Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 28 February 2017

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மாதசம்பளம் பெருவோர் கடும் அதிருப்தி

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தால் வங்கிப்பணிகள் முற்றிலும் முடங்கியது. மாத சம்பளம் பெருவோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும், வங்கித்துறையில் மத்திய அரசின் சீர்த்திருத்தங்களை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி சேவைகள் முற்றிலும் முடங்கி போனது.

இதில், இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகளும் தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் பேரும் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள பொதுத்துறை, தனியார் துறையைச் சேர்ந்த 7,000 வங்கிக் கிளைகளின் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கிப் பணிகளும், சேவைகளும் பாதிக்கப்பட்டது. மாதத்தின் கடைசி நாள் என்பதால் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மாத சம்பளம் பெருவோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சூரியனுக்கு அடுத்த வருடம் ‘நாசா’ விண்கலம் அனுப்புகிறது

15 கோடி கி.மீ. தூரத்தில் இருக்கும் சூரியனுக்கு நாசா நிறுவனம் விண் கலம் அனுப்புகிறது.

பிப்ரவரி 28, 11:44 AM

வாஷிங்டன், 

சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியனாகும். சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப்போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. (ஒரு ஒளி ஆண்டு = 5,88,00,00,000 மைல்கள்).சூரியன்,புவியிலிருந்து ஏறக்குறைய 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அளவில் சூரியன் புவியைப் போல் 13,00,000 மடங்கு பெரியது. 

சந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்கு விண்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் சூரியனுக்கு விண்கலம் அனுப்பி ஆய்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.இந்த நிலையில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

மற்ற கிரகங்களை விட கடுமையான வெப்பம் கொண்டது. எனவே அதற்கு ஏற்றாற்போல் விசேஷ விண்கலம் தயாரித்து அனுப்பப்பட உள்ளது. இதற்கான தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ‘நாசா’ விஞ்ஞானிகளின் முதல் முயற்சி என காட்டார்ட் விண்வெளி மைய விஞ்ஞானி எரிக்- கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார். சூரியனை மிக நெருக்கத்தில் சென்று ஆய்வு செய்ய முடியாது. அதே நேரத்தில் அதன் மேற்பரப்பில் ஆய்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

சூரியனின்  சுற்றுப்புற தட்ப வெப்ப நிலை 5,500 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. அதற்கு தகுந்தாற் போன்று வெப்பத்தை தாங்க கூடிய வகையில் விண்கலம் தயாரிக்கப்படும். அது அடுத்த ஆண்டு அதாவது 2018-ல் சூரியனுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

உதவித்தொகை பெறுவதில்... சிக்கல்! பள்ளி குழந்தைகள் அவதி!!!

உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகளுக்கு, வங்கிகளில் கணக்கு துவக்க முடியாததால், ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உடுமலை சுற்றுப்பகுதியில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், கரட்டூர், அமராவதிநகர், லிங்கமாவூர், திருமூர்த்திநகர் உள்ளிட்ட நான்கு மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்தில் ஓரு உண்டு உறைவிடப்பள்ளியும் 
செயல்படுகிறது. கோடந்தூர், குழிப்பட்டி, குறுமலை, தளிஞ்சி, கரட்டுபதி உட்பட சுற்றுப்பகுதி மலைகிராமங்களிலுள்ள குழந்தைகள் மட்டுமின்றி, மூணார், வால்பாறை உட்பட தொலைதூரபகுதிகளிலிருந்தும் இப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கான தங்கும் வசதியோடு, கல்வியும் வழங்குவதற்காக உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பெற்றோர் இல்லாத அல்லது குடும்ப சூழல் சரியில்லாத மற்றும் ஆதரவற்ற குழந்தைகளும் இப்பள்ளிகளில் பெரும்பான்மையாக உள்ளனர். ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் குழந்தைகளுக்கான சீருடை உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களின் பராமரிப்புக்கென, சோப்பு, எண்ணெய் போன்ற செலவுகளுக்கு, மாதம், 50 ரூபாய் அரசின் சார்பில் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை, உண்டு உறைவிடப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

ஆனால், இரண்டாண்டுகளாக, அப்பள்ளி குழந்தைகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தும் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த உதவித்தொகையை பெறுவதில், பல குழந்தைகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வங்கிகளின் மூலம் வழங்கப்படுவதால், குழந்தைகளுக்கான தனித்தனி கணக்குகள் துவக்கப்பட வேண்டும். கணக்கு துவக்குவதற்கு, அவர்களுக்கான முகவரி அடையாள அட்டை அவசியமாக உள்ளது. இதில், பல குழந்தைகள் ஆதரவில்லாத நிலையில் இருந்து பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதால், முகவரிக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை.

வங்கிகளில், பள்ளியின் முகவரியைக்கொண்டும் கணக்கு துவங்க முடிவதில்லை. வங்கிகளின் மூலம் மட்டுமே உதவித்தொகை செலுத்தப்படுவதால் அந்த குழந்தைகளுக்கான, உதவித்தொகை கடந்த இரண்டாண்டுகளாகவே கிடைப்பதில்லை.

நலத்துறை நடவடிக்கை அவசியம்
இப்பிரச்னை கடந்த இரண்டாண்டுகளாக தொடர்ந்தும், ஆதிதிராவிட நலத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதனால், அரசின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை அக்குழந்தைகளை சென்றடைவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. குழந்தைகளுக்கு பள்ளியின் முகவரியைக்கொண்டு, வங்கி கணக்குகள் துவங்குவதோடு, உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைப்பதற்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் !!

நீட் (NEET) எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் மே 7ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை (மார்ச் 1) கடைசி நாளாகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க cbseneet.nic.in என்ற இணையதளத்தை நாடலாம்

டிப்ளமோ தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் !!

தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடந்த ஜூனில், தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். அவர்கள், மார்ச், 1 முதல், 3 வரை, www.tndge.in என்ற

இணையதளத்தில், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம். பின், மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, மார்ச், 6 முதல், 8 வரை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூபெல்லா தடுப்பூசி பற்றி தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை: விஜயபாஸ்கர் எச்சரிக்கை !!

ரூபெல்லா தடுப்பூசி பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை 
விடுத்துள்ளார். மேலும் சென்னையில் விஜயபாஸ்கர் தலைமையில தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி திட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை !!

விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் 
 உத்தரவிட்டுள்ளார். மேல்மலையனூர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

March 2017 Diary !!

1 -R.L-Ash wednesday

4 -Grievance day, Primary CRC, Upper primary CRC,
                    
4-R.L-Vaikundasamy birthday

11 -R.L-Maasi maham

29 -G.H-Telegu new year.

மார்ச் 3-வது வாரத்தில் தமிழகபட்ஜெட் தாக்கல்? அரசுஊழியர்கள்ஓய்வு வயது 60 ஆக உயர வாய்ப்பு

தமிழகஅரசின் பட்ஜெட் மார்ச் 3-வது வாரத்தில்தாக்கல்செய்யப்படுகிறது. 

இதில், அரசு ஊழியர்களுக்கானஓய்வுபெறும் வயது 60 ஆகஉயர்த்தப்படும் எனதெரிகிறது. தமிழக சட்டப்பேரவையின்இந்தஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 23-ம் தேதிதொடங்கியது. அன்று பேரவையில் ஆளுநர்வித்யாசாகர் ராவ்உரை யாற்றினார். பிப்ரவரி 1-ம்தேதிவரை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது முதல்வராகஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அதன்பிறகுஅதிமுகவில்எழுந்தபிரச்சினைகளால் தமிழக அரசியலில் பரபரப்பும்குழப்பமும் நிலவியது. பின்னர் புதிய முதல்வராகஎடப்பாடிபழனிசாமி கடந்த 16-ம்தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அப்போது, முதல்வரிடமே நிதித்துறை இருந்தது. கடந்த 23-ம்தேதிஅமைச்சரவையில் மாற்றம்செய்யப்பட்டது. முதல்வரிடம்இருந்த நிதித்துறை, மீன்வளத் துறைஅமைச்சர்டி.ஜெயக்குமாரிடம்ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவை யின் பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போதுநடக்கும் என்றஎதிர்பார்ப்பு எழுந்தது. ஜெயக்குமாரிடம்நிதித் துறைஒப்படைக்கப்பட்ட பிறகுபட்ஜெட்தயாரிப்புக்கான பணிகள்முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நிதித்துறைஅதிகாரி ஒருவர் கூறும்போது, ''கடந்த வாரம் துறைகள் வாரியாகமுக்கிய தகவல்கள்பெறப்பட்டன. அவற்றை தொகுத்து முழுமையானபட்ஜெட்தயாரிக்கப்படும். இப்பணிகள் சில தினங்களில் முடியும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்நாள் குறித்து முதல்வர்முடிவு செய்வார். வழக்கமாக மார்ச் இரண்டாம்வாரத்தில்பட்ஜெட் தாக்கல்செய்யப்படும். இந்த ஆண்டு மார்ச் 3-ம்வாரத்தில் தாக்கல் செய்யவாய்ப்புள்ளது'' என்றார். முதல்வர்எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் தனதுஅரசுமீதான பெரும்பான்மையைநிரூபித்து கிடைத்தவாய்ப்பை தக்கவைத்துள்ளார். 500 மதுக்கடைகள்மூடல், பெண்களுக்கு இரு சக்கர வாகனம்வாங்கமானியம், மகப்பேறுஉதவித் தொகை உயர்வு எனபல்வேறுஅறிவிப்புகளைவெளியிட்டுள்ளார். இந்தஅறிவிப்புகளுக்குஅரசாணையும்பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கானநிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படவேண்டும். மேலும், பல்வேறுதிட்டங்களுக்கான தொடர்நிதியும்ஒதுக்கப்படவேண்டியுள்ளது. மேலும்தற்போதுள்ளஅரசியல் சூழலில், இந்த அரசு மீது மக்களிடையேஅதிருப்தியும் எதிர்ப்பும்உள்ளது. இதைமாற்றுவதற்காகபொதுமக்களைகுறிப்பாக பெண் களை கவரும்வகையில், பல்வேறு புதியதிட்டங்களை அறிவிக்கவேண்டியஅவசியமும் எடப்பாடிபழனிசாமி அரசுக்குஏற்பட்டுள்ளது. ஓய்வு வயதுஉயர்வு இந்த பட்ஜெட்டில் அரசுஊழியர்களுக்கான ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆகஉயர்த்தும்அறிவிப்பு வெளியாகும் எனதெரிகிறது. இதுதொடர்பாக, அரசுஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் 7-வதுஊதியக்குழு பரிந்துரைஊதியத்தை நம்பியுள்ளனர். இதைநிர்ணயிக்க குழுஅமைக்கப்பட்டுள்ளது. குழுவின்பரிந்துரையை ஏற்றுசெயல்படுத்தினாலும், அடுத்த 4 மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடிஅளவுக்கு அரசுக்குநிதிதேவைப்படும். ஏற்கெனவே தமிழகஅரசுத்துறைகளில் 3.5 லட்சம்காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை நிரப்பப்படாத சூழலில், தமிழக அரசின் இந்தமுடிவுபல்வேறு குழப்பங்களைஏற்படுத்தும் என அரசுஊழியர்கள்தரப்பில்கூறப்படுகிறது. இது தொடர்பாகஊழியர் சங்கநிர்வாகி ஒருவர்கூறியதாவது: மத்திய அரசுஓய்வுபெறும்வயதை கடந்த 1998-ல் 60 ஆக உயர்த்தியது. இதைத்தொடர்ந்து தமிழக அரசும்உயர்த்த உள்ளதாகபலமுறைகூறப்பட்டது. ஆனால், உயர்த்தவில்லை. தற்போதுஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தும்அறிவிப்புபட்ஜெட்டில் இடம் பெறும்என தகவல் கசிந்துள்ளது. இதுஓய்வு வயதைநெருங்குபவர்களுக்கு மகிழ்ச்சிஅளிக்கும். அவர்கள்ஆதரிப்பார்கள். அதே நேரம் வயதுஉச்சவரம்பைநெருங்கி அரசுப்பணிக்கு விண்ணப்பித்துகாத்திருக்கும்இளைஞர்களுக்குபாதகமான முடிவாகும். வரும் 2018 முதல் 2020 வரை சுமார் 2.5 லட்சம்பேர் வரை பணிமூப்பால் ஓய்வுபெறவுள்ளனர். இவர்களுக்கு 2 ஆண்டுகள்நீட்டிப்பதன் மூலம், அரசுக்கு ஒரு மடங்கு கூடுதல்செலவுஏற்படும். மேலும், வரும்ஆண்டுகளில் பணியாளர்தேர்வும்நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இது இளைஞர்களுக்குகிடைக்கும்வாய்ப்பை மறுப்பதாகும். எனவே, இந்தமுடிவை அரசு பரிசீலிக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

TNTET : கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபியில் இருந்து சென்னை செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது:மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறோம்.ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறை நீடிப்பதால், பாதிப்பு இருப்பதாகத்தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

அன்பாசிரியர் தனபால்- 249 இளம் விஞ்ஞானிகளின் ஆசான்!

அறிவியல் ஆய்வகத்தில் மாணவர்களுடன் அன்பாசிரியர் தனபால்

சீமைக் கருவேல சாறிலிருந்து மின்சாரம் ; சூழலியலைக் காக்கும் கழிப்பறை

*

சிறந்த ஆசிரியர் ஒரு மெழுகுவர்த்தியைப் போல- தன்னொளி கொண்டு மாணவர் வாழ்வில் ஒளியேற்றுகிறார்.

கிராமப்புறத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த தனபாலுக்கு அறிவியலில் அத்தனை ஆர்வம். எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதைப் பரிசோதித்துப் பார்ப்பார். கல்லூரி முடித்து ஆர்வத்துடன் இளம் விஞ்ஞானிக்கான தேர்வை எழுத 1995-ல் மும்பை சென்றார் தனபால். அங்கே பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. கேள்வித்தாள் முழுவதும் ஆங்கிலத்திலும், இந்தியிலுமே இருந்தது.

ஆரம்பக்கல்வி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி இளங்கலை என அனைத்தையும் தமிழ் வழியில் படித்த மாணவர் தனபாலால் அன்று தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனால் அதே தனபால் இன்று அரசுப்பள்ளி ஆசிரியராகி, கிராமங்களில் இருந்து 249 இளம் விஞ்ஞானிகளை உருவாக்கியிருக்கிறார். அவரின் மாணவர்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அறிவியல் போட்டிகளில் தங்கத்தைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக்கத்தையும், ஊக்கத்தையும் ஊட்டும் அன்பாசிரியர் தனபாலின் அறிவியல் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...

''1996-ல் ஆசிரியப் பயிற்சியை முடித்த எனக்கு 2005-ல் கரூர், வெள்ளியணை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேலை கிடைத்தது. கிராமத்தில் இருந்து மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாகும் பெருமையை ஏற்கெனவே அடைந்துவிட்டோம். ஆனால் விஞ்ஞானிகள் கிராமத்தில் இருந்து உருவாவது மிகமிகக் குறைவு. இதைப் போக்கவேண்டும் என்பதுதான் என் லட்சியமாக இருந்தது. விஞ்ஞானிகள், அறிவியல் என்றவுடனே அந்நியமாக நினைக்க வேண்டாம். அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சரிசெய்பவர்தான் சிறந்த விஞ்ஞானியாக இருக்கமுடியும்.

அறிவியலில் ஆறு குழுக்கள்

இதைத் தொடர்ந்து பள்ளியில் அறிவியல் ஆர்வம் கொண்ட மாணவர்களை இணைத்து ஒரு குழுவை அமைத்துள்ளோம். அறிவியல் நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அண்டம், சுற்றுச்சூழல், மின்னியல், மின்னணுவியல், ரோபோ மற்றும் மருத்துவம் என மாணவர்களின் ஆர்வத்தைப் பொருத்து அவர்களை 6 பிரிவுகளாகப் பிரித்து, பயிற்சி அளிக்கிறோம்.

முதல்படியாக தினமும் நாளிதழ் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். காலை 8.30 - 9.30, மாலை 4.30 - 5.30 என இரண்டு மணிநேரம் ஒதுக்குகிறோம். இதில் வருடத்துக்கு சுமார் 500 மணி நேரம் கிடைக்கிறது. இதுதவிர சனி, ஞாயிறுகளில் களப்பயணம் மேற்கொள்கிறோம். தனித்திறன் வெளிப்பாடு (அறிவியல் துறை சேர்ந்த பேச்சு, எழுத்து, ஓவியப் போட்டிகள்), கண்காட்சி, கருத்தரங்கம், அறிவியல் நாடகம், வினாடி வினா, களப்பயணம், தணிக்கை செய்தல், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், குறும்படம் தயாரித்தல் ஆகியவை தொடர்ந்து நடத்தப்படுகிறது. இவற்றில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர்.

2013-ல் கூடங்குளம் அணு உலை பிரச்சினை எழுந்த சமயம். நாளிதழ்களில் அதை வாசித்து என்ன செய்யலாம் என்று திட்டமிட்டோம். பாலமுருகன் என்ற +1 மாணவர், 'அணுமின் உற்பத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். அது 'ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா' நடத்திய போட்டியில் தேர்வாகியது. எங்கள் மாணவருக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தன் கையால் பரிசு வழங்கினார்.

சீமைக் கருவேல சாறிலிருந்து மின்சாரம்

2014-ல் சீமைக் கருவேல மரங்களின் எதிர்மறைத் தாக்கம் பெரியளவில் விவாதிக்கப்பட்டு வந்தது. பறவைகூடக் கூடுகட்ட முடியாத அந்த மரத்தால் மழைப்பொழிவும், நிலத்தடி நீரும் குறைந்தது. இந்நிலையில் சீமைக் கருவேல மரத்தின் ஒவ்வொரு பாகங்களையும் சேகரித்தோம். காய், இலை, தண்டு, வேர் ஆகியவற்றை பள்ளி ஆய்வகத்தில் வைத்துப் பரிசோதனை செய்தோம். எல்லா தாவரங்களிலுமே அமிலம் இருக்கும். இதைப் பரிசோதித்ததில் அதன் pH மதிப்பு 5 எனக் கண்டுபிடித்தோம். அதைக்கொண்டு ஏன் மின்சாரம் தயாரிக்கக் கூடாது என்று யோசித்து, சீமைக்கருவேலத்தை அரைத்துப் பிழிந்து சாறு எடுத்தோம். 100 மில்லி சாறில் இருந்து 1.5 வோல்ட் மின்சாரம் கிடைத்தது.

மின்சாரத்தின் அளவை அதிகப்படுத்த, தாமிரம்- துத்தநாகம் (Cu-Zn) மின்கலன் கொண்டு, அதைத் தொடரிணைப்பில் (series connection) கொடுத்தோம். இதன்மூலம் 3 லிட்டர் சாறில் 64 வோல்ட் மின்சாரம் தயாரித்து, 50 எல்ஈடி விளக்குகளை எரியவைத்தோம். இந்த செயல்திட்டத்துக்கு சதீஷ்குமார் என்ற +1 மாணவர் மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்றார். தேசிய அளவிலும் தேர்வாகி, அங்கு மாநிலத்துக்கான 2-ம் பரிசு கிடைத்ததோடு, 'புத்தாக்க அறிவியல் விருது'ம் கிடைத்தது. இப்போது சதீஷ்குமார் ஜப்பானில் நடக்கவுள்ள சர்வதேசக் கருத்தரங்கிலும் பங்கேற்க உள்ளார்.

தொழிற்சாலைக் கழிவுநீரைச் சுத்தப்படுத்த..

அதேபோல, தொழிற்சாலைக் கழிவுகளால் குடிநீரும், நிலத்தடி நீரும் பாழாவதோடு எங்கும் சாக்கடை நீரே வியாபித்திருப்பதைக் கண்டோம். எப்படித் தடுக்கலாம் என்று விசாரித்ததில் கழிவுநீரில் விளையும் பயிர் பற்றித் தெரியவந்தது. மாட்டுத் தீவனப்புல் எனப்படும் கம்பு நேப்பியர் (CN2) பயிர்தான் அது. இப்பயிரால் கழிவு நீரை உறிஞ்சி, வளரமுடியும் என்றாலும் இதைக் கால்நடைகளுக்கு உண்ணக்கொடுக்கக் கூடாது. இதிலிருந்து மின்சாரம் எடுக்கமுடியுமா என ஆய்வுசெய்து, வெற்றிகரமாக மின்சாரம் தயாரித்தோம். இத்திட்டமும் மாநில அரசின் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

சூழலியலைக் காக்கும் கழிப்பறை

பொதுவாக கழிப்பறை கழிவுகள் பூமிக்கடியில் சேகரமாகின்றன. இதனால் நிலத்தடி நீருடன் கழிவு நீர் கலந்து அசுத்தமாகிறது. மேற்கத்திய கழிப்பறைகளால் அதிகளவில் தண்ணீரும் வீணாகிறது. இதைத் தடுக்கவும், திறந்தவெளி மலம் கழித்தலைக் குறைக்கவும் 2016-ல் சூழலியல் காக்கும் கழிப்பறையைக் கட்டினோம். இக்கழிப்பறை பூமிக்கு மேலே 3 அடி உயரத்திலேயே கழிவுகளைச் சேகரிக்கும். இது 3 வகைகளில் கழிவைப் பிரிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். தென்னை நார், சாம்பல் மூலம் கழிவிலிருந்து துர்நாற்றம் கிளம்பாது. நொதித்தல் மூலம் கழிவுகள் இயற்கை உரங்களாக மாற்றப்படும். அதில் கால்சியம், பொட்டாசியம், சாம்பல் சத்து இருக்கும் என்பதால் விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம். இந்த செயல்திட்டத்தை விளக்கி ஹரிஹரன் என்ற மாணவர், மாநில அளவில் தங்கப்பதக்கம் பெற்றார்.

செயல்திட்டங்களையும், ஆய்வுக்கட்டுரைகளையும் சமர்ப்பிப்பதற்காகத் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கிறோம். அரசு அளிக்கும் தொகை போக்குவரத்துக்கே செலவாவதால், லக்கேஜ், உணவு உள்ளிட்ட செலவினங்களை நானே பார்த்துக் கொள்கிறேன். கிராமப்புற மாணவர்கள் நாடு போற்றும் விஞ்ஞானிகளாக உருமாற்றும் தருணத்தைவிட ஓர் ஆசிரியருக்கு வேறென்ன தேவைப்பட்டுவிடும்?

'என்னை செதுக்கியது மாணவர்கள்தான்'

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், என்னுடைய பள்ளிப்பருவத்தில் நான் எந்த மேடையும் ஏறியதில்லை; பரிசுகளோ, கைதட்டல்களோ வாங்கியதில்லை. இப்போது என் மாணவர்கள் அவற்றைப் பெறும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மாணவர்களுடன் இப்போது வரை 117 மேடைகள் ஏறியிருக்கிறேன். என்னைச் செதுக்கியது மாணவர்கள் என்பதில் எனக்குப் பெருமைதான்.

அறிவியலுக்கு செயல்வழிக் கற்றல் மிகவும் முக்கியம். அதனால் பாடங்களைப் பெருமளவில் ஆய்வகத்திலும், களங்களிலும் கற்பிக்கிறோம். பத்தாம் வகுப்பில் அறிவியலில் நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவர்களுக்கு ஒரு வெள்ளி நாணயத்தை ஆண்டுதோறும் பரிசாக வழங்கிவருகிறேன். 8 ஆண்டுகளாக என் மாணவர்கள் அறிவியலில் 100% தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

வெளியூரில் இருந்து படிக்கும் மாணவர்கள்

அரசுப்பள்ளி என்றாலும் வெளியூர்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள். மாணவர்களின் தனித்திறமையைக் கண்டு, ஈரோடு, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து பெற்றோர்கள் தங்கள் மகன்களை இங்கே சேர்க்கின்றனர். அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியில் இன்னும் கூடுதலாக உழைக்கிறேன். முதுகலை இயற்பியல் ஆசிரியராகப் பதவி உயர்வோடு, இட மாற்றலுக்கான ஆணை வந்தது. என் மாணவர்களின் நலன் கருதி அதை வேண்டாமென்று கூறிவிட்டேன். 12 வருடங்களில் ஒரு நாள் கூட மருத்துவ விடுப்பு எடுக்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

எங்கள் மாணவர்களின் அறிவியல் சாதனைகளைக் கண்ட முன்னாள் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து, 80 ஆயிரம் ரூபாய் செலவில் ஆய்வகத்தை மறுசீரமைப்பு செய்துகொடுத்தனர். 100 பேர் அமரும் வகையில், இளம் விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வைக்கோல் எரிப்பதால் டெல்லியில் ஏற்படும் மாசுபாடு குறித்து செய்தித்தாளில் படித்தோம். இதனால் வைக்கோல் மறுசுழற்சி குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளோம். தேசிய அளவில் வெற்றி பெற்று விருதுடன் திரும்பும் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்த ஆசை. ஆனால் அரங்க வசதி இல்லாமல் இருக்கிறது. அத்துடன் நவீன உபகரணங்கள் கொண்டு ஆய்வகத்தை மேம்படுத்தும் முயற்சியிலும் இருக்கிறோம். நல்லுள்ளங்களின் உதவியில் அனைத்தும் நடக்கும்'' என்கிறார் அன்பாசிரியர் தனபால்.

க.சே. ரமணி பிரபா தேவி --> தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

ஆசிரியர் தனபாலின் தொடர்பு எண்: 9443588855

பிப்ரவரி 28: தேசிய அறிவியல் நாள்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் நாள்  பெப்ரவரி 28 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற "ராமன் விளைவு" ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்த தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது

TNTET 2017 - அச்சிட்ட தேர்வு விண்ணப்பங்கள் சிறிய மாறுதலுடன் பயன்படுத்த முடிவு

ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்'டுக்காக, அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்து பயன்படுத்த, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. அதனால், டி.ஆர்.பி., தலைவராக இருந்த விபு நய்யர், 'டெட்' தேர்வுக்கான விண்ணப்பங்களை அச்சிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். 

          இந்த நேரத்தில், தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனமான, 'டான்சிக்கு' அவர் திடீரென மாற்றப்பட்டார். இந்நிலையில், அச்சிடப்பட்ட, 'டெட்' தேர்வு விண்ணப்பங்களில், சில பகுதிகள் விடுபட்டிருந்ததை, கல்வித் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனால், 15 லட்சம் விண்ணப்பங்கள் வீணாக குப்பைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதுபற்றி, பிப்., ௨௬ல், தினமலர்  நாளிதழில் செய்தி வெளியானது. உடன் விசாரணை நடத்த, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டார். 'ஏற்கனவே அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்தால், பிரச்னைக்கு தீர்வு காணலாம்' என, அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். இதையடுத்து, ஏற்கனவே அச்சிட்ட விண்ணப்பங்களுடன், கூடுதலாக சில வரிகளை அச்சிட்டு இணைக்க, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

8 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்: தகவல் அறியும் சட்டம் மூலம் அதிர்ச்சி தகவல் !!

கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவ படிப்பிற்கான 29,225 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் வெங்குளத்தை சார்ந்த சமூக ஆர்வலர் தே. ராஜு. இவர் கடந்த 2009-2010 கல்வியாண்டு முதல் 2016-2017 கல்வியாண்டு வரையிலான 8 ஆண்டுகளில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நிர்யணிக்கப்பட்ட 
எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான மொத்த இடங்கள் எத்தனை? இதில் சேர்க்கை பயனுற்ற அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை? குறித்த தகவல்களை சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பொது தகவல் வழங்கும் அதிகாரியுடம் தகவல் அறியும் சட்டம் மூலம் கோரியிருந்தார்.

இதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன்படி எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் பொதுத் தகவல் அதிகாரி அளித்த தகவல் விவரம் வருமாறு,

கடந்த 2009-2010 கல்வியாண்டு முதல் 2016-2017ம் கல்வியாண்டு வரையிலுமான 8 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ் மாணவர்கள் சேர்க்கை மொத்தம் 29,225 ஆகும். , இதில் அரசு மருத்துவக் கல்லூரியில் 213 மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 மாணவர்கள் என மொத்தம் 278 அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் எம்.பி.பி.எஸ் சேர்ந்துள்ளனர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜு கூறும்போது, "தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் மாணவர்கள் 12ம் வகுப்பு பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருகின்றனர். இதில் 60 சதவீதம் பேர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தவர்கள் ஆவர்.

மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண்ணில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நேரடியாக சேர்க்கை நடைபெறுகிறது. இதனடிப்படையில் கடந்த 9 ஆண்டுகளில் 29,225 சேர்க்கப்பட்ட எம்.பி.பி.எஸ் மாணவர்களில் வெறும் 278 மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களாக உள்ளனர். அதாவது வெறும் 1 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள். இதில் அரசு பள்ளியை காட்டிலும், தனியார் பள்ளிகளில் பயின்ற 99 சதவீதம் பேர் மருத்துவக்கல்லூரியில் சேரும் வாய்ப்பை பெறுகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் சுமார் ரூ.85000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயினும் தொடர்ந்து அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்து கொண்டே போகிறது. இதனால் அரசு பள்ளிகளில் பயிலும் பெருன்பான்மையான ஏழை மாணவர்களுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது வெறும் கனவாகவே உள்ளது. இந்நிலையில் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகம் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களை மேலும் பாதிக்கும். எனவே அரசுப் பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்துவதுடன் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்பில் சிறப்பு இடஒதுக்கீடும் வழங்க வேண்டும்" என்றார்.

பள்ளிகளில் யோகா வகுப்பு கொண்டு வர பரிசீலனை !!

பள்ளிகளில் யோகா வகுப்பு கொண்டு வர பரிசீலனை : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி          பள்ளி மாணவர்களுக்கு யோகா வகுப்பு கொண்டு வர தமிழக அரசு பரிசீலனை செய்துள்ளதாக கோவையில் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். மேலும் முதலமைச்சர் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

வீட்டுமனை பத்திரப் பதிவுக்கான தடை நீட்டிப்பு!

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் எல்லாம் சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாற்றப்படுகிறது என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது.விளைநிலங்களை மனைகள் ஆக்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சுற்றுப்புறச் சூழலியலாளர்களால் வலுப்பெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் சில மாதங்களுக்குமுன்பு விவசாய

விளைநிலங்களும், விவசாயமும் அழிந்துவருவதாக முறையற்ற முறையில் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக் கூடாது என்றும் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர், 3 ஆண்டுகளுக்குமேல் விளையாமல் தரிசாகப் போடப்பட்டுள்ள விளைநிலங்களை குடியிருப்பு பகுதிகளாகவோ அல்லது பிற உபயோகத்திற்காகவோ மாற்றுவதற்கு எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை. இதனால் 5 சதவீத இடத்துக்கு மட்டும் அனுமதி கோரிவிட்டு, எஞ்சிய 95 சதவீத இடம், முறைகேடாக வீட்டு மனைகளாக மாற்றப்படுகிறது. சென்னையில் 80 சதவீதமாக இருந்த விளைநிலப் பகுதி இப்போது 15 சதவீதமாக சுருங்கிவிட்டதாக செய்திகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விளைநிலங்களை வீட்டு மனைகளாக “லே-அவுட்’ போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப் பதிவுத் துறையினர் எந்தவித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது.

இதன்மூலம் விளைநிலங்கள் சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாறுவது தடுக்கப்படும். அத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வெள்ள பாதிப்பைத் தடுக்கவும் இது உபயோகமாக இருக்கும் என்று கூறி, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு ஒரு அரசாணையை தாக்கல் செய்தது. அதில், ‘அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம். ஆனால், இனிவரும் காலங்களில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக சட்டவிரோதமாக மாற்றுவதற்கும், அந்த சட்டவிரோத நிலங்களை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.

அரசின் இந்த முடிவை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏக்கர், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகள் உள்ளன. இந்த வீட்டு மனைகளை எவ்வாறு ஒழுங்குபடுத்தி வரையறை செய்யப் போகிறீர்கள்? இதற்கான அரசின் திட்டம் என்ன? எதிர்காலத்தில் சட்டவிரோத வீட்டுமனைகள் உருவாக்கப்படாமல் தடுப்பது எப்படி? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட ஒருங்கிணைந்த திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி, அதை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

ஆனால் இந்த ஒருங்கிணைந்த திட்டத்தை தமிழக அரசு இதுவரை உருவாக்கவில்லை. இந்தத் திட்டத்தை உருவாக்க கால அவகாசம் வேண்டும் என்று ஒவ்வொருமுறையும் வழக்கு விசாரணையின்போது தமிழக அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான சஞ்சய்கி‌ஷன் கவுல், சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக மாற்றலாகிச் சென்றுவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அய்யாத்துரை, மனுதாரர் யானை ராஜேந்திரன் உட்பட பலர் ஆஜராகினார்கள். அப்போது, ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அறிக்கையாக தாக்கல்செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.

அப்போது, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், ‘கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து தமிழகத்தில் 3வது முதலமைச்சர் வந்துவிட்டார். ஆனால் இதுவரை ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக வீடுகளையும் நிலத்தையும் விற்பனை செய்ய முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். அதேநேரம், இந்த ஐகோர்ட் தடையை அகற்றவும் இல்லை. தமிழக அரசு திட்டத்தை உருவாக்கவும் இல்லை’ என்று கூறினார்.

அதற்கு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், ‘இந்தப் பிரச்னைக்கு இன்றே முடிவு கட்டலாம். அரசு நிலை குறித்து விளக்கம் கேட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்கலாம்’ என்று கருத்துக் கூறினார்.

மேலும் நாடு முழுவதும் நகரமயமாக்கல் என்பது விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதேநேரம் வீட்டு மனைகள், அந்த மனைகள் உள்ள சாலைகள் எல்லாம் விதிமுறைப்படி உருவாக்க வேண்டும். சாலைகள் எல்லாம் குறுகியதாகவும், விதிமுறைகளை மீறியும் இருந்தால் என்ன செய்வது?’ என்று நீதிபதி கருத்து கூறினார்.

அப்போது நடந்த வாதத்தின்போது, நீதிபதி மகாதேவன், ‘தமிழக அரசு ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அறிக்கையை தாக்கல்செய்ய வேண்டும். அந்தத் திட்டத்தை உயர்நீதிமன்றம் பரிசீலித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்கும். அதுவரை, பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது’ என்று கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து கூடுதல் அட்வகேட் ஜெனரல், ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘தமிழக அரசு 4 வாரத்துக்குள் ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 28ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதுவரை, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவையும் நீட்டிக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!