Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 21 February 2017

EMIS இணையதளத்தில் 1முதல் 8 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

EMIS இணையதளத்தில் 1முதல் 8 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 1-5 New entry 
பிப்ரவரி 28 க்குள் செய்து முடிக்கவும்.

அனைத்து மாணவர்களின் விவரங்களையும் update செய்து முடிக்கவும்

TNPSC - Exam Results

TNPSC - Group IV Exam (06.11.2016) Result - (21.02.2017) click here

Jio வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த புதிய கட்டண விவரங்கள் அறிவிப்பு வெளியீடு

ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த புதிய கட்டண விவரங்களை, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாகி முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார்.

 செய்தியாளர்களிடம் பேசிய முகேஷ் அம்பானி, அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் ஒரு முறைக் கட்டணமாக ரூ.99 செலுத்தி தங்களை பிரைம் மெம்பர்ஷிப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தற்போது இருக்கும் அனைத்து சலுகைகளையும் மாதத்துக்கு ரூ.303 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, ஒரு நாளைக்கு ரூ.10 மட்டுமே செலவாகும்.

மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதிக்குள் ஜியோ பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையலாம்.

இந்த திட்டத்தில் இணைந்தவர்கள், ரூ.303ல் தற்போது பெற்றிருக்கும் அனைத்து சலுகைகளையும் அடுத்த 12 மாதங்களுக்கு அதாவது மார்ச் 31ம் தேதி 2018ம் ஆண்டு வரை பெறலாம் என்று அறிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ரிலையன்ஸ் ஜியோ கடந்த 6 மாதத்தில் 10 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நொடியும் 7 வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைவதாகவும், அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் முகேஷ் அம்பானி கூறினார்.

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தபோதும், தனது விடா முயற்சி யால் பாராகிளைடரை உருவாக்கி பறந்து சாதனை படைத்துள்ளார் ஒரு கிராமத்து இளைஞர்.


தான் தயாரித்த பாராகிளைடருடன் ராஜாஞானப்பிரகாசம்.

பழநி அருகே உள்ள வய லூரைச் சேர்ந்தவர் அ.ராஜா ஞானப்பிரகாசம்(35). இவர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தந்தை அருள்பிரகாசத்திற்கு உதவியாக விவசாயம் செய்யத் தொடங்கினார். வீட்டில் இருந்தவாறு தொலைதூரக் கல்வியில் படித்து எம்.ஏ. வரலாறு பட்டம் பெற்றார்.

வானில் தனியாக பறக்க வேண்டும் என்பது சிறு வயது முதலே இவரது தீராத ஆசை. ஆனால் அது தொடர்பான படிப்பை இவர் படித்திருக்கவில்லை. ஊராட்சி களில் ஒப்பந்த வேலைகளை செய்யத் தொடங்கினார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர் ஒருவரின் லேத் பட்டறையிலும் வேலை செய்துள்ளார். பல பணிகளில் ஈடுபட்டபோதும் தனது பறக்கும் ஆசை மட்டும் அவரை விட்டுப்போகவில்லை.

தனது 23-வது வயதில் இதற்கான முயற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தார். விடா முயற்சியால் தற்போது சொந்தமாக பாராகிளைடரை தயாரித்து வானில் பறந்து சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து ராஜாஞானப் பிரகாசம் கூறியதாவது:

சிறு வயது முதலே வானில் தனியாக பறக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. இது குறித்து ‘யூ டியூப்’, புத்தகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிந்து பாராகிளைடர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். இதில் பலமுறை தோல்வி கண்டபோதும், 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெற்றி பெற்றுள்ளேன். எங்கள் கிராமப் பகுதியில் நான் பறந்து செல்வதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

மத்திய அரசின் ‘ஏர் டிராபிக் கண்ட்ரோல்’ 25 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க அனுமதி அளித் துள்ளது. ஆனால் நான் ஏழாயிரம் அடி உயரத்தில் மட்டுமே பறந்து செல்கிறேன். பறக்கும் உயரத்தை தெரிந்து கொள்ள அனிமா மீட்டர், காற்றின் வேகத்தை தெரிந்து கொள்ள அல்டி மீட்டர் ஆகிய கருவிகளை பாராகிளைடரில் பொருத்தியுள்ளேன். 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் இணைக்கப்பட்ட பாராகிளைடரில் தொடர்ந்து 4 மணி நேரம் பயணிக்கலாம். மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

பாராகிளைடர் தயாரிக்கத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கினேன். வெளிநாடுகளில் ஒரு பாராகிளைடர் தயாரிக்க எட்டு லட்சம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் நான் ஐம்பதாயிரம் ரூபாயில் பாராகிளைடரை தயாரித்துள்ளேன்.

ஒருவர் பறக்கும் வகையிலும், இருவர் பறக்கும் வகையிலும் வடி வமைத்துள்ளேன். பயணிப்பவர் களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு அம்சங்களும் ஏற்படுத்தியுள்ளேன். பாராகிளைடர் தயாரிக்க யாரிடமும் ஆலோசனை பெறவில்லை. 30 அடி சுற்றளவு காலியிடம் இருந்தாலே நான் தயாரித்துள்ள பாராகிளைடரை மேலே எழவும், கீழே இறங்கவும் செய்ய முடியும்.

மத்திய அரசின் விமான போக்குவரத்து துறையில் அனைத்து அனுமதியையும் பெற்றுள் ளேன். விமான நிலையத் தில் இருந்து 40 கி.மீ. சுற்றள வில் மட்டுமே பறக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. விமான போக்கு வரத்து துறையின் அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறேன். தயாரிப்பு காப்புரிமை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால் கூலி வேலைக்கு சென்று இருப்பேன் ரூ.3 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி


ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான நேற்றைய ஏலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்களில் ஒருவர், தமிழக வீரர் டி.நடராஜன். 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ரூ.3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டார்.

இவரது சொந்த ஊர் சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி. உடன்பிறந்தவர்கள் 4 பேர். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தந்தை சேலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தினக்கூலி. தாயார் நடைபாதையில் திண்பண்டங்கள் வியாபாரம் செய்பவர். நடராஜன் தனது 20 வயது வரை டென்னிஸ் பந்தில் தான் கிரிக்கெட் விளையாடினார். அதன் பிறகே தீவிர கிரிக்கெட்டுக்கு மாறினார். சென்னைக்கு இடம் பெயர்ந்து டிவிசன் அளவிலான போட்டிகளில் விளையாடி முன்னேறினார்.

அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது, தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் போட்டியாகும். கடந்த ஆண்டு டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக களம் இறங்கினார்.

அது தான் நடராஜனை வெகுவாக அடையாளம் காட்டியது. அவரது பந்து வீச்சை, வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தாபிஜூர் ரகுமானின் பந்து வீச்சு போன்று இருப்பதாக வர்ணிக்கப்பட்டது. அது மட்டுமின்றி தூத்துக்குடி பேட்ரியாட்சுக்கு எதிரான சூப்பர் ஓவரில் 6 பந்துகளையும் துல்லியமாக யார்க்கராக போட்டு கலங்கடித்தார். இறுதிகட்டத்தில் நேர்த்தியாக பந்து வீசும் பாங்கு, ஐ.பி.எல். அணி நிர்வாகிகளை கவர்ந்தது. அதன் தாக்கம், இன்று அவரை கோடீசுவரர் ஆக்கி இருக்கிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 7 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

டி.நடராஜன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால், தினக்கூலிக்கு வேலைக்கு சென்று கொண்டு இருந்திருப்பேன். சொந்த ஊரில் டென்னிஸ் பந்தில் விளையாடி நிறைய கோப்பைகளை வென்று இருக்கிறேன். டிவிசன் போட்டியில் ஆடிய போது எனது திறமையை கண்டுபிடித்து ஊக்குவித்தவர், பயிற்சியாளர் ஜெயபிரகாஷ். அவர் தான் எனது பெற்றோரிடம் பேசி என்னை சென்னையிலேயே தங்கியிருந்து விளையாட வைத்தார். நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் எல்லா பெருமையும் அவரைத் தான் சாரும். ஏலத்தில் எடுக்கப்பட்ட தகவலில் முதலிடம் அவரிடம் தான் பகிர்ந்து கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றார்.

மேலும் அவர், ‘எனது முன்மாதிரி ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் ஆவார். ஐ.பி.எல். தொடரின் போது அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும்’ என்றார்.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் அணிக்காக ஆடிய முருகன் அஸ்வின், திருவள்ளூர் வீரன்சுக்காக ஆடிய சஞ்சய் யாதவ் முறையே ஐ.பி.எல். ஏலத்தில் டெல்லி, கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டுள்ளனர்.

சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்

தானே: மஹாராஷ்டிர மாநிலம், தானேயில் உள்ள ஒரு பள்ளியில், 60 வயதுக்கு மேற்பட்ட பாட்டிகள், சீருடை அணிந்து, மற்ற மாணவர்களை போன்று தினமும் பள்ளி சென்று வருவது, அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. தானேக்கு அருகில் உள்ள, பங்கனே மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளியில், யோகேந்திர பங்கட், 45, என்பவர், ஆசிரியராக பணிபுரிகிறார். இந்த மாவட்டத்தில் உள்ள கிராமத்து மக்களின் முக்கிய தொழில் விவசாயம். இங்கு வசிக்கும் படிப்பறிவில்லாத வயதான பெண்களுக்கு கல்வியறிவு வழங்குவதற்காக, பங்கட் ஒரு தொடக்கப் பள்ளியை துவக்கி நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியில், 30 பாட்டிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு, இளஞ்சிவப்பு நிற சீருடை சேலை, ஸ்கூல் பேக், சிலேட்டு, பல்பம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பள்ளிக்கு தேவையான கரும்பலகையை, ஒரு தனியார் அறக்கட்டளை வழங்கியுள்ளது. தினமும், காலையில் பள்ளி மாணவர்களைப் போன்று சீருடை அணிந்து, முதுகில் ஸ்கூல் பை சுமந்து, பள்ளிக்கு வரும் பாட்டிகள், இறை வணக்கம் முடித்து, வகுப்புக்கு செல்கின்றனர்.இவர்களுக்கு எண் கணிதம், மராத்தி மொழி எழுத்துக்கள் எழுதும் பயிற்சி, நர்சரி பாடல்கள் உள்ளிட்ட அடிப்படை கல்வி கற்றுத் தரப்படுகிறது. இப்பள்ளியில், 60 முதல், 90 வயதுள்ள பாட்டிகள் சுறுசுறுப்பாக படித்து வருகின்றனர்.
பள்ளியில் படிக்கும், காந்தா பாட்டி கூறுகையில், ''துவக்கத்தில் பள்ளி செல்வதற்கு வெட்கமாகவும், தயக்கமாகவும் இருந்தது. என்னை விட வயதில் மூத்தவர்களும் பள்ளிக்கு செல்வதை அறிந்ததும், நானும் செல்லத் துவங்கினேன். தற்போது, எனக்கு மராத்தி மொழியில் நன்கு எழுதப் படிக்க தெரியும். இதனால் தன்னிறைவை உணர்கிறேன்,'' என்றார்.

மே14க்குள் உள்ளாட்சி தேர்தல்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தேர்தலை வரும் மே 14க்குள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு:

தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. 2016 டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கும்படியும்உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு, ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, 'உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்?' என, நீதிபதிகள்கேள்வி எழுப்பியிருந்தனர். இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'எப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த போகிறீர்கள்?' என, நீதிபதிகள் கேட்டனர்.மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''சில பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது; மே, 15ல் நடத்த உத்தேசிக்கிறோம்,'' என்றார். இதையடுத்து, உறுதியான தேர்தல் தேதியை தெரிவிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு, டிவிஷன் பெஞ்ச் தள்ளிவைத்தது.

உத்தரவு:

இன்று விசாரணைக்கு வந்த போது, மே 15க்கு முன்பு உள்ளாட்சி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் தேர்தல் நடவடிக்கைகளை ஏப்ரல் 15ம் தேதிக்குள் துவங்கி, மே 14க்குள் முடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை மே14ம் தேதிக்குள் இரண்டு கட்டமாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

NEET Exam - விண்ணப்பிக்க இன்னும், 10 நாட்களே உள்ளன!

மத்திய அரசு சார்பில், மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவுத்தேர்வு, மே, 7ல், நாடு முழுவதும் நடக்க உள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' பதிவு, ஜன., 31ல் துவங்கியது; மார்ச், 1 இரவு, 12:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த அவகாசம் முடிய, இன்னும், 10 நாட்களே உள்ளன.ஆனால்,தமிழகத்தில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, நீட் தேர்வு உண்டா, இல்லையா என, தெளிவாக மாநில அரசு அறிவிக்கவில்லை.

நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில், தமிழக அரசின் மசோதா, ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Manonmaniam Sundaranar University Admission Notification for DD&CE - B.Ed 2017-2018 !!

Manonmaniam Sundaranar University*

Admission Notification for B.Ed 2017-2018 (DD&CE)

*Cost of Application -Rs.650

*Medium and Mode of Instruction - English

*Exam will be in English or Tamil

*Last dare for receipt of completed application forms - 13.03.17

www.msuniv.ac.in

2017-மேல்நிலைத் தேர்விற்கான பறக்கும்படை அலுவலர்களுக்கான கூட்டம் 21.02.2017 அன்று நடைபெறுதல் சார்ந்து திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் !!

வேலையில்லா கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விடியல் பயணம்..

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் இணைந்து நடத்தும் கணினி ஆசிரியர்கள் பொதுக் கூட்டம்..
வேலையில்லா கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விடியல் பயணம்..

கணினி ஆசிரியர்கள் தங்களது எதிர்கால வாழ்வை மனதில் கொண்டும்.,

ஏழை மாணவர்களின் எதிர்காலத்தையும் கல்வியையும் மனதில்  கொண்டு வாரீர் வாரீர்
அனைவரும் வாரீர்!

தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இணைந்து நடத்தும் பொதுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
நடைபெற உள்ளது .....

நாள் :26.2.2017 ஞாயிறு
காலை :9மணி.
இடம் :ஶ்ரீ பேட்ராயசாமி மஹால்,
அறிஞர் அண்ணா கல்லூரி அருகில் ,கிருஷ்ணகிரி.

எங்களுக்கு வேலை கொடுங்க...!
ஏழைக் குழந்தைக்கு தமிழகத்தில் தரமிகு கல்வி கொடுங்க...!

குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.

இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு
கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இலவச உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:
இரண்டு புகைப்படம்,
பி.எட் சான்றிதழ் நகல்,
வேலைவாய்ப்பு அட்டை நகல்,

இவற்றுடன் தங்களின்
சுயவிபரத்தை இணைத்து கொண்டுவரவும்.

பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:
தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.

கணினி ஆசிரியர்களே வாரீர் வாரீர் கடலூர் நோக்கிய வெற்றிப் பயணத்ததிற்க்கு அனைவரும் வாரீர் .

தொடர்புக்கு :
கிருஷ்ணகிரி நிர்வாகிகள்  9865446556,9659541525,9894372125,8940920838.

தருமபுரி நிர்வாகிகள்
9751078810,9842497424,9159880336,9788151383

வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச் செயலாளர்,
9626545446.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் .
பதிவு எண்:655/2014.

10th Public Exam - March 2017 Hall Ticket Download

SSLC - MARCH - 2017 SCHOOL CANDIDATE HALL TICKET DOWNLOAD (FROM 18.02.2017 TO 26.02.2017)

தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிகல்வி அமைச்சர் !!

தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிகல்வி அமைச்சர் !!

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்*

*ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வி துறையில் சிறந்து விளங்க அரசு அனைத்து 

நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!