு கணினி கல்வியில் தனி கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் கணினி அறிவைப் பெறுவது போன்று அரசுப் பள்ளி மாணவர்களும் பெற முடியும்.

கட்டாயக் கல்வி

தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் கணினிக் கல்வி கட்டாயக் கல்வியாக உள்ளது. வரும் கல்வியாண்டில், ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு குடோனில் தூங்கிக் கொண்டிருக்கும் கணினிப் பாடப் புத்தகங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி கணினி கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும் என்று குமரேசன் கூறியுள்ளார்.

நன்றி:
ஒன் இந்தியா

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!