Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 1 June 2017

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய சேவை கட்டணங்கள் அமலுக்கு வந்தது

பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு சேவைகளுக்கு அறிவித்துள்ள புதிய கட்டண விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதுவரை இலவமாக அளிக்கப்பட்டு வந்த ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடி பணபரிமாற்ற சேவைக்கு இனிமேல் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஒரு லட்சம் ரூபாய் வரை 5 ரூபாய் சேவை வரி வசூலிக்கப்படும். 2 லட்சம் ரூபாய் வரை 15 ரூபாய், 5 லட்சம் ரூபாய் வரை 25 ரூபாய் என கட்டணம் இருக்கும்.அதேபோல் ஏ.டி.எம். கார்டுகளை பொறுத்தவரை ரூபே கார்டுகள் மட்டுமே இலவசம்.

இதர கார்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஏ.டி.எம்.களில் மாதந்தோறும் 4 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் பணம் எடுக்க முடியும், அதற்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு சொந்த கணக்கு இருக்கும் கிளையில் 50 ரூபாயும், ஏ.டி.எம்.ல் 10 ரூபாயும், இதர வங்கிகளின் ஏ.டி.எம்.களில் தலா 20 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். 10 காசோலைகள் உள்ள புத்தகத்திற்கு 30 ரூபாயும், 25 காசோலைகளுக்கு 75 ரூபாயும், 50 காசோலை உள்ள புத்தகத்திற்கு 150 ரூபாயும்கட்டணமாக செலுத்த வேண்டும்.இவற்றிற்கு சேவை வரியும் உண்டு. அதேபோன்று ஸ்டேட் வங்கி யின் வட்டி எனப்படும் ஸ்மார்ட் போன் செயலில் நடத்தும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TC - CLEAR COPY

09/07/2017 மற்றும் 23/07/2017 ஆகிய இரு தினங்களில் வாக்காளர் சிறப்பு முகாம்..

12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் வெளியீடு - தேர்வுத் துறை அறிவிப்பு.

சட்ட படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பம் !!

மூன்று புதிய கல்லுாரி கள் உட்பட, ஒன்பது அரசு சட்டக் கல்லுாரிகளில், விண்ணப்ப வினியோகம், நாளை துவங்குகிறது.        தமிழகத்தில், ஆறு அரசு சட்டக் கல்லுாரி கள் செயல்பட்டு வந்த நிலையில், விழுப்புரம், தர்மபுரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில், புதிய சட்டக் கல்லுாரிகள் துவங்கப்பட உள்ளன.

இவை உட்பட, ஒன்பது கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை, அம்பேத்கர் சட்ட பல்கலை துவக்கியுள்ளது. இந்த ஆண்டு, எந்த வயதைச் சேர்ந்தவர்களும், சட்டம் படிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள், நாளை முதல் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னை, அடையாறில் உள்ள சட்டப் பல்கலை மற்றும் அந்தந்த சட்டக் கல்லுாரிகளில், உரிய கட்டணம் செலுத்தி, விண்ணப்பங்களை பெறலாம். 
மூன்று புதிய கல்லுாரிகளுக்கு, கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்பம் கிடைக்கும். ஐந்தாண்டு பி.ஏ., - எல்.எல்.பி., படிப்புக்கு மட்டும், இன்று முதல், 23 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். மூன்றாண்டு படிப்புக்கு, ஜூன், 7 முதல், 17 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 
ஐந்தாண்டு படிப்புக்கு, பிளஸ் 2வும்; மூன்றாண்டு படிப்புக்கு, இளநிலை பட்டப் படிப்பும் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்களை, http://tndalu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மாநில அளவிலான செஸ் போட்டி : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல் !!

பணி விடுவிப்பு மற்றும் பணியில் சேருதல் விண்ணப்பம் 

அரசு ஊழியர்களின் பொது சேமநல நிதி கணக்கு அறிக்கையை மாநில கணக்காயர் அலுவலகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 2016-17-ம் ஆண்டுக்கான பொது சேமநல நிதி வருடாந்திர கணக்கு அறிக்கையை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைத்தளத்தில் இம்மாதம் முதல்வாரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக முதுநிலை துணை மாநில கணக்காயர் (நிதி) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் 2016-2017-ம் ஆண்டுக்கான பொது சேமநல நிதி வருடாந்திர கணக்கு அறிக்கைதமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைத்தளத்தில் (www.agae.tn.nic.in) இம்மாதம் (ஜூன்) முதல் வாரத்தில்பதிவேற்றம் செய்யப்படும்.பொது சேம நல நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே சந்தாதாரர்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து தங்களின் 2016-2017 வருடாந்திர கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செங்கோட்டையன் - உதயசந்திரன் கூட்டணி: ரேங்க் முறை ஒழிப்பு முதல் ஒளிவுமறைவற்ற பணிமாறுதல் கலந்தாய்வு வரை - கலக்கும் பள்ளிக்கல்வித்துறை

லஞ்சத்தை ஒழிக்க CEO, DEEO அலுவலகங்களில்  நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாரை சீருடையில்லாமல் பணியில் அமர்த்தியிருக்கிறாராம் அமைச்சர்  செங்கோட்டையன்"

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே இருக்கும் குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ளது தென்னை மரங்கள் சூழ்ந்த அந்த பிரமாண்ட வீடு. சனி, ஞாயிறு என்றாலே காலை ஏழு மணியில் இருந்தே அந்த வீட்டில் ஜன நடமாட்டம் தொடங்குகிறது. வெயில் ஏற ஏற அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் கூட்டமும் அதிகரிக்கத் தொடங்குகிறது. அதுதான் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் வீடு.




எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டவுடன் அவரது அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி ஏற்றவர் செங்கோட்டையன். கோபிச் செட்டிப்பாளையம் தொகுதியில் இதுவரை எட்டு முறை வெற்றி பெற்றவர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகச் சென்னையில் தனது அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வெள்ளி இரவு புறப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை கோபி வீட்டுக்கு வந்துவிடுகிறார். அவர் எழுந்து வாக்கிங் வரும்போதே மக்கள் கையில் மனுக்களோடும், கோரிக்கைகளோடும் வீடு தேடி வந்துவிடுகின்றனர்.

கைலி பனியனோடு காட்சியளித்தபடியே மனுக்களை வாங்கி தனது உதவியாளர்களிடம் கொடுக்கும் செங்கோட்டையன், எந்தெந்த துறைக்கு மனுக்கள் வந்திருக்கிறது என்பதையும் துறை வாரியாக பிரித்து அந்தந்த துறைகளுக்குத் தனது பரிந்துரையோடு அனுப்பி வைக்கிறார். இப்படியே சுமார் பதினோரு மணி வரை மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொள்ளும் செங்கோட்டையன், மேலும் அந்தந்த வார நாள்களில் நடந்த சுப, துக்க நிகழ்ச்சிகளின் பட்டியலோடு கிராமம் கிராமமாகப் புறப்பட்டு விடுகிறார்.

“தமிழக அமைச்சர்களிலேயே ஓர் அமைச்சரின் வீட்டில் இத்தனை ஆயிரம் பேர் வாராவாரம் கூடுகிறார்கள் என்றால் அது செங்கோட்டையன் வீட்டில்தான்” என்று அதிமுக-வினரே கூறுகிறார்கள்.



மேலும், “அமைச்சர் ரொம்ப சீனியர். இடையில் புறக்கணிக்கப்பட்டு இருந்தார். அப்பக்கூட அவர் வீட்டுக்கு ஜனங்க வந்துகிட்டுதான் இருப்பாங்க. இப்பவும் வர்றாங்க. மக்கள் அவரை எப்போதும் ஒரே மாதிரிதான் பாக்குறாங்க” என்கிறார்கள் லோக்கல் அதிமுக நிர்வாகிகள்.

கோபியில் இப்படி என்றால்... சென்னையிலும் அவரது பள்ளிக்கல்வித்துறையிலும்கூட செங்கோட்டையனுக்கு இன்னும் அதே முக்கியத்துவம் இருக்கிறது.

“பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சர் செங்கோட்டையன் என்றதுமே இவர் அங்கே என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எல்லாருக்கும் எழுந்தது. மேலும் கடந்த ஆறு வருடங்களாக பள்ளிக்கல்வித்துறை ராசியில்லாத துறையாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது அமைச்சர் செங்கோட்டையனும், துறையின் செயலாளர் உதயசந்திரனும் சேர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மிக முக்கியமான ஆக்கபூர்வமான மாற்றங்களை செய்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்துகே ராசியான துறையாக அதை மாற்றிவிட்டார்கள்.

உதயசந்திரன் மிகவும் நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர். அவரை அழைத்த அமைச்சர் செங்கோட்டையன், ‘நான் அமைச்சர் ஆவேன்னு எல்லாம் எதிர்பார்க்கலை சார். என்னால உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை முன்னேற்ற என்ன நடவடிக்கை எடுக்கணுமோ... அதைச் சொல்லுங்க. நல்லதை செய்வோம்’என்று கூறியிருக்கிறார்.

அதன் விளைவாகத்தான்... தேர்வு முடிவுகளில் ரேங்க் ஒழிப்பு, பதினோராம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, சீருடைகள் மாற்றம் என்று பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் அணி வகுக்கின்றன.

தர வரிசை முறையை ஒழித்ததைத் திரும்பப் பெற வேண்டும் என்று கொங்கு மண்டலத்தை சேர்ந்த கல்வி நிறுவன அதிபர்கள் ‘உரிமையோடு’ அமைச்சரை கோபி வீட்டிலும் கோட்டையிலும் சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால், அந்த மனுவை வாங்கி அவர்களுக்கு எதிரிலேயே கிழித்துப் போட்டுவிட்டாராம். 

மேலும், ஆசிரியர் இட மாறுதல்கள் இந்த வருடம் எந்த குழப்பமும் இல்லாமல் நேர்மையாக நடந்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் செங்கோட்டையன் – உதயசந்திரன் கூட்டணிதான்” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்டக்கல்வி அலுவலகம், முதன்மைக்கல்வி அலுவலகங்களில் எங்கும் எதற்கும் லஞ்சம் பரிமாற்றப்படக் கூடாது என்பதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாரை சீருடையில்லாமல் பணியில் அமர்த்தியிருக்கிறாராம் செங்கோட்டையன்.

பள்ளிக்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

➤கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது.

➤அடுத்து கல்வியாண்டில் இருந்து 11ம் வகுப்புக்கு பொது தேர்வு

➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறையைக் கைவிடப்பட்டது.

➤தேசிய அளவில் நடைபெறும் தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

➤மாணவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கக்கூடாது என்பதற்காக தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நடைமுறை ரத்து.

➤ஒரு கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு

➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் வழிகாட்டி கையேடு வழங்கப்படுகிறது.

➤ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,119 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உட்பட 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும்

➤ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றில் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு,இணையம் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

➤நீட் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த அடுத்த ஆண்டிலிருந்து பயிற்சி அளிக்க ஆலோசனை.

➤ரூ 26,913 கோடி பள்ளிக்கல்விக்கு ஒதுக்கீடு.

➤பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் பெயர்களை விளம்பரப்படுத்தக் கூடாது.

➤பாடத்திட்டத்தில் யோகா சேர்க்கப்பட உள்ளது.

➤சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்கத் திட்டம்.

➤கட்டாய கல்வி இடஒதுக்கீட்டில் 40 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று +2 பொதுத் தேர்வு முறையில் பல மாற்றம் கொண்டுவரப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி,

➤மாணவர்களின் மன அழுத்தம் குறையும் வகையில் அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் 200-ல் இருந்து 100ஆக குறைப்பு.

➤3 மணியில் இருந்து 2.30 மணியாக தேர்வு நேரமும் குறைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

➤வகுப்புக்கு ஏற்றவாறு சீருடைகள் மாற்றப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் பள்ளிகள் தொடங்கும் முன்பே அரசாணையாக வெளியிடப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

செங்கோட்டையன் - உதயசந்திரன் கூட்டணியால் மக்களுக்கும், மாணவர்களுக்கும் நன்மை தொடரட்டும்.

SCERT - தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி கட்டகங்கள் ( 2017 - 18 ) வடிவமைத்தல் - முதன்மைக் கருத்தாளர்கள் பெயர் பட்டியல் தெரிவு செய்து அனுப்புதல் சார்ந்து - SCERT இயக்குநர் செயல்முறைகள்!! 

மினிமம் பேலன்ஸ் கணக்கிடுவது எப்படி?ஓர் அலசல் !!

வங்கிக் கணக்கில் தினமும் ரூ.5000 வைத்திருப்பது அவசியமா?
வங்கிக் கணக்கில் 'குறைந்த சராசரி இருப்புத்' தொகையாக
ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1000 வரை வைத்திருக்க வேண்டியதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.
இதே சில தனியார் வங்கிகள் உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் குறைந்த சராசரி இருப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். தவறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*இந்த விதிமுறை பலரால் சரியாக புரிந்து கொள்ளப்பட்டாலும், கணக்கு வைத்திருக்கும் சிலருக்கு இது மிகுந்த குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது* அதாவது, வங்கிக் கணக்கில் எப்போதுமே 5 ஆயிரம் ரூபாய் இருப்பு இருக்க வேண்டுமா? ஒரு நாள் கூட 5 ஆயிரத்தில் இருந்து 1000 ரூபாய் எடுத்துவிட்டாலும் அபராதம் விதிக்கப்படுமா? குறைந்த மாத ஊதியம் பெறுவோர் இதனை எப்படி எதிர்கொள்வது என்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

⛱ முதல் விஷயம் என்னவென்றால், குறைந்த *சராசரி இருப்புத் தொகை ரூ.5000 என்பது சரியாக புரிந்து கொள்ளப்படாததே* இதற்குக் காரணம்.
அதாவது குறைந்த சராசரி இருப்புத் தொகை என்றால், *ஒரு மாதம் முழுவதும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தின் சராசரி இருப்புத் தொகையாகும்.* வங்கிக் கணக்கில் ஒவ்வொரு நாளும் இருக்கும் பணத்தை அதாவது *30 நாளும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைக் கூட்டி அதனை 30 அல்லது 31 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகைதான் குறைந்த சராசரி இருப்புத் தொகை*யாகும். இந்த ஈவுத் தொகை ரூ.10,000 ஆக இருந்தால், மாதக் கடைசியில் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2000 அல்லது அதற்கும் கீழ் இருப்பு குறைந்தாலும், எந்த அபராதமும் விதிக்கப்படாது.

உதாரணத்துக்கு...
உங்களது சம்பளம் 30 ஆயிரம் ரூபாயாக இருந்து, *மாதத்தின் முதல் நாளில் இருந்து 5 நாட்களுக்கு அந்த 30 ஆயிரத்தை எடுக்காமல் விட்டுவிட்டால் ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் இருந்ததாகக் கணக்கில் எடுக்கப்படும். எனவே, 30 ஆயிரம் ரூபாய், 5 நாட்கள் வைத்திருந்ததால் 5 ஆல் பெருக்கப்படும். அது ரூ.1,50,000/-. இந்த தொகையை 30 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகை ரூ.5000. எனவே, அந்த மாதத்தின் குறைந்தபட்ச சராசரி இருப்புத் முதல் 5 நாட்களிலேயே பூர்த்தியாகிவிடுகிறது.* அதன்பிறகு நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5000க்கும் குறைவாகப் பணம் வைத்திருந்தாலும் அதற்காக அபராதம் வசூலிக்கப்படாது.
இந்த அடிப்படையில் தான் குறைந்தபட்ச இருப்புத் தொகை கணக்கிடப்படுகிறது. எனவே, *ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை* என்பது புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளத்தின் அளவைப் பொருத்து ஓரிரு நாட்கள் கூடுதலாகவோ, குறைவாக பணத்தை வைத்திருந்தாலே அபராதத்தைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை.
அதோடு, *மாநகராட்சிகளில் இயங்கும் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே ரூ.5000 என்பது குறைந்த சராசரி இருப்புத்தொகை அவசியம். நகராட்சி மற்றும் கிராமப் புற வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 என்பதுதான் குறைந்த சராசரி இருப்புத் தொகையாகும்.*

இது தவிர, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் *சில சலுகைகள் வழங்கப்படுகிறது.*
அதாவது, எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆனால், வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் *எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது.* அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனரக தகவல்!

தமிழக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1-8 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 

மாற்று சான்றிதழ் தான் வழங்க வேண்டும் என ஆணை வெளியிட்டுள்ளது.

       ஆகவே *மாற்றுச் சான்றிதழ் (Transfer certificate) மாதிரி அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்டவுடன்,*

*மாற்றுச் சான்றிதழே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.*

*பதிவுத்தாள் (RECORD SHEET) வழங்கப்பட கூடாது.

TNPSC இணையதளத்தில் ஜாதிகள் பட்டியலில் மாற்றம்

போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவில், ஜாதிகளின் பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வு களில் பங்கேற்க, அதன் இணையதளத்தில், ஒருமுறை பதிவு முறையில், ஆன்லைனில் தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.

இதில், தேர்வரின் அனைத்து விபரங்களையும் பதிவுசெய்ய வேண்டும். இதில், முந்தைய, 'குரூப் - 2' தேர்வு அறிவித்த போது, ஒருமுறை பதிவுபட்டியலில் இருந்த,நத்தமன், மலையமன் ஆகிய ஜாதிகளின் பெயர், தற்போதைய தேர்வின் போது இல்லை என, தேர்வர்கள் தெரிவித் தனர். இது குறித்து, நமதுநாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. செயலர், விஜயக்குமார் அனுப்பிய விளக்கத்தில், 'தேர்வர்கள் குறிப்பிடும் நத்தமன், மலையமன்ஆகிய இரு , ஜாதிகளும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், பார்கவகுலம் பட்டியலில் இணைக்கப் பட்டு உள்ளது. 'எனவே, தேர்வர்கள் பார்கவ குலத்தில் தங்கள் ஜாதிகளைப் பார்த்து விண்ணப்பிக்க லாம்' என தெரிவித்துள்ளார்.

TNTET 2013 ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தற்காலிக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Graduate Assistants - 2016

CERTIFICATE VERIFICATION LIST

Click here for Individual Candidate Query

Click here for Provisional List of Candidates Called for Certificate Verification

Click here for - Information 

Dated:31-05-2017

Chairman

Home

PAY COMMISSION|சம்பளம் மற்றும் படிகளுக்கான சீராய்வு 2017 - சம்பள ஏற்ற முறை / சிறப்பு சம்பளம் மற்றும் படிகள் - ஊதியக்குழுவிற்காக விவரம் கேட்டு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!



எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!