Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 10 May 2017

தமிழகம் முழுவதும் மே 17 முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்குகிறது

தமிழகம் முழுவதும் மே 17 முதல் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

ஜமாபந்தி எனப்படும் வருவாய்த் தீர்வாயம் இந்த ஆண்டு 17-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக ஜமாபந்தி நடைபெறவுள்ளது. இதில் துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி தலைமையில் கூட்டம் நடைபெறும். ஜமாபந்திக்கான வட்டவாரியாக மற்றும் கிராம வாரியாக நிகழ்ச்சி நிரல் தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் மாவட்ட அரசிதழில் விளம்பரம் செய்யப்படும். இதில், பொதுமக்கள் மனுக்கள் அளிக் கலாம். மேலும், கிராம நிர்வாக அதிகாரிகளால் பராமரிக்கப்படும் கிராம கணக்குகள் ஜமாபந்தி நிறைவு அன்று சரிபார்க்கப்படும். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். தீர்வு ஏற்படவில்லை எனில் அதற்கான விளக்கம் சம்பந்தப்பட்ட மனுதாரர் களுக்கு தெரிவிக்கப்படும். ஜூலை மாதம் முதல் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை உள்ள வருவாய்த் துறையின் காலம் பசலி ஆண்டு எனப்படும். அக்பர் காலத்தில் நிலவரி பணத்தைப் பிரித்து பார்ப்பதற்கு பசலி ஆண்டு என்ற ஒரு கணக்கு ஆண்டு தோன்றியது. இது வட இந்தியாவில் மட்டுமே இருந்தது. பின்பு ஆட்சிக்கு வந்த ஷாஜஹான் ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவிலும் ஏற்படுத்தப்பட்டது. பசலி ஆண்டு முன்காலத்தில் ஆடி மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கியது. பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இது ஜூலை 1-ஆம் தேதி மாற்றப்பட்டது. தற்போது வரை இதுவே பின்பற்றப்பட்டு வருகிறது. அரசுக்குச் சொந்தமான நிலங்களில் நிலவரி, புறம்போக்கு நில ஆக்ரமணத் தீர்வை, அபராதம் மற்றும் உள்ளூர் வரிகள் மரத்தீர்வை ஆகியவை முறையாக கணக்கிடப்பட்டு, கிராம கணக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் பொருளாதார வளர்ச்சிக்கும் புள்ளி விவரங்கள் தக்கமுறையில் தரப்பட்டுள்ளனவா என்பதையும் சரிபார்க்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் ஆய்வு வருவாய்த் தீர்வாயம் ஆகும் என்றார்.

SSA - தொடக்க மற்றும் உயர்தொடக்க ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான (15.05.2017 - 19.05.2017) பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்

TNPSC : குரூப் 2 தேர்வு: வரும் 15 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி., தகவல்

குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது.  இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்ய எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்தது.  அதற்கான தேர்வு முடிவுகள் ஜூனில் வெளியானது.

ஏற்கெனவே முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை பாரிமுனையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 17 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.  இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் மற்றும் தரவரிசையின்படி கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் ஆகிய தகவல்கள் அடங்கிய அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு 9 லட்சம் மாணவர்களுக்கும் செல்போனில் அனுப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவர்களுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் செல்போனில் அனுப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

கே.செங்கோட்டையன் தெரிவித்தார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்த மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்படும்.

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்ட மாற்றம் குறித்து முதல்வருடன் இன்று நான் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினோம். அந்த கூட்டத்தில், பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் விரிவாக எடுத்துரைத்தார்.

தமிழக மாணவர்கள் நீட் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையிலான பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை வெளிப்படையாக நடைபெறும் வகையில் ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த வசதியைப் பயன்படுத்தி அனைவரும் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள். இதுகுறித்து கிராமப்புறங்களிலும் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 25 சதவீத இடஒதுக்கீட்டை சரிவர பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

ஆங்கில வழி கல்வி தொடரும்: பள்ளிக்கல்வி அதிகாரிகள் விளக்கம்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடர்ந்து நடை பெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகளை தொடங்க சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து ஏராளமான அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் இனி ஆங்கில வழிக் கல்வி இல்லை எனக் கூறி, சில ஆசிரியர் சங்கங்களின் வாட்ஸ் அப் குழுக்களில் வேகமாக தகவல் பரவியது. இதனால் வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் இருக்குமா என்ற சந்தேகம் பரவலாக எழுந்தது.

இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் வழக்கம்போல் தொடரும். பெற்றோர்கள் விரும்பும் பயிற்று மொழியில் மாணவர்களைச் சேர்க்கலாம். அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதே அரசின் பிரதான நோக்கம்” என்று தெரிவித்தனர்.

அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளி... உங்கள் குழந்தையை எங்கு சேர்ப்பீர்கள்? #VikatanSurvey

பள்ளியின் ஒரு நாள் முதல்வரான 14 வயது பழங்குடி மாணவி!


பெண்கள் கல்வி கற்பதற்கே பெரும் தடை  விதித்த நிலை இன்று மாறி, பள்ளியின் ஒருநாள் முதல்வராக 14 வயது மாணவியை நியமிக்கப்பட்டிருக்கிறார் எனும் தகவல் ஆச்சர்யத்தோடு மகிழ்ச்சியையும் தருகிறது அல்லவா...

ஆண்களை விடவும் பல துறைகளில் பெண்கள் சாதித்து வருவதற்கு அடிப்படையான காரணம் அவர்களுக்குக் கிடைக்கும் கல்வி. பள்ளிக்கூடங்களே பெண்களின் வாழ்க்கைப் பயணத்தை சரியான திசைக்கு வழிகாட்டும். அந்தப் பள்ளியில் மாணவிகள் கெளரவிக்கப்படும்போது, அவர்களின் மகிழ்ச்சியில் பெருமிதமும் இணைந்துகொள்ளும். அது, அவர்களின் வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகி விடும். அப்படியான அரிய வாய்ப்பைத்தான் 14 வயது மாணவி பிரியங்கா மர்மு பெற்றிருக்கிறார்.

ஜார்ஹண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்க்பம் மாவட்டத்தின் துர்கூ எனும் கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்துவருகிறார் பழங்குடி பிரிவைச் சேர்ந்த பிரியங்கா. படிப்பிலும் சக மாணவர்களோடு பழகுவதிலும் சிறப்பானவர் பிரியங்கா. அவரைத்தான் அந்தப் பள்ளியின் ஒரு நாள் முதல்வராக மாற்றியுள்ளனர்.

காலையில் பள்ளிக்கு வந்த பிரியங்காவை பள்ளியின் முதல்வர் சுனில் யாதவ் தனது அறைக்கு அழைத்துச் சென்று பள்ளியின் முதல்வர் இருக்கையில் அமரச் செய்தார். அப்போது, உடனிருந்த கிராமத்தலைவர் லஷ்மி சரண் சிங் பிரியங்காவுக்கு வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் கூறியுள்ளார். பள்ளியின் முதல்வர் எனும் அடையாளமாக சிவப்பு நிறத்தில் வின்னர் பெல்ட் (sash) அணிவித்தனர்.

காலையில் பள்ளியின் மைதானத்தில் நடக்கும் பிரேயரை முன்னின்று நடத்தினார் பிரியங்கா. அப்போது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பேடி பச்சாவ், பேடி படாவ் திட்டங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். 'சமூக மாற்றத்திற்கு மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மாணவர்களான நாமும் உதவ வேண்டும்' என்றார். பின், வகுப்புகள் தொடங்கியதும், பள்ளி வளாகத்தைச் சுற்றி நடப்பவற்றை கவனித்தார். வகுப்புகள் நடக்கும் விதத்தைக் கண்காணித்தார்.

Advertisement

மாணவர்களின் பசியைப் போக்கும் உன்னத திட்டம் மதிய உணவுத் திட்டம். பள்ளியில் மதிய உணவு சமையல் செய்யும் இடத்திற்குச் சென்றார் பிரியங்கா. அங்கு, மாணவர்களுக்கு பரிமாறத் தயாராக இருக்கும் சத்துணவை ருசித்துப் பார்த்தார். மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன் இப்படி ருசித்துப் பார்த்து, குறைகள் இருக்கின்றனவா எனச் சோதிக்கும் நோக்கில் பிரியங்காவின் இந்தச் செயல் இருந்தது. இதை பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

சிங்க்பம் மாவட்டத்தின் துணை ஆட்சியர் சஞ்சய் குமார் பாண்டே சிறப்பான இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் மிகுந்த ஆர்வமாக உள்ளார். மாதத்தில் ஒருநாள் பள்ளியின் முதல்வராக அந்தப் பள்ளியின் மாணவர் ஒருவர் பதவி வகிக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் சிறப்பு. சஞ்சய் குமார் இது குறித்த செய்திகளையும் செய்திகளை வெளியிட்ட இணையத்தளங்களையும் தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். கிராம புறப் பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக இவர் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார்.

பள்ளியில் படிக்கும் ஆயிரம் மாணவர்களில் ஒருவராக இல்லாமல், தனித்து தான் பார்க்கப்படுவதை ஒவ்வொரு மாணவரும் விரும்புவர். அப்படி தன்னை மாற்றும் எந்தவொரு விஷயத்திலும் ஆர்வத்துடன் கலந்துகொள்வர். மேலும், ஒரு பள்ளி மாணவருக்கு பிடித்த விதத்திலும் இருக்க வேண்டியது அவசியம். அப்போதே அவர்கள் விரும்பி படிக்கும் நிலை அங்கு ஏற்படும். அந்தச் சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும். ஆசிரியர் - மாணவர் இருவரிடையே நல்ல நட்பை விதைக்கும் இந்தத் திட்டத்தை மலர் கொத்து கொடுத்து வரவேற்கலாம்.

தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் இதை அமுல்படுத்தலாமே!

ANNAMALAI UNIVERSITY -DDE MAY 2017 EXAM HALL TICKET PUBLISHED


ANNAMALAI UNIVERSITY -DDE MAY 2017 EXAM HALL TICKET - Click here

CPS : ஓய்வூதியத்திற்கு 7.9 சதவீதம் வட்டி

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அந்தத் தொகைக்கு, ஏப்., 1 முதல் ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வட்டித் தொகை கணக்கிடப்பட்டு, ஊழியர்கள் கணக்கில் சேர்க்கப்படும்.

PG TRB: முதுநிலை பட்டதாரி பணிக்கு எழுத்துத்தேர்வு அறிவிப்பு.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு, ஜூலை, 2ல், போட்டி தேர்வு நடத்தப் படுகிறது.ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 பதவியில், 1,663 இடங்களுக்கு, ஜூலை 2ல், தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை, டி.ஆர்.பி.,யின், www.trb.tn.nic.in இணையதளத்தில், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.இன்று முதல் வரும், 30 வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தேர்வுக்கான பாடத்திட்டம், புத்தகம் போன்ற கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதத்தை 8.60 சதவிகிதத்தில் இருந்து 8.35 சதவிகிதமாக குறைத்து SBI அதிரடி சலுகை.

நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதத்தை 8.60 சதவிகிதத்தில் இருந்து 8.35 சதவிகிதமாக அதிரடியாகக் குறைத்துள்ளது. இந்த வட்டிவிகிதம் வீட்டுக்கடன் துறையில் மிகவும் குறைந்த ஒன்றாகும்.

பிரதம மந்திரியின் `அனைவருக்கும் வீடு' என்ற கனவு திட்டத்தின் படி, ஏழை, எளியோர் மற்றும் நடுத்தர மக்களுக்கு வீடுகளைக் கட்டித்தர அரசு பல விதங்களில் ஊக்கமளித்து வருகிறது. இந்த நிலையில் அரசின் `அனைவருக்கும் வீடு' திட்டத்துக்கு உதவும் விதத்தில் நாட்டின் மிகப் பெரிய வீட்டுக் கடன் வழங்கும் வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, 2017-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி முதல் வட்டி விகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து, 8.35 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது. இந்த வட்டி விகிதம் குறிப்பிட்ட காலக்கெடுவான 2 வருடங்களுக்கானதாகும். வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு ஏற்ப மிதப்பு விகித அமைப்பில் (floating rate) இருக்கும்.

இந்த வட்டி விகிதம் 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடன்களுக்குப் பொருந்தும். இந்த வசதி கட்டுப்படியாகக்கூடிய வீடு கட்டும் அல்லது வீடு வாங்குபவர்களுக்குப் பெரியளவில் உதவியாக இருக்கும். லட்சக்கணக்கான வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் தங்கள் கனவு இல்லத்தை அமைக்க உதவும் என்று எஸ்பிஐ எதிர்பார்க்கிறது. ஆனால், இந்த வட்டிவிகிதம் ஏற்கெனவே இருக்கும் வீட்டை புனரமைக்க கடன் வழங்கப்படாது.

இது குறித்து சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாரத ஸ்டேட் வங்கியின் ரியல் எஸ்டேட் பிரிவு துணைப் பொதுமேலாளர் குமார் கூறுகையில்,"முதல் வீடு வாங்குவது என்பது ஒவ்வொரு நபரின் மிகப்பெரிய நிதி சம்பந்தப்பட்ட முடிவாகும். முதல் வீடு என்பது ஒரு உணர்வுபூர்வமான விஷயமாகவும் இருக்கிறது. வீட்டுக்கடன் வழங்கும் மற்ற போட்டியாளர்களைப்போல், ஒரு குறிப்பிட்ட கடன் பயனாளிகளுக்கு மட்டும் வழங்குவது எங்கள் நோக்கம் அல்ல. இந்த வட்டி விகிதம், 80 சதவிகிதத்துக்கும் அதிகமான அனைத்து மாதந்திர சம்பளதாரர்களுக்குப் பொருந்தும்.

இந்தக் கவர்ச்சிகரமான வட்டி திட்டம் மூலமாக, தகுதிவாய்ந்த வாடிக்கையாளர் 2.67 லட்சம் ரூபாய் வரையிலான வட்டி மானியத்தைப் பிரதம மந்திரி ஆவாஸ் திட்டத்தின் மூலமாகப் பெற முடியும். இந்தக் கட்டுப்படியாகக்கூடிய வீட்டு வசதித் திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த பாரத ஸ்டேட் வங்கி மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, நாங்கள் கட்டுப்படியாகக்கூடிய வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரும் திட்டத்தை மேற்கொள்ளும் கட்டுமானத் தொழிலதிபர்களுக்கு, வட்டியில் 35 அடிப்படைப் புள்ளிகள் வரை சலுகை அளித்து உற்சாகமளிக்க இருக்கிறோம். இதனால் இரு வகையில் பயன் உள்ளது. கட்டுமானத்துறையும் பயன் பெறுகின்றனர், அதாவது கட்டுமானத்துக்கு நிதி கிடைக்கிறது மற்றும் கட்டுப்படியாகக்கூடிய வீட்டுக்கான வீட்டுக்கடனும் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கி 30 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வீட்டுக் கடனுக்கு வட்டி விகிதத்தில் சலுகையும் அளிக்கிறது. இனிமேல் 30 லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடனுக்கு, வட்டி விகிதம் ரிஸ்க் அடிப்படையிலான விலை நிர்ணயத்தல் (Risk based price mechanism) முறையில் இருக்கும்.

தற்போதைய அடைப்படை விகித வாடிக்கையாளர்கள், தங்கள் வீட்டுக்கடனை, இப்போதைய எம்சிஎல்ஆர் (MCLR) உடன் இணைந்த கார்ட் விகிதத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். இதற்குக் கடன் நிலுவைத் தொகையின் 0.30 சதவிகிதம், அதாவது அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். வாடிக்கையாளர் விரும்பினால், தற்போதைய வட்டி விகிதத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு, எந்தவித கட்டணமும் இல்லாமல், அடிப்படை விகிதத்தில் இருந்து எம்சிஎல்ஆர்-க்கு மாற்றிக் கொள்ளலாம். சிறப்புச் சலுகையாக வீட்டுக்கடனை மற்ற நிதி நிறுவனங்களிடமிருந்து மாற்றிக்கொள்வதற்கான செயல்முறைக் கட்டணம் முற்றிலும் தள்ளுபடிசெய்யப்படும். இந்த வட்டி விகிதக்குறைப்பு ஒரு சிறப்புச் சலுகையாகும். இந்தச் சலுகை 31 ஜூலை 2017 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்" என்றார் அவர்.

பழைய பாடத்திட்டத்தை மாற்ற குழு அமைப்பு

தமிழகத்தில், 13 ஆண்டு பழைய பாடத்திட்டத்தை மாற்ற, சி.பி.எஸ்.இ., முன்னாள் அதிகாரிகள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், நாளை நடக்கிறது.
தமிழகத்தில், தற்போது நடைமுறையில் உள்ள, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், ௨௦௦௪ல் தயாரிக்கப்பட்டு, 2006 முதல் அமலில் உள்ளது. 13 ஆண்டுகளை தாண்டிய இந்த பாடத்திட்டத்தால், தமிழக மாணவர்கள், மற்ற மாநில மாணவர்களுடன் போட்டியிட்டு, தேசிய தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை.எதிர்காலத்தில் தேசிய, சர்வதேச அளவில், மற்ற மாணவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், தமிழக பாடத்திட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, நமது நாளிதழில் பலமுறை செய்திகள் வெளியாகின. பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதும், அவரிடம் பாடத்திட்டத்தை மாற்றும்படி, ஆசிரியர் சங்கத்தினரும்,கல்வியாளர்களும் மனு அளித்தனர். எனவே, பாடத்திட்டத்தைமாற்ற, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், சிறப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் முன்னாள் இயக்குனர், ஜி.பாலசுப்ரமணியன், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும்கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

 பாடத்திட்டத்தை மாற்ற நியமிக்கப்பட்டுள்ள, இந்த குழுவின் முதல் கூட்டம், நாளை, தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது. இதில்,அமைச்சர், செயலர் மற்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், பாடத்திட்டத்தை எப்படி மாற்றுவது, எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பது, புதிய பாடத்திட்டத்தை கற்பிக்க, ஆசிரியர்களுக்கு எந்தவித பயிற்சிகள் தேவை என்பதுகுறித்தும், ஆலோசிக்கப்பட உள்ளது.

B.E., 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டு இன்ஜி., படிப்புக்கு, மே, 17 முதல் விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள அரசு, தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., முடித்தோர்,இரண்டாம் ஆண்டு, இன்ஜி., படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். 
இதற்கான தமிழக அரசின் கவுன்சிலிங், காரைக்குடி அழகப்பா செட்டியார் இன்ஜி., கல்லுாரி மூலம் நடத்தப்படுகிறது.

வரும் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில், இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, மே, 17 முதல், ஜூன், 14 வரை, http://www.accet.co.in/,http://www.accet.edu.in/ ஆகிய இணையதளங்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகல்களை, ஜூன், 14, மாலை, 5:00 மணிக்குள், காரைக்குடி அழகப்ப செட்டியார் கல்லுாரி முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் படிப்புக்கு ஜூன் 16ல் கவுன்சிலிங்


விண்ணப்ப பதிவு பணிகளை, http://www.tnau.ac.in என்ற இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டும். 
சிறப்பு ஒதுக்கீட்டுபிரிவில், விண்ணப்பிப்போர், தேவையான சான்றிதழ்களை, பல்கலைக்கு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை, ஆன்லைனிலும், வங்கி கணக்கிலும் செலுத்தலாம்.கூடுதல் விபரங்களை, 0422 - 6611345 / 6611346 என்ற எண்களில் தெரிந்து கொள்ளலாம்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!