Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 9 April 2017

அரசுப்பள்ளி பகுதிநேர இசை ஆசிரியருக்கு ஜோக்கர் படத்தில் பாடலை பாடியமைக்காக தேசிய விருது

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கொலசனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பகுதி நேர இசை ஆசிரியர் திரு.சுந்தர் அவர்களுக்கு ஜோக்கர் படத்தில் ஜாஸ்மின் என்ற பாடலை பாடியமைக்காக சிறந்த பாடகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

நமது குழந்தை செல்வங்களின் கணித அறிவினை வளர்க்கும் கணித கலைக்களஞ்சியம்

நமது குழந்தை செல்வங்களின் கணித அறிவினை வளர்க்கும் கணித கலைக்களஞ்சியம் ஒன்று இருக்கிறது இதில் கிண்டர்கார்டன் முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு வயதினர்க்கும் ஏற்றவாறு வலைத்தள முகவரிகள் பிரிக்கப்பட்டு உள்ளது. கணித விளையாட்டுகள் ,கணித செயல்பாடுகள் , கணிதம் சார்ந்த மென்பொருட்கள் , கணிதம் சொல்லித்தரும் காணொலிகள் என அனைத்திற்கும் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. கீழ்கண்ட இணைப்பின் மூலம் கணித கலைக்களஞ்சித்தை அணுகி அதில் காணப்படும் நவீன உத்திகளை பயன்படுத்தி வகுப்பறையில் வியக்கத்தகு கொண்டுவர வாழ்த்துகள். 
 
CLICK HERE....

சதுரங்க போட்டியில் சாதிக்கும் அரசுபள்ளி; ஊக்குவிக்கும் கிராம மக்கள், ஆசிரியர்கள் !!

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கெடு.

மதுரையில் தொடக்க பள்ளியில் கலெக்டர் வீரராகவராவ் நடத்திய ஆய்விற்குபின் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தி நடவடிக்கை எடுக்க உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு (ஏ.இ.ஓ.,க்கள்) ஒரு மாதம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
வரிச்சியூர் அருகே தட்சனேந்தல் அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த வாரம் கலெக்டர் நடத்திய ஆய்வில், எட்டாம் வகுப்பு மாணவர்களால் ’மதுரை’, ’ஸ்கூல்’,’டாய்லெட்’, ’சயின்ஸ்’ போன்ற ஆங்கில வார்த்தைகள் கூட பலருக்கு எழுத தெரியவில்லை.ஆறாம் வகுப்பு மாணவர்களால் தமிழ் வாசிக்க தெரியவில்லை என தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அப்பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.இந்நிலையில் சி.இ.ஓ., ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவின்பேரில், திருமங்கலத்தில் விடைத்தாள் திருத்தும் பணிப் பொறுப்பில் உள்ள தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) முத்தையா, அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களையும் அழைத்து நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது, ’மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களில் தலா ஒரு உதவி மற்றும் கூடுதல் ஏ.இ.ஓ.,க்கள் உள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பள்ளிகளிலாவது மாணவர் கற்றல், கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய வேண்டும்.

தொடக்க பள்ளியில் ஆசிரியர் ஈடுபாடுடன் பணியாற்றுகிறார்களா என கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் தரமான கல்வி பெற அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.ஒரு மாதத்தில் மீண்டும் ஏதாவது பள்ளியில் கலெக்டர் ஆய்வு நடத்தும்போது அப்போதும் கற்றல் திறனில் முன்னேற்றம் இல்லையென்றால் கலெக்டர் நடவடிக்கை பாயும், என்றார்.

தமிழகத்தில் 1,200 அரசுப்பள்ளிகள் மூடல்?

தமிழகத்தில், 20க்கும் குறைவாக, மாணவர்கள் படிக்கும், 1,200 தொடக்கப்பள்ளிகள் மூட திட்ட மிடப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், 36 ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 
இதில், 19 ஆயிரம் பள்ளிகளில், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிய, தனியார் பள்ளிகளின் ஆதிக்கமே காரணம் என, கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒரு கி.மீ., இடைவெளிக்குள், தொடக்கப்பள்ளிகள், 3 கி.மீ., இடைவெளிக்குள் நடுநிலைப்பள்ளிகள் புதிதாக துவங்க கூடாது. ஆனால், புற்றீசல் போல, அருகருகே தனியார் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கை சரிந்தது.இதை காரணம் காட்டி, அரசுப்பள்ளிகளுக்கு மூடுவிழா காண, தொடக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு துவக்கத்தில், பத்துக்கும் குறைவாகமாணவர்கள் படிக்கும், 1,200 பள்ளிகளின், பட்டியல் தயார் செய்யப்பட்டது. இப்பள்ளிகளுக்கு, அடுத்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக, உத்தரவு பிறப்பிக்காததால், பள்ளிகளை மூட, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமையாசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மோசஸ் கூறுகையில்,''நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை அதிகரிப்பது தொடர்பாக, பள்ளிகளுக்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் பணிகளில், அதிகாரிகள் கவனம் செலுத்துவதால், கல்விப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.அடுத்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை சரிந்தால், சத்தமின்றி 1,200 பள்ளி கள் மூடப்படலாம்,'' என்றார்.

அரசு கல்லூரிகளுக்கு 'நாக்' அந்தஸ்து

திருச்சி மற்றும் திருநெல்வேலி அரசு கல்லுாரிகள் உட்பட, எட்டு கல்லுாரிகளுக்கு, தேசிய தர மதிப்பீட்டுக்குழுவின், 'நாக்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், கல்வித்தரம், உயர்கல்விக்கு சென்ற மாணவர்கள் விகிதம், கல்லுாரிகளின் ஆராய்ச்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில், தேசிய அளவில், 'நாக்' அந்தஸ்து வழங்கப்படும். ஒவ்வொருகல்லுாரியும், தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின், இந்த அந்தஸ்தை பெறுவது கட்டாயம்.

இதன்படியே, பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் மானியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தரம் வழங்கும் முறையில், 2016 ஜூலை முதல், புதிய முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, மார்ச் மாதம் வரை, 1,400 கல்வி நிறுவனங்களுக்கு, நாக் அந்தஸ்து வழங்கப்பட்டுஉள்ளது. கடந்த வாரம் நடந்த கமிட்டியின் பரிசீலனையில், தமிழகத்தில், புதிதாக எட்டு கல்லுாரிகளுக்கு, 'நாக்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லுாரி, திருச்சியிலுள்ள ஈ.வெ.ரா., பெரியார் கல்லுாரி மற்றும் கோவை விமானப்படை நிர்வாகக் கல்லுாரி ஆகியவை, 'ஏ' கிரேடுபெற்று உள்ளன. மேலும், ஐந்து தனியார்கல்லுாரிகள், பி, பி பிளஸ் தரம் பெற்றுள்ளன.

கோடை வெயிலின் தாக்கம்: பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

சென்னை மாநகரில் தற்போது அதிகரித்துவரும் கோடை வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் சில உடல் உபாதைகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு சென்னை மாநகராட்சி தெரிவிக்கிறது.
வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள தினசரி அதிகஅளவில் தண்ணீர் அருந்தவும். இளநீர், மோர் மற்றும் பழரசங்கள் அருந்துவதால் உடல் வெப்பத்தை தணிக்கலாம்.கோடைக்காலத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகள், மசாலாமற்றும் காரம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், நேரடியாகஉச்சி வெயிலில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும், தவிர்க்கஇயலாத சமயங்களில் குடை அல்லது தலையை மறைக்கும்துணியினை பயன்படுத்தலாம்.

சர்க்கரை கரைசல்

அதிக நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்கவும், கடுமையானவெயிலில் செல்லும்போது வியர்வை அதிகம் வெளியேறுவதால்உப்பு சர்க்கரை கரைசல் கலந்த நீரை பருகவும், வெயிலில் செல்லும்போது தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக நிழலில்ஓய்வெடுக்கவும். போதுமான தண்ணீர் அருந்தவும்.அதன்பின்னரும் உடல்நலக்குறைவு ஏற்படின் அருகாமையில் உள்ளஅரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைக்கு செல்லவும். அடிக்கடிநல்ல தண்ணீரால் முகத்தினை கழுவ வேண்டும். மேலும், ஒருநாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். இதனால் வியர்வை துவாரங்கள் திறக்கப்படுவதோடு தோலில் படியும்அழுக்குகளும்குறையும்.கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகளை அணிதல், இறுக்கமாகஆடை அணிவதை தவிர்த்தல், குழந்தைகள் வெயில் நேரத்தில் திறந்த வெளியில் விளையாடுவதை தவிர்த்தல், தெருக்களில்விற்பனைக்குவரும் ஐஸ் போன்ற உணவு பொருட்களை உண்பதை தவிர்த்தல்வேண்டும்.

அவசர உதவி

சின்னம்மை, தட்டம்மை நோய்களுக்கான அறிகுறி தென்பட்டால்,அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைக்கு செல்லவும், அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கவும். நோய் பாதிக்கப்பட்டவரை, நோயிலிருந்து விடுபடும்வரையில் தனிமையில் இருக்க வைக்கவும். அனைவரும், வெளியில் செல்லும்போது காலணிகள் அணிந்து செல்லவும்.கூடுதல் தகவல் மற்றும் புகார்களுக்கு ‘1913’ மற்றும் ‘104’ என்றஎண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

அவசர உதவி மற்றும் சிகிச்சைக்கு தண்டையார்பேட்டைதொற்றுநோய் மருத்துவமனை தொலைபேசி எண்கள். 044–25912686, 87மற்றும் ‘108’ ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டி. டி. எஸ். செலுத்தியோருக்கும் வருமானவரித்துறை நோட்டீஸ். ஆசிரியர்கள் அதிர்ச்சி

வருமான வரித்தொகைக்கு உடனடி இடிடிஎஸ் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

வேலூர் முதன்மை கல்வி அலுவலராக துரைசாமி பொறுப்பேற்பு

மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 வகையான இலவச பொருட்களை பள்ளிக்கு நேரடியாக வழங்க வேண்டும் என முதன்மை செயலாளரிடம் கோரிக்கை

இந்திய அளவில் ஆங்கில எழுத்துத்தேர்வில் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள குரும்பேரி அரசுப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை

ஆதார் உடன் பான் இணைக்க வேண்டும் தவறினால் ரூ.10,000 அபராதம்.

ஆதார் எண்ணுடன் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ("பான்')ஜூலை 1ஆம் தேதி முதல் இணைக்க வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு முறை பணப்பரிமாற்றத்தின் போதும் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று வரி தொடர்பான நிபுணர் சுரேஷ் தெரிவித்தார்.
எனவே, ஆதார் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.இது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த இணைப்பு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஆதாருடன் நிரந்தர கணக்கு எண்ணை இணைக்கவில்லை எனில், ஒவ்வொரு பணப் பரிமாற்றத்தின்போது, நிரந்தர கணக்கு எண் இல்லை என்று பதிவாகும். நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.இதுதவிர, ரூ.2 லட்சத்துக்கு மேல் பணபரிமாற்றம் செய்வது இணையம் மூலமாகவும், கணக்கு மூலமாகவும் செலுத்தலாம். இல்லைஎனில், 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

கலந்தாய்வுக்கு காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்.

குழந்தைகளின் புத்தக சுமை : பெற்றோருக்கு மனச்சுமை அமலுக்கு வருமா மெட்ரிக் இயக்குனர்உத்தரவு.

குழந்தைகளின் புத்தக சுமை : பெற்றோருக்கு மனச்சுமை

அமலுக்கு வருமா மெட்ரிக் இயக்குனர்உத்தரவு.

Central Government Hike 4% DA(132% to 136%)

FLASH NEWS: Central Government Hike 4% DA(132% to 136%) for 6th Pay Commission Pay Scales Employees-Rate of Dearness Allowance applicable w.e.f.

1.1.2017 to employees of Central Government and Central Autonomous Bodies continuing to draw their pay in the pre-revised pay scales/grade pay as per 6th Central Pay Commission

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!