Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 30 May 2017

பள்ளி கல்வி துறை: முதல்வர் ஆய்வு

பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து, முதல்வர் பழனிசாமி, நேற்று ஆய்வு செய்தார். 


அடுத்த மாதம், சட்டசபை கூட உள்ளது. இதையொட்டி, முதல்வர் பழனிசாமி, ஒவ்வொரு துறை வாரியாக, ஆய்வு நடத்தி வருகிறார். நேற்று, சென்னை, தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்தார். இதில், அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர் சண்முகம், பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

NEET - எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படும்

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படும் என்று சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் உள்ள நல வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் சுகாதார துறை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு முன்னதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்து கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே இருந்ததை விட கூடுதலாக 1000 எம்பிபிஎஸ் சீட்டுகள், முதுநிலையில் 305 எம்டிஎம்எஸ் சீட்டுகள் பெறப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இருந்த இடங்களை விட 25 சதவீதம் கூடுதல். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் கூடுதல் கவனம் செலுத்தும்படி அரசு கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை(இன்று) மருந்து சில்லறை விற்பனையாளர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். போராட்டம் நடத்தும் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எங்களுடைய வேண்டுகோளை ஏற்று, மாலை 6 மணி வரை நடக்க இருந்த போராட்டத்தை 4 மணி வரை நடத்துவதாக உறுதியளித்துள்ளனர்.

நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு 2 மத்திய அமைச்சகங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து, நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பூர்வ பதில்கள் மத்திய அமைச்சர்களிடம் அளித்துள்ளோம். 

அவர்கள் கூடுதல் விளக்கம் கேட்டுள்ளனர். அந்த பதில்களும் உறுதியாக அளிக்கப்படும். தொடர்ந்து டெல்லி சென்றும் வலியுறுத்துவோம். மருத்துவ மாணவர் சேர்க்கை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி  ஜூலை 2வது வாரத்தில் கலந்தாய்வு நடக்க வேண்டும். 

எனினும் பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அதன் பின்னர் மருத்துவ மாணவர் சேர்க்கை (எம்பிபிஎஸ்) குறித்து ஒரு வாரத்திற்குள் தெளிவான கருத்து வெளியிடப்படும். 

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த கோப்புகள் தங்களிடம் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழகத்திற்கு இந்தாண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை வரும் என்று நம்பிக்கை   உள்ளது.

இன்ஜினியரிங் படிக்க ஆன்லைன் பதிவுக்கு நாளை கடைசி நாள்

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இன்ஜினியரிங் படிப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்தவற்கு நாளை கடைசி நாளாகும்.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய அவணங்களுடன் ஜூன் 3ம் தேதிக்குள் தபால் மூலமோ நேரிலோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு ஜூன் 20ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது. அதைதொடர்ந்து ஜூன் 22ம் தேதி இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளது. ஜூன் 24ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், ஜூன் 27ம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் கவுன்சலிங் தொடங்குகிறது.

உடற்கல்வி ஆய்வாளர் நியமனம் - பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஐகோர்ட் புது உத்தரவு

தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கடந்த 1985 முதல் 1990 வரை உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த மோகன் குமார் உள்ளிட்ட 8 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

உடற்கல்வி ஆசிரியர்களாக 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளோம். நாங்கள் கிரேட் 1 உடற்கல்வி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளோம். கிரேட் 1 உடற்கல்வி இயக்குநர்கள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற தகுதியுள்ளவர்கள்.

கடந்த 2016 மே 10ம் தேதி பள்ளிக்கல்வி இயக்குநர் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் பதவி உயர்வு பெறுபவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடும், நேரடி நியமனம் 50 சதவீதமும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பதவி உயர்வு அடிப்படையில் எங்களுக்கு மாவட்ட உடற்கல்வி இன்ஸ்பெக்டர்கள் பதவியில் 50 சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும்.

ஆனால், பள்ளிக் கல்வித்துறை அந்த நடைமுறைகளை மறைத்துவிட்டு 2009 ஜூலை 10ம் தேதியிட்ட அரசாணையின் அடிப்படையில் கிரேட் 1 உடல்கல்வி இயக்குநர்களை மாவட்ட உடற்கல்வி இன்ஸ்பெக்டர்களாக நேரடியாக நியமனம் செய்து வருகிறார்கள். 

இதனால், எங்களுக்கு வரவேண்டிய 50 சதவீத வாய்ப்பு பறிபோகிறது. எனவே, மாவட்ட உடற்கல்வி இன்ஸ்பெக்டர்கள் நியமனம் தொடர்பான பள்ளிக்கல்வித் துறை இயக்குநரின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் கோமதிநாயகம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாவட்ட உடற்கல்வி இன்ஸ்பெக்டர்கள் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். 

கணினி ஆசிரியர்களின் வேலை வாய்ப்பு குறித்து CM CELL -அளித்த பதில்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!