Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 17 June 2017

தினசரி 4 ஜி.பி. டேட்டா இலவசம் : பி.எஸ்.என்.எல் !!

3ஜி சேவையில் புதிய சலுகைத் திட்டம் ஒன்றை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, ரூ.444க்கு ரீச்சார்ஜ் செய்பவர்களுக்குத் தினசரி 4 ஜி.பி. இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான கால வரம்பு 90 நாட்களாகும். இப்புதிய சலுகைத் திட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். 
சவுக்கா - 444 என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் 444 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் தினமும் 4 ஜி.பி. டேட்டாவைப் பெறலாம்.

ரிலையன்ஸ் ஜியோவின் வருகையைத் தொடர்ந்து வழங்கப்பட்ட இலவசச் சலுகைகளால் இழந்த தனது வாடிக்கையாளர்களை மீட்கவும், இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவுமே இதுபோன்ற சிறப்புச் சலுகைகள் தொலைத் தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றன. என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் 309 ரூபாய்க்குத் தினசரி 1 ஜி.எபி. அளவிலான 4ஜி டேட்டாவை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வருகிறது. எனினும் இதன் கால வரம்பு ஒரு மாதம் மட்டுமே. பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ள புதிய சலுகையில் மூன்று மாதங்களுக்கு இலவச 3ஜி டேட்டாவைப் பெற முடியும் என்பதால் இத்திட்டத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது.

எங்க பள்ளியை விட்டு அவர் போகக்கூடாது!’ அரசுப் பள்ளி ஆசிரியரை வழியனுப்ப மறுக்கும் கிராமத்தினர்

ஓர் ஆசிரியருக்கு மிகப் பெரிய அங்கீகாரம் என்பது மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தருகிற அன்பும் மரியாதையும்தாம். அப்படியான அங்கீகாரம் அரசுப் பள்ளி ஆசிரியர் வசந்த் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. 


கடலூர் மாவட்டம் கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். அரசுப் பள்ளி என்றாலே மாணவர்களுக்குத் தேவையான விஷயங்களில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதையே காரணமாக கூறி, வசந்த் தன் பணியின் கடமையிலிருந்து விலகி விடவில்லை. தன் சக்திக்கு மீறியும் அந்தப் பள்ளிக்கு அவர் செய்தது ஏராளம். அவரிடம் பேசியபோது,

"ரொம்ப அழகான பள்ளி இது. அதை, இன்னும் அழகாகவும் கற்பதற்கும் சிறப்பானதாக மாற்ற வேண்டும் என நினைத்தேன். பள்ளிக்குத் தேவையானவற்றைப் பட்டியலிட்டேன். தமிழ்நாடு அரசின் சிறப்பான தன்னிறைவுத் திட்டத்தில், பள்ளியின் தேவைக்கான தொகையில் மூன்றில் ஒரு பங்கை நாம் செலவிட்டால் மீதத்தை அரசு அளித்துவிடும். எனவே அதற்கான தொகையைச் சேகரிக்கத் தொடங்கினேன். 

அரசுப் பள்ளியில் படித்தவர்கள் இன்று, உலகம் முழுவதும் பல்வேறு வேலைகளில் இருக்கின்றனர். அவர்களுக்கு இதுபோன்ற பள்ளிகளுக்கு உதவ வேண்டும் எனும் எண்ணம் இருப்பதைத் தெரிந்துகொள்ள என் நண்பனே ஓர் உதாரணம். அவனிடம் பள்ளியைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தபோது, 50 ஆயிரம் ரூபாய் தந்து ஆச்சர்யப்படுத்தினான். முழுமதி அறக்கட்டளை எனும் அமைப்பு வெளிநாட்டில் இயங்கி வருகிறது. அது, ஒரு லெட்சத்துக்கும் அதிகமான தொகையைத் தந்தனர். இவற்றை வைத்து, 1,69.000 ரூபாயை தமிழக அரசுக்கு அனுப்பினோம்.



எங்களின் இந்த முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைத்தது. தமிழக அரசு ஒதுக்கிய சுமார் 5 லட்சம் நிதியால் 23 கம்ப்யூட்டர்களும் அவற்றிற்கு 46 நாற்காலிகளும் எங்கள் பள்ளிக்குக் கிடைத்தன. மூன்று இன்வெர்ட்டர் பேட்டரிகளும் வாங்கினோம். இரண்டு வகுப்பறைகளை ஏஸியாக்கினோம். தமிழக அளவில் ஒரு நடுநிலைப் பள்ளி இவ்வளவு வசதிகள் இருக்குமா என்பது சந்தேகம்தான். இவற்றையெல்லாம் செய்ததற்கு முதல் காரணம், எங்கள் பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வியைக் கற்க வேண்டும் என்பதற்காகத்தான். ஏனெனில்,  பணம் கொடுத்து, இவற்றைக் கற்றுக்கொள்ளும் நிலையில் பொருளாதார நிலையில் அவர்கள் இல்லை." என்று சமூக அக்கறையோடு பகிர்ந்துகொள்கிறார் வசந்த்.


பள்ளிக்கான பொருள்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவராக மட்டும் ஆசிரியர் வசந்த் விளங்கவில்லை. மாணவர்களின் நடத்தையைச் சீர்செய்வது, மெள்ள கற்கும் மாணவர்களிடம் தனிக்கவனம் எடுப்பது என அனைத்து வேலைகளையும் சுயஆர்வத்தின் அடிப்படிப்படையில் செய்தவர். ஏறக்குறைய கீழப்பாலையூர் பள்ளியின் தேவைகளை நிறைவேற்றிய வசந்த் எடுத்த முடிவு பலருக்கும் ஆச்சர்யமானது.

கீழப்பாலையூரிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கீரனூர் பள்ளிக்கு பணி மாறுதலில் சென்றுவிட்டார். அதற்கு அவர், "ஒரு பள்ளியின் தேவைகளை நிறைவேற்றியாச்சு. அவற்றைக் கொண்டு இங்குள்ள ஆசிரியர்கள் சிறப்பாக மாணவர்களுக்கு வழிக்காட்டுவார்கள் என்பது தெரியும். அதனால் வேறொரு பள்ளிக்குச் சென்று இதேபோல வேலைகளைச் செய்யலாம் என்பதால் இந்த முடிவு எடுத்தேன்" என்கிறார் வசந்த்.

பள்ளி

பணி மாறுதல் கிடைத்து, கீரனூர் பள்ளியில் வேலைகளைத் தொடங்கியும் விட்டார். பள்ளியின் முன்புறம் குண்டும் குழியுமாக இருந்ததை மணல் அடித்து சமப்படுத்தும் வேலை மும்மரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வசந்தின் மொபைலுக்கு கீழப்பாலையூரிலிருந்து ஏகப்பட்ட அழைப்புகள். அப்படி அழைத்தவர்களில் ஒருவர்தான் பால்ராஜ். வசந்திடம் படித்துவிட்டு, தற்போது டிப்ளமோ படித்திருக்கிறார்.

"வசந்த் சார் எங்க பள்ளியை விட்டுப் போனதே தெரியாது. இந்த வருஷம் ஸ்கூல் திறந்ததும் சார் வரலைனு பசங்க சொன்னாங்க. சரி, எதுக்காச்சும் லீவு போட்டிருப்பாங்கனு நினைச்சிட்டிருந்தோம். இப்ப விசாரிச்சப்பதான் அவர் வேற பள்ளிக்கூடத்துக்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்கிறது. அவர் எங்க ஊருக்கே திரும்பவும் வரணும் சார். எங்க பள்ளியை விட்டு அவரை அனுப்ப மாட்டோம். அதுக்காக ஸ்டிரைக் பண்ணக்கூட நாங்க ரெடியாயிட்டோம்." என்று உணர்ச்சி பூர்வமாக கூறுகிறார் பால்ராஜ்.

முருகன் என்பவரின் மகன்கள் கீழப்பாலையூரில் படித்தவர்கள். அவர் பேசும்போது, "என்னோட பசங்க அவர்கிட்ட நல்லா படிச்சாங்க. இப்ப ப்ளஸ் டூ படிக்கிறாங்க. ஒவ்வொரு நாளும் சாரைப் பத்தி சொல்லிகிட்டே இருப்பாங்க, இப்படி தீடீர்னு எங்க வூரு ஸ்கூலை விட்டு வேற ஊருக்குப் போவாருனு எதிர்பார்க்கல. என்ன செஞ்சாவது அவரை இந்த ஸ்கூலுக்கே அழைச்சிட்டு வந்துடணும்னு உறுதியாக இருக்கோம்" என்றார் முருகன்.

பால்ராஜ், முருகன் மட்டுமல்ல கீழப்பாலையூரின் பொதுமக்கள் அனைவரும் வசந்த் திரும்பவும் தங்கள் ஊருக்கே ஆசிரியராக வர வேண்டும் என்கிற முடிவோடு இருக்கிறார்கள். இதற்கான வேலைகளை நிச்சயம் செய்வோம் என்கிறார்கள். ஆனந்திடம் இது குறித்து கேட்டபோது,

"என் மேல் இவ்வளவு அன்பு வெச்சிருக்காங்கனு நினைச்சு சந்தோஷப்பட்டாலும், கீரனூர் ஸ்கூலிலும் என்னை ஆர்வமா வரவேற்றாங்க. திரும்பவும் கீழப்பாலையூருக்கு வர்ற சூழல் வந்தா கீரனூர் பசங்க ஏமாற்றமடைஞ்சிடுவாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல" என்கிறார்.

தனியார்பள்ளியின் மிடுக்கை மிஞ்சும் அரசுப்பள்ளி !!

சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த பள்ளியில் பணிபுவதா ?? என்று வந்தவேகத்தில் ஆசிரியர்கள் திரும்பியோடிய பள்ளி ,வலையர்சக்குடி  (மேலச்சக்குடி) மதுரை ஒன்றிய கிராமத்தில் ,பலரும் வந்த வேகத்தில் சென்றிட,பணிமாறுதலில் சென்றிட



                                                                                  பல ஆண்டுகள் பல்வேறு இன்னல்களை தாங்கி கொண்டு சாலை போக்குவரத்து வசதிகள் உட்பட எந்த அடிப்படை வசதிகள் இல்லாமல்  8 ஆண்டுகள் 10 ஆண்டுகள் என மூன்று ஆசிரியைகள் மட்டும் வைகை ஆற்றிற்குள் பெண் ஆசிரியர்களாக தனியே பயணித்து           விடா முயற்சியுடன், இந்த ஊரிலிருந்து 
அருகில் பல பள்ளிகளுக்கு சென்ற மாணவர்களை சேர்த்ததின் பலனாக மூன்றாக இருந்த ஆசிரியர்கள் -2014 ல் நான்கானது, அதன் பின் வந்த ஆண் ஆசிரியர் துரித செயல்பாடுகளால், இன்னும் கூடுதல் பலத்துடன் கிராம மக்கள் அறியாமையை நீக்கி பள்ளிக்கென கூடுதல் இடம் பெறப்பட்டு ,SSA திட்டத்தின் கீழ் DEEO, AEEO,SUPERVISOR போன்ற  கல்வித்துறை அதிகாரிகள் உதவியுடன் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு ,பாதிஅளவு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு இன்று பல ஆயிரங்களை கொட்டி கொடுக்கும் தனியார்பள்ளிகள் மாணவர்களை மிஞ்சும் வகையில் மிடுக்கான நடை,உடை,பாடத்திட்டத்தை தாண்டிய ஆங்கில புலமை, பல்வேறு ஆங்கில பாடல்களை சைகைகளுடன் தொடர்ச்சியாக பாடுதல்,பல நூறு தமிழ்பாடல்கள், ஆங்கிலத்தில் இறைவணக்கம், சமஸ்கிருதத்தில் ஸ்லோகம்,முதல் வகுப்பு மாணவர்களே திருக்குறள்,ஆங்கில உரையாடல் மற்றும் நேர்த்தியான உடை ,ஷூ ,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்(RO WATER ) எனவும் ,சுத்தம் என்றால் எங்கே விற்கும் என்றிருந்த நிலைமாறி சுத்தமான, சுகாதாரமான காற்றோட்ட சூழ்நிலையில்,காலை மாலை என இரண்டு நேரமும் தன்னலம் பாராத துப்புரவு பணியாளர்களை கொண்டு  சுத்தம் செய்து கண்ணாடி போல் உள்ள ஆண்,பெண்  கழிப்பறை வசதிகளுடனும்,செயற்கை மருந்தில்லாமல் இயற்கை முறையில் விளைந்திட்ட காய்கறிகளைக்கொண்ட சத்தான உணவு என்றும், பள்ளி வேலை நேரம் முடிந்த பின் மாலை நேரங்களில் மாணவர்கள் பாடங்களை படிக்காமல் ,இருந்து வந்த  சூழலில், பட்டப்படிப்பு  படித்தவர்கள் யாருமே இல்லாத 1400 பேர் கொண்ட கிராமத்தில் தனியார் தன்னார்வ ( TIRIPURA FOUNDATION ) என்ற  தொண்டுநிறுவனத்தின் உதவியோடு கடந்தாண்டு -2016 ல்  இரண்டு மாலை நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு ஒழுக்கக்கல்வி ,நன்னெறிக்கல்வி ,யோகா போன்ற வாழ்வியல் பயிற்சிகளை மாலைநேர சிற்றுண்டி யுடன்  பெற்று வந்த மாணவர்களுக்கு , மேலும் கூடுதலாக (17.06.2017) அன்று இன்னும் இரண்டு ஆண் ஆசிரியர்கள் உதவியோடு மாலை நேர வகுப்புகள்.        (TWO TUTION CENTER) தொடங்கப்பட்டுள்ளன



,இந்தாண்டு SBI வங்கி ,மதுரை (சந்தைப்பேட்டை கிளை) அளித்த இரண்டு கணிணி, மற்றும் ஆசிரியரின் ஒரு மடிக்கணிணியுடன் இலவச கணிணிவழிக்கல்வி, கராத்தே,SPOKEN ENGLISH வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன...                  இதன் விளைவாக இந்தாண்டு தனியார்பள்ளியில் பயின்ற பல மாணவர்கள் இப்பள்ளிக்கு மாறியுள்ளனர்...                                 ஆசிரியர்கள் ஜனவரி மாதம் முதலே மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வை ஏற்படுத்தியதின் பலனாக 99 %                    5 வயது  மாணவர்கள் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்...இதனால் 4 ஆக இருந்த நிரந்தர ஆசிரியர் பணியிடம் -2017 ல் 5 ஆக உயர்ந்துள்ளது இது இன்னும் கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது...                                         ஏப்ரல் மாத இறுதியில் 48 கலைநிகழ்ச்சிகளுடன் அனைவரும்         ( தனியார் பள்ளிகள் )வியக்கும் வண்ணம் பள்ளியின் ஆண்டுவிழா வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது...                                                       அரசுப்பள்ளிகள் தேய்ந்து வருகிறது என்பதை மாற்றி வளர்ந்துவருகிறது.. என்பதை நிரூபிக்கும் விதமாக இப்பள்ளி செயல்பட்டு வருகிறது... மூன்றாண்டுகளுக்கு முன்னால் மூன்று ஆசிரியர்களாக இருந்த பள்ளி இன்று நிரந்தர ஆசிரியர்கள்-5                       மாலை நேர ஆசிரியர்கள்-4                      என தற்போது  9 பேர் பணியாற்றி வருகின்றனர்...                                           இந்த கிராமத்தில் இன்றளவும் சீரான மின்வசதியோ, தெருவிளக்க,சாக்கடை,சாலை  வசதிகளோ ஏதும் இல்லை....                       70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் முதல்தலைமுறை பட்டதாரிகள் தற்போது தான் உருவாகிவருகின்றனர்.இந்நாள் வரை ஒருவர்கூட அரசுப்பணிக்கு செல்லவில்லை,குழந்தை திருமணம்,பல்வேறு மூடநம்பிக்கைகளில் இருந்துவரும் இக்கிராம மக்களின் முன்னேற்றமே எங்களின் முன்னேற்றம் என்று கூறி இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர்."ஒன்றும் இல்லாததை உருவாக்குபவனே திறமையுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்"  என்பதை உலகிற்கு காட்டிவருகின்றனர் இப்பள்ளி ஆசிரியர்கள்.இவர்களின் கடும் முயற்சிக்கு பலனாக முதல் தலைமுறை பட்டதாரி  மாணவர்கள் உருவாகி வருகின்றனர் குழந்தைகள் இன்று நவநாகரீக உடை அணிந்து மிடுக்குடன் பள்ளிக்கு எதிர்கால தேசம் காப்போம் என்ற கொள்கையோடு வீருநடைபோடுகிறார்கள்....                நன்றி - ஏழைகளின் விடிவெள்ளி - அரசுப்பள்ளி ஆசிரியர்கள்...

தெலங்கானா பள்ளி கல்வியில் 11428 தன்னார்வாளர்களுக்கு வேலை

தெலங்கானா பள்ளி கல்வி துறையில் நிரப்பப்பட 11428 தன்னார்வாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான தன்னார்வாளர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: School Education Department, Telangana

பணி: Vidhya Volunteers

மொத்த காலியிடங்கள்: 11,428

சம்பளம்: மாதம் ரூ.12,000

பணியிடம்: தெலங்கானா

தகுதி: டி.எட், இளங்கலை, முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 44க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு அதனடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cdse.telangana.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

TRB GOVT LECTURER POLYTECHNIC EXAM ANNOUNCED

TRB GOVT LECTURER  POLYTECHNIC EXAM ANNOUNCED

:

அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்கள்: 

தேர்வு நாள்:13/08/2017

விண்ணப்பிப்பதற்கான தேதி: 17/06/2017 முதல் 07/07/2017.

Website For Apply : www.trb.tn.nic.in

பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் 37 அறிவிப்புகளால், யார் யாருக்கு என்ன பலன்?

கடந்த இரண்டு மாதங்களாக '41 அறிவிப்புகள் வெளியிடுவேன்' என்றும், 'அந்த அறிவிப்புகளால் நாடே திரும்பிப் பார்க்கும்' என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் தெரிவித்துவந்தார். இதனால் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்புகள்குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்துவந்தது. நேற்று பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தில் 37 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். இவற்றை ஏழு வகைகளாகப் பிரித்திருக்கிறோம். ஒவ்வொரு பிரிவின் கீழ் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகியுள்ளன என்பதைப் பார்ப்போம்.


மாணவர் நலன் சார்ந்த அறிவிப்புகள்:

புதியதாக 30 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் புதுமைகளைப் புகுத்தி சிறப்பாகச் செயல்படும் நான்கு அரசுப் பள்ளிகளைக் கண்டறிந்து `புதுமைப் பள்ளி' விருது 1.92 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலுக்கான அட்டைகளை வாங்க 31.82 கோடி ரூபாய் செலவிடப்படும். 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினிவழிக் கற்றல் மையங்கள் அமைக்க 6.71 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும், நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் 5,639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 22.56 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். 31,322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 4.83 கோடி ரூபாய் செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

பள்ளிக்கல்வித் துறை 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு 39.25 கோடி ரூபாய் செலவில் கற்றல் துணைக் கருவிகள் வழங்கப்படும் என்றும், திறனறித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு 2.93 கோடி ரூபாய் செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்றும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனித்திறமையோடு விளங்கும் 100 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று கோடி ரூபாய் செலவில் மேலைநாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், கலை, இலக்கியம் நுண்கலை உள்ளிட்ட 150 வகை பிரிவுகளில் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் ஒரு மாபெரும் மாணவர் கலைத் திருவிழா நான்கு கோடி செலவில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவிடும் வகையில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படும். ஒன்றிய அளவில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மேற்படிப்பு / வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வுகளுக்கு வழிகாட்டி மையங்கள் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும். மேலும், கருத்தரங்குகள் இரண்டு கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

ஆசிரியர் நலன் சார்ந்த அறிவிப்புகள்:

4,084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாகச் செயல்படும் ஆறு ஆசிரியர்களுக்குக் கனவு ஆசிரியர் விருதும், 10,000 ரூபாய் ரொக்கப் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்க தொடர் நீட்டிப்பு கோரப்படும் 17,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும் என்றும், சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

மின் ஆளுமை சார்ந்த அறிவிப்புகள்:

காணொளி பாடங்கள், கணினிவழித் தேர்வுகள், அலைபேசிச் செயலிகள் உள்ளடக்கிய கற்றல் மேலாண்மைத் தளம் இரண்டு கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். அரசுத் தேர்வுகள் இயக்ககச் செயல்பாடுகள் இரண்டு கோடி ரூபாய் செலவில் கணினி மயமாக்கப்படும். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடங்க அனுமதி/ அங்கீகாரம்/ தொடர் அங்கீகாரம் வழங்க இணைய வழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

நூலகத் துறை சார்ந்த அறிவிப்புகள்:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்பொது நூலகங்களுக்கு 25 கோடி ரூபாய் செலவில் புதிய நூல்களும், அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு ஐந்து கோடி ரூபாய் செலவில் புதிய நூல்கள் வாங்கப்படும். அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ஆறு கோடி ரூபாய் செலவில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்.  

சிவகங்கை மாவட்டம் கீழடியில் சிந்துசமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த நூலகமும், தஞ்சாவூரில் தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் சார்ந்த நூலகமும், மதுரையில் நாட்டுப்புறக் கலைகள் சார்ந்த நூலகமும், திருநெல்வேலியில் தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகமும், நீலகிரியில் பழங்குடியினர் பண்பாடு சார்ந்த நூலகமும், திருச்சியில் கணிதம், அறிவியல் சார்ந்த நூலகமும், கோயம்புத்தூரில் வானியல், புதுமைக் கண்டுபிடிப்புகள் சார்ந்த நூலகமும், சென்னையில் அச்சுக்கலை சார்ந்த நூலகம் என்று தனித்தன்மை வாய்ந்த எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் எட்டு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். 

மாவட்ட மைய நூலகங்களில் போட்டித்தேர்வுப் பயிற்சி மையங்கள் 72 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். 123 முழுநேரக் கிளை நூலகங்களில் மின்னிதழ் வசதிகளுடன்கூடிய கணினி வசதி 1.84 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். இரண்டு கோடி ரூபாய் செலவில் நவீன மின் நூலகம் அமைக்கப்படும். அரிய வகை நூல்கள் மற்றும் ஆவணங்களைப் பொதுமக்களிடமிருந்து கொடையாகப் பெறும் திட்டம் தொடங்கப்படும். அரியவகை நூல்களைப் பாதுகாத்துவரும் தனியார் அமைப்புகள் நடத்திவரும் நூலகங்களுக்குப் பராமரிப்பு நிதி வழங்கப்படும். நவீன அறிவியல், தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் ஐந்து கோடி ரூபாய் செலவில் மொழிபெயர்க்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

நிர்வாகம் சார்ந்த அறிவிப்புகள்:

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் 60 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையின் அலுவலர்களுக்கு 2.89 கோடி ரூபாய் செலவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும். 

முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி சார்ந்த அறிவிப்புகள்:

மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு இணையான சமநிலைக் கல்வித் திட்டம் 13.94 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

சர்வதேச அளவில் பரவியுள்ள தமிழர் நலன்:

உலக நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு, தமிழ் கற்பித்தலுக்குத் தேவையான தமிழ்ப் பாடநூல்கள் அனுப்புதல், சிறந்த தமிழாசிரியர்கள் மூலம் பயிற்சி மற்றும் இணைய வழியில் தமிழ் கற்பித்தல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தவும், உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் கொடையாக வழங்கப்படும். இதில் முதற்கட்டமாக, யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கும் மலேயாப் பல்கலைக்கழக நூலகத்துக்கும் ஒரு லட்சம் நூல்கள் கொடை என்று அறிவித்திருக்கிறார்கள். 

இந்தத் திட்டங்கள் குறித்து, கல்வியாளர்கள் சிலரிடம் கருத்துகளைக் கேட்டோம். 

பள்ளிக்கல்வித்துறைதமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமி. சத்தியமூர்த்தி கூறியதாவது...

“தொடக்கப் பள்ளிகளில் புத்தகங்கள், வார இதழ்கள், தினசரி பத்திரிகைகள் வாங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் கல்வித் துறை அமைச்சர். இதனால் மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தவிர இதர விஷயங்களையும் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்ல விஷயமே. ஆனால், பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் சரியான முறையில் தினசரி செய்தித்தாள்களையும், இதழ்களையும் வாங்குகிறார்களா என்பது தெரியாது. இதைத் தவிர்க்கும்விதமாக அரசே நேரிடையாகப் பள்ளிகளுக்கு புத்தகங்கள், வார இதழ்கள், தினசரி பத்திரிகைகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். 

மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் நாப்கின் எரியூட்டுதலுக்கு இயந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதும் சிறப்பு. தற்போது சுகாதாரமான முறையில் நாப்கின் அகற்றப்படாமல் சுகாதார பிரச்னையைச் சந்திக்கும்வகையில் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். 

பள்ளிகளைக் கண்காணிக்க, கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாகன வசதி இல்லாமல் இருந்தது. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் பல பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லாமல் இருந்தார்கள். தற்போது வாகனங்கள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கியிருப்பதன் மூலம் இனி கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு அடிக்கடி ஆய்வுக்குச் செல்ல வாய்ப்பு உருவாகியிருக்கிறது. 

கணினி வசதியை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இந்த நிதியில் பள்ளிகளில் வைஃபை வசதியையும் இணைய வசதியையும் ஏற்படுத்திட வேண்டும். மேலும், பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கிறார்கள். கணினி ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றமே. இனிவரும் காலங்களில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

பள்ளியில் கழிப்பிட வசதி குறித்து பலரும் பேசிவருகிறார்கள். ஆனால், துப்புரவாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. மேலும், துப்புரவாளர்களுக்கு மாதச் சம்பளமாக 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது மிகவும் குறைந்த தொகை என்பதால், துப்புரவுப் பணிக்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. துப்புரவுப் பணியாளர்களுக்கு மாதச் சம்பளமாக வழங்கப்படும் தொகையை அதிகரிக்க வேண்டும். இனிவரும் அறிவிப்புகளில் இதை வெளியிட்டால் கல்வித் துறை மேம்படும்" என்கிறார் சாமி. சத்தியமூர்த்தி. 

`பொதுப்பள்ளிக்கான மாநில மேடை' அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவுடன் பேசினோம். 

பள்ளிக்கல்வித்துறை  கல்வியாளர் கஜேந்திர பாபு "பள்ளிகளை மூடுவோம் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்குப் பதிலாக, 30 தொடக்கப் பள்ளிகளை ஆரம்பிப்போம் என்பதும், பள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் திட்டம், பள்ளிகளில் தினசரி செய்தித்தாள்கள், வார இதழ்கள், புத்தகங்கள் வாங்க வழி செய்திருப்பது எனப் பல அறிவிப்புகளும் வரவேற்புக்குரியவைதான். 

அரசுப் பள்ளிகள் `அருகாமை பள்ளிகளாக' அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் சார்ந்த வேலையோடு பல்வேறு பணிகளைக் கொடுக்கிறார்கள். இதனால் மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், கற்றல் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட, ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உடற்பயிற்சி ஆசிரியர், இசை ஆசிரியர், ஓவிய ஆசிரியர் பணிகளை நியமித்தல் குறித்த அறிவிப்பும் இல்லை. 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய ஆசிரியர் பணியிடங்கள் மறைந்துவிட்டன. இத்தகைய ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே சமமான கற்றலுக்கு வாய்ப்பு கிடைக்கும். 

இந்த அறிவிப்பில் `யோகாவைக் கட்டாயப்படுத்துவோம்' என்பதை எதிர்க்கிறோம். இது, தனிமனிதத் தேவையில் குறுக்கிடுவதுபோல் இருக்கிறது. குழந்தைகளின் மீது குறிப்பிட்ட ஒரு விளையாட்டையோ அல்லது செயல்பாட்டையோ திணிப்பது என்பதை அனுமதிக்கக் கூடாது. ஒரு கலாசாரத்தையோ, முறையோ திணிப்பது என்பது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை. 

ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தும் வேளையில் வெயிட்டேஜ் முறையைக் கொண்டுவந்தார்கள். இந்த முறை ஆசிரியர் தகுதித்தேர்வைத் தகுதியிழக்கச் செய்கிறது. 120 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்காமல், 92 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்கிறது. குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி என நிர்ணயித்துவிட்டு, அதில் வெயிட்டேஜ் என்று பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணிலிருந்து கணக்கில் எடுத்துக்கொண்டு நிர்ணயிப்பது என்பது சரியான முறை அல்ல. இந்த வெயிட்டேஜ் முறை கைவிடுவதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. இந்த அறிவிப்புகள் எல்லாம் சேர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என்கிறார். 

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!