Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 6 May 2017

அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்போம்! அன்னைத் தமிழில் அறிவுச் செல்வம் பெறுவோம்!! - திருப்பூர் மாவட்டத்தில் 30 இடங்களில் வாகனப் பரப்புரை

அய்யா/ அம்மா வணக்கம்.

 தனியார் பள்ளிகளைப் புற்றீசல் போல் அனுமதித்துவிட்டார்கள். கல்விக் கட்டண பெரும்பாலான குடும்பங்களை வறுமையின் பிடிக்குத் தள்ளுகிறது. 

ஆங்கில வழிக் கல்வியே அறிவுக் கல்வி என்ற போலி நம்பிக்கையில் பலர் அறியாமைப் புதைகுழியில் சிக்கி தானும் அவதிப்படுவதோடு குழந்தைகளையும் அறிவுக் குருடாக்கி வருகிறார்கள். அய்யோ! நாட்டில் சமத்துவமில்லை.,சகோதரத்துவம் இல்லை, என்று துடிப்பவர்கள் கூட அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் இல்லை... கழிப்பறை இல்லை... என்று குறைசொல்லிவிட்டு தனியார் பள்ளிக்குப் போகும் நிலைதான் உள்ளது. ஊருக்குள் சமத்துவம் வேண்டும் என்று பேசுபவர்களே ஊர்ப்பள்ளிகளைத் தீண்டத்தகாத பள்ளிகளாகத் தான் பார்க்கின்றனர். ஏழைகள் இருக்கும் ஊரில் மட்டும் இனி அரசுப்பள்ளிகள் இருக்கும் நிலை வந்துவிட்டது. அரசுப்பள்ளிகளில் உள்ள குறைகளைக் களைய வழி தேடாமல், போராடாமல் இருக்கும் வரை இந்த அவலங்கள் தான் நீடிக்கும். கல்வி எளியவர்கள் ஏற்றம் பெறும் வழியாக இருக்கவேண்டும். ஆனால் கடந்த முப்பதாண்டு காலக் கல்விக் கொள்கைகள் எளியவர்களை ஏமாற்றும் வழியாக மாறிவிட்டது. ஆண்டுக்கு சுமார் 5 இலட்சம் ஏழைக் குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடிக்கிறார்கள்.

ஆனால் இவர்களில் ஆண்டுக்கு 30 பேர் கூட மருத்துவக் கல்விப்படிப்பில் சேர முடியவில்லை. நீட் தேர்வினால் மாநிலப் பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்படுவார்கள் என்று இப்போது நாம் போராடி வருகிறோம். 1976 இல் பறிக்கப்பட்ட மாநில அரசுகளின் கல்வி உரிமை குறித்து இப்போது அதிகமாகப் பேசுகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலப் பாடத்திட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படித்தவர்கள் மொத்தமாக ஏமாற்றப்பட்டார்கள் என்பதற்கெல்லாம் நாம் இத்தனை நாட்களாக வீதிக்கு வரவில்லை. அரசுப்பள்ளிகள் மீதும் அரசுப்பள்ளிகளில் படிப்போர் மீதும், படிக்கவைப்போர் மீது போலி அருளிறக்கம் காட்டுவதால் எந்தப் பயனும் இல்லை.

உண்மைகளை மக்களிடம் பேச எல்லோரும் வீதிக்கு வருவோம்...
 வாருங்கள்.
 அன்புடன்....
 சு.மூர்த்தி,
ஒருங்கிணைப்பாளர்,
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.
பேசி: 9965128135.

தொலைதூரக் கல்வி தேர்வுக்கு மே 10 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலை. அறிவிப்பு.

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) எஸ்.கருணாநிதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
மே, ஜூன் மாதம் நடைபெறவுள்ள தொலைதூரக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான (இளங்கலை, முதுகலை, டிப்ளமா, சான்றிதழ் தேர்வுகளுக்கு) ஆன்லைனில் (www.ideunom.ac.in) அபராத கட்டணம் செலுத்தி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

750 PP தனி ஊதியம் பதவி உயர்வில் அடிப்படை ஊதியத்தோடு சேர்த்துவழங்கியது தவறு என மறு ஊதிய நிர்ணய ஆணை!!


பதவி உயர்வில் எஸ்.சி., - எஸ்.டி.,க்கு இட ஒதுக்கீடு தொடர அரசு முடிவு.

அரசு பணிகளில், பதவி உயர்வில், எஸ்.சி., -- எஸ்.டி., பிரிவினருக்கு, இட ஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு பணிகளில், பதவி உயர்வில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 
பதவி உயர்வில், இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, பல உத்தரவுகளை, பல்வேறு வழக்குகளில்சுப்ரீம் கோர்ட் பிறப்பித்தது.இதனால், இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்குவது பற்றி, ஆலோசிக்கப்பட்டது. அப்போது, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்பட வேண்டுமா என்பது பற்றி ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க, மத்திய பணியாளர் நல அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இது பற்றி ஆய்வு செய்து, பிரதமர் மோடியிடம், சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சமூகத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், இன்னும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றிலும், மற்றவர்களை விட பின்தங்கியே உள்ளனர். அதனால், சம வாய்ப்பு கிடைக்கவும், சமூக வளர்ச்சி ஏற்படவும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, பதவி உயர்வில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு, தொடர வேண்டும்.

மேலும், பல துறைகளில், எஸ்.சி., -எஸ்.டி., பிரிவினருக்கான ஒதுக்கீடு, முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அதை சரி செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

100 நாள் வேலை திட்டம் பள்ளிகளுக்கு மாற்றம்

தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகளில், 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.இந்த பள்ளிகளில் பெரும்பாலும், ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களே பணியில் உள்ளனர்.
அதனால், பல பள்ளிகளில் துப்புரவு பணிகள் நடக்காமல், புதர் மண்டி பாழடைந்து காணப்படுகிறது. இந்நிலையை மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஊரக வளர்ச்சி துறையுடன் பேச்சு நடத்தி, 100 நாள் வேலை திட்ட ஊழியர்களை, பள்ளி துப்புரவு மற்றும் பராமரிப்பு பணியில்ஈடுபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும், வகுப்பறைக்கு இருவர் வீதம், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் அனுப்பப்பட உள்ளனர். இவர்கள், தினமும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது, குடிநீர் எடுத்து வைப்பது, புதர் மண்டிய வளாகங்களை சீர்படுத்துவது போன்ற பணிகளை செய்வர் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘நீட்’ மதிப்பெண் கணக்கீடு மருத்துவ கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு மதிப் பெண்ணுடன் பிளஸ் 2 மதிப் பெண்ணையும் சேர்த்து கணக் கிட வேண்டும் என்ற கோரிக் கையை 3 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தில் ராமச்சந்திரன் என்ற மருத்து வர் தாக்கல் செய்த மனு: இந்திய மருத்துவ கவுன்சிலின் 2010 அறிவிக்கையில், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவித்துள் ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மட்டுமே நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும். எனவே, தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாண வர்களும் பயன் பெறும் வகை யில், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணையும் சேர்த்து கணக்கிட உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் அடங்கிய அமர் வில் இந்த மனு மீதான விசா ரணை நேற்று நடந்தது. அப் போது நீதிபதிகள், ‘‘மனுதார ரின் கோரிக்கை குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் 3 வாரங்க ளுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்றுஉத்தரவிட்டு, விசார ணையை கோடை விடுமுறைக் குப் பிறகு தள்ளிவைத்தனர்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் எந்த குறியீட்டிற்கு என்ன அர்த்தம்?

தமிழகம் முழுவதும்தற்போது பழையகுடும்ப அட்டைக்குபதிலாக ஸ்மார்ட்ரேஷன் கார்டு மத்தியஅரசால் வழங்கப்பட்டுவருகிறது.
பழையரேஷன் கார்டுகளில்முன் பக்கத்தில் எந்தவகையைச் சேர்ந்த கார்டு இது என்றுகுறிப்பிடப்பட்டுஇருக்கும்.

❁ அதேபோன்றுதற்போது புதிய ஸ்மார்ட்ரேஷன் கார்டுகளில்உள்ள குறியீடுகளுக்குஎல்லாம் என்ன அர்த்தம்என்று இங்குபார்ப்போம்.

எப்படி கண்டறிவது?

❁ www.tnpds.gov.in என்றஇணையதளமுகவரிக்கு சென்றுபயனர் நுழைவுபகுதிக்குச் சென்று,பதிவுசெய்யப்பட்டபயனாளர் என்றஇடத்தில் உங்களதுகார்டுக்கு நீங்கள்அளித்த மொபைல்எண்ணை உள்ளிட்டுகடவுச்சொல்லைஅனுப்பு என்ற தெரிவைதேர்வு செய்யவும்.

கடவுச்சொல் பெறும்முறை :

❁ நீங்கள் பதிவுசெய்தமொபைல் எண்ணிற்கு 7இலக்க எண்குறுந்தகவலாகவருவதை அங்கீகாரம்என்ற இடத்தில்உள்ளிட்டுப் பதிவுசெய்என்பதைத் தேர்வுசெய்ய வேண்டும்.இதற்கு அதிகபட்ச நேரம்300 வினாடிகள் வரைஎடுக்கும். ஒரு வேலைஉங்களுக்குக்கடவுச்சொல்வரவில்லை என்றால்1967 or 18004255901 என்றவாடிக்கையாளர் சேவைமையத்தை அணுகலாம்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டுவகையை கண்டறிவதுஎப்படி?

❁ கடவுச்சொல்லைஉள்ளிட்டு உள் சென்றபிறகு ஸ்மார்ட் கார்டுசெயலாக்கம் என்பதைத்தேர்வு செய்த பிறகுஉங்களது ஸ்மார்ட்கார்டின் விவரங்கள்அனைத்தையும் காணமுடியும். அதில் வலதுபக்கத்தில் என்எப்எஸ்எஅட்டை வகை என்றுகுறியிடப்பட்டு இருக்கும்.அங்கு உங்களது அட்டைவகை என்ன என்பதைநீங்கள் கண்டறியமுடியும். அங்குகாண்பிக்கப்படும்அட்டை வகைகளின்விளக்கம் என்னவென்றுநாம் அடுத்துப்பார்ப்போம்.

குறியீட்டின் வகைகள் :

PHHRICE : அரசி, பருப்பு,எண்ணெய் உள்ளிட்டரேஷன் கடைகளில்அளிக்கப்படும்அனைத்துப்பொருட்களையும்நீங்கள் வாங்க முடியும்.

PHAA:35 கிலோ அரிசிமற்றும் அனைத்துப்பொருட்களும்கிடைக்கும்.

NPHH: NPHH அல்லதுNPHH-L என்றுகுறிப்பிடப்பட்டுஇருந்தால் அரிசி உட்படஅனைத்துப்பொருட்களும்கிடைக்கும்.

NPHHS : சர்க்கரை மட்டும்கிடைக்கும்.

NPHHNC : எந்தப்பொருட்களும்கிடையாது. ஒருஅடையாள அட்டையாகமட்டுமே பயன்படுத்தமுடியும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டுவகை எவ்வாறுபிரிக்கப்பட்டது :

❁ ஸ்மார்ட் ரேஷன் கார்டுவகை அனைத்தும்டிஎன்பிடிஎஸ்(வுNPனுளு) அதிகாரிகள்மூலமாக நீங்கள் பெறும்சம்பளத்தை வைத்துமுடிவுசெய்யப்படுகின்றது.

குறிப்பு :

❁ இதில் உங்களுக்குஏதேனும் கேள்விகள்இருந்தால் அருகில்உள்ள ரேஷன்கடைகளை தொடர்புகொள்ளலாம். அல்லதுஅரசு உதவி மையம்எண்கள் 1967 or 18004255901-ஐ தொடர்புகொள்ளலாம்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!