Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 19 February 2017

பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.

தேர்வுகள் துவங்கும் நிலையில், பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த, ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிகளில், மாணவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து, விரிவான ஆய்வு நடத்த வேண்டும்.
நீர்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவு நீர் தொட்டி மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்து, அவை மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில், மாணவர்கள் குளிப்பதை தவிர்க்க, அறிவுரை வழங்க வேண்டும்.
பள்ளியை விட்டு செல்லும் போது, பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அருகாமையில் செல்வதோ கூடாது என, எச்சரிக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில், மரங்கள் விழும் நிலையில் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பாக உள்ளதாக என்பதை யும் ஆய்வு செய்ய வேண்டும்.
இதுபோன்று, பல, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கே.வி., பள்ளிகளில் 'அட்மிஷன்' துவக்கம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பதிவு, 8ல் துவங்கியுள்ளது. மார்ச், 10 வரை விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான பதிவு துவங்கிஉள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படும், கே.வி., பள்ளிகளில், 'அட்மிஷன்' கிடைப்பது அரிதானது.
இந்நிலையில், 8 முதல், கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான பதிவு துவங்கியுள்ளது. http://admission.kvs.gov.in/OLAKVS/ என்ற இணைய தளத்தில், தங்களின் பெயர், விபரங்களை பதிவு செய்ய வேண்டும். ஒன்றாம் வகுப்புக்கு மட்டும், தற்போது பதிவு செய்ய முடியும். மார்ச், 10 மாலை, 4:00 மணி வரை, பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்
பட்டுள்ளது. மார்ச், 20ல், தேர்வு செய்யப்பட்டமாணவர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும்.
இரண்டாம் வகுப்பு முதல் மற்ற வகுப்புகளுக்கு, ஏப்., 5 காலை, 8:00 மணி முதல், மாணவர் சேர்க்கை பதிவு துவங்குகிறது. ஏப்., 18 மாலை, 4:00
மணி வரை பதிவு செய்யலாம். ஏப்., 25க்கு பின், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

MEDICAL LEAVE EXTENSION FORM..

Tamil UniversityDate extended (till-28.2.2017) to Receiving application for the convocation

ஓவியம் கற்றுத்தர குழந்தைகளை தேடிச் செல்லும் கலைஞர்: ஓராண்டில் 18 மாவட்டங்களில் 3,248 பேருக்கு பயிற்சி


ஓவியம் வரைய கற்றுத் தருவதற் காக குழந்தைகளைத் தேடிச் செல்லும் கலைஞர், ஓராண்டில் மட்டும் 18 மாவட்டங்களைச் சேர்ந்த

3,248 பேருக்கு பயிற்சி அளித்துள்ளார்.

ஒரு பக்கச் செய்தியில் சொல்ல வேண்டிய தகவல்களை, ஒரு படத்தில் சொல்லி விடலாம். வண்ணங்கள் என்றாலே அவை ஓவியங்களைத்தான் குறிக்கும். தற்போது டிஜிட்டல் கலை நவீனமடைந்துவிட்டாலும், தூரிகை களால் உயிர்ப் பெறும் ஓவியங் களுக்கு இன்னமும் தனி மதிப்பு உள்ளது. தான் வாழும் சூழலை ஓவியங்கள் வாயிலாக கலைஞர்களால் அழகாக வெளிப்படுத்திவிட முடியும்.

கற்பனைத் திறனை அதிகரிப்பது டன், மனதில் தோன்றும் சிந்தனை யையும் வெளிக்கொண்டு வர முடியும். குழந்தைகள் ஓவியம் வரையப் பழகுவதால் அவர்களின் ஆளுமைத் திறனும், சிந்தனைக் குவிப்புத் திறனும் அதிகரிக்கும். ஆனால் பெரும்பாலான குழந்தை கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் உள்ளனர்.

அப்படிப்பட்ட குழந்தைகளைத் தேடி ஓவியம் கற்றுத்தருவதற்காக மதுரை ஜே.வி. அறக்கட்டளை மூலம் குழந்தைகளை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறார் மது ரையைச் சேர்ந்த ஓவியர் குணசேக ரன்.

வாழ்க்கையின் பிரதிபலிப்பு

இதுகுறித்து அவர் கூறிய தாவது: ஓவியம் என்பது வெறும் கலை மட்டுமல்ல. அது வாழ்க்கையின் பிரதிபலிப்பு. குழந்தையின் மழலைத்தனம் எவ்வளவு அழகானதோ, அவர் களின் கிறுக்கல்களும்கூட அதே போன்ற அழகான ஓவியங்கள்தான். நாம் மனதில் நினைப்பதை ஓவியங்கள்தான் வெளிக்கொண்டு வரும். ஒரு குழந்தையை அதன் வாழும் சூழலில் இருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றால் புதிய சூழலை புரிந்துகொள்ளவே சில நாட்கள் ஆகும். அதன் பின்னர், புதிய கற்பனையை உருவாக்க வேண்டும். எனவே, குழந்தைகள் வாழும் இடத்துக்கே சென்று ஓவியப் பயிற்சி அளிக்கிறோம். இதன்மூலம் ஒருவரால் தான் வாழும் சூழலை உணர முடியும். நாம் வாழும் சூழலை எங்கேயோ உள்ள ஒருவர் ஓவியமாக வரைவதைவிட நாமே அவற்றை ஓவியத்தில் பிரதிபலிப்பது இன் னும் சிறப்பாக இருக்கும். அனைத்து உண்மையும் அதில் பிரதிபலிக்கும். அப்போதுதான் எதார்த்தமான ஓவியங்கள் உருவா கும்.

மனநலம் பாதித்த குழந்தைகள்

மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர், வாடிப்பட்டி அரசுப் பள்ளி, ஈரோடு மனநலம் பாதித்த குழந்தைகள் பள்ளி, சிவகங்கை, சேலம், சீர்காழி, திருச்செங்கோடு, கோயில்பட்டி, சத்தியமங்கலம் பழங்குடியின குழந்தைகள், ஈரோடு பழங்குடியின குழந்தைகள் என மதுரை ஜே.வி. அறக்கட்டளை மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 3,248 குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்துள்ளேன்.

தொடர் பயிற்சி அவசியம்

பயிற்சியின்போது ஓவியம் வரை யும் முறை, புதிய வண்ணங்களை உருவாக்குதல், எதார்த்தத்தை ஓவியமாக உருவாக்குவது போன்ற பயிற்சிகளை கற்றுத் தருகிறோம். சில இடங்களில் ஒரு நாள், இரண்டு நாள் பயிற்சிகளும், சில இடங்களில் ஒரு வார பயிற்சி களும் வழங்கியுள்ளோம். ஆனாலும் முகாமில் நடத்தப்படும் பயிற்சியோடு நின்றுவிடாமல், அந்த மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகள் அளிக்க சம்பந்தப்பட்ட பள்ளிகள் முயற்சி எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பசிபிக் கடலில் மூழ்கிய ‘ஸீலாண்டியா’ என்ற கண்டம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

தென்-மேற்கு பசிபிக் கடலின் அடியில் மூழ்கிய கண்டம் 
‘ஸீலாண்டியா’ என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜியலாஜிக்கல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா என்ற இதழில் இதன் விவரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மூன்றில் இரண்டு பங்கு உள்ள கண்டமாகும் ஸீலாண்டியா. இதன் நிலப்பரப்பளவு 4.5 மில்லியன் சதுர கிமீ ஆகும். இது 94% கடல்நீருக்கடியில் மூழ்கியுள்ளது. இதன் வெளியே தெரியும் மேல் பகுதிகள்தான் நியூஸிலாந்தும் நியூகேலடோனியாவும் என்கின்றனர் விஞ்ஞானிகள். 
இந்தக் கண்டம் ஆஸ்திரேலியாவிலிருந்து 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பிரிந்து பசிபிக் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். கொண்ட்வானாலேண்ட் என்ற சூப்பர் கண்டம் உடைந்து பிரிந்ததன் ஒருபகுதி இதுவாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!