Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 12 May 2017

சட்ட மன்ற கல்வி மானிய கோரிக்கையின் போது அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்

* சட்ட மன்ற கல்வி மானிய கோரிக்கையின் போது  இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு புதுமையான திட்டங்கள் அறிவிக்கப்படும்.

* Rank முறை மாற்றி Grade முறை அமல் படுத்தி உள்ளதற்கு பொது மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.

* CBSE பாட  திட்டம் போல் தமிழக பாடத்திட்டமும் மாற்ற கல்வியாளர்கள் ஆலோசணை செய்து வருகின்றனர்.

இவ்வாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

TNPSC GROUP - I RESULTS PUBLISHED

POSTS INCLUDED IN GROUP-I SERVICES (MAIN WRITTEN EXAMINATIONS)

Date of   Written Exam : 29.07.2016, 30.07.2016 & 31.07.2016

CLICK HERE - GROUP-I SERVICES (MAIN WRITTEN EXAMINATIONS) - RESULTS

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பத்திரப்பதிவு: மீண்டும் தடையை தளர்த்திய உயர்நீதிமன்றம்!

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடைஉத்தரவை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விளை நிலங்களை வீ ட்டுமனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு தடை உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் 'யானை' ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் முன்னரே சில உத்தர வுகளை நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்திருந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு தெரிவித்ததாவது:

அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை வரன்முறை செய்வதற்கு நீதிமன்ற உத்தரவின் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணைகளின் கீழ் பத்திரப்பதிவு செய்யலாம்.  ஏற்கனவே வீட்டு மனைகளாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறுபதிவு செய்யலாம் என்ற சட்டத்தின் கீழும் பத்திரப்பதிவு செய்யலாம்.

மேலும் 21.04.2017 முதல் இன்று வரை பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைப் பதிவுகள் சட்டவிரோதம் ஆகும்.  அத்துடன் 09.09.206 முதல் 28.03.2017 இடையிலான அனைத்து பத்திரப்பதிவுகளும் சட்டவிரோதமே ஆகும். . இந்த வழக்கில் இறுதித்தீர்ப்பு வரும் வரை பத்திர பதிவுகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டதாகும்.

இதன் அடிப்படையில் பத்திரவு பதிவு செய்தவற்கான தடை தளர்த்தப்படுகிறது. மேலும் இந்த வழக்கு விசாரணை ஜூன் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

விரைவில் 5G ??

4G நெட்வொர்க் தெரியும்... 5G நெட்வொர்க்கில் என்னவெல்லாம் இருக்கும் தெரியுமா..?

4G நெட்வொர்க் சேவை இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

தொலைக்காட்சியில் கிரிக்கெட் மேட்ச் பார்க்க முடியாத சூழ்நிலையில் ஸ்கோர்கார்டை ஸ்க்ரோல் செய்த இளைஞர்கள், இன்று லைவ் ஸ்ட்ரீமிங்கில் மொபைலிலேயே மேட்ச் பார்த்து ட்வீட் தட்டுகின்றனர். வீடியோ கால், மிகப்பெரிய ஃபைல்களையும் நிமிடங்களில் டவுன்லோடு செய்வது என பலரின் இணையப் பயன்பாடே மாறியுள்ளது.

4G சிம் பயன்படுத்தக்கூடிய மொபைல்களை மட்டுமே அனைவரும் தேடி வாங்குகின்றனர். இந்நிலையில், 2G, 3G, 4G வரிசையில் அடுத்ததாக வரவிருக்கும் 5G பற்றிய எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. 5G நெட்வொர்க் சேவையில் என்னென்ன வசதிகள் இருக்கும் எனப் பார்ப்போமா!

4G நெட்வொர்க்கை மிஞ்சும் 5G!

1G, 2G, 3G, 4G போன்றவற்றில் குறிப்பிடப்படும் G என்பது தலைமுறையைக் (Generation) குறிக்கும். அது இணையத்தையோ அல்லது இணையத்தின் வேகத்தையோ குறிப்பதில்லை. 4G நெட்வொர்க் சேவையில் உள்ள வசதிகளை விடவும் மேம்பட்ட, அடுத்த தலைமுறை வசதிகளை உள்ளடக்கியது தான் 5G. ஒவ்வொரு தலைமுறை நெட்வொர்க் சேவையிலும் இருக்க வேண்டிய வசதிகளைப் பற்றி, ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான இன்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன்ஸ் யூனியன் (International Telecommunications Union) தான் வரையறுக்கிறது. அந்த வரையறையின் அடிப்படையில் தான் மொபைல் உற்பத்தி நிறுவனங்களும், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியையும், சேவையையும் வழங்குகின்றன. இந்நிலையில், 5G நெட்வொர்க் சேவையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய சில வசதிகள் பற்றி சமீபத்தில் ஐ.டி.யூ அறிக்கை வெளியிட்டுள்ளது.

தடையற்ற தொலைத்தொடர்பு :

தங்கு தடையற்ற தொலைத்தொடர்பு சேவையே 5G-யின் முக்கிய நோக்கமாகும். ஒரு டவர் இருக்கும் பகுதியைக் கடந்து, மற்றொரு டவர் இருக்கும் பகுதிக்குப் பயணிக்கும்போது சிக்னல் கட் ஆகும் பிரச்னை தற்போது இருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்படும் 'கால் ட்ராப்' பிரச்னை கண்டிப்பாக 5G-யில் இருக்கக்கூடாது என்கிறது ஐ.டி.யூ. ஒரு மணி நேரத்தில் 500 கி.மீ வேகத்தில் பயனாளர் வெவ்வேறு டவர்களைக் கடந்து ரயிலில் பயணிக்கும்போது கூட சிக்னல் கட் ஆகக்கூடாது என ஐ.டி.யூ வலியுறுத்தியுள்ளது.

இணைய வேகம் :

ஓர் இணைப்பிலிருந்து மற்றொரு இணைப்புக்குத் தகவலைப் பரிமாறிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் குறையக்குறைய இணையத்தின் வேகம் அதிகமாக இருக்கும். 5G நெட்வொர்க் சேவையில் இந்த நேரமானது 4 மில்லி செகண்ட் முதல் 1 மில்லி செகண்ட் அளவுக்குள்தான் இருக்க வேண்டும். அதிவேகமாக செயல்படும் 4G சேவையில் கூட, டேட்டாவை பரிமாறிக்கொள்ள 50 மில்லி செகண்ட்கள் ஆகின்றன.

பேட்டரி திறன் :

4G நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் அனைவருக்கும் மொபைல் பேட்டரியின் சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடும் பிரச்னை இருக்கும். இதை ஈடுசெய்வதற்காகவே முன்பை விட அதிக திறன் கொண்ட பேட்டரியை மொபைல் உற்பத்தியாளர்கள் தயாரித்து வருகின்றனர். 5G நெட்வொர்க் சேவையிலும் நீடித்த பேட்டரித் திறன் அவசியம் என ஐ.டி.யூ வலியுறுத்தியுள்ளது.

எப்போது அறிமுகமாகும்?

தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2019-ம் ஆண்டுக்குள் 5G நெட்வொர்க் சேவையை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன. ஐரோப்பாவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2020-ம் ஆண்டை இலக்காக வைத்து, 5G சேவையை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, 5G அறிமுகமாக எப்படியும் 2020-ம் ஆண்டு ஆகலாம்.

5G

பயன்கள் :
5G நெட்வொர்க் சேவையில் மின்னல் வேகத்தில் இணையம் செயல்படும் என்பதால், முழுநீளத் திரைப்படத்தையும் கூட சில நிமிடங்களில் டவுன்லோடு செய்ய முடியும். டவுன்லோடு மற்றும் அப்லோடு இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக இருக்கும்.

வீடியோ கால் செய்யும்போது எதிரே இருப்பவர் பேசுவது சில நொடிகள் தாமதமாகத்தான் நமக்குக் கேட்கும். வீடியோவும், ஆடியோவும் சரியாகப் பொருந்தாமல் இருக்கும். 5G நெட்வொர்க்கில் இணையத்தின் வேகம் அபரிமிதமாக இருக்கும் என்பதால், தாமதம் ஏதும் இன்றி வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.

இணையத்தின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், ரியல் டைமில் ஆக்மென்டட் ரியாலிட்டி சேவை அதிகளவில் பயன்படுத்தப்படும். உதாரணமாக, சாலையில் நடந்து செல்லும்போது, ஓர் இடத்தைப் பற்றிய முழு விவரமும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டியில் நொடிப்பொழுதில் லோட் ஆகும்.

பொருள்களின் இணையம் (Internet of Things) மற்றும் ஸ்மார்ட் டிவைஸ்கள், தற்போது இருப்பதைவிட 5G நெட்வொர்க் சேவையில், அதிக அளவில் பயன்படுத்தப்படும். அலுவலகத்தில் இருந்தபடியே ஸ்மார்ட் ஸ்டவ் மூலம் சமையல் மேற்கொள்ள முடியும்.

பிளஸ் 2 மார்க்: கிரேட் நிர்ணயிக்கப்பட்டது எப்படி?

தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் முதல் முறையாக கிரேடு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.இவற்றில் மாணவர்கள் பெற்ற மார்க்குகளின் அடிப்படையில் கிரேடு பிரிக்கப்பட்டுள்ளது.

*#கிரேட் விபரம் :*

*ஏ கிரேடு : 1180 மார்க்குகளுக்கு மேல் பெற்றவர்கள் - 1171*

*பி கிரேடு : 1151 - 1180 மார்க் பெற்றவர்கள் - 12,283*

*சி கிரேடு : 1126 - 1150 மார்க் பெற்றவர்கள் - 14,806*

*டி கிரேடு : 1101 - 1125 மார்க் பெற்றவர்கள் - 17,750*

*இ கிரேடு : 1001 - 1100 மார்க் பெற்றவர்கள் - 95,906*

*எப் கிரேடு : 901 - 1000 மார்க் பெற்றவர்கள் - 1,36,849*

*ஜி கிரேடு : 801 - 900 மார்க் பெற்றவர்கள் - 1,64,489*

*எச் கிரேடு : 701 - 800 மார்க் பெற்றவர்கள் - 1,69,070*

*ஐ கிரேடு : 700 மற்றும் அதற்கு கீழ் பெற்றவர்கள் - 2,80,938*

மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகித விபரம் !!!

மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகித விபரம்
1.கன்னியாகுமரி – 94.64.2.
2.திருநெல்வேலி – 93.043.
3.தூத்துக்குடி – 93.054.
4.ராமநாதபுரம் – 95.395.
5. சிவகங்கை – 94.396.

6. விருதுநகர் – 95.977.
7. தேனி – 93.858.
8. மதுரை – 89.379.
9. திண்டுக்கல் – 88.0210.
10.ஊட்டி – 87.4811.
11. திருப்பூர் – 93.8212.
12 கோவை – 91.1013.
13 ஈரோடு – 94.7514.
14 சேலம் – 89.1615.
15 நாமக்கல் – 92.6216.
16 கிருஷ்ணகிரி – 82.6717.
17.தர்மபுரி – 88.7018.
18. புதுக்கோட்டை – 90.5219.
19.கரூர் – 91.6620.
20. அரியலூர் – 83.7821.
21. பெரம்பலூர் – 88.0422.
22.திருச்சி – 92.1923.
23. நாகப்பட்டினம் – 83.4224.
24.திருவாரூர் – 8325.
25. தஞ்சாவூர் – 88.5126.
26. விழுப்புரம் – 82.5827.
27. கடலூர் – 78.1028.
28. திருவண்ணாமலை – 89.3129.
29.வேலூர் – 80.3230.
30. காஞ்சிபுரம் – 81.6931.
31.திருவள்ளூர் – 74.3632.
32.சென்னை – 90.27

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.

தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் மே 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் மே 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மத்திய தொழிலாளர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசியவேலைவாய்ப்பு சேவை மையம் மாற்றுத் திறனாளிகளுக்கு குறுகிய கால பயிற்சி முகாமை நடத்த உள்ளது.

எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை கல்வித் தகுதி பெற்ற தகவல் தொழிநுட்பம், வெளி திறன் பெரும் நிறுவனங்கள் சார்ந்த பார்வைத் திறன், செவித் திறன் மற்றும் உடல் குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளிகள் இதில் பங்கேற்கலாம்.கைபேசி பழுது நீக்குதல், தையல் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல், ஸ்க்ரீன் பிரிண்டிங் மற்றும் புத்தகக் கட்டமைப்பு ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தை 2017 மே 15-ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.மே 22, 2017 முதல் பயிற்சி தொடங்கும். 

மேலும் விவரங்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம், கிண்டி, சென்னை – 32. தொலைபேசி044 – 22501534 தொடர்பு கொள்ளவும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வான 187 பேருக்கு பணிநியமன ஆணை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்.


அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்ட 187 பேருக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று பணிநியமன ஆணைகளைவழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மாணவ, மாணவியர் தொடர் கல்வி மூலம் சிறப்பான கல்வி அறிவு பெற்று பொருளாதாரத்திலும், சமூகத்திலும் வளர்ந்த நிலை அடைவதற்கு உயர்கல்வி இன்றியமையாதது ஆகும்.இதனைக் கருத்தில் கொண்டு, ஏழை, எளிய மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளை துவக்குவது, மாணாக்கர்கள் சிறப்பானதொரு சூழ்நிலையில் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், நிர்வாகக் கட்டிடங்கள், ஆய்வகங்கள், விடுதிகள் கட்டுவது, அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள விரிவுரையாளர் / உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது போன்ற பணிகளை ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்வதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, 22.10.2016 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களின் சரிபார்ப்பும் நடைபெற்றது.

அதன் அடிப்படையில், அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 187 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 11 நபர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், பணிநியமன ஆணைகளை வழங்கினார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PLUS TWO MARCH 2017 | PUBLIC EXAMINATION RESULT

[12.05.2017 - 10 AM ]

Click here And Know Your Result - Link 1

Click here And Know Your Result - Link 2

Click here And Know Your Result - Link 3

Click here And Know Your Result - Link 4

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி ஆசிரியர், 'டிப்ளமா' தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசு தேர்வுத் துறை அறிவிப்பு: 

தொடக்கக் கல்வி ஆசிரியர், 'டிப்ளமா' தேர்வு, ஜூன், 28ல் துவங்குகிறது. அன்றைய தினம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, இந்திய கல்வி முறை; ஜூன், 30ல், கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்தலும் பாடத்தில் தேர்வுகள் நடக்கும்.

ஜூலை, 3ல், மொழி கற்பித்தல்; 5ல், கணிதம்; 8ல், ஆங்கிலம்; 10ல், அறிவியல்; 12ல், சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கின்றன. முதலாம் ஆண்டுக்கு, ஜூன், 29ல், கற்கும் குழந்தை; ஜூலை, 1ல், ஆங்கிலம்; 4ல், கற்றலை எளிதாக்குதல், மேம்படுத்துதல்; 6ல், மொழி கற்பித்தல்; 11ல், கணிதம்; 13ல், அறிவியல் மற்றும், 14ல், சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.25 சேவைக் கட்டணமா?: எஸ்.பி.ஐ. மறுப்பு

ஏடிஎம்ல் இருந்து பணம் எடுக்க ஒவ்வொரு முறைக்கும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானது என எஸ்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, பெருநகரங்களில் இருப்பவர்கள் ரூ.5,000 வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அந்த அதிர்ச்சி குறைவதற்குள், ஜூன் மாதம் முதல் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்க ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று இன்று (மே-11)அறிவிப்புகள் வெளியானது.

மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பிற ஏடிஎம்ல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஏடிஎம்ல் இருந்து பணம் எடுக்க ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானது என்று எஸ்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் வாலட்டுக்கு கட்டணம்

இது குறித்து எஸ்.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ரூ.25 சேவைக் கட்டணம் வசூலிப்பு என்பது மொபைல் வாலட்டுக்கு மட்டும் தான் என்றனர். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீருடை பணியாளர் தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய பொதுத்தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' என்ற நுழைவுச் சீட்டு, நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், 13 ஆயிரத்து 137 இரண்டாம் நிலை காவலர்கள்; 1,015 இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள்; 1,512 தீயணைப்போர் பதவிகளுக்கு பொதுத் தேர்வுக்கான அறிவிப்பை, ஜன., 23ல் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு, 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வில், முதன் முறையாக, திருநங்கைகளும் விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

இதற்கான எழுத்து தேர்வு, வரும், ௨௧ம் தேதி, தமிழகம் முழுவதும், 410 மையங்களில் நடக்கிறது. எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்கான, ஹால் டிக்கெட், www.tnusrbonline.org என்ற இணைய தளத்தில், நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 'விண்ணப்பதாரர்கள், தங்களின், விண்ணப்ப எண் அல்லது பெயர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

குரூப் - 2 'ஏ' பதவிக்கு 2ம் கட்ட கவுன்சிலிங்

குரூப் - 2 ஏ' பதவிக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 15ம் தேதி துவங்குகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

'குரூப் - 2 ஏ' பதவிகளுக்கான, எழுத்து தேர்வு, ஜன., 24ல் நடந்தது. முடிவுகள், ஜூன், 8ல், வெளியானது. தகுதி பெற்றவர்களுக்கான, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச், 1 முதல், 10 வரை நடந்தது. அதில், தேர்வானோருக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், மே, 15 முதல், 17 வரை நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

E Wallet மூலம் பணம் எடுத்தால் மட்டும் சேவைக்கட்டணம்..

'இ வாலெட்‘ மூலம் ATM ல் பணம் எடுத்தால் மட்டுமே ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். SBI தகவல்.

💴 நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI),  வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ரூ.5000 இருப்பு வைத்திருக்க வேண்டும் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

💷 ரூ.5000 க்கும் குறைவாக இருப்பு வைத்திருந்தால் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறியது. தற்போது

💶 'இ வாலெட்‘ மூலம் ATM ல் பணம் எடுத்தால் மட்டுமே ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

💴 இந்த புதிய முறை ஜூன் 1 ம் தேதியிலிருந்து அமலுக்கு வர உள்ளது 

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!