Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 24 March 2017

TET' தேர்வு கோடை விடுமுறையில் நடத்தப்படுமா?

ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது. 
இத்தேர்வு எழுத காத்திருக்கும் பலர், தற்போது, தனியார் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தேர்வு காலம் என்பதால், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதிலும் மும்முரமாக உள்ளனர். இதனால், இவர்களால்மாலை வெகு நேரத்திற்கு பின்பே, வீடு திரும்ப முடிகிறது; தேர்வுக்கு தயாராக நேரம் கிடைப்பதில்லை.குறிப்பாக, பெண் விண்ணப்பதாரர்கள், வீட்டு வேலையிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், தினமும் ஒரு மணி நேரம் கூட, தேர்வுக்கு தயாராக முடிவதில்லை.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் சிலருக்கோ, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், வேலையில் தொடர முடியும் என்ற நிலை. இதனால், முழு நேர பயிற்சியில் ஈடுபட்டுள்ள, பிற தேர்வர்களுடன் போட்டியிட முடியாமல் தவிக்கும் பெண் ஆசிரியர்கள், தேர்வை கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்.மேலும், 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, தேர்வர்கள் வரிசையில் காத்து நின்றும், 'ஜெராக்ஸ்' எடுக்க அலைந்தும் நேரத்தை வீணடிக்க வேண்டியதாயிற்று.இதை தவிர்க்க, 'டி.என்.பி.எஸ்.சி., போல், ஆன்லைன் வாயிலாகவிண்ணப்பிக்கும் நடைமுறையை, அடுத்தாண்டு முதலாவது அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

அறிவியல் வினாக்கள் எளிமை : 'சென்டம்' வாய்ப்பு அதிகம்

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாக்கள் எளிதாக இருந்ததால் ஏராளமான மாணவர் 'சென்டம்' எடுக்க முடியும், என மாணவிகள் கூறினர்.பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வுநேற்று நடந்தது.
அனைத்து பகுதி வினாக்களும் எளிதாக இருந்ததால் இக்கல்வியாண்டில் 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும், என தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர்.

ஆர்.சந்தோஷ்சிவன், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர் நலச்சங்க மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்: பாடங்களை முழுமையாக படித்ததால் அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்க முடிந்தது. எந்த பகுதியிலும் கடின வினாக்கள் கேட்கப்படவில்லை. விரைவாக எழுதும் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் 40 நிமிடத்தை மிச்சப்படுத்தியிருக்கலாம். பள்ளியில் மாதிரி தேர்வு எழுதி பாடம் முழுவதும் மனப்பாடம் ஆனதால் சென்டம் உறுதி.

எம்.லேகாஸ்ரீ, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் வினாவில் 11 வது வினா மட்டும் புத்தகத்திற்கு உள் பகுதியில் இருந்து கேட்கப்பட்டதால் பதில் எழுதுவதில் சற்று சிரமம் இருந்தது. ஏனைய பகுதிகளில் அனைத்து வினாக்களும் எளிமை. படிப்பில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள் கூட 75 மதிப்பெண்களுக்கு அதிகம் எடுத்து விடலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள் சென்டம் எடுப்பது உறுதி.

எம்.ஷேக் அப்துல்லா, ஆசிரியர், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: இயற்பியல், உயிரியல், வேதியியல் என அனைத்து பிரிவுகளில் வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. புத்தகத்தை முழுவதும் படித்து தயாரான மாணவர்களுக்கு குழப்பம் தரும் வினாக்கள் எதுவும் இல்லை.மாதிரி தேர்வு எழுதி பார்த்து விடைகளை விரல் நுனியில் வைத்திருந்த மாணவர்கள் நிச்சயமாக 'சென்டம்' எடுப்பர். மெல்ல கற்கும் மாணவர் கூட 80 மதிப்பெண் எளிதாக எடுக்கலாம். கடந்தாண்டை விட இந்தாண்டு வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. இதனால் 'சென்டம்' எடுக்கும் மாணவர்கள்எண்ணிக்கையை கடந்தாண்டை விட அதிகரிக்கும்.

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு -மார்ச் 31-ஆம் தேதிக்குள் பணி நியமனம்

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அளவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 4,362 காலிப் பணியிடங்களை நிரப்பும் நோக்கத்தில், கடந்த 2015-ஆம் ஆண்டு மே 31-இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 
இத்தேர்வை மாநில அளவில் 8 லட்சம் பேர் எழுதினார்கள்.

இத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, ஒரு இடத்துக்கு 5 பேர் என்ற வீதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண்கள் பெறுவோருக்கு பணியிடம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிடாவிட்டால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறி வழக்குத் தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து கடைநிலைப் பணிகளுக்கு, நேர்முகத் தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், தேவை என்றால் எழுத்துத் தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றை மொத்தமாகக் கணக்கிட்டு இறுதி முடிவு அறிவிக்க வேண்டும் என 2015-ஆம் ஆண்டு ஆக.7-இல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியிடாமல் இருந்த எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை அரசு தேர்வு துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுதியோர் www.dge.tn.nic  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதில் தேர்வு பெறுவோருக்கு வரும் 31-ஆம் தேதிக்குள் பணி நியமனம் வழங்கப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொது இடங்களில் அசுத்தம் செய்தால் ரூ 5000 அபராதம்: உத்திரகாண்ட் அரசு!!

பொது இடங்களில் எச்சில் துப்பியோ அல்லது குப்பைகள் கொட்டியோ அசுத்தம் செய்தால் ரூ 5000 அபதாரம் அல்லது 6 மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என .உத்திரகாண்ட் அரசு எச்சரித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உத்திரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மாநில முதல்வராக திரிவேந்திரசிங் ரவாத் பதவியேற்றுள்ளார். பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் வகையில் தலைநகர் டேராடூனில் பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்களுக்கு அபதாரமாக ரூ 5000 அல்லது 6 மாதம் வரை ஜெயில் தண்டனை வழங்கப்படும் என அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, சுகாதார ஆய்வாளர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டே இருப்பார்கள். யாராவது அசுத்தம் செய்பவர்கள் தென்பட்டால் அவர்களிடம் இருந்து ‛‛ஸ்பாட் பைனா'' ரூ 5000 வரை வசூலிக்கப்படும் அல்லது சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து அசுத்தம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

பேப்பர் தட்டுப்பாடு: 'நோட் புக்' விலை உயர்வு...!!

பேப்பர் தட்டுப்பாடு காரணமாக 'நோட் புக்' விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.சிவகாசியில் தயாராகும் நோட்டுகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. பாட நோட் தயாரிப்பில் 20 க்கு மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு ஈடுபட்டுள்ளன.
மெட்ரிக், சி.பி.எஸ்.சி., பள்ளிகள், கல்லுாரிகளுக்கு தேவையான நோட்டுகள் இங்கே தயாரிக்கின்றனர். இந்தாண்டு வரலாறு காணாத வகையில் பேப்பர் தட்டுப்பாடு 
ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி முடக்கம் : நோட்புக் தயாரிப்பிற்கு பயன் படுத்தப்படும் மேப்லித்தோ, கிரிமோ பேப்பர் கடந்தாண்டுடிசம்பர் வரை ஓரளவிற்கு வெளிமாநில தனியார் மில்களிலிருந்து வரத்து இருந்தது. பிப்ரவரி, மார்சில்வரத்து சுத்தமாக இல்லை. பாராக்பூரில் இயங்கி வந்த ஒரு தனியார் நிறுவன பேப்பர் மில் உள்ளிட்ட இதர மில்கள் உற்பத்தியை நிறுத்தி உள்ளன. இதன் தாக்கம் பேப்பர் உற்பத்தியை அடியோடு முடக்கி உள்ளது. தமிழகத்தில் இயங்கும் அரசின் டி.என்.பி.எல்., நிறுவனமும் தண்ணீர் பற்றாக்குறையால் பேப்பர் உற்பத்தியை குறைத்து விட்டன. இதனால் வரலாறு காணாத வகையில் பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு டன்னிற்கு மாதம் 2 ஆயிரம் வரை பேப்பர் விலை ஏற்றம் பெற்று வருகிறது. இருந்தாலும் நோட்புக் அச்சடிக்கும் ஆலைகள் நிலையை சமாளிக்க பேப்பரை வாங்கி உற்பத்தியில் ஈடுபடுகின்றன .

பன்மடங்கு உயரும் : நோட் தயாரிப்பாளர்கள் நவம்பர், டிசம்பரில் பேப்பர் விலை உயர்வு ஏற்ப பள்ளி, கல்லுாரிகளில் ஆர்டர் பெற்று தயாரிப்பை துவக்குகின்றனர். ஆனால் இங்கு முதலுக்கே மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் சிறிய நோட்புக் தயாரிப்பாளர்கள் உற்பத்தியை கைவிட்டு ஆலையை பூட்டும்நிலைக்கு வந்துவிட்டனர். பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் இருக்கும் ஸ்டாக் பேப்பரை வைத்தே ஆர்டர் எடுத்து உற்பத்தியை நடத்தி வருகின்றன.இதனால் தற்போதைய நிலவரப்படி நோட்புக் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால் விடுமுறை முடிந்து ஜூனில் பள்ளி திறக்கும்போது நோட்புக்கின் விலை பன்மடங்கு உயர்ந்திருக்கும். இதற்கு உரிய தீர்வாக வெளிமாநிலங்களில் இருந்து பேப்பர் வரத்தினை அதிகப்படுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாதம் ஒரு விலை : சீமா நோட்புக் தயாரிப்பாளர் மாரிராஜன் கூறுகையில், “ வெளிமாநில தனியார் மில்களில் இருந்து பேப்பர் அனுப்புவதை நிறுத்தி விட்டனர். இதற்கு மூலப்பொருள் தட்டுப்பாடும் ஓர் முக்கிய காரணம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றால் நம் நாட்டின் உற்பத்தி தரம் அங்கு இல்லை. தட்டுப்பாடு காரணமாக பேப்பரின் விலை மாதம் ஒரு விலைக்கு ஏற்றம் பெறுகிறது. வாங்கும் விலை , உற்பத்தி செலவுக்கே கட்டுபடியாகாத நிலையால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, ” என்றார்.

TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் 8 லட்சம் பேர் !!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(டெட்) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி நாளானநேற்று (மார்ச், 23) வரை மொத்தம் 8 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

ஆசிரியர் பயிற்சி முடித்த 2 லட்சத்து 72 ஆயிரம் பேரும், பி.எட்., படித்த பட்டதாரிகள் 5 லட்சத்து 28 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். டெட் தேர்வு ஏப்.,29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் : பிரகாஷ் ஜவடேகர் !!

தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

தெரிவித்துள்ளார். நாமக்கல், நெல்லை, வேலூர் ஆகிய 3 இடங்களில் புதிதாக நீட் தேர்வு நடைபெறும் என்று ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலத்தில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்தியா முழுவதும் 80 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

LAB ASSISTANT RESULT PUBLISHED !!

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட 
வாரியாக என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.     http://dge1.tn.nic.in/                                           http://dge2.tn.nic.in/

NHIS - Additional Hospitals Added - GO issued

G.O..(Rt) No 199, Dated 21st March 2017 New Health Insurance Scheme, 2016 for the employees of Government Departments and other Organizations- Emplacement of Accredited Hospitals - Approval of additional hospitals and inclusion of additional specialties based on the recommendations of the Accreditation Committee - Notified - Orders - Issued.

CLICK HERE.....

ஆசிரியர்கள் கல்வி தகுதி - குழந்தைகள் கல்வி உரிமை சட்டத்தில் (RTE) திருத்தம் - மத்திய அரசு

2009–ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 4 முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி வழங்க வகை செய்கிறது. இந்த சட்டத்தின்படி, அவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கல்வி ஆணையம் வகுத்துள்ள குறைந்தபட்ச கல்வி தகுதியை 2015–ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் குறைந்தபட்ச கல்வி தகுதியை பெறுவதற்கான கால அவகாசத்தை வருகிற 2019–ம் ஆண்டு மார்ச் 31–ந் தேதி வரை, மேலும் 4 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு இன்று வெளியீடு.

4,384 பணியிடங்களை நிரப்ப சென்ற ஆண்டு நடை பெற்ற தேர்வுமுடிவுகள் இன்று வெளியிடப்படும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது 

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு இன்று

வெளியீடு.  4,384 பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

ஆர்.கே.நகர் இடைதேர்தல்: ஏப். 12 பொது விடுமுறை

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்.12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஏப்.12--ம் தேதி ஆர்.கே. தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக அறிவிப்பை தலைமை செயலாளர் வெளியிட்டார்.

தொடக்கக்கல்வி - 24.3.2017 அன்று நடைபெற இருந்த உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை ஒத்திவைப்பு

சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஒரே சீரான தேர்வு முறை.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தனது ஆளுகைக்கு உள்பட்ட பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல்

9-ஆம் வகுப்பு வரை படிக்கும்மாணவர்களுக்கு ஒரே சீரான தேர்வு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறையை மீண்டும் அமல்படுத்துவது என அண்மையில் முடிவெடுக்கப்பட்டது. 
இந்நிலையில், இப்பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய வகையிலான மதிப்பீட்டு முறையைக் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. தற்போதைய நிலையில், இந்தக் கல்வி முறையில் நிலவும் வேறுபாடுகள் காரணமாக மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாறும்போது பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக, சிபிஎஸ்இ பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை ஒரே சீரான தேர்வு முறை கொண்டு வரப்படவுள்ளது.

G.O.No.64 Dt: March 14, 2017 PENSION – New Health Insurance Scheme 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – Amendment to head of account – Orders – Issued.

CLICK HERE

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!