Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 11 May 2017

தமிழகத்தில் பொதுத்தேர்வு டாப் ரேங்க் அறிவிப்பு முறையில் வருகிறது மாற்றம்?

நாளை வெளியாகவுள்ள +2 தேர்வு முடிவுகளில் இருந்து தமிழகத்தில் பொதுத்தேர்வு ரேங்க் அறிவிப்பு முறையில் புதிய மாற்றம் வருகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பொதுத்தேர்வுகளை பொறுத்தவரை முடிவுகள் வெளியாகும் சமயத்தில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ , மாணவியரின் பெயர்கள் வெளியிடப்படுவது மரபாக இருந்து வந்தது. ஆனால் இம்முறையின் காரணமாக மற்ற மாணவர்களுக்கு ஒருவித மனா உளைச்சல் ஏற்படும் என்றும், இதன் மூலம் குறிப்பிட்ட சில பள்ளிகள் தங்களை வணிக ரீதியில் முன்னிறுத்தும் நிலை உருவாவதாகவும் கல்வி நிபுணர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.

அதனை ஏற்று தற்பொழுது நாளை வெளியாகவுள்ள +2 தேர்வு முடிவுகளில் இருந்து தமிழகத்தில் பொதுத்தேர்வு ரேங்க் அறிவிப்பு முறையில் புதிய மாற்றம் வர உள்ளது.இதன்படி நாளை வெளியாகும் +2 முடிவுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ , மாணவியரின் பெயர்கள் வெளியிடப்படாது என்றும், மாணவர்கள் தங்களது தனிப்பட்ட மதிப்பெண்களை இணையதளம் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். வழக்கம் போல் பள்ளிகளுக்கு முடிவுகள் அனுப்பப்படும்.

இது தொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி ஏ.டி.எம்மில் பணம் எடுத்தாலும் கட்டணம்: SBI

கேரளாவில் வரும் ஜுன் மாதம் முதல் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தாலும் அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற எஸ்.பி.ஐ வங்கியின் அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கியின் கேரளப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வரும் ஜுன் மாதம் முதல் எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும், ரூ.25 கட்டணமாக விதிக்கப்படும். அதே போல ரூ.5000கு மேல் மதிப்பில் கிழிந்த / பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினாலும் அதற்கும் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐயின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள திருவனந்தபுரம் தொகுதி மார்க்சிஸ்ட்  கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.ராஜேஷ், 'இது மிகவும் மூர்க்கத்தனமானது;மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கைகையில் இருந்தே இந்த அரசு மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது.  இதை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எழுப்புவோம்' என்று தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.ஐ வங்கியின் இந்நடவடிக்கை குறித்து திரைபிரபலங்கள் சிலர் மற்றும் பொதுமக்கள் சிலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

CPS - திட்டத்தில் பணித்துறப்பு மற்றும் மரணம் அடைந்த அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களிடமிருந்து 4192 பேர் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது .மேலும் பணிக்கொடை வழங்குவது குறித்த அரசாணை இதுநாள் வரை வெளியிடப்படவில்லை - RTI

புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆசிரியர்கள் 750 கோரும் விண்ணப்பம்!!

அதிகாரிகளை நானே நேரடியாக கண்காணிக்கிறேன்... ஜாக்கிரதை!' -கல்வித் துறை செயலர் உதயசந்திரன் எச்சரிக்கை

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில், முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான, திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், மதுரையில் நடந்தது. அதில், கல்வித் துறை செயலர் உதயசந்திரன் பேசும்போது, 


' மாணவர்கள் போல், சி.இ.ஓ., - டி.இ.ஓ.,க்களும் சுதந்திரமாக செயல்படலாம்; சர்வாதிகாரத்துடன் செயல்படக் கூடாது. அதிகாரிகளை தலைமை செயலகத்தில் இருந்து, 'இரண்டு கண்கள்' எப்போதும் கண்காணித்து கொண்டிருக்கும். தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு' என்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற, 'கை சுத்தம்' உள்ள அதிகாரிகள் சிலர், 'கல்வித்துறையின் மானம் காற்றில் பறக்கும் அளவிற்கு இதுவரை தவறு செய்த அதிகாரிகள், இனிமேலாவது திருந்துங்கள். 'உங்களை நானே நேரடியாக கண்காணிக்கிறேன்; ஜாக்கிரதை...' என, இதம், பதமாக எச்சரிக்கை விடுத்திருக்காரே, சபாஷ்' என்றனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!