Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 18 April 2017

SCERT - விக்கிபீடியா வலைத்தளத்தில் பங்களிப்பதற்கு ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்!!


ஆசிரியருக்கான மத்திய அரசின் I.C.T விருது... வழி காட்டுகிறார் விருது பெற்ற ஶ்ரீ.திலீப்!

கல்வி கற்பிக்கும் பணி அடுத்த தலைமுறையினரைச் செதுக்கும் அற்புதமானப் பணியாகும். அதுவும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி போதிப்பது என்பது ஒரு கட்டடத்தின் அடித்தளத்தை வலுவாக அமைப்பதற்கு இணையானது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்குச் சிறப்பான முறையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவிக்கிறது மத்திய அரசு.


கற்பிக்கும் முறைகளில் பல மாற்றங்கள் நிகந்துவருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு தெளிவாக கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கான I.C.T (Information and Communication Technology) விருதினை மத்திய அரசு ஆண்டுதோறும் அளித்துவருகிறது. அந்த விருதுக்கு ஜூலை 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2012 ஆம் ஆண்டுக்கான I.C.T விருதினைப் பெற்றவர் சத்தியமங்கலம், அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் ஶ்ரீ.திலீப். ஆங்கில உச்சரிப்புக்கான பொனடிக்ஸ் ஆன்ட்ராய்டைப் பயன்படுத்தியது, மின் அகராதியைப் பயன்படுத்தி மாணவர்களின் ஆங்கில வளத்தைப் பெருக்கியது, ஆங்கில மொழியைச் சரளமாக பேசும் வெளிநாட்டு மாணவர்களோடு தம் பள்ளி மாணவர்களை இணையம் வழியே உரையாடச் செய்தது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த விருதினைப் பெற்றார். I.C.T விருது குறித்த மேலதிக தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் திலீப்.

I.C.T (Information and Communication Technology) விருது: இந்திய அரசின் மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் தரப்படும் விருது இது. பள்ளிகளில் கற்பித்தல் முறைகளில் தொழில்நுட்பத்தைச் சிறப்பாக பயன்படுத்தும் ஆசிரியர்கள் இந்த விருதின் மூலம் கெளரவிக்கப்படுகிறார்கள்.

மாநிலம்: இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது, ஒரு மாநிலத்திற்கு அதிக பட்சம் மூன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

தேர்தெடுக்கும் முறை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் ஐ.சி.டி பிரிவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். இந்த விருதுக்கு விண்ணபிப்பவர்கள் கணினி ஆசிரியராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தொழில் நுட்பத்தைக் கொண்டே ஏதேனும் ஒரு வகையில் மாணவர்களின் கற்றலுக்கு உறுதுணையாக இருந்தாலே போதும். செல்போன் அல்லது டேப்லெட் ஆகியவற்றைப் பயன்படுத்தி கற்பிப்பவராகக்கூட இருக்கலாம். தொழில்நுட்பம் கொண்டு புதுமையான முறையில் கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும், நல்லாசிரியர் விருதுபோல 20 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் எனும் விதியும் கிடையாது. ஆசிரியர்களிடமிருந்து பெறப்படும் விண்ணபங்களில் இருந்து மாவட்ட கல்வி அதிகாரிகளின் தேர்வின்படி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் அதிகபட்சம் ஐந்து ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்படுவார்கள். அதன்படி, அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்ந்து 65 முதல் 100 ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்படுவர்.

மாவட்ட அளவில் பரிந்துரைக்கப்பட்டவர்களை மாநில அளவிலான அதிகாரிகள் சோதித்து, அவர்களிலிருந்து ஆறு ஆசிரியர்களை மட்டும் தேர்ந்தெடுப்பார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் புராஜெக்ட்டினை குறுந்தகடு (C.D) மற்றும் புத்தக வடிவிலும்  N.C.R.T (National Council of Educational Research and Training - தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு) க்கு பரிந்துரை செய்வார்கள்.

திலீப்

ஒவ்வொரு மாநிலத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கும் புராஜெக்ட்டினை NCERT குழு ஆராயும். அவற்றிலிருந்து ஒரு மாநிலத்திற்கு சிறந்த மூன்று புராஜெக்டினைத் தேர்ந்தெடுக்கும். ஒருவேளை ஒரு மாநிலத்தில் சிறந்த மூன்று புராஜெக்ட்டுகள் இல்லையெனில் ஒன்று அல்லது இரண்டினை மட்டும் தேர்ந்தெடுக்கும். அதுவும் இல்லையெனில் அந்த ஆண்டு அந்த மாநிலத்திற்கு இந்த விருதுகான புராஜெக்ட் ஏதும் தேர்ந்தெடுக்காத சூழலும் ஏற்படலாம்.

NCERT குழுத் தேர்வு செய்த புராஜெக்ட்டினை மனிதவளத் துறை மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும். அங்கு, தேர்ந்தெடுக்கப்படும் புராஜெக்ட்டினைச் செய்த ஆசிரியர்களே ICT விருதினைப் பெறுவார்கள்.

பரிசுகள்: I.C.T விருது பெறும் ஆசிரியர்களுக்கு மடிகணினி (Laptop) ஒன்று, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.    

பரிசளிக்கும் முறை: ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதியன்று குடியரசுத் தலைவர் I.C.T விருதினை அளிப்பார். அதற்கு முதன்நாள் பாரத பிரதமர் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு விருந்தளிப்பார்.

இந்திய அளவில் தமிழ்நாடுதான் அதிக I.C.T விருதினைப் பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட மாநிலமாகும்.

இந்த விருது 2010 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுக்கான விருதினை தமிழ்நாட்டிலிருந்து சித்ரா, கோகிலா, பெர்ஜின் ஆகிய ஆசிரியர்கள் பெற்றனர். 2012 ஆம் ஆண்டு, ஶ்ரீ.திலீப் (விழுப்புரம்) குளோரி ரோசலின் ஆகியோர் பெற்றனர். 2013 ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் வழங்கப்பட வில்லை. 2014 ஆம் ஆண்டு, என்.அன்பழகன் (காஞ்சிபுரம்) 2015 ஆம் ஆண்டு தருமராஜ் (ஊட்டி), எம்.விஜயகுமார் (விழுப்புரம்) ஆகியோரும் பெற்றனர்.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க பணிக்கு இதுபோன்ற அங்கீகாரங்கள் ஊட்டச்சத்தாக விளங்கட்டும்.

TNTET - 2017 : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 6,390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் 6,390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

6390 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 29-ல் தகுதி தேர்வு தொடங்கும் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று  அமைச்சகர் செங்கோட்டையன் இன்று தலைமைச்  செயலகத்தில் தெரிவித்துள்ளார்.

மே-14 முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டியில் பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிறு 'விடுமுறை'!

மே-14 முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டியில் பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிறு 'விடுமுறை'!

அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கும் .

மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்றே இந்த முடிவை எங்கள் அமைப்பு எடுத்திருக்கிறது.

இதற்கு முன்னர் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FLASH NEWS :- கடும் வெயில் காரணமாக ஏப்ரல் 22ம் தேதி முதல் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை

யோகா தினம் கட்டாயம்... பள்ளி கல்லூரிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு !!

ஐ.நா. சபையில் பிரதமர் நரேந்திர மோடி  யோகாவை  பற்றிய நன்மைகள்  என்னென்ன  என்பதையும் , யோகாவின்   முக்கியத்துவத்தை பற்றியும் சிறப்புரை  நிகழ்த்தினார்.

அதன் பின்னர், ஜூன் 21 ஆம் தேதியானது சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டது. அதன்படி  கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 
வருடமும் ஜூன் 21 ஆம் தேதியை யோகா  தினமாக  கொண்டாடப் பட்டு வருகிறது . அதற்காக  மத்திய மாநில அரசுகள் யோகாவிற்கு  அதிக   முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் .

இந்நிலையில், யோகா தினத்தை கொண்டாட, கோடை விடுமுறை முடிந்ததும், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச யோகா தினமான ஜூன் 21 வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், யோகா தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, கல்வி  நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது .

இது குறித்த அறிக்கை ஒன்றும் பல்கலைக்கழக மானிய குழுவான யு.ஜி.சி அனுப்பி உள்ளது.அதில், சர்வதேச யோகா தினத்தன்று,  நாடு முழுவதும் உள்ள பள்ளி,கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகங்களில் காலை 7 மணி முதல் 8 மணி வரை, யோகா தியான நிகழ்ச்சி நடத்த வேண்டும் எனவும், மேலும் அன்றைய தினம் யோகா தொடர்பான விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது .

தற்போது பள்ளி முடிந்து கோடை விடுமுறை என்பதால், விடுமுறை முடிந்த உடனே யோகாவிற்கான  சிறப்பு பயிற்சி  தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழகத்தில் இன்று (ஏப்-18) 18 மாவட்டங்களில்அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்காரணமாக நாளை (ஏப்-18) பகல் 12 மணியிலிருந்து மாலை3 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.18 மாவட்டங்கள் பின்வருமாறு:

1. சென்னை
2. திருவள்ளூர்
3. காஞ்சிபுரம்
4. அரியலுார்
5. கடலூர்
6. விழுப்புரம்
7. கிருஷ்ணகிரி
8. திருவண்ணாமலை
9. கரூர்
10. திருச்சி
11. தர்மபுரி
12. வேலூர்
13. நாகை
14. புதுக்கோட்டை
15. நாமக்கல்
16. பெரம்பலூர்
17. சேலம்
18. ஈரோடு

பகலில் தேவையின்றி வெளியில் வருவதை மக்கள் தவிர்க்கவேண்டும். வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் முன்னச்சரிக்கை தேவை.

PAN கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி?

ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் புது முகவரிக்குச் மாற்றினால், அதை உடனே பான் கார்டில் பதிவு அல்லது சரி செய்யவேண்டியது அவசியம்.
பான் கார்டில் உள்ள முகவரி வருமான வரித்துறை பதிவு செய்யப்படுவதால் இதனை உடனடியாகத் திருத்துவது சாலச்சிறந்தது. 
இதனை நீங்கள் எளிமையாக ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.
ஆன்லைனில் பான் கார்டு முகவரியைத் திருத்தும் வழிகள். இதுதோ உங்களுக்காக..

இணைய முகவரி
இந்த இணைய முகவரிக்குச் சென்று (https://tin.tin.nsdl.com/pan/changerequest.html)PAN Data Request Form என்ற தொடர்பில் மாற்றம் அல்லது திருத்தம் தொடர்பான (changes or correction) வசதியை பயன்படுத்த வேண்டும்.
இந்த விண்ணப்பத்தில் "update communication address" என்ற கோரிக்கையில் டிக் செய்ய மறந்து விடாதீர்கள்.
  
முக்கிய விபரங்கள்
உங்கள் பான் கார்டில் உள்ள விவரங்களில் செய்யவேண்டிய மாற்றங்களுக்கு விண்ணப்பத்தில் அனைத்து கட்டாய விவரங்களையும் (* குறியிடப்பட்ட விவரங்கள்) பூர்த்தி செய்து மாற்றம் தேவையான இடங்களில் எதிரே இடது புறம் கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டியில் தேர்வு (செலக்ட்) செய்யவேண்டும்.

கட்டணம்
உங்கள் தொடர்பு முகவரி இந்தியாவிற்குள் இருந்தால் பான் கார்டை அனுப்ப ரூபாய் 105 செலுத்த வேண்டும் (93 ருபாய் மற்றும் 12.36 சதவிகிதம் சேவை வரி).

கிரெடிட் கார்டுக்கு கூடுதல் கட்டணம்
கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட், காசோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது இணைய வங்கிதளம் மூலமாகச் செலுத்தலாம். கிரெடிட் கார்டு உபயோகத்திற்கு 2 சதவிகித கூடுதல் கட்டணம் உண்டு.

ரசீது
கட்டணம் செலுத்துகை முடிந்த பிறகு அதற்கான ரசீது (acknowledgement) திரையில் தெரியும். அதனை நீங்கள் உங்கள் கணினியில் பதியவோ அல்லது பிரிண்ட் செய்தோ வைத்துக்கொள்ளலாம்.

புகைப்படங்கள்
தனி நபர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் இடதுபுறத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தங்களுடைய அண்மையில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்களை ஒட்டி பாதிப் புகைப்படத்திலும் பாதி விண்ணப்பத்தில் வருமாறும் கையொப்பமிட வேண்டும்.

விண்ணப்பம்
இந்த ரசீது அல்லது விண்ணப்பத்தைப் புகைப்படத்துடன் கையொப்பமிட்ட பின்னர் (தனி நபர்களுக்கு மட்டும்) அதனுடன் கட்டணத்திற்கான டிடி அல்லது காசோலை (ஆன்லைனில் செலுத்தாதமல் நேரடியாகச் செலுத்த விரும்புவோர்) மற்றும் தற்போதுள்ள பான்கார்டின் நகல், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றிற்கான அடையாளச்சான்று ஆகியவற்றுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

முகவரி
NSDL e-Governance Infrastructure Limited, 5th floor,
Mantri Sterling, Plot No. 341,
Survey No. 997/8, Model Colony,
Near Deep Bungalow Chowk,
Pune - 411016'.

பின் குறிப்பு: நீங்கள் அனுப்பும் விண்ணப்ப கவரின் மீது 'APPLICATION FOR PAN CHANGE REQUEST-Acknowledgment Number' என்று குறிப்பிடவும் (உதாரணம்: APPLICATION FOR PAN CHANGE REQUEST-881010200000097).

வாட்ஸ் அப்பில் மெசேஜ் தப்பா அனுப்பிட்டீங்களா... இனி கவலை வேண்டாம்!!!

வாட்ஸ் அப்பில் தவறுதலாக ஒரு மெசேஜை அனுப்பி விட்டீர்களா.. ஐந்து நிமிடத்துக்குள் அது தப்பு என்றுகண்டு பிடித்து விட்டீர்களானால் தப்பிக்கலாம். ஆம்...ஐந்து நிமிடத்திற்குள் நீங்கள் அனுப்பி தப்பான மெசேஜை அன்சென்ட் பண்ணி விடலாம்.
உலகில் பல கோடி வாடிக்கையாளர்களை தன் வசம் கொண்டுள்ள வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது மெசேஜ் அன் சென்ட் செய்யும் புதிய வசதியை அப்டேட் செய்துள்ளது.அண்மையில் ஜிப், போட்டோ, வீடியோ போன்றவற்றை ஸ்டேட்டஸில் வைக்கும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியது வாட்ஸ் அப். தற்போது மெசேஜ் அனுப்புவதிலும், எழுத்துக்களின் அளவுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது.

இந்த புதிய அப்டேடில் ஒருவருக்கு நாம் அனுப்பும் மெசேஜை தேவை இல்லையெனில் ஐந்து நிமிடங்களுக்குள்ளாக அன் சென்ட் மற்றும் எடிட்செய்யும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மெசேஜ்அனுப்பும் பொது அதில் சில குறிப்பிட்ட எழுத்துகளை மேற்கோள் செய்து காட்டுவதற்கு இட்டலிக் மற்றும் போல்ட் ஸ்டைலில் டைப் செய்யும் வசதியையும் அறிமுகபடுத்தபடவுள்ளது.

தற்போது சோதனையில் உள்ள இந்தபதிப்பானது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பில் 2.17.148 என்ற வெர்ஷனை அப்டேட் செய்து இந்த புதிய வசதியை பெறலாம்

பொறியியல் கல்லூரியில் சேர பொது நுழைவுத் தேர்வு: தமிழக அரசு எதிர்ப்பு.

பொறியியல் கல்லூரியில் சேர பொது நுழைவுத் தேர்வு கொண்டுவரும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன் மாநில அரசுடன் கலந்து பேசாமல் கொண்டு வரவுள்ள இந்த திட்டத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ள தமிழக அரசு இத்திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு வரும் 2018-19-ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வை கொண்டுவர முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தில்லியில் மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் இன்று நடைபெற்ற மாநில உயர்கல்வித் துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, கூட்டத்தில் உரையாற்றிய தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்தார். பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை ஒத்திவைக்க வேண்டும் என்றும், +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் அன்பழகன் வலியுறுத்தினார்.

நுழைவுத் தேர்வை எதிர்த்து, தமிழக அரசு ஏற்கனவே அகில இந்திய தொழில்நுட்ப குழுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில் நுழைவுத் தேர்வு நடத்துவது சாத்தியம் இல்லை என்றும், இதனால் பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார் என்று அன்பழகன் தெரிவித்தார்.

மேலும், நுழைவுத் தேர்வுக்காக பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கும், மாநில பாடத்திட்டத்திற்கும் இடையே பெருத்த வேறுபாடு இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இதுபோன்ற முக்கிய கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்கு முன்பாக, மத்திய அரசு மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மத்திய அரசு தமிழக அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகவும், எனவே 2018-ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அமைச்சர் அன்பழகன் வலியுறுத்தி பேசினார்.

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை 21.04.2017 அன்று பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

தொடக்கக்கல்வி - திண்டுக்கல் மாவட்டம் -மூன்றாம் பருவத்தேர்வு -திருத்திய காலஅட்டவணை ..நாள் :17.4.2017

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!