Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 27 May 2017

அரசுப்பள்ளிகளும் அசத்தலாம்- தலை நிமிர வைத்த தலைமையாசிரியை

முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அத்தனை மாணவர்களும் 30 நாட்களில் தமிழ் எல்லா எழுத்துகளையும் பிழையின்றி ஒலிக்க,எழுத,கற்பிக்க,கற்க scert யால் உருவாக்கப்பட்டு வரும் பிரமாண்டமான காணொலி பாடல் முன்னோட்டம்...

பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு.

ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.டி.ஓ.,க்களுக்கு, பிறப்பு, இறப்பு பதிவு செய்வது தொடர்பான, சிறப்பு பயிற்சி முகாம், வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது.

இது குறித்து, பிறப்பு, இறப்பு கூடுதல் பதிவாளரும், பொது சுகாதாரத் துறை இணை இயக்குனருமான, ஈஸ்வரன் கூறியதாவது: பிறப்பு, இறப்பை ஓராண்டுக்கு மேல் பதிவு செய்யாமல் இருந்தால், நீதிமன்ற அனுமதி பெற்றே, பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.

தற்போது, அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்.அதை, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்த பின், ஆர்.டி.ஒ., பிறப்பு, இறப்பை பதிவு செய்து, சான்றிதழ் வழங்குவார்.இவ்வாறு அவர் கூறினார்
-கல்விச்சிறகுகள்

தொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியீடு.

அரசாணை 93-நாள்-12.05.2017-பள்ளிக்கல்வி 2014-15 ஆம் கல்வியாண்டில் SSA இயக்கத்தின் தொடக்கப்பள்ளிகளிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 42நடுநிலைப் பள்ளிகளின் தொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது.

அரசு பஸ்களில் பழைய பாஸ்களில் பள்ளி மாணவர்கள் செல்ல அனுமதி

அரசு பஸ்களில், பழைய பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரலாம்' என்று, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, வழக்கம்போல், ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 'கொளுத்தும் வெயில் காரணமாக, ஜூன் 7ல் பள்ளிகள்திறக்கப்படும்' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்துள்ளார். இந்நிலையில்,ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பஸ் பாசை பயன்படுத்துவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது.

இந்நிலையில், இந்த கல்வியாண்டுக்கான பஸ் பாஸ், பள்ளிக்கூடம் திறந்த பின்தான் வழங்கப்படும்.வரும், 7ல் இருந்து பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்கள், பழைய பாசில் செல்லலாமா என்பதை அறிவதில் ஆர்வமாக உள்ளனர்.இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, பழைய பாசில், வரும் ஜூலைமாதம் இறுதி வரை சென்று வரலாம்' என்றனர்.

12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து வரப்போகும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முடிவு!

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஓவியம், உடற்கல்வி, கைத்தொழில் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பணிபுரிய தற்காலிக ஆசிரியப் பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் நிரப்பப் பட்டன. அந்த ஆசிரியர்களுக்கு முதலில் நிர்ணயிக்கப் பட்ட சம்பளத் தொகை ரூ.5000 அது பின்னர் 2007 ஆம் ஆண்டில் ரூ.7000 உயர்த்தப் பட்டது.

தற்போது இப்படி தற்காலிகமாக நியமிக்கப் பட்ட ஆசிரியர்களை நிரந்தரமாக்கி அவர்களுக்கும் நிரந்தர ஆசிரியர்களுக்குரிய வகையில் சம்பள உயர்வு, பணியிட மாற்றம், பணிச்சேவை ஊக்கத் தொகைகள் முதலியவற்றைப் பெற்றுத் தரும் வகையில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  
-கல்விச்சிறகுகள்

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள்: தமிழக அரசு ஊழியர் சங்கங்களுடன் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது ஜூன் இறுதியில் அரசுக்கு அறிக்கை தாக்கல்

அலுவலர் குழு நியமனம்

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு தமிழக அரசால் அலுவலர் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் முதல் கூட்டம் 16-ந் தேதியன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அலுவலர் குழுவின் உறுப்பினர்களான, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதயச்சந்திரன், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் ஸ்வர்ணா ஆகியோரும் உறுப்பினர் செயலாளர் உமாநாத்தும் பங்கேற்றார்கள்.

கருத்து கேட்க முடிவு

இக்கூட்டத்தில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள 7-வது ஊதியக் குழுவின் ஊதிய விகிதங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் குறித்த பரிந்துரைகள் குறித்தும், படிகள் பற்றிய பரிந்துரைகள் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பது குறித்தும், இவற்றின் அடிப்படையில் தமிழக அரசின் தற்போதைய ஊதியம் மற்றும் ஓய்வூதிய விகிதங்களை திருத்தி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டன.

தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி, 13.3.17 முதல் 15.5.17 தேதிவரை பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக, அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளை நேரடியாக சந்தித்து கருத்துகளை கேட்டறிய முடிவு செய்யப்பட்டது.

தொடங்கியது

அதன்படி, மே 26 மற்றும் 27-ந் தேதிகளில் அரசின் அங்கீகாரம் பெற்ற அனைத்து அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளையும், ஜூன் 2 மற்றும் 3-ந் தேதி அனைத்து அங்கீகாரம் பெறாத அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளையும் அலுவலர் குழு நேரில் சந்திக்க அந்தக் குழு முடிவு செய்தது.

இதையடுத்து அந்தந்த சங்கங்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்த கருத்து கேட்பு கூட்டம், சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை 9 மணிக்குத் தொடங்கியது.

2 நாட்கள் நடக்கும்

இந்தக் கூட்டத்துக்கு நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமை தாங்கினார். அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தினர், அலுவலர் குழு முன்பு ஆஜராகி, கோரிக்கை மனுவை வழங்கினர். பின்னர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

பின்னர் நிருபர்களுக்கு, க.சண்முகம் அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட 149 சங்கங்கள் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் 2 நாட்கள் கருத்து கேட்புகூட்டம் நடத்தப்படும். காலை மற்றும் மாலை வேளையில் இந்தக் கூட்டம் நடக்கும்.

அறிக்கை தாக்கல்

6-வது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைந்த பிறகு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும் என்று சங்கங்கள் கூறியுள்ளன. 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்போது ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் எங்களுக்குக் கிடையாது. அதை அரசுதான் முடிவு செய்யும். அனைத்து சங்கங்களுடன் பேசிவிட்டு ஜூன் மாத இறுதியில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

DSE - 01.08.2016 ன் நிலவரப்படி மாணவர்களின் அடிப்படையில் பணியாளர் நியமனம் செய்தல் சார்பு - செயல்முறைகள்!!ஓய்வூதியம் - மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையை (Aadhar Card) ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரகளின் வயது சான்று ஆவணமாக கருதுதல் - ஆணை வெளியிடுதல் - தொடர்பாக!
PF பங்கீட்டு அளவை 10 சதவீதமாக குறைக்க EPFO ஆலோசனை

ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தது ஊழியர்கள் தரப்பிலும், நிறுவன தரப்பிலும் தலா 12 சதவீத பணத்தை இ.பி.எப்(ஊழியர் சேம லாப நிதி திட்டம்), இ.பி.எஸ் (பணியாளர் ஓய்வூதியத் திட்டம்)மற்றும் EDLI (பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்புறுதித் திட்டம்) திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் நிறுவனம் முதலீடு செய்து வருகிறது. 

இந்த அளவீட்டை ஒய்வூதிய அமைப்பான இ.பி.எப்.ஓ, 10 சதவீதமாகக் குறைக்க ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான இறுதி முடிவு நாளை(மே-27) முடிவு செய்யப்பட உள்ளது. வளர்ச்சிக்கு உறுதுணை இந்த 10 சதவீதம் என்பது ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ கீழ் அளிக்கப்படும் பணத்தில் பிடிக்கப்படுவது.

12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படுவதன் மூலம் ஊழியர்களுக்கு அதிகமான பணம் கையில் கிடைக்கும் .இது நாட்டின் வளர்ச்சி உறுதுணையாக இருக்கும் என மத்திய தொழிலாளர் அமைச்சகம் இ.பி.எப்.ஓ அமைப்பிற்குப் பரிந்துரை செய்துள்ளது. இ.பி.எப்.ஓ தான் இதற்கான இறுதி முடிவு எடுக்கும்.

12 th CBSE RESULTS-சிபிஎஸ்இ தேர்வு முடிவு நாளை (28.05.2017)வெளியீடு.. கல்வி வாரியம் அறிவிப்பு

புதுடெல்லி : சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 24ந் தேதிவெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கருணை

மதிப்பெண் விவகாரத்தால் தேர்வு முடிவுகள் வெளியாக வில்லை. நாளை அல்லது நாளை மறு நாள் தேர்வு முடிவுகள் வெளியாகும்என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மார்ச் 12ம் தேதி தொடங்கிஏப்ரல் 9ம் தேதி வரை சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு நடந்தது. இந்ததேர்வை சுமார் 11 லட்சம் பேர் எழுதினர். சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் சுமார் 61 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
கருணை மதிப்பெண் மே 19ந் தேதி தேர்வு முடிவுகள்வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் மே 24ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்தஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்டகடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கும்முறையை சிபிஎஸ்இ ரத்து செய்வதாக அறிவித்தது.

நீதிமன்ற தீர்ப்பு இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் இதனை எதிர்த்துஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்தநீதிபதிகள் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் அதைரத்து செய்வது நியாமற்ற செயல் என உத்தரவிட்டனர்.

மதிப்பெண் வழங்க ஏற்பாடு இதையடுத்து நீதிமன்ற உத்தரவைஅமல்படுத்துவதற்காக சிபிஎஸ்இ இயக்குநர் சதுர்வேதி, மத்தியமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரைச்சந்தித்து பேசினார். கருணை மதிப்பெண் மாணவர்களுக்குவழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுளளன.

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு  நாளை மறுநாள் தேர்வு முடிவுகள்வெளியாகும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை www.cbse.nic.in , www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

அரசு பள்ளிகளில் 'பிளாஷ் கார்ட்'

அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, பல வண்ண, 'பிளாஷ் கார்ட்' அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன. பொதுத்தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிப்பு, பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு போன்ற, பல்வேறு நடவடிக்கைகள், பள்ளிக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதை தொடர்ந்து, தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் நர்சரி பள்ளிகளுக்கு நிகராக, கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஆங்கில மொழியில் பேச்சு மற்றும் எழுத்து பயிற்சிக்காக, பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இந்த நிலையை மாற்ற, அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் இருந்தே, ஆங்கில மொழி திறனை வளர்க்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, முதல் கட்டமாக, தொடக்கப் பள்ளிகளில், பிளாஷ் கார்ட் அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஆங்கில எழுத்து, பழம், காய்கறி, விலங்கு, பறவை போன்றவற்றின் பெயர்களை விவரிக்க, வண்ண படங்களுடன் கூடிய அட்டைகளை பயன்படுத்தி, வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!