Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 13 April 2017

வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்; ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம்!!!

இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, வீட்டிற்கே வந்து, நேரில் டிக்கெட்டை தந்து, கட்டணம் பெறும் வசதியை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.

ரயில்களில் பயணிகள் வருகையை அதிகரிக்க, பல புதிய திட்டங்களை, இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது. இவற்றை, ஐ.ஆர்.சி.டி.சி., அமல்படுத்தி வருகிறது. இந்த வகையில், ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில், ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதி 
அறிமுகப்படுத்தப்பட்டது.

டிக்கெட்டிற்கான கட்டணத்தையும், அதன் வாயிலாக செலுத்த வசதி செய்யப்பட்டது. இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்த விபரங்கள், பயணியின் மொபைல் எண்ணிற்கு, குறுஞ்செய்தி மற்றும் இ - மெயில் மூலம் தெரிவிக்கப்படுவதால், காகித பயன்பாடு வெகுவாக குறைந்தது.

புது வசதி :

டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு இல்லாதவர்களுக்காக, இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் வீட்டிற்கு வந்து, டிக்கெட்டை கொடுத்துவிட்டு அதற்கான கட்டணத்தை பெற்றுச் செல்லும், 'கேஷ் ஆன் டெலிவரி' முறையை, நாடு முழுவதும், 600 நகரங்களில், ஐ.ஆர்.சி.டி.சி., துவங்கியுள்ளது.இந்த வசதியை பயன்படுத்த விரும்புவோர், ஆதார் அட்டை மற்றும், 'பான்' அட்டை வைத்திருக்க வேண்டும்.

ஐ.ஆர்.சி.டி.சி., தளத்தில், பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்யும் போது, சி.ஓ.டி., எனப்படும், 'கேஷ் ஆன் டெலிவரி'யை தேர்வு செய்ய வேண்டும்.பயண நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்கையில், இந்த வசதியை பயன்படுத்த முடியும். இவ்வாறு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும் போது, அதற்கான பணம், பயணியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால், வங்கிக் கணக்கு குறித்த தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.

10th / 12th Career Guidance Materials - 2017

10th Career Guidance Materials - Click here

12th Career Guidance Materials - Click here

அடுத்த கல்வியாண்டு முதல் உருது மொழியிலும் ‘நீட்’ தேர்வு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை (நீட்) 2018-19-ம் கல்வியாண்டு முதல் உருது மொழியிலும் நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வை உருது மொழியிலும் நடத்த, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், எம்.எம்.சந்தனகவுடா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “நீட் தேர்வு நடத்தப்படும் மொழிகளில் உருது மொழியையும் இந்த ஆண்டிலேயே சேர்க்க சாத்தியமில்லை. அடுத்த கல்வியாண்டு முதல் சேர்க்க மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம். இந்த ஆண்டே தேர்வு நடத்துவது என்றால் அதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஏதேனும் அற்புதம் செய்யுமாறு மத்திய அரசுக்கு நாங்கள் உத்தரவிட முடியாது. தேர்வு நடைபெறும் மொழிகளில் கூடுதலாக ஒன்றை சேர்ப்பது என்றால் அதில் பல்வேறு நடைமுறைகள் உள்ளன” என்றனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கூறும்போது, “அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வை உருது மொழியிலும் நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை நாங்கள் எதிர்க்க மாட்டோம்” என்றார்.

முன்னதாக, நடப்பு கல்வியாண்டில் உருது மொழியிலும் ‘நீட்’ தேர்வு நடத்த சாத்தியமில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது ‘நீட்’ தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியா, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அசாமி ஆகிய 10 மொழிகளில் நடத்தப்படுகிறது

ஜூலை மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் தகவல் !!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு கடந்த 3-ந்தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, “தமிழக
அரசு மே மாதம் 14-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். இல்லையெனில் கோர்ட்டு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய திருக்கும்” என்று எச்சரிக்கையும், கெடுவும் விதித்தது.

அதற்கு தமிழக அரசு பதில் அளிக்கையில், “சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பதால் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை செய்ய இயலாது” என்று கூறி இருந்தது. 

மேலும், ’தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை முழுமை செய்யும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை அதனால் தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்று கூறி மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து ஆகி விட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. 

அப்போது, ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்ட கெடுவை தளர்த்தி கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதனால் உள்ளாட்சி தேர்தல் ஜூலை மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

“தமிழக அரசு மே மாதம் 14-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். இல்லையெனில் கோர்ட்டு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய திருக்கும்” என்று எச்சரிக்கையும், கெடுவும் விதித்தது.
அதற்கு தமிழக அரசு பதில் அளிக்கையில், “சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பதால் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை செய்ய இயலாது” என்று கூறி இருந்தது. 
மேலும், ’தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை முழுமை செய்யும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை அதனால் தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்று கூறி மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து ஆகி விட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. 
அப்போது, ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்ட கெடுவை தளர்த்தி கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
இதனால் உள்ளாட்சி தேர்தல் ஜூலை மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

வீடுகளில் அதிக அளவு புத்தகங்கள் வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு பரிசு. முதன்மை கல்வி அலுவலர் தகவல்

வரும் கல்வியாண்டில் பள்ளிகளில் வார்த்தை உச்சரிப்பு பாடத்திட்டம்

பிழையின்றி தமிழ் பேசுவது எப்படி என அரசுப்பள்ளி மாணவர்களுக்காக ஆசிரியர்கள் உருவாக்கும் ''குறும்படம்'' 2 ஆயிரம் மாணவர்கள் நடிப்பில் தயாராகிறது.

ஆதார் அட்டை பெறாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் : கோடை விடுமுறையில் கல்வித்துறை ஏற்பாடு

ஆதார் அடையாள அட்டை பெறாத மாணவர்களுக்கு நடப்பு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 
தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்ககத்தின்கீழ் 2016-17ம் கல்வியாண்டில் உயர், மேல்நிலை பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆதார் எண் வழங்கும் பணியை 100 சதவீதம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை பதிவு செய்யப்படாத மாணவர்களுக்காக 2017 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வட்ட அளவில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது சார்பாக தாலுகா அளவில் நடைபெறும் சிறப்பு முகாமில் அந்தந்த தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள்,தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இந்த விபரத்தை தெரிவித்து ஆதார் அட்டை பதிவு முகாமை பயன்படுத்திக்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும்.100 சதவீத ஆதார் பதிவை உறுதி செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI வங்கியில் சில சேமிப்பு கணக்கிற்கு எல்லாம் குறைந்தபட்ச வைப்பு தொகை தேவையில்லை.!!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அன்மையில் வெளியிட்ட அறிக்கையில் பின் வரும் சில சேமிப்புக் கணக்குகளுக்கு எல்லாம் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை என்று அறிவித்து இருக்கின்றது.
என்னடா இது எல்லாம் எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு வங்கிகணக்குகளுக்கு 5000 ரூபாய் எனக் கூறுகின்றார்கள் இவன் என்ன இல்லை என்று கூறுகின்றான் என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கின்றது.ஆம், எஸ்பிஐ வங்கியில் சிறு சேமிப்பு வங்கி கணக்கு, அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகள், ஜன தண் கணக்குகள்உள்ளிட்ட சேமிப்பு வங்கி கணக்குகளுக்குக் குறைந்த பட்ச இருப்புத் தொகை தேவையில்லை.இந்த அறிவிப்பு எஸ்பிஐ வங்கியின் டிவிட் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்மையில் எஸ்பிஐ வங்கி ஐந்துதுணை வங்கிகளுடன் இணைந்துள்ளது.

எஸ்பிஐ வங்கி சாதாரணச் சேமிப்புக் கணக்குகள் மட்டும் இல்லாமல் கார்ப்ரேட் சம்பள கணக்குகளும் உள்ளன.எஸ்பிஐ வங்கி ஏப்ரல் 1 முதல் 5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்க வேண்டும் என்று அறிவித்த போது அனைவரும் பயந்தனர். அந்தக் குறைந்தபட்ச இருப்புத் தொகை 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை இருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் மாதம் 20 ரூபாய் முதல் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத எஸ்பிஐ வங்கி கணக்குகள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.சிறு சேமிப்பு வங்கி கணக்கு (Small savings bank account) சிறு சேமிப்பு வங்கி கணக்கில் குறைந்தபட்சஇருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரம் அதிகபட்சம் 50,000 ரூபாய் மட்டுமே சேமிப்புக் கணக்கில் வைத்து இருக்க முடிடும். வாடிக்கையாளர்களுக்கு எந்த ஆண்டுக் கட்டணமும் இல்லாமல் ஏடிஎம் கார்டு இலவசமாக வழங்கப்படும்.அடிப்படை சேமிப்பு கணக்கு (Basic savings account) எஸ்பிஐ வங்கியின் அடிப்படை சேமிப்பு கணக்கிற்கு எந்தக் குறைந்தபட்ச வரம்பு மற்றும் அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை. இந்தச் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கியில் பிற சேமிப்புக் கணக்குகள் துவங்க முடியாது.

 ஒரு வேலை எஸ்பிஐ வங்கியில் பிற சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் 30 நாட்களுக்குள் அந்தக் கணக்கை மூடிவிட வேண்டும்.பெருநிறுவன சம்பளம் வங்கி கணக்கு (Corporate salarypackage) எஸ்பிஐ வங்கியில் பெருநிறுவன சம்பளம் வங்கி கணக்குகளும் உள்ளன, இந்த வங்கி கணக்குத் திட்டத்தைப் பயன்படுத்திச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு இலவசமாக இணையதள வங்கி சேவை கணக்கு, மொபைல் வங்கி சேவை கணக்கு, செக் புக் உள்ளிட்ட பிற நன்மைகள் அளிக்கப்படும். இந்த வங்கி கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் இன்றைய தேதியில் சேமிப்பு வங்கி கணக்குகள் திறப்பதற்கு, சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்க வேண்டும். ஏன், அரசாங்கத்துக்குச் சொந்தமான வங்கிகளில் கூட இது தான் விதிமுறையாக உள்ளது. அதுவே தனியார் துறை வங்கிகள் அனைத்தும் குறைந்தபட்ச இருப்பு தொகையைக் கூடுதலாக நிர்ணயித்துள்ளது. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கை திறந்தால், குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்கத் தேவையில்லை.

மீன்வள படிப்பில் சேர மே 10 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள பல்கலை. துணைவேந்தர் அறிவிப்பு.

மீன்வள படிப்புகளில் சேர மே மாதம் 10-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பொறுப்பு) கே.ரத்னகுமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பிஎப்எஸ்சி படிப்பில் 50 இடங்களும், திருவள்ளூர் பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் 60 இடங்களும் உள்ளன.அதேபோல், நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பொறியியல் கல்லூரியில் பி.இ. (மீன்வள பொறியியல்) படிப்பில் 20 இடங்கள் இருக்கின்றன. பிளஸ் 2-வில் உயிரியல் (அல்லது விலங்கியல், தாவரவியல்), இயற்பியல், வேதியியல் பாடங்கள் படித்தவர்கள் மீன்வள படிப்பில் சேரலாம். பிஇ (மீன்வள பொறியியல்) படிப்புக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் படித்திருக்க வேண்டும். இப்படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வு எதுவும் கிடையாது.மீன்வள படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை, முதல் பட்டதாரி கல்வி உதவித் தொகை, மீன்வள பல்கலைக்கழக உதவித் தொகை, சிறந்த எஸ்சி. எஸ்டி மாணவருக்கு முதல்வரின் விருது என பல்வேறு விதமான கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. இவை தவிர, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உதவித் தொகையும் உண்டு.வரும் கல்வி ஆண்டில் (2017-18) மேற்கண்ட படிப்புகளில் சேர மாணவர்கள் மே மாதம் 10-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை ஆன்லைனில் (www.tnfu.ac.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.600-ஐ (எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.500) ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம். அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்படாது. ஆன்லைன் மூலமாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படும்.

தொடர்புக்கு..மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் மே மாதம் 10-ம் தேதி வெளியிடப்படும்.

கூடுதல் விவரங்கள் அறிய மாணவர் சேர்க்கைக்குழு தலை வரை 04365-240558 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் வேலை கிடைக்காமல் தவிக்கும் கணினி அறிவியல் ஆசிரியர்கள்: பரபரப்பு தகவல்கள்.

தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள், பகுதி நேரம் கூட வேலை கிடைக்காமல் தவித்துவருகின்றனர்.  தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. 
அப்போது ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கணினி அறிவியல் பாடத்தை மையமாக வைத்து அனைவருக்கும் இலவச கணினி அறிவியல் கல்வி அறிவிக்கும் வகையில் இந்த சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக 2011-12 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதனால் கடந்த ஆட்சிக்காலத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 28 லட்சம் மாணவர்களுக்கு அச்சடித்த கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள்  கிடப்பில் போடப்பட்டன.

இதனால் மக்கள் வரிப்பணத்தில் ரூ.150 கோடியில் அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் இன்று வரை குடோன்களில் உள்ளன. சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதால் பி.எட் கணினி ஆசிரியர் படிப்பை தங்களுக்கு அரசுப்பள்ளிகளில் வேலை கிடைக்கும் என எண்ணிஅதிகளவில் படித்தனர். ஆனால், அரசுப்பள்ளிகளில் பி.எட் படித்த கணினி ஆசிரியர்களுக்கு பகுதி நேர வேலை கூட வழங்கவில்லை. மாறாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டிப்ளமோ, பிசிஏ. மற்றும் 3 ஆண்டு படித்த ஆசிரியர்கள், கணினி அறிவியல் பாடம் சொல்லிக்கொடுக்க நியமிக்கப்பட்டனர்.பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் நியமிக்கப்படவில்லை. இதனால் பி.எட். படித்த கணினி அறிவியல் ஆசிரியர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இன்றும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் கணினி அறிவியல் ஆசிரியர்கள் வேலை இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். .கடந்த 2006ம் ஆண்டில் இருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் பாடப்பிரிவு இல்லை.   உலகம் கணினி மயமாக வளர்ந்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் கணினி கல்வி மாணவர்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்து, கணினி அறிவியல் பாடப்பிரிவை கொண்டு வரவேண்டும்.மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பி.எட் கணினி அறிவியல் படித்த ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கணினி ஆசிரியர்கள் கூறுகையில்,‘‘இன்று  அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 80 சதவீதம் பேர் ஏழை, எளிய  மாணவர்கள் தான்.

அரசுப்பள்ளிகளில் இலவச கணினி கல்வி அளிப்பதாகக் கூறி  விட்டு, இலவச லேப்டாப் வழங்கினால் மட்டும் ேபாதாது. ஒவ்வொரு பள்ளியிலும் 2  கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இன்றைக்கு டேட்டா என்ட்ரிக்கு  வெளியில் பணம் கொடுத்து செய்கின்றனர். அதனை தவிர்த்து, அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் போட வேண்டும். அங்ேகயே எங்களைப் போன்ற பி.எட் கணினி அறிவியல்  ஆசிரியர்களுக்குஅரசு வேலை வழங்க வேண்டும்’’ என்றனர்.இதுபற்றி தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலச்செயலாளர் குமரேசன் கூறும்போது, “தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களின் குடும்பங்கள் இன்று வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றன.

1992ல் இருந்து இன்று வரை தவித்து வரும் இவர்கள், அனைவரும் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள்.இவர்களுக்கு டெட், டிஆர்பி போன்ற ஆசிரியர் தகுதித்தேர்வும் இல்லை. ஏஇஇஓ., டிஇஓ தேர்வுக்கு அடிப்படை கல்வி பி.எட். ஆனால், கணினி அறிவியலில் பி.எட். பட்டம் பெற்ற இவர்களுக்கு அதிலும் வாய்ப்பில்லை. பகுதி நேர சிறப்பாசிரியர் நியமனத்தில் கூட கணினி அறிவியல் பி.எட். படித்த பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டனர்’’ என்றார்.

இயற்கை விவசாயம், தங்கம் பரிசு, ஃபேஸ்புக் நிதியுதவி..! அசத்தும் திருநெல்வேலி அரசுப்பள்ளி


அரசுப்பள்ளி மாணவர்கள் திறமைசாளிகளாக இருந்தாலும், அதனைக் கண்டறிந்து வெளிக்கொண்டுவருவதிலும் ஊக்கப்படுத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. இதைச் சரியாக உணர்ந்து, தனியார் பள்ளிக்கு இணையாக, தான் பணியாற்றும் பள்ளியை மாற்றி இருக்கிறார் ஓர் ஆசிரியர்.
 

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியின் ஆசிரியர், பழனிகுமார். திறமையான மாணவர்களைத் தேர்வுசெய்து ஆண்டுதோறும் தங்க நாணயம் வழங்குவது, இயற்கை விவசாயம் மூலம் சத்தான காய்கறிகளை விளைவிக்க மாணவர்களையே பங்கேற்ற செய்வது, தனியார் பள்ளி போன்ற சீருடைகள், யோகா, நடனப்பயிற்சி என நல் உள்ளங்கள் பலரிடமும் இருந்து பெற்ற நிதியின் மூலம் மாற்றங்களை நிகழ்த்தி இருக்கிறார் பழனிகுமார். 

"நான் 2008-ம் வருஷம் இந்தப் பள்ளிக்கு ஆசிரியராக வந்தேன். நான்கு வருடங்கள் ஐந்தாம் வகுப்புக்கும், பிறகு நான்காம் வகுப்புப் பிள்ளைகளுக்கும் ஆசிரியரா இருக்கேன். நான் ஆசிரியராகச் சேர்ந்த சமயத்தில் இவர்களின் திறமைகளைப் பார்த்து வியந்தேன். இந்தத் திறமைகள் வெளியுலகத்துக்குத் தெரியணும்னு ஆசைப்பட்டேன். என்னாலான முயற்சிகளை சின்னச் சின்னதாக செய்ய ஆரம்பிச்சேன். பள்ளியின் பெயரில் ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிச்சு, குழந்தைகளின் சாதனைகளை போஸ்ட் பண்ணினேன். குறிப்பாக, குழந்தைகளே தங்களைப் பற்றி பேசும், எழுதும் விஷயங்களை போஸ்ட் செஞ்சேன். அதைப் பார்த்துட்டு பலரும் பாராட்டினாங்க. சின்ன அளவில் தொடங்கி இப்போ பெரிய அளவுக்கு நிதியுதவி செய்துட்டு இருக்காங்க. அந்த நிதியுதவி மூலம் பள்ளியின் வடிவமைப்பை மாற்ற ஆரம்பிச்சேன். 

வகுப்பறைகள், சுற்றுச்சுவர்களில் பிரத்யேகமாக ஓவியங்களை வரைந்தோம். பல்வேறு துறைகளிலும் சாதனைப் படைத்தவர்களும், அவர்களுக்கு அருகில் ஒரு காலி இடமும் இருக்கும். 'இந்தக் காலி இடத்தில் வலம்வரப்போவது, உங்களில் யார்?' என எழுதி இருக்கும். இந்த ஓவியங்களைப் பார்க்கும் குழந்தைகளுக்கு நாமும் பெரிய சாதனையாளரா ஆகணும் என்கிற உத்வேகம் வரும். ஒவ்வொரு வகுப்பறையும் உயிரோட்டமாவும் இருக்கும். பவர்பாயிண்ட் பயிற்சி வகுப்புகள், ஸ்மார்ட் கிளாஸ் எனப் பல வகைகளில் பாடம் சொல்லிக்கொடுக்கிறோம்'' என்று பள்ளியில் தான் மாற்றியிருக்கும் விஷயங்களின் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்கிறார் பழனிகுமார். 

பள்ளிக்கு அருகில் உள்ள மார்க்கெட்டில் இருந்து காய்கறி கழிவுகளைச் சேகரித்து வந்து இயற்கை உரம் தயாரித்து, பள்ளியில் இருக்கும் இயற்கை காய்கறித் தோட்டத்துக்குப் பயன்படுத்துகிறார். இதற்காக, சொட்டுநீர் பாசன முறையையும் கடைப்பிடிக்கிறார். விளையும் காய்கறிகளை பள்ளியில் தயாராகும் சத்துணவுக்குப் பயன்படுத்துகிறார்கள். சில சமயம் மார்கெட்டுக்கு எடுத்துச்சென்று குழந்தைகளையே விற்பனை செய்யவும் பயிற்சி அளிக்கிறார். இதன் மூலம், விவசாயிகளின் உணர்வு, ஆரோக்கியமான இயற்கை உணவுகளைப் பற்றி குழந்தைகள் முழுமையா தெரிந்துகொள்கிறார்கள். 

''தொலைவில் இருந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்காக வேன் வசதி செய்திருக்கிறேன். யோகா மாஸ்டர் ஒருவர் மூலம் வாரம் ஒருமுறை மாணவர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்கிறோம். நாங்களே தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு யோகா சொல்லிக்கொடுக்கிறோம். நாட்டுப்புற விளையாட்டுகளையும் சொல்லிக்கொடுக்கிறோம். அரசு மருத்துவமனை, அரசு அலுவலகம், வங்கி, தபால் நிலையம் போன்ற இடங்களுக்குக் குழந்தைகளை நேரில் அழைத்துச் சென்று களச் சூழலைப் பாடமா நடத்துகிறோம். தனியார் பள்ளி மாணவர்களைப் போல, எங்கள் பள்ளியில் படிக்கும் 260 குழந்தைகளுக்கும் ஸ்பான்ஸர் மூலமாக இரண்டு செட் வெரைட்டி யூனிஃபார்ம் வாங்கிக்கொடுத்திருக்கிறோம்" என்கிற பழனிகுமார், தங்க நாணயப் பரிசு பற்றி கூறுகிறார். 

"2010-ம் வருடத்தின் கல்வி இறுதியாண்டு சமயத்தில், பள்ளியின் எல்லாக் குழந்தைகளுக்கும் ஆங்கில மொழிக்கான சிறப்பு தேர்வு நடத்தினோம். அரை கிராம் தங்க நாணயம், அஞ்சு லிட்டர் குக்கர், மூணு லிட்டர் குக்கர், பால் குக்கர் என முதல் நான்கு மாணவர்களுக்கு பரிசுகளைக் கொடுத்தேன். அடுத்த வருடம் முதல், ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் முதல் பரிசு வாங்கும் குழந்தைக்கு மட்டும் அரை கிராம் தங்க நாணயத்தை என் செலவில் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறேன். இந்த வருஷம் நான்கு ஸ்பான்ஸர்கள் மூலம் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையும் தலா ஒரு மாணவருக்குத் தங்க நாணயம் கொடுத்து ஊக்கப்படுத்தினோம். நேரிலும், பள்ளியின் பெயரில் இருக்கும் 'Thirunavukkarasu PS' என்ற பெயரில் இயங்கும் ஃபேஸ்புக் வாயிலாகவும் உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி கிடைத்துக்கொண்டு இருக்கு. இதுவரை மூணு லட்சம் நிதியுதவி வந்திருக்கு. இந்தப் பணத்தின் மூலம் பள்ளியில் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறோம். இதனால், குழந்தைகளின் கல்வித் தரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு இருக்கு. பெற்றோர்களும் மகிழ்ச்சி. இதற்கெல்லாம் உதவியாக இருக்கும் நல்ல உள்ளங்களுக்கும் சக ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். எங்கள் பள்ளியை தனியார் பள்ளியைவிட பெரிய நிலைக்குக் கொண்டுவருவோம்'' என்கிற பழனிகுமாரின் நம்பிக்கை வார்த்தைகளுக்குத் தோள் கொடுப்பது போல மாணவர்கள் உற்சாகமாகக் குரல் கொடுக்கிறார்கள்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!