Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 1 February 2017

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.

சிறுபான்மையினர் பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - அறிவுரை

பள்ளிக்கல்வி செயல்முறைகள் நாள்:20/01/17- TET - சிறுபான்மையினர் பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்பு 

 பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்

நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த மத்திய பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்பினால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் போன் தயாரிப்பில் முக்கிய பணியாற்றும் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் மீது 2% கூடுதல் சுங்கத்தீர்வை விதிக்கப்படவுள்ளதால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கவுள்ளது.

இந்த புதிய வரிவிதிப்பினால் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளின் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பயன் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறக்குமதி செய்யப்பட்ட போர்டுகளைப் பயன்படுத்தும் மொபைல் போன்களின் விலை 1% வரை இதனால் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் இறக்குமதிசெய்யப்பட்ட சர்கியூட் போர்டுகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

இது செல்போன்கள் தயாரிப்பு செலவில் 25-30% தாக்கம் செலுத்துவதாகும். 

மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரி காரணமாக புகையிலை உள்ளிட்ட சில பொருட்கள் விலை உயர உள்ளன. அதேநேரம் சூரிய மின்சக்தி தகடுகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான விலை குறைய உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:

விலை உயரும் பொருட்கள்:

சிகரெட், பான் மசாலா, பீடி, சுருட்டு, புகையிலை.

எல்.இ.டி. விளக்குகள்

வறுத்த முந்திரி பருப்பு

அலுமினிய தாதுக்கள்

பாலிமர் எம்.எஸ். டேப்புகள்

வெள்ளி நாணயங்கள், பதக்கங்கள்

செல்போன் சர்க்கியூட் போர்டுகள்

விலை குறையும் பொருட்கள்

ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள்

வீட்டு உபயோக ரிவர்ஸ்டு ஆஸ்மாசிஸ் தகடுகள்.

திரவ எரிவாயு

சூரிய மின் சக்தி தகடுகள்

காற்றாலை ஜெனரேட்டர்

பி.ஓ.எஸ். இயந்திரங்கள், விரல் ரேகை பதிவு இயந்திரங்கள்

பாதுகாப்பு துறை சேவைகளுக்கான குழு காப்பீடு

உங்கள் இருப்பிடத்தை நண்பர்கள் தெரிந்து கொள்ளலாம்: Whatsapp New update

சமூக வலை தளங்களில் சாட்டிங் வசதியில் முன்னணி வகித்து வரும் வாட்ஸ் அப் தங்கள் பயனாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தற்போது புதிய அப்டேட்களை வழங்கவுள்ளது.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் வாட்ஸ் அப் உபயோகப்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை (Location) அவர்களின் நண்பர்கள் தெரிந்து கொள்ளும் புதிய வசதி வாட்ஸ் அப்பில் வரவுள்ளது. மேலும் நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களை மாற்றும் போதும், வாட்ஸ் அப் கால் பேசிகொண்டிருக்கும் போதும் Low பேட்டரி என இருந்தால் அதனை நண்பர்களுக்கு Notification-களில் தெரியபடுத்தும் அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது.

இதனை WABetaInfo தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இந்த புதியவசதிகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் -2017-18 முழு விவரம் !!

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் விவரம்:
-பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அருண் ஜேட்லி
-சுமார் 2 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார் ஜேட்லி
-நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது
-ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு ஊதியம் பெருவோருக்கான வருமான வரி 10%ல் இருந்து 5% ஆக குறைப்பு

-ரூ. 3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி விலக்கு
-வருமான வரி சலுகையால் அரசுக்கு ரூ.15500 கோடி வருவாய் இழப்பு
-வருவாய் இழப்பை ஈடு செய்ய அதிக ஊதியம் பெறுவோருக்கு அதிக வரி
-ஆண்டு வருவாய் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலுள்ளவர்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி-ஜேட்லி
-தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை
-ரூ.250000 முதல் ரூ.5 லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி
-தற்போது இந்த பிரிவினருக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது
-தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கமாக இருக்கும்
-அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க ஜேட்லி அதிரடி அறிவிப்பு
-அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக ஒரு மூலத்திடமிருந்து ரூ.2000 மட்டுமே நன்கொடை பெற முடியும்
-அரசியல் கட்சிகள் நன்கொடையை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில்தான் பெற வேண்டும்
-ரிசர்வ் வங்கி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும்
-கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை
-அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியில் விலக்கு
-ரொக்கமாக ரூ.

3 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் பணம் எடுக்க தடை
-ஊழலுக்கு எதிரான சிறப்பு விசாரணை குழு இப்பரிந்துரையை செய்தது
-இந்த பரிந்துரையை அரசு ஏற்கிறது; இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்
-2015-16ல் மொத்த வரி வருவாய் 17 சதவீதம் அதிகரித்துள்ளது
-ரூ. 50 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுகக்கான வருமான வரி 30%ல் இருந்து 25% ஆக குறைக்கப்படும்
-ஆண்டுக்கு 50 கோடிக்கு குறைவாக வர்த்தகம் நடைபெறும் சிறு நிறுவனங்களுக்கு 5 சதவீத வரி குறைப்பு
-6.94 லட்சம் நிறுவனங்கள் வருமான வரி செலுத்துகின்றன
-இதில் 96 சதவீத நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள்தான்
-சிறு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு வரி குறைப்பு உதவும்
-கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.7 கோடி பேர் மட்டுமே. இதில் ஆண்டு வருமானத்தை ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக காட்டியவர்கள் 24 லட்சம் பேர் தான்
-கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.7 கோடி பேர் மட்டுமே. இதில் ஆண்டு வருமானத்தை ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக காட்டியவர்கள் 24 லட்சம் பேர் தான்
-பண மதிப்பிழப்பால் அட்வான்ஸ் வருமான வரி கட்டுவது 34.8% அதிகரித்துள்ளது
-இந்தியாவில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது
-3.7 கோடி தனி நபர்களில் வருமான வரி தாக்கல் செய்தோர் 97 லட்சம் பேர் குறைந்த வருவாய் பிரிவினர்
-52 லட்சம் பேர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறார்கள்
-1.72 லட்சம் பேர் மட்டுமே 50 லட்சத்துக்கு மேல் வருவாய் பெறுவதாக அறிவித்துள்ளனர்
-பணமதிப்பிழப்புக்கு பிறகு இந்த வரி ஏய்ப்பு அம்பலமானது
-1.09 கோடி வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் சராசரி மதிப்பு 5.3 லட்சம்
-8 லட்சத்துக்கு மேல் 1.48 லட்சம் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது
-நாட்டில் பெரும்பாலானவர்கள் வருமான வரியே கட்டுவதில்லை. இதனால் நியமாயமாக வரி கட்டுவோர் மீது சுமை கூடுகிறது
-2017-18ல் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும்
-கடந்த ஆண்டில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிததி ரூ. 4.11 லட்சம் கோடி
-பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 2.74 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்
-2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் மொத்த செலவீனங்கள் ரூ. 21.47 லட்சம் கோடியாக இருக்கும்
-மொத்த உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும்-ஜேட்லி
-தலைமை தபால் நிலையங்கள் பாஸ்புக் அலுவலக பணிகளையும் மேற்கொள்ளும்
-பாதுகாப்பு படையினர் போக்குவரத்து டிக்கெட் எடுக்க தனி வசதி ஏற்படுத்தப்படும்
-மத்திய எண்ணெய் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்க திட்டம்
-பல்கலைக்கழக மானிய குழுவில் மாற்றம் கொண்டுவரப்படும்
-வெளிநாடுகளுக்கு தப்பியோடி தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் சொத்துக்கள் முடக்கப்படும்
-குற்றவாளிகள் சொத்துக்களை முடக்க சட்டத்திருத்தம், தேவைப்பட்டால் புது சட்டம்-ஜேட்லி
-ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.2லட்சத்து 74 ஆயிரத்து 114 கோடி-ஜேட்லி
-இதில் ராணுவ ஓய்வூதிய செலவீனங்கள் சேர்க்கப்படவில்லை-ஜேட்லி
-வறட்சியை சமாளிக்க புதிதாக 5 லட்சம் குளங்கள் வெட்டப்படும்
-செக் மோசடிகளை தவிர்க்க மாற்றுமுறை ஆவணச் சட்டத்தில் திருத்தம்
-உர விற்பனை நிலையங்கள், கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை
-ஆதார் அடிப்படையிலான பண பரிவர்த்தனை திட்டம் அறிமுகம்
-மொபைல் வாலட், டெபிட் கார்டுகள் இல்லாதவர்களுக்காக இத்திட்டம்
-இந்த நிதியாண்டில் 2500 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இலக்கு
-பிரதமர் மோடியின் குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் புதிதாக 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்
-தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்துக்கு ரூ. 64,000 கோடி ஒதுக்கீடு
-புதிய அன்னிய முதலீட்டுக் கொள்கை கொண்டு வரப்படும்
-போக்குவரத்து துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2,41,387 கோடி
-நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3,96,135 கோடி செலவிடப்படும்
-உள்கட்டமைப்பு துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3,96,135 கோடி
-100 திறன் மேம்பாட்டு மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும் - அருண் ஜேட்லி
-மூத்த குடிமக்களுக்கு 8% வருவாயுடன் எல்.ஐ.சி திட்டம் - அருண் ஜேட்லி
-மருத்துவ மேற்படிப்புகளில் 5000 சீட்கள் அதிகரிக்கப்படும்
-அன்னிய முதலீடு வளர்ச்சி வாரியம் (Foreign Investment Promotion Board) மூடப்படும்
-கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராண்ட் பேண்ட் இண்டர்நெட் வசதிகள் செய்து தரப்படும்
-அதிவிரைவு பிராட்பேண்ட் இணைப்புக்காக 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்
-150000 கிராமங்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் பிராட்பேண்ட் வசதி கிடைக்கும்
-எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தி மையமாக இந்தியா மாற்றப்படும்
-எலக்ட்ரானிக் துறைக்கு ரூ.745 கோடி ஒதுக்கீடு
-நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3,96,135 கோடி செலவிடப்படும்
-அன்னிய முதலீடுகள் 36% அதிகரித்துள்ளது. 361 பில்லியன் டாலர்கள் கையிருப்பு
-2019க்குள் அனைத்து ரயில்கள் கழிவறைகளும் பயோ டாய்லெட்டாக மாற்றப்படும்
-மூத்த குடிமக்கள் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக ஆதார் அட்டை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு
-முதல்கட்டமாக இந்த திட்டம் 15 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்படும்
-தாழ்த்தப்பட்டோருக்கான நிதி ஒதுக்கீடு ரூ.38 838 கோடியிலிருந்து ரூ.52393 கோடியாக உயர்வு-ஜேட்லி
-மருத்துவ உபகரணங்கள் துறையில் முதலீடு ஈர்க்கப்படும்
-மருத்துவ உபகரண விலை குறைக்க நடவடிக்கை
-தொழிலாளர் நலனை காக்க அரசு நடவடிக்கை எடுக்கும்
-குஜராத் ஜார்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள்
-கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி
-பயிர் காப்பீட்டு 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக விரிவு படுத்தப்படும் : அருண் ஜேட்லி
-பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி: ஜேட்லி
-உயர் கல்வி நுழைவு தேர்வு நடத்துவதற்காக தேசிய டெஸ்டிங் ஏஜென்சி தொடங்கப்படும்-ஜேட்லி
-உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த தனி அமைப்பு
-நுழைவுத் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது
-நாட்டில் 2019ஆம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்: ஜேட்லி
-2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் மின்வசதி
-கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.187223 கோடி ஒதுக்கீடு
-கடந்த பட்ஜெட்டை ஒப்பிட்டால், இது 24 சதவீத உயர்வு-ஜேட்லி
-1 கோடி குடும்பங்களை வறுமையிலிருந்து நீக்க இலக்கு
-2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்படும்
-கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ சாலை அமைக்க இலக்கு
-ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு சாதனை அளவாக ரூ.48000 கோடி ஒதுக்கீடு
-விவசாயிகளுக்கு 60 நாள் வட்டி தள்ளுபடி
-பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகள் அதிக அளவு கடன் வழங்க முடியும்
-பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13000 கோடி ஒதுக்கீடு-ஜேட்லி
-கடந்த ஆண்டு பயிர் காப்பீடுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.5500 கோடியாக இருந்தது-ஜேட்லி
-விவசாய உற்பத்தி வளர்ச்சி இவ்வாண்டில் 4.1 சதவீதமாக இருக்கும்-ஜேட்லி
-2017-18ல் விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத சாதனையாக 10 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு-ஜேட்லி
-நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 7.7 சதவீதம் அதிகரிக்கும்
-அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு: அருண் ஜெட்லி
-விவசாயிகள் வருமானம் இரட்டை மடங்காக்கப்படும்-ஜேட்லி
-கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
-இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்
-ஏழைகளுக்கு வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும்
-டிஜிட்டல் பொருளாதாரம் வளர்க்கப்படும்-ஜேட்லி
-வரி வசூல் நேர்மையானதாக இருக்கும்-ஜேட்லி
-வங்கிகளின் கடன் வட்டி விகிதத்தை குறைக்கப்படும்
-உலக பொருளாதாரத்தின் இன்ஜினாக உள்ளது இந்தியா-ஜேட்லி
-ஊரக வளர்ச்சிக்கு அதிக நிதி செலவிடப்படும்
-வறுமை நீக்கம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்
-வேலை வாய்ப்பை உருவாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம்- ஜேட்லி
-பண மதிப்பிழப்பு நடவடிக்கை பலன் படிப்படியாக கிடைக்கும்-ஜேட்லி
-பண வீக்கம் 3.4 என்ற அளவில் குறைந்துள்ளது-ஜேட்லி
-பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது
-வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி இந்த ஆண்டு 1.6%-1.9% ஆக இருக்கும்
-வளரும் நாடுகளின் வளர்ச்சி 4.1%-4.5% ஆக இருக்கும்
-உலக அளவில் நாடுகளின் சராசரி வளர்ச்சி 3.4% ஆக இருக்கும்
-ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு நன்றி-ஜேட்லி
-பண மதிப்பிழப்பு என்பது தைரியமான முடிவு-ஜேட்லி
-உலக வர்த்தக வர்த்தகத்தின் என்ஜினாக இந்தியா விளங்குகிறது- ஜேட்லி
-அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதாக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்
-கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரம்
-வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், இளைஞர்களுக்கு அதிக பலன்கள் போய் சேர செய்வதும் மத்திய அரசின் திட்டம்
-எதிர்க் கட்சிகளின் அமளிக்கு இடையே பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டுள்ளார் அருண் ஜேட்லி
-ஏழைகள், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் தொடரும்-ஜேட்லி.

மாத ஊதிய உச்சவரம்பு ரூ.15 ஆயிரம்: சட்ட மசோதா தாக்கல்

தொழிலாளர் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தின் உச்ச வரம்பு ரூ.3,500-லிருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்த வகை செய்யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கான மசோதாவை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் தாக்கல் செய்தார். அதன் விவரம்:-
தமிழ்நாடு பிழைப்பூதியம் வழங்கல் சட்டத்தில் மாத ஊதியம் ரூ.3,500-க்கு அதிகமாகப் பெறாதவர்கள் அந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவதில்லை. இதனால், பணி நீக்கக் காலத்தில் அவர்கள் ஊதியம் பெற இயலாத நிலை உள்ளது. எனவே, இந்த ஊதியத்தின் உச்சவரம்பு உயர்த்தப்படுகிறது.

இதன்படி, மாத ஊதிய உச்சவரம்பானது ரூ.3,500-லிருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்த மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ற வகையில் சட்டத்தை திருத்தம் செய்யப்படும்.

மரபுவழி விளையாட்டுகளை மீட்கும் முயற்சியில் அரசுப் பள்ளி: மாணவர்களுடன் இணைந்து ஆசிரியர்கள் முயற்சி

மரபுவழி விளையாட்டான ‘பாயும் புலி’ விளையாட்டில் பங்கேற்றுள்ள மாணவர்கள்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் தமிழகத்தின் மரபுவழி விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர்களின் மரபு வழி விளை யாட்டு என்பது குழு உணர்வை மையப்படுத்தியதாகும். கபடி, கிட்டிப்புல், ஓடி ஒளிந்து விளை யாடு தல் என்று நீண்டு செல்கின்ற தமிழர்களின் விளையாட்டு மரபு களைப் பட்டியலிட்டாலே அதுபுரி யும். நாகரிகம், பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செஸ், கேரம் போர்டில் தொடங்கி தொலைக்காட்சி, இணையதள வசதி, ஆண்ட்ராய்டு செல்போன் களின் வருகை என்று பல கார ணிகள் நம் மரபுகளைச் சிதைத்து வருகின்றன.

அதனால், குழந்தைப் பருவத் தில் விளையாடும்போது கிடைக்க வேண்டிய தன்னம்பிக்கை கிடைப் பதில்லை. தோல்வியை, விமர் சனத்தை ஏற்றுக்கொள்கின்ற மனவலிமையும் தற்போதைய மாணவர்கள், இளைஞர்களுக்கு குறைந்துவருகிறது. வாழ்க்கையை எளிமைப்படுத்துகிற பல்வேறு வசதிகள் கிடைத்துள்ள இக்கால கட்டத்திலும் தற்கொலைகள் அதிகரித்துள்ளதற்கும், குடும்ப வன்முறைகள் பெருகியுள்ளதற்கும் இதுவே மூலகாரணமாக உள்ளது.

இந்நிலையை மாற்ற வேண்டு மானால் நாம் மறந்துபோன மரபு வழி விளையாட்டுகளை மீட்டெடுப் பதுதான் ஒரே வழி என்று உணர்ந்து, இதனை முன்னிறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக. திரு வாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள மேலராதா நல்லூர் அரசினர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் மணிமாறன் தன்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஒருங்கிணைத்து மரபுவழி விளையாட்டுகளை நடத்தி வருகிறார். பள்ளியில், இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று நடை பெற்ற நிகழ்ச்சிகளில் மரபுவழி விளையாட்டுகளும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

‘அ’ முதல் ‘ஔ’ வரையிலான உயிர் எழுத்துகளில் குறில் எழுத் துகளை மாணவர்கள் சத்தமாக வும், நெடில் எழுத்துகளை சிரித் துக்கொண்டே வேகமாகவும் கூற வேண்டும். சப்த விளையாட்டு என்ற இதை விளையாடும்போது 247 தமிழ் எழுத்துகள், அவற்றுக் கான மாத்திரை அளவு, சரியான உச்சரிப்பு போன்றவற்றை விளை யாட்டுடன் சேர்த்தே பயிற்றுவிக்க முடியும்.

மாணவர்களை 10 பேர்கொண்ட குழுக்களாகப் பிரித்து 2 குழுக் களுக்கு இடையே போட்டியை நடத்த வேண்டும். முதல் 10 பேரில் 5 பேர் குனிந்துகொண்டும், மீத முள்ள 5 பேர் குனிந்தவர்களைத் தாங்கிக்கொண்டும் இருக்க வேண் டும். அடுத்த குழுவில் உள்ள 10 பேரும் ஒருவர்பின் ஒருவராக ஓடிச்சென்று குனிந்தவர்களின்மீது பாய்ந்து அமர வேண்டும். 5 பேர் வரை சரியாக அமர்ந்துவிட்டால் அல்லது குனிந்தவர்கள் சாய்ந்து விட்டால் உட்காரும் அணிக்கு வெற்றி. உட்கார முடியாவிட்டால் குனிந்தவர்களுக்கு வெற்றி. பாயும் புலி எனப்படும் இந்த விளையாட் டின் மூலம் உடல் வலிமை அடைவ துடன் கூட்டுறவு மனப்பான்மை யும் வளர்த்தெடுக்கப்படுகிறது.

மாணவர்கள் ஒவ்வொரு சொற் களாகக்கூறி ஒரு கதையை உரு வாக்கும் போட்டி கதை விளை யாட்டு. கற்பனை யுடன் சேர்த்து கதைகளின் மையக் கருத்தை மட்டுமே உள்வாங்கும் திறன் அதிகரிக்கிறது.

விளையாடுபவர்களை இரு அணிகளாக பிரித்து எதிரெதிரே நிற்க வைத்து மையத்தில் ஒரு வட்டம் வரைந்து, ஒரு குச்சியை வட்டத்தில் குத்தி வைக்க வேண்டும், அதை எடுக்க இரு தரப்பிலும் இருந்து ஒருவர் முயலும் விளையாட்டு, எலும்புத்துண்டு விளையாட்டு. இந்த விளையாட்டு சுறுசுறுப்பு, கூடுதல் கவனம் ஆகியவற்றை மாணவர்களிடம் வளர்க்கிறது.

இன்றளவும் கிராமப்புறங்களில் விளையாடப்பட்டுவரும் விளை யாட்டு தாத்தா குச்சி என்பது. இந்த விளையாட்டில், சிதறிய குச்சி களை ஒவ்வொன்றாக, ஒன்று மற் றொன்றின் மீது மோதிவிடாமல் எடுக்க வேண்டும். நரம்புத் தளர்ச்சி யின்மை, சிந்திக்கும் ஆற்றலை இந்த விளையாட்டு வளர்க்கிறது.

இதுகுறித்து ஆசிரியர் மணி மாறன் கூறியது: இந்த மரபுவழி விளையாட்டுகள், எதிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்துடன் கூடிய சமுதாயத்தை உருவாக்க உதவும். ஆசிரியர் மாணவர்கள் இடையே யான இடைவெளி குறைந்து கற் பித்தல் எளிதாக நடைபெற இத் தகைய விளையாட்டுகள் உதவும். மேலும், மாணவ, மாணவிகள் கூடி விளையாடுவதால் பாலின சமத்துவம் பிறக்கும்.

மணிமாறன்

எங்கள் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வரும் அனுபவத்தின் வாயிலாக மரபுவழி விளையாட்டுகளின் மகத்துவத்தை நன்றாக உணர்கிறோம். இந்த முயற்சிக்கு ‘பல்லாங்குழி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இனியன், பள்ளி தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு காரணம் என்றார்.

இன்று மத்திய பட்ஜெட்: ரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்?

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை பொது பட்ஜெட்டுடன் இணைந்து முதல் முறையாக தாக்கல் செய்ய உள்ள ரயில்வே பட்ஜெட்டில் தில்லி-ஹெளரா மற்றும் தில்லி-மும்பை மார்க்கங்களில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது மற்றும் ரயில்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
நாட்டில் சுமார் 92 ஆண்டு காலமாக மத்திய பொது பட்ஜெட் தனியாகவும், ரயில்வே பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்படுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அரசின் சீர்திருத்த செயல்திட்டத்தின்படி இம்முறை இரண்டு பட்ஜெட்களும் நாடாளுமன்றத்தில் இணைத்து தாக்கல் செய்யப்பட உள்ளன. அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ள புதிய பட்ஜெட்டில் ரயில்வே நிர்வாகத்தின் நிதிநிலைமை, திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சில பத்திகள் கூடுதலாக இடம்பெறும் என்று தெரிகிறது.
ரயில்வே பட்ஜெட்டில் தில்லி-ஹெளரா மற்றும் தில்லி-மும்பை மார்க்கங்களில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது, ரூ.20,000 கோடி மதிப்பில் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இது தவிர, புதிய இருப்புப்பாதைகளை அமைப்பது, டீசல் ரயில்களை மின்சார ரயில்களாக மாற்றுவது, நவீனமயம், தனியார் பங்களிப்புடன் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சி மீது கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், அனைத்து ரயில் நிலையங்களையும் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்ததாக மாற்றுவது, மத வழிபாட்டுத் தலங்களுக்கு ரயில் இணைப்பை ஏற்படுத்துவது ஆகியவை தொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.

2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

📘4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். (DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any)

📘housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

📘housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- மற்றும்
அசல் 80c ல் கழித்துக் கொள்ளலாம்.

📘housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

📘CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் NPS திட்டத்தில் சேர்ந்து தொகை செலுத்தி இருந்தால், செலுத்திய தொகையை அதிகபட்சமாக ரூ.50,000/- வரை கழித்துக் கொள்ளலாம்.

📘School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது.

📘LIC : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது.

📘PLI : பிரீமியம் தொகையுடன் service Tax யும் சேர்த்து கழித்துக் கொள்ளலாம்.

📘Taxable income 5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.5000/- கழித்துக்  கொள்ளலாம். பிரிவு 87A.

📘Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும் ......

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடத்த கோரிக்கை!!

அந்த பணியிடங்களை நிரப்பாததால் 1,060 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்ப ஆசிரியர்களை தேர்வு செய்து தருமாறு பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடந்த வருடம் கடிதம் அனுப்பினார்.

இந்த இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தித்தான் தகுதியானவர்களை நிரப்ப வேண்டும். ஆனால் இதுவரை எழுத்து தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் முதுநிலை படிப்புடன் பி.எட். முடித்து வேலைக்காக காத்திருக்கும் சிலர் நேற்று சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்தனர். அவர்கள் கூறுகையில், உடனடியாக முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை நடத்தவேண்டும் என்று தெரிவித்தனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!