Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 14 April 2017

ஒரு வாரத்தில் ஆய்வக உதவியாளர் இறுதி தெரிவு பட்டியல் வெளியீடு: பள்ளிக்கல்வி இயக்குநர் தகவல்.

ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டோர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. 
“ஒரு காலியிடத்துக்கு 5 பேர்” என்ற விகிதாச்சார அடிப்படையில் ஏறத்தாழ 22 ஆயிரம்பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டனர்.சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. (தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால் சென்னை மாவட்டத்தில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படவில்லை). சான்றிதழ் சரிபார்ப்பின்போது, அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவை சரிபார்க்கப்பட்டு, வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்பட்டது.சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த உடனேயே தெரிவு பட்டியல் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை முடிவடைந்துவிட்டதால் தெரிவு பட்டியல்எப்போது வெளியிடப்படும் என்று விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது:ஆய்வக உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு கட் ஆப் மதிப்பெண் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்ததும் மாவட்ட வாரியான தெரிவு பட்டியல் அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகளால் வெளியிடப்படும். தெரிவு பட்டியல் வெளியான அடுத்த சில தினங்களில் மாவட்ட கல்வி அதிகாரிகளால் கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் 81 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு.

தமிழகத்தில் 81 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங் களில் பதிவு செய்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
கடந்த 31.3.2017 நிலவரப் படி, தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் (மாநில வேலைவாய்ப்பு அலுவ லகங்கள், சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள்) பதிவுசெய்துள்ளோர் பற்றிய விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளி யிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் சேர்த்து 81 லட்சத்து 30 ஆயிரத்து 25 பேர் அரசு வேலையைஎதிர்பார்த்து பதிவுசெய்துள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 845 பேர் பிஎட் பட்டதாரிகள். 2 லட்சத்து 21 ஆயிரத்து 651 பேர் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள். 2 லட்சத்து 45 ஆயிரத்து 377 பேர் பொறியியல் பட்டதாரிகள்.

மேலும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 405 பிஏ பட்டதாரிகளும்,6 லட்சத்து 4 ஆயிரத்து 149 பிஎஸ்சி பட்டதாரிகளும், 3 லட்சத்து 32 ஆயிரத்து 341 பிகாம் பட்டதாரிகளும் அரசு வேலைக்காக காத்திருக் கிறார்கள். இவர்கள் தவிர, ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 18 எம்ஏ பட்டதாரிகளும், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 937 எம்எஸ்சி பட்டதாரிகளும், 40 ஆயிரத்து 240 எம்காம் பட்டதாரிகளும் மாநில வேலைவாய்ப்பு அலுவகங்களில் பதிவுசெய்துவிட்டு அரசு பணியை எதிர்நோக்கியுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கான வேலை நாள்கள் குறைக்கப்படுமா?

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான வேலை நாள்களைக் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ளது. 
தமிழகத்தில் இயங்கும் கல்லூரிகளில் 180 நாள்கள் வகுப்புகள் நடத்த வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 200 நாள்கள். தொடக்கப் பள்ளிகளுக்கு 220 நாள்கள். பெரிய மாணவர்கள் அதிக நாள்கள் வகுப்புகளுக்கு செல்லலாம். ஆனால், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குதான் அதிக வேலை நாள்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன்படி பார்த்தால், ஏப்ரல் மாத இறுதி வரையில் வகுப்புகள் நடக்கின்றன.தமிழகத்தில் தற்போது வெயில் மிகவும் அதிகமாகவே உள்ளது. 107 டிகிரி வரை வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், ஏப்ரல் மாத இறுதி வரை தொடக்கப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், அவர்கள் வெயிலின் தாக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வியர்குரு, அம்மை, கோடை வெயில் கொப்புளம் ஆகியவற்றால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெயிலின்தாக்கத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப வேலை நாள்களைக் குறைக்க கல்வித் துறைநடவடிக்கை எடுக்கலாம்.தமிழக அரசும், பள்ளிக் கல்வித் துறையும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விரைந்து தேர்வுகளை நடத்தி, முன்கூட்டியேவிடுமுறை அளிக்க வேண்டும் என்பது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு -ஆசிரியர் பயிற்றுனராக பதவி உயர்வு

2,000 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., 'நோட்டீஸ்'

தங்களை பற்றிய தகவல்களை வழங்காத, 2,000க்கும் அதிகமான பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. சி.பி.எஸ்.இ., என்கிற மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ், நாடு முழுவதும் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பள்ளிகள், தங்கள் வளாகத்தில் உள்ள குடிநீர் வசதிகள் உட்பட, அனைத்து விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டது.

அத்துடன், வை - பை வசதி, ஒவ்வொரு வகுப்புக்கான மாதாந்திர கட்டணம், மாணவர் சேர்க்கை, முடிவுகள், கையிருப்பு நிதி மற்றும்வரவு - செலவு அறிக்கை ஆகியவற்றையும் தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டது.இந்த விபரங்களை, சி.பி.எஸ்.இ.,யின் இணையதளத்திலும், பள்ளியின் இணையதளத்திலும் கடந்த ஆண்டு அக்டோபருக்குள் வெளியிட வேண்டும் என கூறியிருந்தது. ஆனால், 2,000க்கும் அதிகமான பள்ளிகள், இந்த விபரங்களை வெளியிடவில்லை. இதையடுத்து, இந்த பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு, சி.பி.எஸ்.இ., நோட்டீஸ்அனுப்பியுள்ளது.

மேலும், ஒரு மாதத்துக்குள், இந்த விபரங்களை இணையதளங்களில் வெளியிடாவிட்டால், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, எச்சரித்துள்ளது.சி.பி.எஸ்.இ., உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கட்டணம் குறித்து, சி.பி.எஸ்.இ., பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, மாணவர்களிடம், பள்ளிகள் கட்டணம் வசூலிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

German students introduce innovative learning tool in kotagiri government school.( Nallamuthu)

இணையதளத்தில் அரசு ஊழியர் சொத்து விபரம் : உயர்நீதிமன்றம் தள்ளுபடி.

அரசு ஊழியர் சொத்து விபரத்தை இணையதளத்தில் வெளியிட கோரிய மனுவை, மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை பெறும் சான்றிதழ்கள் அனைத்துக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. 
வருவாய்த்துறை, கனிமவளத்துறை போன்ற துறைகளிலும், முட்டை கொள்முதல், மின் உபகரணங்கள் வாங்குவது போன்றவற்றிலும் ஊழல் மலிந்துள்ளது. அதன் மூலம் அரசு ஊழியர்கள் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர். மத்திய அரசு ஊழியர்களை போல், மாநில அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விபரத்தை, துறை தலைவர்களிடம் ஆண்டுதோறும் தெரிவிக்கவும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார்.

நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் உத்தரவு: அரசு ஊழியர்களின் நடவடிக்கையை கண்காணிக்க சட்டம், விதிகள் ஏற்கனவே உள்ளன. குறிப்பிட்ட துறை மற்றும் முறைகேடு புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தை நாடலாம். இம்மனு மீது உத்தரவு பிறப்பிக்க முடியாது.இவ்வாறு உத்தரவிட்டனர்.இதனால் மனு வாபஸ் பெறப்பட்டது. மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இன்ஜினியரிங் தேர்வில் மாற்றம் : ஏ.ஐ.சி.டி.இ., திட்டம்.

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்களின் தனித்திறனை சோதிக்கும் வகையில் தேர்வுகள் நடத்த, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. இன்ஜினியரிங் முடிக்கும் மாணவர்களில் பலர், வேலையின்றி தவிக்கின்றனர்.
ஆனால், பல தொழில் நிறுவனங்களில் திறமையான இன்ஜினியர்கள் இல்லாமல், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., குழு தீவிரமாக விவாதித்தது.அதன் முடிவில், இன்ஜினியரிங் கல்லுாரிகளின் தேர்வு, பாடத்திட்டம் போன்றவற்றில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கல்லுாரியும், பல்கலையும், ஆண்டுதோறும் தொழில் நிறுவனங்களுடன் சேர்ந்து, தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ற, பாடத்திட்டம் கொண்டு வர அறிவுறுத்தப் பட்டுள்ளது.அதேபோல், இன்ஜினியரிங் தேர்வுகளில், வெறும் பாடங்களை பற்றி மட்டும் கேள்விகள் இடம் பெறாமல், மாணவர்களின் தனித்திறன் சோதனை, படித்த பாடம் மூலம் பிரச்னைகளை தீர்க்கும் திறமை குறித்து, கேள்விகள் இடம் பெற உள்ளன. இதற்கான மாதிரி தேர்வுத்தாளை, ஏ.ஐ.சி.டி.இ., உருவாக்க உள்ளது.

TNPSC :தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப ஏப்.26ல் சான்றிதழ் சரிபார்ப்பு.

அரசு துறைகளில் காலியாகவுள்ள, 1,609 தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப, வரும், 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 'குரூப் - 4' பதவியில் அடங்கிய, தட்டச்சர் பணிக்கு, 2005 நவம்பர், 6ல், எழுத்துத்தேர்வு நடந்தது. இதில், தேர்வான, 2,005 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. வரும், 26ம் தேதி முதல், மே, 10 வரை, சென்னையில் உள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். இதில் தேர்வு செய்யப்படுவோர் மூலமாக, காலியாக உள்ள, 1,609 தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மே 21ல் போலீஸ் தேர்வு : 6.50 லட்சம் பேர் பங்கேற்பு.

மே 21ல் நடக்கும் சீருடைப் பணியாளர் எழுத்து தேர்வில் தமிழகம் முழுவதுமிருந்து 6.50 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழக போலீசில் இரண்டாம் நிலை போலீசார், சிறைத் துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்புத் துறையில் தீயணைப்பு
வீரர் என 15,664 காலிப் பணியிடங்கள் உள்ளன. 
இப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்துகிறது. மே 21ல் நடக்கும் எழுத்து தேர்வில் 6.50 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 47,400, மிகக்குறைவாக நீலகிரி, பெரம்பலுார் மாவட்டங்களில் தலா 4,000 பேர் பங்கேற்கின்றனர். தென் மாவட்டங்களில் மதுரையில் 43,300, திருநெல்வேலியில் 34,000, திண்டுக்கல்லில் 22,000, விருதுநகரில் 29,000, கன்னியாகுமரியில் 20,000, தேனியில் 19,000, துாத்துக்குடியில் 16,000, ராமநாதபுரத்தில் 15,000, சிவகங்கையில் 12,000 பேர் எழுதவுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 15,000 பேர் பங்கேற்பது இதுவே முதல் முறை.

விண்ணப்பதாரர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வெழுத முதல் முறையாக மேஜை, நாற்காலி வசதி செய்து கொடுக்கப்படுகிறது. மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்ட தேர்வு மையங்களை 32 மாவட்டங்களிலும் கண்டறியும் முதற்கட்ட பணியில் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இன்ஜினியரிங் தேர்வில் மாற்றம் : ஏ.ஐ.சி.டி.இ., திட்டம்.

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்களின் தனித்திறனை சோதிக்கும் வகையில் தேர்வுகள் நடத்த, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. இன்ஜினியரிங் முடிக்கும் மாணவர்களில் பலர், வேலையின்றி தவிக்கின்றனர்.
ஆனால், பல தொழில் நிறுவனங்களில் திறமையான இன்ஜினியர்கள் இல்லாமல், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., குழு தீவிரமாக விவாதித்தது.அதன் முடிவில், இன்ஜினியரிங் கல்லுாரிகளின் தேர்வு, பாடத்திட்டம் போன்றவற்றில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கல்லுாரியும், பல்கலையும், ஆண்டுதோறும் தொழில் நிறுவனங்களுடன் சேர்ந்து, தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ற, பாடத்திட்டம் கொண்டு வர அறிவுறுத்தப் பட்டுள்ளது.அதேபோல், இன்ஜினியரிங் தேர்வுகளில், வெறும் பாடங்களை பற்றி மட்டும் கேள்விகள் இடம் பெறாமல், மாணவர்களின் தனித்திறன் சோதனை, படித்த பாடம் மூலம் பிரச்னைகளை தீர்க்கும் திறமை குறித்து, கேள்விகள் இடம் பெற உள்ளன. இதற்கான மாதிரி தேர்வுத்தாளை, ஏ.ஐ.சி.டி.இ., உருவாக்க உள்ளது.

'NEET' விண்ணப்பம்: சி.பி.எஸ்.இ., விளக்கம்

'நீட் தேர்வு விண்ணப்பத்தில், புகைப்படம் மற்றும் பெற்றோர் பெயரில் பிழையிருந்தாலும், விண்ணப்பம் ஏற்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுத்தேர்வு, மே, 7ல் நடக்கிறது; 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 
ஏப்., 5ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு முடிந்த நிலையில், தற்போது, விண்ணப்ப பரிசீலனை நடந்து வருகிறது.
விண்ணப்ப பதிவில் பிழைகளை திருத்த, ஏப்., 12ல், அவகாசம் தரப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,

அதில் கூறியுள்ளதாவது: தேர்வுக்கான விண்ணப்ப பதிவில், விண்ணப்பதாரர்களின் புகைப்படத்துடன் பெயர் மற்றும் தேதி தவறாக பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். அதை பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். அதேபோல், தாய், தந்தை பெயரை மாற்றி பதிவு செய்ததாக, பலர் தெரிவித்துள்ளனர்; அவர்களின் விண்ணப்பங்களும் ஏற்கப்படும். தேர்வில் வெற்றி பெற்று, கவுன்சிலிங் சென்றால், அப்போது உரிய ஆதாரங்களை காட்டி, மாணவர் சேர்க்கை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மின் வாரிய உதவியாளர் மதிப்பெண் வெளியீடு.

உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, எழுத்துத் தேர்வில் பங்கேற்ற அனைவரின் மதிப்பெண்ணையும், மின் வாரியம் வெளியிட்டது.
தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. 
இதனால், இளநிலை
உதவியாளர், 'டைப்பிஸ்ட்' என, 2,175 பணியிடங்களை நிரப்ப, 2016ல் எழுத்துத் தேர்வு நடந்தது. இந்த எழுத்துத் தேர்வில் பங்கேற்ற, அனைவரும் பெற்ற மதிப்பெண் முழு விபரம் வெளியிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு, 10 பதவிகளில், 2,175 பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை மூலம், எழுத்துத் தேர்வு நடந்தது; அதில் பங்கேற்ற அனைவரின் மதிப்பெண் விபரமும் வெளியிடப்பட்டது. அதன்படி, 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயித்து, விரைவில் வெளியிடப்படும்; அதை தொடர்ந்து, நேர்காணல் நடத்தி, அதிக மதிப்பெண் எடுப்பவர்கள், வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார். 

தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் : ஏப். 17 முதல் விசாரணை துவக்கம்.

தனியார் பள்ளிகளுக்கு, புதிய கல்வி ஆண்டுக்கான, கல்விக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, வரும், 17 முதல் விசாரணை துவங்க உள்ளது. தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. 
இவற்றில், நர்சரி, மெட்ரிக் வகைகளில், 11 ஆயிரத்து, 980 பள்ளிகள் உள்ளன. இவற்றில், 47 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக அளவில் கல்வி கட்டணம் பெறுவதாக, புகார்கள் உள்ளன. அதை கட்டுப்படுத்த, ௨௦௧௦ல், கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, சுயநிதி பள்ளிகளுக்கான, கல்வி கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டி தலைவராக இருந்த, ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலுவின் பதவிக்காலம், ௨௦௧௬ டிசம்பரில் முடிந்தது. அவரது பதவி காலத்திலேயே, நடப்பு கல்வி ஆண்டுக்கான, கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து விட்டார். இந்நிலையில், கல்வி கட்டண கமிட்டி, ஓராண்டாக செயல்படவில்லை. கமிட்டியின் புதிய தலைவராக, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மாசிலாமணி, ஏப்ரல் முதல் வாரத்தில் பதவியேற்றார். அனைத்து, மெட்ரிக், நர்சரி பள்ளிகளின் பட்டியலை பெற்று, அவற்றின் கல்வி கட்டண நிலையை ஆய்வு செய்துள்ளார்.

இதையடுத்து, புதிய கல்வி ஆண்டில், கட்டணம் நிர்ணயிக்கப்படாத பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பான, தகவல்களை தயார் செய்து வைக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விபரங்களை தயார் செய்த பள்ளிகளுக்கு, வரும், 17ம் தேதி முதல், கட்டண நிர்ணயம் குறித்த விசாரணையை துவங்க, கல்வி கட்டண கமிட்டி முடிவு செய்துள்ளது. அதில், பள்ளிகள், கல்வித்துறையின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும் அரசு ஊழியருக்கு ஊதிய உயர்வு வழங்கலாம் - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!