Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 11 April 2017

TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சலுகை: உயர்நீதிமன்றம்

2011-ம் ஆண்டு நவம்பருக்கு முன்பிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து இடைக்கால உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.

15.11.2011-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு (TET) எழுத ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து, 4 இடைநிலை ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் முடிவில், 2011-ஆம் ஆண்டுக்கும் முன்பிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து இடைக்கால உத்தரவிடப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களை ஆசிரியர் தகுதி தேர்வை எழுத கட்டாயப்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடக்க உள்ளது நினைவு கூறத்தக்கது.

ஆசிரியர் பயிற்சிக்கு அவகாசம் நீட்டிப்பு - நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்.

ஆரம்ப பள்ளியில் பணியாற்றி வரும் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் 2019-ம் ஆண்டுக்குள் பயிற்சி பெறுவதற்காக கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2010, ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வந்த கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றுவோர், ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதியை பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 2015, மார்ச் 31-ம் தேதிக்குள் அவர்கள் ஆசிரியர் பயிற்சியை முடித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆரம்ப பள்ளியில் பணியாற்றும் பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான காலக் கெடுவை நீட்டிக்குமாறு மாநில அரசுகள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன.

இதையடுத்து வரும் 2019 வரை காலக்கெடுவை நீட்டிக்கும் வகையில் கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக ‘குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி (திருத்த) மசோதா 2017’ என்ற புதிய மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்க வகை செய்யும் ஷரத்தை புகுத்தவும் இந்த புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப் பதற்கான நிதி, சர்வ சிக்்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது. அதற்கான தொகையை மத்திய, மாநில அரசுகள் சமமாக பங்கீட்டு வழங்கும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

CBSE உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் டூ வரை மலையாளம் கட்டாயம்: கேரள அரசு அவசர சட்டம்.

சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட பாடத் திட்டங்களை கற்றுக்கொடுக்கும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் டூ வரை மலையாளப் பாடம் கட்டாயம் என கேரள அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத பள்ளிகள், சுய நிதி கல்வி நிறுவனங்கள், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடப்பிரிவு கற்றுத்தரும் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளுக்கும் பிளஸ்டூ வரை மலையாளம் கட்டாயம்.

இப்படி ஒரு அவசர சட்டத்தை கொண்டுவர சில தினங்கள் முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்றார் முதல்வர் பினராயி விஜயன். அவசர சட்டத்திற்கு ஆளுநர் சதாசிவம் இன்று கையெழுத்திட்டுள்ளார். எனவே இந்த கல்வியாண்டு முதலே சட்டம் அமலுக்கு வந்துவிடும். அதிகாரப்பூர்வமாக மே 1ம் தேதி முதல் சட்டம் அமலுக்கு வருவதாக அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆங்கிலத்தில் பேசுவதை ஊக்குவிப்பதாகவும், மலையாளம் பேசுவது தடை செய்யப்படுவதாகவும் வந்த புகார்களை தொடர்ந்து கேரள அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த சட்டத்தை மீறும் பள்ளிகளுக்கு மிக அதிக அளவு அபராதம் விதிக்கப்படும். மலையாளத்தில் பேசக்கூடாது என உத்தரவு பிறப்பிப்பது, போர்டுகளில் எழுதி வைப்பது இனிமேல் இருக்க கூடாது. மலையாளம் பேசாத, மாணவர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டம் வகை செய்கிறது.

தமிழகத்திலும் இதேபோல தமிழ் மொழி காக்கும் நடவடிக்கையை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான மாநில அரசு எடுக்குமா? அல்லது இடைத் தேர்தல்கள், ஐடி ரெய்டுகளில் பிஸியாக இருக்குமா என்பதை காலம்தான் கூற வேண்டும்.

காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைபெறும் அரசுஊழியர்களிடம் பணம் வசூலிக்கும் மருத்துவமனைகள்: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற வரும் அரசு ஊழி யர்களிடம் மருத்துவமனைகள் பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி தாக்கல் செய் யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமங்கலத்தைச் சேர்ந்த சி.தாமோதரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் அரசு உதவி பெறும் கல்லூரியில் ஆய்வக தொழில்நுட்பநராக பணிபுரிந்து வருகிறேன். இருதய நோயால் பாதிக்கப்பட்ட எனக்கு இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.இதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற சென்றபோது ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத் தில் சிகிச்சை பெற பணம் செலுத்த வேண்டியதில்லை எனக் கூறப் பட்டது. ஆனால், இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை களில் 50 சதவீத கட்டணம் வசூலிக் கின்றனர். இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்காளத்தில் அமலில் உள்ள மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தில் அரசுஊழியர்கள் முழு பயனடைந்து வருகின்றனர்.

அதேபோன்று, தமிழகத்திலும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என மருத் துவமனைகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டி ருந்தது.இந்த மனு நீதிபதிகள் ஏ.செல் வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார். தமிழக அரசு பதிலளிக்கஉத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்.

மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதாவானது மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு அந்த மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. 
பின்னர், அந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இதற்கு நாடாளுமன்ற நிலைக்குழு அண்மையில் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, 28 ஆண்டுகளுக்கு பின் இந்த மசோதாவானது மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு முறையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த மசோதாவை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தாக்கல் செய்தார்.

இந்த சட்டத்திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களாவன:
மூன்றாம் நபர் காப்பீட்டு வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழப்பு ஏற்படும்பட்சத்தில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும், கடுமையான காயங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த இழப்பீட்டு தொகையானது மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் வழங்கப்படும்.

அதேபோல், அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி உயிரிழப்பு ஏற்படும்பட்சத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தற்போது நடைமுறையில் உள்ளதைவிட எட்டு மடங்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஊழலை ஒழிக்கும் வகையில் வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றுக்கான நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

பத்திரப் பதிவு அனுமதி தற்காலிகமே: உயர் நீதிமன்றம் உத்தரவு.

அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யும் வகையில் தளர்த்தப்பட்டிருந்த தடை உத்தரவு, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை உயர் நீதிமன்றம் மார்ச் 28-ம் தேதி அன்று தளர்த்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் எனவும் அனுமதியளித்திருந்தது.இதுதொடர்பான உத்தரவின் நகல் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியானது. அதில் பத்திரப் பதிவு அனுமதி, வழக்கின் இறுதிதீர்ப்புக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் சட்ட விரோத வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால், விவசாயமும், விவசாய நிலங்களும் முற்றிலுமாக அழிந்து வருகிறது. இந்த சட்ட விரோத விற்பனையை பத்திரப் பதிவுத்துறையும் ஊக்குவித்து வருகிறது. எனவே விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகம் முழுவதும் அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்ய தடை விதித்து கடந்தாண்டு செப்டம்பர் 9-ம் தேதி உத்தரவிட்டனர்.

இந்த தடை உத்தரவு எதிரொலியாக தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து அரசாணை பிறப்பித்தது. அதில் ‘‘2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு பத்திரப் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என்றும், ஆனால் அந்த தேதிக்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை எக்காரணம் கொண்டும் பத்திரப் பதிவு செய்யக் கூடாது’’ என்றும் உத்தரவிடப்பட்டது.ஆனால் இந்த அரசாணையை நீதிபதிகள் ஏற்க மறுத்ததால் தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாக பாதிப்படைந்தது. இதனால் நிலங்களை வாங்கிய பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ரியல் எஸ்டேட் அதிபர்கள், முகவர்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.கே.கவுல்உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணி மாறுதலாகி சென்றார். அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதிஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது. மார்ச் 28-ம் தேதி இந்த வழக்கு இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரரான வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி மற்றும் ரியல் எஸ்டேட் தரப்பில் 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாதிட்டனர்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,’’அங்கீகாரமற்ற விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற கடந்த செப்டம்பர் 9-ம் தேதி உயர் நீதிமன்றம் விதித்த தடையில் நாங்கள் சிறு மாற்றம் செய்கிறோம்.

 அதன்படி, தமிழக அரசு பத்திரப் பதிவு சட்டப்பிரிவு 22(ஏ) - வில் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்களின்படி, கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை.அதேநேரம், இந்த தேதிக்குப் பிறகு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற நிலங்களை எக்காரணம் கொண்டும் மறு விற்பனை செய்யக்கூடாது. அரசு புதிதாக வகுக்கும் கொள்கைமுடிவைப் பொருத்தே அதுதொடர் பாக முடிவு செய்யப்படும்.இந்த கொள்கை முடிவை வரும் ஏப்ரல் 11-ம் தேதிக்குள் அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) வெளியான உத்தரவு நகலில் பத்திர பதிவு அனுமதி என்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதே என்று கூறப்பட்டுள்ளது. இது வீட்டு மனை விற்பனையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி சேர்க்கைக்குஏப்ரல் 20 -ஆம் தேதி முதல் மே 18 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் தனியார் பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்புஇதுகுறித்து தமிழக அரசின் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலும் கூடுதலாக வழங்கப்படுகிறது.அதன்படி வரும் 2017 -2018 -ஆம் கல்வியாண்டுக்கு தமிழகம் முழுவதும் உள்ள 9,000 சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிக், மழலையர், தொடக்கப்பள்ளி) நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் 1,26,262 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய, தமிழகம் முழுவதும் உள்ள 10,000 -க்கும் மேற்பட்ட அரசு இ -சேவை மையங்களைப் பெற்றோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளிகளின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்குமுன்னரே முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கப்படும்.

மாவட்ட வாரியான சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதிப்பள்ளிகளின் பட்டியல் மற்றும் அந்தப் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த சேர்க்கைக்கு ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல் மே 18 -ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகுளம் பள்ளிக்கு விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த நடுநிலைப்பள்ளி விருதுடன்.. ரூ 50,000 பரிசு... அரசின் முதல் அங்கீகாரம் ...

எங்கள் பள்ளிகுளம் ஊ.ஒ.ந.நி.பள்ளிக்கு இந்த கல்வியாண்டு ரொம்ப சிறப்பாவே முடிஞ்சிருக்கு. இப்பதா குஜராத் போய்ட்டு DFC விருது வாங்கிவந்தோம்.

இப்ப மாவட்ட கல்வித்துறை எங்கள் பள்ளிகுளம் நடுநிலைப்பள்ளியை விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த நடுநிலைப்பள்ளியாக தேர்ந்தெடுத்து 2016 ஆம் கல்வியாண்டிற்கான காமராசர் விருதுடன் ரூ 50,000 நிதியையும் (பள்ளி மேம்பாட்டிற்கு) வழங்கி எங்களின் இந்தனை வருட உழைப்பிற்கு,அரசு மூலம் முதல் அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.

எப்படி எங்க சந்தோஷத்த வெளிபடுத்துவதுனே தெரியல.பல்லாண்டு பயிர்செய்யும் விவசாயி, நல்ல மகசூல் எடுக்கும் போது கிடைக்கும் மனநிறைவுதா எங்களுக்கும் இருக்கு.

இந்த விருது நீண்டதூர ஓட்டத்தில், இடையிடையே கொடுக்கப்படும் ஊக்க பானம் போல எங்கள ரொம்ப ஊக்கப்படுத்தியிருக்கு.

இந்த விருதுக்கு காரணமான எங்கள் பள்ளிகுளம் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்குமே இந்த விருதை  சமர்பிக்கிறோம்.

இது ஒரு தொடக்கந்தா... எங்கள் கனவெல்லாம் மாநில அளவில் ஒரு சிறந்த மாதிரி பள்ளிமட்டுமல்ல, மாதிரி கிராமமும் தான்...

*நன்றி...

மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர்-விழுப்புரம்.
உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் - வல்லம்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வல்லம். தோழர்.திரு.மோ.கணேசன்புதியதலைமுறை தோழி.திருமதி.ரமணிபிரபா தேவி - தி தமிழ் இந்துநாளிதழ்.
நிதி உதவி செய்துவரும் கொடைவுள்ளங்கள், எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும் முகநூல் நட்புக்கள் அனைவருக்கும் எங்கள் கிராமத்தின் சார்பாக கோடானகோடி நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.

கி.தமிழரசன்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி
பள்ளிகுளம்.
வல்லம் ஒன்றியம்.
விழுப்புரம் மாவட்டம்.
9786899951

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் புகைப்படம் இல்லை எனில் என்ன செய்ய வேண்டும்?

* ஆசிரியர்  தகுதி தேர்வு நுழைவு சீட்டு வெளியிடப்பட்டு உள்ளது

* துவக்கம் வெற்றி பெறுவதாக அமையட்டும்

* நுழைவு சீட்டு தேர்வு எழுதுவது முதல் பணி நியமனம் பெறும் வரை அத்தியாவசியம்

  * நுழைவு சீட்டை உங்கள் Gmail முகவரியில் ஒரு Soft Copy ஆக சேமித்து வையுங்கள்

* புகைபடம் இல்லாமல் இருப்பின் கீழே தரப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வின் போது மையத்தில் ஒப்படைக்கவும்

If there is no photograph on your hall ticket- Please click here to download the form


TNTET - 2017 Exam | Hall Ticket - TRB Published - Download செய்ய


TNTET HALL TICKET - CLICK HERE..

TNTET 2017 - Paper I - Hall Ticket - Click here

TNTET 2017 - Paper II - Hall Ticket - Click here

If there is no photograph on your hall ticket- Please click here to download the form

TN PAY COMMISSION : ஊதியக்குழு கருத்து தெரிவிக்க 'கெடு'

எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து, வரும், 15க்குள் கருத்துகள் அனுப்பும்படி, ஆசிரியர் சங்கத்தினருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. 
எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய, தமிழக அரசு, ஆய்வுக்குழுவை அமைத்துள்ளது. இதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர், அரசு அலுவலர்கள், ஊழியர்களிடம் கருத்துகளை கேட்டு, ஆய்வறிக்கை தயார் செய்கின்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித் துறை சங்கங்களுக்கு, ஊதிய ஆய்வுக்குழு, கடிதம் அனுப்பி உள்ளது. அதில், வரும், 15க்குள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி, ஆசிரியர் சங்கங்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வு பெறும் ஆசிரியர் இடங்கள் பள்ளிக்கல்விபட்டியல் சேகரிப்பு.

பள்ளிக்கல்வித்துறையில், ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து, கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை அடைந்தால், அவர்களுக்கு அந்த கல்வி ஆண்டு முடியும் வரை, பணி நீட்டிப்பு வழங்கப்படும்.
அதன்படி, மே மாதம் ஓய்வு பெறும் உத்தரவு வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் பட்டியலை சேகரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:அரசு பள்ளிகளில், ஆண்டுதோறும், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெறுவர். ஆனால், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை விகிதத்தில், ஆசிரியர்களின் விகிதம் அதிகமாக இருப்பதால், ஓய்வு பெற்றதும் அந்த இடங்கள் மீண்டும் நிரப்பப்படாது.

ஆனால், இந்த ஆண்டு, காலியிடங்களின் பட்டியலை திரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். எனவே, இந்த காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவரா என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!