Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 8 June 2017

மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேள தாளத்துடன் வரவேற்ற அரசுப் பள்ளி!நேற்று திருவிழா முடிந்த களைப்பில், கிராமத்தில் பலரும் விடிந்தும் உறங்கிக்கொண்டிருந்தனர். தீடீரென்று மேளமும் நாதஸ்வரமும் இசைக்கும் சத்தத்தைக் கேட்டு அதிர்ந்து எழுந்தனர். வீட்டு வாசலுக்கு வந்து பார்த்தால் பள்ளிச் சீருடையுடன், கழுத்தில் மாலையோடு சின்னப் பிள்ளைகள் சென்றுகொண்டிருக்க, அவர்களுக்கு முன் இசைக்குழு வாசித்துக்கொண்டு சென்றது.

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியத்தின் வடசிறுவளூரில் நடந்த சம்பவம்தான் இது. இந்தக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விழாதான் இது என்றால் நம்ப முடிகிறதா? அந்த ஊரே வியந்துபார்க்க புதிய மாணவர்கள் பள்ளியை நோக்கி நடந்தனர். வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ராஜேஷிடம் இது குறித்து கேட்டோம்.


"வழக்கமாக அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை என்பது ஜூன் மாதத்தில் தொடங்கி ஜூலை மாதத்தில்தான் முடிவடையும். இதனால் தாமதமாக சேரும் மாணவர்கள் சில பாடங்களைத் தவற விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதைத் தடுக்க, பள்ளி முதல் வேலை நாளிலேயே மாணவர் சேர்க்கையை முடித்துவிட திட்டமிட்டோம். அதன்படி எங்கள் பள்ளியின் சிறப்புகளை ஒரு மாதத்துக்கு முன்பே ப்ளெக்ஸ் பேனர் அடித்து விளம்பரப்படுத்தியிருந்தோம். அந்த விவரங்களைச் சின்ன நோட்டீஸாக அச்சடித்து இரண்டு நாள்களுக்கு முன் கிராமத்தின் அனைத்து வீடுகளிலும் கொடுத்தோம்.

எங்கள் பள்ளியின் எல்லைக்கு உட்பட்ட வடசிறுவளூர், நாகபுரம், மல்லிகா புரம், சுடரொளி நகர் ஆகிய பகுதிகளில் புதிதாக பள்ளியில் சேரும் வயதிலிருப்பவர்களைக் கணக்கெடுத்தோம். மொத்தம் 26 பேர் இருந்தனர். அவர்களுக்குப் பள்ளிச் சீருடையைத் தயார் செய்தோம். நேற்று முதல்நாளே அவர்களின் வீடுகளுக்குச் சென்று, மறுநாள் காலை பிள்ளைகளைத் தயாராக இருக்கச் சொன்னோம். இந்தச் செய்தியை அறிந்த ஊர் மக்கள் ஒரு வருடத்துக்குப் பள்ளியின் அடிப்படைத் தேவைகளை அன்பளிப்பாக தருவதாக கூறினர். இது எங்களின் முயற்சியை இன்னும் உற்சாகப்படுத்தியது. நேற்று பள்ளிச் சீருடை, மாலை அணிவித்து ஊருக்கு பொதுவான கோவிலுக்கு அழைத்து வந்தோம். ஊர் மக்களுக்கும் பள்ளிக்குத் தேவையான வாளி, துடைப்பம் போன்ற பொருட்களுடன் எங்களோடு இணைந்துகொண்டனர். அங்கிருந்து ஊர்வலமாக பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வந்தோம். எங்களின் முயற்சியை வாழ்த்த உதவி தொடக்கக் கல்வி அலுவரும் வட்டார வள மேற்பார்வையாளரும் வந்திருந்தனர்.இந்த நிகழ்ச்சியில் எங்களை நெகிழ்ச்சியடைய வைத்த விஷயங்கள் இருக்கின்றன. தனியார் பள்ளியில் சேர்க்கவிருந்த தனது இரண்டு பிள்ளைகளை இந்த நிகழ்ச்சியைப் பார்த்து எங்கள் பள்ளியில் ஒரு பெற்றோர் சேர்த்தனர். மாணவர்களை அழைத்துவரும்போது மேளம், நாதஸ்வரம் இசைத்த கலைஞர்கள் தங்களுக்கான ஊதியத்தை வாங்க மறுத்துவிட்டனர். 'நல்ல விஷயம் செய்றீங்க... அதுக்கு எங்க பங்களிப்பா இருக்கட்டும்' எனச் சொல்லிவிட்டார்கள். ஊரையே அசர வைக்குமளவுக்கு இரண்டு மேளம், இரண்டு நாதஸ்வரம் கச்சேரியை நடத்தியவர்களின் நல்ல மனதைப் புரிந்துகொண்டோம். அதுபோல, மைக், ரேடியோ செட் அமைத்தவரும் ஒரு ரூபாய்க்கூட வேண்டாம் என மறுத்துவிட்டார். சிறிய அளவில் ஹோட்டல் நடத்துபவர் பள்ளி வந்த சிறப்பு விருந்தினருக்கு தொகை ஏதும் வாங்கிக்கொள்ளாமல் விருந்தளித்தார். ஊரே சேர்ந்து அரசுப் பள்ளியைத் தாங்கிப் பிடிக்கிறது எனும் நம்பிக்கையும் அதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற உறுதியும் நேற்று பிறந்தது.

எங்கள் பள்ளியில் சுகாதாரத்துடன் கழிவறைகளைப் பராமரிப்பதைப் பார்த்தாலே மாணவர்கள் மீதான பள்ளி ஆசிரியர்களின் அக்கறையும் கவனிப்பும் புரிந்துவிடும். தலைமை ஆசிரியர் பத்மாவதி அவர்கள், மாணவர்களுக்கு உதவும் விதத்தில் புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பவர். இந்திய அளவில் நடத்தப்படும் 'டிஸைன் ஃபார் சேஞ்ச்' போட்டியில் எங்கள் பள்ளி மாணவர்கள் இரண்டு முறை பங்கேற்று பரிசுகளைப் பெற்று வந்திருக்கின்றனர். வட்ட, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் ஒன்றையும் விட்டு வைப்பதில்லை. இன்னும் நிறைய சொல்லலாம். மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் திறமைகளைக் கொண்டு வர முயல்கிறோம்" என்றார் ராஜேஷ். 

அரசுப் பள்ளிகளின் உற்சாகம் இன்னும் பல மடங்குகள் அதிகரிகட்டும்.

"SCIENCE EXPRESS TRAIN" - 15.06.2017 - 30.06.2017 வரை மாணவர்கள் பார்வையிடுவதற்காக தமிழக்தில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும் - மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு - நிற்கும் இடங்கள் மற்றும் செயல்முறைகள்

I.T.I, எனப்படும் தொழில் பயிற்சி நிறுவனங்களை பள்ளிகளாக மாற்ற அரசு முடிவு !!

நாடு முழுவதும் உள்ள, ஐ.டி.ஐ., எனப்படும் தொழில் பயிற்சி நிறுவனங்களை, முறையான பள்ளிகளாக மாற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும், ஆண்டுதோறும், பல லட்சம் பேர், ஐ.டி.ஐ., பயிற்சி முடிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு, 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 சான்றிதழ் இல்லாததால், மேற்படிப்புக்கு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. அதுபோலவே, தொழில் 
சார்ந்த பயிற்சி மற்றும் கடன்கள் பெறுவதிலும் சிக்கல் இருந்து வருகிறது. எனவே, ஐ.டி.ஐ.,க்களை, முறையான பள்ளிகளை போல, நாடு தழுவிய அளவில், ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் நலத்துறை அமைச்சர், ராஜீவ் பிரதாப் ரூடி கூறியதாவது:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அல்லது தனியாக ஏற்படுத்தப்படும் வாரியத்தின் கீழ், ஐ.டி.ஐ.,க்கள் கொண்டு வரப்படும். இதன் மூலம், ஐ.டி.ஐ.,யில் பயிலும் மாணவர்களுக்கு, தேசிய அளவில் தேர்வு நடத்தப்பட்டு, 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2க்கு நிகரான சான்றிதழ் வழங்கப்படும்.ஐ.டி.ஐ.,களுக்குரிய பாட திட்டத்தை, புதிய வாரியம் உருவாக்கும். இதுபோலவே, தொழிலாளர் நலத் துறை வசம் உள்ள, ஐ.டி.ஐ.,க்கள், இனிமேல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறையின் கீழ் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஊழியர், ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க உத்தரவு வருகிறதா?- பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்!!


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்குமாறு உத்தரவு வரவிருக்கிறதா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்தார்.

சென்னை விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகளை வழங்கினார். விழாவில் அவர் கூறியதாவது:

தமிழக அரசு வெளிப்படைத்தன் மையுடன் செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் வெளிப்படையாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆணைகள் வழங்கப் பட்டன என்பதை அனைவரும் நன்கு அறிவர். ஆசிரியர்கள் எந்தவிதமான மன உளைச்சலும் இல்லாமல் நல்ல முறையில் பணியாற்ற இந்த அரசு என்றும் துணை நிற்கும். தற்போது கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கை யையும் மக்கள் கூர்ந்து கவனிக் கிறார்கள். கல்வித்துறையை மேம் படுத்துவதன் மூலம் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழும்.
 
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 20 லட்சம் பேருக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு களை அனுப்பினோம். இது இந்தியா வில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சரித்திர சாதனை ஆகும். பாகுபாடு காரணமாக மாணவர் களுக்கு ஏற்படும் மன உளைச் சலைத் தடுக்கும் வகையில் பொதுத் தேர்வுகளில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறையை இந்த ஆண் டிலிருந்து ரத்து செய்துள்ளோம். மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு களுக்கான தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியிட்டிருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட் டையன் கூறினார்.

விழாவில் தென்சென்னை எம்பி டாக்டர் ஜெ.ஜெயவர்தன், தி.நகர் எம்எல்ஏ சத்யா, விருகம்பாக்கம் எம்எல்ஏ விருகை ரவி, பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாண வர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு கள், சீருடை, காலணி, லேப்-டாப், சைக்கிள் என 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படு கின்றன. தற்போது முதல்கட்டமாக பாடப்புத்தகம், நோட்டு, சீருடை ஆகிய மூன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. எஞ்சியவை விரைவில் வழங்கப்படும். பள்ளி திறந்த முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 3 லட்சம் மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, சீருடை வழங்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு வைக்கப்போகிறார்களே, வினாத்தாள் எப்படி இருக்குமோ என்ற அச்சம் மாணவர்களுக்கு இருக்கிறது. அவர்களின் அச்சத் தைப் போக்கும் வகையில் ஒரு வாரத்தில் அவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். அப் போதுதான் அதற்கேற்ப ஆசிரியர் கள் பயிற்சி அளிக்க முடியும். அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு அரசு பள்ளி மாண வர்களைத் தயார்படுத்த அவர்க ளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க முடிவுசெய்துள்ளோம். இதற்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட இடத்தை தேர்வுசெய்து அங்கு சனிக்கிழமை தோறும் 3 மணி நேரம் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

அரசு ஊழியர்களும் அரசு பள்ளி ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறித்து கேட்கிறீர்கள். கல்வி என்பது ஒருவரின் மனநிலையைப் பொறுத்தது. ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெறுவோர் பெரும்பாலும் அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகளில் படித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் கூட தயாராக உள்ளது. அப்படிப்பட்ட நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன். ஜூன் 15-ம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது 40-க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம்

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், புதிய பஸ் பாஸ் வழங்கப்படும்வரை, மாணவர்கள் தாங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் பழைய பஸ் பாஸை பயன்படுத்தி அரசு பஸ்களில் பயணம் செய்யலாம். இது தொடர்பாக அனைத்து போக்குவரத்து கிளை மேலாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSLC - ENGLISH MEMORY POEMS DOWNLOAD MP3 FORMAT


CLICK HERE - MANLINESS

CLICK HERE - GOING FOR WATER

CLICK HERE - THE CRY OF THE CHILDREN

CLICK HERE - MIGRANT BIRD

INSPIRE AWARD 2017-2018-LAST DATE JUNE 30


Click Here-Online nomination for the year 2017-18 are now being made open to all schools w.e.f. 01 April 2017. The nomination will remain open till 30 June 2017

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கோரும் போது அளிக்க வேண்டிய விண்ணப்ப படிவம்!!

அரசுப்பள்ளி மாணவன் மாஸ்கோ விண்வெளி மையம் சென்று தான் கற்ற அனுபவங்களை பகிரும் செய்தி

அரசுப் பள்ளி மாணவிகளை ஊக்குவிக்க விடுமுறை ஊதியத்தை செலவிடும் ஆசிரியர் பொன்.தங்கராஜ் !!

கோடை விடுமுறைக் காலத்தில் பெறும் ஊதியம் முழுவதையும் பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கச் செலவிட்டு வருகிறார் புதுக்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் பொன்.தங்கராஜ்.

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் பொன்.தங்கராஜ். இவர், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் கோடை விடுமுறைக் கால ஊதியத்தை, அப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்காக செலவிட்டு ஊக்கம் அளித்து வருகிறார்

தனது கல்விப் பணி குறித்து ‘தி இந்து’விடம் கூறியதாவது:

‘‘எனக்கு 49-வது வயதில்தான் (2010) ஆசிரியர் பணி கிடைத்து, புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். சமூக அறிவியல் பாடம், போட்டித் தேர்வுகளுக்கு மிக முக்கியமானது. இதனால், இந்தப் பாடத்தைப் பற்றிய புரிதலை மாணவிகளிடையே ஏற்படுத்தவும், இப்பள்ளியை நாடிவரும் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு உதவிடும் வகையிலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கி வருகிறேன்.

இதுவரை 5 மாணவிகள் பரிசுத் தொகை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 3 மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, 99 மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ரூ.1000 வீதமும், இந்த பாடத்தை ஆங்கில வழியில் படித்து நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவிகளுக்கு தலா ரூ.2 ஆயிரமும் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மிகவும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும், நூலகங்களுக்கும் புரவலர் நிதி வழங்கி வருகிறேன்.

மேலும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற அரசுப் பணிகளுக்கு செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்பதால், இந்த பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், சிறப்புக் கையேடும் வழங்கப்படுகிறது. கோடை விடுமுறையான மே மாதத்துக்குரிய எனது ஊதியம் முழுவதையும், இப்பணிகளுக் காகவே செலவிட்டு வருகிறேன். மாணவப் பருவத்தில் நான் சந்தித்த வறுமையின் தாக்கமே இதற்குக் காரணம்’’ என்கிறார் ஆசிரியர் பொன்.தங்கராஜ்.

தொடக்கக் கல்வி -அரசு நலத்திட்டங்கள் 2012-2013 கல்வியாண்டு முதல் 2017-2018 கல்வியாண்டு முடிய ஒவ்வொரு நலத்திட்டங்களின் தலைப்பின் கீழ் பதிவேடுகள் உருவாக்கி தேவைப்பட்டியலின் படி பதிவுகள் மேற்கொண்டு பராமரித்தல் சார்புபிளஸ் 1க்கு 'அட்மிஷன் கவுன்சிலிங்' : பள்ளிக்கல்வியின் அடுத்த அதிரடி

இன்ஜி., - மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில், விரும்பிய பாடப்பிரிவில் சேர, பிளஸ் 1 வகுப்புக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் முறை கொண்டு வரப்படுகிறது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் கூட்டணி, பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. பொதுத் தேர்வுகளுக்கான, ரேங்கிங் முறை ஒழிப்பு; பிளஸ் 1க்கு கட்டாய தேர்வு; பள்ளி திறக்கும் நாளிலேயே பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு உள்ளிட்ட, பல மாற்றங்களை அறிவித்துள்ளது.

பாடத்திட்டத்தை மாற்ற புதிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட உள்ளது. நுழைவு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பள்ளிகளில், சிறப்பு பயிற்சி அறிமுகமாகிறது. இந்த வரிசையில், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கையில், கவுன்சிலிங் முறை அமலுக்கு வர உள்ளது; விரைவில் இதற்கான அறிவிப்பு ெவளியாகும்.

பள்ளிக்கல்வி அதிகாரிகள், இத்திட்டம் நடைமுறையில் உள்ள கேரளா சென்று, அது பற்றிய விபரங்களை சேகரித்து வந்துள்ளனர். இதன்படி, வரும் கல்வி ஆண்டில் ஒற்றை சாளர கவுன்சிலிங் முறை, அறிமுகமாகிறது. 10ம் வகுப்பில் மாணவர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், எந்தெந்த பாடப்பிரிவில் சேர வேண்டும் என்பதற்கு விதிகள் உருவாக்கப்படும்.

இன்ஜி., மற்றும் மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளின், பிளஸ் 1 இடங்கள் மற்றும் பாடப்பிரிவுகள் பட்டியலிடப்படும். ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற்று, மதிப்பெண் அடிப்படையில், பாடப்பிரிவு ஒதுக்கீட்டு பட்டியல் தயாரிக்கப்படும். 

இதில், மாணவர் எந்த பள்ளியில் சேர விரும்புகிறாரோ, அந்த பள்ளியில் மதிப்பெண் அடிப்படையில் சேரலாம். தனியார் பள்ளிகள், 50 சதவீத இடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க வழி வகை செய்யப்படும்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாடத்திட்ட வழிகாட்டல் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்

பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, 11 ஆண்டு களாக, காலாண்டு, அரையாண்டு தேர்வு பாடத்திட்டம் வெளியிடவில்லை. இந்த ஆண்டாவது வெளியிடப்படுமா என, ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: 

பள்ளி திறக்கும் போதே, பொது தேர்வு தேதியை அறிவித்தது, தொலைநோக்கு பார்வையை காட்டுகிறது. அதேநேரம், மாணவர்களின் படிப்படியான வளர்ச்சி மற்றும் உடனடி தேவைகளையும், அதிகாரிகள் மறந்து விடக்கூடாது. தற்போதைய நிலையில், அரசு பள்ளி மாணவர்களை, அதிக மதிப்பெண் பெற வைக்க, பாடத்திட்ட வழிகாட்டி குறிப்புகள் தேவை.

மூன்று பருவ தேர்வுகள், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில், ஒவ்வொரு பாடப்பிரிவு வாரியாக, எத்தனை அலகுகளை முடித்திருக்க வேண்டும் என்ற குறிப்புகள், பல ஆண்டுகளாக வழங்கவில்லை. தற்போதைய பாடத்திட்டத்தில், 2006ல் முதன்முதலாக, பாடத்திட்டம் குறித்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. காலப்போக்கில் இந்த முறையும் கைவிடப்பட்டதால், மாவட்டந்தோறும், பாடம் நடத்தும் அளவு மாறுகிறது. 

பழைய பாடத்திட்ட வழிகாட்டுதல் படி, தேர்வுகளில் வினாத்தாள்கள் இடம்பெறுவதில்லை. பல பள்ளிகளில், தேர்வு முடிந்த பின் தான், தேர்வில் இடம்பெற்ற பாடமே நடத்தும் சூழல் உள்ளது.எனவே, ஒவ்வொரு தேர்வுக்குமான, 'போர்ஷன்' என்ன; அதை எந்த மாதம், வாரத்தில் முடித்திருக்க வேண்டும்; எப்போது, 'ரிவிஷன்' செய்ய வேண்டும் என, தெளிவான வழிகாட்டுதல் தேவை. மாநிலம் முழுமைக்கும் ஒரே மாதிரி வினாத்தாள்களை, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் கொண்டு வர வேண்டும். 

இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

பள்ளிகளில் இறை வணக்க கூட்டம் எப்படி நடத்த வேண்டும் - கல்வித்துறை சுற்றறிக்கை.

PGTRB - ஆசிரியர்கள் பணி இட ஒதுக்கீடு வழக்கு பணி நியமன ஆணை வழங்கக்கூடாது

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் மொத்தப் பதவிகளில் 4 சதவீதம் ஒதுக்க வேண்டும். அச் சட்டத்தின்படி 4 சதவீதம் என்ற அளவீட்டில் 67 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் அளித்த உத்தரவு வருமாறு:

 கடந்த மே 9ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் கிரேட்-1 பணிக்கான விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை தொடங்கலாம். ஆனால், எந்த நியமனத்தையும் ெசய்யக்கூடாது. வழக்கு வரும் 16ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

''நீட் உட்பட, மத்-திய அரசின் நுழைவு தேர்-வு-களுக்கு, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறிஉள்ளார்.

தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

மாணவ, மாணவியருக்கு இலவச புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கும் விழா, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள, ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

மாதிரி வினாத்-தாள் : இதில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று பேசி-யதா-வது: மாண-வர்க-ளுக்கு யோகா மற்றும் சாலை விதி-கள் குறித்த பயிற்-சி-கள் தரப்படும். 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்-வு-களுக்கு எப்-படி வினாத்-தாள் வர உள்ளது என்-பது குறித்து, ஆசி-ரி-யர்கள், மாண-வர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இந்த பணி-கள், இன்னும் ஒரு வாரத்தில் முடியும். பிளஸ் 1 மாண-வர்க-ளுக்கு மாதிரி வினாத்-தாள் வழங்கப்படும்.

42 அறி-விப்-பு : நீட் - ஜே.இ.இ., போன்ற மத்-திய அரசின் அனைத்து நுழைவு -தேர்வுக-ளை-யும் சந்-திக்க, ஒன்-றி-யத்-துக்கு ஒரு இடம் வீதம், சனிக்கிழமையில், சிறப்பு பயிற்சி அளிக்கப்-ப-டும். கல்-வித்-துறை குறித்து, 42 அறி-விப்-பு-களை, வரும், 15ம் தேதி, பள்-ளிக் கல்வி மானி-யக் -கோ-ரிக்கையில் எதிர்-பார்க்க-லாம். இவ்வாறு அவர் பேசினார்.

அரசு ஊழியர் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடு? : 'அரசு ஊழி-யர்க-ளின் பிள்-ளை-கள், அரசு பள்-ளி-யில் சேர்க்கப்-பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்படுமா?' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ''அரசு பள்-ளி-களில் மாணவர் சேர்க்கை குறித்து, விழிப்-பு-ணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த ஆண்டு, 1 லட்-சம் மாண-வர்கள் கூடு-த-லாக சேர்ந்துள்ளனர். அரசு பள்ளி, கல்லுாரிகளில் இருந்தே, சிறந்த கல்-வியாளர்கள் தேர்வாகி உள்ளனர்; அதற்கான பட்-டி-யலை தர தயார். எனவே, எல்-லா-ரும் இதற்கு ஒத்-து-ழைப்பு தருவர்,'' என்றார்.

ஐகோர்ட்டில் முறையீடு : மருத்துவ படிப்புக்கான நுழைவு தகுதி தேர்வு, 'நீட்'க்கு விலக்கு அளிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நேற்று முறையிடப்பட்டது.உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' கூடியதும், மூத்த வழக்கறிஞர் விஜயன், ''கடந்த ஆண்டில் விலக்கு அளிக்கப்பட்டது போல், இந்த ஆண்டும், 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்; இது குறித்து தாக்கல் செய்யும் மனுவை, அவசரமாக விசாரிக்க வேண்டும்,'' என்றார். மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, ''உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவி காலம், 30ல் முடிகிறது; எனவே, அது தொடர்பான வழக்கையும் விசாரிக்க வேண்டும்,'' என்றார்.

இது குறித்து, மனுக்கள் தாக்கல் செய்யும் பட்சத்தில், அதை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக, முதல் பெஞ்ச் தெரிவித்தது

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுக்கு 'தத்கல்' விண்ணப்பம் இன்று துவக்கம்

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுக்கு, தத்கல் முறையில், இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

ஜூனில் நடக்கவுள்ள, பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காவிட்டால், 'தத்கல்' முறையில், சிறப்பு கட்டணத்துடன் இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம். தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில், பெயரை பதிவு செய்ய வேண்டும். பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலையும்; தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்து பங்கேற்காதவர்கள், ஹால் டிக்கெட்டையும், விண்ணப்பிக்கும் அலுவலரிடம் காட்ட வேண்டும்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள், திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலுார், வேலுார் மற்றும் சென்னையில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில் மட்டும், தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10ம் வகுப்புக்கும் விண்ணப்பம் : இதேபோல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், தத்கல் சிறப்பு கட்டண திட்டத்தில் விண்ணப்பிக்க, அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதோர் மற்றும் விண்ணப்பித்து தேர்வை எழுத முடியாதோர், ஜூனில் நடக்கும் சிறப்பு துணை தேர்வில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பங்களை, தத்கல் சிறப்பு கட்டணத்துடன், இன்றும், நாளையும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என, கூறப்பட்டுள்ளது.

International Conference for Teacher's 2017 in Alagappa University..

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!