Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 1 May 2017

அனைத்து மாணவர்களுக்கும் இந்தாண்டு இறுதிக்குள் SmartCard வழங்கப்படும்

அனைத்து மாணவர்களுக்கும்இந்தாண்டு இறுதிக்குள் SmartCard

வழங்கப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன்

C-TET - தேர்வு முறையில் மாற்றம்: இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த முடிவு

மத்திய ஆசிரியர் நியமன தகுதிக்காண் தேர்வு (சி-டெட்) முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆண்டுதோறும் இருமுறை நடத்தப்படும் இந்தத் தேர்வு, இனிமேல் ஒருமுறை மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தைச் (சிபிஎஸ்இ) சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சி-டெட் தேர்வு ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக இனிமேல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சி-டெட் தேர்வை சிபிஎஸ்இ அமைப்பு நடத்தவுள்ளது. இந்தத் தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சிபிஎஸ்இ அமைப்பு தெரிவித்துவிட்டது.

அதில், ஜேஇஇ-மெயின் தேர்வு, நீட் தேர்வு, மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு போன்ற பல்வேறு தேர்வுகளை நடத்த வேண்டிய பொறுப்பு இருப்பதால், தனக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதனால் சி-டெட் தேர்வை ஒருமுறை மட்டுமே நடத்த தீர்மானித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சிபிஎஸ்இ, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆசிரியர் கல்வி தேசிய கவுன்சில் அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

அப்போது சி-டெட் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிபிஎஸ்இ நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

சி-டெட் தேர்வு தற்போது ஆண்டுதோறும் பிப்ரவரி, செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 9 லட்சம் பேர் வரையிலும் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் சி-டெட் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்துவது என்று முடிவு செய்யப்பட்ட போதிலும், எந்த மாதத்தில் அதை நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை.

முன்னதாக, துணை பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய தேசிய அளவில் நடத்தப்படும் தகுதிக்காண் தேர்வை (நெட்) இனிமேல் நடத்துவதில்லை என்று சிபிஎஸ்இ முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

மே 1 உழைப்பாளர் தினம் பற்றிய தகவல் !!!!

இன்று உழைப்பாளர் தினம். உழைக்கும் மக்கள் எல்லோருக்கும்  கல்விச்சிறகுகளின் வாழ்த்துகள்

எல்லா உழைப்பாளர்களுமே கடின உழைப்பாளிகள்தான் என்றாலும் முக்கியமாக கட்டிடம் கட்டும் பணியாளர்கள், துப்பரவு பணியாளர்கள் போன்ற கடின உழைப்பாளிகளை நினைவு கூர்ந்து, அவர்களது உழைப்பின் கடினத்தை உணர்ந்து நம்முடைய நிலைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்.

அதோடு இந்த உழைப்பாளர் தினம் எப்படி வந்தது? என்று சில நாட்களுக்கு முன் படித்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

உழைப்பாளர்கள் தினம்!

தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள், 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது!

எல்லோரும் நினைப்பதுபோல மே தினம் என்பது முதன் முதலில் பொதுவுடமை புரட்சி நடந்த சோ‌விய‌த் ரஷ்யாவிலோ அல்லது அதன் பிறகு பொதுவுடமை நாடான சீனாவிலோ பிறக்கவில்லை. மாறாக, பொதுவுடமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டிவரும் அமெரிக்காவில்தான் முதன் முதலில் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டது. இன்றிலிருந்து 126 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் அந்த உரிமை கோரிக்கை போராட்ட வடிவத்தைப் பெற்றது. ஒவ்வொரு நாளும் 10 மணிநேரம், 12 மணிநேரம், 14 மணிநேரம் என்று உழைப்பாளர்களும், பணியாளர்களும் நேர வரையறையற்று வேலை வாங்கப்பட்டு வந்த அந்த நாளில், 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்றும், வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரியும் தொழிலாளர்கள் முதன் முதலாக 1880ஆம் ஆண்டு குரல் கொடுத்தனர். அந்த உரிமை கோரிக்கை அடுத்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிலாளர் ஒற்றுமைக்கு வழிவகுத்தது. 1884ஆம் ஆண்டு, தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்ட் டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியன்ஸ்) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 1886ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி முதல் அனைத்து தொழிலாளர்களும் நாள் ஒன்றிற்கு 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்று கூறி அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தது. ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

1886ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகாகோ நகரில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடைக்க சிகாகோ கமர்ஷியல் கிளப் எனும் முதலாளிகள் சங்கம் 2 ஆயிரம் டாலர்கள் செலவு செய்து இயந்திரத் துப்பாக்கிகளைப் பெற்று இலினாய்ஸ் தேசியப் படையினருக்கு வழங்கி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஒடுக்குமாறு கேட்டுக் கொண்டது. உரிமைகள் நிலைநாட்ட உறுதிபூண்ட அந்தத் தொழிலாளர் இயக்கம், சிகாகோவில் உள்ள பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்த மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கவர்ந்தது.
ஆனால், தொழிலாளர்களின் இயக்கத்தை உடைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட சிகாகோ கமர்ஷியல் கிளப் உறுப்பினர்களின் தூண்டுதலின் காரணமாக இலினாய்ஸ் தேசியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்

தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டிக்க அனார்க்கிஸ்ட் எனும் தொழிலாளர் அமைப்பு மே 4ஆம் தேதி ஹே மார்க்கெட் ஸ்கொயர் எனுமிடத்தில் ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்தக் கண்டனக் கூட்டத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 180 பேர் கொண்ட இலினாய்ஸ் தேசியப் படையினர் தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு கட்டளையிட்டனர். மேடையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் கீழே இறங்கியபோது திடீரென்று தேசியப் படையினர் மீது குண்டு ஒன்று வீசப்பட்டது. அதில், ஒருவர் கொல்லப்பட்டார். 70 பேர் காயமடைந்தனர். கோபமுற்ற தேசியப் படையினர் தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். பலர் காயமுற்றனர். தேசியப் படையினர் மீது குண்டு வீசியது யார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அதை காரணமாக்கி தொழிலாளர் இயக்கத்தின் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. இயக்கத்தை ஏற்பாடு செய்து வந்த தலைவர்களின் இல்லங்கள் சோதனை என்ற பெயரில் சிதைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு எந்தக் காரணமும் கூறப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொழிலாளர் இயக்கத்தை முன் நின்று நடத்திய அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கொலை சதித் திட்டம் தீட்டியதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 பேரையும் குற்றவாளிகள் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் அனைவரும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்றும் தண்டனை விதிக்கப்பட்டது. 1887ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஆல்பர்ட் பார்ஸன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், அடாஃல்ப் ஃபிஷ்ஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்பவர் சிறைச் சாலையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற மூவரும் 1893ஆம் ஆண்டு மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்
இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமை கோரிக்கையும், இயக்கமும் வலிமை பெற்றது. 8 மணிநேரம் கொண்ட உழைக்கும் தினமும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் கிடைத்தது. உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் உரிமைகள் நிறைவேற, மானுடத்தை உயர்த்த அரும்பாடுபட்ட அந்த உழைக்கும் மக்கள் கூட்டத்தை மனிதாபிமானத்தோடு பார்க்க உலகம் கற்றுக்கொண்டது. அமெரிக்காவில் உருவான மே தினம்தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்பதே மே தினம் அளித்த உரிமை முழக்கமாகும்.

உழைக்கும் உழைப்பாளிகளுக்கு கல்விச்சிறகுகளின் வாழ்த்துக்கள்.............

இந்த போராட்டத்தை நினைவு கூறுவது தான் மே தினம் !!!

TETதாள் 2 எப்படி இருந்தது?

நேற்று நடைபெற்ற தேர்வானது பொதுவாக ஒரளவு எளிமையாக இருந்தது.

உளவியல் : கடினம்
தமிழ் : எளிமை
ஆங்கிலம் :எளிமை

கணிதம் : புரிந்து கொண்டு விடையளிப்பவர்களுக்கு எளிமை
அறிவியல் : சற்றே கடினம்
சமூக அறிவியல் : எளிமை

4% அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல! தமிழ்நாடு அரசு ஊழியர்கள் குமுறல்!!


4% அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் குமுறல்!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் 4 சதவீதம் உயர்த்தியுள்ளது தங்களுக்கு போதுமானதல்ல என்று அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் 4 சதவீதம் உயர்த்தியுள்ளது தங்களுக்கு போதுமானதல்ல என்று அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இதனால் அரசு ஊழியர்களுக்கு ரூ.244 முதல் ரூ.3080 வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது.

இது போதுமானதல்ல என்று அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.

குறைந்தபட்சம் 6 சதவீதம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 6 சதவீதமும், ஜூலை மாதம் முதல் 7 சதவீதமும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

அந்த வகையில் நடப்பாண்டிலும் ஜனவரி மாதம் முதல் குறைந்தபட்சம் 6% அளவுக்காவது அகவிலைப்படி உயர்வு வழங்குவது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.

ஆனால், அரசு எந்த அடிப்படையில் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கியிருக்கிறது என்பது தெரியவில்லை.

இது அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

மத்திய அரசின் நடைமுறை
மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2016 முதல் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி அவர்களின் அடிப்படை ஊதியம், தர ஊதியம் இணைக்கப்பட்டு அதில் 274% புதிய அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பழைய அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்பட்ட அகவிலைப்படி ரத்து செய்யப்பட்டு, புதிய அடிப்படை ஊதியத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 சதவீதமும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 2 சதவீதமும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி தான் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டு, அகவிலைப்படி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

7-ஆவது ஊதியக் குழு எங்கே?

ஆனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாகியும், தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்னும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை.

இதனால் தமிழக அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை செயல்படுத்தப்பட்டிருந்தால், தமிழக அரசின் 'ஏ' பிரிவு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருந்தாலே அவர்களின் மாத ஊதியம் ரூ.2422 உயர்ந்திருக்கும்.

ஆனால், இப்போது 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டும் கூட ரூ.1768 மட்டுமே ஊதிய உயர்வு கிடைக்கும்.

இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் தமிழக அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 5.5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ரூ.27,562 இழப்பு
தமிழக அரசில் 'ஏ' பிரிவு அதிகாரிகளுக்கு ரூ.37,600 அடிப்படை ஊதியம், ரூ. 6600 தர ஊதியம், 136% அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி சேர்த்து ரூ.1,10,500 ஊதியம் வழங்கப்படுகிறது.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டிருந்தால் இவர்களுக்கு ரூ.1,21,108 அடிப்படை ஊதியம், 4% அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி சேர்த்து ரூ.1,38,062 ஊதியம் கிடைத்திருக்கும்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படாததால் மாதம் ரூ.27,562 இழப்பு ஏற்படுகிறது.

15 சதவீத இடைக்கால நிவாரணம்

எனவே, அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் களையும் வகையில், அகவிலைப்படி உயர்வை 6% ஆக திருத்த வேண்டும்.

அடுத்த 3 மாதங்களில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளையும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.

அதுவரை 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்;

அத்துடன் அடிப்படை ஊதியத்தில் 15 சதவீதத்தை இடைக்கால நிவாரணமாக வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

NEW CREATION POSTSஐ மே-2017 பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பாகவே உருவாக்க கோரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் போதும் காலிப்பணியிடமில்லை என்று தென் மாவட்ட ஆசிரியர்கள் ஏமாற்றமடைகின்றனர்..ஆனால் அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் பணி நியமனம் நடைபெறும் போது புதிதாகப் பணியேற்கும் ஆசிரியர்களுக்கு NEW CREATION POSTS உருவாக்கப்பட்டு  கலந்தாய்வில் காட்டப்படுகின்றன...இதனால் மூத்த ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள்...இளையோர் நேரடியாகச் சொந்த மாவட்டங்களில் பணிபுரிகின்றார்கள்....
எ.கா: 2009 ம் ஆண்டு தொடக்கக்கல்வித்துறையில்  பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்   கடந்த 8 ஆண்டுகளாக வட மாவட்டங்களில் பணியாற்றிவரும் சூழலில் , 2012 &   2014ல்      புதிதாகப்   பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் தென் மாவட்டங்களில் பணிநியமனம் பெற்றனர்....2012 TET தேர்வாசிரியர்கள்  வட மாவட்டங்களில் பணியாற்றிவரும் சூழலில் ,  2014ல்      புதிதாகப்   பணிநியமனம் பெற்ற  ஆசிரியர்கள் தென் மாவட்டங்களில் பணிநியமனம் பெற்றனர்... எனவே 2017 TET தேர்வெழுதிய ஆசிரியர்களுக்காக  NEW CREATION POSTS உருவாக்கப்பட வாய்ப்புள்ளது...எனவேNEW CREATION POSTSஐ மே-2017  பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பாகவே உருவாக்கிவிட்டு, அவற்றை 2017-மே பொது மாறுதல் கலந்தாய்வில் காட்டுவதற்கு ஆவண செய்ய வேண்டுமென்று  கோரிக்கை எழுந்துள்ளது.

ஆசிரியர்களுக்கு ஐந்து நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி விடுமுறைக்கு தடை

கணித, அறிவியல் ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி நடத்த, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளதால், விடுமுறையை கொண்டாட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவது குறித்து உண்டு உறைவிட பயிற்சி வருகிற 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை திண்டுக்கல், திருச்சியில் நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் தலா 50 ஆசிரியர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் பள்ளி திறந்த பிறகு, மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மே மாத தொடக்கத்திலோ, கடைசியிலோ பயிற்சி வைக்காமல், இடைப்பட்ட தேதியில் வைப்பதால், இதில் பங்கேற்க முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் : மே மாதத்தில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால், ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு கிடையாது. தற்போது 'டெட்' தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால், இந்த மாதம் முழுவதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மே மாதம் குடும்பத்துடன் வெளி ஊர்களுக்கு செல்லவோ, விசேஷங்கள் நடத்தவோ ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டிருப்பார்கள்.

தற்போதைய உத்தரவால் அவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டால் பயிற்சி நடத்தியும் பிரயோஜனம் இல்லை. பெண் ஆசிரியர்கள் ஐந்து நாட்கள் தொடர் பயிற்சியில் பங்கேற்றால், அவர்களது குழந்தைகள் மற்றும் பெற்றோரை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும். இது குறித்து அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனரிடம் எங்கள் சங்கம் சார்பில் முறையிட்டுள்ளோம். அவர் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். மாவட்ட அளவில் உத்தரவை வழங்கியுள்ளனர். எனவே, மறுபடியும் இயக்குனரை சந்திக்க உள்ளோம், என்றார்.

பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடு.

தொடக்கக் கல்வித்துறை பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடக்கக் கல்வித்துறையில் பொதுமாறுதல் கவுன்சிலிங் மே 19 ல் துவங்கி மே 29 வரை நடக்கிறது. 
இதற்கான விண்ணப்பங்கள் ஏப்., 24 முதல் மே 5 வரை பெறப்படுகின்றன. கடந்த ஆண்டு வரை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கவுன்சிலிங் மட்டும் இணையதளம் வழியாக நடந்தது. இந்த ஆண்டு அனைத்து மாறுதல்களும் இணையதளம் வழியே நடக்க உள்ளன.
கடந்த காலங்களில் ஒருவர் ஒன்றியத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் என, மூன்று மாறுதல்களுக்கும் விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த ஆண்டு ஏதாவதொன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேலும் கடந்த காலங்களில் பொதுமாறுதல் கவுன்சிலிங் அன்று முன்னுரிமை பெறுவதற்கான ஆவணங்களை அளித்தால்போதும். இதில் சிலர் சமர்ப்பித்த ஆவணங்களில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஆவணங்களை முன்கூட்டியே ஆய்வு செய்யும் வகையில், விண்ணப்பிக்கும்போதே அவற்றை சமர்ப்பிக்க வேண்டுமென, தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு முறையில் மாற்றம் மத்திய அரசு அறிவுரை

பொது தேர்வு முறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிக் கல்வியில், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தேர்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
சில மாநிலங்களில், பிளஸ் 1, பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளுக்கும், பொது தேர்வு முறை உள்ளது. மற்ற மாநிலங்களில், பத்தாம் வகுப்புக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படுகிறது.
அதேபோல, மதிப்பெண் வழங்குதல், வினாத்தாள் தயாரித்தல், திருத்தம் போன்றவற்றில், தனித்தனி திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திலோ, வேறு திட்டம் பின்பற்றப்படுகிறது.
இதனால், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், உயர் கல்வியில் சேர்ப்பதில், கல்வி நிறுவனங்களில் குழப்பம் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய மனிதவள அமைச்சகம் சார்பில், மாநில கல்வி அதிகாரிகள் கூட்டம், டில்லியில் நடத்தப்பட்டது.

அப்போது, தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரும்படி அறிவுறுத்தியுள்ளனர். மாணவர்களின் கற்றல், சிந்தனை திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், வினாத்தாள் தயாரித்தல் விஷயத்தில், கூடுதல் அக்கறை காட்டவும் வலியுறுத்தப்பட்டது.
சி.பி.எஸ்.இ., போன்று, நாடு முழுவதும் ஒரே தேர்வு முறை, விடைத்தாள் திருத்த முறையை கொண்டு வருவது குறித்தும், அந்த
கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி வருகிற கல்வி ஆண்டு முதல் அமல் ஆகிறது.

வருகிற கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அமல் ஆகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று தொடங்கியது. அமைச்சர்செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம்கூறியதாவது:- போட்டியில் பங்கேற்றுள்ள மாற்றுத்திறனாளிவீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை தனியார் நிறுவனம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வைப்புத்தொகையாக செலுத்தப்படும். பள்ளி காலங்களில் மாதம் ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்படும். 'நீட்'தேர்வு 'நீட்'தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. பிளஸ்-1 தேர்வை பொதுத்தேர்வாக மாற்ற அரசு பரிசீலித்து வருகிறது. பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதிகளில் கண்டிப்பாக வெளியிடப்படும். தனியார் கல்வி நிறுவனங்கள் உதவி மூலம் கிராமப்புறங்களில் அனைத்து பள்ளிகளிலும் நவீன கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் விளையாட்டு துறைக்கு போதுமான பயிற்சியாளர்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்க 13 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அமல் ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!