Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 24 May 2017

பருவம் 1 நான்காம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழி   பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்திலுள்ள கலைச்சொற்கள்

நன்றி

ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி

காஞ்சிபுரம் ஒன்றியம்

காஞ்சிபுரம் மாவட்டம்.

பருவம் 1
தமிழ் மற்றும் ஆங்கில வழி  
பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்திலுள்ள கலைச்சொற்கள் .

பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.
உங்கள் தேவையான பாடங்களை கீழே உள்ள link யை கிளிக் செய்து

<<<<<<<<<

தேவையெனில் கீழே 

Click செய்யவும் 

>>>>>>>>>>

தமிழ் 4ஆம் வகுப்பு 

-----------*-----------------*----------------------*--------------------*----------------------

English 4th Std - Lesson no : 1

English 4th Std - Lesson no : 2

English 4th Std - Lesson no : 3

----------*------------------*-------------------------*--------------------*-------------------

Science Lesson no: 1

Science Lesson no: 2

Science Lesson No : 3

Science Lesson no: 4

Science Lesson no 5

-------------*-----------------*------------------------*---------------------*-----------------

Social Lesson no :1

Social Lesson no: 2

Social Lesson no: 3

Social lesson no : 4

Social Lesson no: 5

6 - 10-ம் வகுப்பு வரை தகவல் தொழில் நுட்ப கல்விஅறிமுகம்.

பள்ளிக்கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
தகவல் தொழில்நுட்பவியல் கல்வியை புதிய பாடத்திட்டத்தில் 6 முதல் 10-ம் வகுப்புவரை அறிவியல் பாடத்தில் ஒரு பகுதியாக கற்பிக்க வசதியாக பாடத்திட்டத்தில் உரிய மாற்றம் கொண்டுவரப்படும். புதிய பாடத்திட்டத்தில் பின்வரும் வழிகாட்டி நெறிமுறைகள் கவனத்தில் கொள்ளப்படும்.

* மனப்பாடம் சார்ந்ததாக இரா மல் படைப்பாற்றல் சார்ந்த கல்வி.

* தோல்வி பயம் மற்றும் மன அழுத்தத்தை உருவாக்கும் தேர்வாக இல்லாமல் கற்றலின் இனிமையை உறுதிசெய்வது.

* தமிழர்களின் தொன்மை வரலாறு, பண்பாடு மற்றும் கலை, இலக்கியம் குறித்த பெருமித உணர்வுகளை மாணவர்கள் பெறுவதுடன் அவர்கள் தன்னம்பிக் கையுடன் அறிவியல் தொழில்நுட் பத்தை கையாளச் செய்வது.

* அறிவுத்தேடலை வெறும் பாடப்புத்தக அறிவாக குறைத்து மதிப்பிடாமல் பலதரப்பட்ட புத்தகங்களை வாசிக்கச்செய்து வழிகாட்டுதல்.

இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலை (இ-லேனிங்) ஊக்கு விக்கும் வகையில் விரிவான கற்றல் மேலாண்மை தளத்தை உருவாக்கி ஆசிரியர்களும், மாணவர்களும் எளிதில் பயன்படுத் தக்கூடிய மொபைல் செயலிகள் உருவாக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

8 ஆம் வகுப்பு முதல் பருவம் பாடத்திட்டம் EXCEL FORMAT

8 ஆம் வகுப்பு முதல் பருவம் பாடத்திட்டம் EXCEL FORMAT 

CLICK HERE TO DOWNLOAD

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் “RECORD SHEET” பதிலாக TC – அமைச்சர் செங்கோட்டையன் !!!

வகுப்பறைக் கையேடு -2017/18


Click here
5_6136584762116014096

NEET தேர்வு முடிவுகளை வெளியிட தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தமிழ் மற்றும் ஆங்கில வழித் தேர்வுகளில் வினாக்கள் மாறுபட்டு இருந்ததால் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

இனி ஆசிரியர்களுக்கும் 'பொது நுழைவு தேர்வு' - மத்திய மனித வள அமைச்சகம் திட்டம்

ஆசிரியராக வர விருப்பம் உள்ளவர்களுக்காக பொது நுழைவுத் தேர்வு அல்லது தகுதித்தேர்வு கொண்டு வர மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ்  உள்ள பள்ளி கல்வி மற்றும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

பள்ளிகல்வி செயலாளர்

மேற்கு வங்கமாநிலம் கொல்கத்தாவில் பள்ளிக் கல்வி துறை சார்பில் ஒரு கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் மத்திய பள்ளி கல்வி மற்றும் கல்வித்துறை செயலாளர் அணில் ஸ்வரூப் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியின் இடையே நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-
 

தகுதித்தேர்வு

ஆசிரியராக வர விரும்பும்  பெண்கள், ஆண்களுக்காக மத்திய அரசு சார்பில் மதிப்பீடு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, சி.ஏ.டி. அல்லது எஸ்.ஏ.டி. தேர்வு போன்று இது இருக்கும். ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வுக்கான அடித்தளமாக உருவாக்க இருக்கிறோம்.

ஆலோசனை

இந்த தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகும் பெண்கள், ஆண்களுக்கு ஆசிரியராவதற்கான ஒரு தகுதி கிடைக்கும். இது குறித்து மாநில அரசுகளிடம் ஆலோசனை நடத்தி உள்ளோம். இந்த திட்டத்தை அந்தந்த மாநிலங்கள் விருப்பம் போல் செயல்படுத்த உரிமை உண்டு.  இது தொடர்பாக அனைத்து தரப்பினரிடத்திலும் பேச்சு நடத்தியபின், பணியமர்த்தும் நிறுவனங்கள் முடிவு செய்யும்.

சோதனை திட்டம்

ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் வருகை உறுதிசெய்யப்பட வேண்டும். இதற்காக ஜி.பி.எஸ். இணைக்கப்பட்ட, பயோ-மெட்ரிக் வருகை பதிவேடு ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்படும். இந்த திட்டத்தை சோதனை முயற்சியாக சட்டீஸ்கரில்கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செயல்படுத்தி வருகிறோம். படிப்படியாக அனைத்து மாநிலங்களுக்கும் விரைவில் நடைமுறைப்படுத்துவோம் என நம்புகிறேன்.
சட்டீஸ்கரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட், ஆந்திரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களும் இந்த திட்டதை செயல்படுத்த ஆர்வம் காட்டியுள்ளன. ஆசிரியர்களின் வருகைபதிவேடு ஒழுங்குபடுத்தப்பட்டவுடன் அது சம்பள கணக்குடன் இணைக்கப்படும்.

பி.எட்.கல்லூரிகள்

பி.எட். கல்லூரிகளில் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், 40 சதவீதம் கல்லூரிகளை நாங்கள் தகுதிநீக்கம் செய்ய முடிவு செய்து இருக்கறோம். இது தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸ்களுக்கு 40 சதவீத கல்லூரிகள் இன்னும் பதில்அளிக்கவில்ைல. உள்கட்டமைப்பு விதிமுறைப்படி இல்லாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுமுறையிலும் சத்துணவு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின்கீழ், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுர மாவட்டத்தில்  கோடை விடுமுறையிலும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சத்துணவு மையங்களில் தேவையான உணவுப் பொருட்கள் இல்லாத பட்சத்தில் உடனடியாக நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. ரிசல்ட் இன்று இல்லை

சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது. டெல்லி நீதிமன்ற உத்தரவால் மே மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அடுத்த 3 கல்வியாண்டுகளில் 1 முதல் பிளஸ் 2 வரை பாடத் திட்டங்கள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

அடுத்த கல்வியாண்டில் (2018-19) இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கான பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த. உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவு: தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரலாம் என்று அண்மையில் நடைபெற்ற வல்லுநர் குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் அடிப்படையிலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் தெரிவித்த கருத்துகளின்படியும், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத் திட்டத்துக்கு (சி.பி.எஸ்.இ.) நிகராக தமிழகப் பாடத் திட்டத்தை உடனடியாக வடிவமைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதன் அடிப்படையில் பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.
எந்தெந்த வகுப்புகள் எப்போது? ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் மற்றும் பாடப் புத்தகங்கள் அடுத்த கல்வியாண்டில் (2018-2019) மாற்றியமைக்கப்படும்.
இரண்டு, ஏழு, பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் 2019-2020-ஆம் கல்வியாண்டிலும், மூன்று, நான்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் 2020-2021-ஆம் கல்வியாண்டிலும் மாற்றியமைக்கப்படும்.
புதிய பாடத்தில் ஐ.டி. கல்வி: ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்பவியல் (ஐ.டி.) கல்வி கற்பிக்க ஏதுவாக பாடத் திட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வரப்படும்.
செய்முறைக் கையேடு-இணைய வழிக் கற்றல்: புதிய பாடத் திட்டம் என்பதால் ஆசிரியர், மாணவர்களுக்கு உரிய கையேடுகள் வழங்கப்பட உள்ளன. புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் வகையில் தகுந்த ஆசிரியர் கையேடுகளையும், மாணவருக்கான செய்முறைக் கையேடுகளையும் தயாரித்து வழங்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இணைய வழிக் கற்றல் மற்றும் கற்பித்தலை ஊக்குவிக்கும் வகையில் விரிவான கற்றல் மேலாண்மைத் தளத்தை உருவாக்கவும், ஆசிரியர்களும், மாணவர்களும் எளிதில் பயன்படுத்தக் கூடிய செல்லிடப் பேசி செயலிகளை உருவாக்கிச் செயல்படுத்தவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பாடத் திட்ட மாற்றத்துக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்களுக்குத் தகுந்த பயிற்சி அளிக்குமாறும், பொதுக் கல்வி வாரியத்தின் ஒப்புதலைப் பெற்று பாடத் திட்ட மாற்றுப் பணியை ஆறு மாத காலங்களில் முடிக்குமாறும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

புதிய பாடத் திட்டம்:
கவனத்தில் கொள்ளத்தக்கவை
கற்றலை மனப்பாடம் செய்யும் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைக்க வேண்டும்.
தோல்வி பயம் மற்றும் மன அழுத்தத்தை உற்பத்தி செய்யும் தேர்வுகளை உருமாற்றி கற்றலின் இனிமையை உறுதி செய்யும் நேரமாய் அமைந்திட வேண்டும்.
தமிழர்தம் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் கலை, இலக்கியம் குறித்த பெருமித உணர்வை மாணவர்கள் பெறுவதுடன், அவர்கள் தன்னம்பிக்கையுடன் அறிவியல் தொழில்நுட்பத்தை கைக்கொண்டு நவீன உலகில் வெற்றிநடை போடுவதை உறுதி செய்திட வேண்டும்.
அறிவுத் தேடலை வெறும் ஏட்டறிவாய்க் குறைத்து மதிப்பிடாமல் அறிவின் ஜன்னல்களாக புத்தகங்கள் விரிந்து பரவி வழிகாட்டும் வகையில் புதிய பாடத் திட்டங்கள் அமைந்திட வேண்டும் என்று தனது உத்தரவில் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி இனி கணினி பள்ளி!!

அரசுப் பள்ளி இனி கணினி பள்ளி

அரசுப்பள்ளி மாணவர்கள் ,40000பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளி!!

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் கொண்டுவந்து அரசுப்பள்ளியன் தரத்தை அயல் நாட்டுக் கல்வியின்  தரத்திற்க்கு இணையாக கொண்டு சென்ற மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை    அமைச்சர் ஐயா அவர்களுக்கும் ,மதிப்புமிகு கல்வி செயலாளர்  ,இயக்குனர் ,இணை இயக்குனர் அவர்களுக்கும் 40000பி.எட் கணினி ஆசிரியர்கள் குடும்பங்களின் சார்பிலும் ,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கதத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை  தெரிவித்துக் கொள்கின்றோம்...

வெ.குமரேசன்,
மாநில பொதுச் செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்®655/2014.

1 முதல் பிளஸ் 2 வரை பாடத்திட்டம் மாற்றம்! மனப்பாட கல்வி முறைக்கு 'குட்பை'

மனப்பாட கல்விமுறையை கைவிடும்வகையில், ஒன்று முதல்பிளஸ் 2 வகுப்பு வரை,பாடத்திட்டம்மாற்றப்படுகிறது.அறிவியல் பாடத்தில்,கணினி அறிவியலும் இடம்பெறுகிறது.பள்ளிபாடத்திட்ட மாற்றத்திற்கான

அரசாணையை,பள்ளிக்கல்வி செயலர்உதயசந்திரன், நேற்றுவெளியிட்டு உள்ளார்.

அதன் விபரம்: சர்வதேசஅளவிலான அறிவியல்,சமூக, பொருளாதாரவளர்ச்சி, போட்டிதேர்வுகளில், தமிழகமாணவர்களின் வெற்றியைகருத்தில் கொண்டு,பாடத்திட்டம்மாற்றப்படுகிறது.

சி.பி.எஸ்.இ.,யை விடமேலானதாகவும், தமிழகபண்பாடு, கலாசாரத்திற்குமுக்கியத்துவம் அளிக்கும்விதமாகவும்,பாடத்திட்டத்தை உருவாக்க,மே, 11ல், வல்லுனர் குழுமுடிவு எடுத்தது.

அதன்படி, 2018 - 19ம்கல்வியாண்டில், ஒன்று,ஆறு, ஒன்பது மற்றும்பிளஸ் 1 வகுப்புகளுக்கு,புதிய பாடத்திட்டம்அமலாகும்.

2019 - 20ல், இரண்டு, ஏழு, 10மற்றும் பிளஸ் 2வகுப்புகளுக்கும், 2020 - 21ல்,மூன்று, நான்கு, ஐந்துமற்றும் 8ம் வகுப்புகளுக்கும்,பாடத்திட்டம் மாற்றப்படும்.

ஆறு முதல், 10ம் வகுப்புவரையான, அறிவியல்பாடத்தில், கணினிஅறிவியல் அல்லது ஐ.டி.,எனப்படும், தகவல்தொழில்நுட்பவியல்பற்றியபாடப்பகுதியும்இணைக்கப்படும். இவ்வாறுஅதில் கூறப்பட்டு உள்ளது.

பாடத்திட்டம் எப்படி மாற்றிஅமைக்கப்பட வேண்டும்என்பது குறித்து, அரசு சிலநெறிமுறைகளைவகுத்துள்ளது.

அதன் விபரம்:* கற்றலைமனப்பாட நிலையில்இருந்து மாற்றி, படைப்பின்பாதையில் பயணிக்கவைக்க வேண்டும்

* தோல்வி பயம் மற்றும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்தேர்வுகளை மாற்றி,கற்றலின் இனிமையைஉறுதி செய்யும் வகையில்,பாடம் அமைய வேண்டும்

* தமிழர்களின் தொன்மை,வரலாறு, பண்பாடு, கலை,இலக்கிய பெருமிதஉணர்வை, மாணவர்கள்,அறிவியல்தொழில்நுட்பத்தின் மூலம்தெரிந்து கொள்ள,பாடத்திட்டம் உறுதி செய்யவேண்டும்

* அறிவு தேடல் என்பது,வெறும் ஏட்டறிவு என,குறைத்து மதிப்பிடாமல்,அறிவுஜன்னலாய்புத்தகங்கள் வழிகாட்டவேண்டும் என்றஅடிப்படையில், பாடத்திட்டம்அமைய வேண்டும்.

இவ்வாறு நெறிமுறைகள்வகுக்கப்பட்டு உள்ளன.

புத்தகம் படிக்க'மொபைல்ஆப்'

ஆசிரியர்களும்,மாணவர்களும், எளிதில்பயன்படுத்தக் கூடியவகையில், 'மொபைல் ஆப்'என்ற மொபைல் போன்செயலி உருவாக்கப்படும்.ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும்செய்முறை மற்றும் பயிற்சிகையேடுகள் வழங்கப்படும்.

அண்ணா பல்கலைபாடத்திட்டம்!

தொழிற்கல்விக்கு, எட்டுஆண்டுகளாக பாடத்திட்டம்மாறவில்லை. வளர்ந்துவரும் தொழில்நுட்பவளர்ச்சிக்கு ஏற்ப,தொழிற்கல்விபாடத்திட்டங்கள் மாற்றம்செய்யப்பட உள்ளன.

அண்ணா பல்கலை,வேளாண் பல்கலை மற்றும்தொழில்சார்பல்கலைகளுடன்இணைந்து, மாநிலகல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனம்,தொழிற்கல்விபாடத்திட்டத்தை, மாற்றமுடிவு செய்துள்ளது. பிளஸ்1க்கு, 2018 - 19 மற்றும் பிளஸ்2வுக்கு, 2019 - 20ம் ஆண்டில்,இந்த மாற்றம் இருக்கும்.

சட்டப் படிப்பில் சேர வயது உச்ச வரம்பு இல்லை: 2017-18 கல்வியாண்டுக்கு மட்டும் பொருந்தும்..

தமிழகத்தில் சட்டப் படிப்புகளில் சேருவதற்கு இந்தக் கல்வியாண்டில் (2017-18) மட்டும் வயது உச்ச வரம்பே கிடையாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

வயது வரம்பு நீக்கப்பட்டது ஏன்?: நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் சட்டப் படிப்புகள் அனைத்தையும் இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) கட்டுப்படுத்தி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த சட்டப் படிப்புகளில் சேருவதற்கு வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதாவது, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் சேர அதிகபட்ச வயது 20. அதுபோல, மூன்றாண்டு சட்டப் படிப்பில் சேர அதிகபட்ச வயது 30 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பல்வேறு தரப்பினர் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில் பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு உயர் நீதிமன்றங்கள் இந்த வயது உச்ச வரம்பை நீக்கி உத்தரவிட்டன.

அதனைத் தொடர்ந்து, இந்திய பார் கவுன்சிலும், சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை நிர்ணயிக்கும் 'சட்டப் படிப்பு விதிகள் 2008'-இன் பிரிவு 28-ஐ கைவிட்டது. அதாவது, வயது உச்ச வரம்பு அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டது. இருந்தபோதும், தமிழகத்தில் மட்டும் கடந்த 2009-10 கல்வியாண்டு முதல் சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
தமிழக அரசு உத்தரவு: இந்நிலையில், பிற மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் 2015-16 கல்வியாண்டில் சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு தளர்த்தப்பட்டது. அதாவது, 2015-16 கல்வியாண்டு முதல், மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை நீக்கியும், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை 21-ஆக உயர்த்தியும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டப் படிப்புகளுக்கு வயது உச்ச வரம்பை நீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனால், தொடர்ந்து முன்பு இருந்தது போன்றே 2015-16 கல்வியாண்டிலும், 2016-17 கல்வியாண்டிலும் வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டே மாணவர் சேர்க்கை தமிழகத்தில் நடைபெற்றது.

மீண்டும் வயது உச்ச வரம்பு:

இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து, இந்திய பார் கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்திய பார் கவுன்சிலின் மனுவை ரத்து செய்து 11-12-2015-இல் உத்தரவிட்டது.
இதன் காரணமாக, சட்டப் படிப்புகளுக்கு வயது உச்ச வரம்பை இந்திய பார் கவுன்சில் மீண்டும் கொண்டுவந்தது. அதாவது, சட்டப் படிப்பு விதிகள் 2008-இன் பிரிவு 28 கைவிடப்பட்டதை ரத்து செய்து 17-9-2016-இல் உத்தரவிட்டது.
பார் கவுன்சில் உத்தரவு ரத்து: இந்த நிலையில், இந்திய பார் கவுன்சிலின் 17-9-2016 உத்தரவை எதிர்த்து ரிஷப் துகால் மற்றும் ஏஎன்ஆர் ஆகிய மனுதாரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இம்மனுவை கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம், இந்திய பார் கவுன்சிலின் 17-9-2016 உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 3-ஆவது வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
இதன் மூலம், நாடு முழுவதும் மூன்று ஆண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்புகள், 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு வயது உச்ச வரம்பு மீண்டும் நீக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் வயது வரம்பு இல்லை: இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறியது:
உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக, தமிழகத்திலும் மூன்று மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு வயது உச்ச வரம்பே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் 2017-18 கல்வியாண்டு சட்டப் படிப்புகள் சேர்க்கை மட்டுமே வயது உச்ச வரம்பு இல்லாமல் நடைபெறும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மட்டுமின்றி, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஹானர்ஸ் சட்டப் படிப்புகளிலும் இந்த அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற உள்ளது.

இது அடுத்த ஆண்டுகளுக்கும் தொடருமா என்பது உச்ச நீதிமன்றத்தின் ஜூலை 3-ஆவது வார உத்தரவுக்குப் பிறகே தெரியவரும்.
மேலும், ஆற்றல்சார் பள்ளி சட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றனர்.

IAS., IPS., (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) பயிற்சிக்காக மாவட்ட நூலகங்களில் வல்லுநர்கள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் தமிழக மாணவர்கள் சிறப்பான பயிற்சி பெற அனைத்து மாவட்ட நூலகங்களிலும் வல்லுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

மாணவர்களுக்கு பயிற்சிகள்: மாணவர்கள் கல்வியில் சிறந்த பயிற்சிகளைப் பெற வசதியாக பள்ளி வேலை நாள்களில் மாலை நேரங்களில் ஒரு மணிநேரம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, ஒவ்வொரு பகுதிக்கும் (பிளாக்) ஒரு பள்ளி தேர்வு செய்யப்பட்டு வாரத்துக்கு மூன்று நாள்கள் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்படும்.
 
சனிக்கிழமைகளில் மூன்று மணி நேரம் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகள், கல்வித் துறையில் மத்திய அரசு கொண்டு வரும் மாற்றங்களை மாணவர்கள் எதிர்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
மத்திய அரசு நடத்தும் தேர்வுகளைப் பார்க்கும் போது மாணவர்களுக்குத் தயக்கம் ஏற்படுகிறது. இதைப் போக்கும் வகையில் பல்வேறு வழிகாட்டி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

செய்முறைக் கையேட்டை மாணவர்கள் தனியாரிடம் வாங்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையை மாற்றி அரசே செய்முறைக் கையேடுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
வட மாவட்ட ஆசிரியர்கள்: வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் காலம் வரை அவர்கள் தாற்காலிகப் பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவர்.

மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக மூன்று மாதங்களுக்கு தாற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும்.
தாற்காலிகப் பணியிடங்களுக்கான ஊதியம் எவ்வளவு என்பதை அரசு பரிசீலித்து விரைவில் அறிவிக்கும்.
வரைவுப் பாடம் தொடர்பாக அனைவரின் கருத்துகளும் கோரப்படும். யாருடைய கருத்துகளாக இருந்தாலும் அதில் நியாயம் இருந்தால் பரிசீலிக்கப்படும்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு: மத்திய அரசின் மாற்றங்களுக்கு ஏற்றாற்போன்று மாணவர்களை தமிழக அரசு தயார் செய்யும். தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளை மாணவர்கள் திறம்பட எழுதவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 32 மாவட்ட நூலகங்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்குரிய பாடங்களை கற்றுத் தர வல்லுநர்களை நியமிக்க உள்ளோம் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!