Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 19 June 2017

பள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழக முதல்வர்

110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி, பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புக்களை இன்று சட்டசபையில் வெளியிட்டார்.

அவை,

* உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.. இதற்காக ரூ.437 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடி மதிப்பில் எம்.ஜி.ஆர்., பெயரில் கட்டடம்.

* எம்ஜிஆர் பெயரில் பள்ளிகளில் தனிக்கட்டடங்கள்* கிராமப்புற தொடக்க மற்றும் நடுத்தர 3090 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.

* 43 அரசு கல்லூரிகளில் எம்.ஜிஆர் பெயரில் கட்டடங்கள் கட்ட ரூ.210 கோடி ஒதுக்கீடு

* பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.39 கோடி ஒதுக்கீடு

* 2017- 2018ம் கல்வியாண்டில் 268 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.இதற்காக 660 பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

* 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 3 பல்கலை., உறுப்பு கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும்.

* காஞ்சிபுரத்தில் ரூ.15 கோடியில் விளையாட்டு அரங்கு அமைக்கப்படும்.

* நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் நீச்சல்குளம் அமைக்கப்படும்.

பிற துறை அறிவிப்புக்கள் :

* மாதவரத்தில் ரூ.25 கோடியில் புதிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.

* வனத்துறை பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் இழப்பீடு தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

* கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகக் கடன் ரூ.10,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.

அறிவியல் கண்காட்சி சிறப்பு ரயிலை சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பார்வையிட்டு மாணவர்களை வாழ்த்தினார்

*சேலம் மாவட்டம், ஆத்தூர் ரயில் நிலையம் வந்துள்ள அறிவியல் கண்காட்சி சிறப்பு ரயிலை சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திருமதி.ஞானகௌரி அவர்கள் வருகை புரிந்து ரயிலை பார்வையிட்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள் உடன் கண்காட்சி இயக்குனர்,திரு .பாலமோகன்*

"ரோல் மாடல்" அரசுப்பள்ளி

SSA - 'INSPIRE AWARD' பதிவு செய்ய 30.06.2017 அன்று கடைசி நாளாகும் - இயக்குனர் செயல்முறைகள்.




அரசு பள்ளி மாணவி சூப்பர் சிங்கரில் ரூ.40,00,000 மதிப்புள்ள வீடு வென்றார்.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று அசத்தியுள்ளார் திருவாரூர் மாவட்டம் தியானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பிரித்திகா.



👍 அரசு பள்ளி மாணவி பிரத்திகா விஜய் டி.வி யின் சூப்பர் சிங்கரில் 6,00,000 ஓட்டுகள் பெற்று பட்டம் வென்றார். 
🏠 ரூ.40,00,000 மதிப்புள்ள வீடு வென்றார். 

🏆 குவிந்தது மலைப்போல மக்கள்  வாக்குகள். 
🔸 விஜய் டி.வி யின் சூப்பர் சிங்கர் சீனியர் 5 இறுதி போட்டில் திருவாரூர் தியானபுரம் அரசுப் நடுநிலைப் பள்ளி மாணவி 6 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி.... ரூ 40 லட்சம் பரிசை தட்டிக் சென்றார். 
🔹 மாணவியின் இத்தகைய சாதனைக்கு உழைத்த / உறுதுணையாக இருந்த அனைவரையும்   பாடசாலை மனதார பாராட்டுகிறது. 

திருவாரூர் மாவட்டம் தியானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பிரித்திகா. 
இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர் இவரின் தந்தை ரமேஷ் டிங்கரிங் வேலை செய்து வருகிறார். தாய் விவசாய வேலை செய்து வருகிறார். 
அபாரக் குரல் : 
திருவாரூர் மண்ணுக்கு புகழ் சேர்த்த சங்கீத மூம்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பாகவதர், அரசியல் சாணக்கியன் கலைஞர் அவர்களுக்கு அடுத்து தற்போது திருவாரூர் மண்ணிலிருந்து புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் பிரித்திகா என்ற பதின்மூன்று வயது  மாணவி . 
தான் படிக்கும் பள்ளியில் நடந்த  காலை வழிப் பாட்டு கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது இவரின் அபார குரலினை பள்ளி ஆசிரியர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 
தொடர்ந்து ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் பிரபல தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் பாடல் குரல் தேர்வு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாணவியின் பிரிந்திக்கா முதல் சுற்றில் தேர்வானார். 
ஆசிரியர்கள் ஊக்குவிப்பு : 
தொடர்ந்து தியானபுரம் அரசு பள்ளி  ஆசிரியர்கள் ஊக்குவிப்போடு பொருளாதார உதவியும் செய்ய அடுத்தடுத்த சுற்றுக்களில் அதிரடியாக பாடி கலக்கியதால் அரை இறுதிக்கு முன்னேறினார். 
அதிரடி பாடல்கள்: 
 கால் இறுதி மற்றும்  அரையிறுதி போட்டியில்  சொக்க வைக்கும் குரலாலும், மண்வாசனை கலந்த பாடங்களிலும் சின்னக்குயில் சித்ரா, எஸ்.பி பாலசுப்ரமணியன், மாங்குடி உஷா போன்ற ஜாம்பவான்களின் மனதை கவர்ந்து அதிரடியாய் இறுதி சுற்றில் ஐந்து போட்டியாளர்களின் ஒருவராய் நுழைந்தார். 
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆதரவு : 
மாணவி பிரித்திகா அரசுப் பள்ளி மாணவி என்பதால் இறுதி சுற்றில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், நெட்டிசன்கள் அனைவரும் அதிரடியாய் வாக்குகளை இணையதளத்தில் பதிவு செய்தனர். இறுதி சுற்றின் வெற்றி என்பது மக்களின் வாக்குகளை வைத்தே தீர்மானிக்கப்பட்டதால்  இவருக்கு மலைப்போல் மக்கள் வாக்குகள் குவிந்தன. இறுதி போட்டியின் மற்ற போட்டியாளர்களை விட ஆறு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இவர் நேற்று இரவு நடந்த போட்டில் வெற்றுப் பெற்று பட்டம் வென்றார். 
நாற்பது லட்சம் பரிசு: 
இவர் பாடிய பாடல்களை ரசிக்காத மனங்களே கிடையாது போல இவர் பாடிய பாடலான " தென்றல்  வந்து தீண்டும் போது " என்ற பாடலை யூ டியூப் தளத்தில் முப்பத்து ஆறு லட்சத்து அறுபத்து ஏழாயிரம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெற்றிப் பெற்ற மாணவிக்கு நாற்பது லட்சம் மதிப்புள்ள புதிய  வீடு பரிசாக வழங்கப்பட்டது.. தற்போது இந்த கிராமத்து இசைபுயலின் வெற்றியினை தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!