Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 31 May 2017

அன்பாசிரியர் 37: லோகநாதன் - ஆதரவற்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்!

மாணவிகளுடன் அன்பாசிரியர் லோகநாதன்

சிறந்த ஆசிரியர் இருதயத்தின் வழியாய்ப் பாடம் நடத்துகிறார்; இயந்திரத்தின் வழியல்ல.

மாற்றுத்திறனாளி என்பவர் மனதளவில் ஊனமாக இல்லாமல் இருந்தால் போதும். மலையைக்கூட நகர்த்தலாம் என்று தன்னம்பிக்கை கீற்று விதைக்கிறார் அன்பாசிரியர் லோகநாதன். ஆசிரியப் பணி, மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகள், தன்னம்பிக்கை விருதுகள், தமிழ் விக்கிபீடியா பணி, அறக்கட்டளை வேலைகள், கல்வி சார்ந்த பயிற்சிகள் என்று சுழன்றுகொண்டே இருக்கிறார்.

அவரின் ஆசிரியப் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியர் தொடரில்...

''நான் படித்த மாற்றுத்திறனாளிகள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்ததால், மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். எங்களுக்கு ஏற்பட்ட சிரமம் அடுத்து வரும் தலைமுறைக்கு ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் ஆசிரியப் பணிக்கு வர முடிவெடுத்தேன்.

கும்பகோணம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இணைந்து படித்து, 2008-ல் வேலைக்கு சேர்ந்தேன். மூலனூர் அருகே, பட்டுத்துறை என்ற கிராமத்து நடுநிலைப் பள்ளியில் பணி கிடைத்தது. எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி ஆகிய செயல்முறைகளைப் பின்பற்றினேன். பாடங்கள் எடுப்பதோடு, கலை, கைவினை மற்றும் தொழிற்கல்விகளையும் கற்பித்தேன்.

சொந்த ஊரான ஈரோட்டில் இருந்து பள்ளி வெகு தொலைவில் இருந்ததால் சிரமப்பட்ட எனக்கு, இரண்டே மாதங்களில் மாற்றல் கிடைத்தது. ஆனால் கிராம மக்கள் என்னைப் போக அனுமதிக்கவே இல்லை. உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அரை மனதுடன் அனுப்பி வைத்தனர்.

அதே ஆண்டில் ஈரோடு, காவேரி வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பணியைத் தொடங்கினேன். அங்கே பாடங்களை பாடல்கள், கதை, கவிதை, விடுகதை வழியாகக் கற்பித்தேன். பாடத்தை நடத்தும் முன், மாணவர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று பேசியபிறகே பாடம் எடுக்கிறேன். கணிதப் பாடத்துக்கு ஆணிமணிச் சட்டங்கள், கூட்டல், கழித்தல் பலகைகளைப் பயன்படுத்துகிறேன். இதனால் மாணவர்கள் புரிந்துகொண்டு படிக்கின்றனர்.

சேவை உண்டியல்

வகுப்பறையில் 'சேவை உண்டியல்' ஒன்றை வைத்திருக்கிறோம். விருப்பமும், வசதியும் கொண்டவர்கள் இதில் இந்த ஜூன் மாதம் முதல் அடுத்த ஜூன் வரை காசு போடலாம். அடுத்த ஜூனில் உண்டியலைத் திறந்து அதிலுள்ள தொகையை மாற்றுத்திறனாளிகள் மையம், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நன்கொடையாக அளிக்கிறோம்.

வகுப்பறை நூலகம்

வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைகளை நானே கற்றுக்கொடுக்கிறேன். வகுப்பறையிலேயே நூலகம் அமைத்திருக்கிறோம். மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து குறைந்தபட்சம் ஒரு கதை புத்தகத்தைக் கொண்டு வருவார்கள். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு, நூலகத்தில் வைக்கப்படும். அத்துடன் ஊரில் இருக்கும் நூலகத்தில் மாணவர்களை உறுப்பினராக்கி விடுவதால், போட்டிகளின்போது யாரையும் சார்ந்திருக்காமல் மாணவர்களே தங்களைத் தயாரித்துக் கொள்கின்றனர்.

கணிதப் பாடத்துக்கு அரசு வழங்கியுள்ள உபகரணங்கள் அடங்கிய கணிதப் பெட்டியைப் பயன்படுத்துகிறோம். அறிவியலுக்குப் பரிசோதனைப் பெட்டி. இதில் நானே வடிவமைத்த சோதனைப் பொருள்கள் இருக்கும். மாற்றுத்திறனாளி மாணவர்களின் வலிஎனக்குத் தெரியும் என்பதால், அவர்கள் மீது கூடுதல் கவனம் வைத்துப் பாடம் கற்பிக்கிறேன்.

ஆதரவற்ற மாணவர்களுக்கு வழிகாட்டல்

2015-ம் ஆண்டு 32 நாடுகள் பங்குபெறும் 'டிசைன் ஃபார் சேஞ்ச்' போட்டிக்கு ஈரோட்டில் இருந்து நான் தேர்வானேன். அதில் அம்மாவோ, அப்பாவோ அல்லது இருவருமோ இல்லாமல் நிராதரவாக இருக்கும் மாணவர்களுக்கு உதவலாம் என்று தோன்றியது. போட்டிக்காக, 'பெற்றோரை இழந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்' எனும் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். அத்தகைய குழந்தைகள் 52 பேர் எங்கள் பள்ளியில் படித்தனர். குறுகிய காலமே இருந்ததால் ஐவரின் வாழ்க்கையை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டேன்.

தினமும் வீடுகளுக்குப் பால் பாக்கெட் போட்டுவிட்டுப் பள்ளிக்கு வரும் தினேஷ் குமார், பெற்றொர் இல்லாமல் இளநீர் வெட்டும் கனகவேல், அம்மா சுடும் முறுக்குகளை விற்பனை செய்துவிட்டு வரும் ஷர்மிளா, யாழினி மற்றும் ஒரு மாணவர் என 5 பேரின் வாழ்வை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டேன். அதை வீடியோவாகப் பதிவு செய்து யூடியூபில் வெளியிட்டேன். அதைப் பார்த்து ஏராளமான உதவிகள் குவிந்தன.காணொலியைக் காண: வீடியோ

ஈரோடு தனியார் துணிக்கடையில் பணிபுரியும் ஒருவர் தன்னுடைய ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள நிலத்தை எங்கள் பள்ளிக்கு அளித்தார். அங்கே ஆசிரமமோ, மாணவர்களுக்கான விடுதியோ கட்ட முடிவு செய்துள்ளோம். அதற்குத் தேவையான நிதியைத் திரட்டிக்கொண்டிருக்கிறோம். முழுமையான நிதி கிடைக்காததால் பணி தொடங்கப்படவில்லை.

நம் மகன், மகளுக்காக யார் யாரோ உதவுகிறார்களே, நாம் ஏன் உதவக்கூடாது என்று சில பெற்றோர்கள் நினைத்தனர். 2016-ம் ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளில் 'பெற்றோராய் வழிகாட்டும்' அறக்கட்டளை துவங்கப்பட்டது. இதன்மூலம் மாணவர்களுக்கு உடை, புத்தகங்களை வாங்கிக் கொடுக்கிறோம். தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள் என அனைத்திலும் பெற்றோர்களே பதவியில் இருக்கின்றனர். நிதியளிக்க முடியாமல் இருந்தாலும், தங்கள் உடலுழைப்பைக் கொடுக்கின்றனர்.

எதிர்காலத் தேவைகளும் திட்டங்களும்

எங்கள் பள்ளியில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உட்கார சிறப்பு நாற்காலிகளும், விளையாட்டுப் பொருட்களும் வாங்கவேண்டும். மற்ற மாணவர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் போதவில்லை. முதலுதவிப் பெட்டிகளும் தேவைப்படுகிறது. மதிப்பெண்களைத் தாண்டி தொழிற்கல்வியை மாணவர்களிடையே அறிமுகப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்கள் தலைசிறந்த மாணாக்கர்களாக வெளியே செல்ல வேண்டும். தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும் நிலை மாறவேண்டும்.

மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் அதைப்பற்றி என்றுமே நான் யோசித்ததில்லை. தன்னம்பிக்கையுடன் இருப்பதையே என்னுடைய பலமாகக் கருதுகிறேன். இவை அனைத்தும் காரணமான என் பெற்றோர்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்'' என்று புன்னகைக்கிறார் அன்பாசிரியர் லோகநாதன்.

-கல்விச்சிறகுகள்

க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு:ramaniprabhadevi.s@thehindutamil.co.in

ஆசிரியர் லோகநாதனின் தொடர்பு எண்:9486937172

பள்ளி திறக்கும் முன் செய்யவேண்டிய ஆயத்தப்பணிகள் ,பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு !!

முக்கியச் செய்தி !! ஜுன் 6 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்..

தந்தி TV:-முடிந்தது கோடை விடுமுறை, இயக்குநர் அதிரடி உத்தரவுஆசிரியர்கள் ஜீன் 6 வரை விடுமுறை என கருதக் கூடாது. நாளை முதல் பள்ளிக்கு சென்று மாணவர்கள் சேர்க்கை, மாணவர்களை வேறு பள்ளிக்கு விடுவித்தல் , இலவச பொருட்கள் பெற்றுக் கொண்டு வழங்கப்பட்ட பொருட்களை சரிபார்த்தல் போன்ற பணிகளை துவங்க வேண்டும். அனைத்துஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்ததை பள்ளி தலைமையாசிரியர் மூலம் உயர் அதிகாரிகள் உறுதி படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வி மற்றும் பள்ளி கல்வி  இயக்குநர்கள் உத்தரவு ..

பள்ளிக்கல்வி இயக்குனர் & தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு.

SOURCE:- THANTHI TV..

தமிழக அரசில் உதவி பேராசிரியர் வேலை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது மாநில அரசு நிறுவனமாகும். இதன் தலைமையகம் தற்போது தலைநகர் சென்னையில் உள்ள பார்க் டவுனில் செயல்பட்டு வருகிறது.

1929 முதல் செயல்பட்டு வரும் இந்த தேர்வாணையம், தமிழகத்தின் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை எழுத்து தேர்வு, நேர்காணல், உடல் பரிசோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களை பணியமர்த்தல் இதன் பணியாகும்.

தற்போது, 13 உதவி பேராசிரியர் (கதிரியக்க இயற்பியல்) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Professor (Radiology Physics)

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5,400

தகுதி: எம்.எஸ் மருத்துவ இயற்பியல் அல்லது கதிரியக்க இயற்பியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன், ஆஃப்லைன் முறைகளில் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2017

கட்டணம் செலுத்த கடைசி தேதி: 16.06.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tnpsc.gov.in/notifications/2017_12_not_eng_asst_prof_radiology.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

TRB- முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் பணிபுரியும் இதர ஆசிரியர்களுக்காக 10% இடஒதுக்கீடு.

TRB- பத்திரிகைச் செய்தி- முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் பணிபுரியும் இதர ஆசிரியர்களுக்காக 10% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே இடைநிலை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் எவரேனும் இப்பணி தேர்விற்கு விண்ணப்பித்திருந்தால் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் கொண்டு தங்களது பணி விவரத்தை www.trb.tn.nic.in இணையத்தில் update செய்யவும்!!

நீட் தேர்வின் தாக்கத்தால் எம்பிபிஎஸ் படிக்க பிலிப்பைன்ஸுக்கு செல்லும் மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்று ஆவலாக இருந்த தமிழக மாணவர்களை ‘நீட்’ தேர்வு கவலையடையச் செய்துள்ளது.
‘நீட்’ தேர்வால் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவு வதால் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளவர்கள் பிலிப் பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ள னர்.இது தொடர்பாக லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவன இயக்குநர் முகமது கனி கூறியதாவது:சீனா, ரஷ்யா பல்கலைக்கழகங்களில் ஓராண்டுக்கு அந்த மொழிகளை கற்க வேண்டியிருப்பதாலும், கடுங்குளிர் காரணமாகவும் நம் நாட்டைப் போன்ற சீதோஷ்ண நிலை, ஆங்கில வழிக்கல்வி, அமெரிக்க மருத்துவப் படிப்பை தரும் பிலிப்பைன்ஸ் நாட்டு மருத்துவக் கல்லூரிகளை நம் மாணவர்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.பிலிப்பைன்ஸில் இயங்கும் தவோ மருத்துவக் கல்லூரி, லைசியம் நார்த் வெஸ்டர்ன் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு லிம்ரா நிறுவனம் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக விளங்கு கிறது. நம் மாணவர்கள் 600 பேரை லிம்ரா இங்கு சேர்த்து மருத்துவம் பயிலச் செய்துள்ளது.

தவோ மற்றும் லைசியம் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி, தேர்வு, விடுதி கட்டணம், பயணம், இதர செலவுகள் உட்பட முறையே ரூ.32 லட்சம் மற்றும் ரூ.28 லட்சம் வரை செலவாகும். கல்விக் கட்டணத்தை தவணையிலும் செலுத்தலாம்.லிம்ரா மூலம் அங்கு கல்வி கற்க செல்பவர்களுக்கு உதவுவதற்காக தவோ நகரில் ஓர் அலுவலகம் லிம்ரா சார்பில் இயக்கப்படுகிறது. படிக்கும் மாணவர்கள் இந்தியா திரும்பியவுடன் எழுத வேண்டிய எம்.சி.ஐ. தகுதித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை லிம்ரா மாணவர்கள் 3 மற்றும் 4-ம் ஆண்டு படிக்கும்போதே பெறலாம்.

இந்த கல்வியாண்டில் லிம்ரா மூலமாக பிலிப்பைன்ஸில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள எம்.சி.ஐ. பயிற்சி வகுப்புகளை லிம்ரா இலவசமாக வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு: லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன், 177, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, எஸ்.எம்.எஸ். சென்டர், மைலாப்பூர், சென்னை-4. தொலைபேசி: 9445483333/ 9445783333/9444615363.

22 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு..அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: திருச்சி, நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த மாவட்ட கலெக்டர்கள், துணை ஆணையர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாற்றப்பட்டவர்கள் விவரம்:

திருச்சி மாவட்ட கலெக்டராக கே.ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.திருப்பூர் மாவட்ட கலெக்டராககலெக்டராக கே.எஸ்.பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.நாகை மாவட்ட கலெக்டராக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக சாந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.நெல்லை மாவட்ட கலெக்டராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.நெல்லை கலெக்டராக இருந்த கருணாகரன் வேளாண் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.மீன்வளத்துறைக்கு புதிய ஆணையராக தண்டபாணி நியமிக்கப்பட்டுள்ளார்.மீன் வளத்துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ் நகர மேம்பாட்டுத் துறைக்கு மாற்றம்போக்குவரத்து துறை புதிய செயலராக டேவிடார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் பி. நாயர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுஅனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.மதுரை மாநகராட்சி ஆணையராக அனீஸ் சேகர் நியமனம்.

தனி ஊதியம் 750 ஐ 1.1.2006 லிருந்து வழங்க கோரும் மனுவிற்கு நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களின் பதிலை கோரும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் கடிதம் ..!!

இலவச புத்தக பை நிறத்தில் அதிரடி மாற்றம் , பிங்க், நீலம், கருப்பு வண்ணத்தில் தயாராகிறது

கல்வி அமைச்சர் வீட்டில் குவிந்த மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள்..

அரசுப்பள்ளி ஒன்றின் - மாணவர் சேர்க்கை - விளம்பர அறிவிப்பு.

பள்ளிக்கல்வி - 01.06.2017 நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - பாடவாரியராக கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம் - இயக்குனர் செயல்முறைகள்


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!