Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 30 March 2017

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் டாடா சார்பில் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது குறித்து கோரிக்கை மனு

30/03/2017தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் டாடா சார்பில் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது  குறித்து கோரிக்கை மனு  அளிக்கப்பட்டது.அப்போது மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஏழாவது ஊதிய குழு குறித்த ஆசிரியர்கள் சங்க கருத்து கேட்பு கூட்டம் அமைக்கப்படுவதாகவும், அப்போது அவசியம் நம் டாடா சங்கத்தையும்  அழைப்பதாகவும் உறுதியளித்தார்.

2.நிதித்துறை இணை செயலாளர் திரு தியாகராஜன் அவர்களிடம் இடைநிலை ஆசிரியர்களுக்கு  9300+4200 ஊதியக்கட்டில் வைக்க கோரி அளித்த இந்த கோரிக்கை மனுவினை முதலமைச்சர் தனிப்பிரிவிலும்  கொடுக்கப்பட்டுள்ளது.

இவண் .. ஆ.சபரிராஜ்,மாநில துணை தலைவர்,டாடா

PGTRB : 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு மூலம் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. 
2,100 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 3 முறை பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தகுதி தேர்வு இதையொட்டி 2,100 ஆசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் நியமிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் தயாராக இருந்தது.

ஆனால் அதற்குள் ஆசிரியர் தகுதி தேர்வை விரைவில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துதேர்வு அறிவிப்பை நிறுத்தி வைத்து விட்டு, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து டி.பி.ஐ.வளாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- விரைவில் அறிவிப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எழுத்து தேர்வுமூலம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறத்தேவை இல்லை.

தற்போது 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. அப்போது 1,000 பணியிடங்கள் கூடுதலாக உருவாகும். இதில் பதவி உயர்வு போக 500 பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நியமிக்கப்படும். இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

ஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

ஆய்வக உதவியாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்டங்களில் காலிப் பணியிடங்களுக்கு தகுந்த வகையில், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, எழுத்துத் தேர்வில் தேர்வானவர்கள் குறித்த பட்டியல், ஏப்ரல் 1,2ஆம் தேதிகளில், அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒட்டப்படும். உரியவர்களுக்கு அழைப்புக் கடிதமும் அனுப்பி வைக்கப்படும்.

காலியிடத்துக்கு தகுந்தாற் போல், 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்படுவர். இதனையடுத்து, அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஏப்ரல் 9 முதல் 11-ஆம் தேதி வரை இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
Weightage Calculation  Method

1.எழுத்துத் தேர்வு - 150க்கு பெற்ற  மதிப்பெண் 
2.வேலைவாய்ப்புப் பதிவு - 10 மதிப்பெண்
3.கூடுதல் கல்வித் தகுதியாக பிளஸ் 2 க்கு - 2 மதிப்பெண்
4.பட்டப்படிப்புக்கு - 3 மதிப்பெண்
5.ஆய்வக உதவியாளர் அனுபவச் சான்று இருந்தால் - 2 மதிப்பெண்

இதனையடுத்து, இனசுழற்சி இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஒரு வாரத்தில் பணி ஆணை வழங்கப்படும்.

இந்த நியமனம் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், வெளியிடப்பட்ட அரசாணைப்படி நேர்மையாக நடைபெறும். 

1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்

தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

600 உடற்கல்வி ஆசிரியர்கள், 300 ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் 100, தையல் ஆசிரியர்கள் 100 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன என்றார்.

சரியான வினாக்கள்தான்: பிளஸ் 2 கணிதத் தேர்வில், பாடத் திட்டத்தில் இல்லாத கடினமான வினாக்கள் கேட்கப்பட்டது குறித்த கேள்விக்கு, பாடத் திட்டத்திலிருந்து தான் சரியாகக் கேட்கப்பட்டுள்ளது என்றார் ச.கண்ணப்பன்.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தற்போது நடைமுறையில் இல்லாத திட்டக் குழு தொடர்பான வினா இடம் பெற்றது குறித்த கேள்விக்கு, திட்டக் குழுவின் தலைவர் யார் என்று, பொதுவானதாக சரியாகவே கேட்கப்பட்டுள்ளது. திட்டக் குழுவுக்கு பதிலாக நடைமுறையில் உள்ள நிதிஆயோக்கின் தலைவரும் பிரதமர் தான், அதனால், வினாவில் தவறில்லை என்றார்.

அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு: தமிழக அரசு தகவல்

பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறைவட்டாரங்கள் தெரிவித்தன.

 பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய் (கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.இருப்புத் தொகையை குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச்சேவை மூலமாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:-மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடப்படுகிறது.

எனவே, ஊழியர்கள் குறித்த அடிப்படை விவரங்களை வங்கியில் சமர்ப்பித்து வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறலாம்.குறிப்பாக, ஊழியரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வருமானவரிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இவற்றை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, அவை வங்கியால் ஆய்வு செய்யப்படும்.பின்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்.

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரி தெரிவித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்துமொத்தம் 554 உள்ளன.
அரசு கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு வழங்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர்நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீதம் இடங்களை மட்டும் கொடுத்தால் போதும். தனியார் கல்லூரிகள் வைத்திருக்கும் 35 சதவீத இடங்களை அந்த கல்லூரியே நிரப்பிக் கொள்ளலாம். அந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர்வதற்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. 1 லட்சம்இடங்கள் 1 லட்சம் மாணவ-மாணவிகள் தான் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் கடந்த ஆண்டு சேர்ந்தனர். இந்த வருடமும் என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் இன்றி உள்ளனர். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு குறைவுதான். சாதாரண கல்லூரிகளில் சேர்ந்து படித்தால் அந்த கல்லூரிகளில் வேலைக்கு ஆள் எடுக்க தனியார் நிறுவனங்கள் வருவதில்லை. அதன் காரணமாக என்ஜினீயரிங் படிப்பை விட கலை அறிவியல் படிப்பில் நிறைய பேர் சேருவார்கள் என்று தெரிகிறது.

கலந்தாய்வு மூலம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவது குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஏப்ரல் 2-வது வாரம் கலந்தாய்வு முறையில் எந்த வித மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு போலவே கலந்தாய்வு நடைபெறும். ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும்.

அந்த விண்ணப்பத்தில் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்-2 தேர்வு முடிவு 12-ந் தேதி வெளியாகிறது. அதன்பிறகு அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

TNTET - 2017 தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு எழுத, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பின், 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 6 முதல், 23 வரை பெறப்பட்டன.
மொத்தம், எட்டு லட்சத்து, 47 ஆயிரத்து, 241 பேர் விண்ணப்பம் பெற்றனர்.இவர்களில், முதல் தாள் தேர்வுக்கு, 2.37 லட்சம் பேர், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 5.03 லட்சம் பேர் என, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்பம் பெற்றும், 1.07 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பங்களை, 50 ரூபாய்க்கு விற்றதன் மூலம், டி.ஆர்.பி.,க்கு, 4.24 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

2804 கிராமப்புற செவிலியர் பணியிடம்: ஏப்.3 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு.

கிராமப்புற செவிலியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் ஏப்ரல் 3 -ஆம் தேதி தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்கள், மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படவுள்ளன.
இதன்படி, மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,183 பேர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஏப்ரல் 3 -ஆம் தேதி முதல் 8 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெறவுள்ளன.
மேலும் விவரங்களை தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம்.

யாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள்?

யாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் ? யார் வரமாட்டார்கள் என்பது சற்று சிக்கலான குழப்பமான விஷயமாக மாறியுள்ளது.கிரிமி லேயர் யார் நான் கிரிமிலேயர் யார் என்று நிர்ணயம் செய்யப் பல அரசாணைகள் உள்ளன.தமிழ்நாடு அரசின் வருவாத்துறை இந்தச் சான்றிதழை வழங்க வேண்டும்.இதற்கு மூன்று சோதனைகள் உள்ளன.

1. அரசுவேலை தர நிர்ணயம். ( Class of govt employees)
2. வருமானச் சோதனை. (Income test)
3. செல்வச்சோதனை (wealth test)ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

1. அரசு வேலை தர நிர்ணயச் சோதனை:ஓபிசி கோரும் நபருடைய பெற்றோர் அரசு வேலையில் இருந்தால்அவர்களின் குரூப் என்ன என்று சோதிக்கப்படும். மத்தியமாநில அரசு வேலைகள் குரூப் ஏ,பி, சி, டி என வகைப்படுத்தப் பட்டுள்ளன.ரூ. 6600 க்கும் மேல் தர ஊதியம்- கிரேட் பே பெறும் அரசு ஊழியர்கள் குரூப் ஏ பிரிவில் வருவார்கள். அதாவது, மாவட்ட வருவாய் அலுவலர்டிஆர்ஓ, இணை இயக்குநர் - ஜேடி, இணை பதிவாளர் - ஜேஆர், காவல் கூடுதல்கண்காணிப்பாளர்- ஏடிஎஸ்பி,செயற் பொறியாளர் - இ.இ, முதன்மைக் கல்வி அலுவலர் - சிஇஓ, போன்ற மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அலுவலர்கள் குரூப் ஏ என்று வகைப்படுத்தப் படுவர் .இது போன்ற உயர் அலுவர்களின் குழந்தைகள் நல்ல கல்வி வசதியும் நல்வாய்ப்புகளையும் குழந்தைப் பருவத்தில் பெற்றுவிடுவதால் அவர்கள் கிரிமி லேயர் - வசதியான பிரிவினர் என்று வகைப்படுத்தப்பட்டு பொதுப்பிரிவினராக கருதப்படுவர். ஓபிசி இட ஒதுக்கீடு இவர்களுக்கு இல்லை.இதில் அடுத்த நிலை ஒன்று உள்ளது. பதவி உயர்வில் குரூப் ஏ நிலையை அடைந்த பெற்றோர் அதை நாற்பது வயதுக்குள் அடைந்திருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை வசதியான பிரிவு - கிரிமி லேயரில் சேர்க்கத் தேவையில்லை. ஏனெனில் நாற்பது வயதுக்குள்தான் வளரும் இளம்பருவ குழந்தைகள் அவருக்கு இருக்கும். குழந்தைகளின் கல்விகொடுக்கும் காலத்தில் ஒருவர் குரூப் சி, குரூப் பி நிலையில் இருந்துவிட்டு ஓய்வு பெறும் நிலயில் குரூப் ஏ நிலையைஅடைபவரால் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி வசதியை அளித்திருக்க முடியாது என்பது இந்த நாற்பது வயது என்பதற்கான காரணம்.அடுத்து பெற்றோர் இருவர் குரூப் பி நிலையில் நேரடியாக அரசு வேலை பெற்றிருந்தால் அவர்களின் குழந்தைகள் கிரிமி லேயர்- வசதியான பிரிவில் வருவர். இடஒதுக்கீடு கிடையாது.இது தவிர குரூப் பி, குரூப் சி நிலையில் வேலைபார்க்கும் பெற்றோரின் குழந்தைகள் நான் கிரிமி லேயர்- வசதியற்ற பிரிவினர் என்று வகைப்படுத்தப்படுகின்றனர். இந்தப் பெற்றோரின் ஆண்டு வருமானம் பல ஆண்டுகள் வேலை பார்த்தஊதிய உயர்வின்மூலம் ஆறு இலட்ச ரூபாயை மீறினாலும் அதை. கருத்தில் கொள்ளத்தேவையில்லை. இவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. இவைதான் விதிகள்.

2. வருமானச் சோதனை:

யாரெல்லாம் அரசு வேலையைத் தவிர்த்து பிற வருமானம் பெறுகிறார்களோ அவர்களுக்கு ஆண்டு வருமானச் சோதனை என்று ஒரு சோதனை நடத்தப் பெறும்.அதாவது ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 6 இலட்சங்களுக்கு மேல் வருமானம் வரும் பெற்றோரின் குழந்தைகள் வசதியான பிரிவினர் - கிரிமி லேயர் என்றுகருதப்படுவர். இவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. அதற்கு குறைவாக வருமானம் பெறுபவருக்கு இடஒதுக்கீடு உண்டு.

3. செல்வச் சோதனை :

ஒவ்வொரு மாநிலத்திலும் நில உச்ச வரம்பு சட்டம் உள்ளது. அந்த உச்ச வரம்பில் 85% அளவுகு மேல் நீர்ப்பாசன நிலம் வைத்துள்வர்கள் வசதியான பிரிவினர் வகைபாட்டில் வருவர். தமிழ் நாட்டில் நில உச்ச வரம்பு 15 ஏக்கர். அதில் 85% என்பது 12.75 ஏக்கர் நிலம்.சரி இதெல்லாம் விதிமுறைகள். அனைவருக்கும் தெரியும்.என்ன இப்பொழுது சிக்கல்?இவ்வளவு காலமாக வருவாய்த்துறை இந்த ஆயணைகளைப் பின்பற்றி ஓபிசி சான்று வழங்குகிறது. அதை யூபிஎஸ்சி, டிஓபிடி ஏற்றுவந்தது. இந்த ஆண்டு ஓபிசி சான்றுகளை அறிவுக்கு ஒவ்வாத வகையில் டிஓபிடி கிளர்க்குகள் ஸ்குரூடினி செய்யத் தொடங்கினர்.முதலில் பெற்றோரின் வருமானத்துக்கு வருமான வரிகட்டிய வருமானவரி ரிட்டன் கேட்டனர். வெறும் நாற்பதனாயிரம் வருமானம் வரும் கூலித் தொழிலாளியிடம் வருமான வரி ரிட்டன் கேட்ட பிரகஸ்பதிகளுக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுக்கலாம்.அடுத்ததாக வருமான வரி ரிட்டன் ஃபைல் செய்யாதவர்களுக்கு வருவாய்த்துறையிலிருந்து வருமானச்சான்று கேட்டனர். அந்த வருமானச் சான்றில் வேலைசெய்யும் மகன், மகளது வருமானத்தைச் சேர்க்கத்தேவையில்லை என்று தாசில்தார், ஆர்ஐ, விஏஓக்களுக்கு புரிய வைக்க பகீரத பிரயத்தனம் தேவைப்பட்டது. இந்தச் சான்றுகளும் போதாது என்று ஒரு செல்ஃப் டிக்லரேஷன் கேட்டனர். இதில் ஒரே சான்றினை அனுப்பியபிறகும் வந்து சேரவில்லை என்று மீண்டும் மீண்டும் கேட்டனர். எப்படியோ ஒரு வழியாக அதைச் சமர்ப்பித்தோம்.அடுத்ததாக, மத்திய மாநில அரசுப் பணி தவிர்த்து மின் வாரியம், எல்ஐசி, பிஎஸ்என்எல், என்எல்சி, வங்கிகளில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகளைக் குறி வைத்தனர். தனியார் நிறுவனப் பணியாளர்களும் தப்பவில்லை.இதில் இவர்கள் ஒரே வினாவினை எழுப்பினர். உங்கள் பெற்றோர் குரூப் ஏ அலுவலர் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம். மூன்று நாட்களில் சொல்லுங்கள். இல்லையெனில் நீங்கள் ஓபிசி கிளைம் செய்தது போலி என்று முடிவு செய்து விடுவோம் என்று கடிதம் அனுப்பினர்.இவ்வளவுகாலம் இந்தச்சான்றுகளை ஏற்று வந்தவர்களுக்குஎன்ன திடீர் என்று ஞானம் பிறந்தது என்று தெரியவில்லை. !சில மாணர்கள் தங்களின் பெற்றோர் சாதாரண கிளரிக்கல் நிலையிலும்,குரூப் சி, பி நிலையிலும் வேலை செய்யும் பணியாளர்கள் எனறு கூறி வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து சான்றுகளைப் பெற்று அனுப்பி வைத்தனர்.அதைச் சொல்வதற்கு நீங்கள் ஆள் அல்ல. மத்திய அரசோ மாநில அரசோதான் சொல்ல வேண்டும் என்று இறுதித்தீர்ப்பு எழுதிவிட்டனர்.மத்திய மாநில அரசுகளில் இதுபோன்று வாரியங்களில், பிஎஸ்யூக்களில் வேலை செய்யும் நபர்களையும் அரசுப்பணியாளர்களையும் இணைத்து குரூப் ஏ, பி, சி என்று எந்த வகைபாட்டில் வைப்பது என்பது குறித்து இதுவரை ஒரு அரசாணைகூட வெளியிடப் படவில்லை.எனவே, 6 இலட்சரூபாய்க்கு மேல் ஊதியம் பெறுபவர் அவர் குரூப் டி பதவியில் இருந்தாலும் வசதியானவர் - கிரிமி லேயர் என்று நிர்ணயம் செய்து அனைவரையும் ஓபிசியிலிருந்து தகுதிநீக்கம் செய்துவிட்டனர். ஜெனரல் ரேங்க் பெற்றவர்களுக்கு மட்டும் பணி ஒதுக்கீடு வந்துள்ளது. மற்றவர்களுக்க பணிஏதும் கிடைக்கவில்லை!

இதுதான் இப்பொழுது எழுந்துள்ள சிக்கல்.

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு கிடுக்கிப்பிடி!

இன்ஜினியரிங் படிப்பை மாணவர்கள் பாதியில் கைவிட்டால்அவர்களின் கல்வி கட்டணத்தை 7 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என அகில இந்திய தொழிற்கல்வி இயக்குநரகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஏஐசிடிஇ பிறப்பித்த உத்தரவு:

மாணவர்கள் கல்லூரியிலிருந்து வெளியேறினால், ரூ.1000 மட்டும் வசூலித்து கொண்டு அவர்கள் கட்டிய மிச்ச பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.மாணவர்கள் பாதியில் வெளியேறினாலும், அவர்களிடம் எஞ்சிய பணத்தை வசூலிக்கக்கூடாது.

மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட டிபாசிட் மற்றும் அவர்களின் சான்றிதழ்களை 7 நாட்களுக்குள் திருப்பி கொடுக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டண தொகையில் இரு மடங்கு வசூலிக்கப்படும். கல்லூரியில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

NEET தேர்வுக்கு மையத்தை மாற்றி அமைக்க நாளை கடைசி நாள்

இந்த ஆண்டு நாடு முழுவதும் மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வுமையத்தை மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக சிபிஎஸ்சிஅறிவித்தது. 
அதனால் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் தேர்வு மையத்தை மாற்ற விரும்பும் மாணவர்கள், http://cbseneet.nic.in இணையதளத்தில் தங்களின் பதிவு எண், பாஸ்வேர்டு அளித்து நாளை நள்ளிரவு12 மணிக்குள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளலாம்.

பேறுகால விடுப்பு இனி 26 வாரம் - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்.

பெண் ஊழியர்களுக்கு, 26 வாரம், பேறு கால விடுப்பு அளிக்கும் புதிய சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.பெண் ஊழியர்களுக்கு, தற்போது, 12 வாரம், பேறுகால விடுப்பு அளிக்கப்படுகிறது.
இதை, 26 வாரமாக உயர்த்தும் சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, 50 அல்லது அதற்கு மேல் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் பெண் ஊழியர்கள், 26 வாரம், பேறுகால விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும்.இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட தொலைவில், பெண் ஊழியர்களுக்காக, குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் இல்லங்களை அமைக்க வேண்டும். பெண் ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை பார்த்து வர, ஒரு நாளில் நான்கு முறை, குழந்தை பாதுகாப்பு இல்லம் செல்ல, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனுமதி வழங்க வேண்டும்.

உலகளவில், கனடா, நார்வே நாடுகளுக்கு அடுத்தபடியாக, நம் நாட்டில் தற்போது, அதிக நாட்கள் பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. கனடாவில், 50 வாரங்களும், நார்வேயில், 44 வாரங்களும், பேறு கால விடுப்பு வழங்கப்படுகிறது.

ஏப்., 1 வங்கி விடுமுறை : ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை.

மார்ச், 25 முதல் 31 வரை, விடுமுறையின்றி செயல்பட்ட, அரசின் வரவு - செலவு கணக்குகளை பராமரிக்கும் வங்கி கிளைகள், ஏப்., 1ல் செயல்பட தேவையில்லை' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மார்ச் 31ம் தேதியுடன் நிதியாண்டு முடிவுக்கு வருவதால், ஆண்டு இறுதிக் கணக்கை முடிக்கும் வகையில், அனைத்து வங்கிகளும் தீவிர கதியில் செயலாற்றி வருகின்றன. இந்நிலையில், 'அரசின் வரவு - செலவு கணக்குகளை பராமரிப்பதில் தொய்வு ஏற்படாமல் இருக்க, அந்தப்பணிகளை மேற்கொள்ளும் வங்கிகள், மார்ச், 25 முதல் 31 வரை, எவ்வித விடுமுறையும் இன்றி, இயங்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. மார்ச், 24 இரவில், திடீரென வெளியான இந்த சுற்றறிக்கையால், வங்கி ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். எனினும், பணிகளை விரைந்து முடிப்பதற்காக, வார விடுமுறை மற்றும்யுகாதி பண்டிகை விடுமுறையும் எடுக்காமல், பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், 'அரசின் வரவு - செலவு கணக்குகளை பராமரிக்கும் வங்கிகள், ஏப்., 1ல் செயல்படத்தேவையில்லை' என, ஆர்.பி.ஐ., புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச், 25 முதல் 31 வரை, விடுமுறையின்றி செயல்பட்ட வங்கி கிளைகள், ஏப்., 1ல் செயல்பட தேவையில்லை என்பதால், அந்த கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!