Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 11 June 2017

Interactive Smart Board மூலம் அசத்தும் சொக்கனாவூர் அரசுப்பள்ளி

Interactive Smart Board மூலம் அசத்தும் சொக்கனாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,மதுக்கூர் ஒன்றியம்,தஞ்சாவூர் மாவட்டம்.

தஞ்சாவூர் மாவட்டத்திலேயே அரசுப்பள்ளிகளில் முதன்முறையாக மதுக்கூர் ஒன்றியம் சொக்கனாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தான் Interactive Board வுடன் கூடிய ஸ்மார்ட் க்ளாஸ் வகுப்பு தஞ்சாவூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திரு.ரெங்கநாதன் அவர்களால், முன்னாள் மதுக்கூர் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.மூ.பழனிவேலு மற்றும் பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் திரு.இளங்கோ அவர்கள் முன்னிலையில் 05.10.2016 ல் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கு முழு முதற்காரணமாக இருந்தவர் இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.பெ.பரமேஸ்வரி அவர்கள் என்றால் அது மிகையாகாது.
08.08.2016-ல் இப்பள்ளியின் தலைமையாசிரியராக பணியேற்ற அன்றே பள்ளியின் தரத்தை முன்னேற்றும் முயற்சியினை தம் கையில் எடுத்துக்கொண்டார். இப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் Techno Club செயல்பாடுகளில் சிறப்புடன் விளங்கியதால் அதனை முன்னெடுக்கும் விதமாக, மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Interactive board  உடன்கூடிய smart class ஐ தம் சொந்த செலவில் நிறுவியுள்ளார். மேலும் இவ்வகுப்பிற்கான UPS மற்றும் SPEAKER வசதிகளை இவ்வூரின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்,பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கிராமக்கல்வி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் , மேலும் சொக்கனாவூர் மற்றும் புளியக்குடி ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து தம் பங்களிப்பாக அளித்து பள்ளியின் வளர்ச்சிக்கும் , முன்னேற்றத்திற்கும் துணை நிற்கிறார்கள். மேலும் 2016-17 ஆம் ஆண்டிற்கு மாணவர்களுக்குத் தேவையான stationery things and papers ஐ சென்னையை சார்ந்த AlfasofZ Solutions என்ற IT நிறுவனம் வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இவ்வாண்டு மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க "RO" வசதியுடன் கூடிய குடிநீரை வழங்கவும் உறுதியளித்துள்ளனர்.
இப்பள்ளியின் ஆசிரியர்கள் திரு.க.பாலசுப்ரமணியன்,திருமதி.சா.சித்திக்காள்,
திருமதி.ரு.சாந்தி,
திருமதி.ஆ.சத்தியா,
திருமதி.ரா.சுயம்புகனி
திருமதி.ச.திவ்யா ஆகியோரைக்கொண்ட குழு மிகச்சிறப்பாக செயல்பட்டு, பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறமையை வளர்க்கும் விதமாக Phonetics முறையில் பாடங்களை நடத்துகின்றனர். தம்முடைய மாணவர்களின்  கற்றல் நிலைக்கேற்ப பாடத்தினை எளிமைப்படுத்தி அவற்றை படங்களுடன் கூடிய பாடமாக Powerpoint ல் அனிமேஷனுடன் தாமே உருவாக்கி smartclass ல்  கற்பிக்கின்றனர். மாணவர்களுக்கான செயல்திட்டங்கள், மனவரைபடங்களை கணினியில் வரையவும் பயிற்சியளிக்கின்றனர். இப்பள்ளியின் புதுமையான செயல்பாடுகளின் மூலம் ஈர்க்கப்பட்ட இவ்வூர் மக்கள்  தனியார்பள்ளியில் பயின்ற தம் குழந்தைகளை இப்பள்ளிக்கு மாற்றியுள்ளனர். ஆசிரியர் விடுப்பு எடுத்தாலும் கற்றல் தடையின்றி smart class மூலம் நடைபெறுவதால், மற்றுமொறு  நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய projector ஐயும் தம் சொந்த செலவிலேயே வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார் இப்பள்ளியின் தலைமையாசிரியர் அவர்கள்....

பி.எப்., கணக்கில் ஆதார் இணைக்கவரும் 30 வரை கால அவகாசம்

பி.எப்., சந்தாதாரர்கள், தங்களின் கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், இம்மாதம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான, பி.எப்., கணக்கில், கோடிக்கணக்கானோர் இணைந்துள்ளனர். 
டிஜிட்டல் மயமாக மாறி வரும் நிலையில், நான்கரை கோடி உறுப்பினர்களுக்கு, பி.எப்., நடைமுறையில் எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

பி.எப்., தொகை பெறுதல், ஓய்வூதியம் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட, தற்போதுள்ள நடைமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, பி.எப்., ஓய்வூதியர்கள் மற்றும் சந்தாதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணை, பி.எப்., கணக்கில் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
முதலில், ஏப்., 30க்குள், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இதற்கான காலக்கெடு இம்மாதம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் வர உள்ளன - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

15ல் அதிரடி அறிவிப்பு - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

''கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் வர உள்ளன. வரும், 15ல் இதற்கான அறிவிப்பு வெளியாகும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார். 

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சாதனையாளர்கள் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: 

இந்த அரசு வெளிப்படை தன்மையோடு, கல்வித்துறையில் நடைபோட்டு கொண்டிருக்கிறது. ரேங்க் அடிப்படையில், தனியார் பள்ளிகள் வீரநடை போட்டன. அதை முறியடித்து காட்டியது இந்த அரசு. பிளஸ் 1 தேர்வுக்கு, கேள்வித்தாள் தயாரிப்பது குறித்து, சிந்தித்து செயலாற்றி வருகிறது.

வரும், 15ல் பள்ளி கல்வித்துறையில், இந்த அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. அப்துல்கலாம் கனவை நிறைவேற்ற, நாங்கள் துடித்து கொண்டிருக்கிறோம்.

தனியாரை மிஞ்சும் அளவுக்கு, தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை ஓட்டம் உள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், சிறந்த கல்வியாளர்கள் மட்டுமின்றி, மனித நேயத்தோடு சிந்திக்க கூடியவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

சரஸ்வதி பூஜை, 'சென்டிமென்ட்' காரணமாக, அரசு பள்ளிகளில், செப்., இறுதி வரை, முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. 

அரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, கல்வித் துறை ஊக்குவித்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தால், ஒவ்வொரு ஒன்றிய அளவிலும், ஆட்டோ பிரசாரம் மூலம், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள், வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் உட்பட வசதிகள், ஆசிரியர்களின் திறமை, ஆங்கில வழி போதனை போன்றவற்றை, ஒலி பெருக்கி மூலம் அறிவித்து, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில், செப்., இறுதி வரை மாணவர் சேர்க்கையை நடத்தவும் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. கல்வித் துறை அலுவலர்கள் கூறுகையில், 'பெரும்பாலான மக்கள், சரஸ்வதி பூஜை சமயத்தில், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த சமயத்தில் பள்ளிகளில் சேர்க்கப்படும் போது, மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பர் என்பது, அவர்களின் நம்பிக்கை. எனவே, செப்., இறுதி வரை, அரசு பள்ளி ஆரம்ப வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கும்' என்றனர்.

7 வது சம்பள கமிஷன்: வீட்டு வாடகை படியில் தாராளம்!

அரசு ஊழியர்களுக்கு 7 வது சம்பள கமிஷன் ஆணையத்தின் படி அதிக அலவென்ஸ் மற்றும் விட்டு வாடகைப் படி ஆகியவை ஜூன் மாதம் இறுதி முதல் வழங்கப்படும் என்பது மகிழ்ச்சியளித்துள்ளது. இந்தச் செய்தி  அரசு ஊழியர்களில் யாரெல்லாம் அதிக அலவன்ஸ் மற்றும் வீட்டு வாகைப்படி வேண்டும் என்று காத்திருந்தார்களோ அவர்களுக்க மேலும் மகிழ்ச்சியை அளிக்கும். 


ஜூலை மாதம் முதல் நற்செய்தி 

பல மாத காத்திருப்பிற்குப் பின்பு 52 லடசத்திற்கும் அதிகாமக அரசு ஊழியர்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட உயர்த்தப்பட்ட அலவன்ஸ் வீட்டு வாடகைப்படியுடன் வழங்கப்பட இருக்கின்றது. சம்பள உயர்வுக்குப் பிறகும் இந்தக் கொடுப்பனுவுகள் தொடர்ந்து அப்படியே வழங்கப்படும். 

மத்திய அரசு வீட்டு வாடகைப் படியை தாராளமாக வழங்க இருக்கின்றது 

புதுப்பிக்கப்பட்ட கொடுப்பனவுகளை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் 2016 ஜனவரி 1 முதல் 40,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் மத்திய அரசு வீட்டு வாடகைப்படியை தாரளமையமாக ஊழியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அளிக்க முடிவு செய்துள்ளது என்று கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. 

நுகர்வு அதிகரிக்கும் 

கொடுப்பனுவுகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உடன் நுகர்வு அதிகரிக்கும் என்று அரசு நம்புகின்றது. சென்ற நிதி ஆண்டை விட 2017-2018 நிதி ஆண்டில் தனியார் ஊழியர்களின் நுகர்வு குறைந்துள்ளது. இதனை இந்திய ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. பொருட்களின் விலை குறைந்துள்ளது. பணவீக்கம் ஆர்பிஐ வெளியிட்டுள்ள பணவீக்க கணிப்பில் முதல் அரையாண்டில் 2 முதல் 2.5 சதவீதமாகப் பணவீக்கம் இருக்கும் என்றும், இதுவே இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் 3.5 முதல் 4.5 சதவீதமாகப் பணவீக்கம் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

வீட்டு வாடகைப் படி 

மத்திய அரசு ஊழியர்கள் வீட்டு வாடகைப்படி ஊழியர்கள் இருக்கும் நகரத்தைப் பொருத்து 30, 20 மற்றும் 10 சதவீதமாக வழங்கப்பட்டு வருகின்றது, இதைக் குறைக்கக் கூடாது என்று ஊழியர்கள் சங்கங்களும் கோரிக்கை வைத்துள்ளன. குழு பரிந்துரை அரசு முடிவு அதே நேரம் 7 வது சம்பள கமிஷன் பரிந்துறை குழு 24, 16 மற்றும் 8 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தும் அரசு தாராளமாகவே அதைவிட அதிகமாகவே அளிக்க முடிவு செய்துள்ளது. 

அமைச்சரவை கூட்டம் 

திங்கட்கிழமை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அமைச்சரவை செயலாளருடன் கலைந்துறையாட இருப்பதாகவும் அதில் கொடுப்பனவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. அதே நேரம் இந்தக் கூட்டத்தில் ஊழியர்கள் யூனியன் தலைவர் பக்கத்தில் இருந்து யார் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை. 

தொடரும் சஸ்பென்ஸ் 

வீட்டு வாடகைப் படி மீதான இந்தச் சஸ்பெஸ் இன்னும் ஒரு வார காலம் வரை நீட்டிக்கும் என்று கூறப்படும் நிலையில் அமைச்சரின் இந்தக் கூட்டத்தில் இது குறித்த விவாதம் முக்கியமாக நடைபெறும் என்றும் அதற்கான கோப்புகள் தாயார் நிலையில் உள்ளன என்றும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் வீட்டு வாடகைப் படி மற்றும் அடிப்படை சம்பளம் இரண்டு கோரிக்கைகள் குறித்துத் தான் அரசு தரப்பில் இருந்து என்று வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. 

வீட்டு வாடகைப்படி 27 சதவீதம் அல்லது 27 சதவீதம் அளிக்க வேண்டும் ஒரு பக்கம் பரிந்துறை குழு வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில் அமைச்சரவை ஊழியர்களின் கோரிக்கைப் படி அளிக்கவே முடிவு செய்துள்ளன. சம்பள உயர்வு ஊழியர்களின் சம்பள உயர்வு 6வது சம்பள கமிஷன் போன்றே 187 முதல் 178 சதவீதம் வரை ஊழியர்கள் வசிக்கும் நகரத்தைப் பொருத்து அளிக்க முடிவு செய்துள்ளது. எச்ஆர்ஏ உயர்ந்தால் என்ன ஆகும்? வீட்டு வாடகைப்படியை அரசு இப்போது உள்ள 30, 20, 10 சதவீத அளவில் தொடர்ந்து அளிக்க முடிவு செய்தால் சம்பள உயர்வு 157 முதல் 178 சதவீதம் உறுதியாகும்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மாணவியின் புகார் எதிரொலி அரசு பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுாரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி, சைக்கிள் நிறுத்துமிடம், ஆய்வுக்கூடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், பள்ளி அருகிலேயே செயல்படாமல் கிடக்கும் பொதுப்பணித்துறை கட்டடத்தை, பள்ளியின் பயன்பாட்டிற்கு தரக்கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இப்பள்ளி மாணவி சரஸ்வதி கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து, பிரதமர் அலுவலகத்தில் இருந்து, கோரிக்கையை நிறைவேற்றுமாறு, தமிழக தலைமை செயலகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. பல மாதங்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, அந்த மாணவி மீண்டும் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், 'நாங்கள் அனைவரும் பாசாகி விட்டோம். உங்கள் உத்தரவு இன்னும், பாசாகவில்லை' என, எழுதி இருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வந்த, அமைச்சர் செங்கோட்டையன், கீரனுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வகுப்பறைகள், கழிப்பறை வசதி, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அருகில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின், மாணவி சரஸ்வதியை அழைத்து பாராட்டிய அமைச்சர் செங்கோட்டையன், 'உங்கள் உத்தரவு பாசாகி விட்டது' என, மீண்டும், 

பிரதமருக்கு கடிதம்எழுதும்படி கூறினார்

வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை : தரவரிசை பட்டியல் வெளியீடு

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 14 உறுப்பு மற்றும் 21 இணைப்பு கல்லூரி உள்ளது. இதில், 2017-18ம் கல்வியாண்டில் இளங்கலை படிப்பில் மொத்தம் 2,820 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 

இதற்கு, கடந்த மே 12ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 21,015 மாணவர்கள், 28,014 மாணவிகள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 49,030 பேர் விண்ணப்பித்தனர்.

இந்த மாணவர்களுக்கான மதிப்பெண் தரவரிசை பட்டியலை நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி வெளியிட்டார். 

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிருத்திகா, கோவையை சேர்ந்த கீர்த்தனா ரவி, சேலத்தை சேர்ந்த சோபிலா, தருமபுரியை சேர்ந்த பழங்குடி இன மாணவி சவுமியா, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சாக்சைன் மற்றும் திண்டுக்கல் சேர்ந்த ஆர்த்தி ஆகிய  மாணவிகள் கட் ஆப் மதிப்பெண் 200 பெற்று முதல் ஆறு இடங்களை பிடித்தனர்.  

மேலும், 199.75 கட் ஆப் மதிப்பெண்ணை 4 பேர் பெற்றுள்ளனர். தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி முதல் 24ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. இதில், சிறப்புபிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 16ம் தேதியும், பொதுப்பிரிவு முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையும் நடக்கிறது. மாணவர்களின் தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு தொடர்பான தகவல்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TN GOVT - ASSEMBLY SCHEDULE | 2017
ஆசிரியர்கள் தனது உயர்கல்வியின் அடிப்படையில் உயர் பணிக்கு வேலைவாய்ப்பகம் அல்லது ஆசிரியர் தேர்வு மூலம் விண்ணப்பிக்க தடையின்மைச் சான்று கோருதல் விண்ணப்பம்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!