Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 10 April 2017

'10-ம் வகுப்பு பாடத்தை 9-ஆம் வகுப்பில் படிக்க வேண்டாம்!’’ - புதுச்சேரி அரசுப் பள்ளி பெருமிதம்!


கல்வி மிகப்பெரிய வணிகமாக்கப்பட்டுவிட்ட சூழலில், தனியார் பள்ளிகள் அசுர வேகத்தில் முளைத்து வருகின்றன. இப்படியான பள்ளிகளில் பெரும்பாலும் போதுமான அடிப்படை வசதிகளே இருக்காது என்பதுதான் யதார்த்தம். ஆனாலும் தனியார் பள்ளிகளின் கவர்ச்சிகர விளம்பரங்களில் விழுகின்ற பெற்றோர், பல லட்சங்களைக் கொட்டி பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். பணம் காய்க்கும் மரங்களாக அந்த மாணவர்களைப் பார்க்கும் பள்ளிகள், மதிப்பெண்கள் எடுக்கும் இயந்திரங்களாக மாணவர்களை மாற்றும் தொழிற்சாலைகளாக செயல்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதையே தகுதிக் குறைவாக நினைக்கும் பெற்றோர்களால், ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்துகொண்டே இருக்கின்றது.

இப்படியான சூழலில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்புவிடுத்து, வீடியோ விளம்பரம் ஒன்றை வெளியிட்டு அசத்தியுள்ளது, புதுச்சேரி, ஜீவானந்தம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி. உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ செம ஹிட். சுமார் ஒன்றரை நிமிடம் ஓடக்கூடிய அந்த விளம்பரத்தில், பள்ளியின் துணை முதல்வர் சந்திரசேகரன், ''ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்கள் சேர்க்கை ஜூன் மாதம் தொடங்குகிறது. கல்வியோடு ஒழுக்கமும் நற்பண்புகளும் கற்பிக்கப்படுகிறது. ஆகவே, உங்கள் பிள்ளைகளை இங்குச் சேர்த்து பயனடையுங்கள்” என்கிறார்.


தொடர்ந்து பள்ளியில் இருக்கும் ஹைடெக் ஆய்வுக்கூடம், புரொஜெக்டர் கல்வியறை, விசாலமான விளையாட்டு மைதானம், என்.சி.சி அணிவகுப்பு எனக் காட்சிகள் ஒவ்வொன்றும் நம் புருவங்களை உயரவைக்கிறது. அந்தப் பள்ளிக்கு உடனடியாக கிளம்பி சென்றோம். நுழைவு வாயிலைத் தாண்டியதும், விசாலமான விளையாட்டு மைதானத்தில் மண்ணைக் கொட்டி சமப்படுத்தும் பணி நடந்துகொண்டிருந்தது. மாணவர் சேர்க்கை குறித்து விசாரிக்க வந்திருந்தப் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு சில ஆசிரியர்கள் புன்னகையுடன் விளக்கிக்கொண்டிருந்தனர். மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்த துணை முதல்வர் சந்திரசேகரன் நம்மைப் புன்னகையுடன் வரவேற்றவர், ”நம் பள்ளியின் பழைய மாணவர்கள் இவர்கள். விளம்பரத்தை டிவியில் பார்த்துவிட்டு வேறு ஏதாவது உதவி வேண்டுமா எனக் கேட்க வந்திருக்கிறார்கள்” என்றார்.

தொலைக்காட்சிகளில் வீடியோ விளம்பரம் வெளியிடும் எண்ணம் எப்படித் தோன்றியது எனக் கேட்டதும் உற்சாகமாக பேசத் தொடங்கினார். “இந்தப் பள்ளியில் படித்த பழைய மாணவன் நான். 1976-ம் ஆண்டு இங்குதான் +2 முடித்தேன். இந்தப் பள்ளிக்கே ஆசிரியராக வந்தபோது மிகவும் மகிழ்ந்தேன். அப்போது நகரத்தின் முக்கியமான பள்ளிகளில் இதுவும் ஒன்று. புதுச்சேரி மாநிலத்தின் தேர்தல் அதிகாரி கந்தவேலு, நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இங்குப் படித்தவர்கள்தான். நான் படிக்கும்போது இரண்டாயிரம் மாணவர்கள் இங்குப் படித்தார்கள். ஆனால், தனியார் பள்ளிகளின் மாயையால், அரசுப் பள்ளிகளை தரம் குறைவாக கருதும் பெற்றோர்களால், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அவர்களின் எண்ணத்தை மாற்ற, எங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து சிறு சிறு முயற்சிகளில் ஈடுபட்டேன். அதில் ஒன்றுதான் இந்தத் தொலைக்காட்சி விளம்பரம். இல்லாததை இருப்பது போல விளம்பரப்படுத்தி தனியார் பள்ளிகள் பணம் பறிக்கும்போது, அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள், தரமான கட்டடம், ஆய்வுக்கூடங்கள், சுகாதாரமான சூழல் ஆகியவை இருக்கும் அரசுப் பள்ளியை விளம்பரப்படுத்துவதில் என்ன தவறு? இங்குப் படித்த முன்னாள் மாணவர்களே, இந்த விளம்பரப் படத்தை எடுத்தார்கள். நல்லுள்ளம்கொண்ட தொலைக்காட்சி நிறுவனங்களும் தாமாகவே முன்வந்து விளம்பரத்தை இலவசமாக வெளியிட்டார்கள்.

உண்மையில், தனியார் பள்ளிகளைவிட பல மடங்கு உயர்ந்தது அரசுப் பள்ளிகள்தான். இங்குப் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் சென்றுவிடுவதால் கலாச்சாரம், ஒழுக்கம், அரவணைப்பு போன்றவை கிடைக்கும் சூழல் இல்லை. இவை அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் அரசுப் பள்ளிகள்தான். மாணவர்கள் அனைவருமே திறமையானவர்கள்தான். அதை வெளிக்கொணர்வதற்கு முறையான வழிகாட்டுதல் தேவை. அதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். இங்கு எந்த ஒரு மாணவரையும் வேறொரு மாணவரோடு ஒப்பிட்டுப் பேசுவதில்லை. ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கங்கள், பல வகை விளையாட்டு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்வியைப் போதிக்கிறோம். இந்தப் பழக்கங்கள் அவர்களின் வீட்டிலும் எதிரொலிப்பதால், எங்கள் பள்ளியின் மீதான நம்பிக்கை அதிமாகிறது. மதிப்பெண்கள் எடுக்கும் இயந்திரங்களாக மட்டுமே மாணவர்களை மாற்றினால், சமூகத்தையும் சுற்றியிருப்பவர்களையும் அவர்களால் எப்படி நேசிக்க முடியும்? மாணவர்கள் படிக்கவில்லை என்றால் அடிப்பதில்லை. ஆனால், தவறு செய்தால் சரியான வழியில் கண்டிக்கிறோம். பள்ளி வளாகத்துக்குள் நாங்கள்தான் அவர்களுக்குப் பெற்றோர். அவர்களை நெறிப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது'' என்கிற சந்திரசேகரன் குரலில் அக்கறை மிளிர்கிறது.

''பத்தாம் வகுப்புக்கான பாடத்தை ஒன்பதாம் வகுப்பில் இருந்தே மனப்பாடம் செய்யும் வழக்கம் இங்கு இல்லை. பொதுத்தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை, மாலை ஒரு மணி நேரமும் தேர்வு நெருக்கத்தில் மூன்று மணி நேரமாகவும் மட்டும் கற்றுத்தருகிறோம். ஓய்வின்றி சிறப்பு வகுப்புகளைவைத்து மாணவர்களின் குழந்தைத்தன்மையைச் சிதைக்கும் செயலுக்கு இங்குக் கண்டிப்பாக இடமில்லை. குடும்பச் சூழல், போதுமான விழிப்புஉணர்வு இல்லாத காரணங்களினால் பொதுத்தேர்வுகள், செய்முறைத் தேர்வுகளுக்குக்கூட சில மாணவர்கள் வராமல் போய்விடுவார்கள். அப்போது, எங்கள் ஆசிரியர்கள் அவர்களின் வீட்டுக்கே சென்று அழைத்து வருவார்கள். அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு எங்கள் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து மீட்டிங் நடத்துகிறோம் ஆரம்பத்தில் ''இருக்கிற வேலையை வுட்டுட்டு அங்கே வந்து கெடக்கணுமா?” என்று எங்கள் மீது கோபப்பட்டார்கள். தொடர் முயற்சியால், இப்போது ஒரு மாணவனின் பெற்றோர்கூட ஆப்சென்ட் ஆவதில்லை.

எங்கள் பள்ளியின் வருகைப் பதிவேட்டில் மாணவனின் பெயருடன், பெற்றோரின் பெயர் மற்றும் தொலைப்பேசி எண்களும் இருக்கும். ஒரு மாணவன் பள்ளிக்கு வரவில்லை என்றால், பெற்றோரைத் தொடர்புகொண்டு காரணத்தைத் தெரிந்துகொள்வோம். இங்குப் படிக்கும் 800 மாணவர்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் எங்களிடம் இருக்கின்றது. படிப்பில் பின்தங்கி இருக்கும் மாணவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.

சில தனியார் பள்ளிகள் ஏற்படுத்தியத் தாக்கங்களினால் பள்ளிக்கும் மாணவருக்குமான இடைவெளி அதிகரித்துவிட்டது. விளைவு, பள்ளியைத் தண்டனைக்கூடமாக பார்க்கிறார்கள். அதை மாற்றும் எங்கள் முயற்சி வெற்றிபெற்றுள்ளது. மாலை 4.15 மணிக்குப் பள்ளி முடிந்தாலும் மாணவர்கள் அவர்கள் விருப்பம்போல விளையாட்டு, க்ரூப் ஸ்டடி என இருக்கிறார்கள்'' என்கிறார் நெகிழ்ச்சியாக.

பள்ளியின் விளம்பரத்தைப் பார்க்க...

கல்வியுடன் வாழ்க்கை நெறியையும், சமூக அக்கறையையும் ஊட்டும் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் மாணவருக்குமான உறவு அற்புதமானது.

கற்றல் கற்பித்தலில் கணினி பயன்பாட்டிற்கு ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி...

கற்றல் கற்பித்தலில் கணினி பயன்பாட்டிற்கு ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி... விருப்பமுள்ள ஆசிரியர்கள் கீழ்கண்ட படிவத்தை பூர்த்தி செய்யவும்..

CLICK HERE | TO ENTER UR DETAILS...

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE)

*.5+ மாணவர்கள் பெயர் பட்டியல்...

*.ஆசிரியர்கள் விடுப்பு விவரம்...

*.இனவாரியாக தேர்ச்சி சுருக்கம்...

*.ஒப்புதல் கடிதம்...

*.குழந்தை தொழிலாளர்கள் விவரம் 

*.பள்ளி இடைநின்றவர் விபரம்..

*.பள்ளி செல்லாதோர் விவரம்...

*.பள்ளி வேலை நாட்கள் விவரம்...

*.மக்கள் தொகை சுருக்கம்...

*.மாற்று திறனாளிகள் விவரம்...

*.வகுப்பு மற்றும் இனவாரி தேர்ச்சி சுருக்கம்...

நன்றி:

திரு.ரகுபதி,ஆசிரியர்.

நோட்டு புத்தக விலை உயர்வு ஒரு குயர் ரூ.3 வரை அதிகரிப்பு.

கடும் வறட்சியினால் காகிதம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு நோட்டு புத்தகத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஒரு சாதாரண நோட்டு ரூ.3 வரை விலை உயர்ந்துள்ளது. 
இதுகுறித்து பேப்பர் மற்றும் ஸ்டேசனரி வியாபாரிகள் சங்கத்தலைவர் செல்வகுமார் கூறியதாவது:காகித ஆலை மூலப்பொருட்களின் விலையேற்றம், வறட்சியினால் சவுக்கு மரங்களின் வளர்ச்சி சரிவு காரணமாக காகிதம் விலைதாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் ஒரு டன் காகிதம் ரூ.7 ஆயிரம் வரை விலை உயர்ந்து விட்டது. இதனால் இந்தாண்டு மூன்று முறை விலை உயர்ந்தது; சாதா நோட்டு புத்தகம் கூட ஒரு குயருக்கு ரூ.3 வரை அதிகமாக விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2 குயர் லாங் சைஸ் நோட்டு ரூ.38க்கு விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.43க்கு விற்கப்படுகிறது. ரூ.30க்கு விற்ற பைண்டிங் இல்லாத நோட்டு இந்த ஆண்டு ரூ.35க்கும், கடந்த ஆண்டு ரூ.14 முதல் 15க்கு விற்ற ஒருகுயர் நோட்டு ரூ.18க்கும் விற்பனையாகிறது. இவ்வாறு செல்வகுமார் தெரிவித்தார்.

பெயர் குழப்பம் இனி இருக்காது பான் கார்டில் ஆதார் எண் இணைப்பு சுலபம்.

பான் கார்டில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று அரசு கூறினாலும், பொதுமக்களுக்கு அதில் பெரும் சிரமம் இருக்கிறது. பெயர் குழப்பம் ஏற்படுவதால் இணைக்க முடியாமல் உள்ளது. 
இதை தீர்க்க இரு எளிய முறைகளை அறிமுகம் செய்துள்ளது அரசு. பான் எண் பல வகையில் மக்களுக்கு பயன் அளித்து வருகிறது.வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய பான் எண் முக்கியம்.இப்போது வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல வகையில் முயற்சி செய்து வருகிறது. மேலும் வரி ஏய்ப்பு செய்வதை அறவே தடுக்க ஆதார்எண் உதவும் என்று அரசு திடமான நம்புகிறது. மேலும் ஆதார் எண்ணை இணைத்து விட்டால் வருமான வரி கட்டுவோர் எண்ணிக்கையை அதிகரித்து விடலாம் என்று எண்ணுகிறது. இதற்காக, பான் கார்டில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்றுசமீபத்தில் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வரி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார். இதன்படி, வருமான வரி அறிக்கையில் இனி ஆதார் எண் முக்கியம். அதற்காக, வருமான வரி வெப்சைட்டில் ஆதார் எண் இணைப்பு வசதி செய்யப்பட்டது.ஆனால், அதில் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.பெயர் குழப்பம் ஏற்படுவதால் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியவில்லை. பெரும்பாலோர் பெயர்கள் ஆதார் கார்டில், அப்பா பெயர் இனிஷியலாக சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பான் கார்டில் தந்தை பெயர் பின்னால் சேர்த்து பதிவு செய்யப்பட்டு ள்ளது.

இப்படி பெயர் குழப்பத்தால் ஆதார் எண் பதிவு செய்யும் ேபாது கம்ப்யூட்டர் ஏற்க மறுக்கிறது. இதை தீர்க்க மத்திய அரசு இரு வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.ஒன்று, வருமான வரித்துறை வெப்சைட்டில் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கும் போது ஏற்படும் சிரமத்தை தடுக்க, ‘ஒன் டைம் பாஸ்வேர்டு’ அனுப்பும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது, ஆதார் வெப்சைட்டில் போய், பெயர் மாற்றம் செய்யலாம்; அதற்கு, பான் கார்டு நகலைஅப்லோடு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் ஏப்.25ல் வேலைநிறுத்தம் - 3 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஏப். 25 முதல் நடக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்தார். 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடு சிவகங்கையில் நடந்தது. இதில் பங்கேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது: 2003க்கு பின் அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் என பிடித்தம் செய்த ரூ.15 ஆயிரம் கோடி எங்கே போனதென தெரியவில்லை. இதுகுறித்து சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் தெரிவித்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால் 2003க்கு பின் பணியில் சேர்ந்து இறந்துள்ள ஊழியர்களின் குடும்பங்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் பாதிப்படைந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான அரசுத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர், கிராம உதவியாளர், சத்துணவு ஊழியர் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளோம். இதில் சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடைபெற இருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் 9,000 க்கும் மேற்பட்ட வினா- விடைகள் அடங்கிய "TET Quiz" Android App - Google Play Store இல் உள்ளது. 

App Highlights:

* இதில் வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும் வினா விடைகள் பதிவேற்றப்பட்டு      உள்ளது. 

* முக்கிய வினாக்களை குறித்து கொண்டு (Favorite Questions) அவற்றை மட்டும் மீண்டும் மீண்டும் பயிற்சி பெரும் வசதி உள்ளது.

* கணித கணக்குகளை செய்து பார்க்க Pencil Button வசதி தரப்பட்டு உள்ளது.

* முந்தைய வருட TNTET (2012,2012Retet,2013,2014 Special TET) வினாத்தாள்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டு உள்ளது.

Click Here and Download "TET Quiz" Android App

போலி ஜாதி சான்றிதழில் 'அட்மிஷன்' : இன்ஜி., கல்லூரிகளுக்கு எச்சரிக்கை.

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், போலி ஜாதி சான்றிதழ் மூலம், இட ஒதுக்கீடு பெறுவதால், சான்றிதழ்களை ஆய்வு செய்யும்படி, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, விடைத்தாள் திருத்தம் நடந்து வருகிறது. 
மே 12ல், தேர்வு முடிவு வெளியாகிறது. இதையடுத்து, அண்ணா பல்கலை நடத்தும் கவுன்சிலிங் மூலமாக, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., - அண்ணா பல்கலை உட்பட, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள

சுற்றறிக்கை: போலி ஜாதி சான்றிதழ் அடிப்படையில், இட ஒதுக்கீடு பெற்று, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்வதாக புகார்கள் வந்துள்ளன. எனவே, இன்ஜினியரிங் படிப்பிற்கான சேர்க்கையின் போது, பல்கலைகளும், இன்ஜி., கல்லுாரிகளும், மாணவர்கள் தரும் ஜாதி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும். அவை உண்மையானவையா என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான், போலி ஜாதி சான்றிதழ்கள் அடிப்படையில், மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பில் சேருவது தடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நர்சிங் கல்லூரிகள் அங்கீகாரம்: ஆக.31ல் பட்டியல் வெளியீடு.

'நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ள, நர்சிங் கல்லுாரிகளின் பட்டியல், ஆக., 31ல் வெளியிடப் படும்' என, இந்திய நர்சிங் கவுன்சில் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், பி.எஸ்சி., - எம்.எஸ்சி., உள்ளிட்ட நர்சிங் சார்ந்த துறையை நடத்த, நடப்பு கல்வியாண்டில், 257 கல்லுாரிகளுக்கு மட்டுமே, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நர்சிங் கல்லுாரிகளை துவக்கவும், புதுப்பிக்கவும், தமிழக அரசு, இந்திய நர்சிங் கவுன்சில், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் என, மூன்று தரப்பால் அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், பல்வேறு கல்லுாரிகள், ஒரு பாடப் பிரிவுக்கு அனுமதி பெற்று, பல்வேறு பாடப் பிரிவுகளை நடத்தி வருவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனால், அங்கீகாரம் சார்ந்த செயல்பாடுகளை விரைவுபடுத்த, 'ஆன்லைன்' முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அங்கீகாரம் புதுப்பிக்க, கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், ஏப்., 21 வரை கால அவகாசம் நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஆன்லைன்' தவிர்த்து, வேறு முறைகளில், பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லுாரிகளின் பெயர், பாடப்பிரிவு பட்டியல் ஆக., 31ல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்து, நர்சிங் கல்லுாரியில் சேர விரும்பும் மாணவர்கள், இப்பட்டியலை சரிபார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'NEET' பாடத்திட்டம் தெரியாமல் திணறல் : மவுனம் கலைக்குமா கல்வித்துறை!

மாநில பாடத்திட்ட புத்தகங்களை மட்டும் நம்பி, 'நீட்' தேர்வுக்கு தயாராகும், தமிழ்வழி அரசுப் பள்ளி மாணவர்கள், தேர்ச்சி அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

'நீட்' எனும், மருத்துவ படிப்பு களுக்கான தேசிய நுழைவுத் தேர்வு, சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட, ஏழு மாவட்டங்களில், மே 7ல் நடக்கிறது. இதில் பங்கேற்க, 11.35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துஉள்ளனர். இத்தேர்வு நடப்பாண்டில், ஆங்கிலம், இந்தி தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட, எட்டு மாநில மொழிகளில் எழுதலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி., என்ற தேசிய கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாடத்திட்ட அடிப்படையில், நீட் தேர்வில், வினாக்கள் இடம்பெறும். இப்புத்தகங்கள், ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே கிடைக்கின்றன. இணையதளத்திலும், இப்புத்தகங்களின் மொழிபெயர்ப்பு பிரதி கிடைக்கவில்லை. இதனால், தமிழ் வழியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள், பெரிதும் சிரமப்படுகின்றனர்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில், மேல்நிலை வகுப்புகளுக்கு, 15 ஆண்டுகளுக்கும் முன், பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. 2005ல், சில முக்கிய பகுதிகள் சேர்க்கப்பட்டு, கடின பகுதிகள் எடுக்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்துடன், மாநில பாடத்திட்டத்தை ஒப்பிட்டால், 60 சதவீத அளவுக்கு மட்டுமே, இணையாக இருக்கும்.

எனவே, பள்ளிக் கல்வித் துறை சார்பில், நீட் தேர்வுக்கு, பிரத்யேக சிறப்பு கையேடு, இணையதளத்தில் வெளியிட்டால், தமிழ் வழி மாணவர்கள் பலனடைவர்.இவ்வாறு அவர் கூறினார்.

TNTET - 2017 தேர்வில் சிந்தித்து எழுதும் வினாக்கள் : மனப்பாட கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், சிந்தித்து பதில் எழுதும் வினாக்களே இடம் பெற உள்ளன. விடைத்தாள் திருத்தத்திலும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. இதற்கான, முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்ததும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'டெட்' தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஏப்., 29ல் நடக்கும் தேர்வுக்கு, 598 பள்ளிகளிலும், ஏப்., 30ல், 1,263 பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வு மையங்களுக்கு, அலைபேசி போன்ற, மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.தேர்வுக்கான வினாத்தாளை, டி.ஆர்.பி., அதிகாரிகள் இறுதி செய்து, அச்சுக்கு அனுப்பியுள்ளனர். வினாத்தாள், லீக் ஆகாமல் இருக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வில், வினாத்தாள் மிக கடினமாக இருக்கலாம் என, கூறப்படுகிறது.

இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள், 20 ஆண்டுகளாவது பாடம் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. 20 ஆண்டுகளில்
ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய படிப்புகளின் தேவை போன்றவற்றுக்கு ஏற்ப, பாடத்
திட்டங்கள் மாறும்; பொது தேர்விலும் கட்டுப்பாடுகள் வரும்.

இந்த மாற்றத்தை சமாளித்து, அதற்கேற்ப மாணவர்களுக்கு பாடம் நடத்தும் தகுதியை, தற்போது, 'டெட்' தேர்வு எழுதும் ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். அதனால், அவர்கள் சிந்தித்து எழுதும் வகையில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டுஉள்ளன.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பாட புத்தகங்களின் உள்பகுதியில் இருந்தும், புதிய கேள்விகள் இடம் பெறும். மனப்பாட பகுதி கேள்விகள் குறைவாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கான ஊதியம் உயர்வு.

பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு

பணிக்கான ஊதியம் உயர்வு.

‘நான் ஸ்கூலுக்கு போகக் கூடாதா..?' ஆசிரியர்களிடையே வைரலாகும் குறும்படம்

ஒரு மனிதரை கல்வி உயர்த்ததைப் போல வேறு விஷயம் ஏதேனும் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், நமது சமூகத்தில் பொருளாதாரம், சாதி என எவ்வளவு விஷயங்கள் ஒருவர் கல்வியை அடைந்துவிடாமல் தடுக்கின்றன. இவையெல்லாம் தகர்ந்து அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கான நடத்தப்பட்ட போராட்டம் நீண்ட நெடியது. போராட்டம் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. இன்றைக்கும் அது தொடர வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம். பெற்றோர், ஆசிரியர் ஆகியோர் மட்டுமே இதற்கான முயற்சிகளை எடுத்தால் போதாது. சமூகம் பழமை வாதத்தன்மையிலிருந்து மாற வேண்டும்.

சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட தவறான கருத்துகளை மாற்றினால் மட்டுமே கல்வி எல்லோருக்குமானதாக மாறும். கற்பதற்காக ஒருவர் எடுக்கும் முயற்சிகளை மனதார வரவேற்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'காழ்' எனும் குறும்படம் ஆசிரியர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 'காழ்' எனும் சொல்லுக்கு உறுதி எனும் பொருள். ஒரு சிறுவனின் உறுதியைக் கூறும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது 'காழி' இந்தக் குறும்படம்.

குப்பைகளைப் பொறுக்கி, அதை விற்று வரும் பணத்தைக் கொண்டு வாழும் ஒரு ஏழைச் சிறுவன் பற்றியக் கதை. அந்த ஏழ்மையிலும் அவனின் நேர்மையும் கல்விக்கான விருப்பமும் அதற்காக அவன் எடுக்கும் முயற்சியைப் பற்றியுமே இந்தப் படம் பேசுகிறது. இதில் அந்தச் சிறுவனாக நடித்திருக்கும் நவீன் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறான். கதையை முழுமையாகச் சொல்லிவிட்டால், படம் பார்க்கும் சுவாரஸ்யம் போய்விடலாம்.

'காழ்' குறும்படம் உருவானதற்கு முதன்மையான காரணமானவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மோ.ஜான் ராஜா. காட்டுமன்னார்குடியின் அருகே உள்ள வெங்கடேசபுரம் எனும் சிறிய கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் ஆசிரியர்.

"புகைப்படங்கள் எடுப்பதில் எனக்கு ரொம்ப ஆர்வம். அதனால் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு கேமராவைக் கொண்டு எப்படி புகைப்படங்கள் எடுப்பது எனச் சொல்லிகொடுப்பது வழக்கம். எப்படி கோணங்கள் வைப்பது, வெளிச்சம் எந்தப் பக்கத்திலிருந்து இருப்பதுபோல பார்த்துகொள்ள வேண்டும் என்பதெல்லாம் சொல்லும்போது மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்பார்கள். அதிலும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் நவீன் கற்பூரம்போல, சொல்வதை அப்படியே பட்டென்று பற்றிக்கொள்வான். நவீன் கூச்சமின்றி பேசவும் நடிக்கவும் செய்தான். அவனைப் பார்த்ததும்தான் எனக்குள் ரொம்ப நாட்களாக இருந்த குறும்பட ஆசை துளிர் விட்டது.

நண்பர் சுரேஷிடம் என் விருப்பதைச் சொன்னபோது, அவரும் என்னுடன் இணைந்துகொண்டார். இருவரும் சேர்ந்து படத்திற்கான வேலைகளைச் செய்தோம். கல்விப் பற்றிய படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். எளிமையான கதைத்தான் என்றாலும் இதை திரும்ப திரும்ப நமது சமூகத்தில் சொல்ல வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தோம். அதனால் நவீனை வைத்து துணிவோடு 'காழ்' படத்தைத் தொடங்கினோம்.

நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் நவீன் சிறப்பாக நடித்தான். நாங்களே வசனத்தை மாற்றிக்கூறி விட்டாலும் அவன் சரி செய்யும் அளவுக்கு படத்தோடு ஒன்றி விட்டான். 7 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். காலை ஆறரை மணியிலிருந்து எட்டரை மணி வரை மட்டுமே நடிக்க வைத்தோம். அதனால் நவீன் மட்டுமல்ல எங்களின் வழக்கமான வேலைகள் ஏதும் பாதிக்க வில்லை. படம் பார்த்தவர்கள் எல்லோரும் நவீனின் தாயாக நடித்திருப்பவர் நிஜமாகவே கண் தெரியாதவரா எனக் கேட்கிறார்கள். கண் பார்வையுள்ளவர்தான் அவர். ஆனால், பார்வையாளர்கள் இப்படிக் கேட்கும்விதத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

எங்கள் ஊரில் கிடைக்கும் வசதிகளைக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறோம். சின்னஞ்சிறு குறைகள் இருக்கலாம். ஆனால், படம் சொல்லும் விஷயம் தெளிவாக சென்றடைய வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். எந்தக் காரணத்தினாலும் ஒருவருக்கு கல்விக் கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதுதான் என் விருப்பம். இந்தச் செய்தியை மக்களிடையே கொண்டுச் செல்லும் விதத்தில் இந்தப் படத்தை நண்பர் சுரேஷ் இயக்க, நான் ஒளிப்பதிவு செய்தேன்.  இப்போது ஆசிரியர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும் பாராட்டுகள் எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது." என்கிறார் ஆசிரியர் ஜான் ராஜா.

கல்விக்காக முன்னெடுக்கும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் தொடர வேண்டும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!