Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 10 March 2017

"NET"தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்.

கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட அறிவியல் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் உதவி பேராசி ரியர் பணியில் சேருவதற்கு மத்திய தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நடத்தும் ‘நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இத்தேர்வுக்கு ஆன்லைனில் (www.csirhrdg.res.in) விண்ணப் பிக்க கடைசி நாள் மார்ச் 7-ம் தேதி யுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் மார்ச் 21-ம் தேதிக்குள் அனுப்ப வேண் டும் என்று சிஎஸ்ஐஆர் அறிவித்துள்ளது. நெட் தேர்வுக் கான பாடத்திட்டமும், மாதிரி வினாத்தாளும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அம்மா கல்வியகத்தில் இணைந்த மாணவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது: ஓபிஎஸ்-க்கு குவியும் பாராட்டு, நன்றி

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி வைத்த அம்மா கல்வியகம் இணையதளத்தில் இணைந்த மாணவர்கள், இளைஞர்கள் எண்ணிக்கை 9 நாட்களில் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
சசிகலாவின் தலைமையை எதிர்த்து, அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ‘அம்மா கல்வியகம்’ (www.ammakalviyagam.in) எனும் இலவச ஆன்லைன் கல்வி இணையதளத்தை கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கிவைத்தார். இந்த இணையதளம் ஜெயலலிதாவின் ஒப்புதலுடன், அதிமுகவின் அப்போதைய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆஸ்பயர் சுவாமிநாதனால் உருவாக்கப் பட்டது. ஓராண்டுக்குப் பிறகு, இணையதள வடிவமைப்பு முடிந்து, ஓ.பன்னீர் செல்வத்தால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த இணையதளத்தில், பிளஸ் 2 மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்களுக்கும், ஐஐடி நுழைவுத் தேர்வுக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப் பட்டது.இந்த இணையதளம் தொடங்கி 9 நாட்களான நிலையில், நேற்று காலை நிலவரப்படி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் இதில் இணைந்துள்ளதாக, ஓபிஎஸ் அணியின் தகவல் தொழில் நுட்ப பிரிவைச் சேர்ந்த ஆஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியபோது, ‘‘ஐஐடி ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சியில் 8,500 பேர் சேர்ந்துள்ளனர். பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களுக்கான சந்தேகங்களை 24 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். மற்றவர்கள் வேலைவாய்ப்புக்கான இலவச பயிற்சியில் சேர்ந்துள்ளனர்.

9 நாட்களிலேயே இந்த இணையதளம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இ-மெயில், செல்போன் வாயிலாக தொடர்புகொண்டு ஏராளமான பெற்றோர் நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர். கோவில்பட்டியை சேர்ந்த ஒரு மாணவனின் தாய், பிளஸ் 1 படிக்கும் தன் மகனுக்கு இலவசமாக ஐஐடி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு உருக்கமாக நன்றிதெரிவித்துள்ளார்’’ என்றார்.

National Talent Search Examination (NTSE) Nov 2016 - Result published.

...http://www.dge.tn.gov.in/

TRB - TET Selected Candidates Merit List Published Now !!

Check your Online Updation
http://tetupdation.examsonline.co.in/

தேசிய திறனாய்வு தேர்வு : இன்று வெளியாகுது 'ரிசல்ட்'

பத்தாம் வகுப்புக்கான தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.பத்தாம் வகுப்பு மாணவர்கள், உயர் கல்வி படிக்க, மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. 
இதற்கு தேசிய திறனாய்வு தேர்வு, மாநில அளவிலும், பின், தேசிய அளவிலும் நடத்தப்படுகிறது.மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல், தமிழகம் முழுவதும் நடந்தது. 6,580 பள்ளிகளை சேர்ந்த, 1.55 லட்சம் பேர் பங்கேற்றனர்.இவர்களுக்கான தேர்வு முடிவு, இன்று பிற்பகல், 2:00 மணிக்கு வெளியாகிறது.'இதன் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணைய தளத்தில், அறிந்து கொள்ளலாம். மாநில அளவில் தேர்வு செய்யப்படுவோர், மே, 14ல் நடக்கும், தேசிய தேர்வில் பங்கேற்கலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

'TET' தேர்வு மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு.காலை, 10:00 மணி முதல், மார்ச் 20, இரவு, 10:00 மணி வரை, ஆன்லைனில், சுய விபரங்களை திருத்தம் செய்யலாம்.

டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியல், சுய விபரங்கள் இன்று வெளியாகின்றன. தமிழகத்தில், 2012 முதல், 2014 வரை, 'டெட்' தேர்வு முடித்தோர், தங்களுக்கு பணி நியமனம் கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பில் இருந்தனர். 
அவர்களின் எதிர்பார்ப்பைநிறைவேற்றும் வகையில், 'காலியாக உள்ள, 1,111 ஆசிரியர் பணியிடங்களுக்கு, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்நியமிக்கப்படுவர்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது.

அதற்கேற்ற வகையில், ஏற்கனவே, 'டெட்' தேர்வு முடித்தோரின் மதிப்பெண் பட்டியலுடன், சுய விபரங்கள், இன்று, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியாகின்றன.

தேர்வர்கள், இன்று காலை, 10:00 மணி முதல், மார்ச் 20, இரவு, 10:00 மணி வரை, ஆன்லைனில், சுய விபரங்களை திருத்தம் செய்யலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

பணிபுரியும் பெண்களுக்கு பிரசவ கால விடுப்பை அதிகரிக்கும் மசோதா நிறைவேறியது.

இந்திய மகப்பேறு உதவிச்சட்டம் 1961–ன் படி பணிபுரியும்பெண்களுக்கு12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகைசெய்யப்பட்டு உள்ளது. இந்தகால அளவை 26 வாரங்களாகஉயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக மேற்படிசட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுஉள்ளது.இதற்கு வகை செய்யும் ‘மகப்பேறு உதவி திருத்த மசோதா–2016’,கடந்த ஆண்டு டெல்லி மேல்–சபையில் தாக்கல் செய்யப்பட்டுநிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து இந்த மசோதா நேற்றுபாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இதை தாக்கல் செய்த மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, பெண்களின் பேறுகால விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக (2 குழந்தைகளுக்கு) உயர்த்தப்படும் என்று அறிவித்தார். 10 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தும் என்று கூறிய மந்திரி, இதன் மூலம் சுமார் 18 லட்சம் பெண் பணியாளர்கள் பயன்பெறுவர்என்றும் தெரிவித்தார்.

இந்த மசோதா உறுப்பினர்களின் ஆதரவோடு பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

16 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரதம்

பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரம் பேர், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.பகுதி நேர ஆசிரிய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகி, ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 
ஐந்து ஆண்டுகளுக்கு முன், அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல், வாழ்க்கை கல்வி, கட்டடக்கலை மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட, எட்டுபிரிவுகளில், 16 ஆயிரத்து, 549 பேர் பகுதி நேர பயிற்றுனர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தொகுப்பூதியத்தில், பல ஆண்டுகளாக, இவர்கள் குறைந்த சம்பளம் பெறுகின்றனர். எனவே, பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யக் கோரி, இன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உண்ணா விரத போராட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஓய்வூதிய திட்ட நிபுணர் கமிட்டி: 19 நாள் ஆயுளுக்கு அரசாணை.

ஓய்வூதிய திட்டம் தொடர்பான நிபுணர் கமிட்டிக்கு, 19 நாட்கள் மட்டுமே அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மத்திய அரசு பரிந்துரைப்படி, தமிழகத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டமான, சி.பி.எஸ்., திட்டம், 2003ல் அறிமுகமானது. இதில், 2003க்கு பின், பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டனர்.இந்தத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் கொண்டு வரக்கோரி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய, 2016 மார்ச்சில் நிபுணர் கமிட்டியை தமிழக அரசு நியமித்தது. பின், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கமிட்டியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அப்படி நீட்டிக்கப்பட்ட கமிட்டியின் பதவிக்காலம், ௨௦௧௬ டிசம்பர், 25ல் முடிந்தது.

அதன்பின், இரண்டு மாதங்களாக எந்த பணியும் நடைபெறவில்லை. அத்துடன், கமிட்டியின் தலைவராக இருந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தஷீலா நாயர், பிப்., 7ல் பதவி விலகினார். இந்நிலையில், கமிட்டி யின் பதவி காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, மார்ச், 6ல் தமிழக அரசு உத்தரவிட்டது. கமிட்டியின் பதவிக்காலம், மார்ச், 25ல்முடிவடைய உள்ள நிலையில், 19 நாள் ஆயுளுக்காக ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இடையில், 70 நாட்கள் வரைவீணாகி உள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஒவ்வொரு முறையும், நிபுணர் கமிட்டியின் பதவி காலம் தாமதமாக நீட்டிக்கப்படுகிறது. அதனால், எந்த முன்னேற்ற மும் ஏற்பட்டதில்லை. தொடர்ந்து வழங்கப்படும் கால நீட்டிப்பு, ஆசிரியர்களின் நம்பிக்கையை குறைப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வு : மாணவர்களை குழப்பிய 'நான்'

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளுக்கு, நேற்று தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள் எளிமையாகவும், சிந்தித்து பதில் எழுதும் வகையிலும் இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். 
ஒரு மதிப்பெண்ணுக்கான, 20 வினாக்கள் தரமாக தயாரிக்கப்பட்டிருந்ததாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டி தேர்வுக்குரிய, வினாத்தாள் போல இருந்தது. இலக்கண பகுதியில், 10 மதிப்பெண்களுக்கு, கடினமான வினாக்கள் இடம்பெற்றன. வினாத்தாளில், 28வது வினாவில்,ஆசிரியப்பாவின் இலக்கணம் குறித்து கேட்கப்பட்டிருந்தது. இந்த வினா, இதற்கு முன் தேர்வுகளில் இடம்பெறாத புதிய வினாவாக இருந்தது. ஒரு மதிப்பெண்ணில், 'நான் தமிழ் புத்தகம் படிக்க வேண்டும்' என்ற வார்த்தைக்கு, வேற்றுமை உருபு கண்டுபிடிக்குமாறுகேட்கப்பட்டிருந்தது. இதற்கு வேற்றுமை உருபாக, 'நான்' என்பதை, 'எனக்கு' என, மாற்றி எழுத வேண்டும். ஆனால், பல மாணவர்கள், 'நான் தமிழ் புத்தகத்தை படிக்க வேண்டும்' என, எழுதியுள்ளனர். இவ்வாறு மாணவர்கள் கூறினர்.

தமிழ் ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழ் புத்தகத்தின் மொழி திறன் பயிற்சியில், 'நான் மழையில் நனைவது பிடிக்கும்' என்ற வார்த்தை, 'எனக்கு மழையில் நனைவது பிடிக்கும்' என, கூறப்பட்டுள்ளது. இதன்படி, 'நான் தமிழ் புத்தகம் படிப்பது பிடிக்கும்' என, வினா இடம்பெற வேண்டும்.ஆனால், 'நான் தமிழ் புத்தகம் படிக்க வேண்டும்'என, வினாவின் வரிகள் மாறியுள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். அதனால், மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ் பாடத்திற்கு முன்னுரிமை கோரி தமிழாசிரியர்கள் நாளை போராட்டம்.

அரசு உயர்நிலை பள்ளிகளில், தமிழ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழக தமிழாசிரியர் கழகம், நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.இது குறித்து, தமிழக தமிழாசிரியர் கழக தலைமை நிலைய செயலர் மதியழகன் கூறியதாவது:
தாய்மொழியான தமிழில், அனைத்து மாணவர்களும் தடுமாற்ற மின்றி பேசவும், எழுதவும், பயிற்சி அளிக்கும் வகையில், பள்ளிகளில் தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். தற்போது, 10ம் வகுப்பு வரையுள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில், 300க்கும் மேற்பட்ட தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில், அரசாணை, 266யை திருத்தி, தமிழ் பாடத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில், தமிழக மாணவர்கள், தேர்வுக்கு நன்றாக தயாராகும் வகையில், முதல் தாளுக்கும், இரண்டாம் தாளுக்கும் இடையே விடுமுறை அளிக்க வேண்டும்.

விடைத்தாள் திருத்தும் போது, ஆசிரியர்களுக்கு தேவையானஇட வசதிகளை செய்து தருவதுடன், விடைத்தாள்களை குறைந்த எண்ணிக்கையில் வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட, 12 கோரிக்கைகளை வலியுறுத்தி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!