Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 28 March 2017

மூன்று நாட்களில் பாஸ்போர்ட் வேலூரில் புதிய மையம் துவக்கம்

வேண்டாம் வீட்டுப்பாடம்: பெற்றோரின் புதிய போராட்டம்

அரசுப்பள்ளிகளில் சம்மர் கிளாஸ் பள்ளிக்கல்வித்துறை அதிரடி

மூன்றாம் பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் வகுப்பு : 1 - 5 வகுப்புகளுக்கு மட்டும் தமிழ் வழி மட்டும்

CLICK HERE- TO DOWNLOAD 1st to 5th Std Tamil Medium Questions

பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு: நீதிமன்றம்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

தடை உத்தரவுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகளை மறுபதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 2016ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதிக்கு முன் வாங்கியிருந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்று தடை உத்தரவை தளர்த்தியுள்ளது.

தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் வைத்த கோரிக்கை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், பதிவு செய்யப்படும் நிலத்தில், சாலைக்கு 22 அடி இடம் விட வேண்டும் என்ற விதியை மீறக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சாலை, கழிவுநீர் குழாய் பதிக்க போதிய இடம் வசதி இல்லாத நிலங்களை முறைப்படுத்த போதிய கால அவகாசம் அளித்தும், அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் தொடர்பாக அரசின் கொள்கை முடிவை ஏப்ரல் 7ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

வழக்கின் பின்னணி:
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த பொது நல மனு விவரம்: விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி  விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர்.

இதனால் விளை நிலப்பரப்பு வெகுவாக குறைந்து விவசாயமும் பாதித்துள்ளது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இதுவும் முக்கியமான காரணம். சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முறையற்ற முறையில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், -விளை நிலங்களை வீட்டு மனைகளாக -லே-அவுட்- போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டிடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது- என்று உத்தரவிட்டது

தமிழகத்தில் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்?

உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தமிழகம் முழுவதும் நடந்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து தலை வர் பதவிக்கு முனியப்பா என்பவர் தாக்கல் செய்த வேட்புமனு நிரா கரிக்கப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று காலை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடந்தது.

அப்போது நீதிபதி, ‘‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நான் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு எந்த அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதா, இல்லையா? என்றும் கேட்டு தெரிவிக்க வேண்டும்’’ என்று மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.

பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.நெடுஞ்செழியன், ‘‘உள்ளாட்சி தேர்தலை நடத்தத் தேவையான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடக்கிறது’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘தமிழகத்தில் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்குமாறு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அவகாசம் வழங்கியுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இந்த வழக்கில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அன்றைய தினம் தெரிவிக்க வேண்டும்’’என்று உத்தரவிட்டார்.

நீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநிலமொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலை: தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு.

நீட் தேர்வுக்கு படிக்க ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே பாடப் புத்தகங்கள் உள்ளன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழி களில் பாடப் புத்தகங்கள் இல்லாத தால், தாய்மொழியில் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்பு களுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே மாதம் 7-ம் தேதிநடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத் தில் மட்டும் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.நீட் தேர்வு கடந்த ஆண்டு ஆங்கி லத்தில் மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளன. ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் நீட் தேர்வுக்கு படிப்பதற்கான பாடப் புத்தகங்கள் இருக்கின்றன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லை. இதனால் மாநில மொழிகளான தங்களுடைய தாய்மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேண்டாம் நீட் தேர்வு

இது தொடர்பாக அரசு மருத்து வர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ - SDPGA) மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறியதாவது:நாடு முழுவதும் பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு படிப்பதற்கான சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே உள்ளன. அப்படி இருக்கும் போது, தமிழ் உள்ளிட்ட மாநில மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களால் எப்படி தேர்வுக்கு தயாராக முடியும். படிப்பதற்கு பாடப் புத்தகங்களே இல்லாமல், தமிழில் தேர்வு எழுதலாம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. நீட் தேர்வால் மாநில மொழிகளில் தேர்வு எழுத உள்ள கிராமப்புற, ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வந்த பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

10-ம் வகுப்பு தேர்வு எழுத கூடுதல் நேரம் கோரியமாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்ததில் உள்நோக்கம் இல்லை: தருமபுரி மாவட்ட ஆட்சியர் விளக்கம்.

தருமபுரியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவி ஒருவர் மாவட்ட ஆட்சியர் மீது புகார் அளித் துள்ள நிலையில், ‘சம்பந்தப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோத னைக்கு அழைத்ததில் உள்நோக்கம் எதுவும் இல்லை’ என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி. இவரது மகள், தருமபுரியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுத் தேர்வை அவர் எழுதி வருகிறார். இந்நிலையில், ‘தேர்வை சரிவர எழுத முடியாதபடி மாவட்ட ஆட்சியர் தனக்கு சிரமம் தருகிறார். இதற்குத் தீர்வு ஏற்படுத்த வேண்டும்’ என இந்த மாணவி தருமபுரி ‘சைல்டு லைன்’ அமைப்பிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.இதுகுறித்து மாணவி கூறிய தாவது: பிறவியிலேயே எனக்கு வலது கை நரம்பில் பாதிப்பு இருந்ததால் இடது கையில் எழுத பழகிக் கொண்டேன். இருப்பினும் இடது கையால் மற்றவர்களைப்போல வேகமாக எழுத இயலாத தால், பொதுத் தேர்வின் போது ஒரு மணி நேரம் கூடுதல் நேர அவகாசம் வேண்டுமென முறைப்படி மருத்துவ சான்றுகளுடன் விண்ணப்பித்தேன்.இதையடுத்து அரசு தேர்வுகளுக்கான வேலூர் மண்டல இணை இயக்குநர் மூலம் எனக்கு தேர்வு எழுத 1 மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த 23-ம் தேதி இரவு 8 மணிக்கு எனக்கு மருத்துவக் கல்லூரி மூலம் ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலான மருத்துவ பரிசோதனைக்கு 24-ம் தேதி மருத்துவக் குழு முன்பு ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேர்வு நேரம் என்பதால் என்னால் ஆஜராக முடியவில்லை. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள் ளேன். ஆட்சியரின் உத்தரவு எனக் கூறி சிலர் தரும் சிரமங்களால் என்னால் நிம்மதியாக தேர்வு எழுத முடியவில்லை’ என கூறியுள்ளார்.இதுகுறித்து மாணவியின் தாயார் மகேஸ்வரி கூறும்போது, ‘எனது மகளுக்கு தேர்வு சமயத்தில் தேவையற்ற நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால், தேர்வில் அவரால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. என் மகள் என்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்றும் தெரியவில்லை’ என்றார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தேர்வை கண்காணிக்கும் பறக்கும் படையின ருக்கு அந்த மாணவியின் எழுதும் திறனில்சில சந்தேகங்கள் ஏற்பட்டுள் ளன. அவரது கை பாதிப்பின் அளவு குறித்து சந்தேகம் நிலவுவதாக பறக்கும் படை குழுவினர் கோட் டாட்சியர் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அவர் மூலமாக இந்த தகவல் எனக்கு தெரியவந்தது.

தருமபுரி மாவட்டத்தில் விதிமுறை களுக்கு உட்பட்டு தேர்வை நடத்து வதோடு, முறைகேடுகள் எதுவும் பதிவாகிவிடாதபடி பொதுத் தேர்வை நடத்த வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை.அந்த வகையில் இந்த மாணவி விவகாரம் தொடர்பாக அரசு தேர்வு கள் துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதேபோல, சம்பந்தப்பட்ட மாணவியின் மாற்றுத் திறன் சதவீதம் குறித்து ஆய்வு செய்து மருத்துவ அறிக்கை அளிக் கும்படி தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வருக்கும் உத்தரவிடப்பட் டது. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தேர்வு நேரத்திலேயே சோதனைக்கு ஆஜராகும்படி கூறி சிரமப்படுத்தி விட்டதா என தெரியவில்லை.அதேநேரம், அந்த மாணவி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல ரின்மகள் என்பது இறுதியில்தான் எனக்கு தெரியும்.

தேர்வுகள் தொடர் பான வழக்கமான நடவடிக்கை கள்தான் இந்த விவகாரத்தில் மேற் கொள்ளப்பட்டதே தவிர, இதற்கு வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.கடந்த 23-ம் தேதி இரவு எனக்கு மருத்துவக் கல்லூரி மூலம் ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலான மருத்துவ பரிசோதனைக்கு 24-ம் தேதி மருத்துவக் குழு முன்பு ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

16 மதிப்பெண்களுக்கு எதிர்பாராத வினாக்கள் : கணிதத்தில் 'சென்டம்' குறையும்

பிளஸ் 2 கணிதத்தேர்வில், மொத்தம் 16 மதிப்பெண்களுக்கு, எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டதால், 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது என, மாணவர்கள் தெரிவித்தனர்.

நேற்று நடந்த தேர்வு குறித்து அவர்களின் கருத்து எஸ்.கற்குவேல் கார்த்திகேயன், மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி, தேனி: பகுதி இரண்டில் ஆறு மதிப்பெண் வினாவில் கட்டாய கேள்விகள் 55 - ஏ, 55-பி, இரண்டுமே எதிர்பாராததாக இருந்தது. இந்த வினாக்கள் இதுவரை கேட்கப்படாதவை. 53வது வினாவில் 1வது பிரிவு வினா 10.5 பயிற்சி கேட்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் வராது என படிக்காமல் விடப்படும். 10 மதிப்பெண் கட்டாய வினாவில் இரு வினாக்களும் எதிர்பாராதவை. எல்லா பயிற்சிகளும் முழுமையாக படித்தவர்கள் மட்டுமே இதற்கு விடையளிக்கலாம். மற்ற வினாக்கள் எளிமை என்பதால் சராசரி மாணவரும் நல்ல மதிப்பெண் பெறுவர். எதிர்பாராத வினாக்களால் 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை குறையும்.

எளிமை - ஜெ.பிரித்திகா சென், என்.எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளி, கூடலுார்: கணிதம் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. கட்டாய வினாவில் 6 மதிப்பெண் கேள்வி, சற்று சிரமமாக இருந்தது. அதே வேளையில் 10 மதிப்பெண் வினா மிகவும் எளிமையாக இருந்தது. அதில் கடந்த ஆண்டு வந்த அதிகம் கேள்விகள் இருந்தன. புத்தகத்தில் இருந்த வினாக்கள் மட்டுமே கேட்கப்பட்டன. அதற்காக பள்ளியில் அளிக்கப்பட்ட பயிற்சி பயன்தந்தது. ஒரு மதிப்பெண் வினா அனைத்தும் மிக எளிமை.

சிறிது குழப்பம் - டி.முத்துக்குமரநாயகி, ஆசிரியை, மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி: ஒரு மதிப்பெண் வினாக்களில் 9 வினாக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் வழங்கிய புத்தகத்தில் இருந்தும், 31வினாக்கள் 'புக்பேக்' பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. 6 மதிப்பெண்ணுக்கான 45வது வினாவில் கலப்பு எண்கள் வினா 'கிரியேட்டிவ்' ஆக கேட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு சிறிது குழப்பம் இருந்திருக்கும். பத்து மதிப்பெண்ணில் 69வதுதாக கேட்கப்பட்ட நிகழ் தகவு பரவல் வினாவை மாணவர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். பத்து மதிப்பெண்ணுக்கான கட்டாய வினாவில் 'ஏ 'வினா வகை நுண்கணிதம் மற்றும் அவற்றின் பயன்பாடு பற்றியும், பி.வினா டிபிரன்சியல் ஈக்குவேஷன் கேட்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி கணக்கில் 8.5, 8.6 பயிற்சியை மாணவர்கள் நன்கு படிப்பார்கள்.ஆனால் 8.2வது பயிற்சியில் வினா கேட்கப்பட்டுள்ளதால், பலர் இந்த வினாவை சரியாக எழுதியிருக்க மாட்டார்கள். நன்கு படிக்கும் மாணவர்கள் மட்டுமே எழுதியிருப்பார்கள். கணித தேர்வில் மொத்தம் 16 மதிப்பெண்கள் எதிர்பாராத வினாக்களாக வந்துள்ளது.

இதனால் 200க்கு 200 மதிப்பெண் எடுப்பவர் எண்ணிக்கை குறையும். மற்றபடி சராசரியாக படிக்கும் மாணவரும் நல்ல மதிப்பெண் பெறுவர்.

TNTET - 2017 : ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை தள்ளி வைக்க வேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்.

பெரும் குழப்பம் நிலவுவதாக ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை தள்ளி வைக்க வேண்டுமென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
வேலையில்லாத் திண்டாடம் இளைஞர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் மூன்று வருடங்களாக “ஆசிரியர் தகுதித் தேர்வை” நடத்தாத அதிமுக அரசு இப்போது அவசர அவசரமாக 2017ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது. கட்டாயக் கல்வியுரிமைச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வருகின்ற ஏப்ரல் 29 மற்றும் 30ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கால அட்டவணையைவெளியிட்டிருக்கின்ற இந்த நேரத்தில் ஆசிரியர் கல்வி பயின்றவர்கள் எல்லாம் ஏகப்பட்ட குழப்பத்தில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 இது ஒருபுறமிருக்க, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அச்சடிக்கப்பட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் பிழை ஏற்பட்டு, அதற்கு பதிலாக இப்போது புதிய விண்ணப்பங்கள் அச்சடிக்கப்படுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. அரசு பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது என்பதற்கு “குற்றவாளி வழிகாட்டும்”அரசின் நிர்வாக குழப்பங்களே காரணம் என்பதை நினைக்கும் போது தமிழக அரசு நிர்வாகம் இன்னும் எந்த அளவிற்கு மோசமாகப் போகிறதோ என்ற கவலையே ஏற்படுகிறது.சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவி பெறும்(Aided) மற்றும் அரசு உதவி பெறாத (non government aided) கல்வி நிறுவனங்களுக்கும் கட்டாயக் கல்வியுரிமைச் சட்டத்திலிருந்து உச்சநீதிமன்றமே விலக்களித்துள்ள நிலையில், இந்த கல்வி நிறுவனங்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு பொருந்துமா என்பது குறித்து “2017 அறிவிக்கையில்” தெளிவான விளக்கங்கள் ஏதுமில்லை என்பது கவலையளிக்கிறது.

இதற்கு முன்பு எல்லாம் வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த முறை ஏப்ரல் மாதத்திலேயே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டின் இறுதி நாளான ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து 9 நாட்களுக்குள், அதாவது ஏப்ரல் 29ஆம் தேதியே தேர்வு எழுத வேண்டும் என்பது ஆசிரியர்களாக பணியாற்றும் பலருக்கும் குறிப்பாகஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கும்.இறுதி வேலைநாளுக்குப் பிறகு தேர்வுத்தாள் திருத்தும் பணியைச் செய்வதா அல்லது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதா என்ற குழப்பம் ஆசிரியர்களாக இருப்பவர்களுக்குஏற்பட்டுள்ளது.

அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அவர்களால் உரிய முறையில் தயாராகி தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆகவே மூன்று வருடங்கள் காலத்தைக்கடத்திவிட்ட அதிமுக அரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றவுடன் அவசர அவசரமாக தேர்வை நடத்துவதில் பல சந்தேகங்கள் எழுகிறது. ஆகவே ஆசிரியர்களுக்கும் இந்த தேர்வு பயன்படும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்.சி.பி.எஸ்.இ. நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கல்வியில் இளநிலை பட்டம் பெற்ற வணிகவியல் பட்டதாரிகள் கூட ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த காலங்களில் கணினிப் பட்டதாரிகளைக் கூட ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த தகுதித் தேர்வை எழுத அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கையில் கல்வியில் இளநிலை பட்டம் பெற்றிருக்கும்அனைத்து பட்டதாரிகளும் “ஆசிரியர் தகுதித் தேர்வு” எழுத முடியுமா என்பது தெளிவாக்கப்படவில்லை. ஆகவே கல்வியில் இளநிலை பட்டம் பெற்ற அனைத்து பட்டதாரிகளும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு அதிமுக அரசு அனுமதிப்பதுதான் பட்டதாரிகள் அனைவருக்கும் சம நீதி வழங்கியதாக அமையும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி 5 மதிப்பெண் வழங்கும் அரசு ஆணையையும்,இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அவர்கள் பெற்ற கல்வியின் அடிப்படையில் வழங்கும் 40 “வெயிட்டேஜ்” மதிப்பெண்களையும் உச்சநீதிமன்றம் அனுமதித்திருந்தாலும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு நீண்ட காலமாக காத்திருப்போருக்கு நீதி வழங்கும் பொருட்டும், சமூகநீதியின் உண்மையான நோக்கம் வேலை தேடும் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும் ஆசிரியர் பணி கிடைப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு கொள்கை முடிவை இந்த அரசு எடுக்க வேண்டும். அதற்காக துணை வேந்தர்கள் உள்ளிட்ட சிறந்த கல்வியாளர்கள் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து அப்படியொரு ஆக்கபூர்வமான கொள்கை முடிவை எடுத்து ஆசிரியர் கல்வி படித்து விட்டு காத்திருக்கும் அனைவரையும் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டிற்கு இரு முறை நடத்துவது, மற்ற மாநிலங்களில் உள்ளது போல் வகுப்பு வாரியாக மதிப்பெண் உச்சவரம்பை குறைப்பது, பழைய பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கும், புதிய பாடதிட்டத்தின்படி படித்தவர்களுக்கும் இடையில் மதிப்பெண்களில் சலுகை வழங்குவது, நீண்ட காலமாக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு காத்திருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் முன்னுரிமை அளிப்பது போன்றவற்றையும் ஆராய்ந்து ஆசிரியர் கல்வி படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் அனைவருக்கும்வாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வரம்புகளை மாற்றி அமைப்பது குறித்து மாநில அரசு தீவிர பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற ஒரே காரணத்திற்காக வீட்டுக்கு அனுப்பிவிடக் கூடாது என்றும், அவர்கள் அந்த தேர்வில் வெற்றி பெற போதிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!