Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 2 April 2017

பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியருக்கு 17.A வின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் - தொடக்கக்கல்வி இயக்குநர்

31/03/2017 பிற்பகல் காணொலிக்காட்சி மூலம் தொடக்கக்கல்வி இயக்குநர் தமிழகத்தில் உள்ள எல்லா AEEO களுக்கும் meeting நடத்தி சில விபரங்கள் கூறியுள்ளார்.* (கூட்டம்2.00 to 4.30 வரை நடந்தது.)

➡காலையில் AEEO ஏதேனும் ஒரு பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்.இல்லையேல் AEEO மேல்
நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.
 
➡பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியருக்கு 17.A படிநடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறினார்.

➡புத்தக பூங்கொத்து படிக்கும் நிலையில் இருக்க வேண்டும் எனவும் வெள்ளிக்கிழமைக்குள் சரியாக இருக்கவேண்டும்.

➡ஆசிரியர்கள் முழுநேரமும் அலுவலகத்தில் மாற்றுப்பணியில் இருக்கக்கூடாது.

➡காலனி, புத்தக பை,கலர்பென்சில், கிரையான்வரைபடபெட்டி முதலியவை தர நிர்ணயம் செய்த பின் வழங்கவேண்டும்.

➡பாடநூல் கழக செயலர் திரு கார்மேகம் அவர்களும் கலந்துகொண்டு பல விபரங்கள் கூறியுள்ளார்.

➡அடுத்த ஆண்டுக்கான புத்தகம் மே 15 குள் வந்துவிடும் எனவும் உபரிஅதிகம் இருக்கக்கூடாது எனவும் அறிவுறித்தியுள்ளார்.

தமிழக அரசு ஊழியர்கள் ஏப்.25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் !!!

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிப்பு !!

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும்  அந்த மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5  விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில், கீளே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த விவரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் பள்ளிகளின் விவரம்:

1. கோ.து.வ.ச.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, இராஜவீதி, கோயம்புத்தூர் - 641 001.

2. புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கடலூர்.

3. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி, தருமபுரி..

4. புனித லூர்தன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.

5. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பன்னீர்செல்வம் பார்க் அருகில், ஈரோடு  638 001.

6. எஸ்.எஸ்.கே.வி. (மகளிர்) மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.  .

7. எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில். கன்னியாகுமரி 

8. சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெண்ணெய்மலை, கரூர்.

9. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கூட்டரங்கம்,கிருஷ்ணகிரி.   

10. ஓ.சி.பி.எம். (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி, மதுரை  625 002.
  
11. இ.ஜி.எஸ்.பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில், நாகப்பட்டினம். - 611 003.

12. அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் (தெற்கு), மோகனூர் ரோடு, நாமக்கல்  637 001,

13. தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, துறையூர் ரோடு, பெரம்பலூர்.

14. ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை  622 001.   

15. சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம். இராமநாதபுரம்   

16. புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரிசிபாளையம், சேலம் - 636 009. 

17. செயிண்ட் ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை.

18. தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, மேரிஸ் கார்னர், தஞ்சாவூர்   

19. புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உதகமண்டலம் - 643 001. 

20. நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி  625 531. 

21. காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் மெயின் ரோடு, சோ.கீழ்நாச்சிப்பட்டு, திருவண்ணாமலை - 606 611.   

22. ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.

23. டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளி, மோதிலால் தெரு, திருவள்ளூர் - 602 001.     

24. ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரயில் நிலையம் அருகில், திருப்பூர் - 641 601.   

25. பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம், திருச்சி  620 002.   

26. சாரா தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி  - 627 002.

27. விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.   

28. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி, வேலூர்                                                       
29. தூய  இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு பாண்டி சாலை, விழுப்புரம்   

30. சத்ரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி விருதுநகர். விருதுநகர்.   

31. நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி மெயின் ரோடு, அரியலூர்.
  
சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும்.  சான்றிதழ் சரிபார்ப்பு நாளுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது

சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, அவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண்கள்  ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். அந்தத் தகுதிபட்டியலின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுகதகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப்பட்டியல் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் உடனடியாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் உரிய பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள அரசு உதவி பெறும் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்கள்!!! - தினத்தந்தி ஆங்கில நாளிதழ்.

துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.7 வரை அவகாசம்.

தமிழக அரசின் பல்வேறு துறை களில் பணியாற்றும் ஊழியர்கள்மற்றும் அதிகாரிகள், அதே போல், அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் ஆகி யோரின் பதவி உயர்வுக்காக ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இத்தேர்வுகளை டிஎன்பி எஸ்சி நடத்துகிறது. அந்த வகை யில்,2017-ம் ஆண்டுக்கான முதலாவது துறைத்தேர்வுகள் மே 24 முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31 என்று முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந் தது. இந்த நிலையில், துறைத் தேர்வுகளுக்கு ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிப் பதற்கான கடைசி தேதி ஏப்.7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கான ஹால் டிக்கெட்டை விண் ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மே 17 முதல் 31 வரை டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் இருந்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள லாம். தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 7 மற்றும் 16 தேதியிட்ட டிஎன்பி எஸ்சி செய்தி வெளியீட்டில் வெளியிடப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா கூறியுள்ளார்.

7th PC : ஊழியர்களுக்கு புதிய 'அலவன்ஸ்' கிடைப்பதில்... தாமதம்? இன்னும் தீரவில்லை

மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஏற்ப, 'அலவன்ஸ்' எனப்படும், 'படி'களை மாற்றி அமைப்பதில், இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. 
இதனால், ஏப்., 1 முதல், புதிய விகித அடிப்படையில், 'படி' வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கப் படுகின்றன; ஊதியக் குழு பரிந்துரையின் அடிப் படையில், சம்பள விகிதம் மாற்றி அமைக்கப் படுகிறது.

அதன்படி, ஏழாவது ஊதியக் குழு அளித்த பரிந் துரைகளை, மத்திய அரசு, 2016ல் அமல்படுத்தி யது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, 23.5 சதவீதமும், ஓய்வூதியதாரர்களுக்கு, 24 சதவீதமும் ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, சம்பளத்துடன் கூடிய படியும், உயர்த்தப்பட வேண்டும். இது தொடர்பாக, மத்திய நிதித் துறை செயலர் தலைமையில், 2016 ஜூலையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பல மாதங்களாக ஆய்வு செய்து வரும் இக் கமிட்டி, தன் பரிந்துரைகளை சமர்ப்பிக்க, கால தாமததித்து வருகிறது. மத்திய அரசு ஊழியர் களுக்கு இதுவரை, 196 வித மான படிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில், பலவற்றை ரத்து செய்யும்படி, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்தது. அது போலவே, வீட்டு வாடகை படியை முடிவு செய்வதிலும் சிக்கல் நீடிக் கிறது. இக்கமிட்டி, நீண்ட ஆலோசனை நடத்திய பின்னும் முடிவு எட்டப்படவில்லை. சில தினங் களுக்கு முன், டில்லியில் கூடிய இக்கமிட்டி கூட்டத் தில், சில படிகளை ரத்து செய்வது தொடர்பாக, மத்திய அரசின், 14 துறைகளிடம் ஆலோசனை கேட்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதற்கு மேலும் தாமதமாக கூடும். எனவே, முன்ன தாக திட்டமிட்டபடி, புதிய நிதியாண்டின் துவக்க மான, ஏப்., 1ல் இருந்து, மாற்றியமைக்கப் பட்ட, படிகளை அமல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள் ளது.எனினும், பணிகளை முடித்து, பார்லி., கூட்டத் தொடர் முடிந்த பின், ஏப்., இறுதி யில், மத்திய அரசு, படி விபரங்களை அறிவிக்கலாம் என, தெரிகிறது. அதே சமயம், படிகளை, முன்தேதியிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வீட்டு வாடகை 'படியில்' மாற்றம்?

'மெட்ரோ' நகரங்களில், அடிப்படை சம்பளத் தில், 30 சதவீதம் வாடகை படியாக வழங்கப்படுகிறது. இதை, 24 சதவீதமாக குறைக்க வேண்டும் என,ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்து இருந்தது. இதற்கு, மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். எனவே, தற்போது உள்ளபடி,30 சதவீத வீட்டு வாடகை படியே,தொடர்ந்து வழங்க கமிட்டி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

53 படிகள் நீக்கம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு, தற்போது, 196 வித மான, 'படிகள்' வழங்கப்படுகின்றன. இவற்றில், சமையல், கண்காணிப்பு, முடிவெட்டுதல், சோப், சீருடை, துவைத்தல், ஷூ, சுருக் கெழுத்து என, பலவித படிகள் வழங்குவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. எனவே, இவற் றில் சில நீக்கப்படுகின்றன. மேலும், சில வற்றை ஒன்றிணைத்து ஒரேபடியாக வழங்க வும், கமிட்டி பரிந்துரைத்துள்ளது. அதன்படி, தற்போதுள்ள, 196 படிகளில், 53 படிகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், 36 படிகள் மற்றவற்றுடன் இணைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை செல்போனில் டவுன்லோடு செய்யலாம்: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு.

பள்ளி கல்வி துறை சார்பில் நடைபெற்ற விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூரில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 9 துறைகள் தோற்றுவிக்கப்பட்டு, கூடுதலாக 36 கல்வியாளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.கணினி யுகத்தின் டிஜிட்டல் தேவைகளை பூர்த்தி செய்ய மாணவர்களுக்கு தேவையான பாடப்பொருள் சார்ந்த 950 சிடிக்கள் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 10ம் வகுப்பு மாணவர்கள் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்கள் மூலம் தங்களது பாடங்களை டவுன்லோட் செய்து படிக்கும் வசதியும் இந்த ஆண்டு பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

வருமான வரியில் மாற்றம்: 10 அம்சங்கள் !!

அரசு துறைகளில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு, இன்று( ஏப்ரல்1 ) புது நிதியாண்டு பிறந்துள்ளது. மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது வருமான வரி நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அந்த மாற்றங்கள் இன்று முதல் 
அமலுக்கு வருகின்றன. இதேபோல், பல மாற்றங்களுடன் நிதி மசோதாவும் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த மாற்றங்கள் குறித்த, 10 அம்சங்கள்:1.ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாயில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாய்க்குள் இருப்பவர்களுக்கான வருமான வரி, 10 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் வருபவர்களுக்கு இதன் மூலம், 12,500 ரூபாய் வரித் தொகையில் குறையும். இதேபோல், ஐந்து லட்சம் ரூபாயில் இருந்து, 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, 12,900 ரூபாயும்; ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, 14,806 ரூபாயும் வருமான வரி குறையும்.

*புதிய வருமான வரி படிவம்*

2. தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை தவிர்த்து, ஆண்டு வருமானம், ஐந்து லட்சம் ரூபாய் வரை உள்ளவர்கள், வருமான வரி கணக்கு செலுத்த, ஒரே ஒரு பக்கம் கொண்ட படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் கீழ் முதல் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல்
செய்யபவர்களை வருமான வரித்துறை ஆய்வு செய்யாது.
3. 2017 - 18 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாமதமாக, 2018 டிசம்பர் 31ம் தேதி தாக்கல் செய்தால், 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அந்த தேதிக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்டால், அபராத தொகை உயரும். எனினும், ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் தாமதமாக தாக்கல் செய்தால், 1,000 ரூபாய் வரை மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.
4. ராஜிவ்காந்தி பங்கு சந்தை சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யபவர்கள், அந்த தொகையை வருமான வரி கணக்கில் காட்டி கழித்து கொள்ளலாம் என, 2012 - 13ல் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், 2018 -19 நிதியாண்டுக்கு பிறகு இந்த சலுகை கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

*அசையா சொத்து முதலீடு*

5. அசையா சொத்துக்களில் முதலீடு செய்பவர்கள், அவற்றுக்கு வரி செலுத்தாமல் மூன்று ஆண்டுகள் வரை வைத்து இருக்கலாம் என்ற நடைமுறை முன்பு இருந்தது. தற்போது, அது, இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல், அசையா சொத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்க, 20 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்.
6. நீண்டகால முதலீடுகள் மூலம் லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கும் புது சிக்கல் வந்துள்ளது. இதற்கான அடிப்படை ஆண்டு, 1981 ஏப்ரல், 1ம் தேதியில் இருந்து, 2001 ஏப்ரல், 1ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.
7. தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையமான நகாய், ஆர்.இ.சி., ஆகியவற்றின் பத்திரங்களில் முதலீடு செய்யபவர்களுக்கு வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சலுகை மேலும் சில பத்திரங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
8. மாத வாடகையாக, 50,000 ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் தனி நபர்கள், 5 சதவீத டி.டி.எஸ்., பிடித்தம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிக தொகையை வாடகையாக பெறுபவர்களில் ஏராளமானோர் வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள். இது, வரும் ஜூன், 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

*ஆதார் கட்டாயம்*

9.ஜூலை, 1ம் தேதி முதல் பான் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களும், வருமான வரி கணக்கு செலுத்துபவர்களும் ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்துடன், ரொக்க பண பரிமாற்ற அளவு, இரண்டு லட்சம் ரூபாய் வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10. தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள தொகையில் ஒரு பகுதியை திரும்ப பெறுபவர்கள், அதற்காக எந்த வரியையும் செலுத்த வேண்டாம். அதாவது பென்ஷன் தொகையில், 25 சதவீதம் வரை அவசர தேவைக்காக, பணி ஓய்வு பெறுபவதற்கு முன்பே திரும்ப பெறலாம். அதே போல், பணி ஓய்வு பெறும் போது, பென்ஷன் தொகையில், வரி ஏதும் இல்லாமல், 40 சதவீதம் வரை திரும்ப பெறலாம்.

இத்துடன், கார், இருசக்கர வாகனம், மருத்துவ காப்பீடு ஆகியவற்றுக்கான பிரிமியம் தொகை, இன்று முதல் அதிகரிக்கிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்து இருப்பவர்கள், குறைந்தபட்ச தொகையை இருப்பு வைக்காமல் இருந்தால், அபராதம் செலுத்தும் திட்டமும், இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!