Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 3 June 2017

10 வருடங்களாக பயன்படாத குளம்... மீட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்..! நிஜ நாயகன்

10 வருடங்களாக பயன்படாத குளம்... மீட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்..! நிஜ நாயகன்

'அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ராஜபோக வாழ்க்கைய்யா... பள்ளி நடக்கும் நாள்களில் வாரத்தில் இரண்டு நாள்கள் லீவு... கோட்டையில் இரண்டு மாசம் லீவு... பத்தாததுக்கு மெடிக்கல்

லீவு வேற..." என்றுதான் சக மனிதர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களை மதிப்பீடு செய்வார்கள். ஆனால், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது பள்ளி உள்ள ஊரில் 10 வருடங்களாகத் தண்ணீர் நிரம்பாமல் வறண்டு கிடந்த குளத்தைப் பள்ளி மாணவர்கள் 200 பேரைக் கொண்டு கோடை விடுமுறையில் நான்கடிக்குக் குளத்தில் மண்ணைத் தூர் வாரி, தண்ணீர் நிரப்ப வழி செய்திருக்கிறார். இதனால், அந்த ஊர் மக்கள் குளிக்கவும் ,கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்கவும் வழிவகை செய்திருக்கிறார்.

கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது பழைய ஜெயங்கொண்டம். இந்தக் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியரான மலைக்கொழுந்தன் என்ற ஆசிரியர்தான் பள்ளி மாணவர்களைக் கொண்டு இந்தக் கோடை லீவில் குளத்தைத் தூர் வாரி தண்ணீர் சேமித்திருக்கிறார். அதோடு, குளத்தைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு மாணவர்களின் உதவியாேடு பராமரித்து வருகிறார்.

ஆசிரியர் மலைக்காெழுந்தனிடமே பேசினாேம்.

"எங்க பள்ளி தலைமை ஆசிரியர்,'மாணவர்களைக் கல்வியில் மட்டுமில்ல,பாெதுச்சிந்தனை அதிகம் காெண்ட நபர்களாகவும் மாற்றனும்'ன்னு அடிக்கடி சாெல்வார். அதன்படி,கிராமத்திலுள்ள சீமை கருவேலம் மரங்களை சனி, ஞாயிறு விடுமுறைகளில் அழித்தாேம். இந்தப் பழைய ஜெயங்காெண்டம் கிராமம் வறட்சி மிகுந்த கிராமம். விவசாயம் பார்க்கத் தண்ணீர் கிடையாது. அதாேடு, குடிக்கவும்,குளிக்கவும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அல்லாடிப் பாேனாங்க. ஊர்ல உள்ள கிணறுகள், குளங்களெல்லாம் வத்தி பாேயிட்டு. ஊர் மையத்தில் ஆளவந்தீஸ்வரர் காேயிலுக்கு முன்பு உள்ள பெரிய குளம் தூர்ந்து பாேய் சும்மாவே கிடந்துச்சு. சில குடிமகன்கள் இந்தக் குளக்கரையில் இரவுகளில் குடிச்சுப்புட்டு அந்தக் காலி பாட்டில்களைக் குளத்துக்குள்ள எறிஞ்சாங்க. அதாேட, குப்பைகளையும் காெட்டுற இடமா இதை மாத்தி வச்சுருந்தாங்க. கடந்த பத்து வருஷமா இந்த குளத்தில் தண்ணீர் நிறையலை. இதனால், கால்நடைகளுக்கும் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அல்லாடிப் பாேனாங்க.

இந்த காேடை லீவை பயன்படுத்தி, மாணவர்களைக் கொண்டு குளத்தை தூர் வாரி தண்ணீரை சேமிக்கனும்ன்னு முடிவெடுத்தேன். ஊர்மக்கள்கிட்ட கேட்டதுக்கு,'அந்தக் குளத்துல என்னதான் தூர் வாரினாலும் தண்ணீர் தேங்கி நிக்காது. ஏன்னா, அந்த குளத்தாேட மண் தன்மை அப்படி'ன்னு அவநம்பிக்கையா சாென்னாங்க. உடனே, இதை நான் சவாலா எடுத்துக்கிட்டு, மாணவர்களிடம் பேசினேன். அவங்க சரியா முதல்ல ரெஸ்பான்ஸ் பண்ணலை. அப்புறம்தான் இப்ப உள்ள கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்காக எப்படி பாேராடினார்கள்ன்னு பல வீடியாேக்களைப் பாேட்டுக் காண்பித்தேன். அதன்பிறகு, உத்வேகமாகி குளத்தைத் தூர் வார ஒத்துக்கிட்டாங்க. இருபது நாள்களுக்கு முன்பு ஐம்பது மாணவர்களாேடு தூர் வார ஆரம்பித்தாேம். மூன்று நாள்களுக்கு ஒரு தடவை ஐம்பது மாணவர்கள்ன்னு இருநூறு மாணவர்களைக் காெண்டு மாத்தி மாத்தி தூர் வாரினாேம். சரக்கு பாட்டில்கள் ஐயாயிரம் பாட்டில்கள் உள்ளே கிடந்துச்சு. நாலடிக்கு குளத்துல தூர் வாரினாேம். குளத்தில் முளைத்திருந்த புதர்களை அப்புறப்படுத்தினாேம்.

அப்புறம்தான், ஊர்க்காரங்க சாென்னதுபாேல் இந்தக் குளம் தண்ணீர் சேமிக்க ஏற்ற குளம் இல்லைன்னு புரிஞ்சுச்சு. உடனே, மக்கள் உதவியாேடு அருகிலிருந்த ஏரியிலிருந்து களி மண்ணைக் காெண்டு வந்து குளத்துல இரண்டு அடிக்கு அடிச்சாேம். எங்க நல்ல நேரம் சில நாள்களுக்கு முன்பு காேடை மழை பெய்து, இந்தக் குளத்துல தண்ணீர் நிரம்பினுச்சு. ஐந்து நாள்கள் ஆகியும் அப்படியே இருக்கு. எங்களுக்கு மட்டுமில்லே, ஊர்க்காரங்களுக்கும் ஆச்சர்யமாயிட்டு. பத்து வருடங்களாக நிரம்பாத குளத்தை நிரப்பியதை ஊரே மெச்சிப் பேசினாங்க. குறிப்பா, கால்நடைகளுக்குக் குடிக்கத் தண்ணீர் காெடுக்கவும், ஊர் மக்கள் குளிக்கவும் இந்தக் குளம் நிரம்பியது இப்பாே வசதியா பாேயிட்டு. அதற்காக இருநூறு மாணவர்களும் அப்படி உழைச்சிருக்காங்க. அதாேட, குளத்தைச் சுத்தி மரக்கன்றுகளை நட்டு வச்சுருக்காேம். 'இனி எப்பாேதும் இந்தக் குளத்தை வத்த விடமாட்டாேம் சார்'ன்னு மாணவர்கள் சாென்னாங்க. எனக்கு சந்தாேஷமாயிட்டு. காரணம், அவங்கக்குள்ள சமூக அக்கறையை விதைச்சுட்டாேமேன்னுதான். இனி இந்த ஊர் இயற்கை வளங்களைப் பேணுவதை இந்த ஊர் மாணவர்களே பார்த்துக்கிடுவாங்க" என்றார் நம்பிக்கை டாலடிக்கும் வார்த்தைகளில்.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ளபணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - தமிழகபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ளபணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - தமிழகபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேலூரில் தகவல்

 தற்காலிக ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை விரைவில் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

 விரைவில் 41 அரசாணைகள் வெளியிடப்படும் -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

"ஆட்சியர் பரிந்துரைத்தால் பள்ளி விடுமுறை நீட்டிப்பு" - அமைச்சர் செங்கோட்டையன்.

வெப்பம் பற்றி ஆட்சியர்களுடன் ஆலோசித்த பிறகே மாவட்டம் தோறும் பள்ளி திறக்கும் நாள் முடிவு செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

வெப்பம் பற்றி ஆட்சியர்களுடன் ஆலோசித்த பிறகே மாவட்டம் தோறும் பள்ளி திறக்கும் நாள் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


தமிழகத்தில் வெயில் அதிகமாக உள்ள மாவட்டங்களின் ஆட்சியர் பரிந்துரைத்தால் விடுமுறை நீட்டிக்கப்படும். ஆட்சியர் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளி திறப்பை தள்ளிவைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் அறிவிப்புகளை ஜூன் 6 ம் தேதி வெளியிட போகிறோம்" - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

பள்ளிக் கல்வித் துறையில் நாடே திரும்பிபார்க்கும் வகையில் 41 அறிவிப்புகளை முதலைமைச்சரிடம் அனுமதி பெற்று வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

🔸 எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கபட்டார்.

🔹 இதையடுத்து அவர் கல்வித்துறையில் புதிது புதிதாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

🔸 பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

🔹 அதில் இனி மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்கள் கிடையாது எனுவும் இனிமேல் கிரேடு முறையில் தான் மார்க் வரும் எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

🔸 மேலும் இனிவரும் காலங்களில் பனிரெண்டாம் வகுப்பிற்கு வழங்கபட்டு வந்த 1200 மதிப்பெண்களை குறைத்து 600மார்க்குகலாக மற்றம் செய்வதாக அறிவித்தார்.

🔹 இதைதொடர்ந்து பதினொன்றாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என அறிவித்து கல்லூரிகளில் உள்ளது போல அரியர்ஸ் முறை இதில் பின்பற்றப்படும் என தெரிவித்தார்.

🔸 இந்நிலையில் தற்போது புதிதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 💥 இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

🔸 மாணவர்களின் எதிர்காலத்தை கருதி 41  அறிவிப்புகளை வெளியிட உள்ளோம்.

🔹 இதுகுறித்த அறிவிப்பு வரும் 6 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி அனுமதியுடன் வெளியிடப்படும்.

🔸 இந்த அறிவிப்புகளை கண்டு நாடே திரும்பிபார்க்கும் வகையில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

🔹 இதனால் அந்த அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன

வேலைநாட்களிலும் காலை இறைவணக்க கூட்டம் நடத்துதல் குறித்து வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு..

அனைத்து பள்ளி
G.O.335, date 2.6.2017 


அரசுப்பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. போளூர் விஜயலட்சுமிக்கு குவியும் பாராட்டுகள்!

போளூர் : ஐஏஎஸ் என்று சொல்லப்படும் இந்திய குடிமைப் பணியில் அரசுப் பள்ளியில் படித்த போளூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வெற்றி

பெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்காக தேர்வு எழுதிய ஆயிரத்து 99 பேரின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என்று இரண்டு பிரிவுகளில் இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

Thiruvannamalai government school student Vijayalakshmi cleared her IAS exams

இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்று டிசம்பர் மாதம் மெயின் தேர்வை எழுதினர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்து 961 பேருக்கு கடந்த மார்ச் மாதம் முதல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை மனிதநேய அறக்கட்டளையில் பயின்ற 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், விஜயலட்சுமி பாத்திரக்கடையின் உரிமையாளருமானவர் ஜெயகுமார். இவரின் மகள் விஜயலட்சுமியும் நடந்து முடிந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடக்கக்கல்வியை அங்குள்ள நர்சரிப் பள்ளியொன்றில் பயின்ற விஜயலட்சுமி, மேல்நிலைக்கல்வியை திருவண்ணாமலையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பயின்றுள்ளார். அரசுப் பள்ளியில் பயின்றாலும் மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் அனைவரிடமும் இருந்து விஜயலட்சுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

பாலிடெக்னிக் தேர்வு 5ம் தேதி 'ரிசல்ட்'

டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்வு முடிவு கள், ஜூன், 5ல் வெளியாகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள, 511 பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நான்கு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 
இவர்களுக்கான தேர்வுகள், ஏப்ரலில் முடிந்தன. தேர்வு முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகின்றன.முடிவுகளை, தமிழ்நாடு தொழிற்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின், www.tndte.gov.in, intradote.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

7th PAY COMMISSION ஊதிய குழு பரிந்துரை : கருத்து கேட்பு முடிவு

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பான, கருத்து கேட்பு கூட்டம், சென்னையில், இன்று நிறைவு பெறுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள், 2016ல் அமல்படுத்தப்பட்டன. அதை, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக, பிப்., 22ல், முதல்வர் பழனிசாமி தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், ஊதிய விகிதங்களை மாற்றிஅமைப்பது குறித்து, பரிந்துரைகள் அளிக்க, ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டது.இக்குழு, சென்னை, கடற்கரை சாலையில் உள்ள, லேடி வெலிங்டன் பள்ளியில், மே, 26, 27ல், அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது.

இரண்டு நாட்களில், 150க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள், கோரிக்கை மனு அளித்தனர்.இரண்டாம் கட்டமாக, நேற்று விடுபட்ட சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களிடம், கருத்து கேட்கப்பட்டது. இன்று மாலையுடன், கருத்து கேட்பு நிகழ்ச்சி முடிகிறது. 

பிளஸ் 2 மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு, இன்று முதல், 6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பிளஸ் 2 தேர்வின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நேற்று இணையதளம் மூலம் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. இதில், மதிப்பெண்கள், கூட்டு எண்ணிக்கையை, மாணவர்கள் ஆய்வு செய்யலாம். 

கூட்டலில் பிழை இருந்தால், மறு கூட்டலுக்கும், விடைகளுக்கு, சரியாக மதிப்பீடு வழங்கவில்லை என்றாலும், சில விடைகள் திருத்தப்படாமல் விடுபட்டிருந்தாலும், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர். scan.tndge.in என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். பின், அதை இரு நகல்களாக எடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில், இன்று முதல், 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாளை விடுமுறை என்பதால், விண்ணப்பிக்க முடியாது என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

மாநில முழுவதும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மண்டல வாரியாக தகவல் தொழில்நுட்பப் பயிற்சிக்கான திட்டமிடல் கூட்டம் மற்றும் பணிமனைக்கான ஆசிரியர்களின் பெயர் பட்டியல் -பணிவிடுவிப்பு சார்ந்து

Click Here

வேலூர் மாவட்டத்தில் கல்விதரம் மேம்படுத்த 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

வேலூர்: கல்வி தரத்தை மேம்படுத்த `வேலூர் மாவட்டம்'' 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பதற்கு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களில் 1628 தொடக்கப்பள்ளிகளும், 509 நடுநிலைப்பள்ளிகளும், 197 உயர்நிலைப்பள்ளிகளும், 208 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. மேலும் 3 ஆயிரம் தனியார் பள்ளிகள் மற்றும் 421 நர்சரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 30 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவுப்படி உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.
மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் முதன்மை கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் அதிகளவு அரசு பள்ளிகள் உள்ளதால் பல ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் மாவட்டம் வேலூர் கல்வி மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டம் என பிரிக்கப்பட்டது.

தற்போது பிரிக்கப்பட்ட இரு கல்வி மாவட்டங்களிலும் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அதிகமாக உள்ளது. இதில் அரசு பள்ளிகளே அதிகமாக உள்ளதால் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பள்ளிகளை முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. அதேபோல் அதிகளவு அரசு பள்ளிகளும், அதிகளவு மாணவர்களும் படிப்பதால் வேலூர் மாவட்டம் கல்வி தரவரிசைப்பட்டியலில் பின்தங்கியே உள்ளது என்ற குற்றச்சாட்டுகள் கல்வி அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தின் கல்வி தரத்தை மேம்படுத்த அதை 2 கல்வி மாவட்டங்களாக உள்ளதை 3 கல்வி மாவட்டங்களாக பிரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதாவது தற்போது வேலூர் கல்வி மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டம் என இரு கல்வி மாவட்டங்களாக உள்ளது. இதை இன்னொரு மாவட்டமாக ராணிப்பேட்டை கல்வி மாவட்டமாக பிரிப்பதற்கு பள்ளிக் கல்வி இயக்குனரிடம் முதன்மை கல்வி அதிகாரி அறிக்கை அனுப்பி உள்ளார். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!