Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 15 February 2017

SBI : 2736 OFFICER VACCANCIES FOR DEGREE HOLDERS

பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி பணியில் 2,736 காலியிடங் களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும். தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும்கூட விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பைப் பொறுத்தவரையில் 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எனினும், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரான ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

விதிகளும் முறைகளும்

எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு தேர்வுகளை உள்ளடக்கியது இரு தேர்வுகளுமே ஆன்லைன் வழியில் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். மெயின் தேர்வில் அப்ஜக்டிவ் வடிவிலான கேள்விகளும், கூடுதலாக விரிவாக விடையளிக்கும் வகையிலான வினாக்களும் இருக்கும். இதில் தர்க்கம், கணினி அறிவியல், டேட்டா அனாலிசிஸ், பொருளாதாரம், வங்கி நிர்வாகம், ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளிலிருந்து 200 கேள்விகளும், ஆங்கிலத்தில் விரிவாக பதிலளிக்கும் வினாக்களும் இடம்பெறும்.

தேர்வு நாட்கள்

முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 29, 30, மே 6, 7 ஆகிய தேதிகளில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும். இதன் முடிவுகள் மே 17-ல் வெளியிடப்படும். அடுத்த கட்டத் தேர்வான மெயின் தேர்வு ஜூன் 4-ம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வின் முடிவுகள் ஜூன் 19-ல் வெளியாகும். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு இரண்டுக்குமான ஹால் டிக்கெட்டை விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்-ஐ ஏப்ரல் 15 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். குழு விவாதம், நேர்முகத் தேர்வு ஜூலை 10 முதல் தொடர்ந்து நடைபெறும்.

இலவசப் பயிற்சி

அதிகாரிப் பணிக்கு விண்ணப்பிக்கவிரும்பும் பட்டதாரிகள் மார்ச் 6-ம் தேதிக்குள் பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தின் (www.sbi.co.in/careers) மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், சிறுபான்மை யினருக்கு தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படும். இது குறித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே குறிப்பிட வேண்டும். பாரத ஸ்டேட் வங்கியில் நேரடி அதிகாரியாகப் பணியில் சேருவோருக்கு ஆரம்ப நிலையில் மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. அடுத்தடுத்துப் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அதிகம். இளம் வயதிலேயே பணியில் சேருவோர் பின்னாளில் உயர் பதவிக்குச் செல்லலாம்.

தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 ஆகியவை CPS ல் உள்ளவர்களுக்குப் பொருந்தாது - RTI

புதிய ஓய்வூதிய திட்டத்தில் மாத ஓய்வூதியம் இல்லாததால் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பின்னர் ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி (ரூ.50,000) ,

ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் (ரூ.2,00,000)
பணிக்கொடை,
தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978
ஆகியவை CPS ல் உள்ளவர்களுக்குப் பொருந்தாது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில்.

இஸ்ரோ உலக சாதனை - 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி37 ராக்கெட்..

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 714 கிலோ எடை கொண்ட கார்ட்டோ சாட்-2 செயற்கைகோள் மற்றும் 664 கிலோ எடை கொண்ட 103 செயற்கை கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

320 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதில் வெளிநாடுகளைசேர்ந்த 101 நானோ வகை செயற்கைகோள்களும், நமது நாட்டை சேர்ந்த 2 நானோ வகை செயற்கைகோள்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. அதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும். 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் 37 செயற்கைகோள்களை ரஷ்யா ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியதே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

10ம் வகுப்பு தேர்வுக்கு 'தத்கல்' தேதி அறிவிப்பு

நாளை முதல், இரண்டு நாட்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி செய்திக் குறிப்பு:
நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத, தனித்தேர்வர்கள், நாளை முதல் இரு நாட்கள், 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தேர்வு விபரங்கள் இடம் பெற்றுஉள்ளன.மாவட்ட கல்வி அலுவலகங்கள், மண்டல துணை இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றிலும், விபரங்களை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Vodafone 4G - 2GB அளவு இலவச டேட்டா

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் அதிவேக திறன் கொண்ட 4G சேவைகளை பல்வேறு நகரங்களில் வழங்கி வருகிறது.   
    கடந்த டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட‘வோடஃபோன் சூப்பர்நெட் 4G’ சேவை கோவை, திருப்பூரை தொடர்ந்து சென்னையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.இதன்மூலம் சென்னையில் உள்ள வோடஃபோன் வாடிக்கையாளர்கள் 2100 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் திறன் கொண்டு வோடஃபோன் சூப்பர்நெட் 4G சேவையை பயன்படுத்த முடியும். இதன்மூலம் வோடஃபோன் வாடிக்கையாளர்கள் அதிவேகமான இணைய சேவையை பெற முடியும்.வாடிக்கையாளர்கள் புதிய 4G சிம் கார்டுகளுக்கு அப்கிரேடு செய்து அதிவேக 4G இண்டர்நெட் பெறுவதோடு அனைத்து அப்கிரேடுகளுக்கும் 2GB அளவு இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆப்ஸ் மற்றும் வீடியோக்களை இலவசமாக டவுன்லோடு செய்யலாம். இதனால் சென்னையில் உள்ள வோடஃபோன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, கோவாவிலும் 4G சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. கோவா மாநில நெட்வொர்க் சந்தையில் 50 சதவிகித பங்குகளை வைத்துள்ள வோடஃபோன், மொத்தம் 8.7 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"Professional Development programme" என்ற தலைப்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறும் தேதிகள்

EMIS website is now open.

தற்போதைக்கு கீழே உள்ள url ஐ பயன்படுத்தவும்
http://emis.tnschools.gov.in/accounts/login/?next=/

இதற்கு முன் பயன்படுத்திய url ல் https என இருக்கும்.. தற்போதைக்கு http மட்டும் பயன்படுத்தவும்...

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!