Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 7 June 2017

முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் அரசாணை

மாற்றுத்திறனாளி மாணவிக்காக புதிய பாடப்பிரிவு: ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களால் அரசுப் பள்ளியில் உயிர்பெறும் கல்வி

சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு தாயார் புவனேஸ்வரியுடன் மாணவி ப்ரீத்தி.

மாணவர்களை தங்கள் சொந்த குழந்தைகளைப் போல பாவிக்கும் ஆசிரியர்களாலேயே அரசுப் பள்ளிகள் உயிர்ப்புடன் இருக்கின்றன. கோவை சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி இதற்கு ஓர் உதாரணம். சிறப்பாக படித்து தேறிய மாற்றுத்திறனாளி மாணவிக்காக புதிதாக ஒரு பாடப்பிரிவை கொண்டு வர பள்ளி ஆசிரியர்கள் முயற்சித்து வருகின்றனர். அந்த பாடப்பிரிவு கொண்டு வரப்பட்டால் அந்த ஒரு மாணவி மட்டுமல்ல, பொருளாதாரத்தில் பின்தங்கிய பல மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்பது நிதர்சனம்.

கோவை சீரநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சிட்டிபாபு. வீடுகளுக்கு நாளிதழ் விநியோகிக்கும் வேலை பார்க்கிறார். மனைவி புவனேஸ்வரி. இத்தம்பதியின் மகள் ப்ரீத்தி. உடல்வளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளியான இச்சிறுமிக்கு அவரது தாயாரே துணையாக இருக்கிறார். ப்ரீத்தி சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு தேர்வில் 468 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ம் இடம் பிடித்தார். பெற்றோருக்கு மட்டுமல்ல, பள்ளியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவருக்குமே செல்லப் பிள்ளை ப்ரீத்தி. அனைவரது ஊக்கத்தினாலேயே பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.

ஆனால் அதே பள்ளியில் தனது மேல்நிலை படிப்பைத் தொடர நினைக்கும்போதுதான் சிக்கல் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளி என்பதால் அறிவியல் பாடப்பிரிவு கிடைக்கவில்லை. எளிதில் கிடைக்கும் கணிதவியல் பாடப்பிரிவு அப்பள்ளியிலேயே இல்லை. வேறு எங்கும் சென்று படிக்க ஒத்துழைக்காத உடல்நிலை. இப்படி பல சிக்கல்கள் இருந்தாலும், அன்போடு தன்னை அரவணைத்து சொல்லித்தரும் அரசுப் பள்ளியிலேயே மேல்நிலை வகுப்பை தொடர ஆசைப்பட்டார் அந்த மாற்றுத்திறனாளி மாணவி.

பள்ளி நிர்வாகத்திடமும், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும் தாயார் உதவியோடு சென்று தனது நிலையை தெரிவித்தார். அத்துடன் சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனக்கும், தன்னைப் போன்ற மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் 3-வது பாடப்பிரிவை நடத்த வேண்டுமென வலியுறுத்தினார். அதை பரிசீலித்த கல்வித்துறையினர், உடனடியாக அப்பள்ளியில் கணிதவியில் 3-வது பாடப் பிரிவை தொடங்க பரிந்துரைத்துள்ளனர்.

மாணவிக்கு உதவத் தயாராக இருந்த பள்ளி நிர்வாகம், அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்த உடனேயே அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டனர். ஒரு மாற்றுத்திறனாளி மாணவியின் நலனுக்காக தொடங்கப்படும் பாடப்பிரிவு, எதிர்காலத்தில் பல ஏழை, எளிய மாணவர்களுக்கும் கல்வியறிவை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தாய்க்கு நிகர்

மாணவி ப்ரீத்தியிடம் கேட்டபோது, ‘என்னால் நடக்கவோ, வேலைகளைச் செய்யவோ முடியாது. அம்மாவின் துணை தேவை. 10 வருடங்களாக அம்மாதான் என்னை பள்ளிக்குத் தூக்கிச் செல்வார்கள். தாய்க்கு நிகராக என்னை ஆசிரியர்கள் கவனித்துக் கொள்வார்கள். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் கொடுத்த ஊக்கமே என்னை படிக்க வைத்தது; நல்ல மதிப்பெண் பெற வைத்தது. மேல்நிலைக் கல்வியையும் இங்கு படித்தால் நிச்சயம் சாதிப்பேன். இதே பள்ளியில் 3-வது பாடப்பிரிவு தொடங்குகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பட்டப்படிப்பை முடித்து விட்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுத வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கிறேன். எனக்கு உதவிய பள்ளிக்கு எதிர்காலத்தில் நான் உதவ வேண்டும்’ என்றார்.

‘ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் என் மகளை, தங்கள் குழந்தையைப் போல பார்த்துக் கொள்வார்கள். அந்த அரவணைப்புதான் அவளை ஊக்கப்படுத்தி சாதிக்க வைத்தது. வேறு எங்கும் அவளால் படிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு பாடப்பிரிவு தொடங்க முடிவு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் சிறுமியின் தாயார் புவனேஸ்வரி.

நிதி திரட்ட முடிவு

பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, ‘2011 வரை இங்கு 3-வது பாடப்பிரிவு இருந்தது. பின்னர் அது சுயநிதி பாடப்பிரிவாக மாறியதால் அரசு மூலமாக ஆசிரியர்கள் நியமனம் கிடைக்கவில்லை. பள்ளியில் நன்றாக படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி ப்ரீத்தியால் செய்முறைத் தேர்வுகள் எழுத முடியாது என்பதால் அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர முடியவில்லை. 3-வது பாடப்பிரிவில் தான் சேரமுடியும் என்ற சூழல் ஏற்பட்டது. எனவே பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் உதவியுடம் நிதி திரட்டி ஆசிரியர்களை நியமித்து 3-வது பாடப்பிரிவை தொடங்க முடிவு செய்துள்ளோம். ப்ரீத்தி மட்டுமல்ல பல மாணவர்களுக்கு இது பயன்படும்’ என்றனர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் வி.சரவணனிடம் கேட்டபோது, ‘3-வது பாடப்பிரிவுக்கு பொருளியல், வணிகவியல் பாடங்களுக்கு 2 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். 2 ஆண்டுக்கு சுமார் ரூ.4 லட்சம் நிதி தேவை. இதற்கு எங்கள் முன்னாள் மாணவர்கள் நிச்சயம் உதவுவார்கள்.

முன்னாள் மாணவர்கள் இந்த பள்ளியை பல வழிகளில் முன்னேற்றியுள்ளனர். அவர்கள் முயற்சியால் தான் கனடா தமிழ்சங்கத்தில் எங்கள் பள்ளி பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

PRAYER SCHEDULE AS PER G.O 335

PGTRB நியமனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

*முதுநிலை ஆசிரியருக்கான நியமனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

*மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்

15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது 41 அறிவிப்புகள் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசு பாடத்திட்டத்தில் யோகா மற்றும் சாலை விதிகள் விரைவில் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 41 அதிரடி அறிவிப்புகள் பற்றி வரும் 15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசுப்பள்ளிக்கு வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு புத்தகங்கள் ,சீருடை ஆகியவற்றை வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு பாடபுத்தகம், சீருடை வழங்கிய பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். தனியாருக்கு இணையாக தமிழக பள்ளிக்கல்வித் துறை திகழ்ந்துக் கொண்டிருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கோடை விடுமுறை முடிந்து விட்டது. மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்துள்ளனர். வானமே பூ மழை தூவி வருங்கால கல்வியாளர்களை வாழ்த்தி வரவேற்கிறது. சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை திறந்த தரத்துடன் திகழ்கிறது. மத்திய அரசு தேர்வுகளை மாணவர்கள் எதிர்க்கொள்ளும் வகையில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும் 

பள்ளிக்கல்வித்துறையில் நேற்று அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறியிருந்தார் செங்கோட்டையன். அது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், 15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது 41 அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார். 

நீட் தேர்வு பற்றி நாங்கள் கூறவில்லை. நீட் வேறு பொது தேர்வு வேறு. மத்திய தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை பற்றிய அறிவிப்பை சாதாரணமாக வெளியிடுவதை விட மானியக்கோரிக்கையில் வெளியிட்டால் அது சட்டசபை வரலாற்றில் இடம் பெறும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் செங்கோட்டையன் என்று கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

அரசு பள்ளிகளில் இந்தாண்டு 'ஸ்மார்ட்' வகுப்பு

அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்தாண்டு முதல் 'ஸ்மார்ட்' வகுப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சில அரசு பள்ளிகளில் ஏற்கனவே 'ஸ்மார்ட்' வகுப்பு செயல்பாட்டில் உள்ளது. 
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான செயல்வழி கல்வி 'இன்டர்நெட்' இணைப்புடன் கூடிய 'புரஜெக்டர்' மூலம் திரையில் ஒளிபரப்பப்பட்டு கற்பிக்கப்படும்.அதேபோல் ஐந்தாம் வகுப்பிற்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான படைப்பாற்றல் கல்வி திரை மற்றும் 'கம்ப்யூட்டர்' மூலம் நடத்தப்படும். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப்பிரிவுகளும் திரை மூலம் கற்பிக்கப்படும்.

சிறந்த ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களும் பதிவு செய்யப்பட்டு, ஒளிபரப்பப்படும். இந்த முறையை இந்தாண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பயிற்சி விரைவில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஸ்மார்ட்' வகுப்புக்கான அறை 20 க்கு 20 அடியில் தனியாக ஏற்படுத்தப்படும்.

 இந்த முறையால் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தாலும், பாடம் கற்பிப்பது பாதிக்காது. காலிப் பணியிடங்கள் ஏற்படும்போது, பிற பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் 'லைவ்' மூலம் மாணவர்களுக்கு ஒளிபரப்பப்படும். இதனால் ஆசிரியர்கள் இல்லை என்ற குறை ஏற்படாது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது, என்றார்.

’பசுமை பத்தாயிரம்!’ அரசுப் பள்ளி ஆசிரியையின் இயற்கை இலக்கு


உலக சுற்றுச்சூழல் தினத்தை முழு அர்த்தத்துடன் கொண்டாடியிருக்கிறது கரூர் மாவட்டத்திலுள்ள ஓர் அரசுப் பள்ளி. மாணவர்கள் படிப்பதற்கு புத்தகங்களும், கற்பிக்க ஆசிரியர்களும் அவசியம். 
வகுப்பறை பசுமையான சூழலில் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தால் மாணவர்களுக்கு படிப்பின்மீது இன்னும் நாட்டம் வரும். அதைச் செய்வதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளார் ஆசிரியை உமா.

கரூர் மாவட்டம் தாந்தோனிமலை ஒன்றியத்தின் மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார் உமா. மாணவர்களுக்கு பாடங்களோடு இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதைக் கற்பிக்கிறார். இவரின் செயல்பாடுகள் பற்றிய செய்தி அந்த மாவட்ட ஆட்சியர் வரை எட்டியிருக்கிறது.


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், தம் பள்ளி மாணவர்களோடு கலந்துகொண்டார் உமா. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆயிரம் மரக்கன்றுகளைத் தரும் திட்டத்தைத் தொடங்கி வைக்குமாறு ஆட்சியர் சூர்யபிரகாஷிடம் கேட்டிருக்கிறார். அவரின் வேண்டுகோளை நிறைவேற்றியதோடு மணவாடி பள்ளிக்கும் வந்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர். ஆயிரம் மரக்கன்றுகளை மாணவர்களுக்கும் பெற்றோர்களும் அளித்தார்.

"மணவாடி பள்ளியின் இந்தச் செயல் மனம் திறந்து பாராட்ட படவேண்டிய ஒன்று. நமது இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் அவசியத்தை அடுத்த தலைமுறையினரிடம் சொல்வதும், சரியாக வழிகாட்டவதுமே ஆரோக்கியமானது. இந்தப் பள்ளியை மற்ற பள்ளிகளும் முன்னுதாரணமாக கொண்டு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்" என்று மாணவர்களை மட்டுமல்ல பள்ளி ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்தியிருக்கிறார் சூர்யபிரகாஷ்.

தன் பசுமைப் பயணத்தைத் தொடங்கியுள்ள ஆசிரியை உமாவிடம் பேசினோம்.

"நம்முடைய சூழலையும் புரிந்துகொண்டால்தான் கல்வி முழுமைப்பெறும் இல்லையா. அதனால், எங்கள் தலைமை ஆசிரியரின் வழிகாட்டலில் சென்ற வருடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றம் தொடங்கினோம். வெறும் பேச்சுகளாக மட்டுமே எங்களின் பணிகள் முடிந்துவிடக் கூடாது என, புகையிலை தினம், தண்ணீர் தினம்... போன்ற சிறப்புத் தினங்களின்போது கிராம மக்களிடம் சென்று விழிப்புஉணர்வு பரப்புரை செய்தோம். அப்போது, கிராமத்து மக்கள் சொல்லும் செய்திகளையும் குறித்துக்கொண்டோம். அந்த விஷயங்களை எங்கள் வகுப்பறைகளில் விவாதித்தோம். இது எங்கள் மாணவர்களுக்கு புதிய அனுபவத்தைத் தந்தது. சென்ற வருடம் முழுவதும் தொடர்ந்து இதுபோன்ற செயல்பாடுகளைச் செய்தோம்.

அதன் தொடர்ச்சியாக பெரிய அளவில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எங்கள் பள்ளி அமைந்திருக்கும் கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தில் மரக்கன்றுகளை நடுவது என முடிவுசெய்தோம். இதற்கு கிராம மக்களும் முழுமையான ஆதரவு தருவதாக கூறினர். பத்தாயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும் என எங்களுக்குள் ஓர் இலக்கைத் தீர்மானித்திருக்கிறோம். அதன் முதல் படியாக உலக சுற்றுச்சுழல் தினத்தில் ஆயிரம் மரக்கன்றுகளை கிராம மக்களுக்கு தந்தோம்.

இந்தப் பகுதி செழிப்பானது இல்லை. மழை பெய்தால் பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கும். அப்படியெனில் மழையைப் பொழிய வைக்கும் மரங்களை வளர்த்தால் எப்போதுமே எங்கள் பகுதி அழகாகவும் பசுமையாக இருக்கும் என்பதால் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.

மாவட்ட அளவில் சுற்றுச்சூழலைப் பேணும் சிறந்த பள்ளி எனப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் வழங்கிய சான்றிதழ் எங்களுக்கு பெரிய உற்சாகத்தைத் தந்துள்ளது. நிச்சயம் எங்களின் இலக்கை எட்டுவோம். இந்தப் பகுதியை பசுமையாக்குவோம்" என்று நம்பிக்கையோடு முடித்தார் உமா.

இயற்கையைக் காக்க புறப்பட்ட அரசுப் பள்ளியின் பயணம் வெல்லட்டும்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று...திறப்பு!

ஐம்பது நாள் கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவ, மாணவியருக்கு, அரசு வழங்கும் இலவசங்களை, உடனடியாக கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பள்ளிகளில், முதல் நாளான இன்று, மாணவர் கள், புதிய வகுப்புக்கு மாற்றம் செய்யப்படுகின் றனர். பின்,அரசு மற்றும் அரசு உதவி பள்ளிக ளில், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, இலவச பாடப் புத்தகம் மற்றும் நோட்டுகள், இன்றே வழங்கப்படுகின்றன.

அறிவுறுத்தல்

மேலும், 8ம் வகுப்பு வரையிலான, அனைத்து மாணவ, மாணவியருக்கும், இலவச சீருடை களும் வழங்கபட உள்ளன.இவற்றை எல்லாம் உடனடியாக வழங்கும்படி, அரசு உத்தர விட்டு உள்ளது. இலவசங்கள் வினியோகத் திற்கு பின், பள்ளிகளுக்கு விடுமுறை விடப் படும். நாளை 

முதல், வழக்கம் போல வகுப்பு கள் துவங்கும். தனியார் பள்ளிகளில், புதிய மாணவர்களை வரவேற்றும், புதிய வகுப்புக்கு மாறும் மாணவர் களை வாழ்த்தியும், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

முதல் நாள் என்பதால், மாணவர்கள், சீருடை அணிந்தே வர வேண்டும் என, பள்ளிகள் அறி வுறுத்தி உள்ளன.இதற்கிடையில்,ஓரிரு மாவட் டங்களில் மட்டும், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 

பள்ளிகள் திறப்பு விஷயத்தில், உள்ளூர் நிலவ ரத்திற்கு ஏற்ப, அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவெடுக்கலாம் என, அரசு ஏற்கனவே கூறியுள்ளது.

பழைய 'பஸ் பாஸ்'

'பள்ளி மாணவர்கள், புதிய, 'பஸ் பாஸ்' வழங்கப் படும் வரை, கடந்த ஆண்டு பாசை பயன்படுத்தி, இலவசமாக பயணம் செய்யலாம்' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 

பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான பஸ் பாஸ் வழங்கும் பணி, இன்னும் துவங்கவில்லை. அதனால், மாணவர் கள், பழைய பஸ் பாசை பயன்படுத்த லாம் என, அரசு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து 

உள்ளனர்.பழைய பாஸ் வைத்திருக்கும் மாணவர்களை, பஸ்களில் அனுமதிக்கும்படி, நடத்துனர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

புதுச்சேரி:''வெயில் தாக்கம் குறையாததால், புதுச்சேரியில் கோடை விடுமுறை நீட்டிக்கப் பட்டு, 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்,'' என, அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார். இதுகுறித்து, முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசித்த பின் கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது:

விடுமுறை விடாமல் பள்ளியை தொடர்ந்து நடத்தினால் தான், ஓராண்டு பாடங்களை நடத்தி முடிக்க முடியும். கடந்த ஆண்டு மழை பெய்யாததால், மழை விடுமுறை விடப்பட வில்லை. இந்த ஆண்டு, கனமழை இருக்கும் என, கூறப்படுகிறது. 

விடுமுறை விட்டால், சனிக்கிழமை தோறும் பள்ளிகள் திறக்க வேண்டிய சூழல் ஏற்படும். இருந்தும், கோடை வெயில் சுட்டெரிப்பதாலும், எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுப்பதாலும், பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டு, வரும், 12ல், பள்ளிகள் திறக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

TET' தேர்வு விடைத்தாள் அடுத்த வாரம் திருத்தம் - ஜூலை முதல் வாரத்தில், முடிவுகள்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்குகிறது. தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடந்தது. 

இதில், முதல் தாளில், இரண்டு லட்சத்து, 37 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளில், ஐந்து லட்சத்து, மூன்றாயிரம் பேரும் பங்கேற்றனர். கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகை, வினாத் தாள் அடிப்படையில் தேர்வு நடந்தது. தேர்வுக்கான விடைக்குறிப்புகள், இரு வாரங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டு, தோராய விடைக்குறிப்பு வெளியானது. இதில், விடைகள் குறித்து சந்தேகம் அடைந்தவர்கள், சரியான விடைக்குறிப்புகளை கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, கடிதம் எழுதினர்.

இந்த கடிதங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்ததில், வாரியம் அளித்த பல விடைக்குறிப்புகள் தவறாகவும், சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. 

ஒரு வாரத்தில், விடைத்தாள் திருத்தம் துவங்கு கிறது. ஜூலை முதல் வாரத்தில், முடிவுகள் வெளியாகும் என, கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பிளஸ் 1க்கு சிறப்பு வகுப்பு

இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கு, பொதுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், தினமும் சிறப்பு வகுப்பு கள் நடத்த, பள்ளிகள் முடிவு செய்துள்ளன. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத் தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 

எனவே, பிளஸ் 2க்கு நடத்துவது போல, பிளஸ் 1க்கும், காலை மற்றும் மாலையிலும், சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகளை நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்து உள்ளன. வரும் திங்கட்கிழமை முதல், இந்த சிறப்பு வகுப்புகள் துவங்கும் என, பல பள்ளிகள் அறிவித்து உள்ளன.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!