Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 30 April 2017

இன்று போலியோ சொட்டுமருந்து முகாம் !!

தமிழகத்தில் இரண்டாம் தவணையாக இன்று போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது.
போலியோ நோய் வராமல் தடுக்க நாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட போலியோ
சொட்டு மருந்து முகாம் கடந்த ஏப்.,2ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை(ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது.
இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் என 43,051 மையங்கள் செயல்பட உள்ளன. மேலும் முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 1000 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயச்சந்திரன் அவர்களின் பேட்டி

அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட விஷயங்களில் மேலும் வேகத்தை எதிர்பார்க்கலாமா?பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயச்சந்திரன் அவர்களின் பதில்.

ஒரு துறையின் உச்சப் பொறுப்புக்கு வருபவர் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றினால், அத்துறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதற்குச் சமீபத்திய உதாரணம் பள்ளிக் கல்வித் துறை.
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகும் தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பு, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை, நூலகங்களுக்குப் புத்துயிர் என்று துரிதமாக இயங்குகிறது பள்ளிக் கல்வித் துறை. அத்துறையின் செயலாளர் உதயச்சந்திரனுடன் ஒரு பேட்டி:

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை தொடர்ந்துகொண்டிருக்கிறதே?

அதைக் கட்டுப்படுத்த கல்வித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தெந்தப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்ற விவரத்தைக் கல்வித் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் புகாராகக் கொடுக்கலாம். நடவடிக்கை இல்லை என்றால், என்னிடமே நேரடியாகப் புகார் செய்யலாம். இதுதவிர, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்தனியார் பள்ளிகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்களை முறையாகச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கண்காணிப்பதற்கு வசதியாக இணையம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை உண்டு.

அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட விஷயங்களில் மேலும் வேகத்தை எதிர்பார்க்கலாமா?

அரசுப் பள்ளிகள் மீது தனிக் கவனம் செலுத்துகிறோம். ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் நலன் கருதி, ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல் கலந்தாய்வைப் பள்ளி தொடங்கும் முன்பே நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். வெளிப்படைத் தன்மைக்காக அதனையும் இணையம் மூலம் நடத்த உள்ளோம்.

மத்திய அரசுப் பள்ளிகளில் சேரும் அதே ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் மாநில அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க என்ன செய்யப்போகிறீர்கள்?

உரிய கல்வித் தகுதியும், பயிற்றுவிக்கும் திறனும், அனுபவமும் கொண்ட ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் அதிகமாக இருக்கிறார்கள். தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில், சில அரசுப் பள்ளிகள் மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஐஎஸ்ஓ தரச்சான்று, ‘ஸ்மார்ட் கிளாஸ்’ என்று சிறப்பாக இயங்குகின்றன. அதுபோன்ற பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வோம். மற்ற பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தி, பெற்றோர்கள் தாமேமுன்வந்து பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான சூழல் உருவாக்கப்படும். பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம்.

விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படுமா?

நிச்சயமாக. பொதுவாக, ஆண்டு இறுதியில்தான் விளையாட்டு விழாக்களும், ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. தேர்வு நேரம் என்பதால், மாணவர்கள் அதைத் தவிர்க்கிறார்கள். அல்லது பெற்றோரால் தடுக்கப்படுகிறார்கள். எனவே, கல்வியாண்டின் தொடக்கத்திலேயே போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். சில மாநிலங்களில் விளையாட்டுத் துறையில் உள்ளதுபோல விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது.

பணம் சம்பாதிப்பது ஒன்றையே இலக்காக வைத்து நமது கல்விமுறை இருக்கிறது என்றுகல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்களே?

நல்லொழுக்கப் பாடங்களை முறையாக நடத்தவும், விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், கட்டாயமாக கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பெரியோர்களை, குறிப்பாக பெற்றோரை எப்படிநடத்த வேண்டும், பொறுப்புள்ள குடிமகனாக எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் திட்டம் இருக்கிறது.

TET - முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிப்பு.


ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
 இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது. ஏற்கெனவே 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று பலர் வேலையில்லாமல் இருக் கிறார்கள். அவர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக் கப்பட்டிருப்பதால் தங்களை பணியில் அமர்த்திய பின்பு புதிதாக தேர்ச்சி பெறுவோருக்கு பணி வழங்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.இந்த நிலையில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.

இந்த காலியிடங்கள் பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித் துறை, சமூக பாதுகாப்புத்துறை, மத்திய இடைநிலை கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. அந்த பணி யிடங்களில் பாடப்பிரிவுகள் வாரி யான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.நிரப்பப்படும் காலியிடங்களில் புவியியல், வரலாறு, தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளில்தான் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், பிசி (முஸ்லிம்) ஆகிய இட ஒதுக்கீட்டினருக்கான காலியிடங்கள் அதிகமாக இருக்கின்றன.

துறைவாரியாகவும் பாடப் பிரிவுகள் வாரியாகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாகவும் காலியிடங்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு இருக்கிறது.மேற்குறிப்பிட்ட பணி நியமனத் துக்காக முந்தைய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர் கள் தனியாக ஏதும் விண்ணப் பிக்கத் தேவையில்லை. அவர் களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஏற்கெனவே உள்ளது. முன்பு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வேலையில் சேராமல் தற்போது சேர விரும்பு வோர் மட்டும் மே 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அதன் தலைவர் காகர்லா உஷா அறிவித்துள்ளார். தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அது முடிந்ததும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தெரிவு பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

11 - ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சாதகமா... பாதகமா?

10 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் சூழலில், வரும் கல்வி ஆண்டிலிருந்து 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படவிருக்கிறது எனும் செய்தி உலவுகிறது. 
இதை கல்வித் துறை அதிகாரிகள் உறுதி செய்யவில்லை என்றாலும் கல்வி வட்டாரப் பகுதிகளில் இந்தச் செய்தி பரவலாக பேசப்படுகிறது. அப்படி, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு கொண்டுவரப் பட்டால் என்னவாகும்? குறிப்பாக, மாணவர்களுக்கு அது என்ன மாற்றத்தைக் கொண்டு வரும்... சாதகமா அல்லது பாதகமா? என்பது குறித்து கல்வியாளர், பேராசிரியர் கல்விமணி அவர்களிடம் கேட்டோம்.

"நீங்கள் குறிப்பிடும் விஷயம் இன்னும் உறுதியாகவில்லை என்றாலும், அதை ஒட்டி சிலவற்றை அலசலாம் என நினைக்கிறேன். முதலில், 9-ம் வகுப்பு வரை முப்பருவத் தேர்வு முறையை நடைமுறைப் படுத்திவிட்டு 10-ம் வகுப்புக்கு ஒரே தேர்வு என வைத்திருப்பது முறையானது அல்ல. ஏனெனில் ஒன்பது ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட தேர்வு முறைக்கு மாணவர்கள் தயாராகி வரும் சூழலில் ஒரே ஆண்டுக்குள் அதை மாற்றிச் செய்வது மாணவர்களுக்கு அவ்வளவு எளிதானதல்ல. அந்தத் தேர்வுக்கு தயாராவது பல மாணவர்களுக்கு சுமையாகவே இருக்கிறது. இது ஒருபுறம் வைத்துக்கொள்வோம். சில பள்ளிகளில் (தனியார் மற்றும் அரசுப் பள்ளி இரண்டையும் சேர்த்தே சொல்கிறேன்) 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் குவிப்பதற்காக 11- ம் வகுப்பு பாடங்களை நடத்துவதே இல்லை.

10-ம் வகுப்பு முடித்து பள்ளிக்குச் செல்லும் மாணவர் ஒருவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 12-ம் வகுப்பு பாடங்களையே திரும்பத் திரும்ப படிக்க வேண்டியதாகிறது. எவ்வளவுதான் பிடித்த பாடம் என்றாலும் ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப படிப்பது சோர்வூட்டச் செய்யும். மேலும், மேல்நிலைக் கல்வியில் ஓர் ஆண்டு பாடங்களைப் படிக்காமல் கடப்பது, மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குப் பெரிய தீங்கு. 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைக்கும்பட்சத்தில் கட்டாயம் அந்த ஆண்டுக்கு உரிய பாடங்களைப் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களைக் கொண்டுதான் மேல் படிப்புக்குச் செல்கிறார்கள் எனும்போது அதுவே போதுமே என சிலர் நினைக்கலாம். முன்பே சொன்னதுபோல, ஓர் ஆண்டுக்கான பாடங்களை மாணவர் படிக்காமல் கடந்துசெல்லக்கூடாது. மேலும், 11-ம் வகுப்புப் பாடங்களின் தொடர்ச்சிதான் 12-ம் வகுப்புப் பாடங்கள். எனவே, அடிப்படையைத் தெளிவாக படிக்காமல் அடுத்த நிலைக்குச் செல்லும்போது, மேல் வகுப்புப் பாடங்களைப் புரிந்துகொள்வதில் கடுமையான சிக்கல்கள் ஏற்படக்கூடும். அப்படி புரிந்துகொள்ள முடியாமல் போகிறபோதுதான், அர்த்தம் புரியாமல் மனப்பாடம் செய்ய வேண்டியதாகிறது. இதுவும் மாணவரின் கற்றலுக்குத் தீங்கு ஏற்படுத்தக்கூடியதே.

மாணவர்கள் ஒரு பாடத்தைப் புரிந்துகொள்ளாமல் படிக்கும்போது, அந்தப் பாடப் பிரிவை மேற்படிப்புக்கு எடுத்தால் கற்றலில் கடும் பின்னடவை எதிர்கொள்வர். 12-ம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களும்கூட மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படிக்கையில் தேர்ச்சி மதிப்பெண்களை எடுக்கவே சிரமப்படுவதையும் பார்க்க முடிகிறது. இதற்கு, முக்கியக் காரணம் அடிப்படையான பாடங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்காததே.

மேற்படிப்புக்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் சோபிக்க முடியாமல் போவதற்காக காரணம். 11-ம் வகுப்பு பாடங்களைப் படிக்க முடியாமல் போனதே. ஏனெனில் நுழைவுத் தேர்வுகளில் 11-ம் வகுப்பு பாடங்களிலிருந்தும் வினாக்கள் கேள்விகள் கேட்கப்படுவதால், அந்த வினாக்களுக்கு இவர்களால் பதில் அளிக்கமுடியாமல் போய்விடுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு ஏறக்குறைய வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் வர விருக்கின்றன. அதையெல்லாம் மாணவர்கள் எதிர்கொள்ள 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வரும்பட்சத்தில் உதவியாக இருக்கும்.

நுழைவுத் தேர்வுகள் தமிழிலும் நடக்கவிருப்பதால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த முறை பயனுள்ளதாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன். மாணவர்களுக்கு இது கூடுதல் சுமையையும் மன அழுத்தத்தையும் கொடுக்காதா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இப்போதைய சூழலிலேயே மாணவர்களுக்கு வீட்டுப்பாடம், வாரத் தேர்வு, மாதாந்திர தேர்வு என பல வித அழுத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதனால், கூடுதலான அழுத்தமாக இருக்கட்டும் என்பதாக கூறவில்லை. புதிதான அழுத்தம் வரப் போவதில்லை என்பதற்காக சொல்கிறேன். மேலும், இதன் மூலம் மேற்படிப்புக்கான அடிப்படைப் பகுதிகளைக் கூடுதல் கவனமாக படிக்கும் சூழல் உருவாகும்.

இந்த விஷயத்தில் எனக்கு இன்னொரு கருத்தும் இருக்கிறது. 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பதாக இல்லாமல், மேல்நிலைக் கல்வி எனக்கொண்டு 11 மற்றும் 12  வகுப்புகளுக்கும் செமஸ்டர் முறை கொண்டு வந்தால் மாணவர்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும்." என்றார் கல்விமணி.

11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முறை வருவதைப் பலரும் வரவேற்ற சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள். அதற்கு மாற்றாக, மாணவர்களுக்கு சுமைக்கூடக்கூடும் எனும் கருத்துகளையும் பதிந்துவருகிறார்கள். கல்வி அதிகாரிகள் இரண்டு பார்வைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மிகுந்த சிரமங்களிடையே படிக்கும் மாணவர்கள் உயர்வு பெற வேண்டும்.

P.F., வட்டி 8.65 சதவீதம் : மத்திய அரசு ஒப்புதல்.

இ.பி.எப்., எனப்படும், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு, 2016 - 17ம் ஆண்டுக்கு 8.65 சதவீதம் வட்டி வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இ.பி.எப்., வட்டி விகிதத்தை, அறங்காவலர் குழு முடிவு செய்யும்.
அறங்காவலர் குழு முடிவிற்கு, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்க வேண்டும். பி.எப்., அமைப்பு தன்னாட்சியாக செயல்படுவதால், அறங்காவலர் குழு பரிந்துரைகளை, மத்திய அரசு, அப்படியே ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால், 2015- - 16-ம் நிதி ஆண்டில், பி.எப்.,கான வட்டி விகிதத்தை, 8.8 சதவீதமாக, அறங்காவலர் குழு நிர்ணயம் செய்தது. ஆனால், மத்திய நிதி அமைச்சகம், இதை, 8.7 சதவீதமாகக் குறைத்தது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, வட்டிவிகிதம், 8.8 சதவீதமாக மீண்டும் நிர்ணயம் செய்யப்பட்டது.

சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஏற்றபடி, பி.எப்., வட்டி விகிதத்தை, 0.50 சதவீதம் குறைக்க வேண்டும் என, தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு, நிதிஅமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது.இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம், பி.எப்., அறங்காவலர்கள் குழு கூட்டம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையில் நடந்தது. இதில், 2016 - -17ம் நிதி ஆண்டுக்கான, பி.எப்., வட்டி விகிதம், 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்ய, பரிந்துரைக்கப்பட்டது.அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, சில நாட்களுக்கு முன் நிருபர்களிடம் கூறுகையில், '2016 - 17ம் ஆண்டுக்கான பி.எப்., வட்டி சதவீதத்தை, 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்யமத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்து விட்டது. இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும்' என்றார்.

இந்நிலையில், பி.எப்., அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், '2016 - 17ம் ஆண்டுக்கான, பி.எப்., வட்டி சதவீதம், 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்ய மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்த உத்தரவை, தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, நான்கு கோடி சந்தாதாரர்களின் கணக்கில், வட்டித் தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது' என கூறியுள்ளது.

தஞ்சை மாவட்டத்திற்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை

தஞ்சை மாவட்டத்திற்கு வரும் மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியகோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை இதனை அறிவித்துள்ளார்.

ஸ்காலர்ஷிப் பெற கட்டாயமாகிறது ஆதார்

கல்லூரிகளில் அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை (ஸ்காலர்ஷிப்) பெற ஆதார் எண் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழக மானிய குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) கீழ் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு வகையான ஸ்காலர்ஷிப்களை பெற்று வருகின்றனர். தற்போது அதற்கான பதிவு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

சமர்ப்பிக்க ஜூன் இறுதி

இந்நிலையில், ஸ்காலர்ஷிப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஆதார் எண் பெறாதோர், ஜூன் மாத இறுதிக்குள், தங்களது ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய விதிமுறை, அசாம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு பொருந்தாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நேரடி பட்டதாரி ஆசிரியர்கள் - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உயர் நீதிமன்றம் 6 வாரகால இடைக்காலத் தடை

நேரடி பட்டதாரி ஆசிரியர்கள் - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உயர் நீதிமன்றம் 6 வாரகால இடைக்காலத் தடை

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு 2½ லட்சம் பேர் எழுதினர்

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. இன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பணியாற்றுவதற்கான முதல்தாள் தேர்வு நடந்தது. இதற்கு கல்வி தகுதி ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து இருக்க வேண்டும்.

இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 598 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 2 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. முன்னதாக அரை மணி நேரத்துக்கு முன்பு தேர்வு எழுதுபவர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வாளர்கள் செல்போன், கால்குலேட்டர் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். முறைகேடுகளை தடுக்க பறக்கும்படை, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு இருந்தது.

அவர்களின் தீவிர கண்காணிப்பில் தேர்வு நடந்தது. தேர்வையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. நாளை பட்டதாரி ஆசிரியர்களுக்காக 2-ம் தாள் தேர்வு நடக்கிறது. இதில் 5 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

NMMS – 2017 தேர்வு முடிவுகள் வெளியீடு. (30 மாவட்டங்கள்) !!!


NMMS – 2017 தேர்வு முடிவுகள் வெளியீடு. (30 மாவட்டங்கள்) !!!
உங்களுக்கு தகவல் தேவைப்படும் மாவட்டத்தின் பெயரை Click செய்யவும். 
  1.   சென்னை ❌
  2.   திருவள்ளூர் ❌
  3.  காஞ்சிபுரம்

  4.  வேலூர்
  5.  திருவண்ணாமலை
  6.  கிருஷ்ணகிரி
  7.  தருமபுரி

  8.  சேலம்
  9. விழுப்புரம்
10.  கடலூர்
11.  பெரம்பலூர்
12.  அரியலூர்
13.  நாகப்பட்டினம்
14.  நாமக்கல்
15.  ஈரோடு
16. நீலகிரி
17. கோயம்புத்தூர்
18.  திருப்பூர்
19.  கரூர்
20.  திருச்சிராப்பள்ளி
21.  தஞ்சாவூர்
22.  திருவாரூர்
23.  புதுக்கோட்டை
24.  திண்டுக்கல்
25.  தேனி
26.  மதுரை
27.  சிவகங்கை
28.  இராமநாதபுரம்
29.  விருதுநகர்
30.  தூத்துக்குடி
31.  திருநெல்வேலி
32.  கன்னியாகுமரி

மாவட்ட வாரியான பட்டியல் 

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!