Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 3 May 2017

அதிவேக பிராட்பேண்ட் சேவை BSNL அறிமுகம்

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.675 கட்டணத்துக்கு அதிக வேகத்துடன் செயல்படும் பிராட் பேண்ட் சேவையை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் குறைந்த பட்ச பதிவிறக்க வேகம் 4 எம்பிபிஎஸ் ஆக உள்ளது. 
இதுதவிர, பல்வேறு திட்டங்களில் பதிவிறக்கம் செய்யும் அளவு 250 சதவீதம் அதிக ரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 20 ஜிபியில் இருந்து 70 ஜிபி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.1199 காம்போ திட்டத்தில் பதிவிறக்க வேகம் 2 எம்பிபிஎஸ்-ல் இருந்து 4 எம்பிஎஸ் ஆக 20 ஜிபி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு ஜிபிக்கான கட்டணம் ஒரு ரூபாய்க்கு குறை வாகவே உள்ளது.இத்திட்டத்தில் ஏற்கெனவே சேர்ந்துள்ள வாடிக்கையாளர் களுக்கு இந்த புதிய பிராட்பேண்ட் சேவை மே 1-ம் தேதி முதல் வழங் கப்படும். இதற்காக மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

மேலும், இத்திட்டத்தில் குடும்ப நண்பர்கள் இடையே 3 தரைவழி தொலைபேசி எண்களுக்கு அளவில்லா அழைப்பு வசதியும் உண்டு. இதுகுறித்து கூடுதல் விவரங்களை 1800-345-1500என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது www.chennai.bsnl.co.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆயிரம் RMSA ஆசிரியர்கள் பரிதவிப்பு

தமிழகம் முழுவதும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் 6,742 பட்டதாரி ஆசிரியர்கள், 1,590 முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு மாதம்தோறும் ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கப்படும். அதனை கருவூலங்களில் சமர்ப்பித்த பின்பே சம்பளம் வழங்கப்படும். 
இந்த முறையால் ஆணை மற்றும் ஊதியம் வழங்குதலில் சில சமயங்களில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் முறையாக சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரலில் ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி சம்பளம் பெறுகின்றனர்.இந்த ஆண்டுக்கான ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கப்படாததால், ஏப்ரல் மாத சம்பளம் ஆசிரியர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.

இதனால் தமிழகம் முழுவதும் 8,332 ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். உட்கட்சி பிரச்னையால் தமிழக அரசுநடவடிக்கை எடுக்க இயலாமல் உள்ளதே இதற்கு காரணம் எனத்தெரிகிறது. உடனடியாக ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Whatsapp New Update -இனி மேனேஜர் அனுப்பும் வாட்ஸ்அப் மெசேஜ் மிஸ் ஆகாது..!

தனது பயனாளர்களின் வசதிக்காக எப்போதும் ஏதேனும் ஒரு அப்டேட் கொடுத்து, ஹிட் அடிப்பதில் வாட்ஸ்அப் கில்லி. வாட்ஸ்அப்பில் gif அனுப்பும் வசதி, புதிய ஸ்டேட்டஸ் மாற்றங்கள், எழுத்துருக்களை மாற்றும் வசதி என சமீப காலங்களில் நிறைய அப்டேட்ஸ் கொடுத்திருக்கிறது வாட்ஸ்அப். 
தற்போது தனது புதிய பீட்டா அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் உங்களின் வாட்ஸ்அப் 'சாட்'களை எளிதாக 'Pin' செய்து வைத்துக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எப்படி கூகுளின் மின்னஞ்சல் சேவை என்பது அலுவலகத் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தப்படுகிறதோ, அதைப் போலவே வாட்ஸ்அப்பும் தற்போது அலுவலக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உரையாடல்கள், அலுவலக விஷயங்கள் எனப் பல முக்கியமான தகவல்கள் வாட்ஸ்அப் மூலமாகவே தற்போது பெருமளவில் நடக்கின்றன. இது எப்படி வாட்ஸ்அப்பிற்கு ப்ளஸ் ஆக இருக்கிறதோ, அதைப் போல இதுவே மைனஸ் ஆகவும் இருக்கிறது. அறிமுகம் இல்லாத, அவசியம் இல்லாத பல க்ரூப்களின் தகவல்கள், ஃபார்வர்டு மெசேஜ்கள் ஆகியவை வந்து முக்கியமான மெசேஜ்களைக் கூட கீழே தள்ளிவிடும்.

இதனால் நமக்குத் தேவையான தகவல்களைக் கூட நீண்ட தூரம் ஸ்க்ரோல் செய்தே படிக்கவோ, பார்க்கவோ முடியும்.
மேலும் இவற்றால் மிக முக்கியமான க்ரூப்களில் இருந்துவரும் மெசேஜ்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. அப்படி தவறவிடாமல் இருக்க உதவுவதுதான் இந்த 'Pin' ஆப்ஷன். இதன் மூலமாக தனி நபருடனான சாட் அல்லது க்ரூப் சாட் இரண்டையுமே 'Pin' செய்துவைத்துக்கொள்ள முடியும்.

எப்படி 'Pin' செய்வது?

இந்த வசதியைப் பெற முதலில் வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் வெர்ஷன் 2.17.162 மற்றும் அதற்கு அடுத்த வெர்ஷன்களில் இந்த அப்டேட் கிடைக்கும். அப்டேட் செய்த பிறகு இந்தப் புதிய வசதியை நீங்கள் பயன்படுத்தலாம்.
நீங்கள் 'Pin' செய்து வைக்கவேண்டிய "Individual Chat' அல்லது 'Group chat' மீது சில நொடிகள் அழுத்திப் பிடித்தால், 'chats' பகுதிக்கு மேலே புதிதாக 'Pin' குறியீடு காட்டப்படும். இதன்மூலம் உங்களுடைய முக்கியமான க்ரூப் அல்லது நபருடைய 'Chat'-களை 'Pin' செய்து வைத்துக்கொள்ள முடியும். இதனால் எவ்வளவு மெசேஜ்கள் உங்களின் வாட்ஸ்அப்பில் குவிந்தாலும் நீங்கள் 'Pin' செய்த 'Chat'-கள் மேலேயே இருக்கும். எனவே நீங்கள் குறித்து வைத்தவற்றை நீண்ட தூரத்திற்கு ஸ்க்ரோல் செய்து தேட வேண்டாம். முக்கியமான க்ரூப்களின் தகவல்களைத் தவறவிடவும் மாட்டோம். இந்த வசதி வாட்ஸ்அப் web-லும் கிடைக்கிறது. இதன் மூலமாக நீங்கள் மொபைலில் 'Pin' செய்துவைக்கும் 'Chat'-களை, டெஸ்க்டாப்பிலும் 'Pin' செய்து வைக்கமுடியும்.

இந்த 'Pin' ஆப்ஷனுக்கு ஒரே ஒரு கண்டிஷன் வைத்திருக்கிறது வாட்ஸ்அப். அதாவது நீங்கள் ஏதேனும் மூன்று 'chat'-களை மட்டுமே 'pin' செய்து வைக்க முடியும். அதற்கு மேல் 'pin' செய்ய முடியாது. அதேபோல நீங்கள் 'pin' செய்தவற்றை பழையபடியே 'unpin' செய்யவும் முடியும். மொபைல் மற்றும் டெஸ்க்டாப் இரண்டிலும் இதனை நீங்கள் செய்யலாம். தற்போது பீட்டா வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும் இந்த வசதி விரைவில் அனைவருக்கும் கிடைக்கலாம்.

Special TET :நனவாகுமா தகுதி தேர்வு : எதிர்பார்ப்பில் 50 ஆயிரம் சிறப்பாசிரியர்கள்

தமிழகத்தில் சிறப்பாசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என, 50 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பில் உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இசை, ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல் என இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர் பணியிடங்கள், 2005ம் ஆண்டு முதல் காலியாக உள்ளன.

அரசு பள்ளிகளில் உள்ள நிரந்தர பணியிடங்களில் தேவை கருதி, 2006ல் தொகுப்பூதியம் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட பின், 11 ஆண்டுகளாக கல்வித்துறையில் இவ்வகை ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் நடக்கவில்லை. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 2012 முதல் தமிழகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடத்த முடிவான போது சிறப்பாசிரியர்களுக்கான, தகுதித் தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) சார்பில், பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில், அதுதொடர்பான முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்ட நிலையில், சிறப்பாசிரியர் தகுதி தேர்வும் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

செயலாளர் கவனிப்பாரா
இசை ஆசிரியர் கழக செயலாளர் பெரியசாமி, சட்ட ஆலோசகர் வெங்கடேஷன் கூறியதாவது: மாநிலத்தில் 2005ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற இவ்வகை ஆசிரியர் பணியிடங்களில், நிரந்த நியமனங்கள் நடக்கவில்லை. சிறப்பாசிரியர்கள் முறையே லோயர் மற்றும் ைஹயர் கிரேடு படிப்பு, பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள். பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பில்லாததால் பலர், பாட்டு கச்சேரி நிகழ்ச்சிகளுக்கு தினக் கூலிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர்களாக இருந்தவர்கள் சிறப்பாசிரியர் விஷயத்தில் இதுவரை ஆர்வம் காட்டவில்லை. செயலாளர் உதயச்சந்திரன் பொறுப்பேற்ற பின், மூன்று ஆண்டுகளாக நடக்காமல் இருந்த டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
இதைபோல் 50 ஆயிரம் பேர் எதிர்பார்க்கும் சிறப்பாசிரியர் தகுதித் தேர்வையும் நடத்த செயலர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருகிறார்களா? முதல்வர் அதிரடி

லக்னோ: அரசு பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்களின் புகைப்படங்களை அந்தந்தபள்ளிகளில் பெரிதாக ஒட்டப்பட வேணடும்என உத்தரபிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

யோகியின் அதிரடிகள்

உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வர்யோகிஆதித்யநாத் அம்மாநிலத்தில்முதல்வராக பொறுப்பேற்றது முதல்பல்வேறு அதிரடியான உத்தரவுகளைபிறப்பித்து வருகிறார். அரசுஅலுவலகங்களில் துப்பினால் அபராதம்,வருகை நேரம் குறித்து பயோமெட்ரிக் முறை,அதிகாரி மாற்றம், 15 பொது விடுமுறைதினங்கள் ரத்து என அதிரடியானஉத்திரவுகளை பிறப்பித்து வருகிறார்.

ஆசிரியர் புகைப்படம்

நேற்று 02.05.17) அவரின் அடுத்த அதிரடி,அரசு பள்ளிகளில் வேலைபார்க்கும்ஆசிரியர்களின் புகைப்படங்களை அந்தந்தபள்ளிகளில் பெரிதாக ஒட்டப்பட வேண்டும்எனவும், ஒட்டப்பட்டுள்ள படங்களில் உள்ளஆசிரியர்கள் சரியாக பள்ளிக்குவருகிறார்களா என அதிகாரிகள் சோதனைசெய்ய வேண்டும். அப்படி சோதனைசெய்யும்போது மாணவர்களிடம்புகைப்படத்தை காட்டி சரியாகவருகிறார்களா என கேட்டு உறுதிப்படுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கல்வியின் நிலைமை

உ.பி., முதல்வர் இது குறித்து கூறும்போது:உத்திரபிரதேசத்தில் உள்ள அரசுபள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாகவேலைக்கு வராததால் கல்வியின் நிலைமைமிக மோசமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல்அதிக சம்பளம் வாங்கும் அரசு பள்ளிஆசிரியர்கள் பாடம் எடுக்க தங்களுக்குபதிலாக வேறு ஒருவரை அனுப்புவதாகபுகார் வந்ததால் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டதாகவும், கல்வியின் தரத்தைமேம்படுத்த இதுபோன்ற நடவடிக்கைஎடுப்பதாகவும் தெரிவித்தார்.

அரசு நடவடிக்கை

மேலும் அவர் கூறும்போது: அரசுபள்ளிகளில் ஆசிரியர்கள் ஒழுங்காகபள்ளிக்கு வரவேண்டும். அதிகாரிகள்மாணவர்களிடம் புகைப்படத்தில் உள்ளஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்களா? எனஅடிக்கடி ஆய்வு செய்து உறுதிப்படுத்தவேண்டும், அப்படி வேலை செய்யாதஆசிரியர்கள் சம்பளம் வாங்கமுடியாது எனதெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழக மேலாண் இயக்குனராக டி.ஜெகந்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதன்படி,  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செயலராக இருந்த ஏ.ராமலிங்கம் கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழக மேலாண் இயக்குனராக இருந்த மைதிலி கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டு,பொதுத்துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வரின் முன்னாள் செயலர் ஏ.ராமலிங்கம், கலை மற்றும் பண்பாட்டுக்கழக ஆணையராகவும், அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் டி.ஜெகந்நாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழக மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Special TET :நனவாகுமா தகுதி தேர்வு : எதிர்பார்ப்பில் 50 ஆயிரம் சிறப்பாசிரியர்கள்

தமிழகத்தில் சிறப்பாசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என, 50 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பில் உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இசை, ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல் என இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர் பணியிடங்கள், 2005ம் ஆண்டு முதல் காலியாக உள்ளன.

அரசு பள்ளிகளில் உள்ள நிரந்தர பணியிடங்களில் தேவை கருதி, 2006ல் தொகுப்பூதியம் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட பின், 11 ஆண்டுகளாக கல்வித்துறையில் இவ்வகை ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் நடக்கவில்லை. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 2012 முதல் தமிழகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடத்த முடிவான போது சிறப்பாசிரியர்களுக்கான, தகுதித் தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) சார்பில், பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில், அதுதொடர்பான முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்ட நிலையில், சிறப்பாசிரியர் தகுதி தேர்வும் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

செயலாளர் கவனிப்பாரா
இசை ஆசிரியர் கழக செயலாளர் பெரியசாமி, சட்ட ஆலோசகர் வெங்கடேஷன் கூறியதாவது: மாநிலத்தில் 2005ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற இவ்வகை ஆசிரியர் பணியிடங்களில், நிரந்த நியமனங்கள் நடக்கவில்லை. சிறப்பாசிரியர்கள் முறையே லோயர் மற்றும் ைஹயர் கிரேடு படிப்பு, பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள். பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பில்லாததால் பலர், பாட்டு கச்சேரி நிகழ்ச்சிகளுக்கு தினக் கூலிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர்களாக இருந்தவர்கள் சிறப்பாசிரியர் விஷயத்தில் இதுவரை ஆர்வம் காட்டவில்லை. செயலாளர் உதயச்சந்திரன் பொறுப்பேற்ற பின், மூன்று ஆண்டுகளாக நடக்காமல் இருந்த டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
இதைபோல் 50 ஆயிரம் பேர் எதிர்பார்க்கும் சிறப்பாசிரியர் தகுதித் தேர்வையும் நடத்த செயலர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

5 மணி நேரமாக கோரிக்கை வைத்த ஆசிரியர்கள் : கலந்துரையாடலில் அதிகாரிகள் தவிப்பு.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேசி, கோரிக்கைகளை கொட்டியதால், அதிகாரிகள் தவித்தனர்.

தமிழகத்தில், 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தனியாகவும், ஒன்றாக இணைந்தும் போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும், அமைச்சரையும், செயலரையும் சந்திக்க முடியாததால் அதிருப்தியடைந்தனர்.
ஆறு ஆண்டுகளுக்கு பின், பள்ளிக்கல்வி துறையின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, செங்கோட்டையன்,
ஆசிரியர் சங்க நிர்வாகிகளை குளிர்விக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னை, தி.நகரில், தன் சொந்த செலவில், நேற்று கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.
இதில், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த, 200 பேர் பங்கேற்றனர்.
சங்க நிர்வாகிகளிடம், அதிகாரிகள் தனித்தனியே, கோரிக்கை மனுக்களை வாங்கினர். அமைச்சர் வந்ததும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை பேச அனுமதித்தார். பல மூத்த நிர்வாகிகள், அரசியல்வாதிகள் போல, அமைச்சரையும், அரசையும் வாழ்த்தி பேசி, அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும், 'ஐஸ்' வைத்தனர்.
சங்க நிர்வாகிகள் சுருக்கமாக கோரிக்கைகளை கூற அனுமதிக்கப்பட்டனர். பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், இயக்குனர் இளங்கோவன், அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி பூஜா குல்கர்னி மற்றும் அதிகாரிகள், மேடையில் அமர்ந்து, கோரிக்கைகளை குறிப்பெடுத்தனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய நிர்வாகிகள், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக, நுாற்றுக்கணக்கான கோரிக்கைகளை கொட்டியதால், அதிகாரிகள் தவித்தனர்.
ஆசிரியர்களுக்கு, மதிய உணவாக பிரிஞ்சி, தயிர் சாதம், தக்காளி சாதம் போன்றவையும், இடைவேளையில், கேசரி, வடை, டீ மற்றும் காபியும் தரப்பட்டது. நிகழ்ச்சி முடியும் வரை, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், வெளியே அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி நடந்த வளாகத்தில், இரும்பு கேட்டுகள் பூட்டப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புத்தகங்களை ஆசிரியர்கள் சுமக்க வேண்டாம் : இலவசங்களை வினியோகிக்க புது திட்டம்

பள்ளிகள் திறந்ததும், பாடப் புத்தக கட்டுகளை ஆசிரியர்கள் சுமக்கும் பிரச்னை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. 'புத்தகங்களை கல்வித் துறையே வினியோகிக்கும்' என, அமைச்சர் அறிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த, ஆசிரியர் சங்க கலந்துரையாடல் கூட்டத்திற்குப் பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளை, நிதி நிலைமை, சூழலுக்கு ஏற்ப தீர்க்க முயற்சிப்போம். அரசு அறிவித்துள்ள, மாணவர்களுக்கான, 14 இலவச திட்டங்களின் பொருட்களை எடுத்து வந்து, வினியோகம் செய்வதில் சிரமம் இருப்பதாக, ஆசிரியர்கள் கூறினர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், 14 வகை இலவச திட்டங்களுக்கான பொருட்களை, அரசே நேரடியாக பள்ளிகளுக்கு வழங்கும்.
மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் பள்ளி, ரத்த வகை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அடங்கிய, 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தேசிய, சர்வதேச அளவில் தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்படும். புதிய கல்வி ஆண்டில் பாடப் புத்தகங்களில் மாற்றம் இல்லை. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்ததும், லேப் - டாப் வழங்கப்படும். தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் முறைகேடு நடந்திருந்தால், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

நிதி இல்லை : அமைச்சர் வருத்தம்கலந்துரையாடல் கூட்டத்தில், 'அரசு பள்ளிகளில், யோகா பயிற்சிக்கு, 13 ஆயிரம் புதிய பயிற்சியாளர்களை நியமிப்பது ஏன்; பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்தலாம்' என, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறினார்.
இதற்கு பதிலளித்த, அமைச்சர் செங்கோட்டையன், ''13 ஆயிரம் பேர், யோகா பயிற்சி முடித்து, இலவசமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு, யோகா கற்றுத்தர தயாராக உள்ளனர். அரசிடம் நிதி இல்லை; எனவே, கூடுதல் செலவின்றி, இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது,'' என்றார்.

முதுகலை மருத்துவ படிப்பு : ஐகோர்ட் இன்று உத்தரவு.

முதுகலை மருத்துவ படிப்பில், மாணவர்கள் சேர்க்கை தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், இன்று உத்தரவு பிறப்பிக்கிறது. 
'முதுகலை மருத்துவப் படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கையை, இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்த விதிமுறைகளின் படி நடத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, 10க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள், மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், 'மருத்துவக் கல்விக்கான தேர்வுக் குழு வெளியிட்ட விளக்க குறிப்பின் படி, விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்' என, கூறப்பட்டது.மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள், சசிதரன், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய சிறப்பு பெஞ்ச், நேற்று விசாரித்தது.

 அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், மணிசங்கர் ஆஜரானார்.மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், பி.வில்சன், விஜயன், வழக்கறிஞர்கள் எல்.சந்திரகுமார், ஜி.சங்கரன், திலகவதி உள்ளிட்டோரும், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், மூத்த வழக்கறிஞர், விஜய் நாராயணன், வழக்கறிஞர் வி.பி.ராமன் ஆஜராகினர். வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், இவ்வழக்கு மீதான உத்தரவை, இன்று பிறப்பிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.

CEO, - DEOக்களுக்கு 'டென்ஷன் பிரீ' முகாம்

மதுரையில் அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஒ.,க்களுக்கு புத்தாக்க மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று (மே 3) துவங்குகிறது.

இதுகுறித்து அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு, விடைத்தாள் திருத்தம், ஆய்வக உதவியாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட்ட கல்வி அதிகாரிகளின் பணிச்சுமை மற்றும் மனச்சுமையை தவிர்க்கவும், கல்வியாண்டை உத்வேகத்துடன் துவங்கும் வகையிலும் இம்முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி செயலாளர் உதயசந்திரன் துவக்கி வைக்கிறார். கல்வி மேம்பாடு, நிர்வாகம் தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் ஒடிசா கூடுதல் தலைமை செயலர் பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இறையன்பு, விஜயகுமார், தாரேஷ் அகமது, நந்தகுமார், எழுத்தாளர்கள் ராமகிருஷ்ணன், டாக்டர் கு.சிவராமன், பேராசிரியர் ஞானசம்பந்தன் மற்றும் கல்வியாளர் பேசுகின்றனர். நாகமலைபுதுக்கோட்டை பில்லர் ஹாலில், நிகழ்ச்சி நடக்கிறது. மே 5 நிறைவு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கிறார், என்றார்.

பிளஸ் 2 விடைத்தாளில் 'டவுட்' : 'டம்மி' தேர்வு நடத்தி விசாரணை

பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கையெழுத்து மாறுபட்ட மாணவர்களிடம், அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, 'டம்மி' தேர்வு நடத்தினர். முந்தைய ஆண்டுகளில், பிளஸ் 2 தேர்வில், பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 
இரு ஆண்டுகளுக்கு முன், தேர்வு நாளில், 'வாட்ஸ் ஆப்'பில், கணித வினாத்தாள் வெளியானது. ௨௦௧௬ல், தனியார் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு, ஆசிரியர்களே தேர்வை எழுதி கொடுத்தது தெரிய வந்தது. இதனால், இந்தாண்டு, பிளஸ் 2 தேர்வை, எந்த முறைகேடுக்கும் இடமின்றி நடத்தி, முடிவை வெளியிட, அரசு உத்தரவிட்டு உள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில், விடைத்தாள் தெரிந்தால், அதை ஆய்வுக்கு அனுப்புமாறு, ஆசிரியர்களுக்கு, தேர்வுத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, 500க்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் தேர்வுத் துறைக்கு வந்தன. அவற்றை, தேர்வுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மாணவர்களையும், பெற்றோரையும் வரவழைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில், கையெழுத்து மாறுபாடு, பேனாவை மாற்றி எழுதியதால் எழுத்துக்களின் நிறம் மாற்றம், எழுத்துக்களின் வடிவத்தில் வித்தியாசம், விடைத்தாளில் அலங்கரிப்பு, ஒரே கேள்வியை இரண்டு முறை எழுதுவது போன்றவை குறித்து விசாரிக்கப்பட்டு உள்ளன.

சில கேள்விகளுக்கு பதில் எழுதுமாறு, மாணவர்களுக்கு தனி அறையில், 'டம்மி' தேர்வு நடத்தப்பட்டு உள்ளது.முடிவில், 'தேர்வை நான் தான் எழுதினேன்; எந்த முறைகேடுக்கும் இடம் அளிக்கவில்லை' என, உறுதிமொழி கடிதம் பெறப்பட்டு உள்ளது. வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள, இந்த உறுதிமொழி கடிதம் பெறப்படுவதாக, அதிகாரிகள் கூறினர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!