Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 6 June 2017

தொடக்கக் கல்வி -அரசு நலத்திட்டங்கள் 2012-2013 கல்வியாண்டு முதல் 2017-2019 கல்வியாண்டு முடிய ஒவ்வொரு நலத்திட்டங்களின் தலைப்பின் கீழ் பதிவேடுகள் உருவாக்கி தேவைப்பட்டியலின் படி பதிவுகள் மேற்கொண்டு பராமரித்தல் -தொடர்பாக!!2018ம் ஆண்டு 10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு, தேர்வு முடிவுக்கான தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பு...


தனியார் பள்ளிகளைப் போல சுவர் விளம்பரங்களால் ஈர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

கிராமத்து வீட்டுச் சுவர்களில் ஜவுளிக் கடை, நகைக் கடை விளம்பரங்களைப் பார்த்திருப்போம். 'நமது சின்னம்.....' என்று எப்போதோ முடிந்துபோன தேர்தலின் கட்சி விளம்பரத்தையும் பார்த்திருப்போம். ஆனால், திருச்சி மாவட்டம், பூவாளூர் கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் வீட்டுச் சுவர்களில் ஒரு வித்தியாசமான விளம்பரத்தைப் பார்க்க முடிந்தது. ஓர் அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் சேர்க்கைக்கான அழைப்பு விளம்பரம்தான் அது. 'அட... அரசுப் பள்ளிக்கு விளம்பரமா?' என ஆச்சர்யத்துடன் விசாரித்தால், அந்தப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் சதீஷ் குமாரை நோக்கி பெருமிதத்துடன் விரல்கள் சுட்டிக் காட்டுகின்றன.


''நான் இந்தப் பள்ளிக்கு ஆசிரியராக வந்து ஒன்பது வருஷமாச்சு. நான் வந்த புதுசுல இங்கே 928 மாணவர்கள் படிச்சுட்டு இருந்தாங்க. ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சு நானூற்று எழுபதுக்கு வந்துடுச்சு. ஒவ்வொரு வருஷமும் எண்ணிக்கை குறையும்போது எனக்கு ரொம்ப வேதனையா இருக்கும். வேற பள்ளிக்குப் போய்விட்ட பசங்களைத் தேடிப்பிடிச்சு 'எதுக்கு வேற ஸ்கூலுக்குப் போய்ட்டீங்க?'னு விசாரிச்சேன். 'இந்த ஸ்கூலுல ஸ்மார்ட் கிளாஸ் இல்லே. இந்த வசதி இல்லே, அந்த வசதி இல்லே'னு சொன்னாங்க. அவங்க சொல்றதும் நியாயம்தானே? நம்ம பள்ளிக்கு வரும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியது நம்ம கடமைனு நினைச்சேன். தலைமை ஆசிரியரிடமும் பேசினேன். 'என்ன செய்யணுமோ சொல்லுங்க. என்னால் முடிஞ்சதைச் செய்யறேன். நம்ம ஸ்கூல் பழைய மாதிரி நிறைய மாணவர்களோடு நிறைஞ்சு இருக்கணும்'னு சொன்னார்.உடனே ஃபேஸ்புக் பக்கத்தில் எங்கள் பள்ளியைப் பற்றி எழுதி, உதவி கேட்டேன். சில நல்ல உள்ளங்கள் உடனடியா உதவிசெய்ய முன்வந்தாங்க. ஸ்மார்ட் கிளாஸ், கம்பியூட்டர், புரொஜெக்டர், வித்தியாசமான இருக்கைகள், திரைச்சீலைகள் எனப் பள்ளியையே புதுசா மாற்றினோம். அன்றாட பள்ளி நடவடிக்கைகளிலும் சில மாற்றங்களைக் கொண்டுவந்தோம். தினமும் காலையில் ஆங்கிலச் செய்தித்தாளைக் கொடுத்து எல்லா மாணவர்களையும் படிக்கச் சொல்வோம். கேரம், சதுரங்கம், யோகா, பசுமை நடை எனப் பல விஷயங்களை நடைமுறைப்படுத்தினோம். கம்ப்யூட்டரை எப்படி ஓப்பன் பண்ணனும்னே தெரியாதிருந்த ஒரு மாணவன், இப்போ அதே கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி செமினார் எடுக்கிறான். நல்லாப் படிக்கும் மாணவன், சரியாகப் படிக்காத மாணவன் என்கிற பேதம் வந்துடக் கூடாதுனு கவனமா இருந்தோம். அதனால், படிப்பில் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்குப் புராஜெக்ட் கொடுத்து, எங்கள் முன்னாடியே செய்யச் சொல்வோம். அந்த மாணவர்களின் கிரியேட்டிவிட்டியை எல்லார் முன்னாடியும் பாராட்டுவோம். இதனால், அவங்களுக்கும் பெரிய தன்னம்பிக்கை உருவாச்சு. இப்படிப் பல விஷயங்களைச் செய்ததில் எங்கள் பள்ளியைப் பற்றி வெளியே தெரிய ஆரம்பிச்சு இருக்கு. இந்தப் பள்ளியிலிருக்கும் வசதிகள் பற்றி இன்னும் நிறையப் பேருக்குத் தெரியணும்னு இந்த விளம்பரத்தைக் கொடுத்திருக்கோம். இந்த வருஷம் மாணவர் சேர்க்கை எதிர்பார்த்ததைவிட அதிகமாகிருக்கு'' என்கிற ஆசிரியர் சதீஷ் குமாருக்கு, இந்தச் சுவர் விளம்பரத்தால் பாராட்டுகள் மட்டுமல்ல, சில மிரட்டல்களும் வந்திருக்கிறதாம்.

''அதையெல்லாம் நான் பெருசாவே எடுத்துக்கலை. அவங்களோட மிரட்டலிலிருந்தே எந்த அளவுக்குப் பயந்துட்டு இருக்காங்கன்னு தெரியுது. இப்போகூட கேபிள் டிவியில் எங்க ஸ்கூல் விளம்பரம் ஓடிட்டு இருக்கு. இந்த ஸ்கூல்ல நிஜமாவே இந்த வசதிகள் இருக்கானு பெற்றோர்கள் வந்து பார்த்து, கையோடு அட்மிஷனும் போட்டுட்டுப் போறாங்க. அதைப் பார்க்கிறப்போ பட்ட கஷ்டமெல்லாம் பறந்துப்போகுது'' என்கிறார் சதீஷ் குமார் உற்சாகமாக.

அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரட்டும்.

10 ம் வகுப்பில் 375 மேல் மதிப்பெண் பெற்றால் ரூ.10000/- பரிசு - தினத்தந்தி அறிவிப்பு - விண்ணப்ப படிவம் மற்றும் விதிமுறைகள்

DOWNLOAD YOUR GPF A/C SLIP


CLICK HERE

TPF INSTRUCTION FOR MISSING CREDIT

நாளை அனைத்து பள்ளிகள் திறப்பு

கோடை வெயில் காரணமாக நீட்டிக்கப்பட்ட விடுமுறை முடிந்து நாளை  அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகம், சீருடைகள் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.  

மார்ச் மாதம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்தன. அதைத் தொட ர்ந்து கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரலில் நடந்தது. கல்வியாண்டு வேலை நாட்களின்படி கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரை பள்ளிகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் வெயில் காரணமாக ஏப்ரல் 26ம் தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் விடுமுறை அறிவித்தன. இதையடுத்து, ஜூன் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மே மாதம் கோடை வெயில் வாட்டி வதைத்து  வந்ததால், பள்ளிகள் திறக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று, வெயில் காரணமாக பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. மேலும் விடுமுறை நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.அந்தந்த மாவட்ட ஆட்சியர் அதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்தார். 

ஆனால், 7ம் தேதியே பள்ளிகளை திறக்க வேண்டும். காலம் நீட்டித்து பள்ளிகள் திறந்தால் கல்வி பாதிக்கப்படும் என்று அனைத்து ஆசிரியர் சங்கங்களும் பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து அரசு அறிவித்தபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். அதே நாளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள், சீருடை வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் காலை வழிபாட்டு கூட்டம் 10 நிமிடமாக குறைப்பு

தமிழக பள்ளிகளில் மாணவர்கள் காலை வழிபாட்டு கூட்டம் தொடர்பாக அரசு கடந்த 2012ம் ஆண்டு ஆணை வெளியிட்டது. இதன்படி திங்கட்கிழமை பொதுவழிபாட்டு கூட்டம், பிற நாட்களில் வகுப்பறை வழிபாட்டு கூட்டம் கொண்டுவரப்பட்டது. 

இதன்படி பொது மற்றும் வழிபாட்டு கூட்டம் 20 நிமிடங்கள் வரை நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒவ்வொரு மாணவனும் பிழையின்றி பாடவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசாணை 335ஐ புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் வகுப்பு வழிபாட்டு கூட்டத்தை மாற்றி, ெபாது வழிபாட்டு கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் எல்லா மாணவனும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட வேண்டியதில்லை. யாராவது ஒரு மாணவன் பாடினால் போதும்.

இதுதவிர 20 நிமிடமாக இருந்த திங்கட்கிழமை மட்டும் பொதுவழிப்பாட்டு கூட்டம் 3 நிமிடம் குறைத்து, 17 நிமிடமாகவும், பிற வேலை நாட்களில் 20 நிமிடங்கள் இருந்த வழிபாட்டு கூட்டம், 10 நிமிடமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில் மாணவர்கள் முன்னின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்கள் பாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. 

தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள் விளக்கம், செய்தி வாசித்தல், பொது அறிவு, பிறந்த நாள் வாழ்த்து என அனைத்தையும் 10 நிமிடங்களில் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வகுப்பறையில் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் முன்னின்று வழிபாட்டு கூட்டம் நடத்தும் வகையில் வாய்ப்பு கிட்டுமா என்ற சந்தேகமும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆங்கிலவழி கல்விக்கு மாறும் அரசு பள்ளிகள் அதிகரிப்பு : இந்தாண்டு பிளஸ் 1ல் அமல்

ஆங்கிலவழி கல்வி துவங்க ஏராளமான அரசு பள்ளிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தாண்டு பிளஸ் 1 வகுப்புகளில் ஆங்கிலவழி கல்வி செயல்படுத்த அரசு அனுமதித்துள்ளது.

அரசு பள்ளிகள் தமிழ்வழி கல்வியில் பாடம் நடத்தி வந்தன. ஆங்கில மோகத்தால் அப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கின. மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக போட்டிபோடும் வகையில், 2012--13 முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை துவங்க அனுமதிக்கப்பட்டது.மாநிலம் முழுவதும் 3,400 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

இருந்த போதிலும் தமிழ்வழி கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களே, ஆங்கில வழியை போதித்ததால், எதிர்பார்த்த மாணவர்கள் சேரவில்லை. இந்த ஆண்டு பள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் ஏராளமான பள்ளிகள் ஆங்கிலவழி கல்வியை துவங்க விண்ணப்பித்து வருகின்றன. மேலும் 2012--13ல் ஆங்கில வழியை துவங்கிய மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு பிளஸ் 1 துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

2012- -13 ல் ஆங்கில வழி கல்வியில் 6 ம் வகுப்பு சேர்ந்தோர், தற்போது 10 ம் வகுப்பு முடித்தனர். அவர்கள் வசதிக்காக மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளில் ஆங்கிலவழி துவங்கப்படுகிறது. இதில் உயர்நிலைப் பள்ளியில் 

ஆங்கில வழியில் 10 ம் வகுப்பு முடித்தோரும் சேரலாம். மேலும் இந்த ஆண்டு ஏராளமான பள்ளிகளுக்கு ஆங்கிலவழி கல்விக்கு அனுமதி அளிக்கப்படுகிறது, என்றார்.

பள்ளியில் குழந்தையைச் சேர்க்க ஜாதி பெயர் அவசியமா..? கல்வித் துறை விளக்கம்!

'சாதிகள் இல்லையடி பாப்பா" என்று கற்றுத்தரும் பள்ளிகளே, புதிதாக சேரும் மாணவர்களிடம் என்ன ஜாதி எனக் கேட்கிறது' என்று சிலர் சொல்வதுண்டு. சாதி ரீதியாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களின் வாரிசுகளுக்கான உரிமைகளை அளிக்கவே அவ்வாறு கேட்கப்படுகிறது என்று அதற்கான மறுமொழி கூறுவர். இந்த விவாதத்தைக் கடந்து சாதி, மதம் அடையாளத்திலிருந்து வெளியேற நினைப்பவர்கள் தங்கள் பிள்ளையைப் பள்ளியில் சேர்க்கும்போது எதிர்கொள்ளும் சிக்கல் ஒன்று இருக்கிறது.  

ஜூன் மாதம் பெற்றோர்களுக்கு பரப்பான மாதம். பிள்ளையைச் சேர்க்க சரியான பள்ளியைத் தேர்வு செய்வதில் தொடங்கி அட்மிஷன் கிடைத்து, பணம் கட்டி முடிப்பதற்குள் பெரும் போரை நிகழ்த்தியதைப் போல உணர்வார்கள். பள்ளியின் அட்மிஷன் படிவத்தில் பெயர், பெற்றோர் பெயர் உள்ளிட்டவையோடு சாதி, மதம் ஆகியவற்றைப் பற்றியும் கேட்கப்பட்டிருக்கும். இந்த இடத்தில்தான் சாதி, மத அடையாளத்திலிருந்து விலக முயல்வோருக்கு அந்தச் சிக்கல் வருகிறது.

பள்ளியில் பிள்ளையைச் சேர்க்க சென்றார் ஒருவர். அப்போது அட்மிஷன் படிவத்தில் சாதி, மதம் ஆகிய பகுதிகளில் சின்ன கோடு மட்டுமே போட்டிருந்தார். உடனே, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிவிட்டார். அந்த இடத்தில் பெரும் விவாதமாகி விட்டது. இதுபோல பல பள்ளிகளிலும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு. இதற்கு காரணம் என்ன? பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் பேசியபோது,

"பெரும்பாலான தலைமை ஆசிரியர்களுக்கு சாதி, மதம் ஆகியவற்றின் பெயரைக் குறிப்பிடாமல் அப்ளிகேஷனை ஏற்றுக்கொள்ளலாம் என்பதே தெரியவில்லை. அதற்கான அரசாணைக் குறித்தும் தெரிந்துகொள்வதில்லை. விவரம் தெரிந்த தலைமை ஆசிரியர்களும் பெற்றோரை சாதி, மதப் பெயர்களைக் குறிப்பிடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். அவரின் பேச்சினைக் கேட்டு மனம் மாறும் பெற்றோர்களும் எவ்வளவு சொல்லியும் உறுதியாக இருக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்." என்றார்.

பள்ளி

இதுபோன்ற நிலையில் அரசு என்ன சொல்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். சமீபத்தில் கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில்,

"மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கும்போது சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவர் விருப்பப்பட்டால் அந்த மாணவரின் பள்ளிச் சான்றிதழ் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் சாதியில்லை, சமயமில்லை என்று குறிப்பிடவோ அல்லது அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ எவரும் விரும்பினால் சம்மந்தப்பட்டவரின் விருப்பக் கடித்தத்தினைப் பெற்றுக்கொண்டு அவர்களின் விருப்பப்படியே சான்று வழங்கலாம்"

என்று தொடக்கக்கல்வி அலுவலர் சார்பாக அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சாதி, மதப் பெயர்கள் இல்லாமல் பிள்ளையைப் பள்ளியில் சேர்க்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

"இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி நிதி உதவி உள்ளிட்ட உரிமைகள் இதன் மூலம் பறிபோய்விடுமே?" என கும்பகோணத்தைச் சேர்ந்த மாரியப்பனிடம் கேட்டோம். இவரும் தங்கள் பிள்ளைகளுக்கு சாதி, மதம் எனக் கேட்கும் பகுதியில் 'இல்லை' எனப் பதிந்திருப்பவர்.

"நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், சாதி, மதப் பேதமற்ற ஒரு சமூகத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டிமெனில் யாரேனும் இதனை முன்னெடுக்க வேண்டும் அல்லவா. எங்கள் பிள்ளைகளிடம் விரிவாக இதுகுறித்து பேசிவிட்டே இந்த முடிவுக்கு வந்தேன். பொதுப்பட்டியலில்தான் நீங்கள் போட்டியிட வேண்டியிருக்கும் எனச் சொல்லியும் என் மகனும் மகளும் முழு மனத்தோடு சம்மதித்தனர். இப்போது என் மகன் பொறியியல் முடித்து நல்ல வேலையில் இருக்கிறார். மகள் கல்லூரியில் படித்துகொண்டிருக்கிறார். சில இழப்புகளைத் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் சமூகத்திற்கான ஒரு முன்னெடுப்பாக இதைச் செய்தாக வேண்டும் என நான் நினைத்தேன்" என்றார் மாரியப்பன்.

TEACHER'S DIARY - FORMAT.

வந்து பாருங்க... நம்பி சேருங்க! 'கெத்து' காட்டும் அரசுப்பள்ளி.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!