Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 6 April 2017

Lab Asst சான்றிதழ் சரிபார்ப்பிற்கு எடுத்து செல்ல வேண்டிய சான்றிதழ்கள் விவரம் !!

Certificates for lab asst CV

1. Xerox copies 3set with self attested
2.Passport size
colour photo

Original certificates .
1. SSLC MARK.SHEET
2. PSTM

3. HSS MARK SHEET
4. DEGREE CONVOCATION
5. EMPLOYMENT CARD
6. COMMUNITY CERTIFICATE
Additional
1.Experience certificate in lab asst.

விளையாட்டு போட்டிகளுக்கு 3 மாதம் கெடு : ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி !!

பள்ளி அளவிலான விளையாட்டு போட்டிகளை, மூன்று மாதத்தில் முடிக்க, கல்வித்துறை கெடு விதித்துள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசு, விளையாட்டு மேம்பாட்டிற்காக, ஆண்டுக்கு, 90 கோடி ரூபாய்க்கும் மேல், நிதி ஒதுக்குகிறது. பள்ளி மாணவர்களின் விளையாட்டுக்கு மட்டும், 20 கோடி கிடைக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு, ஜூன் துவங்கி, டிசம்பர் வரை, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

வரும் கல்வியாண்டில், விளையாட்டு போட்டிகளை, ஆக., மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என, உடற்கல்வி இயக்குனர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், போதிய உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. இருக்கும் ஆசிரியர்களை, 'டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்'களாகவும், அலுவலக பணிகளை செய்வோராகவும், தலைமை ஆசிரியர்கள் மாற்றி விடுகின்றனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில், கூடுதல் நேரம் ஒதுக்கி, பயிற்சி அளித்து, அவர்களை போட்டிக்கு தயார் செய்கிறோம். பல நேரங்களில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானங்கள், பள்ளி மாணவர்களின் பயிற்சிக்கு கிடைப்பது இல்லை. அப்படியும், மண்டலம் முதல், மாநிலம் வரையில், பல கட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தி
வருகிறோம். பள்ளி துவங்கிய, மூன்று மாதத்திற்குள் அனைத்து போட்டிகளை முடிக்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மூன்று மாதங்களுக்குள், மாநில போட்டிகளுக்கு பயிற்சி அளிப்பது எப்படி; ஆசிரியர் காலியாக உள்ள இடங்களில் பயிற்சி கொடுப்பது யார்; மைதானங்கள் கிடைக்காத பிரச்னைக்கு முடிவு என்ன என்றெல்லாம், கல்வி அதிகாரிகள் யோசிக்கவில்லை.
போட்டிகளுக்கு பின், பரிசு கொடுக்கும் விழாவுக்கு, 'பந்தாவாக' வரும் அதிகாரிகள், மைதானத்தில் பயிற்சி அளிக்கும் போது வந்தால், மாணவர்கள், ஆசிரியர்களின் நடைமுறை சிக்கல்கள் தெரியும். இதை மனதில் கொண்டு, போட்டிக்களுக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடக்கக்கல்வி - உயர்தொடக்கநிலை பள்ளிகளில் "PROJECT BASED LEARNING" செயல்படுத்த நிதி ஒதுக்கி இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள் !!


தொடக்கக் கல்வி - 50 வருடங்களுக்கு மேல் இயங்கும் பள்ளிகள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களால் துவக்கப்பட்ட இதர சிறப்பு வாய்ந்த பள்ளிகளின் விவர பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு -நாள் 05/04/2017

TET-2017 பழைய வெயிட்டேஜ் முறையே தொடரும்

TET-2017 பழைய வெயிட்டேஜ் முறையே தொடரும்
Flash news..
பழைய வெயிட்டேஜ் முறையே தொடரும் ....
அமைச்சர் செங்கோட்டையன்
அறிவிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு: கல்வித்தரம் குறையும் என குற்றச்சாட்டு.

அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் களுக்கு தகுதித்தேர்வு அவசியம் இல்லை என்ற முடிவால் கல்வித்தரம் குறையும் என பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2010-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

தமிழகத்தில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 29-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 30-ம் தேதியும் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது.அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணியில் சேர தகுதித் தேர்வு அவசியம் இல்லை என்ற நீதிமன்றத்தின் ஆணையை பள்ளிக் கல்வி இயக்குனரகம் சுட்டிக்காட்டி, அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விலக்களித்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள தெளிவுரையில், சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் (பணி நிரந்தரம் ஆகாதவர்கள்) ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் எழாது அதை நிர்பந்திக்கவும் முடியாது. மேலும், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வுக்கு பதிலாக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக கோடை விடுமுறை நாட்களில் புத்துணர்வு பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணியில் (பணி நிரந்தரம் ஆகாதவர் கள்) இருப்பவர்கள் தற்போது நடைபெறவுள்ள தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவிட்டால் பணியில் இருந்து நீக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ளது. இந்த உத்தரவால் சிறுபான்மை பள்ளிகளின் கல்வித் தரம் குறைந்துவிடும் என்று பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் சிலர் கூறியதாவது:தமிழகத்தில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்றோர் நடத்தும் அரசு உதவி பெறும் சில பள்ளிகள் அரசு விதிகளுக்கு மாறாக கட்டணம் வசூலிப்பது, தரமற்ற ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர். இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களின் தரத்தை உறுதி செய்யும் கடமை பள்ளிக் கல்வித்துறைக்கு உள்ளது.ஆனால், வழக்குகளில் மேல் முறையீடு ஏதும் செய்யாமல், சிறுபான்மை பள்ளி ஆசிரியர் களுக்கு தகுதித் தேர்வு அவசியம் இல்லை எனக்கூறுவதை மாணவர்களின் கல்வித்தரத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, “சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற அறிவிப்பு, ஆசிரியர் நியமனங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வி இயக்குனரகம் தெளிவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்” என்றனர்.

இதனிடையே, அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் 1000-க்கும் மேற்பட்டோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதித்தேர்வு இன்றி அவர்களைபணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கை துவக்கி வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்

எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ முடித்த பிறகு என்ன படிக்கலாம் என்ற கேள்விக்கு விடை காண்பதுதான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. முன்னேறிய நகர்ப்புறங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை வழங்க தனியார் கலந்தாலோசனை மையங்கள் உள்ளன. 
ஆனால் சிறுநகரங்கள், கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு எதிர்கால கல்வி வாய்ப்புகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.

இந்த நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சியை எடுத்துள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கும் உதவும் வகையில், இன்றும் நாளையும் மாநிலம் முழுவதும் ஆயிரத்து 162 ஆலோசனைக் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்து, எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் பொன்மாரில், எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ மாணவர்களுக்கான வழிகாட்டுதல் ஆலோசனைக் கருத்தரங்கை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ மாணவர்களுக்காக நடைபெறும் இந்த ஆலோசனை மையங்களில் கல்வி, வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதோடு அதற்கான கையேடுளும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.10ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களை பொறுத்தவரை ஃபர்ஸ்ட் குரூப் தொடங்கி ஃபோர்த் குரூப் வரை உள்ள 4படிப்புகள்தான் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்திருக்கிறது.

 பள்ளிக் கல்வித்துறை வழங்கும் கையேடுகளில், 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான படிப்புகள் பற்றி விவரங்கள் முழுமையாக இடம்பெற்றிருக்கின்றன. மேல்நிலையில் படிப்பதற்கு 4 குரூப்புகள் என்ற எண்ணத்தை தகர்த்து, தொழில் கல்வி பிரிவுகள், கல்வி உதவித் தொகை திட்டங்கள், திறனறித் தேர்வுகள், பாலிடெக்னிக், ஐடிஐ, பொறியியல் தொழில் பிரிவுகளுக்கான ஓராண்டு, ஈராண்டு பயிற்சிகள், பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகள், தொழில்பழகுநர் பயிற்சி தொடங்கி சுயவேலைவாய்ப்பு வரை உள்ள விவரங்கள் அடங்கியுள்ளன.பிளஸ் டூ மாணவர்களை பொறுத்தவரை மருத்துவம், பொறியியல் அதைவிட்டால் கலை அறிவியல் கல்லூரிகள் என்ற எண்ணம்தான் பரவலாக இருக்கிறது. ஆனால் இவற்றைத்தாண்டி இன்று எத்தனையோ படிப்புகள் உள்ளன.

தொழில்முனைவு சார்ந்தும், சுயதொழில் செய்வதற்கும் குறுகிய கால படிப்புகள், மத்திய-மாநில அரசுகளின் கல்வி உதவிகள், தேசிய அளவிலான 30-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள், அவற்றிற்கு தயாராவதற்கான வழிமுறைகளை விளக்கும் கையேடுகளும் கருத்தரங்களில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன. பிளஸ் டூ மாணவர்களுக்கான கையேட்டில், மருத்துவம், பொறியியல் மற்றும் அவை சார்ந்த படிப்புகள், கலை, அறிவியல் படிப்புகள், வணிகவியல் படிப்புகள், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான படிப்புகள், கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு, சுயதொழில், திறன்மேம்பாடு தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் நடத்தப்படும் உயர்கல்விக்கான 31 நுழைவுத் தேர்வுகள் குறித்த விவரங்களும் பிளஸ் டூ மாணவர்களுக்கான கையேட்டில் இடம்பெற்றுள்ளன.

வெயில் தாக்கம்: பள்ளிகளுக்கு முன்கூட்டியே லீவு?

கோடை வெயிலின் உச்சத்தால், பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்படுகிறது. சமச்சீர் கல்வியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் முடிந்து, விடைத்தாள் திருத்தம் நடந்து வருகிறது.
பிளஸ் 1 மாணவர்களுக்கும்,தேர்வுகள் முடிந்து விட்டன. மற்ற மாணவர்களுக்கு, ஏப்., 29 வரை தேர்வு நடத்தி, அதன்பின், விடுமுறை அறிவிக்க, திட்டமிடப்பட்டிருந்தது.

திட்டம் : ஆனால், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால்,முன்கூட்டியே கோடை விடுமுறை விட, தனியார் பள்ளிகள் திட்டமிட்டன. பல பள்ளி வளாகங்களில், 'வர்தா' புயலால், மரங்கள் விழுந்து, நிழல் இல்லாமல், வெட்ட வெளியாக காணப்படுகின்றன. இதனால், வகுப்பறைகளில் வெப்பம் அதிகமாக உள்ளது. அதேபோல், பெரும்பாலான மாவட்டங் களில்,தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அதையும் சமாளிக்க முடியாமல், பள்ளி நிர்வாகங்கள் அவதிப்படுகின்றன. இந்த காரணங்களை பள்ளிகள் முன் வைத்ததால், கோடை விடுமுறையை முன்கூட்டியே விட,கல்வித்துறை அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர்.

தேர்வுகள் : எனவே, பல தனியார் பள்ளிகள், இன்று முதல், ஏப்., 14க்குள் விடுமுறையை அறிவிக்க முடிவு செய்து, தேர்வுகளை விரைவுபடுத்தியுள்ளன. பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு பள்ளிகளில், ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று முன் தினம் தேர்வுகள் துவங்கின. ஏப்., 21ல், தேர்வு முடிந்து, விடுமுறை விடப்படுகிறது.

தொடக்க பள்ளிகள் தவிப்பு : தொடக்க கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், ஆண்டுக்கு, 220 நாட்கள் வேலை நாட்களாக இருக்க வேண்டும். இதனால், ஏப்., 29 வரை பள்ளிகளை நடத்த, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''கோடை வெயிலை கருதி, தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் சிறார்களுக்கும் முன்கூட்டியே விடுமுறை விட, அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். இந்த பள்ளிகள், பெரும்பாலும் கிராமங்களில் இருப்பதால், மாணவர்கள் கோடை வெயிலில், நீண்ட துாரம் வந்து செல்வது தவிர்க்கப்படும்,'' என்றார்.

தமிழ், ஆங்கிலத்தில் 'சென்டம்' ரத்து : 10ம் வகுப்பு தேர்வில் அதிரடி.

சமீபத்தில் முடிந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், ஆங்கில பாடங்களுக்கு, 'சென்டம்' என்ற நுாற்றுக்கு நுாறு மதிப்பெண், ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிந்த, 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்கியது.
முதல் நாளில், விடைத்தாள்களை முதன்மை விடை திருத்துனர்கள் திருத்தி, விடை குறிப்புகளை ஆய்வு செய்தனர்.ஏப்., 2 முதல், உதவி திருத்துனர்கள் மூலம் திருத்தம் நடக்கிறது. முந்தைய ஆண்டுகளில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், தமிழில் சரிவர எழுத சிரமப்பட்டதும், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில், தமிழில் திணறியதும் தெரிந்தது. எனவே, மொழி பாடத்தில், 'சென்டம்' மதிப்பெண் வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.'சென்டம்' வழங்க, பல கட்ட மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது. உச்சகட்டமாக, இந்த ஆண்டு, 100 மதிப்பெண் வழங்கு வதையே, தேர்வுத்துறை ரத்து செய்துள்ளது.

அதாவது, விடைத்தாளில், இறுதி மதிப்பெண் வழங்கும் முகப்புபக்க சீட்டில், 100 மதிப்பெண் இடுவதற்கான கட்டம் மாற்றப்பட்டு, 99 என்ற இரண்டு இலக்கம் எழுதும் வகையில், மாற்றப் பட்டுள்ளது. மூன்றாவது கட்டத்தில், புள்ளி வைக்கப்பட்டுள்ளது.மற்ற பாடங்களுக்கு, 100 என்று எழுதும் வகையில், மூன்று கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலத்திற்கு, 'சென்டம்' மதிப்பெண் இருக்காது, என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

TET - 2012 வரை சீனியாரிட்டி முறையில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களிடம் கடைசி தகுதிதேர்வு என எழுதி வாங்ககூடாது - தடை ஆணை வெளியீடு.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் (non-minority) மற்றும் அரசுபள்ளி ஆசிரியர்கள், 2012 வரை சீனியாரிட்டி முறையில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களிடம் கடைசி தகுதிதேர்வு என எழுதி வாங்ககூடாது என்பதற்கான தடை ஆணை!
 

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!