Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 28 April 2017

2017 - 18 கல்வி ஆண்டில் குறுவளமையபயிற்சி வகுப்பில் மாற்றம்

ஒவ்வொரு வருடமும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம்
பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சிகள் அனைத்தும் ஜுன் மாதம் முதல் வாரத்திலேயே 5 நாட்கள் நடைபெறும். இப்பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும். முதல் கட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் 50% ஆசிரியர்களுக்கு நடைபெறும்.  மீதமுள்ள ஆசிரியர்களுக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் பருவம் தொடக்கத்தில் இதே பயிற்சிகள் அந்தந்த வட்டார வளமையத்தில் வழங்கப்படும். பயிற்சி நடைபெறும் நாட்களில் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இப்பயிற்சியின் முற்னேற்பாடாக,  மே மூன்றாம் வாரத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் (மாவட்டத்திற்கு 10 ஆசிரியர் பயிற்றுனர்கள்)  பயிற்சி சென்னையில் வைத்து நடைபெறும். மே இறுதி வாரத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும் வழங்கப்படும். 6 முதல் 8 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அனைத்தும் RMSA வழியாக அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களின் உதவியுடன் நடைபெறும்.

பள்ளி வேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் வட்டார அளவிலான பயிற்சிகள் மாணவர்களின் கல்வித்தரத்தினை பாதிக்கும் என்பதனை உணர்ந்து இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இனிவரும் காலங்களில் வட்டார அளவிலான பயிற்சிகள் பருவ ஆரம்பத்திலேயே வழங்கப்படும். குறுவள மைய பயிற்சிகள் வழக்கம் போலவே நடைபெறும்.

அரசுப்பள்ளிகளில் தரம் மேலும் உயரும்

பள்ளி வாகனங்களில் விரைவில் ஆய்வு: பாதுகாப்பு குறைபாடு இருந்தால் தகுதிச் சான்று கிடைக்காது- போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரிக்கை.

பள்ளி, கல்லூரி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஆய்வுகள் அடுத்த ஒரு வாரத்தில் தொடங்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு உள்ள வாகனங்களுக்கு தகுதிச் சான்று கிடைக்காது என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 38 ஆயிரம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க முன்கூட்டியே பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத் தப்பட்டு வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகங்க ளுக்கு (ஆர்டிஓ) உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் டயர்கள், அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும்.

இதற்கிடையே, இந்த ஆண்டில் பள்ளி வாகனங்களில் ஆய்வு ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது.இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறுகையில், ‘‘பள்ளி வாகனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஆய்வு பணிகள் ஒரு வாரத்தில் தொடங்குகிறது.

வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக 16 அம்சங்கள் குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்படும். குறைபாடுகள் இருந்தால், ஒரு வாரத்தில் சரிசெய்யுமாறு உத்தரவிடப்படும். வாகனங்களில்குறைபாடுகள் இருந்தால் தகுதிச் சான்று வழங்கப்படாது. பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், பர்மிட் சஸ்பெண்ட்செய்யப்படும்’’ என்றனர்.

NEET தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீட் தேர்வுக்கு காலதாமதமாக விண்ணப்பித்த 38 மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகுந்தன் உள்ளிட்ட 38 மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு உண்டா? இல்லையா? என்பது தெரியாத நிலையில் கடைசி நாளில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்தோம்.ஆனால் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக எங்களது விண்ணப்பம் காலதாமதமாக சென்றுள்ளதாகவும், அதனால் எங்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என சிபிஎஸ்இ நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. ஆகவே எங்களையும் தேர்வு எழுத அனுமதிக்கும்படி சிபிஎஸ்சி இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்'' என அதில் கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, ''தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலதாமதமாக விண்ணப்பித்த இந்த 38 மாணவர்களின் விண்ணப்பத்தை ஏற்று, நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கவில்லை எனில் சிபிஎஸ்இ இயக்குனருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்'' என உத்தரவிட்டார்.

உலகின் மலிவு விலை ஏ.சி.யை கண்டுபிடித்துள்ள இவர்கள்தான் நிஜ பவர்ஸ்டார்கள்!

கொளுத்தும் இந்த வெயில் காலத்தில் எல்லாருக்கும் ஏ.சி அவசியமாகிறது. அந்த ஏ.சிக்கள் தற்போது இருக்கும் ஏ.சிக்களை விட பத்து மடங்கு செலவு குறைப்பதாக இருந்தால்? அதாவது ஒரு மணி நேரத்திற்கு 2,400 வாட் மின்சாரத்திற்கு பதில் வெறும் 250 வாட் மின்சாரம் மட்டுமே உபயோகிப்பதாக இருந்தால்? இத்தனை நாள் 5000 கரண்ட் பில் கட்டிவந்த நீங்கள் இனி 500 ரூபாய் தான் கட்டுவீர்கள். போதாக்குறைக்கு அந்த ஏ.சி சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதது. கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா நடைமுறையில் சாத்தியமா? என்ற உங்களின் கேள்வி எனக்கு கேட்கிறது. 

சாத்தியம்தான் என நிரூபித்திருக்கிறார்கள் பிரணவ்-பிரியங்கா தம்பதி. 'வாயு' என அவர்கள் பெயர் வைத்திருக்கும் இந்த தொழில்நுட்பம் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான், ராஜ்ஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டு போராட்டத்திற்கு பின் அக்டோபர் 2014-ல் இறுதி வடிவத்தை அடைந்தது இந்த தொழில்நுட்பம்.

'Vaayu Hybrid Chillers' என்ற இந்த தொழில்நுட்பத்திற்கு மத்திய பிரதேச அரசு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது. இந்த நிறுவனம் இன்டோரில் சொந்தமாக இரண்டு பிளான்ட்களை வைத்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட முறை பரிசோதித்து வெற்றி அடைந்த பின்னர் தற்போது இந்த நிறுவனத்திற்கு ஏராளமான ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, உத்தராகண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் இந்த நிறுவனம் கிளை பரப்பியுள்ளது.

'இது முற்றிலும் புதுமையான தொழில்நுட்பம் என்பதால் வாடிக்கையாளர்கள் குளிர்ந்த காற்றை அனுபவிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற ஏராளமான டீலர்களை நியமித்துள்ளோம்' என்கிறார் பிரணவ்.

எப்படி சாத்தியம்?

பிரணவ்-பிரியங்கா ஒவ்வொரு தடவை வாயு பற்றி பிரஷன்டேஷன் அளித்தபோதும் அவர்களுக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. 'நாங்கள் ஒருமுறை எங்கள் திட்டத்தை ஆய்வாளர்கள் குழு முன் சொல்லியபோது எங்கள் திட்டம் தெர்மோடைனமிக்ஸ் விதிகளுக்கு அப்பாற்பட்டது என சொல்லி நம்ப மறுத்தார்கள்' என்கிறார் பிரியங்கா.

வாயு எப்படி செயல்படுகிறது? வாயு சில்லர் ஆன் செய்யப்பட்ட உடன், கம்பரஷர் இயங்கத் தொடங்குகிறது. ரெஃப்ரிஜிரேட்டர் நீரை குளிர்ச்சியாக்குகிறது. இந்த நீர் பம்பகளின் உதவியோடு பேட்களை சென்றடைகிறது. அங்கே சூடான காற்றோடு இந்த நீர் மோதும்போது காற்றில் உள்ள மூலக்கூறுகள் தங்கள் வெப்பத்தன்மையை இழக்கின்றன. பேட்களில் அளவாய் நீர் தேங்குமாறு தெர்மோஸ்டாட் பார்த்துக்கொள்கிறது. கன்டென்சர் ரெஃப்ரிஜிரன்ட்டை குளுமையாக்குகிறது. அந்தக் சில் காற்றுதான் வெளியே வருகிறது' என விலாவரியாய் விளக்குகிறார் பிரணவ்.

சுருக்கமாகச் சொன்னால் ஏசியில் வருவது போன்ற நடுங்க வைக்கும் குளிர் இதில் இல்லை. நம்மைச் சுற்றியுள்ள வெப்ப அளவைக் குறைக்கிறது.

வாயு சில்லர்ஸ் பார்ப்பதற்கு ஏசி போலத்தான் இருக்கிரது. 'நாங்கள் சமீபத்தில் VAAYU MIG 24 என்ற புதிய கருவியை லான்ச் செய்தோம். இது 1000 சதுர அடி இடத்தை வெறும் 800 வாட் உட்கொண்டு குளுமையாக்கும்' என்கிறார் பிரணவ்.

வரும் நிதியாண்டில் மேலும் பத்து மாநிலங்களுக்கு தங்கள் நிறுவனத்தை விரிவுபடுத்த இருக்கிறார்கள். 'அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் தொடங்கிவிடுவோம். அதற்கேற்றார்போல் மெக்ஸிகோ, ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எங்களுக்கு அழைப்புகள் வருகின்றன. போதுமான நிதி முதலீட்டிற்காக காத்திருக்கிறோம்' என்கிறார் பிரணவ்.

பவர் ஜோடி

பிரியங்கா திருமணத்திற்கு பின் தனது முதுகலை படிப்பை முடித்தார். பிரணவ் காமர்ஸ் பட்டதாரி. HVAC-ல் டிப்ளமோ முடித்திருக்கிறார். சாம்சங். எல்.ஜி போன்ற நிறுவனங்களில் 14 ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவம் இருக்கிறது அவருக்கு. டெக்னாலஜியில் இருந்த அதீத ஆர்வம் காரணமாக 2008-ல் ஏசி விற்பனை மற்றும் சர்வீஸ் மையத்தை தொடங்கினார். மறுபுறம் பிரியங்கா மார்க்கெட்டிங்கில் எம்.பி.ஏ முடித்து பி.ஹெச்.டியும் முடித்தார். ஆய்வுத்தாள்கள் எழுதுவதோடு லெக்சர்களும் கொடுக்கத் தொடங்கினார்.

'தொடக்கத்தில் பிரணவின் அலுவலகம் அவரது வீடுதான். ஒரு முறை ஏ.சி கட்டணம் எகிறிவிட பிரணவின் தந்தை கோபமடைந்தார். இதனால் கூலரின் உள்ளே கம்ப்ரஸர் பொருத்த முயற்சி செய்கிறேன் எனக் கூறி பணிகளை தொடங்கினார். முதலில் அது வழக்கம் போல அவர் செய்யும் ஒரு பரீட்சார்த்த முயற்சி என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்படி சொந்தமாக ஒரு தொழில்நுட்பத்தையே கண்டறிவார் என எதிர்ப்பார்க்கவில்லை' என்கிறார் பிரியங்கா.

ஒரு பொருளை மார்க்கெட்டிங் செய்வதற்கான அவசியத்தை அறிந்திருக்கிறார் பிரணவ். 'அதிக பணத்தை பெற்றுக்கொண்டு காப்புரிமையை விற்றிருக்க முடியும். ஆனால் பணம் சம்பாதிப்பது மட்டுமே எங்கள் குறிக்கோள் இல்லை' என கூறுகிறார் பிரணவ்.

'நாங்கள் கடந்து வந்த தூரத்தை பார்க்கையில் வியப்பாக இருக்கிறது. திருபாய் அம்பானியின் வார்த்தைகளை அடிக்கடி நினைவு கூர்வோம். 'பிரம்மாண்டமாக யோசியுங்கள். விரைவாக யோசியுங்கள். மற்றவர்களைவிட ஒரு படி மேலே யோசியுங்கள். கருத்துகள் யாருக்கும் சொந்தம் இல்லை' என்ற வார்த்தைகளே அவை' என்கிறார் பிரியங்கா.

யுவர்ஸ்டோரி வழங்கிய Mega Launchpad-ஐ வென்றது வாயு. Skoch நிறுவனத்தின் விருதுகளை சமீபத்தில் வென்றுள்ளது இந்த நிறுவனம். மத்திய பிரதேச அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஐந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுள் இந்த நிறுவனமும் ஒன்று.

TNTET 2017 - தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்.

🔸 தேர்வர்கள் மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும்.

🔹 தேர்வு மைய நுழைவாயிலில் காவலர்கள் நடத்தும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

🔸 தேர்வர்கள் தேர்வறைக்குள் நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) மற்றும் நீலம் அல்லது கருப்பு பந்துமுனைப் பேனா மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

🔹 தேர்வு நடைபெறும் வேளையில், தேர்வர்கள் வெளியில் செல்ல அனுமதியில்லை.

🔸 தேர்வு முடிந்ததும் ஓஎம்ஆர் விடைத்தாளின் பிரதியை (கார்பன் காபியை) தேர்வர் பெற்றுச் செல்ல வேண்டும்.

🔹 அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள் எவற்றையும் தேர்வு அறைக்குள் வைத்திருக்க அனுமதியில்லை.

🔸 கைபேசி, கைக்கணினி, மடிக்கணினி, தரவி அல்லது கணக்கிடும் கருவிகள் போன்றவற்றை இத்தேர்வறைக்குள் வைத்திருக்க அனுமதியில்லை.

🔹 தேர்வறைக்குள் அறைக் கண்காணிப்பாளர் அல்லது சக தேர்வர் ஆகியோருடன் முறை தவறி நடப்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

🔸 இந்த விதிமுறைகளை பின்பற்றாத தேர்வர்கள் அன்றையத் தேர்வினைத் தொடர்ந்து எழுத அனுமதிக்கப்படாததோடு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளைத் தொடர்ந்து எழுத நிரந்தரத் தடை விதிக்கப்படுவதுடன் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழக தேர்வுத்துறை மற்றும் சி.பி.எஸ்.இ., உட்பட, 32 பாட வாரியங்களில், பொது தேர்வுக்கான கருணை மதிப்பெண் முறையை, உடனே ரத்து செய்யும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக தேர்வுத்துறை மற்றும் சி.பி.எஸ்.இ., உட்பட, 32 பாட வாரியங்களில், பொது தேர்வுக்கான கருணை மதிப்பெண் முறையை, உடனே ரத்து செய்யும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
நாடு முழுவதும்,பிளஸ் 1 வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. வினாத்தாளில், பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்தோ, கடினமாகவோ, கேள்விகள் இடம் பெற்றால், அதற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும்.அதேபோல, சி.பி.எஸ்.இ.,யின் கேரளா, ஆந்திரா மாநில பாடத்திட்டங்களில், போனஸ் மதிப்பெண் என்ற, 'மாடரேட்' முறை பின்பற்றப்படுகிறது. இதில், சில மாணவர்களுக்கு, ௧5 சதவீதம் வரை மதிப்பெண்ணை அதிகரித்து, சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

இதில், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், மாநிலங்கள் தோறும் மதிப்பிடும் முறை மாறுவதால், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், 'கிரேஸ் மார்க்' என்ற கருணை மதிப்பெண் முறையை, இந்த ஆண்டேநீக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின், பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளின் கூட்டம், டில்லியில், சமீபத்தில் நடந்தது.அதில், கருணை மதிப்பெண் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உத்தரவிடப்பட்டது. அதற்கு, தமிழகம் உட்பட, 32 பாட வாரியங்கள், ஒப்புதல் தெரிவித்துள்ளன.

பள்ளி கல்வி சொல்வது என்ன? :

இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் கூறுகையில், ''தமிழகத்தில், பொதுவாக போனஸ் மதிப்பெண், கருணை மதிப்பெண் போடும் முறை இல்லை. விடைத்தாள் திருத்தம் பல கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது,'' என்றார்.சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினரும், பவன்ஸ் ராஜாஜி பள்ளி முதல்வருமான, அஜீத் பிரசாத் ஜெயின் கூறுகையில், ''பல மாநிலங்களில், அதிகப்படியான மதிப்பெண்கள் வழங்குவதால், அந்த மாநில மாணவர்களுக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் கூடி, மற்ற மாநில மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட,தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது,'' என்றார்.

கணித பயத்தை போக்க கழகம் தொடங்கிய பள்ளி

பதினொன்றாம் வகுப்பிலும் ஆண்டுப் பொதுத்தேர்வு

பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத்தேர்வு முறையை கொண்டு வருவது குறித்து, கருத்து கேட்பு துவங்கியுள்ளது.மத்திய அரசின், 'நீட்' உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளில், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. அதிலும், தனியார் பள்ளி மாணவர்களை விட, அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறைவாகவே உள்ளது. 

இந்த நிலை மாற, கற்பித்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வரும்படி, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து, பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத்தேர்வு முறை கொண்டு வரலாமா என்பது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில், பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண்களும், பிளஸ் 2 இறுதித்தேர்வில் கணக்கில் சேர்க்கப்படுகின்றன. 

அதனால், ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், ஆந்திர மாணவர்கள் அதிக அளவில் சேர்கின்றனர்.எனவே, தமிழகத்திலும் பிளஸ் 1க்கு, பொதுத்தேர்வை கொண்டு வரலாமா என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இது தொடர்பாக, கல்வியாளர்களிடம், கருத்து கேட்பு துவங்கியுள்ளது.

TET ஆசிரியர் பணிக்கு மே, 10 வரை அவகாசம்

 'அரசு பள்ளிகளில், 1,114 ஆசிரியர் காலியிடங்களுக்கு, மே, 10 வரை விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

அரசு பள்ளிகளில், 1,114 பட்டதாரி ஆசிரியர் இடங்கள், ஏற்கனவே, 'டெட்' தகுதித் தேர்வு முடித்தவர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேராதவர்கள், டி.ஆர்.பி., இணையதளத்திலுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து, மே, 10க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பதவிக்கு, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு விபரங்கள் மற்றும் சுயவிபரங்கள் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அவர்கள், மீண்டும் தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'டெட்' தேர்வு நாளை துவக்கம்

'டெட்' எனப்படும், ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு, நாளை துவங்குகிறது; 7.4 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க, 3,000 பேர் இடம் பெற்ற பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில், 18 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். முறைகேடுகளை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

காலை, 10:00 முதல், 1:00 மணி வரை நடக்கும் தேர்வுக்கு, காலை, 8:30 மணிக்கே வந்து விட வேண்டும். காலை, 9:00 மணிக்கு மேல் வருவோர், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பார்வையற்றவர்களுக்கு, கூடுதல் ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்படும். தேர்வு எழுத, உதவிக்கு ஒருவரை அழைத்து வரலாம். மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்து வர அனுமதியில்லை, கல்வித் துறை பணியாளர்கள் மட்டுமின்றி, போலீசாரும் சோதனையிடுவர் என,

அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொது மாறுதல் கலந்தாய்வு- ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு....

ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு*

🥀 2017-18 இல் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் புதிய விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்து 05.05.17 மாலைக்குள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

🥀 மாறுதல் கோரும் தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

🥀 பட்டதாரி / இடைநிலை/உடற்கல்வி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பிக்க ஒரே படிவத்தில் தேவையான மாறுதல் இனங்களில் ✔ (டிக்) குறியீடு இட்டு விண்ணப்பித்தல் வேண்டும்.

🥀 சிறப்பு முன்னுரிமை கோருபவர்கள் உரிய சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். அசல் சான்றிதழை உ.தொ.க.அலுவலரிடம் காட்டி உறுதி செய்து கொள்ள வேண்டும்.

🥀 ஆசிரியர்களிடமிருந்து பெறப்படும் மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் அனைத்தும் இணையத்தளத்தில 06.05.17 முதல் 10.05.17 வரை பதிவு செய்யப்படும். அதன்பின் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை சார்ந்த ஆசிரியர்கள் 11.05.17 முதல் 13.05.17 வரை அலுவலகத்திற்கு நேரில் வந்து கையொப்பமிட்டு பெற்றுச் செல்ல வேண்டும். இந்த விண்ணப்பத்தையே ஆசிரியர்கள் கலந்தாய்வின்போது பயன்படுத்த இயலும். 

🥀 மனமொத்த மாறுதல் பெற 01.06.16 க்கு முன்னர் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்றிருக்க வேண்டும். 01.06.16 க்குப்பின் பணியேற்றவர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.

🥀 ஏற்கனவே மனமொத்த மாறுதலில் சென்றவர்கள் மீண்டும் தான் பணிபுரிந்த பள்ளிக்கு மாறுதல் கோரி விண்ணப்பிக்க இயலாது.

🥀 கடந்த ஆண்டில் மனமொத்த மாறுதல் பெற்றவர்கள் இக்கல்வியாண்டில் விண்ணப்பிக்க இயலாது.

🥀 கணவர் அல்லது மனைவி 01.06.16 க்குப் பின் விபத்து அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தால் அதற்கான ஆதாரத்துடன் கலந்தாய்வு விதிகளைப் பின்பற்றாமல் சிறப்பு நிகழ்வாக கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

🥀 மாறுதல் கோருபவர்கள் 01.06.16 க்கு முன்பு தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். எனினும் 2016-17 இல் பணி நிரவல் பெற்றவர்கள், பதவி உயர்வு பெற்றவர்கள் 01.06.16 க்குப் பிறகு பணியில் சேர்ந்திருந்தாலும் தற்போதைய கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

🥀 முற்றிலும் கண்பார்வையற்றவர்கள், இருதயம், சிறுநீரக அறுவை சிகிச்சை பெற்றவர்கள், டயாலிசிஸ் மேற்கொண்டவர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகள், இராணுவ வீரரின் மனைவி, விதவைகள் மற்றும் 40 வயதைக் கடந்த திருமணம் செய்யாதவர்கள், 40 % மற்றும் அதற்கு மேலும் உள்ள மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ள ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டியதில்லை. 01.06.16 க்குப் பின்னர் பணியில் சேர்ந்திருந்தாலும் இப்போது விண்ணப்பிக்கலாம்.

🥀. மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் spouse certificate வைப்பவர்கள் கணவர் அல்லது மனைவி 30 கி.மீ தூரத்திற்கு அப்பால் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.

🥀 கடந்த ஆண்டு spouse certificate மூலம் மாறுதல் பெற்றவர்கள் நடப்பாண்டில் spouse certificate மூலம் மாறுதல் கோர இயலாது. மாறுதல் பெற்று மூன்றாண்டுகளுக்குப் பின்னரே spouse certificate அடிப்படையில் மாறுதல் கோர இயலும்.

🥀 மத்திய / மாநில அரசு மற்றும் அதைச்சார்ந்த அலுவலர்கள்/ பணியாளர்கள் , அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் மட்டும் உரிய அலுவலரிடம் பணிச்சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

🥀 *மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி மாறுதல் கோரும் விண்ணப்பங்களை உதவி தொடக்கக் கல்வி அலுவகத்தில் 05.05.17 மாலைக்குள் சமர்ப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!