Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 14 June 2017

நாளை பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கையின்போது 41 வகையான அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது - அதன் முக்கிய அம்சங்கள்

''கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் வர உள்ளன. சட்டப் பேரவையில் 15ம் தேதி அல்லது 16ம் தேதி கல்வி மானியக்கோரிக்கையின்போது 41 வகையான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதன் முக்கிய அம்சங்கள் : 


ரேங்க் அடிப்படையில், தனியார் பள்ளிகள் வீரநடை போட்டன. அதை முறியடித்து காட்டியது இந்த அரசு. பிளஸ் 1 தேர்வுக்கு, கேள்வித்தாள் தயாரிப்பது குறித்து, சிந்தித்து செயலாற்றி வருகிறது.

வரும், 15ல் பள்ளி கல்வித்துறையில், இந்த அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. அப்துல்கலாம் கனவை நிறைவேற்ற, நாங்கள் துடித்து கொண்டிருக்கிறோம்.

தனியாரை மிஞ்சும் அளவுக்கு, தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை ஓட்டம் உள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், சிறந்த கல்வியாளர்கள் மட்டுமின்றி, மனித நேயத்தோடு சிந்திக்க கூடியவர்கள். 

தமிழக சட்டப்பேரவை வரும் 14-ம் தேதி கூட்டப்படுகிறது. அப்போது துறைவாரியாக மானியகோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு முடிவில் துறையின் அமைச்சர் பதில் அளிப்பார். வரும் 16-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் செங்கோட்டையன் பேச உள்ளார். இது குறித்துத்தான் அவர் முன்பே செய்தியாளர்களிடம் சொல்லி இருக்கிறார் என்று கல்வித்துறை வட்டாரத்தில் சொல்கின்றனர்.

அமைச்சர் அறிவிக்கப்போவதாக வரும் தகவல்கள் இவைதான்;

(1)பள்ளிகளில் நியமிக்கப்படும் பகுதி நேர ஆசிரியர்கள் இனிமேல் அவர்களின் சொந்தமாவட்டத்தில் பணிமாறுதல் செய்யப்படுவார்கள்.

(2) மாணவர்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நியமிக்கப்படும். கூடுதல் பணியிடங்களும் உருவாக்கப்படும். விளையாட்டு பீரியடில் மாணவர்களை விளையாட அனுமதிக்கும்படி உத்தரவிடப்படும். 

 (3) தற்போது பள்ளிகளில் உள்ள பழைய கம்ப்யூட்டர்கள் மாற்றப்பட்டு புதிய இப்போதைய அப்டேட்டுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.

(4) மாணவர்களுக்கு அவர்களின் ரத்த வகை, ஆதார் எண் ஆகியவை அடங்கிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஸ்மார்ட் கார்டுகள் மூலமே வழங்கப்படும்.

நீட் தேர்வுக்கு பயிற்சி

பள்ளி 

(5) பாடத்திட்டங்களை மாற்றுவதற்காக பல்கலைக்கழக துணைவேந்தர்கள், இஸ்ரோ விஞ்ஞானிகள் அடங்கிய வல்லுனர்கள் குழு அமைக்கப்பட உள்ளது.

(6) மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் கையேடு வழங்கப்படும்.  நீட் தேர்வு மற்றும் ஐ.ஐ.டி-களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுத பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.

(7) மதுரை மற்றும் கோவையில் ஆசிரியர் இல்லங்கள் புதிதாக திறக்கப்பட உள்ளது.

(8)ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணி மாறுதல்கள் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படும்.

(9) மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.

(10) பள்ளிகளில் தூய்மையை மேம்படுத்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளிகள் வகுப்புக்கு இருவர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர். 

(11) அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும். இதற்காக மனவளக்கலை மன்றத்தில் பயிற்சி பெற்றவர்கள் சம்பளம் இன்றி தன்னார்வலர்களாக நியமிக்கப்படுவார்கள்.

(12) அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடம் கட்டாயம் ஆக்கப்படும்.

(13) ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் பி.எட் மற்றும் டெட் முடித்து காத்திருக்கும் ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்களாக  நியமிக்கப்படுவார்கள்.

(14) ஒரே பள்ளியில் 5 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் மட்டும் இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி உள்ளவர்கள்.

(15) அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்தால் அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

(16) தமிழ் வழியில் படித்து பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். 

(17) அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் இருந்து மூன்று வெவ்வேறு வண்ணங்களில் புத்தகப்பை வழங்கப்படும்.

இந்த 17 அறிவிப்புகள் தவிர மொத்தம் 41 அறிவிப்புகளை வரும் 16-ம் தேதி அன்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் நீட் தேர்வு, யோகா கற்றுத்தரப்படும், அரசு ஊழியர்கள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும் என்பது உள்ளிட்ட சில அறிவிப்புகள் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

நாளை 15/06/2017 -கல்வி மானியக்கோரிக்கை சமர்பிக்கப்படுவதால் DEEO ,AEEO மற்றும் அலுவலக பணியாளர்கள் நாளை காலை 8 மணிக்கு அலுவலகத்திற்கு வருகை புரிய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு..

750 Pp - தனி ஊதியம் 750 1.1.2011க்குபிறகு பதவி உயர்வில் நிர்ணயம் குறித்த RTI விண்ணப்பத்திற்கு திருச்சி மண்டல தணிக்கை அலுவலகத்திற்குட்பட்ட 12 மாவட்டத்திலுள்ள deeo மற்றும் AEEO பதிலளிக்க உத்தரவு!!ICT TRAINING FOR TEACHERS 2017/18 - ZONAL & DISTRICT WISE COORDINATORS LIST

THANKS : MR.ASIR JULIUS, 
ASST.PROF, SCERT

CLICK HERE - ICT TRAINING 2017/18 - ZONAL & DISTRICT WISE COORDINATORS LIST

3 & 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஜூன் 2017 மாத FA (b) செயல்பாடுகளை வினாதாளிலே விடைஎழுதும் வடிவில்

PRESS RELEASE- தொடக்கக் கல்வி பயிலச் செல்லும் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்


3 மாதத்தில் 300 சாதனை: பள்ளி கல்வித் துறை பட்டியல்

தமிழக சட்டசபையில், நாளை பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கை விவாதத்தில், சாதனை பட்டியல் வாசிக்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அ.தி.மு.க., ஆட்சியில், ஏழு அமைச்சர்கள் மாறினர். இரண்டு முறை செயலர்களும், இயக்குனர்களும் மாற்றப்பட்டனர்.

இதில், அமைச்சராக செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் மற்றும் இயக்குனராக இளங்கோவன் ஆகியோர் பதவியேற்ற பின், பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், சட்டசபையில், நாளை பள்ளி கல்வி மானிய கோரிக்கை மீது, விவாதம் நடக்க உள்ளது. இதில், மேலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, அமைச்சர் வெளியிட உள்ளார்.

மூன்று மாதங்களில், முந்நுாறு சாதனைகள் என்ற அளவுக்கு, சாதனை பட்டியலை, பள்ளி கல்வித்துறை தயார் செய்துள்ளது.

BIOMETRIC ATTENDANCE பள்ளிகளுக்கு வருமா?

பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' திட்டம் அறிவித்து, ஓராண்டை தாண்டிவிட்ட நிலையில், இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. தினமும் பள்ளிக்கு வந்து, கையெழுத்து போட்டு விட்டு, ஏதாவது ஒரு காரணம் சொல்லி, சொந்த வேலையை பார்க்க, ஆசிரியர்கள் கிளம்பி விடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த, பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை, 2016ல், தமிழக அரசு அறிவித்தது.

சோதனை முறையில், பெரம்பலுார் மாவட்டத்தில், பயோமெட்ரிக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்காக, 140 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை திட்டத்தை செயல்படுத்த, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்வு முறை மாற்றம், பாடத்திட்டம் மாற்றம் என, பல அறிவிப்புகளை வெளியிட்டாலும், பள்ளிகளில், ஆசிரியர்கள் இருப்பதில்லை என்பதால், சரியாக பாடம் நடத்தப்படுவதில்லை. அதனால், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்வதில், முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடு பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்வி அலுவலகங்கள் இரவிலும் சுறு... சுறு...

கல்வித் துறை மானிய கோரிக்கை தொடர்பாக, தேவைப்படும் தகவல்கள் அளிக்க, விடுமுறையின்றி கல்வி அலுவலகங்கள் ஜரூராக செயல்படுகின்றன.

கல்வித்துறை செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்ற பின், பிளஸ் 1 பொதுத் தேர்வு, முன்கூட்டியே பொதுத் தேர்வுகள் தேதி மற்றும் முடிவுகள் அறிவிப்பு என அடுத்தடுத்த புதிய அறிவிப்புகளை, அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், "கல்வித்துறை வரலாற்றில் அரசு பள்ளிகளை பாதுகாக்கும் வகையில், 41 புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும். அவை ஜூன் 15ல் நடக்கும் கல்வி மானிய கோரிக்கையில் எதிர்பார்க்கலாம்," என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனால், என்னென்ன அறிவிப்பு வெளியிடலாம் என்பது குறித்து கல்வி அதிகாரிகள், ஓய்வு பேராசிரியர், கல்வியாளர் என அனைத்து தரப்பு வல்லுனர் குழு ஆலோசனை அடிப்படையில் '41 அறிவிப்புகள்' விவரம் தயாராகி வருகின்றன. இதற்காக, 'மாவட்ட முதன்மை கல்வி, தொடக்க கல்வி அலுவலகங்களில், எந்த நேரத்திலும் கல்வி தொடர்பாக தகவல்கள் திரட்ட வேண்டியுள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்,' என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் வழக்கமான வேலை நாட்களை தவிர சனி, ஞாயிறும் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இரவு 10:00 மணி வரை அலுவலர்கள் பணியில் உள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வில் உள் ஒதுக்கீடு?

'நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதில், அரசு மற்றும் கிராமப் பகுதி பள்ளி மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, சட்ட வல்லுனர்களுடன், தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

'அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால், 'நீட்' நுழைவு தேர்வு மூலம், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்துவதை, தமிழக அரசு விரும்பவில்லை. 

எனவே, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, அவசர சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியது; இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. 

இந்நிலையில், 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியிட, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. அதை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, தேர்வு முடிவுகள் வெளியிட, அனுமதி வழங்கியது. அதனால், அடுத்த வாரம், தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வேறு வழியின்றி, 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

'நீட்' தேர்வில், சி.பி.எஸ்.இ., எனும் மத்திய பாடத்திட்ட மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் ஆகியோர், 'ரேங்க்' பட்டியலில் முன்னிலை வகிக்க வாய்ப்பு உள்ளது. அவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு, அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரவில்லை; 'நீட்' தேர்வு மூலம், மாணவர் சேர்க்கை நடந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, தமிழக அரசு கருதுகிறது. 

எனவே, 'நீட்' தேர்வு அடிப்படையில், அரசு பள்ளி மற்றும் கிராம மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கலாமா என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மத்திய அரசிடம், இதற்கு ஒப்புதல் பெற, தமிழக சுகாதார துறை அதிகாரிகள், டில்லியில் முகாமிட்டுள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போதைய சூழலில், 2,500க்கும் மேற்பட்ட இடங்களை, சி.பி.எஸ்.இ., மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பெற வாய்ப்புள்ளது. இதனால், அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்படைவர். இந்திய மருத்துவ கவுன்சில் விதியை பின்பற்றி, அரசு மற்றும் கிராம மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுதிய எண்ணிக்கைக்கு ஏற்ப, உள் ஒதுக்கீடு வழங்கலாமா என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான வாய்ப்புகள் உள்ளதால், ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிளஸ் 1 பாடம் நடத்த கல்லூரிகளில் ஏற்பாடு

தமிழகம் முழுவதும், நாளை மறுநாள் கல்லுாரிகள் திறந்ததும், பிளஸ் 1 பாடத்தை நடத்த, பேராசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த மார்ச்சில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர், கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை படிப்பில், முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவருக்கும், 16ல், கல்லுாரி துவங்குகிறது. காலை மற்றும் பிற்பகல் என, இரு வேளை வகுப்புகளிலும், மாணவர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி நடத்தி, புதியவர்களை வரவேற்க, ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, முதல் இரண்டு வாரங்களுக்கு, பிளஸ் 1 பாடம் மற்றும், 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற முன்தயாரிப்பு வகுப்புகள் நடத்த, கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன.

பிளஸ் 2 முடித்த பெரும்பாலான மாணவர்களுக்கு, பிளஸ் 1 பாடம் நடத்தப்படாததால், அதற்கான அடிப்படை பாட வகுப்புகளை, கல்லுாரிகளே நடத்த உள்ளன. மேலும், கல்லுாரிகளில், பாடம் கற்கும் முறை, பேராசிரியர்களிடம் நடந்து கொள்ளும் விதம், பள்ளிக்கும், கல்லுாரிக்கும் பாடம் எடுப்பதில் உள்ள வித்தியாசம் போன்றவற்றை, ஸ்ரீமுன்தயாரிப்பு வகுப்பில் விளக்கவும், பேராசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சத்துணவு சாப்பிடுபவர் எண்ணிக்கை குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவு

சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கை குறித்து தினமும் குறுஞ்செய்தி அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 42,970 மையங்களில் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். சத்துணவு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக வந்த புகார்களை அடுத்து, ஒவ்வொரு பள்ளிகளிலும் தினசரி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கையை குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தில் இந்த விபரங்களை மாநில அளவில் சேகரித்து கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் 155 250 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கு சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கையை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.தமிழகம் முழுவதும், இந்த நடை முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!