Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 22 April 2017

தொடக்கக் கல்வி - DEE TRANSFER APPLICATION 2017 - NEW APPLICATION FORM PDF (ORIGINAL COPY 3 PAGES)

CLICK HERE - DEE - NEW TRANSFER APPLICATION 2017 - NEW APPLICATION FORM PDF

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ஏப்ரல் 22,23 தேதிகளில் "தரமான கல்விக்கான மாநிலக் கருத்தரங்கம்"

*எங்கள் தேசம் : தரமான கல்விக்கான மாநிலக் கருத்தரங்கம்*

வருகின்ற ஏப்ரல் 22,23 தேதிகளில் *எங்கள் தேசம் - எல்லோருக்குமான தேசம்* என்கிற அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் தேசிய பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு  அறிவியல் இயக்கத்தின் சார்பில் *தரமான கல்விக்கான மாநிலக் கருத்தரங்கம்* வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறுகிறது..

கற்றல் உரிமைகள்...
குழந்தை உரிமைகள்..
கற்றல் அடைவுகள்..
தரமான கல்வி...
கல்வி சார்ந்த குறும்படங்கள்..
என பல தலைப்புகளில் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன..

மாநிலம் முழுவதும் இருந்து மிகச்சிறந்த கல்விச் செயல்பாட்டாளர்களும் ஆசிரியர்களும் கல்வி ஆர்வலர்களும் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர்...

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கற்றல் அடைவுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை மாவட்ட அளவில் தொகுத்து கொண்டு வருவது அவசியம்..
மாவட்டங்கள் சார்பாக அறிக்கை சமர்ப்பிக்க தனி அமர்வு முதல் நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...

ஆர்வமுள்ள ஆசிரிய நண்பர்கள் பங்கேற்கலாம்..
அனுமதி இலவசம்..
முன்பதிவு அவசியம்..

நண்பர்களே..
நிகழ்ச்சி நடைபெறும் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திருத்தணி சாலையில்... அரக்கோணம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது...

**சேலம், ஈரோடு வழியாக வரக்கூடிய நண்பர்கள் அரக்கோணத்தில் இறங்கி வரலாம்..

**விழுப்புரம் -திண்டிவனம்- காஞ்சிபுரம் வழியாக வரலாம்..
காஞ்சிபுரத்தில் இருந்து 1 மணி நேரம்..

**வேலூர் வந்து வரக்கூடிய நண்பர்கள் வேலூரில் இருந்து 2 மணி நேரத்தில் வரலாம்..

**சென்னையில் இருந்து 1 மணி நேரத்தில் வந்து விடலாம்..

*மேலும் விவரங்களுக்கு :*
நண்பர் ஜி.முனுசாமி, மாநிலச் செயலாளர்
📞9443048510

நண்பர். எஸ்.சுப்பிரமணி, மாநில ஒருங்கிணைப்பாளர்
📞 7598340424

நண்பர்.பூபாலன்
வேலூர் மாவட்டச் செயலாளர்
📞 9944274858

அன்புடன்
தேனி.சுந்தர்
மாநிலச் செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
9488011128 / 9047140584
sundar.tnsf@gmail.com

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் : அடுத்த மாதத்தில் நடத்த திட்டம்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், அடுத்த மாதம் நடத்தப்படுகிறது. தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடத்தப்படும். இதில், இடமாறுதல் கவுன்சிலிங், கோடை விடுமுறை காலமான, மே மாதத்தில் முடிக்கப்படும். இடமாறுதல் பெற்றவர்கள், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் போது, புதிய பணியிடங்களில் சேருவர்.

ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், ஜூலை அல்லது ஆகஸ்டில் தான் நடத்தப்பட்டது. அதனால், மாணவர்களுக்கு பாதி பாடத்தை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொரு ஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது. மாணவர்களும் சரியான கற்பித்தல் இன்றி, தேர்வுக்கு திணறினர். இந்நிலையில், இந்த ஆண்டு முதல், மீண்டும் மே மாதத்தில், இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் புதிய செயலர், உதயசந்திரன் உத்தரவுப்படி, இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் கண்ணப்பன் மற்றும் இளங்கோவன் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, ஏப்ரல், 24 முதல் மே, 5 வரை, இடமாறுதலுக்கான 

விண்ணப்பங்கள் பெறப்படும். 

மே, 19ல் பொது மாறுதல் கவுன்சிலிங் துவங்குகிறது. தலைமை ஆசிரியர்கள் இட மாறுதல்; அந்த இடங்களில் பதவி உயர்வில் வருவோருக்கான மாறுதல்; பின், ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதற்கான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால், இடமாறுதல் பெறுவோர், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் நாளிலேயே, புதிய பணியிடங்களில் சேருவர்.

TNTET - 2017 தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

'டெட் தேர்வில், வினாத்தாள் வெளியாகாமல், மாணவர்கள், 'காப்பி' அடிக்காமல், கண்காணிக்க வேண்டும்' என, இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், ஏப்., 29, 30ம் தேதிகளில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஏப்., 29ல், 2.37 லட்சம் பேர்; 30ல், ஐந்து லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்காக, தமிழகம் முழுவதும், 1,861 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களுக்கு, வினாத்தாள் கட்டுகள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன; துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட உள்ளனர்.

பள்ளிக்கல்வி செயலர் உதயச்சந்திரன் உத்தரவுப்படி, பள்ளிக்கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன், டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் காகர்லா உஷா, நேற்று கூட்டம் நடத்தினார்.

அதில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்:

● டெட் தேர்வில் எந்த குளறு படியும் இல்லாமல், தேர்வை நடத்த வேண்டும்

● யாரும் காப்பி அடிக்காமல், கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்

● வினாத்தாள், 'லீக்' ஆகாமல், தேர்வு துவங்கும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும்

● தேர்வு அறைகளில், போதிய அளவுக்கு, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

● அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு என்றால், தனியார் பள்ளி ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்

● தேர்வு மையங்களில் கடிகாரம், குடிநீர், மின் வசதி, மின் விசிறி வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

● தாமதமாக வரும் தேர்வர்களை, அறைக்குள் அனுமதிக்கக் கூடாது

● பறக்கும் படை அமைத்து, தேர்வு நாளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். பொதுத் தேர்வு போல், இந்த தேர்வை நடத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

அங்கீகார விதிகளை மீறிய 13 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ.,நோட்டீஸ்

அங்கீகார விதிகளை மீறி, தில்லுமுல்லு செய்த 13 பள்ளிகளை, சி.பி.எஸ்.இ., கண்டுபிடித்துள்ளது. தமிழகத்தில், ஒரு பள்ளி சிக்கியுள்ளது. சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்று, தமிழகத்தில், ௬௬௦ பள்ளிகள் உட்பட, நாடு முழுவதும், 18 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன.

அதிக கட்டணம் : மேலும், பல பள்ளிகள், மெட்ரிக்கில் இருந்து, சி.பி.எஸ்.இ.,க்கு மாற தயாராகி வருகின்றன. இவ்வாறு மாறும் பள்ளிகள், எதற்கும் கட்டுப்படாமல், அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் உள்ளன. இது குறித்து, சி.பி.எஸ்.இ., வாரியம், ஒவ்வொரு மாநிலத்திலும், சில பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தியது. அப்போது, பல்வேறு தில்லுமுல்லுகள் நடந்தது தெரிய வந்துள்ளது.

எச்சரிக்கை : இதனால், தமிழகத்தில், திண்டிவனத்தில் உள்ள, தாகூர் சீனியர் செகண்டரி பள்ளி உட்பட, 13 பள்ளிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என, கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், 'நோட்டீஸ் கிடைத்த, 30 நாட்களுக்குள் சரியான பதில் தராவிட்டால், சி.பி.எஸ்.இ., வாரியம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

கண்டறியப்பட்ட முறைகேடுகள்?

l பல பள்ளிகளில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், முதல்வர், நுாலகர், ஆய்வகப் பணியாளர்
இல்லை

l தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் பாடப் புத்தகங்களைப் பயன்படுத்தவில்லை

l நுாலகம், ஆய்வகம், போதிய உட்கட்டமைப்பு வசதி இல்லை. பள்ளி அமைந்திருக்கும் நிலம், இரண்டு பிரிவுகளாக உள்ளது; போதிய
பாதுகாப்பு வசதிகள் இல்லை

l ஆசிரியர்கள் முறையாக தேர்வு செய்யப்படவோ, நியமனம் செய்யப்படவோ இல்லை. அரசு
விதிகளின்படி, ஊதியம் வழங்கப்படவில்லை

l மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படவில்லை

l ஆசிரியர்களின் எண்ணிக்கை போலியாக, சி.பி.எஸ்.இ.,க்கு வழங்கப்பட்டுள்ளது

l சில பள்ளிகளில், அனுமதியின்றி, மாணவியருக்கு தனிப்பிரிவு வகுப்புகள் நடத்தப்படுகின்றன

l நடுநிலைப் பள்ளி அங்கீகாரம் பெற்று, பிளஸ் 2 வரை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்

l போதிய விளையாட்டு மைதானம் இல்லை; தரமான குடிநீர், தீ தடுப்பு, சுகாதார வசதிகள்
செய்யவில்லை. இது போன்று பல தில்லுமுல்லுகள் தெரிய வந்துள்ளன.

வியாபாரம் செய்தால் பள்ளி அங்கீகாரம் ரத்து

பாடம் கற்றுத் தருவதை விட்டு, புத்தகம், சீருடை, புத்தக பை விற்பனையில் ஈடுபட்டால், பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், பாட புத்தகம், லேப் - டாப் மற்றும் சீருடை உள்ளிட்டவை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஆனால், தனியார் பள்ளிகளில், இந்த பொருட்களை, பெற்றோர் விலை கொடுத்து வாங்க வேண்டும். இதில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மாணவர்களுக்கான புத்தகங்கள், நோட்டுகள், சீருடை, 'ஷூ' போன்றவற்றை விலைக்கு விற்கின்றன. இதில், ஒவ்வொரு பள்ளியும், பல லட்சம் லாபம் பார்ப்பதாக, பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், அங்கீகார பிரிவு துணை செயலர், ஸ்ரீனிவாசன் வெளியிட்ட சுற்றறிக்கை: புத்தகம், எழுதுப் பொருட்கள், சீருடை, ஷூ, புத்தகப்பை போன்றவற்றை விற்கும், வணிக ரீதியிலான நடவடிக்கைகளில், பள்ளிகள் ஈடுபடக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், பல பள்ளிகள், வியாபாரத்தில் ஈடுபடுவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பள்ளிகள், தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுடன் மறைமுக ஒப்பந்தம் செய்து, வணிக பணிகளில் ஈடுபடுகின்றன. எனவே, மீண்டும் எச்சரிக்கிறோம்.

வணிக செயல்பாடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தால், அந்த பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அங்கீகார விதிகளின் படி, அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அரசு இ-சேவை மையங்கள் மூலம் புதியதாக குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் தேவையான விவரங்களை திருத்தம் செய்யும் வசதி அறிமுகப்படுத்துதல்....


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!