Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 10 June 2017

"அரசுப் பள்ளியில் படிக்கிறேன்னு சந்தோஷமா சொல்லு!" மகளுக்கு அப்பாவின் நம்பிக்கை!

தனியார் பள்ளியில் அட்மிஷன் கிடைக்கவில்லை, கட்டணம் அதிகமாக இருக்கிறது... எனப் பல காரணங்களால் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் சூழல் பெற்றோர்களுக்கு ஏற்படுவதுண்டு. தனியார் பள்ளியில் சேரப்போகிறோம் எனும் ஆசையில் இருக்கும் பிள்ளைகள் அரசுப் பள்ளி என்றதும் சோர்ந்துவிடுவார்கள். அப்படித்தான் மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் பூங்குழலியும் சுணக்கமானார். பூங்குழலியின் அப்பா மருதுபாண்டியனுக்கு இது தெரியவந்தது. உடனே அவர் தன் மகளுக்கு புதிய நம்பிக்கையும் கொடுத்தார். அது குறித்து அவரிடம் பேசினோம். (மேலே உள்ள படத்தில்: மருதுபாண்டியன் மற்றும் பூங்குழலி)


"நான் சொந்தமாக பிஸினஸ் பண்ணிட்டு இருக்கேன். நானும் என் மனைவியும் அரசுப் பள்ளியிலதான் படிச்சோம். நல்லாத்தான் இருக்கோம். எங்களோட மூத்த மகள் பூங்குழலி, தனியார் பள்ளியிலதான் படிச்சா. ஸ்கூலுக்குப் போகனும்னா காலையில ஏழு மணிக்கே பஸ் ஸ்டாப்ல ரெடியா இருக்கணும். அப்படின்னா எத்தனை மணிக்கு எழுந்திருச்சி, தயாராகணும்னு பார்த்துக்கோங்க... அதே போல சாயந்தரம் அவ வர்றதுக்கு ஐந்தரை, ஆறு மணியாயிடும். ரொம்ப டயர்டாத்தான் வருவா. அப்பறம் ஹோம் வொர்க்கும் நிறைய தந்திருப்பாங்க. அதையெல்லாம் முடிச்சிட்டு தூங்கத்தான் நேரம் இருக்கும்.

பூங்குழலி மேடையில நல்லா பேசுவா. நிறைய போட்டிகளில் கலந்துப்பா. நாள் முழுக்க பிஸியாகவே இருந்தா கலை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது இல்லையா... அவளுக்கு விருப்பமான விஷயங்களையும் செஞ்சாதானே ஸ்கூலேயும் சந்தோஷமா இருப்பா. அதனாலதான் எங்க ஊரு அரசுப் பள்ளியிலேயே சேர்த்துட்டேன். இந்தப் பள்ளி எங்க வீட்டுலேருந்து நடந்து போற தூரம்தான். அதனால் நிறைய நேரம் கிடைக்கும். அரசுப் பள்ளியில சேர்க்கப்போறதை முதலில் என் மனைவிகிட்ட சொல்லி புரிய வைச்சேன். பிறகு, பூங்குழலியிடம் சொன்னேன். அவ 'ஓகே'னு சொன்னப்பறம்தான் இந்தப் பள்ளியில சேர்த்தேன். எங்களோட இரண்டாவது பொண்ணு கயல்விழி இந்த வருஷம் தனியார் பள்ளியில அஞ்சாவது படிக்கிறா. அவளையும் அடுத்த வருஷம் பூங்குழலி படிக்கிற பள்ளியிலேயே சேர்க்கப்போறேன்.

முதல் நாள் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்த பூங்குழலியிடம் 'ஸ்கூல் எப்படி இருக்கு'னு கேட்டேன். 'நல்லா இருக்குப்பா, ஆனா டாய்லெட்தான் சுத்தமாக இல்லை. மத்தப்படி சூப்பரா இருக்கு'னு சொன்னாள். 'சரி, உனக்கு நிஜமாகவே இந்த ஸ்கூல் பிடிச்சிருக்கா'னு கேட்டேன். அவள் தயங்கிட்டே, 'பிடிச்சிருக்குப்பா, ஆனா, யாராவது எங்க படிக்கிறனு கேட்டா, ஃபேமஸான ஸ்கூலில் படிச்சிட்டு இப்ப கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்கிறேனு சொல்றதுக்கு கூச்சமாக இருக்குப்பா'னு சொன்னாள்.அவளோட பிரச்னையைப் புரிஞ்சிகிட்டேன். 'நீ நினைக்கிறது தப்பில்ல, ஏன்னா, பிரைவேட் ஸ்கூலில் படிக்கிறதுதான் பெருமையான விஷயம்னு எல்லார் மனசுலேயும் இருக்கு. அதுதான் தப்பு. இப்ப கவர்மென்ட் காலேஜ்ல டாக்டருக்கு படிக்கிறதுக்கு சீட் கிடைச்சா கூச்சப்படுவியா?னு கேட்டேன். அவள் இல்லைனு தலையாட்டினாள். 'சரி, கவர்மெண்ட் ஆபிஸில் வேலை கிடைச்சா அதை மத்தவங்க கிட்ட சொல்லும்போது கூச்சப்படுவியா'னு கேட்டேன். அதற்கு அவள், 'இல்லப்பா சந்தோஷமா சொல்லுவேனு' சொன்னாள். 'அதுபோலத்தான் குழலி இது. கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கிறதையும் சந்தோஷமா சொல்லு. யாராவது உங்கிட்ட கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கிறதைப் பத்தி நக்கலாக விசாரிச்சா, உங்களுக்கு கவர்மென்ட் வேலைக் கிடைச்சாலும் இப்படித்தான் நினைப்பீங்களானு தைரியமா கேளு'னு சொன்னேன். அவளும் சிரிச்சிகிட்டே 'சரி'னு சொன்னாள்.  

பிரைவேட் ஸ்கூலில் பீஸ் கட்டலைனா வெளியில நிற்க வெச்சிடுவாங்க. அரசுப் பள்ளியில அப்படி இல்ல, புத்தகம், யூனிஃபார்ம்னு எல்லாம் கிடைக்கும். வசதி இருக்கிறவங்க, இல்லாதவங்கனு எல்லார் வீட்டிலேருந்து பிள்ளைகள் வருவாங்க. நல்லா பழகுவாங்க. நீயும் அவங்களோடு சந்தோஷமாப் பழகு. டீச்சரைப் பார்த்து பயப்படாமல் பேசு. இன்னைக்கு பெரிய வேலையில இருக்கிற தொண்ணூறு சதவீதம் பேர் அரசுப் பள்ளியில படிச்சவங்கதாம். அதனால அரசுப் பள்ளியில படிக்கிறதுல எந்தக் கூச்சமும் படாதே. உங்கூட படிக்கிற புள்ளைங்க யாராவது, அப்படி நினைச்சா நான் சொன்னதையெல்லாம் சொல்லு'னு முடிச்சப்ப, பூங்குழலி தெளிவாகிட்டாள். " என்றார் மருது பாண்டியன்.

புதிதாக சேர்ந்த பள்ளிக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த பூங்குழலியிடம் பேசினோம். "இந்த ஸ்கூல் எனக்குப் பிடிச்சிருக்கு அங்கிள். அந்த ஸ்கூலுக்கு போகும்போது காலையில ஆறு மணிக்கு எழுந்திருப்பேன். அவசரம் அவசரமாக கெளம்புவேன். இப்பவும் ஆறு மணிக்குத்தான் எழுந்திருக்கிறேன். மெதுவாக, ரிலாக்ஸா கெளம்பறேன். நானே நடந்து ஸ்கூலுக்குப் போயிடுறேனு சொன்னேன். அப்பாதான் ஒரு வாரம் மட்டும் நானே கொண்டு வந்து விடுறேனு சொன்னாங்க. ரெண்டே நாள்ல நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிட்டாங்க." என உற்சாகமாகச் சொல்கிறார்.

அரசுப் பள்ளி என்பது நமது அரசு நடத்தும் பள்ளி எனும் உணர்வு வந்தாலே இந்தக் கூச்சம் விலகிவிடும். தன் மகளுக்கு மிகச் சரியாக வழிகாட்டும் அப்பாவுக்கு வாழ்த்துகளைச் சொல்வோம்.

DSE - அனைத்து மாவட்ட CEO,DEEO மற்றும் மெட்ரிக்ப்பள்ளி ஆய்வாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்- 12/06/17 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெறுதல் - இயக்குநர் செயல்முறைகள் !!

தடுப்பூசி போடாவிட்டால்... மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி

முறையாக தடுப்பூசி போடாத மாணவர்கள், பள்ளி களுக்கு செல்ல முடியாத வகையில், கிடுக்கிப்பிடி போட, பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டாலும், தொடர்ந்து போட வேண்டிய தடுப்பூசிகள், ௨௦௦௭ முதல் முறையாக போடப்படாதது, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதனால், சமீபத்தில், ரூபெல்லா - தட்டம்மை தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ௧௫ வயது வரை உள்ளவர்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டது.

கால நீட்டிப்பு : இருப்பினும், ரூபெல்லா தடுப்பூசி குறித்த தவறான வதந்திகள் பரவி, மக்களிடையே அச்சம் நிலவியதால், குறித்த காலத்தில், ௧௦௦ சதவீத இலக்கை எட்ட முடியவில்லை. இதற்காக, கால நீட்டிப்பும் செய்யப்பட்டது. இந்நிலையில், முறையாக தடுப்பூசி போடாத மாணவர்களை, பள்ளிகளில் அனுமதிக்காத வகையில், பொது சுகாதாரத் துறை கிடுக்கிப்பிடி போடுகிறது.

இது குறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரி கள் கூறியதாவது: 'சென்னை பொது சுகாதார சட்டம் - 1939'ன்படி, பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போட, பெற்றோரிடம் ஒப்புதல் பெற வேண்டியது இல்லை.

770 டாக்டர்கள் : இது குறித்து, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். இந்த ஆண்டு முதல், இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த உள்ளோம்.விடுபட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில், 770 டாக்டர்களும், நர்சுகளும் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக தடுப்பூசி போடாத மாணவர்கள், பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்படும். இந்த கிடுக்கிப்பிடியால், முறையாக தடுப்பூசி போடப்படும்; எதிர்கால சமுதாயம், ஆரோக்கியமானதாக மாறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் பண மழை!!!

 7-வது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் அகவிலைப்படி ஆகியவை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால், ஜூலை மாதத்தில் இருந்து  50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்,மாற்றிஅமைக்கப்பட்ட சலுகைக்கான பணத்தை ஊதியத்தோடு சேர்த்து பெறுவார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 7-ந்தேதி நடைபெற இருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தநிலையில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அடுத்தவாரம் இது தொடர்பாக முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது அவர்கள் சார்ந்திருக்கும் நகரத்தின் அடிப்படையில் 24 சதவீதம், 16 சதவீதம், 8 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.  அதாவது 25 சதவீதம் முதல் 27 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயித்தது.

இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் நல அமைப்புகள்,  அகவிலைப்படி 30 சதவீதம், 20 சதவீதம், 10 சதவீதம் என இருக்க வேண்டும், இதை அடிப்படை ஊதியத்தோடு இணைத்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்ய நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது. இதில் உள்துறை விவகாரச் செயலாளர், சுகாதாரத் துறை, பணியாளர் நலத்துறை செயலாளர், ரெயில்வே உறுப்பினர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர்.

இந்த அதிகாரமிக்க செயலாளர்கள் குழு கடந்த 1-ந் தேதி கூடி 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள், சலுகைகள் குறித்து ஆய்வு செய்து அதன் முடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பியது.

அதில் மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் அகவிலைப்படி உயர்வு, சலுகைகள் அதிகரிப்பு ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி மத்தியஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது, 27 சதவீதமாக இருக்கும் எனத் தெரிகிறது, இதர நகரங்களுக்கு 24 சதவீதம் வரை இருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றி அமைக்கப்பட்ட அகவிலைப்படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளுக்கான தொகை  ஜூலை மாதம் 18 தேதிக்கு பின் மத்தியஅரசு ஊழியர்களுக்கு ஊதியத்தோடு முன்தேதியிட்டு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.29 ஆயிரத்து 300 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

EMIS - Student Application Form

 Click here

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!