Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 11 March 2017

RTI - B.Sc., B.Ed., முடித்த பின் B.A., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் TNTET (ஆசிரியர் தகுதித் தேர்வில்) தேர்ச்சி பெற்றபின்னர் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் - TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) RTI தகவல்

TRB - 1,111 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: பாடவாரியாக காலியிடங்கள் விவரத்தை வெளியிடுமாறு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை

ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 
அந்த வகையில், முந்தைய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும், முன்பு குறிப்பிட்ட தகவல்களை உறுதி செய்துகொள்ளவும் நேற்று சிறப்பு வசதி செய்யப்பட்டது.அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வு வாரிய இணையதளத் துக்கு (www.trb.tn.nic.in) சென்று விண்ணப்ப எண் அல்லது பெயர் மற்றும் பிறந்த தேதியைக் குறிப் பிட்டு தேவையான விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.கூடுதல் கல்வித்தகுதி, அண்மை யில் பிஎட் முடித்திருந்தால் அதன் மதிப்பெண், தமிழ் வழியில் படித்திருந்தால் அதுபற்றிய விவரம், புகைப்படம், டிஜிட்டல் கையெ ழுத்து உள்ளிட்ட விவரங்களையும் பதிவேற்றம் செய்யலாம்.

இவ் வாறு ஆன்லைனில் அனைத்து விவ ரங்களையும் உள்ளீடு செய்த பிறகு அதை ஒரு பிரின்ட் அவுட் எடுத்து ஒப்புகைச் சீட்டுபோல வைத்துக்கொள்ளுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் காகர்லா உஷா அறிவித்துள்ளார்.விவரங்கள் ஆன்லைனில் பதி வேற்றம் செய்யப்பட்டதும், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாடவாரியாக காலியிடங்கள் குறித்த விவரத்தை வெளியிடுமாறு விண்ணப்பதாரர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியரைப் பற்றி ஆறாம் வகுப்பு மாணவியின் பேச்சு

புதிய கல்வி அமைச்சரை அணுக முற்பட்டுள்ள தமிழக ஆசிரியர் அமைப்புகள் - TNTET நிபந்தனை ஆசிரியர்களுக்கு கரங்கள் அளித்து தொடர் செயல்பாடுகள்..

தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு உதவ முன் வந்து அவர்களின் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்தில் எடுத்து செல்கின்றன.

அவர்களின் கடிதங்களில்,

மாண்புமிகு  தமிழக முதல்வர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்று மக்கள் மனதில் நல்ல நிலையில் நற்பெயர் கொண்ட தமிழக பள்ளிக் கல்வித் துறையின் புதிய கல்வி அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள மதிப்பும் மேன்மையும் மிக்க திரு. செங்கோட்டையன் ஐயா அவர்களுக்கு TET நிபந்தனை ஆசிரியர்களின் சார்பில் மனமுவந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

23/08/2010க்குப் பிறகு ஆசிரியப் பணி பெற்று பணியில் உள்ள அனைவருக்கும் TET லிருந்து முழுவதும் விலக்கு வேண்டி இந்த பதிவு.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 23/08/2010க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

இதை முறையே தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட வாரியாக பல சிக்கலான நிலைகள் ஏற்பட்டன.

காரணம் தமிழகத்தில் 15/11/2011 ல் தான் இது தொடர்பான அரசாணை வெளிவந்தது.

முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் வரை ஆசிரியர் பணி நியமனங்களிலில் (TET கட்டாயம் பற்றிய அறிவிப்பு இல்லை)  தமிழக அரசின் முறையான நடைமுறைகளின் அடிப்படையில் அனைத்து வகை பள்ளிகளிலும் பணி நியமனங்கள் நடைபெற்றன.

(23/08/2010 முந்தைய தேதியிட்ட அன்றைய நடுவண் அரசின் அரசாணை அடிப்படையில்)

நாங்கள் பணி நியமனம் பெற்ற நாளிலிருந்து இன்று வரை பணிப் பாதுகாப்பு இன்றி அரசின் சலுகைகள்  அரைகுறையாக பெற்றும் வளரூதியம் ஊக்க ஊதியம் போன்ற அடிப்படை பணப்பலன் கூட இல்லாத சூழலில் பணியில் உள்ளோம்.

காரணம் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கட்டாய ஆசிரியர் தகுதித் தேர்வும் அதனைச் சார்ந்த நிபந்தனைகளும்.

கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்டும் எதிர் வரும் TNTET, எங்களின் இறுதி நாட்கள் அமைய வாய்ப்பு இருப்பதாக  அரசாணை எண் 181 கூறுவது மேலும் எங்களுக்கு வாழ்க்கை பற்றிய பயத்தை தோற்றுவிக்கிறது.

சுமார் பத்தாயிரம் ஆசிரியர்களுக்கும் மேலாக TET நிபந்தனைகளுடன் பணியில் இருந்த எங்களுள் தற்போது 80% ஆசிரியர்களுக்கு முழுவதும் TET லிருந்து விலக்கு கிடைத்து விட்டது.

(2010 மே மாதம் பதிவு மூப்பு மூலம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து பணி நியமனம் பெற்ற 50-60% ஆசிரியர்கள், சிறுபான்மையினர் பள்ளிகளில் நியமனம் பெற்ற 20-30% ஆசிரியர்கள் TNTET லிருந்து முழு விலக்கு பெற்றவர்கள் ஆவர்)

மீதமுள்ள (நாங்கள்) 20% ஆசிரியர்களில் பாதிபேர் கலப்பு திருமண முன்னுரிமையிலும், விதவைகளும், இராணுவ வாரிசுகளும், தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பு இனத்தைச் சார்ந்த பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்கள்.

கடைசியாக

மீதி மிக சொற்ப ஆசிரியர்கள் அரசு உதவி  பெறும் பள்ளிகளில் நிர்வாகங்களால் பலகட்ட போட்டி/ தகுதி/  நேர்காணல்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட  ஆசிரியர்களே.

கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக நீதிமன்றம் வழக்குகள் காரணமாக TET தேர்வுகள் நடைபெறவில்லை.

எங்களுக்கான பணிப் பாதுகாப்புக்கான முழு வாய்ப்புகளும் பறிபோன விரக்தியிலும் மன வருத்தங்களை வெளியே காட்டாமல் பள்ளிகளில் 100% சிறப்பாகவே ஆசிரியர் பணியாற்றி வருகின்றோம்.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் உள்ள எங்களைப் போன்ற TET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் செயல்பாடுகள் நடந்து வருகின்றன.

எதிர் வரும் TNTET எங்கள் கடைசி வாய்ப்பு என மிரட்டப் படும் சூழலில் தள்ளப்பட்டு உள்ளோம்.

( எதிர்வரும் )TET தேர்வு அறிவிப்பு வந்துள்ள நிலையில் இதுவே கடைசி வாய்ப்பு என மாவட்ட கல்வி அலுவலகங்கள் வாயிலாக பெற்றுள்ள கடிதங்கள் மேலும் சிக்கல்களை மனதளவில் அதிகமாகவே ஏற்படுத்தி உள்ளன.

தற்போதைய சூழலில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கும் TNTET எழுதுவதில் பணியில் உள்ள எங்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்து பயில நடைமுறைச் சிக்கல்கள் பல உள்ளன.

அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணாக்கர்களின்  திருப்புதல் , இதர வகுப்புகளின் மாணாக்கர்களின் தேர்வு, நிறைவு CCE பணிகள், பணியிடைப் பயிற்சிகள், கோடை  சிறப்பு வகுப்புகள்,  அரசு SSLC பொதுத் தேர்வு பணி, விடைத்தாள்கள் திருத்தம், உள்ளாட்சித் தேர்தல் பயிற்சி வகுப்புகள், தேர்தல் பணிகள் போன்ற பல பணிகள் எதிர் வரும் இரண்டு மாதங்களில் எமக்கு சவாலாக அமைய உள்ளது தாங்கள் அறிந்ததே.

எங்களுக்கு TET லிருந்து முழு விலக்கு அளிக்கும் பட்சத்தில் கல்விப் பணியில் முழுவதும் எங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் மேலாக மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் எங்களின் தலைமுறையே நன்றிக்கடன் பட்டிருக்கும் என்பது உண்மை.

எதிர் வரும் சட்டமன்ற கூட்டத்தில்

மிக குறைந்த அளவிலான TET நிபந்தனைகளுடன் பணிபுரியும் ஆசிரியர்களாகிய எங்கள் வாழ்வு  மற்றும்  பணிப்  பாதுகாப்பு, மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு கல்வி அமைச்சர் ஆகிய உங்கள் கருணைக் கரங்களில் தான் உள்ளன.

சிறுபான்மையினர் பள்ளி TET  நிபந்தனை ஆசிரியர்களுக்கு வழங்க உள்ளது போல எங்களுக்கும் கோடை விடுமுறையில் சிறப்புப் புத்தாக்கப் பயிற்சி அளிக்க ஆவண செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுகோள் விடுக்கிறோம்.

எங்கள் வாழ்வாதாரம் தொடர்பான இந்த நிலையினை தாங்கள் சற்றே உள்ளார்ந்து ஆராய்ந்து பார்த்து எங்கள் நிலையை சீர் தூக்கி பார்த்து, கவனத்தில் எடுத்து (இந்த) சுமார் 1500 ஆசிரியர் குடும்பங்கள் நிம்மதியாக வாழ நடவடிக்கை எடுக்க கல்வித் துறை அமைச்சகம் மூலம் ஆவண  செய்யுமாறு மிகவும் பணிவன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறோம் - என கூறும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் குரல்களாக பல்வேறு தமிழக  ஆசிரியர் சங்கங்கள் உதவ முன் வந்து உள்ளன.

இன்டர்நெட் கட்டணம்: 'டிராய்' புது திட்டம்

மொபைல் போன், இன்டர்நெட்கட்டணத்தைக் குறைக்க, தொலை தொடர்புஒழுங்கு முறை ஆணையமான, 'டிராய்'அதிரடி திட்டம் வகுத்துள்ளது.

நாடு முழுவதும், 100 கோடி பேர்மொபைல் போன்கள் பயன்படுத்திவருன்றனர். அவர்களில், 20 கோடி பேர்,இன்டர்நெட் இணைப்பு உள்ள, 'ஆண்ட்ராய்டு'வகை போன்களை பயன்படுத்துகின்றனர்.எனினும், பெரும்பாலானோர், அதிககட்டணம் காரணமாக, இன்டர்நெட்உபயோகத்தை குறைத்து வருகின்றனர்.

மேலும், '3ஜி, 4ஜி' இன்டர்நெட்கட்டமைப்புக்கு, அதிக முதலீடு செய்ய,தனியார் நிறுவனங்கள் தயங்குவதால்,இன்டர்நெட் சேவையும் குறைவானவேகத்தில் கிடைக்கிறது. இது போன்றபிரச்னைகளை களைய, 'டிராய்'திட்டமிட்டுள்ளது. அதன்படி, பொதுஇடங்களில், இன்டர்நெட் இணைப்பு பெறபயன்படும், 'வை - பை, ஹாட் ஸ்பாட்'மையங்களின் எண்ணிக்கையைஅதிகரிப்பதற்காக, சிறு நிறுவனங்கள்மற்றும் தொழில் முனைவோருக்கு,உரிமங்கள் வழங்க முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம், இரண்டு காசு கட்டணத்தில்,ஒரு, 'எம்.பி., டேட்டா' கிடைக்கும். தற்போது, 10காசு செலவிட வேண்டியுள்ளது. மேலும், 'வை- பை' இணைப்பு கிடைக்க, தற்காலிக, 'பாஸ்வேர்டு' பெற வேண்டியுள்ளது. புதியதிட்டத்தில், இது போன்ற சிக்கல்கள்இருக்காது. இத்திட்டத்தால், கட்டணம்குறைவதுடன், மொபைல் நிறுவனங்களின்வழக்கமான இன்டர்நெட் சேவையில் உள்ளநெரிசல் குறைந்து, சேவையின் தரம் கூடும்.மேற்கண்ட பரிந்துரைகளுக்கு, மத்திய அரசுஒப்புதல் அளிக்கும் என, தெரிகிறது.

TRB - TET Online Updation எப்படி சரிபார்ப்பது?

ஆசிரியர் தேர்வு வாரியமானது தகுதித் தேர்வில் ஏற்கனவே (2012,2013,2014 SPECIAL ) தேர்ச்சி பெற்ற தகுதியான தேர்வர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர்களை நிரப்ப உள்ளது.

(i) ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம்பெற்றவர்கள்

(ii) ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகை தராதவர்கள்

(iii) பி.எட்., பயின்ற ஆண்டே ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அந்த கல்வியாண்டே பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும்

(vi) சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணித்தெரிவுக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதிபெற்றவர்கள் ஆகியோர்கள், மீளவும் வாய்ப்பு வழங்கவேண்டி விண்ணப்பித்துள்ளார்கள்.

ஆகவே,தற்போது Paper II-ல் தேர்ச்சி   பெற்ற (Selected Candidates)  தகுதியான தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- II பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். பதிவெண் நினைவில் கொள்ளாதவர்கள் பெயர் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். மேற்கண்ட நாடுநர்கள் தங்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளவும்.

நீங்கள் இதில் இடம் பெற்றிருந்தால் தேர்வானதாக கருதக்கூடாது.இறுதிப் பட்டியல் வெளியிடும் முன்பு நாடுநர்கள் (Candidates) தங்களின் ஒருசில விவரங்களை திருத்தம் மேம்படுத்தவேண்டும் எனில் online -லேயே மேற்கொள்ளலாம். நாடுநர்கள் தங்களின் அசல் ஆவணங்களைக்கொண்டு விவரங்களை மீள சரிபார்த்து புகைப்படம் மற்றும் கையொப்பமிட்டு உறுதிச் சான்றினை தரவேண்டும்.

மேற்கண்ட விவரங்களை 10.03.2017 காலை 10.00 மணி முதல் 20.03.2017இரவு 10.00 மணிவரை இணையதளத்தில் சரிபார்த்து, திருத்தம் தேவை எனில் டிடேiநே-ல் மேற்கொள்ளலாம். இணையதளம் மூலமாகவே திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தேர்வர்கள்

1. Name of the Candidate

2. Gender

3. Roll No.

4. TET Marks

5. Optional Subject

6. Community

7. Subject Studied in U.G Degree

8. Language I opted in TNTET Paper - II

9. Person Studied UG Degree & B.Ed in Tamil Medium

From the above 9 Points Eligible and Ineligible Candidate cannot be changed at any level. For the absent Candidate Point No 7. Subject Studied in U.G Degree can be entered and the Mark Details be entered in Column 14 Only.

10.   Date of Birth

11a. Have you acquired any additional UG Degree ?

11b. Have you Studied additional UG Degree & B.Ed in Tamil

        Medium ?

12.   PH (O) / VI (V) Reservation / N.A (Not Applicable)

13a. Whether studied B.Ed as Special Education ?

14.   Mark Details

From the above Points No. 10 to 14 Candidate can be updated their entries.

ஆகியவற்றில் திருத்தம் இருந்தால் சரிசெய்து கொள்ளவும்.

மார்ச் 20க்கு பின்பே தேர்வானவர்களின் இறுதிப் பட்டியல் (Final Merit List) வெளியிடப்படும்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வு: உத்தேச அட்டவணை வெளியீடு.

அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான (2017-18) பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை தயாரித்துள்ளது. 
அதன் விவரம் வருமாறு:

* பொது இடமாறுதலுக்கான விண்ணப்பத்தை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சமர்ப்பித்தல் - மார்ச் 31

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்இடமாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 21

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்பதவி உயர்வு - மே 22

* அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்மாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 23

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 24

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே25

* அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு - மே 26

* உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள்மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 27

* உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள்மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 28

* பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்) - மே 29

* பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - மே 30

* இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பா சிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு - மே 31

உத்தேச காலஅட்டவணையின் படி, இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தொடர்பான பணிகளை மே 31-ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது

TNTET - ஆசிரியர் பணிக்கு TRB ஆதார் எண் சேகரிப்பு.

அரசு பள்ளிகளில், 1,111 ஆசிரியர்கள் நியமனத்துக்கு, 'ஆதார்' எண் உட்பட, ஏழு வகையான விபரங்களை பதிவு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அவகாசம் அளித்துள்ளது.
அரசு பள்ளிகளில், 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், கல்வித் தகுதி அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்; அதன்படி, நியமனம் நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்து உள்ளது. இந்நிலையில், தரவரிசை பட்டியலுக்கான சுயவிபரங்களை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது.

இதில், தேர்வரின் ஆதார் எண் கேட்கப்பட்டுள்ளது. பிறந்த தேதி, கூடுதலாக பெற்ற பட்டப் படிப்பு; தமிழ் வழி பி.எட்., படிப்பு; மாற்றுத்திறனாளிகள் குறித்த தகவல்; சிறப்பு கல்வியில், பி.எட்., படிப்பு; பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண் உள்ளிட்டவற்றை, தேர்வர்கள் திருத்தம் செய்யலாம் என, கூறப்பட்டு உள்ளது. தேர்வரின் சமீபத்திய புகைப்படம், 'டிஜிட்டல்' கையெழுத்து போன்றவற்றையும், பதிவேற்றம் செய்ய வேண்டும். 'ஆன்லைன்' வழி திருத்தங்களை, மார்ச், 20 இரவு, 10:00 மணிக்குள் முடிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

TET, ஆலோசனை நிகழ்ச்சி : மதுரையில் நாளை தினமலர் நடத்துகிறது

மதுரையில் தினமலர் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) ஆலோசனை முகாம், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில், நாளை (மார்ச் 12) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.

ஆசிரியர் பட்டயப் பயிற்சி மற்றும் இளங்கலையுடன் பி.எட்., முடித்த பட்டதாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்த இத்தேர்வு, வரும் ஏப். 29ல் தாள் 1ம், 30ல் தாள் 2ம் நடக்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளது. தற்போது விண்ணப்ப வினியோகம் நடக்கிறது.இத்தேர்வுக்கு தயாராகி வரும், ஆயிரக்கணக்கான தேர்வர்கள் நலன் கருதி, தினமலர் நடத்தும் இந்த ஆலோசனை முகாமில், தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி, எந்தெந்த பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும் என்பது குறித்து, பாடங்கள் வாரியாக சிறப்பு வல்லுனர்கள் பல்வேறு ஆலோசனை வழங்குகின்றனர்.

முகாமில், 'பொது அறிவு' பாடம் குறித்து மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் பேசுகிறார். 'தமிழ்' பாடம் தொடர்பாக மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உதவி பேராசிரியர் செந்தில்குமார், 'ஆங்கிலம்' குறித்து ஓய்வுபெற்ற ஆசிரியர் வெங்கடாசலம், 'குழந்தை மேம்பாடு' தொடர்பாக மதுரை டி.வி.எஸ்., கல்வியியல் கல்லுாரி முதல்வர் பிரகாஷ் ஆகியோர் பேசுகின்றனர். அனுமதி இலவசம்.

வணிகவியல் தேர்வு வினாத்தாளில் பிழை

பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று வணிகவியல், புவியியல் மற்றும் மனை அறிவியல் பாடங்களுக்கு, தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள்கள் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். 
வணிகவியல் தேர்வில், பி பிரிவில், 41வது கேள்வியாக, தரவரிசை கோட்பாடு பற்றி கேட்கப்பட்டிருந்தது. நான்கு மதிப்பெண்ணுக்கான இந்த கேள்வியில், தரவரிசையில், கூடுதலாக, 'ச்' சேர்க்கப்பட்டு, வினாத்தாள் பிழையாக இருந்தது. ஆனாலும், மாணவர்கள் பிழையை தெரிந்து கொண்டு, கேள்வியை சரியாக புரிந்து பதில் எழுதினர். வினாத்தாள் குறித்து, வேலுாரை சேர்ந்த, வணிகவியல் ஆசிரியரும், தொழிற்கல்வி ஆசிரியர் கழக நிர்வாகியுமான, ஜனார்த்தனன் கூறுகையில், ''பிளஸ் 2 தேர்வு வினாத்தாளில் பிழைகள் இருக்கக் கூடாது.

எதிர்காலத்தில், இந்த பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும்,'' என்றார்.இதற்கிடையில், நேற்றைய தேர்வுகளில், 14 பேர் முறைகேடு புகாரில் பிடிபட்டதாக, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. 

தமிழக அரசுப்பள்ளிகளில் சமச்சீர்க் கல்வி பாடத்திட்டம் மூலம் கணினி அறிவியல் பாடப் புத்தகங்கள் அச்சடிப்பது தொடர்பான விவரங்கள்இல்லை என்று பள்ளிக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது

தமிழக அரசுப்பள்ளிகளில் சமச்சீர்க் கல்வி பாடத்திட்டம் மூலம் கணினி அறிவியல் பாடப் புத்தகங்கள் அச்சடிப்பது தொடர்பான விவரங்கள்இல்லை என்று பள்ளிக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
இதன் மூலம்ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளி, கணினி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் இருட்டில் தள்ளப்பட்டுள்ளது என்று புகார் எழுந்துள்ளது.


இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு பி.எட். கம்ப்யூட்டர் சயின்ஸ் வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் குமரேசன் ,"கணினி அறிவியல் கல்வியை தமிழக அரசு தமது கட்டுப்பாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் கற்றுத்தருவதில் மிகுந்த மெத்தனமான நிலையில் உள்ளது.

தமிழகம் முழுவதும் 39 ஆயிரத்து 19 கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கிறோம்.நாங்கள் அனைவரும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள். கடந்த 1992-ம் ஆண்டு முதல் இப்போதுவரை அரசுப் பள்ளிகளில் வேலை கிடைக்கும் என்று காத்திருக்கிறோம். பலனில்லை. கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எங்களுக்கு அரசுப்பள்ளிகளில் வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் அது தொடங்கிய வேகத்திலேயே முடங்கிப்போனது. அதனையடுத்து நாங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தினோம்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் அனைவரிடமும் மனுக்கள் அளித்தோம்.பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடமும் 30க்கும் மேற்பட்ட முறை மனுக்கள் அளித்துள்ளோம். நேரிலும் வலியுறுத்தினோம். அதோடு தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவிலும் நேரில் எங்கள் சங்கம் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் பல முறை மனுக்கள் அளித்துள்ளோம். ஆண்டுகள் பல கடந்தும் இன்னமும் எங்களுக்கு உரியதீர்வு அரசால் வழங்கப்படவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் தவிக்கிறோம்.  மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கியும் மாநில அரசு கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தாமல் காலம் கடத்தி வருகிறது.

 சமச்சீர் கல்வி திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 21 லட்சம் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 21 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் நிலையில் மாணவர்கள் அதன் மூலம் முழுமையான கல்வியைப் பெற இயலாத நிலையில் உள்ளனர். மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா என்கிறது. ஆனால் தமிழகத்தின் கணினி அறிவியல் பாடத்திட்டம் இருட்டில் உள்ளது." என்று கொந்தளித்தார்.

மேலும் தொடர்ந்த குமரேசன்,"வேலையில்லா கணினி ஆசிரியர்களுக்கு எப்போதுதான் விடிவு கிடைக்கும் என்பது தெரியவில்லை. இந்த ஓராண்டில் கல்வித்துறைக்கு அமைச்சர்கள் மாற்றம் பல முறை நடந்துள்ளது. முதல்வர் மாற்றமும் 3 முறை நடந்துள்ளது. ஆறேழு ஆண்டுகளாக பள்ளிக்கல்வித்துறைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சபீதாவும் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் எங்களின் வாழ்க்கை மட்டும் இன்னமும் மாறவில்லை. எனவே இதன் விடை தேடும் முயற்சியாக, கடந்த ஜனவரி மாதம் எங்கள் தரப்பில் இருந்து தகவல் அறியும்உரிமைச் சட்டம் மூலம், பள்ளிக்கல்வி இயக்ககத்துக்குக் கேள்விகள் அனுப்பியிருந்தோம். அவற்றுக்குப் பதில் அனுப்பிய தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் 'சமச்சீர் கல்வித்திட்டத்தின்படி 6 முதல் 10-ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சடிப்பது சார்பான விவரங்கள் இவ்வலுவலகத்தில் இல்லை' என்று பதிலளித்துள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

உடனடியாக இந்த விஷயத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் செயலாளரும் கவனம் செலுத்திட வேண்டும்" என்று தெரிவித்தார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!