Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 5 February 2017

Sbi-ல் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் IT க்கு ஆன்லைனில் பெற முடியும் !!

Sbi-ல் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் IT-யில் வட்டி மற்றும் அசல் கழிப்பதற்கான சான்றிதழ் வங்கிக்கு செல்லாமல் பெறுவது எப்படி?

IT- யில் வீட்டுக்கடனுக்கான கழிவைக் காட்ட Sbi internet banking access  உள்ளவர்கள் எளிதில் 
https://m.onlinesbi.com/m.onlinesbi.com.htmlஎன்ற இணையத்தள முகவரியில் log in செய்து அதில் உள்ள Enquiries என்ற லிங்கை கிளிக் செய்து பின் இடதுபுறம்
Home Loan int.Cert என்ற லிங்கை கிளிக் செய்து பின் தங்கள் கடனுக்கான அக்கவுண்ட் நம்பரை செலக்ட் செய்து சான்றிதழை டவுன்லோட் செய்துகொள்ளலலாம்.

மே 1-ம் தேதி முதல் புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயம்: முதல்வர் தகவல்

புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வரும் மே 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என முதல்வர்

வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்றது முதல் புதுவையில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, செயின்பறிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறை, போன்றவற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.
புதுவையில் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள 2 கொலை வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2014-ல் நெல்லித்தோப்பில் அடகுகடை வியாபாரி கொலை, 2015-ல் முத்தியால்பேட்டையில் கலைவாணி என்பவர் கொலை போன்றவற்றில் தொடர்புடைய கொலையாளிகளை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுச்சேரியில் காவல்துறை நவீனமயம் செய்வதில் அரசு முனைப்பாக உள்ளது. இதற்கான நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் விடுவிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், சைபர் கிரைம் பிரிவை நவீனப்படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காவல்துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு கட்டாயம் செய்து தரும் . அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார் நாாயணசாமி.

குறிப்பாக கள்ள லாட்டரி விற்பனையை முழுமையாக ஒழித்தோம். போதைப்பொருள் விற்பனையையும் தடுக்கப்பட்டது. வியாபாரிகளை மிரட்டி ரௌடி மாமூல் வசூலிப்பது, தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறிப்பது, வணிகர்கள் குழந்தைகளை கடத்தி பணம் பறித்தல் போன்ற சம்பவங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் வணிகர்கள், புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு மொத்தம் பதிவான 4049 வழக்குகளில் 3215 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. இது மொத்தம் 79 சதவீதமாகும்.

சட்டப்பேரவை பொதுத் தேர்தல், நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் போன்றவை அமைதியாக நடைபெற காவல்துறை முனைப்புடன் செயல்பட்டது.

நீண்ட நாள் வழக்குகள்

ஏற்கெனவே நிலுவையில் இருந்த காவலர் அருணகிரித கொலை வழக்கு, செஞ்சியில் புதுவை பெண் கடத்தல் கொலை வழக்கு போன்றவற்றை காவல்துறையினர் திறமையாகக் கையாண்டு கண்டுபிடித்தனர்.

காரைக்காலில் முன்னாள் அமைச்சர் விஎம்சி சிவக்குமார் கொலை வழக்கில் 9 பேர் சரண் அடைந்துள்ளனர். தலைமறைவாக உள்ள 6 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸாரின் துப்பாக்கியையும் தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு மொத்தம் 710 சாலை விபத்துகள் நடைபெற்றன. இதில் 60 பேர் தலைக்காயம் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளனர். இதனால் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலையில் ஹெல்மெட் அணிவதை கட்டமாயாக்க போக்குவரத்து துறை, காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து வரும் மே 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதை காவல்துறை தீவிரமாக நடைமுறைப்படுத்தும்.

காவல்துறை நவீனமயம்

டிஜிபி சுனில்குமார் கௌதம், ஐஜி ஏகே.கவாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2017 - பள்ளி மாணவர் பெயர் பட்டியல் தயாரிப்புப்பணி - திருத்தங்கள் இறுதியாக மேற்கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தனி அறிவுரை வழங்குதல் குறித்து அரசுத் தேர்வுகள் திட்ட இணை இயக்குநர் அவர்களின் கடிதம்.NATIONAL ICT AWARDS FOR SCHOOL TEACHERS 2017

NEET 2017 - விண்ணப்பதாரர்களுக்கு ஆதார் கார்டு அவசியம்...அறிவிப்பு நகல் தமிழில்....

திருச்சியில் வரும் 6ம் தேதி சமயபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி அறிவிப்பு...

பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

'கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி, பள்ளிகளில் நவீன உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற விஷயங்களில், தனியார் பள்ளிகள், பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை, வடபழனியில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில், பள்ளிக் கல்வியின் எதிர்காலம் குறித்து கல்வியாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கல்வி நிலையங்களின் தலைவர் அன்பழகன், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டுக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்துரை அனுப்பியிருந்தார். அதில், 'கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி, பள்ளிகளில் நவீன உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற விஷயங்களில், தனியார் பள்ளிகள், பள்ளி கல்வித் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்' என, கூறியுள்ளார்.

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கல்வி குழும தலைவர் அன்பழகன் பேசுகையில், ''கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், வாழ்வில் தோல்வி அடைகின்றனர். நாம், அவர்களுக்கு மீன் பிடித்து தரக்கூடாது; மீனை எப்படி பிடிக்க வேண்டும் என்பதை கற்று தர வேண்டும். வீழ்வது, எழுவதற்கு தானே தவிர, விழுந்து கிடப்பதற்கு இல்லை என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்,'' என்றார்.
கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் பேசுகையில், ''அகில
இந்திய அளவில் நடைபெறும் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், 6 முதல், ப்ளஸ் 2 வரை உள்ள பாடத்திட்டத்தை, மாறிவரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, செறிவுள்ளதாக மேம்படுத்த வேண்டும்; அதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், ''கல்வியில் பின்தங்கியிருந்த தமிழகம், தற்போது முன்னேற்ற பாதையில் செல்கிறது. விளையாட்டு, அறிவியல் தொழில்நுட்பம், கலாசாரத்துக்கு, அரசு பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பாடத்திட்டம் மாற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும்,'' என்றார்.

4,000 பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்படுவதாக புகார் - பல ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல்

தமிழகத்தில், 4,000த்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், அங்கீகாரமின்றி செயல்படுவதால், அவற்றில் படிக்கும் பல ஆயிரம் மாணவர்கள், அரசு பொதுத்தேர்வு எழுத முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
இதையறிந்த, தணிக்கை துறை, கல்வி அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 5,600 உயர்நிலை மற்றும் 6,300 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன; இவற்றில், 1,800 பள்ளிகள் அரசு உதவி பெறுபவை.
இதுதவிர, 4,600 தனியார் பள்ளிகள், மெட்ரிக் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றுக்கு, ஆண்டுதோறும் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால், இரு ஆண்டுகளாக, அங்கீகாரம் வழங்கும் பணி முடங்கியுள்ளது.
இதனால், 4,000த்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், அங்கீகாரமின்றி இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத முடியுமா என்ற
அச்சத்தில் உள்ளனர்.

காரணம் என்ன?

பள்ளிகளுக்கு இதுவரை விதிகளை மீறி, அங்கீகாரம் வழங்கிய கல்வி அதிகாரிகள், கோர்ட்டில் பல வழக்குகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே, 'அங்கீகாரம் கொடுத்தால் தானே பிரச்னை' என, அங்கீகாரமின்றி பள்ளிகளை இயங்க விட்டுள்ளனர்.
அங்கீகாரம் கோரிய விண்ணப்பங்கள், கல்வித் துறையின் பல அலுவலகங்களிலும் முடக்கப்பட்டு உள்ளன. அரசு உதவிபெறும், 500 தனியார் பள்ளிகளுக்கும், அங்கீகாரம் இல்லாததால், ஆசிரியர்களுக்கு, அரசு மானியத்தில் இருந்து, சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை
ஜன., 10ல், பள்ளிக்கல்வி செயலர் சபிதா தலைமையில் நடந்த, பள்ளிக்கல்வி தணிக்கை அதிகாரிகள் கூட்டத்தில், அங்கீகாரமின்றி பள்ளிகள் இயங்குவது குறித்து, தணிக்கை துறையினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நிலைமையை சமாளிக்க, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மட்டும், உடனே அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.
'கல்வி ஆண்டு முடியும் நிலையில், இன்னும் பள்ளிகளுக்கு அங்கீகாரமே வழங்காதது, தமிழக அரசின் மெத்தனத்தையே காட்டுகிறது' என, கல்வியாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

'போராட்டத்தில் குதிப்போம்'

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது:தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தராமல், விண்ணப்பங்களை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். இருப்பினும், மாணவர்கள் நலன் கருதி, பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளி மாணவர்களுக்கு, சலுகை அளித்து, பொதுத்தேர்வில் அனுமதிக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அங்கீகாரம் கிடைக்காமல், பள்ளி வாகனங்களுக்கு, எப்.சி., உரிமத்தை புதுப்பிக்க முடியவில்லை. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, கல்வி கட்டணமின்றி மாணவர்களை சேர்த்தாலும், அதற்கு, மானியம் கிடைப்பதில்லை. இதற்கு எல்லாம் தீர்வு வராவிட்டால், பள்ளி தாளாளர்களுடன் ஆலோசித்து, போராட்டத்தில் குதிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

அரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு, பிறமொழி கலப்பின்றி, எளிய முறையில் கற்பித்தல் தொடர்பான, பயிற்சிகள் விரைவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், 645 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டு, வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஒரு வகுப்புக்கு, குறைந்தபட்சம் 15 மாணவர்களாவது இருந்தால் மட்டுமே, அடுத்தடுத்த கல்வியாண்டுகளில், புதிய மாணவர் சேர்க்கை நடத்த முடியும். இதன் காரணமாக, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களும், ஆங்கில வழி வகுப்புகளில் சேர்க்கப்படுவதாக, கூறப்படுகிறது.

மேலும், ஆங்கில வழி வகுப்புகள் கையாள, பிரத்யேகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. எளிய மொழி நடையில், பாடம் நடத்துவதற்கான, கற்பித்தல் பயிற்சிகளும், ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ் மொழியிலே, பாடத்திட்ட கருத்துகள் விளக்கப்படுவதாக கூறப்படுகிறது. 'ஆல்பாஸ்' நடைமுறை இருப்பதால், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, தேர்ச்சி பெறுவதில், சிக்கல் இல்லை.

இதன் காரணமாக, மேல்நிலை வகுப்புகளில், ஆங்கில மொழி புலமையின்றி, அரசுப்பள்ளி மாணவர்கள், பின் தங்கும் நிலை தொடர்கிறது. இச்சிக்கலுக்கு தீர்வு காண, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளி சார்பில், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளி முதல்வர் திருஞானசம்பந்தம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில், ஆங்கில வழி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பாடத்திட்ட கருத்துகளை, எளிமையாக சொல்லிக் கொடுப்பது தொடர்பாக, கற்பித்தல் பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளி பேராசிரியர்களை கொண்டு, கற்பித்தல் செயலாக்க திட்டம் உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. இதில், உச்சரிப்பு, மொழி நடை, மாணவர்களுக்கு எளிய முறையில் புரிய வைத்தல், கற்பித்தல் கருவிகளை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கப்படும். இது சார்ந்து, தொடக்க கல்வித்துறை ஒப்புதலுடன், இம்மாத இறுதிக்குள், பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பார்த்து எழுதும் தேர்வு சி.பி.எஸ்.இ., தடை

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வை ரத்து செய்ய, நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, இரு ஆண்டுகளுக்கு முன், புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை கொண்டு வரப்பட்டது. சில குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும், சில மதிப்பெண்களுக்கு, இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வால், மாணவர்களின் ஆய்வு மற்றும் தேடு திறன் அதிகமாகும் என, கருதப்பட்டது.
தேர்வுக்கு, நான்கு மாதங்களுக்கு முன், தேர்வுக்கான விடைகள் கொண்ட தொகுப்பு புத்தகம், மாணவர்களுக்கு வழங்கப்படும். மாணவர்கள், அவற்றை படித்து தயாராக வேண்டும். பின், அந்த புத்தகத்திலுள்ள அம்சங்கள், வினாத்தாளில் இடம் பெறும். மாணவர்கள், புத்தகத்தை பார்த்து, விடை எழுத வேண்டும்.
இந்த தேர்வு அறிமுகமான பின், பள்ளிகள் மற்றும் மாணவர்களிடம் ஆய்வு நடத்தியதில், புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வு, மாணவர்களின் கல்வியில், எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை என, தெரிய வந்தது.

பல பள்ளிகளில் தேர்வு நடக்கும் முன்பே, மாணவர்களுக்கு ரகசியமாக கேள்வியை கொடுத்து விடுவதால், புத்தகத்தில், எந்த பக்கத்தில் பதில் உள்ளது என்பதை, மாணவர்கள் குறித்து வந்து, தேர்வு எழுதியுள்ளனர். எனவே, வரும் கல்வி ஆண்டு முதல், புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வை நிறுத்த, சி.பி.எஸ்.இ., நிர்வாக கமிட்டி முடிவு செய்துள்ளது.

மின் வாரிய நேர்காணல்: கேமராவில் பதிவு

முறைகேட்டை தடுக்க, உதவி பொறியாளர் நேர்காணலில், கண்காணிப்பு கேமரா பொருத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல், மெக்கானிகல், சிவில் ஆகிய பிரிவுகளில், 375 உதவி பொறியாளர்களை நியமிக்க
உள்ளது.
இதற்கான, எழுத்து தேர்வு நடந்து, ஓராண்டு முடிந்து விட்டது. விரைவில் நேர்காணல் நடத்தி, அதிக மதிப்பெண் எடுத்தோர், வேலைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில், நேர்காணல் விபரங்களை, கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மின் வாரிய பணி பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:உதவி பொறியாளர் நியமனத்தை, மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும். ஆனால், தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில், சமீபத்தில், வாரியத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. நேர்காணலை நியாயமாக நடத்தினாலும், வழக்கு தொடர வாய்ப்புள்ளது. அதனால், பணிகள் மேலும் தாமதாகும்.
எனவே, மின்வாரிய பொறியாளர்கள், இன்ஜினியரிங்
கல்லுாரி பேராசிரியர்கள் மூலம், நேர்காணல் நேர்மையாக நடத்தப்படும். நேர்காணலின் போது நடக்கும் அனைத்தும், கேமராவில் பதிவு செய்யப்படும். யாரேனும், வழக்கு தொடர்ந்தால், அந்த விபரம், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, மின் வாரியம், உதவி பொறியாளர் தேர்வு தொடர்பான, 'கட் - ஆப்' மதிப்பெண்ணை, சமீபத்தில் வெளியிட்டது. - நமது நிருபர் -
நேர்காணல் தேதியை இன்னும்
அறிவிக்கவில்லை. அதை,
விரைவில் நடத்த வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்து
உள்ளனர்.

டிப்ளமோ தேர்வு மறுகூட்டல் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

தொடக்கக் கல்விக்கான, டிப்ளமோ தேர்வு எழுதியோர், மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொடக்கக் கல்விக்கான, டிப்ளமோ தேர்வு எழுதிய மாணவர்கள், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற, நாளை முதல், 8 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுத் துறையின், http:/www.tndge.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பின், அவற்றை பூர்த்தி செய்து, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில், கட்டணம் செலுத்தி, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!