Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 2 February 2017

+2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு NEET,JEE மாநில அளவிலான மாதிரி நுழைவுத் தேர்வு

பிளஸ் 2 மாநில பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களும் ‘நீட்','ஜேஇஇ' ஆகிய நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும் என அறிந்துகொள்ளும் வகையில் மாநில அளவிலான மாதிரி நுழைவுத் தேர்வை ‘தி இந்து' தமிழ் நாளிதழ், ஆஸ்பயர் லேர்னிங் நிறுவனம்,  சாஸ்தா கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன.
மாநில கல்வி வாரியம். நீட், ஜேஇஇ ஆகிய அனைத்துக்கும் பாடத்திட்டம் ஒன்றுதான். ஆனால், அணுகுமுறை மட்டும்தான் வேறு. எதையும் மனப்பாடம் செய்யாமல் அடிப்படை நுணுக்கங்களை நன்றாக புரிந்து படித்தால் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளில் அதிக கட்-ஆப் மதிப்பெண் பெற்று இந்திய அளவில் சிறந்த மருத்துவம் அல்லது பொறியியல் கல்லூரியில் சேர முடியும். இந்த மாநில அளவிலான மாதிரி நுழைவுத் தேர்வை எழுதுவதன் மூலம் உண்மையான தேர்வு எழுதும் முன் அனுபவம் கிடைக்கும். உண்மையான நுழைவுத் தேர்வில் என்ன ரேங்க் கிடைக்கும் என்பதை தோராயமாக அறிய உதவும். தேர்வுக்கான தயார் நிலையை அறிவதன் மூலம் சரியான முறையில் பயிற்சி பெற முடியும். வேகமாகவும், துல்லியமாகவும் பதிலளிக்கும் திறனை பெற முடியும்.

தொடர்பு கொள்ள..

நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பதிவு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள ஆஸ்பயர் லேர்னிங் மையத்துக்கு சென்று பதிவு செய்யலாம். அல்லது www.aspirelearning.com என்ற இணையதளம் மூலம் பணம் செலுத்தியும் பதிவு செய்யலாம். பதிவுக் கட்டணம் ரூ.500.

மேலும் விவரங்களுக்கு 9840632977, 7338851114 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை தங்களது பள்ளியிலேயே தங்களின் மாணவர்களுக்கு அளிக்க விரும்பும்ஆசிரியர்கள், முதல்வர்கள், தாளாளர்கள் 8754472060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC - பரிசோதகர் தேர்வுக்கு பிப்.9-ல் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு.

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ. ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு தொழில்கள் சார்நிலைப் பணியில் அடங்கிய பரிசோதகர், உதவி பரிசோதகர் பதவிகளில் 6 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜுன் மாதம் 25-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.அத்தேர்வில் 236 பேர் கலந்துகொண்டனர்.

விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 16 பேரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017-2018 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி /மேல் நிலைப்பள்ளிகளில் முதுகலையாசிரியர் பதவி உயர்வு மூலம் நியமனம்

01.01.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியாராகப் பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்த உதவியாசிரியர்கள் ,ஆசிரியர் பயிற்றுநர்கள்& பள்ளி துணை ஆய்வாளர்கள் -முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் விவரங்கள் கோருதல் பாடவாரியா

•கணிதம் 2006/07
•இயற்பியல் 2007/08
•வேதியியல் 2008/09
•தாவரவியல் 2008/09
•விலங்கியல் 2008/09
•தமிழ் 2006/07
•ஆங்கிலம் ஒரேபாடம் 2006/07வேறுபாடம் 2008/09
•இந்திய பண்பாடு 31.12.2016
•வரலாறு/பின்னர் அறிவிக்கப்படும்
•பொருளியல் / ஒரேபாடம் 2011/12வேறுபாடம் 2008/09
•வணிகவியல் ஒரேபாடம் 1993வேறுபாடம் 2008/09
•புவியியல் ஒரேபாடம் 2004 /05வேறுபாடம் 2006/07
•அரசியல் அறிவியல் 2005/06
•மனையியல் 2016
•உடற்கல்வி இயக்குநர் நிலை1 / 2016

Income Tax - 12C FORM

1200 சதுர அடியில் மகாகவி சுப்ரமண்ய பாரதியார்* ஓவியம் இந்திய வரைபடத்தில் பிரமாண்டமாக ஆசிரியர்கள் கைவண்ணத்தில்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கல்லப்பாடி SMC பயிற்சியில் *1200 சதுர அடியில் மகாகவி சுப்ரமண்ய பாரதியார்* ஓவியம் இந்திய வரைபடத்தில் பிரமாண்டமாக ஆசிரியர்கள் கைவண்ணத்தில்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், கல்லப்பாடி CRC மையத்தில் SMC பயிற்சியில், கல்லப்பாடி ஊ ஒ ஆ பள்ளி மைதானத்தில், பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களும் இணைந்து இந்த பிரமாண்ட ஓவியம் வரைந்தார்கள்.

இன்று *(01-02-2017)* SMC மூன்றாவது பயிற்சி நாளில் சிறப்புரை ஆற்ற குடியாத்தம் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் *திருமதி. ஞானகிரிஜா MA, MEd* அவர்கள் கலந்துகொண்டார்கள்.

இறுதியாக மூன்று நாள் பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைவருக்கும்
கல்லப்பாடி பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. சுஜாதா. மற்றும் SSA BRT திரு.A.ஜெயக்குமார் மற்றும் அனைவரின் சார்பாக நன்றி! நன்றி!

நட்புடன்
Resource Person
ஜானகிராமன் தேவராசன்.

SPF -G.O. No. 504 Fin 2.11.2000


TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION - ANNUAL RECRUITMENT PLANNER - 2017


தமிழகத்தில் 'நீட்' தேர்வு கிடையாது-சட்டசபையில் மசோதா நிறைவேறியது

சென்னை,:''நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும், சட்ட முன்வடிவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும்.           பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:தி.மு.க., - பொன்முடி: மருத்துவக் கல்லுாரிகளில், தற்போதுள்ள நடைமுறைப்படி, மாணவர் சேர்க்கை தொடர்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ள, சட்ட முன்வடிவு, அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கது; இச்சட்டம் நிரந்தரமாக்கப்பட வேண்டும்.
புதிய கல்விக் கொள்கை மூலம், மத்திய அரசு, மாநில உரிமையை பறிக்க பார்க்கிறது. இதை, தடுத்து நிறுத்த வேண்டும். இந்த சட்டத்திற்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும். பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப்பட்டியலுக்கு மாற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்., - விஜயதாரணி: இந்த சட்ட முன்வடிவை, காங்கிரஸ் வரவேற்கிறது. அதேநேரம், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், நமது கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும்

அமைச்சர் விஜயபாஸ்கர்: சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 'நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம்; தேவைப்பட்டால், தனி சட்டம் கொண்டுவருவோம்' என, மறைந்த முதல்வர் அறிவித்தார். அதன்படி, தற்போது சட்ட முன்வடிவு கொண்டு வந்துள்ளோம்.
முதல்வர் பன்னீர்செல்வம்: நீட் தேர்வை ஆரம்பத்திலேயே, ஜெயலலிதா எதிர்த்தார். அவர் வழியில் செயல்படும் தமிழக அரசு,நீட் தேர்வை அனுமதிக்காது. தற்போது கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும்.

மேலும், பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற, சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
பின், மருத்துவக் கல்லுாரிகளில், பொது நுழைவுத் தேர்வு இல்லாமல், தற்போதுள்ள, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்களை சேர்ப்பதற்கான, புதிய சட்டமுன்வடிவு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

28 தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

'தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 3,781 பணியிடங்களை நிரப்ப, இந்தாண்டு, 28 தேர்வுகள் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான, தோராய தேர்வு அட்டவணை பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டில், 28 தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதில், எட்டு தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை; 20 தேர்வுகள் புதியவை. இதன் மூலம், 28 வகை பணிகளில், 3,781 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு இனி பொதுத்தேர்வு கட்டாயம்

'மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு உண்டு' என, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டு வரை, இரண்டு வகை இறுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதாவது, 10ம் வகுப்புக்கு பின், வேறு பாடத்திட்டத்துக்கு மாறுவோருக்கு, சி.சி.இ., என்ற தொடர் மதிப்பீட்டு முறை தேர்வும், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்திலேயே, பிளஸ் 1 படிப்போருக்கு, கட்டாய பொதுத் தேர்வும் அமலில் உள்ளது. 

இந்நிலையில், வெறும் சி.சி.இ., அடிப்படையிலான, பள்ளி அளவிலான தேர்வு முறையால், மாணவர்களின் கற்றல் தரம் குறைந்துள்ளதாக, நிபுணர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, பள்ளி அளவிலான சி.சி.இ., இறுதி தேர்வை ரத்து செய்து, பொதுத் தேர்வை கட்டாயமாக்க, மத்திய அரசின் கல்வி ஆலோசனை குழு பரிந்துரை செய்தது.இது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. 

அதற்கு, கடந்த மாதம், சட்ட அமைச்சகம் அனுமதி அளித்தது. தொடர்ந்து, கட்டாய பொதுத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை, நேற்று இரவு, சி.பி.எஸ்.இ., வெளியிட்டது. புதிய அறிவிப்பின்படி, 2017 - 18ம் கல்வி ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் படிக்கும், அனைத்து, 10ம் வகுப்பு மாணவர்களும், பொதுத் தேர்வு எழுத வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஏற்கனவே இருக்கும் இரட்டை தேர்வு முறையே நீடிக்கும் என, அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து: சட்ட மசோதா நிறைவேறியது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புக்கு அங்கீகாரம் வழங்கியதை நீக்கம் செய்து பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான சட்டத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதன்கிழமை கொண்டு வந்தார். அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:-2012-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகச் சட்டமானது திருத்தம் செய்து பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தொலைதூரக் கல்வி முறை மூலமாக பயிலும் படிப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்துவதற்கும், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அல்லது இந்தியாவுக்கு வெளியேயும் கல்வி பயிலும் மையங்களை ஏற்படுத்துவதற்கான அதிகாரத்தை பல்கலைக்கழகத்துக்கு அளிக்க அந்த சட்டத் திருத்தம் வகை செய்திருந்தது.

இந்த நிலையில், தொலைதூரக் கல்வி முறை மூலமாக பயிலும் படிப்புகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வது என 2012-இல் முடிவு செய்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தை நீக்கம் செய்திருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது.

TNPSC-ன் 2017 கால அட்டவணை - விரிவான செய்திகள்.

டி.என்.பி.எஸ்.சி. தனது வருடாந்திர (2017) கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த அட்டவணையின் கீழ் டி.என்.பி.எஸ்.சி. நடப்பாண்டில் நடத்தும் தேர்வுகள் தேதி, காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தப்பட்டியலில்  3781 காலிப்பணியிடங்களை உள்ளடக்கிய 28 பணிகள் / பதவிகளுக்கான அறிவிக்கை மற்றும் தேர்வு நாள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பட்டியலிடப்பட்ட பணிகள் / பதவிகளில் ஏதேனும் ஒரு சில பதவிக்க்களுக்குத் தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக அட்டவணைக்குரிய காலத்திற்குள் நடத்தப்படமுடியாமல் போகும் தருணங்களில், அடுத்து வரும் ஆண்டுக்கு நீண்டு செல்லக் கூடும்.

தேவை ஏற்படும் தருணங்களில் பட்டியலில் குறிப்பிடப்படாத பணிகள் / பதவிகளுக்கும் அறிவிக்கை வெளியிட வாய்ப்புள்ளது. இந்தக் காலிப்பணியிட எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்விற்குப் பிறகும் கூட மாறுதலுக்குட்பட்டது.

இக்கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டு நடத்தப்படவுள்ள அனைத்துத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிட விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படும். தேவை ஏற்படின், இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் சார்ந்த எந்த ஒரு மாற்று அறிவிப்பையும் வெளியிடுவதற்கான உரிமையைத் தேர்வாணையம் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை காணவும்" எனக் கூறப்பட்டுள்ளது.

முதல்வரின் நிவாரண நிதிக்கும் வரி விலக்கு: பட்ஜெட்டில் அறிவிப்பு

பிரதமரின் நிவாரண நிதிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வரி விலக்கானது முதல்வர் மற்றும் துணைநில ஆளுநரின் நிவாரண நிதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது: பிரதமரின் நிவாரண நிதிக்கு தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மாநில முதல்வர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் நிவாரண நிதிகளுக்கு அத்தகைய வரி விலக்கு அளிக்கப்படுவதில்லை.

பிரதமரின் நிவாரண நிதியின் பயன்பாடும், முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநரின் நிவாரண நிதியின் பயன்பாடும் ஒன்றேயாகும். மக்களுக்காக வழங்கப்படும் இத்தகைய நிதிகளில் வரி பாரபட்சம் காட்டப்படுவது சரியல்ல.

எனவே, பிரதமரின் நிவாரண நிதியைப் போலவே முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநரின் நிவாரண நிதிகளுக்கும் வரி விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, வருமான வரிச் சட்டத்தில் விரைவில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றார் அருண் ஜேட்லி.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!