Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 18 February 2017

அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் 34 நகரங்களுக்கு பயணம்

புதுடில்லி: நாடு முழுவதும், 34 முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக செல்லக் கூடிய, அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணத்தை, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கி வைத்தார்.

அறிவியல் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 16 பெட்டிகள் அடங்கிய, அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில், 2007 முதல், ஒவ்வொரு ஆண்டும் இயக்கப்படுகிறது.இந்த ஆண்டு, வடகிழக்கு மாநிலமான, திரிபுராவின் அகர்தலா உட்பட, 34 முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக, இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ஆண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், இந்த ரயில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. டில்லியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த ரயிலை, கொடியசைத்து துவக்கி வைத்த, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இதில், ஒருவரை ஒருவர் குறை கூறாமல், சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளே, தற்போதைய தேவை. இதை அனைவரும் இணைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அனில் மாதவ் தவே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர், நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பி.எப்., சந்தாதாரர்களுக்கு ஆதார் எண் பதிவு

பி.எப்., சந்தாதாரர்களுக்கு ஆதார் எண் பதிவு

மதுரை: மதுரை மண்டல கமிஷனர் ரபீந்திர சமல் கூறியதாவது: வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) நிறுவன ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்று 

அவசியம். இவர்கள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது பி.எப்., சந்தாதாரர்கள் மற்றும் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சந்தா செலுத்துவோரும் ஆதார் எண் பதிவு செய்வது அவசியம். இதற்காக சிறப்பு முகாம் மதுரை, திண்டுக்கல், சிவகாசி பி.எப்., அலுவலகங்களில் நடக்கிறது, என கூறியுள்ளார்.

கல்வி உதவித் தொகை : ஆதார் எண் கட்டாயம் !!

கல்வி உதவித் தொகை : ஆதார் எண் கட்டாயம் !!

கடந்த 2 வாரங்களுக்கு முன், சிம் கார்டு முறைகேடுகளைத் தடுக்க ஆதாருடன் செல்பேசி எண்ணை இணைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறவும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள ஏழை மாணவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அதன்படி, அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கடந்த 2015-16ஆம் ஆண்டு, நாடு முழுவதும் 2.05 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர்.

இந்நிலையில், இந்த உதவித் தொகையைப் பெற ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது அவசியம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த 15ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின்மூலம், உதவித் தொகையைப் பெற வரும் ஜுன் 30ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் ஆதார் எண்ணைப் பதிவுசெய்ய வேண்டும். இதுவரை ஆதார் எண் பெறாத மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளின் முதல்வர்கள் உதவிசெய்ய வேண்டும்.

சமூக நீதி மற்றும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 12 கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு ஆதார் எண் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஆதார் எண் இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வை எழுத முடியும் என மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Annamalai University DDE - EXAMINATION FEE - MAY 2017 Last Date for Online

Annamalai University DDE - EXAMINATION FEE - MAY 2017 Last Date for Online Registration without fine : 06.04.2017.

DDE - EXAMINATION FEE - MAY 2017

Last Date for Online Registration without fine : 06.04.2017.

www.annamalaiuniversity.ac.in

அசரவைக்கும் தொழில்நுட்பம்: 7D!

புதுமையான தொழில்நுட்ப வளர்ச்சிகள் தினமும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பல்வேறு திரைப்படங்களைக் கண்டு நாம் வியந்ததற்கு காரணம் அதன் கிராஃபிக் தொழில்நுட்பம் தான். அந்த தொழில்நுட்பம் கொண்டு வேறு உலகத்துக்கு நம்மைப் பல இயக்குநர்களும் அழைத்து சென்றுள்ளனர் என்பதை மறுக்க

முடியாது. உதாரணமாக ஜுராசிக் பார்க், அவதார், லார்ட் ஆப் தி ரிங்க்ஸ், என பல்வேறு திரைப்படங்களை சொல்லிக் கொண்டே போகலாம் . இவை அனைத்தும் நாம் நேரில் காண முடியாத ஒரு உலகினை நம் கண்முன்னே கொண்டு வந்து வியப்பில் ஆழ்த்தியவை என்பதே உண்மை.

எனவே நாம் காண விரும்பும் சில அதிசயமான காட்சிகளை தொழில்நுட்பத்தை கொண்டு நேரில் காண உதவியாக ஜப்பான் புதிய 7D தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது. நேற்று வெளியான ஒரு வீடியோ ஒன்றில் ஜப்பானில் புதிதாக அமைத்துள்ள 7D தொழில்நுட்ப பூங்கா பற்றிய தகவலை வெளியிட்டனர். காண்போரை வியப்பில் ஆழ்த்தும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

SSA - CRC TRAINING PROCEEDING COPY

CRC TRAINING PROCEEDING COPY -SSA - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை குறுவள மைய பயிற்சி- மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி* குறுவள மையஅளவில்பயிற்சி நாள் : 04.03.2017 Topic: primary - physical education upper primary - adolescence 

TNTET -2017: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 7 லட்சம் விண்ணப்பங்களை திருப்பி அனுப்ப உத்தரவு.

ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எழுத்து பிழைகள் இருப்பதாக கூறி அவற்றை திருப்பி அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில்  நடைபெறவுள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2க்கான தனித்தனியான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய 7 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.500. ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.250. வரும் 28ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறவில்லை. வரும் மார்ச் முதல் வாரத்தில் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஆசிரியர் தகுதித்தேர்வு  விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்து அங்கு வைத்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பவிநியோகம் மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் அச்சடிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பிழைகள் இருப்பதுதான் என தெரியவந்துள்ளது. இதனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும், புதிய விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அவற்றை விநியோகம் செய்தால் போதும்என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட 7 லட்சம் விண்ணப்பங்களும் வீணாகியுள்ளது.

மாணவர்கள் நீண்ட விடுப்பு 100 சதவீத கனவு தகர்ப்பு!

நீண்ட நாள் விடுப்பில் உள்ள மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளதால், தேர்வில் பங்கேற்காத பட்சத்திலும், தோல்வியை தழுவியவர்களாக குறிப்பிடப்படுகிறது. இதனால், நுாறு சதவீத தேர்ச்சி பெற முடியாத நிலை இருப்பதாக, தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழகம்முழுக்க, மார்ச் 2ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கும், மார்ச் 8ம் தேதி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு துவங்குகிறது. பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட, மாணவர்களின் தகவல்கள் கொண்டு, பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவல், ஆண்டு துவக்கத்திலே பதிவு செய்யப்பட்டு சரி பார்க்கப்பட்டவை. எனவே, அனைத்துமாணவர்களின் தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.இதில், தொடர்ந்து நான்கு மாதங்களாக, பள்ளிக்கு வராமல், தேர்வு எழுதாத மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், பல அரசுப்பள்ளிகளில், தலா நான்கு மாணவர்கள் வீதம், நீண்டநாள் விடுப்பில் உள்ளனர்.இவர்களில், பெரும்பாலானோர் செய்முறை பொதுத்தேர்வு எழுதவரவில்லை என கூறப்படுகிறது. எழுத்துத்தேர்வுக்கும் வராத பட்சத்தில், 'ஆப்சென்ட்' என குறிப்பிட்டு, தேர்ச்சியடையாதோர் பட்டியலில் சேர்க்கப்படும். இதனால்,நுாறு சதவீத தேர்ச்சி பெறும் முயற்சிக்கு தடை ஏற்பட்டுள்ளதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'நீண்டநாள் விடுப்பில் இருக்கும் மாணவர்கள், எந்த தேர்வும் எழுதாதபட்சத்தில், அவர்களை தோல்வியடைந்தவர்களாக குறிப்பிடக்கூடாது.

ஒரு தேர்வு கூட எழுதாதபட்சத்தில், விடுப்பில் இருக்கும் மாணவர்களால், 100 சதவீத தேர்ச்சிஇலக்கு, தடைபடுகிறது. 'எனவே, தேர்வு எழுதியோரை கணக்கிட்டு,நுாறு சதவீத தேர்ச்சி பள்ளிகளின் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!