Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 3 April 2017

மாணவர்களுக்கு சட்டைப் பொத்தான்களை தைக்கக் கற்றுத்தரும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

‘தபால் பெட்டி!’ இந்த வார்த்தைக்கு மாணவர்களிடையே என்ன அர்த்தம் தெரியுமா? பள்ளி அல்லது வேறு இடங்களில் வழுக்கு மரம் விளையாட்டில் சறுக்கி, சறுக்கி ஆடும் மாணவருடைய கால்சட்டையின் பின்புறம் கிழிந்துவிடும். அந்த மாணவனையே மற்ற மாணவர்கள் தபால் பெட்டி என்று பட்டப் பெயர் வைத்துகூப்பிடுவார்கள். சிறுவயதில் உங்களையும் யாரேனும் இப்படி அழைத்திருக்கக்கூடும்.

மாணவர்கள் விளையாட்டின் ஆர்வத்தில் தங்கள் ஆடைகளை அழுக்காவது மட்டுமல்ல கிழிந்துபோவதுகூட தெரியாமல் விளையாடுவார்கள். இதில் நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லை என்றாலும் கிராமத்தில் அப்படி விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படிப்பட்ட கிராமங்களில் ஒன்றுதான் குடியாத்தம் ஒன்றியத்தில் இருக்கும் ஆர்.வெங்கடாபுரம்.

இந்த  ஊரில் இருக்கும் ஆதி திராவிட நல ஆரம்பப் பள்ளி மாணவர்கள் தினந்தோறும் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வந்தாலும், அவர்களின் ஆடைகள் சரியாக இருப்பதில்லை. பொத்தான்கள் பிய்ந்தும், ஓரத்தில் கிழிந்தும் இருக்கும். இவற்றைச் சரிசெய்யச் சொல்லி ஆசிரியர்கள் பலமுறை சொல்லியும் எந்த மாற்றமும் இல்லை. அதற்கு ஒரு முடிவு எடுத்தார் அந்தப் பள்ளியின் ஆசிரியர் வி.டி.ஜானகி ராமன்.


“எங்கள் பள்ளியின் மாணவர்கள் நன்றாக படிக்கக் கூடியவர்கள். சொன்னப் பேச்சைக் கேட்பவர்கள்தான். ஆனால் இந்த ஆடை விஷயம் மட்டும் விதிவிலக்கு. தமிழ்நாடு அரசு முதல் பருவத்தின்போது இரண்டு செட் சீருடைகளும் அடுத்தடுத்த இரண்டு பருவங்களின்போது தலா ஒரு செட் சீருடைகளையும் தருகிறது. மாணவர்களுக்கு இது போதுமான எண்ணிக்கைத்தான் என்றாலும் விளையாட்டு மும்மரத்தில் சட்டையைப் பற்றி கவலைப் படுவதில்லை. சிலரின் சட்டைகளின் ஒரு பொத்தான்கூட இல்லாமல் இரண்டு இடங்களில் ஊக்குகள் மாட்டுக்கொண்டு பள்ளிக்கு வருவார்கள். அவர்களின் பெற்றோர்களின் பெரும்பாலோனோர் தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள். வேலை முடிந்து களைத்து வருபவர்கள். அதனாலோ என்னவோ பிள்ளைகளின் ஆடைகளைச் சீர்ப்படுத்தி அனுப்புவதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை என்று நினைக்கிறேன்.

மாணவர்களிடம், 'ஆடையைச் சரிச் செய்து வா' எனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பதால் மட்டுமே இந்தப் பிரச்னை தீர்ந்துவிடாது என முடிவுக்கு வந்தேன். பொத்தான்கள், நூல் கண்டுகள், ஊசி முதலியவற்றை வாங்கி வந்தோம். அவற்றைக் கொண்டு ஆடைகளிலிருந்து விழுந்த பொத்தான்களுக்குப் பதிலாக வேறு பொத்தான்களை எப்படி தைப்பது எனக் கற்றுத்தந்தேன். மாணாவர்களும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டனர். உடனே, தன் சட்டையில் ஒரு பொத்தானை வைத்து தைத்துப் பார்த்தான் ஒரு மாணவன்.

ஒவ்வொரு மாணவருக்கும் பத்து பொத்தான்கள், ஊசி, நூல்கண்டு ஆகியவற்றைக் கொடுத்தேன். விடுமுறை நாட்களில் தங்கள் ஆடைகளைச் சரிசெய்யச் சொல்லியுள்ளேன். பொத்தான்களை தைப்பதோடு, சின்னக் கிழிசலையும் தைத்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளேன்." என்கிறார் ஜானகிராமன்.

மாணவர்களுக்கு கல்வியைப் போலவே பல்வேறு விஷயங்களை அளித்து வருகின்றனர் இந்தப் பள்ளி ஆசிரியர்கள். அறிவியல் அறிஞர்கள், தேசத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர்களின் பிறந்த நாள் வரும்போது, அவர்களின் உருவத்தை பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான ஓவியங்களை வரைகின்றனர் மாணவர்கள்.

“மாதம் தொடங்கியதுமே அந்த மாதத்தில் பிறந்த சிறப்பானவர்கள் யார் என்று குறித்துக்கொள்வோம். அவர்களில் ஓவியம் வரையத் தேர்ந்தெடுத்தவர்களின் உருவத்தை கரும்பலகையில் வரைவேன். அதை மாணவர்கள் தங்கள் நோட்டில் வரைந்து பழகுவார்கள். பின், மைதானத்தில் கோல மாவினைக் கொண்டு பிரமாண்டமான அளவில் அந்த உருவத்தை வரைவார்கள். அவர்கள் வரைந்துகொண்டிருக்கும்போது அந்தத் தலைவர் பற்றிய செய்திகளைக் கூறிக்கொண்டே இருப்பேன். இப்படி வரையச் சொல்வதன் மூலம் அந்தத் தலைவர் அல்லது விஞ்ஞானியின் முகம் மாணவர்களின் மனதில் தெளிவாக பதிந்துவிடும்." என்கிறார் ஜானகிராமன்.

கல்வியோடு மாணவர் நலன் சார்ந்த விஷயங்களின் கவனம் காட்டும் ஜானகிராமன் போன்ற ஆசிரியர்கள் அதிகரிக்க வேண்டும்.

2017 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை !!

13.04.2017- வியாழன்- பெரிய வியாழன்*
*14.04.2017-வெள்ளி-அம்பேத்கார் பிறந்த நாள்*
*16.04.2017-ஞாயிறு-ஈஸ்டர்*

*25.04.2017-செவ்வாய்-ஷபே மிராஜ்*
*10.05.2017-புதன்-சித்ரா பவுர்ணமி / புத்தர் ஜெயந்தி*

*12.05.2017 –வெள்ளி-ஷபே பாரத்*
*28.05.217-ஞாயிறு- ரம்ஜான் நோன்பு முதல் நாள்*
*22.06.2017- வியாழன்- ஷபே காதர்*
*03.08.2016-வியாழன்-ஆடிப்பெருக்கு*
*04.08.2017-வெள்ளி-வரலட்சுமி விரதம*்
*07.08.2017-திங்கள்-ரிக் உபகர்மா*
*08.08.2017-செவ்வாய்-காயத்ரி ஜெபம்*
*25.08.217-வெள்ளி-சாம உபகர்மா*
*31-08.2017-வியாழன்-அர்ஃபா*
*04.09.2017-திங்கள்-ஓணம்*
*22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு*
*18.10.2017-புதன்-தீபாவளி நோன்பு*
*02.11.2017-வியாழன்-கல்லறைத் திருநாள்*
*04.11.2017-சனி-குருநானக் ஜெயந்தி*

*02.12.2017-சனி-திருக்கார்த்திகை.

TEACHING OF ENGLISH PHONETICS FOR PRIMARY & UPPER PRIMARY

CLICK HERE - PRONOUNCING LETTERS - 1

CLICK HERE - PRONOUNCING LETTERS - 2

CLICK HERE - PRONOUNCING LETTERS - 3

CLICK HERE - PRONOUNCING SIMPLE WORDS - 1

CLICK HERE - PRONOUNCING SIMPLE WORDS - 2

CLICK HERE - PRONOUNCING SIMPLE WORDS - 3

CLICK HERE - PRONOUNCING SIMPLE WORDS - 4 (PREPOSISITIONS & CONJNCTIONS)

CLICK HERE - PRONOUNCING CONSONANTS & VOWELS

CLICK HERE - PRONOUNCING SIMPLE WORDS - SOUNDS OF WORDS

SCERT - Animation Workshop For Teachers - 2017

CLICK HERE TO REGISTER | UR NAME...

வங்கிக் கணக்கில் தினமும் ரூ.5000 வைத்திருப்பது அவசியமா? அறிய வேண்டிய மகிச்சியான தகவல்.

வங்கிக் கணக்கில் 'குறைந்த சராசரி இருப்புத்' தொகையாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1000 வரை வைத்திருக்க வேண்டியதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

இதே சில தனியார் வங்கிகள் உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் குறைந்த சராசரி இருப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். தவறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை பலரால் சரியாக புரிந்து கொள்ளப்பட்டாலும், கணக்கு வைத்திருக்கும் சிலருக்கு இது மிகுந்த குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வங்கிக் கணக்கில் எப்போதுமே 5 ஆயிரம் ரூபாய் இருப்பு இருக்க வேண்டுமா? ஒரு நாள் கூட 5 ஆயிரத்தில் இருந்து 1000 ரூபாய் எடுத்துவிட்டாலும் அபராதம் விதிக்கப்படுமா? குறைந்த மாத ஊதியம் பெறுவோர் இதனை எப்படி எதிர்கொள்வது என்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

முதல் விஷயம் என்னவென்றால், குறைந்த சராசரி இருப்புத் தொகை ரூ.5000 என்பது சரியாக புரிந்து கொள்ளப்படாததே இதற்குக் காரணம்.

அதாவது குறைந்த சராசரி இருப்புத் தொகை என்றால், ஒரு மாதம் முழுவதும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தின் சராசரி இருப்புத் தொகையாகும். வங்கிக் கணக்கில் ஒவ்வொரு நாளும் இருக்கும் பணத்தை அதாவது 30 நாளும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைக் கூட்டி அதனை 30 அல்லது 31 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகைதான் குறைந்த சராசரி இருப்புத் தொகையாகும். இந்த ஈவுத் தொகை ரூ.10,000 ஆக இருந்தால், மாதக் கடைசியில் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2000 அல்லது அதற்கும் கீழ் இருப்பு குறைந்தாலும், எந்த அபராதமும் விதிக்கப்படாது.

உதாரணத்துக்கு...
உங்களது சம்பளம் 30 ஆயிரம் ரூபாயாக இருந்து, மாதத்தின் முதல் நாளில் இருந்து 5 நாட்களுக்கு அந்த 30 ஆயிரத்தை எடுக்காமல் விட்டுவிட்டால் ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் இருந்ததாகக் கணக்கில் எடுக்கப்படும். எனவே, 30 ஆயிரம் ரூபாய், 5 நாட்கள் வைத்திருந்ததால் 5 ஆல் பெருக்கப்படும். அது ரூ.1,50,000/-. இந்த தொகையை 30 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகை ரூ.5000. எனவே, அந்த மாதத்தின் குறைந்தபட்ச சராசரி இருப்புத் முதல் 5 நாட்களிலேயே பூர்த்தியாகிவிடுகிறது. அதன்பிறகு நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5000க்கும் குறைவாகப் பணம் வைத்திருந்தாலும் அதற்காக அபராதம் வசூலிக்கப்படாது.

இந்த அடிப்படையில் தான் குறைந்தபட்ச இருப்புத் தொகை கணக்கிடப்படுகிறது. எனவே, ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்பது புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளத்தின் அளவைப் பொருத்து ஓரிரு நாட்கள் கூடுதலாகவோ, குறைவாக பணத்தை வைத்திருந்தாலே அபராதத்தைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அதோடு, மாநகராட்சிகளில் இயங்கும் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே ரூ.5000 என்பது குறைந்த சராசரி இருப்புத்தொகை அவசியம். நகராட்சி மற்றும் கிராமப் புற வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 என்பதுதான் குறைந்த சராசரி இருப்புத் தொகையாகும்.

இது தவிர, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்படுகிறது.

அதாவது, எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆனால், வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?

நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், நிச்சயம் இந்த தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.

குறைந்த பண இருப்பு
பெரு நகரங்களில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயை இருப்பாக வைத்திருக்க வேண்டும். ஊரக, பாதி ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 என இருப்பு வைக்க வேண்டியது அவசியம். இது குறித்து மேலே விரிவாகவே பார்த்துவிட்டோம்

குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால்?

எஸ்பிஐயின் மாற்றப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில், மாதாந்திர வங்கி இருப்பு சராசரித் தொகை குறைந்த இருப்புத் தொகையை விட குறைந்தால், ரூ.100 அபராதமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

மெட்ரோ வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5000க்குக் கீழே இருப்பு வைத்தால் ரூ.100ம், 5 ஆயிரத்தில் பாதித் தொகை மட்டுமே இருந்தால் ரூ.50ம் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

ஊரக, புறநகர்ப் பகுதிகளுக்கு ரூ.20 முதல் 50 வரை அபராதமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும். இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து தகவல் அனுப்பப்படும்.

டெபாசிட் செய்யவும் கட்டுப்பாடு
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மாதத்துக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணத்தை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.50 கட்டணமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

ஏடிஎம்மில் பணம் எடுக்க
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.

எஸ்எம்எஸ் சேவைக் கட்டணம்
எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்-களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை ரூ.15ஐ கட்டணமாக பிடித்தம் செய்கிறது.

இந்த கட்டணங்கள், எஸ்பிஐ வங்கி மற்றும், அதனுடன் இணையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 6 வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

எஸ்பிஐ வங்கியுடன் மகளிர் வங்கி உள்பட 6 வங்கிகள் இணைப்பு

பாரதிய மகளிர் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் உள்பட 6 வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியுடன் சனிக்கிழமை முறைப்படி இணைந்தன. இதன்மூலம், உலகிலேயே சொத்துகள் அடிப்படையில் முதல் 50 இடத்தில் உள்ள வங்கிகளில் எஸ்பிஐயும் இடம்பெற்றுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய 5 வங்கிகளின் ஊழியர்களும் எஸ்பிஐயுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

எனினும், முடிவில் எஸ்பிஐயுடன் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பாரதிய மகளிர் வங்கி உள்பட 6 எஸ்பிஐ சார்பு வங்கிகளும் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்தன.

இந்த வங்கிகளின் இணைப்பு மூலம் எஸ்பிஐயின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மொத்தம் 24ஆயிரமாகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 59 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

2009 ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்டவர்களின் -ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வலியுறுத்தி விரைவில் போராட்டம் -இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு.

அனைத்து பாடப்பிரிவினரும் சி.ஏ., படிப்பில் சேரலாம்''

பிளஸ் 2வில், எந்த பிரிவு மாணவர்களும், சி.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்புகளில் சேரலாம்' என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
'தினமலர்' மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து வழங்கும், வழிகாட்டி நிகழ்ச்சியில், இரண்டாம் நாளான நேற்று, இன்ஜினியரிங், ஆட்டோமேஷன், ஐ.டி., துறை மற்றும்சி.ஏ., என்ற ஆடிட்டர் படிப்பு குறித்தும், 'நீட்' தேர்வுக்கு தயாராகும் முறை குறித்தும், கல்வியாளர்கள் ஆலோசனை அளித்தனர்.ஆடிட்டர் சரவண பிரசாத்: ஆடிட்டிங் துறையில் வேலைவாய்ப்புகளை பெற, சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்பில் ஒன்றை, படிக்க வேண்டும். இந்த மூன்று படிப்புகளும், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின்படி நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளை, தொலைநிலையில் மட்டுமே படிக்க முடியும். ஆடிட்டிங் துறைக்கு கடினமான பயிற்சி அவசியம். பயிற்சி எடுத்தால், தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம். முதலில் தகுதி தேர்வும், பின், இடைநிலை தேர்வும், பின், இறுதி நிலை தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறுவோர், ஓர் ஆண்டு நிறுவன பயிற்சியை மேற்கொள்ள, சி.ஏ., அமைப்பு ஏற்பாடு செய்கிறது. பயிற்சிக்கு பின், கேம்பஸ் மூலம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். முதல் வேலைவாய்ப்பிலேயே, மாதம், 50 ஆயிரம் முதல், 75 ஆயிரம்ரூபாய் வரை சம்பளம் பெறலாம். அதேபோல, பி.காம்., ஹானர்ஸ்உடன், ஒரே ஆண்டில், சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்புகளை படிக்கவும் வாய்ப்பு உள்ளது.

கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி:

எந்த கோர்ஸ் படித்தாலும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் வர வேண்டும். மாணவர்கள் வெறும் பாட புத்தகத்தை படிக்காமல், தொழிற்சாலை, தொழில் நிறுவனங்களுக்கு என்ன தேவையோ, அதைபடித்தால் மட்டுமே வேலை கிடைக்கும். படிக்கும் போதே திறனை வளர்த்து கொள்ள வேண்டும். எதில், வாய்ப்பு, வளர்ச்சி என்பதை தெரிந்து, படிப்புகளை தேர்வு செய்யுங்கள்.

இன்ஜினியரிங் துறையில் மட்டுமே, ஆண்டுக்கு, மூன்று லட்சம் வேலை வாய்ப்புகள் உறுதியாக கிடைக்கின்றன. படிக்கும் போதும், வேலையில் சேர்ந்த பிறகும் போராட்டங்களில் ஈடுபடாதீர்கள். சமீபத்தில், தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட, 458 பேரை, கார்ப்பரேட் நிறுவனங்கள் வேலையை விட்டு வெளியேற்றி உள்ளன. படிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது போல, கல்லுாரியை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு கல்வியாளர்கள் பேசினர்.

உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல்!

வரும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த இயலாது என்பதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

வரும் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென்று கோரி பாடம் நாராயணன் என்ற சமூக ஆர்வலர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் உரிய ஏற்பாடுகளை நிறைவு செய்து வருமே மாதம் 14-ஆம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தர விட்டிருந்தது.

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதன் தனிச் செயலாளர் ராஜசேகர் என்பவர் இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.  அந்த மனுவில் 'தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை முழுமை செய்யும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை,எனவே நீதிமன்றம் உத்தரவில் கூறியிருந்தபடி வருமே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேத்தல்களை நடத்த முடியாது.  எனவே கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்'  என்று கோரப்பட்டிருந்தது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!